2011/01/08

ஆரிய-திராவிட ஜல்லியடி

போக்கற்ற சிந்தனை
    ரிய மாயை திராவிட வாயை அடைத்தது என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்பட்டதில்லையென்று இனிமேல் சொல்ல முடியாது. சென்ற நாற்பது வருடங்களில் தமிழ்நாட்டில் படித்தவர்கள், குறிப்பாக சென்னைப் பள்ளிக்கூடங்களில், இன்னும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில், குறிப்பாக (யோவ்!) கழக ஆட்சி சூடுபிடிக்கத் தொடங்கிய எழுபதுகளின் தொடக்கத்தில் படித்தவர்கள் இந்த ஆரிய-திராவிட அக்கப்போரின் வேர்களை அறியலாம். இந்தப் பிரிவினைப் பிரசாரத்துக்காகவே ஒவ்வொரு அரசுத் தொடக்க நடு உயர் பள்ளிகளில் கழகத் தமிழாசிரியக் கண்மணிகள் நியமிக்கப்பட்டார்கள் (என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன்). Systematic induction of separatist sentiments, yet, shrewd strategy (தமிழ்ல தான் அடுக்கு மொழி எழுதமுடியும்னு நிறையபேர் சொல்றாங்க). என் பள்ளிக்கூடத்திலும் இது போல் தமிழாசிரியர்கள் இருந்தார்கள். பாலசுப்ரமணியன் என்று ஒரு தமிழ் ஆசிரியர், அய்யர் பாவம், அவரை அடித்தே துரத்திவிட்டார்கள். நான் படித்ததெல்லாம் கழகக் கண்மணி ஆசிரியர்களிடம் தான். மங்கலமன்னன் போல் சிலர் உண்மையிலேயே தமிழ் பரப்ப முனைந்தார்கள். ஆரியம் திராவிடம் என்று மங்கலமன்னன் எதுவும் வகுப்பில் சொன்னதில்லை - வெளியே என் விபூதிக் கீற்றை அழிப்பார், வேறு விஷயம். சுந்தரேசன் என்று ஆரியப் பெயர் கொண்ட ஆசிரியர் பக்காக் கழக ரவுடி. ஆனால் தமிழில் மெத்தப் படித்தவர். அவர் தமிழ் பேசினால் நாள் முழுதும் கேட்கலாம். அவர் ஆரிய மாயை பற்றி அவ்வப்போது சொல்லி, அதிகமாகத் தமிழ் சொல்லிக் கொடுப்பார். மங்கலமன்னனின் தமிழ் வீச்சு அன்பழகன் என்றால் சுந்தரேசனின் பேச்சு நெடுஞ்செழியன்-அண்ணா சாயல். இடையில் துரைசாமி என்று ஒரு ஆசிரியர். அக்மார்க் கழகக் கண்மணி. வகுப்புக்கு வந்தால் ஆரிய மாயை தவிர வேறு எதையும் பேசமாட்டார். சாதாரண நன்னெறி செய்யுளில் கூட எங்கிருந்தோ ஒரு பார்ப்பனத் தொடர்பைக் கொண்டு வந்து அரை மணி நேரம் பெரியார் பற்றிப் பேசுவார். கடைசி ஐந்து நிமிடத்தில் கோனார் நோட்சிலிருந்தே பொருள் சொல்லி வகுப்பை முடிப்பார்.

எதற்குச் சொல்கிறேன் என்றால் இது போல் ஜல்லியடிப்பது எத்தனையோ நாளாக நடந்து வருவது தான். (ஜல்லியடி: இந்தச் சொல்லை கெக்கே பிக்குணியின் வலைப்பூவில் தெரிந்து கொண்டேன்; எத்தனை அருமையான சொல்! நன்றி) இருந்தாலும், எனக்கென்னவோ சென்ற பத்து ஆண்டுகளில் ஜல்லியடி குறைந்திருப்பது போல் படுகிறது. யாரும் இதையெல்லாம் இனிப் பொருட்படுத்துவதில்லை என்பது காரணமாக இருக்கலாம்; இருந்தால் நல்லது. எனினும், இந்த ஜல்லியடியைக் கவனித்தால் பொழுது போவதோடு, நிறைய சுவாரசியமான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்பது என் அனுபவம்.

'History of Tamils' என்று ஒரு ஆங்கிலப் புத்தகம் (தமிழிலும் எழுதக்கூடாதோ?); சீனிவாச அய்யங்கார் எழுதிய புத்தகம். புத்தகத்தைப் படிக்கவில்லை; எண்பதிலிருந்து நூறு டாலர் வரை விற்கிறது. (வேறே வேலை இல்லை? சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இதை சீப்பா தட்ட முடியும்னா தட்டுங்க). அந்தப் புத்தகத்தை ஒட்டி, புலவர். கா.கோவிந்தன் எழுதிய 'தமிழர் இலக்கியம்' எனும் புத்தகம் நூறு ரூபாய்க்குக் கிடைத்தது. போன வருடம் சென்னையில் வாங்கினேன். சீனிவாசர் 'ஆரியம் ஆரியம்' என்றால் கோவிந்தர் 'திராவிடம் திராவிடம்' என்கிறார் (இருவர் பெயரிலும் ஒரு ஒற்றுமை வேர் ஓடுவதை நீங்களும் கவனித்தீர்களா?).

சீனிவாசன் எழுத்தை 'கூகில் புக்ஸ்' முன்னோட்டம் பார்த்தேன். சீனிவாசரின் ஆராய்ச்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது என்றாலும் அவரது ஆங்கில நடை சகிக்கலைடா சாமி! பத்து பக்கத்துக்கு மேல் படிப்பது கஷ்டம். மாறாக, கோவிந்தரின் நடை கழக வாடை வீசினாலும் ஓரளவுக்கு தமிழ்வாணன் நடை போல் இருக்கிறது. படிப்பது சுகமான அனுபவம். இந்த ஆரிய-திராவிட ஜல்லியடியில் புகுந்து வளர்ந்தவன் என்ற முறையில் கோவிந்தர் புத்தகத்தைச் சுந்தரேசனின் ஆசிரிய நடைக்கு ஒப்பிடுவேன். கொஞ்சம் ஆரியத்தை சாணியடிக்கிறார், நிறைய தமிழர் பற்றித் தெளிவுபடுத்துகிறார். இரண்டு மூன்று முறை தொடர்ந்து படிக்க முடிகிற புத்தகம். மூன்று மணி நேரப் பயணத்திற்கு உகந்த புத்தகம் (தூங்க விரும்பாதவர்களுக்கு).

'தமிழர் இலக்கியம்' புத்தகத்தில் நான் ரசித்த பகுதிகளிலிருந்து:

தமிழ் மொழி கி.மு 500ல் வரிவடிவம் பெற்றிருந்தது என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. (தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பார் கவனிக்க; காட்டுமிராண்டிகளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது; காட்டுமிராண்டிகள் கி.மு 5000ம் வாக்கில் தொலைந்ததாகச் சொல்கிறார்கள்; ஒரு சிலர் மட்டும் படப்பை வண்டலூர் தியாகராயநகர் பகுதிகளில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்)

ஐந்து-ஆறாம் நூற்றாண்டு வாக்கில் வட இந்தியாவிலிருந்து சைவ வைணவ புத்த மதங்கள் தமிழ்நாட்டில் அளவுக்கு மீறிய ஆட்சிமுறை பெற்றுப் பரவி அதுகாறும் இருந்த தமிழ் மதங்களை வழக்கிலிருந்து வேரோடு ஒழித்தன. இதை அதற்கு முந்தைய தமிழ் நூல்களிலிருந்து அறியலாம்.

ஒவ்வொரு சங்கத்திற்கும் கூறிய ஆயுட்காலம் 37ன் பெருக்குத் தொகையாக அமைகிறது. அவற்றின் மொத்த ஆயுட்காலம் முறையே, 37x120=4440; 37x100=3700; 37x50=1850. இது அவ்வெண்கள் எத்துணை செயற்கையானவை என்பதைக் காட்டுகிறது. அப்பழங்காலத்தில், உண்மையில் கூறப்போனால், எட்டாம் நூற்றாண்டு வரை கிறுஸ்தவ ஆண்டு போலும் ஆண்டுக்கணிப்பு முறை தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே ஆண்டுகளைப் பெருமெண் அளவில் எண்ணிக் காணும் வழிமுறை இடம்பெறவில்லை. (தமிழனுக்கு கணக்கு வராது என்று யார் சொன்னது?)

சமஸ்கிருதத்தில் செயப்படுபொருள் குன்றிய செயப்பாட்டு வினையாட்சி செய்வினை ஆட்சியினும் மொழி நடை உடையதாம். (இந்த வரி, சத்தியமாகப் புரியவில்லை; ஆனால் இதை படித்தபொழுது அநியாயத்துக்குச் சிரித்தேன். அதனால் பிடித்தது)

திருவள்ளுவர், சமஸ்கிருத நெறிகளிலிருந்தும் நூல்களிலிருந்தும் நிறைய எடுத்தாண்டிருக்கிறார். அவருடைய அறம் பொருள் இன்பம் என்ற பகுப்பு, வடமொழியின் தர்ம அர்த்த காம த்ரிவர்க்கங்களின் தமிழே. அர்த்தசாஸ்திரம், பகவத்கீதை நூல்களின் கருத்தை அப்படியே குறளாகக் கொடுத்திருக்கிறார். ('ஒருமையுள் ஆமைபோல்' வள்ளுவரின் அசல் என்று நினைத்திருந்தேன்; கீதையாம்). ஆரியச் சமயங்கள் தமிழில் பரவத் தொடங்கியக் காலத்தில் எந்தச் சமயமும் அரசாதரவு பெறாத நிலையில் ஒன்றோடொன்று பகைத்துக் கொள்ளவில்லை. (great insight! உண்மையிலேயே யோசிக்க வேண்டிய விஷயம். secular என்று சும்மா சொல்கிறோமோ இந்நாளில்? எம்மதமும் சம்மதம் என்பது மறந்து போன தமிழர் பண்பாடு என்று தோன்றுகிறது). ஆகவே தான், எந்தச் சமயச்சாயலை ஆதரிக்கிறார் என்பது வெளிப்படாமலே திருவள்ளுவர் ஒளிவீசுகிறார். திருவள்ளுவர் பற்றி முப்பது பக்கங்கள் இருக்கின்றன. நிறைய சுவாரசியம், சில திடுக். தமிழ் நூல்களில் திருக்குறள் மட்டும் உலகப் புகழ் பெறக் காரணம் கிறுஸ்துவ மதம் என்று கோடிட்டிருக்கிறார் கோவிந்தர். உண்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது. வித்தியாசமான கோணம்.

"நோய்வாய்ப்பட்டு இறந்த அரசர்களின் உடலை வாளால் வெட்டிப் புதைக்கும் வழக்கம்" பற்றி ஔவையாரும் சாத்தனாரும் பலரும் பாடியிருக்கிறார்கள். அமைதியை விரும்பும் அரசன் போரே தொடுக்கவில்லையென்றாலும் அவன் பேர் கொண்ட அன்பினால் இறந்தவனைத் துண்டு போடும் வழக்கம் கொஞ்சம் வயிற்றைக் கலக்குகிறது. (வீரமரபுனா வீரமரபு தாங்க). ஔவையார் பழந்தமிழ்ப் புலவர்கள் வழியைப் பின்பற்றிச் சமஸ்கிருதச் சொல்லாம் தருப்பை என்பதை ஆள்வது விடுத்துத் தமிழ்ச்சொல்லாம் புல் என்பதை ஆண்டுள்ளார். ஆனால், சாத்தனார் தருப்பை என்பதையே ஆண்டுள்ளார். சாத்தனார் ஔவையாரினும் பிற்பட்டக் காலத்தவர் என்றே காட்டுகிறது. அவர் இயற்றிய மணிமேகலை ஆரிய நாகரீகமும், பிராமண பௌத்த சமண இலக்கியங்களும், தமிழகத்து வாழ்க்கையில் ஆட்சி செலுத்தத் தொடங்கிவிட்டக் காலத்தைச் சேர்ந்ததாம்.

அட, தருப்பைக்கும் புல்லுக்கும் இடையே இத்தனை ஆரிய-திராவிட ஜல்லியா என்று அசந்து போய் அந்தப் பாடல் வரிகளைப் பார்த்தேன்:
ஔவை: அறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி, மறம் கந்தாக நல்லமர் வீழ்ந்த
சாத்தனார்: தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து, செருப்புகல் மன்னர் செல்வழிச் செல்கென
எனக்கென்னவோ எதுகை மோனை காரணத்துக்கான சொல்தேர்வாகப் படுகிறது, புலவரே. இந்த மாயை சமாசாரத்தில் எனக்கு நம்பிக்கையில்லாத காரணமாக இருக்கலாம். இல்லாத ஒன்றன் நம்பிக்கை அறிவுள்ள மனிதரையும் எப்படியெல்லாம் எண்ண வைக்கிறது!

நக்கல் நீங்கலாக, இது சுவையான புத்தகம். ஆரிய-திராவிட பிரசாரத்துக்கப்பால் பார்க்கும் தமிழார்வமுள்ள முதிர்ந்த வாசகர்கள் (க்க்க்க்ம் கவனிக்க: முதிர்ந்த ≠ முதிய) இந்தப் புத்தகத்தை ரசிப்பார்கள் என்றே தோன்றுகிறது. தமிழிலக்கியக் காலங்களையும் படைப்புகளையும் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. இந்தப் புத்தகத்தைக் கண்காட்சியில் வாங்கப்போனால், கோவிந்தனாரின் 'பண்டைத் தமிழர்' நூலும் கிடைக்கிறதா பாருங்கள். அடுத்தச் சென்னைப் பயணத்தில் வாங்க நினைத்திருக்கிறேன்.
தமிழர் இலக்கியம் | புலவர் கா. கோவிந்தன் | தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு | ரூ.95 (விலை மாறியிருக்கலாம்; ரூபாய்க்கு யூனிகோட் உரு கிடைக்கிறதா?)

20 கருத்துகள்:

 1. இந்த பிரிவினைப் பிரசாரத்துக்காகவே ஒவ்வொரு அரசுத் தொடக்க நடு உயர் பள்ளிகளில் கழகத் தமிழாசிரியக் கண்மணிகள் நியமிக்கப்பட்டார்கள் .//

  இப்படியெல்லாம் கூட நடந்ததா.

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு. நன்றி.
  சில புதிய விவரங்கள் தெரியப்பெற்றேன்.
  இந்த ஜல்லியடி அறுபதுகளில், எழுபதுகளில் , உயர்நிலை வகுப்புகளில் இருந்தவருக்கு மட்டுமே புரியும். அதற்கு பிற்காலம், தமிழ் மீடியம் குறைந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆங்கில மீடியம் மிகுந்ததால் தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் போன்ற வசனங்கள் கேட்டிருக்கமாட்டர்கள். இப்போதும் வலை உலகில் (பயன் படுத்துவோர் முப்பது நாற்பது சில்லறை அகவை இருப்போர் அதிகம் என நினைக்கிறேன்) இந்த அளவு ஜல்லியடி இருப்பது எனக்கு ஆச்சரியமே.
  அறுபத்தேழில் பள்ளி முடித்த எனக்கு, பதிவர் சொன்ன அனுபவங்கள் இல்லை. ஒரே தமிழ் ஆசிரியர் - நடு நிலை எண்ணங்கள், இறைப் பற்றுடன்.

  பதிலளிநீக்கு
 3. என்பதுகளிலும் கழக மணிகள் இருந்தார்கள்..ஆனால் உருப்படியாய் அரசியல் தமிழ் இரண்டையும் சொல்லிக்கொடுக்கவில்லை..

  ``உலகம் யாவையும்`` செய்யுளை கூட மறுக்குமளவுக்கு நாத்திக முளைச்சலைவையோடு இருந்தார்...

  ஜல்லியடி தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வாத்தியார் கத்து கொடுத்த வார்த்தை (உங்களுக்கு சுஜாதா என்று சொல்ல வேண்டும் )..

  கம்பூயுட்டரில் மென்பொருள் வன்பொருள் சொற்றோடர்கள் சிலவற்றை சொல்லி ..இவை தெரிந்தால் போது சரியான ஜல்லியடிக்கலாம் என்று சொல்வார் ( அந்த வார்த்தைகள் மனசில் நின்றிருந்தாலே போதும் நானும் ஜல்லியடித்து முன்னேறியிருப்பேன்..)

  பதிலளிநீக்கு
 4. ஆரியம்..திராவிடம் ...என் பையன்களிடம் கேட்டால் ..என்னப்பா ஆரியம் ..ஆர்யா ..திராவிடம் - டிராவிட்..என்னப்பா நடிகர் .கிரிக்கெட் பிளேயர் பேர் எல்லாம் சொல்லி மொக்கை போடுகிறீர்கள் என கிண்டல்...

  பதிலளிநீக்கு
 5. பத்துஜி சொல்ற மாதிரி இந்தக்கால பசங்களுக்கு ஆரியம் திராவிடம் எல்லாம் தெரியறதில்லை. சொல்லப்போனா தங்களோட ஜாதி என்னன்னு கூட தெரியல. நல்ல மாற்றாம் இல்லையா ?

  நூல் விமர்சனம் நன்று.

  பதிலளிநீக்கு
 6. //சுஜாதாவின் தாக்கம் இல்லாமல் நவீனத் தமிழ் எழுதுவது ரொம்ப சிரமம். இறையிலக்கியங்களுக்குப் பிறகு தமிழில் நான் அதிகமாகப் படித்தது சுஜாதாவின் எழுத்துக்கள் தான். //

  எனக்கு வசதியாக உங்களுடய பழைய பின்னூட்ட வரிகளை பிடித்து வந்து விட்டேன்... அப்படிப்படித்த சுஜாதா பற்றி ஒரு நட்சத்திர பதிவிட நேரம் கிடைக்குமா... உங்களை ஒரு வாரமாக கசக்கி பிழிந்த பிறகு வரும் இந்த கேள்விக்கு மன்னிக்க.... நேரம் கிடைக்கும் பொழுது.

  பதிலளிநீக்கு
 7. என் பதிவுல இருந்து உருப்படியா கத்துக் கொண்டதாக ஒப்புக்கொண்டதற்கு முதற்கண் நன்றி (ஆஹெம்!)

  நெற்குப்பை தும்பி: ஜல்லியடி வாத்தியார் சொன்னது. எண்பதுகளில் பள்ளிக்குச் சென்றவர்களுக்குத் தெரியாதுன்னா, தமிள்கூறு போடும் நல்லுலகத்த்தைக் குறைவாக மதிப்பிடுகிறீர்கள்னு அர்த்தம்;-)))) ஆனால், இப்படி ஒரு சூப்பர் "பதிவர் பெயரை" எங்கிருந்து பிடிச்சீங்க? உங்க பெயரைத் தமிழில் எழுதினது சரியா? "த்" உண்டா கிடையாதா?

  //செயப்படுபொருள் குன்றிய வினை// மடிக்கணினியை எடுத்தேன் இந்த வாக்கியத்தில் மடிக்கணினி செயப்படுபொருள். செயப்படுபொருள் குன்றிய வினைச்சொல்: நடந்தான், சென்றான், தூங்கினான். இந்த செ.ப.பொ. தேவையிலாத வினைச்சொல் பயன்பாடு //செய்வினை ஆட்சியினும் மொழி நடை உடையதாம்// வடமொழியில் அதிகம் என்று "சொல்லுமாப்போலே இருக்கிறது".

  இல்லை, "எலும்பு இல்லாமலே சூனியம் செய்வினை வச்சிட்டாங்க"ன்னும் எடுத்துக்கலாமா இருக்கும்:-)))

  அப்புறம் என் பள்ளியிலே தமிழாசிரியப் பெருமக்கள் அதிகமும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவங்களே.....

  பதிலளிநீக்கு
 8. என்னுடைய தமிழ் வாத்தியார் கழகக்கண்மணிதான். ஆனால் இந்த ஆரியம் திராவிடம் பத்தி பேசினது இல்லை. நான் நெற்றியில் விபூதி இல்லாமல் போனால் அவரிடம் திட்டு கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லாஜனவரி 09, 2011

  There runs a deep stream of 'holier than thou' attitude in your post.

  You take 2 writers. One who wrote his book in English and the other in Tamil. And rate them. Recommends the latter. The former is not recommended. Bad English or unreadable.

  U shd have given an extract from Iyengar for us to know whether u r right in ur estimate. And I also dont have any source to know how much you know English,

  Another fallacy is that you presume Iyengaar wrote for you. I mean, Tamil speakers.

  Not at all. He wrote the History of Tamils only for scholars who want to research abt ancient Tamils. That was why he wrote in English to reach them, to help them with his knowledge, Why did you forget that?

  Abt the other book also, you are haughtier. The book is published by Saiva Sithaantha Kazhagam, who never publishes any book for the sake of attacking brahmins. You give the impression otherwise. The publishers are hugely admired by the Tamil society for consistently contributing to Tamil liteature and society in bringing out such books.

  You have perverted these books by adding sarcastic tone to Govindar book also.

  Aryan-Dravidian controversy has not begun from the ascendancy of Anti brahmin movement. Maybe, it has become so popular or popularised by them. It predates them.

  The controversy can be taken either academically or politically. Only when we take it as the latter, the politicians and the brahmins come into pic. Not when we take it as the former. Then, only academic scholars figure in the debate. You are mocking at the academic schoalrs.

  Either take it political and go hammar and tongs at your enemies who made the jally. Then ur sarcasm is justified.

  Or, as an academic debate and write usefully and seriously. Both Iyenagar and Govindar are academic scholars, not politicians to get a haughtier and sarcastic look at you.

  Similarly, Rev Robert Caldwell too. Was he a politician? But he gets quoted in this controversy by those who take the side for the glory of Ancient Tamils ?

  I find ur post disappointing.

  Regards

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லாஜனவரி 09, 2011

  There runs a deep stream of 'holier than thou' attitude in your post.

  You take 2 writers. One who wrote his book in English and the other in Tamil. And rate them. Recommends the latter. The former is not recommended. Bad English or unreadable.

  U shd have given an extract from Iyengar for us to know whether u r right in ur estimate. And I also dont have any source to know how much you know English,

  Another fallacy is that you presume Iyengaar wrote for you. I mean, Tamil speakers.

  Not at all. He wrote the History of Tamils only for scholars who want to research abt ancient Tamils. That was why he wrote in English to reach them, to help them with his knowledge, Why did you forget that?

  Abt the other book also, you are haughtier. The book is published by Saiva Sithaantha Kazhagam, who never publishes any book for the sake of attacking brahmins. You give the impression otherwise. The publishers are hugely admired by the Tamil society for consistently contributing to Tamil liteature and society in bringing out such books.

  You have perverted these books by adding sarcastic tone to Govindar book also.

  Aryan-Dravidian controversy has not begun from the ascendancy of Anti brahmin movement. Maybe, it has become so popular or popularised by them. It predates them.

  The controversy can be taken either academically or politically. Only when we take it as the latter, the politicians and the brahmins come into pic. Not when we take it as the former. Then, only academic scholars figure in the debate. You are mocking at the academic schoalrs.

  Either take it political and go hammar and tongs at your enemies who made the jally. Then ur sarcasm is justified.

  Or, as an academic debate and write usefully and seriously. Both Iyenagar and Govindar are academic scholars, not politicians to get a haughtier and sarcastic look at you.

  Similarly, Rev Robert Caldwell too. Was he a politician? But he gets quoted in this controversy by those who take the side for the glory of Ancient Tamils ?

  I find ur post disappointing.

  Regards

  பதிலளிநீக்கு
 11. தமிழ் பற்றிய தமிழ் பதிவுக்கு இவ்வளவு பீட்டர் தேவையா..அதுவும் இரண்டுமுறை...செய்தியை விட பிரதாபம் தான் முன்னிலை...நான் உங்க ள் பதிவோடு பின்னூட்டங்களையும் படிப்பவன்.ரசிப்பவன்.இதை சாய்ஸில் விட்டுவிட்டேன்...

  பதிலளிநீக்கு
 12. நன்றி தமிழ் உதயம், nerkuppai thumbi, பத்மநாபன், சிவகுமாரன், கெக்கே பிக்குணி, எல் கே, Jo Amalan Raven Fernando, ...

  பதிலளிநீக்கு
 13. தமிழ் உதயம், நீங்கள் வியந்து சொல்லவில்லை என்று நம்புகிறேன். நேருவும் ஜின்னாவும் செய்தது தான். தமிழைப் புகுத்த கழக அரசின் தந்திரம். ஒரு விதத்தில் நன்றி சொல்ல வேண்டும். தமிழோடு நின்றிருக்கலாம் (மபொசி இதைப் பற்றிக் காரமாகப் பேசிய நினைவு) - ஆரிய திராவிட, ஆஸ்திக நாஸ்திக பிரிவினைகளை தமிழோடு சேர்ந்தூட்டியிருக்க வேண்டாம். அரசியல் ஆதாயம் இல்லாமல் எதையுமே கழகங்கள் செய்ததில்லை. (for that matter, உலகின் எந்த ஆளுங்கட்சியும் அப்படித்தான்)

  பதிலளிநீக்கு
 14. உண்மை, nerkuppai thumbi (கெபியைப் போல் நானும் வியக்கிறேன்; மிகத் தனிப்பட்டப் பெயர்). எமர்ஜென்சிக்குப் பிறகு தமிழகப் பள்ளிகளில் படித்தவர்கள் இந்த ஜல்லியடியை அதிகம் அனுபவிக்கவில்லை என்று நானும் நினைத்திருக்கிறேன். என்றாலும், பிரிவினை ஜல்லியடி ஒரு அளவில் இயங்கிக் கொண்டே தான் இருந்தது; இருக்கிறது. இன்றைய மாணவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

  பதிலளிநீக்கு
 15. கெபி.. இப்படிப் பின்றீங்களே? புரியாம இருந்த வரியின் abstract humor இப்ப போயிடுச்செம்ம்ம்மாஆஆஆ..

  உங்கள் ஞான வீச்சின் பரவல் பிரமிக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 16. உண்மை எல் கே; ஆரிய திராவிட ஜல்லிக்கும் ஆஸ்திக நாஸ்திக ஜல்லிக்கும் வித்தியாசம் இருக்கிறது - சிலர் இரண்டையும் போட்டுக் குழப்புகிறார்கள். என் தமிழாசிரியர் மங்கலமன்னன் நாஸ்திகர்; ஆனால் ஆரிய-திராவிட ஜல்லியை நம்பவில்லை. என் விபூதிக் கீற்றை அழிப்பாரே தவிர, தன் நெற்றியிலும் முறுக்கு மீசை முனையிலும் குங்குமபொட்டு வைத்திருப்பார் - பாரதிப் பைத்தியம். துரைசாமி இரண்டையும் குழப்பிய ரகம்; "இன்னிக்கு சாப்பாட்டுல ஒரே சாமிபா" என்பார். அறத்துப்பால் குறள்களை பாடமெடுக்க மாட்டார்; பரீட்சையில் கேடகவும் மாட்டார்.

  பதிலளிநீக்கு
 17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Jo Amalan.

  சீனிவாசர் புத்தகத்தை முழுவதும் படித்தால் தானே பரிந்துரை செய்யவோ ஒதுக்கவோ முடியும்? தவறாக நினைக்காதீர்கள் - சீனிவாசர் தன்னுடைய புத்தகத்தில் இன்னாருக்காக எழுதியதாகச் சொல்லாததால், எனக்கும் (தமிழ் மொழியாளருக்கும்) எழுதியது என்று நினைத்துக் கொண்டேன். சீனிவாசப் போலீசார் இதைப் பிடிப்பார்கள் என்று நினைக்கவில்லை :) anyway, நீங்கள் சொல்வது போல் அது "அறிஞர்"களுக்கான புத்தமென்றே நானும் நினைத்தேன் - ஆய்வையும் உழைப்பையும் பாராட்டினேன்.

  என்னுடைய ஆங்கிலப் பிடிப்புக்கும் சீனிவாசரின் ஆங்கில நடைக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. அவர் நடை சகிக்கவில்லையென்றால் அது எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பின் வெளிப்பாடு அல்லவா? சீனிவாசர் அதனால் களங்கப்படப் போவதில்லை. அவர் ஆங்கில அறிவு கூடவோ குறையவோ போவதில்லை.

  கோவிந்தர் வடமொழியை/ஆரியத்தைச் சாடுவதாகத் தான் எழுதியிருக்கிறேன் - பிராமணர்களைப் பற்றி நான் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே? (எதற்கும் ஒரு முறை படித்துவிட்டு வருகிறேன்).

  என் எழுத்தைத் தாக்குங்கள்; உற்சாகமாக உரையாடலாம். என்னைத் தாக்காதீர்கள்.

  பதிலளிநீக்கு
 18. Joவின் பின்னூட்டம் இரண்டு முறை பதிவானது blogger பிழையென்று நினைக்கிறேன் பத்மநாபன்..

  பதிலளிநீக்கு
 19. பெயரில்லாஜனவரி 09, 2011

  Padmanaban

  I presume u r addressing me.

  I lack tamil fonts right now. Hence English.

  I am not computer saavy. So I dont know how my mge got repeated.

  There may not be any gainsaying the fact that we shd not abuse our blog writing to tarnish the reputation of Scholars.

  Appadurai calls Srinivasa Iyengar who has done great contribution to Tamil research as Srinivasan. Enna thimir.

  Appadurai perches himself at the top and looks down upon scholars from above.

  He even says 'Srinivasan's English is unreadable.

  Let me see appadurai's English. How far his is readable?

  Let him put an extract from his english and Iyengar's.

  He has abused the glorious opportunity of a star blogger by abusing Tamil scholars.

  Take politicians and hang them in ur blog.

  Why Scholars ?

  You can do only in r/o politicians. Take Annathurai's Arya Mayai, and pounce upon him, tear him to pieces and satisfy urself!

  Govindar and Srinivasa Iyengaar are not politicians.

  பதிலளிநீக்கு
 20. ஆமாங்க ஜோ உங்களையே தான் சொன்னேன் // // போடாம விட்டுட்டேன்.. தமிழுக்கு தட்டுப்பாடா ..மென் பொருள் உலகில் ..ஆச்சர்யம் ... மென் பொருளை விட்டு தள்ளுங்கள்....கூகிள் அஞ்சலில் `அ` எழுத்துருவை தேர்ந்தெடுத்து தட்டி நகலெடுத்து இங்கு வந்து ஒட்டலாம் .. மனமிருந்தால் மார்க்கம்..

  உங்க செளகரியத்தை குறையாக சொல்லவில்லை... தமிழை , தமிழ் இலக்கியத்தை தமிழ் பண்டிதத்தை பற்றிய பதிவு ..இதில் தமிழ் முயற்சி இல்லை என்றால் வேறெதில் ?

  பதிலளிநீக்கு