2014/03/03

பெத்தாபுர மலர்

      சாயம்            யாழ்            தோஷம்     





                    சங்கப்போவது தெரிந்தால், மலர்கள் மொட்டாகவே உதிர விரும்புமோ? சில பெண்கள், மலர்கள். சில மலர்கள், ஆண்கள்.

    முரளியை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். தற்கொலைக்கானத் தீவிர முயற்சி.

மூட்டைப்பூச்சி மருந்து குடித்து, அதற்கு மேல் தீக்குளிக்க முயன்றிருக்கிறான். அதற்கும் மேலாக ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து நீரில் விழுந்து மூழ்கவோ கட்டாந்தரையில் விழுந்து நொறுங்கவோ முயலாததால் சாகவில்லை.

எபிடெர்மிஸ் சிதைந்து போகக் காரணமான இரண்டாம் டிகிரித் தீக்காயங்களைக் கவனிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளிருந்து மூட்டைப்பூச்சி மருந்தையும் நீக்க நேரிட்ட சிக்கல் தொட்டு, அல்லது, உள்ளிருந்து மூட்டைப்பூச்சி மருந்தை நீக்க வேண்டியிருந்த கட்டத்தில் எபிடெர்மிஸ் சிதைந்து போகக் காரணமான இரண்டாம் டிகிரித் தீக்காயங்களைக் கவனிக்க நேர்ந்ததால் - முரளி ஒரு வாரமாக மூச்சு பேச்சில்லாமல் கிடந்தான்.

ஒரு வாரமாக எங்கள் வட்டத்தில் அதுவே பேச்சு மூச்சானது.

அசுதோஷிலிருந்து எங்கள் சிறுவட்டம் பெருவட்டம் எல்லாவற்றிலும் அனைவருமே கலங்கிப் போயிருந்தார்கள். சென்னை மேலாபீசிலிருந்து தில்லித் தலைமையலுவலகம் வரை மேலாளர்களும் மனிதவள நிபுணர்களும் எங்களை தொலைபேசியும் நேரில் சந்தித்தும் குடைந்து கொண்டிருந்தார்கள்.

நாங்கள் தேவைக்கதிகமாக எவருடனும் பேசவில்லை. சிலரின் நக்கீரப் பார்வைகளைத் தவிர்ப்பதில் குறியாக இருந்தோம். போலீஸ், சமூக சேவை, மருத்துவர், உடன் வேலை பார்ப்பவர்கள், தெரிந்தவர்கள் என்று பலருக்கும் பதில் சொல்ல வேண்டியிருந்தது. பேச்சு கேட்க வேண்டியிருந்தது. பார்வைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. எங்கள் வீட்டுப் பெரியவர்களின் கலவரப் போக்கை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இரவின் உறக்க ஆயத்தத்தில் எங்களை நாங்களே தட்டிக் கேட்டுக் கொள்ளத் தூண்டும் அசாதாரண உணர்வுகளைக் கட்ட வேண்டியிருந்தது. எங்கள் வீச்சுக்கு மீறிய வலையாக விவகாரம் உருவெடுத்துக் கொண்டிருந்தது.

இலவசமாகக் கிடைத்தப் பிறவியை வீணாக்காமல் பொதுவாகக் கவலையின்றிக் கொண்டாடித் திரிந்த நாங்கள், அந்த வார இறுதியில் அமைதியாக இருந்தோம். ரெட்டைபாதின் சுகப்பாதை பயணங்களைத் தவிர்த்து நாற்சுவருள் முடங்கிக் கிடந்தோம். எங்கேயும் போகவில்லை. அசைவம் கூடச் சாப்பிடவில்லை.

கொடுமையிலும் கொடுமையாக, சனிக்கிழமை காலை ஆறு மணிக்கெல்லாம் தூக்கம் தொலைத்தேன். எதிரே வத்சன் ஆண்களுக்கே உரித்தான அதிகாலைச் செங்கோணச் சிக்கல் புலப்படத் தூங்கிக் கொண்டிருந்தான்.

எழுந்தேன். சுத்தம் செய்து கொண்டு, முதல் நாளிரவு பேப்பர் கடைக்காரன் போட்டுச் சென்ற குமுதம் ஒரு கையிலும் அப்போது கலந்த சன்ரைஸ் காபி இன்னொரு கையிலுமாக ஹாலில் அமர்ந்தேன். வினியோகச் சத்தம் சேர்த்து எழுபத்தைந்து காசாக அந்த வாரம் குமுதம் விலை உயர்ந்திருந்தது. பேப்பர் கடைக்காரன் எனக்காக விட்டுப்போன குறிப்பை எறிந்தேன். காபி இறங்கவில்லை. லைட்ஸ் ஆனில் மனம் ஒட்டாமல் இலவச இணைப்பை எடுத்தேன். சமீபமாகப் புகழின் உச்சிகளைத் தொட்டுக் கொண்டிருந்த சில்க் ஸ்மிதா, அட்டைப் படத்தில் அரைமுழப் புடவையை மிகுந்த சிரமத்துடன் கட்டியிருந்தார். எப்படி இவருக்கு மட்டும் இத்தனை பருத்த..

..வாசல் கதவு இடிபடும் ஓசை கேட்டு அவசரமாக எழுந்தேன். ஓடிச் சென்று வத்சனை உலுக்கி எழுப்பி, ஹாலில் அபாயகரமாக எதுவும் இல்லை என்று ஒரு முறை எச்சரிக்கை நோட்டமிட்டு, வாசல் கதவைத் திறந்தால்..

..புன்னகையற்ற அசுதோஷ். அவனருகே புன்னகையற்று நின்றிருந்த மற்ற இருவரும் இதே விவகாரம் தொட்ட ஒரு கசப்பான சூழலில் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்.

"துரை.. மீட் முரளிஸ் பேரன்ட்ஸ்" என்றான் அசு.

"வாங்க" என்றேன் மனமில்லாமல். அவர்களுக்கு வழிவிட்டுப் பின் தொடர்ந்த அசுதோஷின் பார்வை, எனக்கு உறுதியான செய்தி சொன்னது. முதல் நாள் மாலையின் எச்சரிக்கைகளை நினைவுபடுத்துவது புரிந்து, நானும் சங்கேதமாக ஆமோதித்தேன்.

அவர்கள் உள்ளே வந்து உட்காரவும் வத்சன் சமையலறையிலிருந்து வரவும் சரியாக இருந்தது. அத்தனை சடுதியில் பல் விளக்கி முகம் கழுவி முடி சீவி உடையணிந்து வந்தது வியப்பாக இருந்தது. அதற்கான ஒலிம்பிக் போட்டி ஏதாவது இருந்தால் அன்றைக்கு அவன் தங்க மெடல் வாங்கியிருப்பான். ஜீன்ஸும் மஞ்சள் டீ ஷர்டும் பளபளக்க, "நானு வத்சன்" என்று நட்புக்கை நீட்டினான். "காபி சாப்ட்றிங்ளா? ரெடியாச்சு"

"நாங்க ஒண்ணும் காபி சாப்பிட வரலே" என்றார் முரளியின் அம்மா, விசும்பலில் நனைந்த கண்டிப்புடன்.

பிறிதொரு தருணமெனில் அவர் மறுப்பை முகத்திலடிக்கும் அவமானமாகக் கொண்டிருப்போம். இன்று அப்படியல்ல. அவர்கள் வந்த காரணம் எங்களுக்குத் தெரியும். உங்களுக்கும் தெரிய வேண்டுமானால் கணிசமாகப் பின்னோக்கிப் போக வேண்டும். முரளியின் அறிமுகத்திலிருந்து தொடங்க வேண்டும்.

முரளியின் அறிமுகமும் ஒரு சனிக்கிழமை அதிகாலை அதிவேகக் கதவிடிப்பின் அதியோசையில் நிகழ்ந்தது.

அரும்பு []
    "பொறம்போக்கு பகதூர்.. அவந்தான் இப்படித் தட்டுவான்.. எந்திரிடா துரை.. காலங்காலைல என்னால இந்தி கேக்க முடியாது.. நீ போய்ப் பாருடா.. நாராசமாத் தட்டுறாண்டா.. எந்திரிடா.." என்று எதிர் கட்டிலிலிருந்து புலம்பினான் நேன்ஸ். அடுத்தக் கணம் இழுத்துப் போர்த்துப் படுத்து விட்டான்.

நான் புரண்டேன். கதவில் கெட்டிமேளம் நிற்கவில்லை. கூடவே அழைப்பு மணி. பகதூர் தான், சந்தேகமில்லை. ஒரு கையால் காலிங் பெல்லை விட்டு விட்டு அழுத்தி மறு கையால் கதவை விடாமல் தட்டும் violently ambidextrous fellow. எங்கள் குடியிருப்புக் கூர்க்கா காவலன். சத்தியமாக இவனுக்கும் நேபாலுக்கும் சம்பந்தம் கிடையாது. பிகாரின் ஏதோவொரு எல்லைப் பகுதியில் காசுக்கும் கையாலாகாமைக்கும் பிறந்தவன். இருந்தாலும் கூர்க்கா பாரம்பரியம் என்று கூசாமல் பெருமை பேசுவான்.

எழுந்தேன். இன்னும் மூன்று நாளைக்கான hangover பாக்கியிருந்தது. தடுமாறினேன். எதற்கு வாச்மேன் அதிகாலையில்.. ஏழு மணிக்கெல்லாம்.. தொந்தரவு தருகிறான்? அவசரமாக அறை தாண்டியவன், என்னை உணர்ந்துத் திரும்பினேன். சுவர்க் கொடியில் தொங்கிய லுங்கியை - கசங்கி நாறியது, வத்சனுடையதாக இருக்க வேண்டும் - எடுத்து மறைவாகக் கட்டிக்கொண்டு வாசல் தேடி நடந்தேன். பல் துலக்காதது பாதித்தது. இரவின் மது மாமிசம் கஞ்சா எல்லாம் கலந்து வேதனைப்பட்ட என் வாய் முகத்திலிருந்து கழன்று விழத் துடித்தது. கண்ணுக்குப் புலப்படாதக் குழிகளில் விழுந்து எழுந்து வாசற்கதவை அடைந்தேன். தாழ்ப்பாளைக் கீழிறக்க இரண்டு முறை முயன்று முயன்று.. திறந்தேன்.

புகையிலைப் பல் காட்டி இளித்த பகதூர், "சாப்.. பர்சோன் போலானா.. ஆகயா.." என்றான்.

புரியாமல் விழித்தேன். கடும் எரிச்சலில் கொஞ்சம் கன்னித் தமிழ் கலந்து, "ஓத்தா.." என்றேன். "கோன் ஆகயா?"

பிறகு கவனித்தேன். பகதூருக்குப் பின்னால் படியருகே சாதுவாக நின்ற பால உருவம் பதமாகக் கை நீட்டி, "ஹாய்.." என்றது. 'பிக்ஷாந்தேஹி' என்றும் சொல்லியிருக்கலாம். பரந்த நெற்றியில் விபூதி ப்லாஸ்திரி பயமுறுத்தியது. மீண்டு பகதூரைப் பார்த்தேன்.

"இத்னா லகேஜ் லாயா.. பாரி. தேக்.. பீம் கா போத்தா ஜைசா". பகதூர் எனக்காகக் காத்திராமல் பெட்டி படுக்கையை உள்ளே வைத்தான். "ஏய்.." நான் தடுக்குமுன், "அச்சா சாப்" என்று மாடிப்படிகளில் மறைந்தான். சாது உருவம் இன்னும் கை நீட்டியபடி நின்றிருந்தது.

என் தூக்கம் முழுதும் கலைய, உருவம் நீட்டிய கையில் என் கை மாட்டிக் குலுக்கி, "யார் நீ?" என்றேன். வீட்டுள் அனுமதித்தேன்.

அரவம் கேட்டு எழுந்து வந்தான் வத்சன். வழக்கமாகக் கழுத்தில் அணியும் மைனர் செயின் கூட இல்லாமல், முழு அம்மணமாக இருந்தான். என்னிடம், "என்னாடா..காலே எந்திரிச்சு பேஜார்.. யார்டா இவன்?" என்றான்.

சாது உருவம் மறுபடி "ஹாய்" என்றது. நிதானித்து, "ஐ'ம் முரளி" என்றது பொதுவாக.

வத்சன் திடுக்கிட்டுச் சுதாரித்தான். "டேய்.. தொரை.. மறந்தண்டா.. முரளி.. ஆ.. ஷிட்.. புது சேல்ஸ் ட்ரெய்னி.. மெர்சன்டைசிங்லந்து வரான்.. நீயும் நானும் அவனுக்கு மென்டோர்ஸ்.. அசுதோஷ் சொல்லிட் போனான். பத்து வாரம் நம்ம கூட வச்சு ட்ரெயினிங் தர்ணம்.. ப்ளான் உன் ரூம்ல வச்ருக்கேன்.. மறந்துச்சு.. கமின் முரளி.. சனிக்கிளமை வரதா சொன்னாங்க இல்லே?" என்று... பாத்ரூம் கதவைத் திறந்து, நின்றபடி பலமாக சிறுநீர் கழிக்கத் தொடங்கினான். கவலையில்லாத மனிதன்.

எனக்கு வந்த கடுப்பில் வத்சனின் கால்களை இடறினேன். "தீவட்டி.. இன்னிக்குத் தாண்டா சனிக்கிழமை!" என்றேன். நிலைகுலைந்து அவன் அறையெங்கும் தெளிக்கத் தொடங்கினான். "சாரி மச்சி.." என்று இளித்தான். "இன்னிக்கு நீதான் பாத்ரூம் களுவ்ணம், மறந்தியா?" இன்னும் பலமாகச் சிரித்தான்.

முரளியைப் பார்த்தேன். வத்சனின் அம்மணப் பின்புறமும் நீர் தெறிக்கும் ஓசையும் முரளியைச் சங்கடப்படுத்தின. எனக்குச் சிரிப்பு வந்தது. பச்சைக் குழந்தை. பாவமாகவும் இருந்தது. பால் வடியும் முகம் என்பார்களே, அதை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. அது சாத்தியமெனில், இவன் முன்னிரவு வரை முட்டி முட்டி முலைப்பால் அருந்தியிருக்க வேண்டும்.

நேன்ஸ் எழுந்து வந்து வத்சனைக் கண்டதும் வாய்க்கு வந்தபடி திட்டினான். "ஒத்தா டேய்.. கதவைச் சாத்தி ஒண்ணுக்கிறேண்டா புடுங்கி.. நாயே.. பன்னாடை..மயிராண்டி..". தற்செயலாக முரளியைப் பார்த்துத் திடுக்கிட்டான்.

அவசரமாக என்னிடம் ஒடி வந்து, "ரூம்ல ஏதோ உருவம் தெரியுதுடா... நைட்டு ரொம்ப குழலூதிட்டேன் போலிருக்கு. ஜோதி சொரூபமா உன் பக்கத்துல நின்னு என்னையே பாக்குதே உருவம்.. உனக்குத் தெரியுதாடா? எங்க வூட்டுக்கு சொல்லியனுப்புடா... நான் ஒரே புள்ளடா.." என்று கலங்கினான்.

முரளி நேன்சைப் பார்த்து நட்புடன் சிரித்து, "ஹாய்.." என்று கை நீட்டினான்.

நேன்ஸ் மீண்டும் அலறி என் பின்னால் ஒளிந்தான். "அய்யய்யோ.. அதே உருவம் என்னைப் பாத்துக் கை நீட்டுதுடா.. காப்பாத்துறா.. சத்தியமா கஞ்சாவும் கல்யாணியும் இனி கலக்க மாட்டேன்டா.."

தூக்கம் கலைந்தக் கடுப்பில், "shut the fuck up.. you simian nincoms" என்று உள்ளிருந்து வெங்கட் எங்களை நோக்கி வீசிய ஒரு புத்தகம் வேகமாகப் பறந்து வந்தது. நேன்ஸ் சடுதியில் ஒதுங்க, புத்தகம் தரை தொட்டு வழுக்கி முரளியின் காலில் பட்டு நின்றது. The Story of My Experiments with Truth. புன்னகை மாறாமல் புத்தகத்தை எடுத்து சீராக்கி மடித்து வைத்தான் முரளி.

என்னைச் சுற்றிலும் பார்த்தேன்.

பல் தேய்க்காமல், குளிர்பெட்டியிலிருந்தப் பொதுத் தண்ணீர் பாட்டிலைச் சூப்பிக் குடித்து மீதி பாட்டிலை உள்ளே வைத்து அலட்டாமல் அம்மணமாக நடந்து படுக்கச் சென்ற வத்சன்.. போதையிலும் பீதியிலும் அரற்றிவிட்டு அங்கேயே படுத்து விட்டிருந்த நேன்ஸ்.. அதிகாலைத் தூக்கம் கலைந்த கடுப்பிலும் இலக்கண வழுவற ஆங்கிலத்தில் ஆபாசம் பேசும் வெங்கட்.. இவர்கள் போதாதென்று முன்னிரவில் 'அத்தகாரு ரகஸ்ய வ்யவகாரம்' வண்ணப்படம் பார்த்துவிட்டு வளமான மார் கொண்ட வாடகைத் துணையுடன் வீட்டுக்குள் வந்து விழுந்து கிடந்த, இந்தச் சலசலப்பு எதற்கும் விழிக்காத, விஜய். எங்களுடன் தங்காத எங்களை மிஞ்சிய உமேஷ்.. மற்றும் சற்றே இடைப்பட்ட ஊழல்காரன் ரங்கன். இவர்களுக்கு எந்த வகையிலும் சளைக்காத நான்... எதிரே அத்வைத ஆசான் போல் புன்னகை மாறாத முரளி.

சற்றே திகைத்தேன். சடுதியில் தெளிந்தேன். எங்கள் lifestyleல் ஞானசம்பந்தருக்கு இடம் கிடையாது.

உடனே அசுதோஷிடம் போனில் புலம்பினேன். முரளி எங்களுடன் இருப்பது அவனுக்கு நல்லதல்ல என்று எடுத்துச் சொன்னதும், காட்டெருமை போலச் சிரித்தான். "இத்னா மெஹ்ஸூஸ் க்யூன் பந்து? ஜஸ்ட் டென் வீக்ஸ்... you have to shape him up.. சப் ஆப்கி பலாயி கேலியே" என்றான்.

அசு எங்கள் பாஸ். என் வாழ்வை நிறைத்த ஓரிரவின் அருங்காதலன். எதிர்த்துப் பேச விரும்பவில்லை.


நனை [] புதிது
    ஐம்பதுகளின் பல தமிழ் நாவல் மற்றும் சினிமா தொடக்கங்களில் வருவது போல், முரளி அதிகாலையில் எழுந்து, குளித்து, நெற்றியிலும் மார்பிலும் விபூதியணிந்து, அடுக்கி வைத்திருந்த கடவுள் படங்களுக்கு சந்தனம் குங்குமம் இட்டு பூச்சூட்டுவான். புருஷ சூக்தமும் விஷ்ணு சகஸ்ரநாமும் சொல்வான். சனி ஞாயிறில் கோஷ சாந்தியும் மந்த்ர புஷ்பமும் சொல்லி 'எல்லாம் உங்களுக்காகத் தான்' என்பான். 'சுகினோ பவந்து' என்று எங்கள் திசையில் காற்றைச் செலுத்துவான்.

வந்த இரண்டாம் வாரம் எங்கள் அறைகளைச் சுத்தம் செய்யத் தொடங்கினான். கீழே கிடந்தவற்றை அடுக்கி வைக்கத் தொடங்கினான். நாலாம் வாரம் எங்களுக்காக சமைக்கவும் தொடங்கினான். எங்கள் பழக்க வழக்கங்களைப் பற்றிக் குறை பேசத் தொடங்கினான். வீட்டுக்குள் சிகரெட் பிடித்தாலோ மது அருந்தினாலோ சீட்டாடினாலோ கோபம் கொள்வான். "இப்படி இருக்கக் கூடாது.. உங்க அப்பாம்மா என்ன சொல்வாங்க? உடம்புக்குக் கெடுதல் இல்லையா? எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க வேண்டாமா? கூழானாலும் குளித்துக் குடி.. தினம் பத்து நிமிடமாவது தியானம்.. சூதாட்டத்தினால தானேடா அண்ணன் தம்பி சொந்த பந்தம் சுற்றம்னு கூட பாக்காம தேவையில்லாம ஒரு இனமே அழிஞ்சுது?...".

முரளியின் சள்ளை எங்களை முள்கரண்டியாகச் சுரண்டத் தொடங்கினாலும் இன்னும் சில நாட்கள் என்று சகித்துக் கொண்டிருந்தோம்.

ஏறக்குறைய அவனுடைய பயிற்சி முடியும் காலம்.

விஜய் தன் இளவயது அத்தையை நாலு நாட்கள் கல்லூரி விடுமுறை என்று அழைத்து வந்து, மதிய வேளையில் துகிலுரிந்துக் கிடந்ததைப் பார்த்த முரளி திடுக்கிட்டு என் அலுவலகத்துக்கு வந்து அலறினான். "டேய்.. விஜய்யும் ஒரு பெண்ணும் உன் ரூம்ல அவுத்துப் போட்டு கெடக்காங்கடா.. கேட்டா சிரிச்சுக்கிட்டே அவனோட அத்தைங்கறான்.. எனக்கு வந்த கடுப்புல நல்லா கேட்டேன்.. என்னடா இது.. உங்க அக்கிரமத்துக்கு ஒரு அளவே இல்லையா?"

"அத்தை..னா நிஜ அத்தையில்லடா.. அவன் அப்பாவோட ஒண்ணு ரெண்டு விட்ட சின்ன வயசு கசின்.. அத்தை முறை.. அவ்வளவு தான்" என்றேன்.

"ரொம்ப முக்கியம்டா.." என்று என்னை ஏற இறங்கப் பார்த்துச் சலித்தான் முரளி. "முதல்ல அவளை வீட்டை விட்டு அனுப்புடா. இல்லேன்னா நான் ஹோட்டல்ல தங்கிக்குறேன்"

நேன்சை அழைத்துக் கொண்டு நாங்கள் வீடு திரும்பிய போது அந்தப் பெண் அங்கில்லை. வெங்கட் சேன்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். புதிதாகத் திறந்த மெக்டாவல்ஸை அருந்திக் கொண்டிருந்தார்கள் வத்சனும் விஜய்யும். ரங்கன் ஒரு ஓரமாக நின்று சேக்ஸபோன் வாசித்துக் கொண்டிருந்தான். 'மலர்களின் ராஜா அழகிய ரோஜா' என்று ஒரு பாடாவதிப் பாடல்.. எனினும், மென்மையான ஜேஸ் மெட்டு. ரங்கன் வாசிப்பு பொருத்தமாக, நன்றாக இருந்தது. அவனருகே அமர்ந்திருந்த உமேஷ் தாளம் போட்டு ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

நாங்கள் நுழைந்ததும், ஆத்திரம் தாங்க முடியாமல் விஜய் தொடங்கி வைத்தான். "டேய் துரை.. அந்த சாமியாரை இன்னிக்கு ஒரு வழி பண்னப் போறேண்டா.. என்னைத் தடுக்காதீங்க" என்றான்.

"ஏண்டா..?" என்றேன்.

"அத்தையை வீட்டுக்கு அனுப்பிட்டமேனு அய்யாவுக்குக் கடுப்பு.." என்றான் என்னை இடித்தான் முரளி.

கையில் விஸ்கியுடன் அமைதியாகப் பார்த்தான் விஜய். "முரளி, எப்பனா பொண்ணைத் தொட்டிருக்கியா?".

"சீ..சீ"

"அப்ப ஆம்பிளையைத் தொட்டிருக்கியா?" என்று அருகில் வந்தான் வெங்கட்.

"ஐயோ.." என்றான் முரளி.

"என்னடா ஐயோ? தொட்டுப் பாரு.. இதமா இருக்கும்" என்ற வெங்கட், என்னைப் பக்கவாட்டில் கட்டிப்பிடித்து என் வலது தோளைப் பழம் கடிப்பது போல் நக்கிக் கடித்தான்.

"ஸ்டாப் இட்" என்று அலறத் தொடங்கினான் முரளி. விஜய், ரங்கன், வத்சன் மூவரும் சிரித்தார்கள்.

"உன்னையாவது எப்பனா தொட்டிருக்கியா?" என்றான் விஜய்.

"அப்படினா?"

விஜய் தன்னைத் தொட்டுக் காட்டினான். "வேஸலின் இருக்குல்ல?"

"சீ.." பதறினான் முரளி.

"பலான படமாவது பாத்திருக்கியாடா?" என்றான் நேன்ஸ். "இதுக்கும் சீ..னு சொன்னே, பேத்துருவேன்.."

முரளி எதுவும் சொல்லவில்லை.

உமேஷ் எழுந்தான். "சுனோ.. அபன்கா கர் ஜாதே.. முரளிகோ சப் சிகாதே.. அல்லு அல்லு..ப்லூ பிலிம் பாக்லாம் வாடா" என்றான் முரளியிடம். "கமல் ஜெயசுதா.. எக்தம் மஸ்த்"

"சும்மா இருடா.. எதுனா கெளப்பாதே.. கமல் ஜெயசுதா எல்லாம் கிடையாதுரா.. இது சாதாரண ப்லூ.." என்றான் ரங்கன்.

"நான் இங்க வந்தது சேல்ஸ் ட்ரெயினிங்காக. ப்லீஸ்.. எனக்கு இஷ்டமில்லே.. இதெல்லாம் பாவம்னு நினைக்கிறேன்" என்றான் முரளி.

"மவனே.. பாவம்னு எதுனா சொன்னே இங்கயே உன்னை ரேப் பண்ணிருவேன்" என்றான் விஜய்.

"டேய்.. நானும் வரேண்டா.. என்னையும் சேத்துக்கடா..ப்லீஸ்" என்று சேர்ந்து கொண்டான் வெங்கட். "ménage à trois, c'est magnifique" என்று வேண்டுமென்றே உரக்கச் சிரித்தான்.

முரளியை நெருங்கி, "முரளிக் கண்ணா.. இப்படி அம்மையாரா நடந்துகிட்டா தேறமாட்டே கேட்டியோ? மஞ்சுக்கொரு வாய், கவிதாக்கொரு வாய், அனிதாக்கொரு வாய், நிம்மிக்கொரு வாய்னு முத்தா குடுக்கணும்ண்டா செல்லம்..கட்டிச் சமத்தோல்லியோ?.. சொன்னா கேக்கணும்.." என்றான் நேன்ஸ்.

"நேக்கொரு வாய் சேத்து சொல்லுங்கோ மாமா.." என்று பெண் போல் பாவனை செய்து நேன்ஸை இடித்தான் வெங்கட்.

எல்லோரும் சிரித்தோம். முரளி நெளிந்தான். "எனக்கு இஷ்டம் இல்லேன்னா விடுங்களேன்? இன்னும் ஒரு வாரம் ட்ரெயினிங் முடிஞ்சதும் நான் என் வழிலே போயிடுவேன்"

"சும்மா இருடா சிவகிரி.. இங்க இருக்கற வரைக்கும் எங்கள பாலோ பண்ணு.. டோன்ட் ரூயின் அவர் லைவ்ஸ்" என்றேன்.

"டேய்.. நாங்க சொல்றதக் கேக்கலின்னா இன்னிக்கு நைட்டே உன்.." என்று நிறுத்திய வத்சனின் எச்சரிக்கையைப் புரிந்து கொண்ட முரளி, திடீரென்று தைரியம் வந்தது போல், "ப்லூ பிலிம் தானே? பாத்தா போச்சு.. நான் ரெடி" என்றான்.

வீட்டில் 16mm புரொஜெக்டர் வைத்திருந்தான் உமேஷ். அவன் வீட்டில் நீலப்படம் பார்க்கக் கூடினோம். சிறிது நேரம் எங்களுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய அண்ணன்கள் இருவரும் எங்களைக் 'கையாசாமிகள்' என்று கிண்டல் செய்து அகன்றனர். ரங்கன் நேன்ஸ் இருவரும் சொகுசு நாற்காலிகளில் சாய்ந்து கொண்டார்கள். வெங்கட் தாகூர் கலையரங்கில் ஏதோ ஷேக்ஸ்பியர் நாடகம் பார்க்கப் போய்விட்டான். விஜய் அவனுக்குத் தெரிந்த உள்ளாடை வெறுக்கும் உஸ்மானியா கல்லூரிப் பெண்கள் இருவரை அழைத்து வந்தான். முரளி வெட்கப்படுவதைப் பார்த்து அவர்கள் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். "இதர் பைடோ டார்லிங்.. நஸ்தீக் மே.. அரே கய்கோ.. ரூட்னா மத்.. ஷர்மீலா.. பாஸ் ஆவ்னா.. ம்ம்ம்..i like his virgin scent..ஆஆ.." என்று போலி முனகலுடன் அவனை மோப்பமிட்டார்கள். தொட்டார்கள். முரளி அதிர்ந்து விலகினான்.

"ஏண்டா, உனக்கு இருபது வயசுக்கு மேலாவுது.. இது கூடவா தெரியாது? பொது நாகரீகமே இல்லையே?" என்று வத்சன் மிகக் கோபமாக இரைந்தான். வத்சனுக்குக் கோபம் வந்தால் வையம் தாங்காது. "உன்னை மாதிரி ஆளுங்களால தான் உலகம் பின்னோக்கிப் போயிட்டிருக்குடா" என்றான். முரளியை இழுத்துப் பிடித்து உஸ்மானியா பெண்களுக்கு நடுவில் உட்கார வைத்தான்.

முரளி மிரண்டான். முரண்டான். உமேஷ் முரளியை அமைதிப்படுத்துவது போல, "பொம்மார்த்தா உனோன்.." என்று வத்சனைப் பூச்சாண்டியாக்கினான். "வத்சன் சொல் பேச்சு சுனோ தும்".

அதற்குப் பிறகு முரளி எதுவும் சொல்லாமல் பெண்களுக்கு இடையே அமர்ந்தான். நாங்கள் படம் பார்க்கையில் திடீரென்று வத்சன் குறுக்கிட்டான். "முரளிக்கு என்னா செய்யணும்னு தெரிஞ்சு போச்சு.." என்று திரை மறைத்து நின்றான்.

"சோமாறி.. நவருடா.. படத்தை மறைச்சுக்கிட்டு நிக்கறான்.. இப்பத்தான் அவ.. எம்மா நீள நாக்கு பாருடா.." என்று காட்சியை விவரித்தபடி இரைந்தான் நேன்ஸ். முக்கியக் காட்சிகளில் கவனம் பிசகினால் அவனுக்குப் பிடிக்காது.

"இருடா.. pathetic falatio.." என்றான் வத்சன் நகராமல். "see guys, முரளி is not enjoying.. அவனுக்கு கத்துக் கொடுக்கச் சொல்லியிருக்காரு பாஸ்.. முக்கியமானது சொல்லிக் கொடுக்ணும்.."

"சரி.. விஷயத்தை சொல்லி முடி, தடியா" என்றேன்.

"அடுத்த வாரம் காகினாடா மார்கெட் கவர் பண்றமில்லே? பெத்தாபுரம் போவலாம். முரளிக்கு inauguration.. ஹி வில் பிகம் எ மேன்" என்றான்.

"பெத்தாபுரமா?" என்று ஏதோ கேட்க வந்த முரளியை ஒரேயடியாக அடக்கி விட்டோம்.


...