2015/10/02

பாடல் பெற்ற பதிவர்
எண்ண முதிர்ச்சி எழுத்து வளர்ச்சியொடு
அண்மைப் பதிவுகளில் ஆளுமை - நுண்மை
பிறழா இலக்கிய நூலெழுதி இன்னும்
சிறந்து வளரட்டும் சீனு.
    காதல் கடிதத்தில் சீனுவுடன் ஏற்பட்ட பழக்கம் இனிமையாகத் தொடர்கிறது :-).

எழுத்து மெருகு என்று ஏதாவது இருந்தால் இவரின் வளர்ச்சிக்கு உதாரணமாகச் சொல்வேன். (நம்ப முடியாதவர்கள் சீனுவின் 2012 காலப் பதிவுகளையும் சமீபப் பதிவுகளையும் படிக்கலாம் :-). அதிகம் படிக்கிறாரா அல்லது எழுதுகிறாரா, இரண்டுமா?

வியக்க வைக்கும் வளர்ச்சி. வாழ்த்துக்கள் சீனு!அடுத்து பாடல் பெறும் பதிவர்: ஷைலஜா

முன்னர்:

சுப்புத்தாத்தா
ஜோதிஜி
கீதா சாம்பசிவம்
பாலகணேஷ்
சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி