2015/03/04

பாடல் பெற்ற பதிவர்
திருக்குறள் பாடல் தரக்கலைப் பாடம்
ஒருசேர ஊக்குவிக்கும் ஏடு - கருமீசை
மின்னவரும் திண்டுக்கல் தந்த தனபாலன்
பின்னூட்டப் பாரியெனப் பாடு.
தரக்கலை: உலகத்தரங்களான ஐஎஸ்ஓ பற்றிய குறிப்புகளை தனபாலன் பதிவுகளில் படிக்கலாம்.
ஏடு: மின் ஏடு, பதிவு
உழைப்பின் குரலை தனபாலன் பதிவுகளில் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.அடுத்து பாடல் பெறும் பதிவர்: மோகன்ஜி.


மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி

21 கருத்துகள்:

 1. ”பாடல்பெற்ற பதிவர் ”அடைமொழி அருமை.

  பதிலளிநீக்கு
 2. பாடல்பெற்றப்பதிவர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. பாராட்டுக்கள், தனபாலன்.

  பதிலளிநீக்கு
 4. ஆஹா! பின்னூட்டப் பாரி அருமையான சொல்லாடல் தங்கள் தமிழால் பாடல் பெற்ற பதிவர் திண்டுக்கல் தனபாலனுக்கு வாழ்த்துக்கள்
  //மின்னும் திண்டுக்கல்// தளை தட்டுவது போல் தோன்றுகிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுட்டியதற்கு நன்றி முரளிதரன்.

   நீக்கு
 5. "பின்னூட்ட பாரி" தனபாலன், வாழ்க வாழ்க.

  பதிலளிநீக்கு
 6. Congrats to Dindugal Dhanapalan.

  DD should be aware that a tribute from A Durai
  is much much more than
  a Doctorate from
  Carnegie Mellon University.

  subbu thatha.

  பதிலளிநீக்கு
 7. பாவும் பாடல் தலைவனும் பாராட்டப் பட வேண்டியவர்கள் தான்.

  பதிலளிநீக்கு
 8. அருமை.

  தனபாலனுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 9. இப்போதெல்லாம் பின்னூட்டப் புயலின் வேகம் குறைந்து வருகிறதைப் பார்க்கிறேன்வித்தியாசமாகப் பதிவுகள் எழுதுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. பொருத்தமான பட்டம் வாழ்த்துகள் இருவருக்கும்.
  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 11. பின்னூட்டப் பாரி.... நல்ல அடைமொழி.

  வாழ்த்துகள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 12. திருவாளர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு தலைச்சுழி நன்றாக உள்ளது.

  அதனால் மூன்றாம் சுழியால் ’பின்னூட்டப் பாரி’ என்ற பாராட்டுப் பட்டம் கிடைத்துள்ளது.

  இருப்பினும் வாரி வழங்கி வந்த பாரி சற்றே சோர்வு அடைந்துள்ளதாகத் தெரிகிறது. சோர்வு நீங்கி அவருக்கு மீண்டும் சுறுசுறுப்பினைத் தரக்கூடும் இந்த ’பாடல் பெற்ற பதிவர்’ என்ற தலைப்பு(பூ).

  ’கருமீசை [வைரமாக?] மின்னவரும்’ :)

  யானை வரும் பின்னே ! ....
  மணி ஓசை வரும் முன்னே !!

  இங்கு மீசை வரும் முன்னே !!!
  பின்னூட்டம் வரும் பின்னே !!!!

  திண்டுக்கல் = கல்லினால் திண்டு செய்திருப்பார்களோ?

  புத்துணர்ச்சியூட்டும் புதிய பதிவுக்கு நன்றிகள்.

  தங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. பொருத்தமான பாடல். டிடியும் தகுதியானவரே. சுப்பு சார் சொல்வதை ஆமோதிக்கிறேன். வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி! :))))

  பதிலளிநீக்கு
 14. பின்னூட்ட மாரி கூட சரி தான் டிடிக்கு வாழ்த்து.

  பதிலளிநீக்கு
 15. தனபாலன் சார்! உங்க பின்னூட்ட வேகம் பற்றி நானும் துரை சாரும் பேசியிருக்கிறோம்...

  பின்னூட்டப் பாரி! வெண்பா எதுக்குங்க? உங்களுக்கு இந்த வரி ஒன்னு போதாதோ?
  தொடரட்டும் உங்கள் ஊக்குவிக்கும் உன்னதம்!

  பதிலளிநீக்கு
 16. பின்னூட்டப் பாரி!!! அட இது கூட நல்லாருக்கே..அடுத்த பெயர்! அவருக்குப் பொருத்தமாக. நாங்கள் அவரை திருவள்ளுவர் தாசன் என்று சொல்லுவதுண்டு. டிடி டிமான்ட் ட்ராஃப்ட்...என்றும் எல்லோரும் அவரைத்தான் அழைப்பார்கள் ஏதேனும் இணையத்தில் தொழிநுட்பப் பிரச்சினை என்றால் அதனால். டிடி அப்படின்ற நாமம் இட்டவர் நம் ஸ்ரீராம்!!! இப்போது வலைச்சித்தர், வலைத்தேனீ இப்படிப் பல பெயர்களுடன் உலா வருபவர்..வலையில்...

  பாடல் பெற மிகவும் உரியவர்!

  திருவள்ளுவர் தாசன் டிடி வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு