2016/04/27

பல்கொட்டிப் பேய்

9


8◄

        "அதில்லே தம்பி.. பல்கொட்டி ஆளுங்களைப் பிடிக்குற விதம் எப்படினா.. காவுங்களை மொதல்ல முடியால மூடும்.. ராவுல தான் வருமா.. காவுங்க தூங்கிட்டிருந்தா எதுவும் தெரியாது.. போர்வைனு நெனச்சுட்டு சொவமா முடியை இழுத்துப் போர்த்துத் தூங்கிடுவாங்க.. முடியத் தொட்டா எச்சிலாயிரும்"

"தணிகாசலம்" என்று அதிர்ந்தேன்.. "என் கையைப் பாருங்க" என்றேன். மேலும் சில முடி நாற்றுகள் தோன்றியிருந்தன. "இதானா எச்சில்?"

ரகுவுக்கு கழுத்திலும் ரமேஷுக்கு பாதங்களிலும் பரவியிருந்தன முடிக்கீற்றுகள். "பாருங்க தணிகாசலம்.. மூணு பேரும் எச்சிலா?"

"ஆமா தம்பி.. அட.. பேயாத்தா உண்மையைத்தான் சொல்லியிருக்குது.. டுபாகூர்னு நெனச்சுனேன்பா.. பாவம் பேயாத்தா"

"யோவ்.. நாங்கதான் பாவம்.." என்றான் ரமேஷ்.

"அப்போ சின்னத்தம்பி போணிப் பொணம்" என்ற தணிகாசலம் அவரசப் படுத்தினார். "டயமில்லே.. அந்தரத்துல கயிறு தொங்கிருச்சுனா எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு அர்த்தம்.. காவு வாங்க பல் கொட்டி தயாராயிடுச்சுனு அர்த்தம்"

"அப்பாடா.. ஸ்கூலுக்கே போவேணாம் இனிமே.. அருஞ்சொற்பொருள் எதுவும் அறிய வேணாம்.. ஒழிஞ்சுது.. நிமமதி.. ஸ்கூலை எவன் கண்டுபிடிச்சான்.. சனியன்.."

"உடனே ஆரம்பிச்சுடாதடா ஸ்ரீராம்" என்று அவனை அடக்கினேன். "தணிகாசலம்.. என் தம்பியை அனுப்ப முடியாது.. நான் வேணும்னா போறேன்.. இல்லே எல்லாருமே ஒண்ணா.." என்ற என்னை நிறுத்திய ரகு, ஜன்னல் வழியாக வாசலைக் காட்டினான்.

தெருவிளக்கின் சோம்பலான வெளிச்சத்தில் எங்கள் வீட்டு வாசல் முழுதும் புகை மண்டலம் போல்.. துளசிமாடத்தின் மேலே பல்கொட்டியின் வாய் மட்டும் சினிமாஸ்கோப் போல் விரிந்து, அடுக்கி வைத்த எலும்புகள் போல் பற்கள் தெரிந்தன.. வாயின் நடுவே ஒரு குட்டித் தலை. எங்களையே உற்றுப் பார்க்கும் கண்களுடனும் திறந்த வாயுடனும்.. நாங்கள் முன்பு பார்த்த அதே தலை.. வாயருகே அந்தரத்தில் போல் நாலு புகைக் கயிறுகள் தொங்குவது துல்லியமாகத் தெரிந்தது.

பேயின் தயார் நிலை புரிந்து உறைந்தோம். எனில் அது மிகையல்ல.

"கவனமா கேளுங்க தம்பி.. இனி நேரமில்லே.. ஏற்கனவே முடி போத்துனதால பல்கொட்டி உங்களை வரிசையா இஸ்த்துக்கும்.. போணியை போவ விடுங்க.. எல்லாரும் சொல்றாப்புல நடக்கணும்.. சொல்ற பேச்சு கேட்டிங்கனா வெளில் வந்துறலாம்.. சின்னத்தம்பி.. பயப்படாத.. எல்லாரும் கவனமா கேளுங்க, சரியா?".

பல் கொட்டியிடமிருந்து தப்பிக்கும் விவரம் சொன்னார் தணிகாசலம்.

"முடியாது, அவன் என் தம்பி" என்றேன் ஆறாமல்.

"நாம எல்லாருமே அவனுக்கு அண்ணாடா" என்று சிவாஜிகணேசன் டயலாக் விட்ட ரகு, என் தோளைத் தட்டினான். "ஆனா.. இப்ப பூசாரி சொல்றதைக் கேட்டாகணுமேஏஏ?"

தணிகாசலம் துரிதமாக ஸ்ரீராமைக் கயிற்றினால் சுற்றி மிச்சமிருந்த நீளத்தில்.. "ஒரே ரத்தம் பக்கத்துல நிக்கக் கூடாதுபா" என்று என்னை ஒதுக்கினார்... ரகு, ரமேஷ், நான் என்று வரிசையாக ஒவ்வொருவராகச் சுற்றி எஞ்சியிருந்த நீளத்தை... "இரும்பு இருக்குதாப்பா உங்கூட்டுல.. எங்கே.. அவசரத்துக்கு ஒரு இரும்புத்தடி வக்க மாட்டீங்களா ஐருட்டுங்கள்ள?" எரிச்சல் பட்டார்.. அருகிலிருந்த எங்கள் அம்மாவின் சைக்கிள் பாரில் சுற்றி, இழுத்துப் பிடித்துக் கொண்டார்.

"இழுக்குதுடா" என்று அலறினான் ஸ்ரீராம். அவன் வெளியில் இழுக்கப்படுவது தெரிந்து பதைத்தேன். "ரகு அவனைப் பாத்துக்கடா" என்ற என் கண்கள் கலங்கிவிட்டன.

"மறந்துறாத தம்பி.. சொன்னபடி செய்யு.." நினைவூட்டினார் தணிகாசலம்.. சில நொடிகளில் எங்கள் கண்ணெதிரே புகையில் மறைந்து போனான் ஸ்ரீராம்.

ஸ்ரீராமைத் தொலைத்த அதிர்ச்சியில் நான்.. ரகு நகரத் தொடங்கியதைக் கவனிக்கவில்லை.

8◄ ►10

20 கருத்துகள்:

  1. //"மறந்துறாத தம்பி.. சொன்னபடி செய்யு.." நினைவூட்டினார் தணிகாசலம்.. சில நொடிகளில் எங்கள் கண்ணெதிரே புகையில் மறைந்து போனான் ஸ்ரீராம்.//

    அச்சச்சோஓஓஓ ... ஸ்ரீராமுக்கு என்ன ஆச்சு? ஒரே கவலைக்கீதூஊஊஊ.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா...இங்கிலீஷ் படம் பார்க்கறாப்புல இருக்கே..

    பதிலளிநீக்கு
  3. கடவுளே. இல்லை பல்கொட்டியே.

    பதிலளிநீக்கு
  4. பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்பல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிடிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டிபல்கொட்டி


    சு தா

    பதிலளிநீக்கு
  5. நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
    தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
    செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
    பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

    நூல்

    (1) ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
    பாடும் பணியே பணியா அருள்வாய்
    தேடும் கயமா முகனைச் செருவில்
    சாடும் தனி யானைச் சகோதரனே.

    (2) உல்லாச, நிராகுல, யோக இதச்
    சல்லாப, விநோதனும் நீ அலையோ?
    எல்லாம் அற, என்னை இழந்த நலம்
    சொல்லாய், முருகா சுரபூ பதியே.

    (3) வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
    ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
    யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
    தானோ? பொருளாவது சண்முகனே.

    (4) வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
    தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
    கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
    தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

    (5) மக மாயை களைந்திட வல்ல பிரான்
    முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
    அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
    சகமாயையுள் நின்று தயங்குவதே.

    (6) திணியான மனோ சிலை மீது, உனதாள்
    அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
    .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
    தணியா அதிமோக தயா பரனே.

    (7) கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
    இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
    சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
    விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

    (8) அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
    பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
    குமரன் கிரிராச குமாரி மகன்
    சமரம் பெரு தானவ நாசகனே.

    (9) மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
    பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
    தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
    நிட்டூர நிராகுல, நிர்பயனே.

    (10) கார் மா மிசை காலன் வரில், கலபத்
    தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
    தார் மார்ப, வலாரி தலாரி எனும்
    சூர்மா மடியத் தொடுவே லவனே.

    (11) கூகா என என் கிளை கூடி அழப்
    போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
    நாகாசல வேலவ நாலு கவித்
    தியாகா சுரலோக சிகாமணியே.

    (

    பதிலளிநீக்கு
  6. 12) செம்மான் மகளைத் திருடும் திருடன்
    பெம்மான் முருகன், பிறவான், இறவான்
    .. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
    அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

    (13) முருகன், தனிவேல் முனி, நம் குரு ... என்று
    அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
    உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
    இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.

    (14) கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
    உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
    மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
    ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

    (15) முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
    உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
    பொரு புங்கவரும், புவியும் பரவும்
    குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.

    (16) பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
    ஓரா வினையேன் உழலத் தகுமோ?
    வீரா, முது சூர் பட வேல் எறியும்
    சூரா, சுர லோக துரந்தரனே.

    (17) யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
    தாமே பெற, வேலவர் தந்ததனால்
    பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
    நாமேல் நடவீர், நடவீர் இனியே.

    (18) உதியா, மரியா, உணரா, மறவா,
    விதி மால் அறியா விமலன் புதல்வா,
    அதிகா, அநகா, அபயா, அமரா
    பதி காவல, சூர பயங் கரனே.

    பதிலளிநீக்கு
  7. (19) வடிவும் தனமும் மனமும் குணமும்
    குடியும் குலமும் குடிபோ கியவா
    அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
    மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

    (20) அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
    உரிதா உபதேசம் உணர்த்தியவா
    விரிதாரண, விக்ரம வேள், இமையோர்
    புரிதாரக, நாக புரந்தரனே.

    (21) கருதா மறவா நெறிகாண, எனக்கு
    இருதாள் வனசம் தர என்று இசைவாய்
    வரதா, முருகா, மயில் வாகனனே
    விரதா, சுர சூர விபாடணனே.

    (22) காளைக் குமரேசன் எனக் கருதித்
    தாளைப் பணியத் தவம் எய்தியவா
    பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
    வேளைச் சுர பூபதி, மேருவையே.

    (23) அடியைக் குறியாது அறியா மையினால்
    முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
    வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
    கொடியைப் புணரும் குண பூதரனே

    (24) கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
    சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
    சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்
    போர் வேல, புரந்தர பூபதியே.

    (25) மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
    ஐயோ, அடியேன் அலையத் தகுமோ?
    கையோ, அயிலோ, கழலோ முழுதும்
    செய்யோய், மயில் ஏறிய சேவகனே.

    (26) ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
    நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
    வேதாகம ஞான விநோத, மன
    அதீதா சுரலோக சிகாமணியே.

    (27) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
    என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
    பொன்னே, மணியே, பொருளே, அருளே,
    மன்னே, மயில் ஏறிய வானவனே.

    (28) ஆனா அமுதே, அயில் வேல் அரசே,
    ஞானாகரனே, நவிலத் தகுமோ?
    யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
    தானாய் நிலை நின்றது தற்பரமே.

    (29) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
    பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
    மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
    சொல்லே புனையும் சுடர் வேலவனே.

    (30) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று
    ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
    அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
    எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

    (31) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
    வீழ்வாய் என என்னை விதித்தனையே
    தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
    வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே.

    (32) கலையே பதறிக், கதறித் தலையூடு
    அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
    கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
    மலையே, மலை கூறிடு வாகையனே.

    (33) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
    விந்தாடவி என்று விடப் பெறுவேன்
    மந்தாகினி தந்த வரோதயனே
    கந்தா, முருகா, கருணாகரனே.

    (34) சிங்கார மடந்தையர் தீநெறி போய்
    மங்காமல் எனக்கு வரம் தருவாய்
    சங்க்ராம சிகாவல, சண்முகனே
    கங்காநதி பால, க்ருபாகரனே.

    (35) விதிகாணும் உடம்பை விடா வினையேன்
    கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்?
    மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின்
    துதியா விரதா, சுர பூபதியே.

    (

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கார மங்கையர் தீநெறி போய்..

      அதானே பார்த்தேன்.. என்னடா காணோமேனு.. ஆறவரை சிங்காரம் ஆனப்புறம் தீநெறி... ஹிஹி..

      நீக்கு
  8. 36) நாதா, குமரா நம என்று அரனார்
    ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்?
    வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
    பாதா குறமின் பத சேகரனே.

    (37) கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
    பரிவாரம் எனும் பதம் மேவலையே
    புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
    அரிவாய் அடியோடும் அகந்தையையே.

    (38) ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
    தீது ஆளியை ஆண்டது செப்புமதோ
    கூதாள கிராத குலிக்கு இறைவா
    வேதாள கணம் புகழ் வேலவனே.

    (39) மாஏழ் சனனம் கெட மாயைவிடா
    மூஏடணை என்று முடிந்திடுமோ
    கோவே, குறமின் கொடிதோள் புணரும்
    தேவே சிவ சங்கர தேசிகனே.

    (40) வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
    மனையோடு தியங்கி மயங்கிடவோ?
    சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
    தினையோடு, இதணோடு திரிந்தவனே.

    (41) சாகாது, எனையே சரணங் களிலே
    கா கா, நமனார் கலகம் செயும் நாள்
    வாகா, முருகா, மயில் வாகனனே
    யோகா, சிவ ஞான உபதேசிகனே.

    (42) குறியைக் குறியாது குறித்து அறியும்
    நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
    செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
    அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

    (43) தூசா மணியும் துகிலும் புனைவாள்
    நேசா முருகா நினது அன்பு அருளால்
    ஆசா நிகளம் துகளாயின பின்
    பேசா அநுபூதி பிறந்ததுவே.

    (44) சாடும் தனிவேல் முருகன் சரணம்
    சூடும் படி தந்தது சொல்லு மதோ?
    வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
    காடும், புனமும் கமழும் கழலே.

    (45) கரவாகிய கல்வி உளார் கடை சென்று
    இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
    குரவா, குமரா, குலிசாயுத, குஞ்
    சரவா, சிவயோக தயாபரனே.

    (46) எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
    சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
    கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
    மைந்தா, குமரா, மறை நாயகனே.

    (47) ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்
    பேறா அடியேன், பெறுமாறு உளதோ?
    சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
    கூறா உலகம் குளிர்வித்தவனே.

    (48) அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
    பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
    செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
    வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

    (49) தன்னந் தனி நின்றது, தான் அறிய
    இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
    மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
    கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே.

    (50) மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
    கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
    நதி புத்திர, ஞான சுகாதிப, அத்
    திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

    (51) உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவொன்றர நின்றறிவார் நெஞ்சில் பிரிவொன்றர நின்றபிரான்...

      beautiful
      ஹலோ? simply beautifulநேன்...

      நீக்கு
  9. கந்தர் அநுபூதி சொல்லியாச்சு இல்லையா ?
    ஆமா ...
    இனிமே உங்களை ஒன்னும் பேய் பண்ண முடியாது.
    தூங்குங்க...
    நிசமாவா..
    நிசம்மா..
    எதுக்கும் இன்னொரு அல்ப்ரக்ஸ் கொடு.
    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதான் கந்தர் அனுபூதியா? கடைசி பாட்டை வாரியார் சொல்லிக் கேட்டிருக்கிறேனே தவிர வேறு எதுவும் தெரியவே தெரியாது.

      நீக்கு
    2. கந்த சஷ்டியை விட அர்த்தமுள்ள கந்தஜபமா இருக்கு. none of that ட்குடிகுகுபுகுபுகுபுகுபுனானிஞ்சின்...

      நீக்கு
  10. "நல்லா தூங்கினீங்களா?"

    "தூங்கினேன்...ஆனா...."

    "என்ன ஆனா..ஆவன்னா?"
    "கனவுலே பல்லிக்காட்டு பே வந்துடுத்து"
    "அப்பறம்"
    "கந்தர் அநுபூதி சொன்னப்பறம் செய்யவேண்டியதை என் செய்யல்லே?"
    அப்படின்னு கேட்டது"
    "நீங்க என்ன சொன்னீக..?"
    என்ன செய்யணும் நு கேட்டேன். எனக்கு நெய்வேதனம் கொடு. அப்படின்னு சொல்லுது"
    என்ன நிவேதணமாம்?"
    அதான் போனிப்பிணமாம்."
    "அப்படின்னா என்னன்னே புரியல்லே "
    "நீ கேட்டு சொல்லேன்."
    யாரைக் கேட்பது "
    "உங்கம்மாவைத்தான்."
    "எங்கம்மாவா? அவங்க மேல போய்த்தான் 10 வருசமாச்சே?"
    "அதான் அவங்க தானோ அது அப்படின்னு ஒரு ஐயம் கீது. குரல் அப்படியே இருக்கு. "
    உங்களைக் கட்டிபோட்டு நாலு அடி போட்டா தான் புத்தி வரும். "
    "
    "என்ன தேடறே?"
    "நம்ம சைகையாற்றிஸ்ட் செல் நம்பர்?"
    "யாருக்கு கன்சல்ட் டேஷன்?"
    "எனக்கும் இல்லை, உங்களுக்கும் இல்லை."
    "பின்னே?"
    "அந்த அ .துறை சாருக்கு."

    ஏன் ?
    "இது மாதிரி பேய்க்கதை எழுதறதே ஒரு ஒ.சி. டி. ப்ராப்ளம் .ஓவர்
    அப்செசிவ் நஸ் .

    சுப்பு தாத்தா..மீனாச்சி பாட்டி சம்வாதம்.

    "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. no offence intended.
      This talk really happened.
      subbu thatha.

      நீக்கு
    2. ஹிஹிஹி. none taken. இதுல என்ன இருக்கு?!

      நீக்கு
    3. ஓசிடி கவனிக்கிற சைகையேட்ரிஸ்டுக்கு ஓசிடி வந்தாச்சுனா அந்த ஓசிடியை கவனிக்கிற சைகையேட்ரிஸ்டுக்கு வந்த ஓசிடியை கவனிக்க எந்த ஓசிடி கவனிக்கிற சைகையேட்ரிஸ்ட் வந்து ஓசிடி கவனிப்பார்?

      நீக்கு
    4. அந்த சைகையாற்றிஸ்ட் இப்ப வரமாட்டார்.
      30 வருஷம் கழிச்சுத் தான் வருவேன் அப்படின்னு
      சொல்லிட்டு போயிட்டார்.

      தட் மீன்ஸ் 2046. அண்டர்ஸ்டாண்ட்.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
  11. அப்பாதுரை தயவில் ஒரு முறை கந்தர் அனுபூதி சொல்ல சுப்புத்தாத்தாவுக்கும் மீனாட்சிப்பாட்டிக்கும் ஒரு வாய்ப்பு. கதைக்கு இறக்கை முளைத்து ஜிவ்வென்று பறக்கத் தொடங்குவது போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  12. அந்த அமர்க்களத்திலும் உங்களோட தம்பி பாசம் மெய் சிலிர்க்க வைக்குது! ஆனால் இந்தச் சிலிர்த்தல் பேயைப் பார்த்ததால் இல்லை! ஆனந்த மெய் சிலிர்ப்பு!

    பதிலளிநீக்கு