2016/04/17

பல்கொட்டிப் பேய்


        திகாலை இரண்டரை இருக்கும்.

எதிர்பாராமல் விழித்த கடுப்புடன் ஒன்றுக்கிருந்துவிட்டு அவசரமாகக் கை கழுவி ஹோட்டல் பாத்ரூம் கதவை அறைந்து சார்த்தி விளக்கணைத்து, படுக்கையில் மீண்டும் விழத் தயாரான போது கவனித்தேன். அறைமூலையில்.. இஸ்திரிப் பலகை மேல்.. இஸ்திரிப் பெட்டியின் மிதமான ரேடியம் ஒளியில் தெளிவாகத் தெரிந்தது... அதானா?

தரை வரை பரந்து கிடந்த முடிக்கற்றை. நுனியில் வாய் பிளந்தபடி தலைகீழாகத் தலை. தலையருகே அந்தரத்தில் போல் தொங்கிய இரண்டு கைகள். ஒரு கையில் மட்டும் விரல்களுக்குப் பதிலாக..

சந்தேகமேயில்லை.. இது.. இது.. பல்கொட்டிப் பேயே தான்.

அடக் கஷ்டமே! அதற்குள் முப்பது வருடங்களாகிவிட்டதா? இந்த நேரத்தில் ரகு, ஸ்ரீராம், வெங்கடராமன் என்கிற ரமேஷ்,... எல்லாரும் எங்கிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாதே?

தனியாக வேறே சிக்கிக் கொண்டேனே?

►2


25 கருத்துகள்:

 1. //ரகு, ஸ்ரீராம், வெங்கடராமன் என்கிற ரமேஷ்,... எல்லாரும் எங்கிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாதே?//
  ஸ்ரீ ராம் எங்கள் ப்ளாக் வலை எழுதிக்கொண்டு இருக்கிறார்.

  ரகு ராம் என்பவர் ரிசர்வ் பேங் கவர்னர் ஆக இருக்கிறார்.

  வெங்கடராமன் அப்படின்னு ஒரு பிரசிடெண்ட் இருந்தார்.
  தஞ்சாவூர் காரர்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருந்தாரா? அய்யய்யோ.. இருக்குறவங்களை மட்டும் சொல்லுங்க.. நானே பயந்து போய் கிடக்கேன்.

   நீக்கு
  2. எதுக்கு சொல்றேன்னா... என் நண்பர் ரமணிக்கு இப்படித்தான்.. அவரோட சித்தப்பாவோ பெத்தப்பாவோ யாரோ ஒருத்தர் பூட்ட கேஸ் ஆகுறவரைக்கும் பேச்சு வார்த்தை கூட கிடையாதாம்.. போனப்புறம் தினம் நாலு தடவையோ நாலு நாளைக்கு ஒரு தடவையோ நண்பர் கனவுல ஏதோ ஒரு உருவம் வந்து சொந்தக்காரர் குரல்ல "எனக்கு ரொம்ப ஓய்ச்சலா இருக்குடா ரமணி.. தனியா இருக்க பயமாருக்குனு" சொல்லுதாம். நண்பர் தூக்கம் கெட்டு... இப்ப செத்துப்போன சொந்தக்காரங்களையெல்லாம் வரிசையா திட்டிட்டுத்தான் படுக்குறாராம்.

   தூக்கம் முக்கியம் சார்.

   நீக்கு
  3. யாரோ ஒருத்தர் பூட்ட கேஸ் ஆகுறவரைக்கும் பேச்சு வார்த்தை கூட கிடையாதாம்.. போனப்புறம் தினம் நாலு தடவையோ நாலு நாளைக்கு ஒரு தடவையோ நண்பர் கனவுல ஏதோ ஒரு உருவம் வந்து //
   அதனாலே தானே என்னை வந்து ஒரு தரம் மீட் பண்ணீட்டு போறது நல்லது இல்லையா...

   சு தா. .

   நீக்கு
 2. பெயரில்லாஏப்ரல் 17, 2016

  வகை நகைச்சுவை. ?????

  பதிலளிநீக்கு
 3. இரவினில் பெண்களின் செளரியோ, ஆண்களின் ’விக்’கோ ஏதோவொன்று அங்கு அயர்ன் பாக்ஸ் மேஜையில் ஒரு மாதிரியாக விரித்து காயப்போட்டு வைக்கப்பட்டிருக்கும்.

  அதன் அருகே, வீட்டின் பல்செட் ஆசாமி யாராவது தன் பல்செட்டை அவசரமாகக் கழட்டி அவிழ்த்து தலைகீழாக வைத்து விட்டுப்போய் இருப்பார்.

  அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல, பல்கொட்டிப் பேயே தான் என்ற முடிவுக்கு வந்துள்ளீர்கள். எனினும் இது சம்பந்தமாகவே ஓரிரு பதிவுகள் தேற்றிவிட முடியும். வாழ்த்துகள்.

  தொடரட்டும் .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓரிரு பதிவுகளா? மிச்சத்துக்கு? பேய்க்கதைன்றதே ஜவ்வு மிசின் லைசென்சாக்கும்.

   நீக்கு
 4. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பாணி கதை. தொடர்ந்து படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. வந்துட்டாரா ரகு? சர்த்தான்! பல்கொட்டிப் பேயா... பேரே பயங்கரமா இருக்கே... மேலே சொல்லுங்க... மேலே சொல்லுங்க...

  பதிலளிநீக்கு
 6. பல் கொட்டிப்பேய்.. தொடர்ந்து ஆடட்டும்.

  பதிலளிநீக்கு
 7. பல் கொட்டிய பேய் ! வயதான பேயா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //
   பல் கொட்டிய பேய் ! வயதான பேயா?//

   கொஞ்சம் பொறுமையா இருங்க.
   மே மாதம் 16 ந் தேதி ஒட்டு போட வரும் ல. !!
   அப்ப பார்த்து சொல்றேன்.

   இப்போதைக்கு தெரிஞ்ச விவரத்தை சொல்றேன்.
   உயிரோட இருந்த பொது பேயோட பேர்: நசிகேதனாம்.

   அவர் சரிதத்தை யார் யார் படிக்கிறாங்களோ அவங்களுக்கு \
   யம பயம், பேய் பயம் வராது.

   நீங்களும் படிச்சு பாருங்க. http://nasivenba.blogspot.in/


   சு தா.

   நீக்கு
 8. இந்த மாதிரி நடுராத்திரி தனியா இருக்க பயமாச்சுன்னா மெரட்டலான ஒரு திகில் / பேய் படம் பாருங்க..நமக்கு பின்னாடி யாரோ ஒருத்தர் இருக்கற மாதிரி தோணும்...!!!
  ப..ய..ம்..சுத்தமா போயிடும்...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. http://e2ua.com/group/ghost-pictures/
   நீங்க சொல்றீகளே அப்படின்னு
   மாடிப்படி ஏறி , முன்னாடி, பின்னாடி எல்லாம் பார்த்தேன்.

   நீங்களும் பாருங்க.

   தலை முடி மாதிரி எதோ கிடக்குதே அப்படின்னு தூக்கி பார்த்தேன்.

   அது கீழே ஒரு தலை தொங்குது.

   ஹா ஹா அப்படின்னு சிரிக்குது.
   பயந்து போய், வாசப்பக்கம் ஓடினா,
   அங்க ஒன்னு
   வா இந்தப் பக்கம் போ அந்தப் பக்கம்
   அப்படின்னு சொல்லுது.


   சு தா.

   நீக்கு
  2. நான் இருப்பாங்கன்னு சொல்லலையே...இருக்குற மாதிரி தோணும்னு தானே சொன்னேன்...!!!

   நீக்கு
 9. மீண்டும் பேய்க்கதையா? தோண்டத் தோண்ட தொடர்ந்து வருமே. ! இந்தப் பதிவு உங்கள் வகைக்கு மிகச் சிறியது பல் கொட்டட்டும் தொடர்வேன்

  பதிலளிநீக்கு
 10. பல்கொட்டிப் பேயா!!! ஹஹஹ் அப்ப பேய்க்கும் பல் எல்லாம் இருக்குமா?! கோரைப் பற்கள்? இந்த சினிமால எல்லாம் காமிப்பாங்களே அந்த மாதிரியா?!!! ம்ம்ம்ம் வயசான பேய் போல பாவம்...தனிமை வாட்டியிருக்கும் உங்ககிட்ட வந்துடுச்சு போல..அப்பாதுரை சார்கிட்ட போனா நம்மள ஹீரோ ஆக்கி கதை எழுதுவாருனு அதுக்கும் ஆசை வந்துருக்கும்...ஒரு வேளை அது நடிகனா இருந்துருக்குமோ..பேயானாலும் ஆசை விடல்...

  செமையா இருக்கு சார் சீக்கிரம் சொல்லுங்க சார் அப்புறம் அது என்ன பண்ணிச்சுனு..பேய்க் கதை ரொம்ப பிடிக்கும் அதான்..

  கீதா

  பதிலளிநீக்கு
 11. பல் கொட்டினதுக்கு அப்புறமா பேயாகிடுத்தோ.
  இல்ல பேயானப் புறம் பல் கொட்டித்தோ.
  சுவாரஸ்யம் தொடர்கிறேன் . ஹாஹா.

  பதிலளிநீக்கு
 12. /தனியாக வேறே சிக்கிக் கொண்டேனே? //

  நானும்... இப்பப்போய் இந்தக் கதை கண்ணில் பட்டுடுச்சே.... :-(

  பதிலளிநீக்கு
 13. தலைவா! இப்போதான் உங்க வலைக்கு வந்து பார்த்தேன். இப்போ மணி ராத்திரி ரெண்டே முக்கால்... காலையில் எழும் போது எதுனா நனைஞ்சிருந்ததோ... அப்புறம் இருக்கு சேதி!நாளைக்கு பூஜை பண்ணிட்டு தெகிரியமா படிக்கிறேன் சேட்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேதி கேட்டோ சேதி கேட்டோ
   சேட்டன் பத்திய சேதி கேட்டோ ?

   அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
   பேய்கண் டன்னது உடைத்து

   வள்ளுவனின் கருத்தென்ன என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

   அதற்கு முன் இதைக் கேளும்.
   செம்பருத்தி யைப் பார்க்கிறான் வியக்கிறான் ஒருவன்.
   வியர்க்கவைக்கும் பேயைப் பார்க்கிறான் இன்னொருவன்.

   எல்லாமே
   கால வகையினாலே.!!
   அல்ல...
   காலன் கருணையாலே.

   சு தா.
   நீக்கு
  2. shakespeare 400வது பிறந்தநாள் கட்டுரைகள் படிச்சிட்டிருந்தப்ப சேக்கு எழுதின ௧௫ (அதாங்க பதினஞ்சு) கனியிருப்ப காய் கவரும் சொற்களைப் பத்தின ஒரு கட்டுரையை படிச்சிட்டிருந்தேன். நம்ம தாடிக்காரரும் சளைக்கலே போலிருக்கு. இன்னா முகத்தான். பலே. 'இன்னா மூஞ்சி வச்சினுகிறான் பாரு பன்னி...' மெட்ராஸ் பாஷை கூட தெரிந்திருந்ததோ மைலாப்பூர் வாசிக்கு?

   திருக்குறள் திட்டுக்கள்னு நாலு பதிவுக்கு விஷயம் கிடைக்கும் போலிருக்குதே தேடிப்பாத்தா? (தனபாலன் தேடாமலே சொல்வாரு)

   நீக்கு
 14. இது எப்போ ஆரம்பிச்சீங்க? நான் தான் லேட்டா? ஙே!

  பதிலளிநீக்கு