1◄
ஏழாம் வகுப்பு படிக்கையில் ஒரு நாள் தமிழாசிரியர் என்னிடம் 'எனில் அது மிகையல்ல' என்று ஒரு தொடரைக் கொடுத்து வாக்கியத்தில் அமைக்கச் சொன்னதும், ஐந்து நிமிடம் போல் விழித்த என்னிடம் 'ஏண்டா பேயாட்டம் முழிக்கிறே?' என்றதும் நினைவுக்கு வந்தது.
பல்கொட்டிப் பேயின் முழி கிடக்கட்டும். 'பல ஆண்டுகளுக்குப் பிறகு பல்கொட்டிப் பேயைப் பார்த்து என் உடல் சிலிர்த்து உயிரும் ஒரு கணம் உறைந்து போனது எனில் அது மிகையல்ல' என்ற அருமையான பத்துக்கு பத்து மார்க் வாக்கியம் சடுதியில் நினைவுக்கு வந்தது என்று சொல்ல வந்தேன்.
பேய்த் தலையை மறுபடி பார்த்தேன்.
ரகு கேட்டுக்கொண்டபடி சரியாக வந்து விட்டதே?! முப்பது வருடங்களில் அப்படியே இருக்கிறதே பேய்! அந்த இளமையின் ரகசியம் என்ன என்று கேட்கத் தோன்றியது. அடுத்த சில நிமிடங்களில் பல்கொட்டிப் பேய் என்ன செய்யும் என்பதும் உடனே அனுபவத்திலிருந்து நினைவுக்கு வந்தது. பயத்தில் ஒன்றுக்கும் வரவில்லை. அப்பொழுது தான் பாத்ரூம் போய் வந்த காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. படுபாவி ரகுவை இப்போ எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்பேனோ?
ரகுவைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். பல்கொட்டியைப் பற்றிச் சொல்லியிருக்கிறேனா தெரியவில்லை. சொல்கிறேன்.
என் பெரியம்மா பையன் ரகு, எதிர் வீட்டு நண்பன் வெங்கடராமன் என்கிற ரமேஷ், நான், அப்புறம் என் தம்பி ஸ்ரீராம்.. நால்வரும் ஒரு சமயம் தனியாக எங்கள் பம்மல் வீட்டில் தங்க வேண்டியிருந்தது.
அன்றுதான் பல்கொட்டிப் பேயுடன் எங்கள் முதலிரவு.
1◄ ►3
//அன்றுதான் பல்கொட்டிப் பேயுடன் எங்கள் முதலிரவு.//
பதிலளிநீக்குஇதில் முதலிரவுக் காட்சிகளும் கூடவா? வெரி குட். இப்போ என் ஆர்வம் மேலும் அதிகரிக்கிறதே .... :)
//எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்பேனோ?//
பதிலளிநீக்குபசுமை நிறைந்த நினைவுகளே...
நாம் படிக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கான கொக்கியோ?.. தெரியலே! இந்த எழுதுகிறவனளைப் பத்தி ஒண்ணும் சொல்வதற்கில்லை!
பதிலளிநீக்குநாலு பேரோடையா முதலிரவு ??
பதிலளிநீக்குபாவம். பல்கொட்டிப் பேய் ரொம்பவே
ஸ்ரமப்ப்பட்டு இருக்கும்.
சு தா.
பல் கொட்டட்டும், கொட்டட்டும்.
பதிலளிநீக்குபல்லெல்லாம் கொட்டிப் போனதால் பல் கொட்டிப் பேயா! இல்லை பிறர் பல்லைத் தட்டி எடுப்பதாலா.
பதிலளிநீக்குஹிஹ்ஹ்ஹிஹ்ஹ்ஹி
நீக்குஇந்த முறை அமானுஷ்ய கதை அவ்வளவு ஈர்க்கவில்லையே . ஒரு வேளை கதையே இன்னும் ஆரம்பிக்க வில்லையோ. உங்கள் பாணிக்கு பதிவு சிறியது
பதிலளிநீக்குபல்கொட்டிப் பேய் என்ன இன்னும் ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லையோ...இதோ அடுத்த பதிவுக்குப் போகிறோம் என்ன செய்திருக்கிறதோ...
பதிலளிநீக்கு