2016/04/19

பல்கொட்டிப் பேய்

32◄

        காஞ்சிபுரம் சங்கர மடத்தில் என்னவோ ஹோமம் நடத்தி இலவசமாக புண்ணியதானம் செய்கிறார்கள் என்று எங்கள் வீட்டிலும் வெங்கடராமன் என்கிற ரமேஷ் வீட்டிலும் குடும்பத்துடன் கிளம்பிவிட்டார்கள். வீட்டில் நாங்கள் மட்டுமே. துணைக்கு எங்களுக்காக அம்மா விட்டுச் சென்ற மூன்று அடுக்குகள் நிறைய தோசை, தயிர்சாதம், வீட்டு வாழைக்காய் வறுவல். ரமேஷ் வீட்டிலிருந்து வந்த ஒரு ஜாடி காரமாவடு.

பாதிச் சாப்பாட்டை காலி செய்த களைப்பில் மதியம் ஒரு மணி போல் பகல்தூக்கம் கலைந்து கிரிகெட் விளையாடத் தீர்மானித்தோம். டெனிஸ் பந்து கிரிகெட். எங்கள் வீட்டுச் சுவற்றில் செங்கலால் மூன்று செங்குத்துக் கோடுகள் கீறி இலவச விக்கெட் கீப்பருடன் ஆளுக்கொரு டீம் எடுத்துக்கொண்டு பதினோரு பேர் ஆட்டம். கிணற்றடியிலிருந்து மிதமாக இறங்கிச் சரியும் மேடு தான் பிட்ச். எதிரே சுமார் நூறடி தொலைவில் இருந்த சண்முகா கீற்றுக்கொட்டகை பவுண்டரி. சுற்றிவர இருந்த நிறைய புதர்களில் திக்குக்கொன்றாய் பவுண்டரி எல்லை தீர்மானித்து விளையாடத் தொடங்கினோம்.

நானும் ரமேஷும் ஒரு கட்சி. ஸ்ரீராமும் ரகுவும் ஒரு கட்சி. நாங்கள் வெஸ்ட் இண்டீஸ். ரகு எப்போதும் இந்தியா டீம் எடுத்துக்கொண்டு விடுவான். வழக்கம் போல் ஒபனிங் ஓவர் கர்சன் காவ்ரி, அடுத்த ஓவர் பிஷன் சிங் பேடி என்று பந்தை உயரச் சுழற்றி வீச வந்துவிட்டான்.

அன்றைக்கு ராய் ப்ரெட்ரிக்கில் தொடங்கி கிடுகிடுவென்று நானும் ரமேஷும் விக்கெட் இழந்து கொண்டிருந்தோம். இருபது ரன் கூட தேறவில்லை, ஏழு விக்கெட்டோ என்னவோ காலி. ரகுவும் ஸ்ரீராமும் வெறித்தனமாக குதித்துக் கொண்டிருந்தார்கள். நான் டெரிக் மரேயாக ஆடிக்கொண்டிருந்தேன். ஸ்ரீராம் வீசிய ஒரு பந்தை மிடான் பக்கமாக அடிக்க, அது ஏதோ ஒரு புதரில் சிக்கிக் கொண்டது. எல்லோரும் பந்தைத் தேடிப் போனோம். ரமேஷ் கண்ணில் பந்து பட, "இதோ இருக்குடா" என்றபடி பந்தை எடுத்து ரகுவிடம் வீசி எறிந்தான்.

ரமேஷ் வீசிய மஞ்சள் டெனிஸ் பந்தைக் கண்ணால் பார்த்தோம். இருந்தாலும் அதை ரகு பிடித்த போது அவன் கையில் விழுந்தது பந்தல்ல. ஒரு குட்டித் தலை. மூக்கு கண் காது எல்லாம் வைத்து பெரிய சாத்துக்குடி சைஸில் தலை. முகமெல்லாம் மஞ்சள் பூசிய, ரத்தக்காயம் எதுவும் இல்லாத தலை. வாய் பிளந்து பல் காட்டிய தலை.

பதறித் தூக்கி எறிந்தான் ரகு. கிணற்றடி அருகே எங்கள் வீட்டுப் பின்வாசலுக்கு நேர் எதிராக விழுந்து உருண்டு தலைகீழாக நின்ற தலையைப் பார்த்துத் திடுக்கிட்டோம். கிணற்றடித் தரைமேல் படிந்திருந்த ஈரத்தில் அரைகுறையாகத் தெரிந்த தலையின் நேர் பிம்பம் இன்னும் திகிலூட்டியது.

2◄ ►4

18 கருத்துகள்:

 1. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

  இது இப்போதைக்கு முடியாது போலிருக்குது.

  திகிலூட்டியது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான்.

  தொடரட்டும் .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜவ் மிசின்னா சும்மாவா? அதுவும் பேய் ஜவ்வாச்சே.. சும்மா இழ்ழ்ழ்ழுத்துட வேணாமா?

   நீக்கு
 2. பதில்கள்
  1. பாதியிலயே வெட்டிடுச்சே?!
   திகில் தூக்குதே!

   நீக்கு
  2. There is K9 Web protection facility enabled. It controls the content on the basis of listeners' past cardiac (heart) history.
   That is why possibly it stopped midway.
   For me , it is shown throughout.
   I am more thairiya saali, you know, as Geetha Madam.

   நீக்கு
 3. பெயரில்லாஏப்ரல் 20, 2016

  "ஓடாதே நில்."
  "ஆ செத்தேன்"
  "ஒழிந்தான் துரோகி."
  .
  .
  .
  .
  .
  .
  கன்னித்தீவு வகையறா போல இருக்கு.

  பதிலளிநீக்கு
 4. ஆவ்....அம்மாடி....இப்பவே மெர்ஸலாகிதே....வூட்டுக்கு போயி வேப்பில அடிச்சுக்க வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க மாது சார் ! சரியா அந்த டென்னிஸ் பந்தை பார்க்கல்லே போல் இருக்கு.

   கவனமா பல்லுக்கு கீழே பாருங்க...

   உங்க மாதிரி இருப்பாங்க ஏன்னு தெரிஞ்சுகிட்டே
   இரண்டு வேப்பிலை கொத்து அங்கன சொருகி வச்சுருக்கு.

   அதை எடுத்துகிட்டு போய் அடிச்சுகிட்டா தான் பலன் கிடைக்கும்.

   சுப்பு தாத்தா.

   நீக்கு
  2. சார்.....நான் கைரெண்டும் வச்சு முகத்தை பொத்திக கொண்டு விரலுக்கு நடுவால பார்த்து கதையை படிச்சுண்டிருக்கேன்..இதுல எங்க வேப்பிலைய உத்துப் பாக்குறது...???

   நீக்கு
 5. நீங்க கதை எழுதினா, நீஈஈஈஈளமா இருக்குமே, இப்பவே வாசிக்கவா... அப்புறமா வாசிப்போமான்னு நினைச்சுகிட்டு இருக்கும்போதே கதை(யின் இப்பகுதி) முடிஞ்சிடுச்சு... அச்சச்சோ... அடுத்து என்ன ஆச்சோ, தொடர்ச்சி எப்ப வரும்னு நினைக்க வச்சிட்டீங்க!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க இப்படிக் கேட்டீங்க..
   பதிவு ரொம்ப சுருக்கமா இருக்குதே, நீங்க எழுதினதா இல்லே மண்டபத்துல யாராவது எழுதிக் கொடுத்தாங்களானே ஜிம்பி சார் கேக்காம கேட்டுட்டாரு. என் நிலமையை பாருங்க..

   நீக்கு
 6. பேய் ரொம்ப ஸ்லோவா இருக்கு போல இருக்கே??!!! அப்போ கண்டிப்பா வயசான பேய்தான் அதான் பல்கொட்டிப்பேய் போல...

  பதிலளிநீக்கு
 7. கண்ணால் காண்பதும் ப்[ஒய் காதால் கேட்பதும் பொய்/
  ரமேஷ் வீசிய மஞ்சள் டெனிஸ் பந்தைக் கண்ணால் பார்த்தோம். இருந்தாலும் அதை ரகு பிடித்த போது அவன் கையில் விழுந்தது பந்தல்ல. ஒரு குட்டித் தலை. மூக்கு கண் காது எல்லாம் வைத்து பெரிய சாத்துக்குடி சைஸில் தலை. முகமெல்லாம் மஞ்சள் பூசிய, ரத்தக்காயம் எதுவும் இல்லாத தலை. வாய் பிளந்து பல் காட்டிய தலை./பிறகென்ன?

  பதிலளிநீக்கு
 8. எறிந்த பந்தைக் காட்ச் பிடிக்கவில்லையா பிடித்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 9. ஆஹா, பந்து தலையாக மாறியது எப்படி?

  பதிலளிநீக்கு