2015/03/09

பாடல் பெற்ற பதிவர்




நையாண்டிகள் கட்டுவார் நான்கு வகையில்
பையவே ஹுஸைனம்மா சற்று - மையமாய்
எழுதி மனங்கவரும் மைப்புலி வாலைத்
தொழும் பதிவெழுதிப் பற்று
.









நான்கு வகை நையாண்டி: குறும்பு, கிண்டல், கேலி, கெக்கலிப்பு. ஹுஸைனம்மா பதிவுகளில் நாலும் படிக்கலாம்.
பைய: 'சற்று மெள்ள (தாமதமாக) எழுதும்' என்ற பொருளில்.
முகநூல் கவர்ந்து கொண்ட வலைச்சொத்தா இந்த மைப்புலி?


அடுத்து பாடல் பெறும் பதிவர்: சிவகுமாரன்.

முன்னர்:


மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி


36 கருத்துகள்:

  1. தாமதம் சம்மதம்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. முக நூல் கவர்ந்து கொண்ட வலைச்சொத்து.... சரியாகச் சொன்னீர்கள்....

    வாழ்த்துகள் ஹூசைனம்மா....

    பதிலளிநீக்கு
  3. அடடே.. நானுமா..... சான்றோர் பெருமக்கள் உள்ள மேடையில் என்னையும் ஏற்றியதுக்கு நன்றி!! :-)

    பாட்டு எழுதுனீங்க சரி, அதுக்கு பொழிப்புரை எங்கே? நீங்கதான் புலவர், நானுமா?

    கடைசி வரி புரியலை... (காப்பி-பேஸ்ட் பண்ணப்பாத்தா, Right click disabled!! Copy rights issue??)

    ...வாலைத் தொழும் பதிவெழுதிப் பற்று ==> அப்படின்னா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா கிண்டலா எழுதுறீங்கனு சொன்னா பொழிப்புரை தேவைனு கிண்டல் பண்றீங்களே நியாயமா?
      ஒரு வேளை நிஜமாவே சொல்றீங்களானு டவுட்டுல விளக்கம் சொல்லிடறேன்.
      அதாவது நீங்க வந்து புலி மாதிரி.. மாதிரி என்னால் புலி தான். மைப்புலி. ஆனா நீங்க புலின்றது எப்ப தெரியுது? பதிவுக்கு நீங்க தர பின்னூட்டத்துலந்து.. எப்படிப்பட்ட பதிவு புலிவாலைப் பிடிச்சுக்கிட்ட மாதிரி ஆவுது? மதம், இஸ்லாம், மத்தியகிழக்கு கலாசாரம்.. இப்படி ஒரு பதிவு எழுதிட்டா போதும் கண்டிப்பா உங்க புலி முன்னால வந்துடும். ஹிஹி.. அதான் மைப்புலி வாலைத் 'தொழும்' பதிவெழுதிப் பற்று...

      (சுப்பு சார் சரியாப் புரிஞ்சுக்கிட்டார்னு நினைக்கிறேன்)

      நீக்கு
    2. copy paste right click விவகாரம் ஒரு பதிவுக்கான மேட்டராயிடுச்சுங்க.. copy paste செஞ்சு சில ஜனங்க செய்யுறதைப் பாத்தா பக்குன்னுது.. அதான்.. inconvenienceக்கு மன்னிச்சுருங்க. கொஞ்ச நாள் கழித்து எடுத்துடறேன்.

      நீக்கு
    3. /மதம், இஸ்லாம், மத்தியகிழக்கு கலாசாரம்.. இப்படி ஒரு பதிவு எழுதிட்டா போதும் கண்டிப்பா உங்க புலி முன்னால வந்துடும்//

      நான் உங்களின் மற்ற பதிவுகளிலும் கருத்திட்டிருக்கிறேன். நிறைய பேசியிருக்கிறோம். ஆனாலும், இந்தப் பதிவுகளில் நான் பேசியது மட்டுமே உங்களுக்கு நினைவிருக்கிறது என்றால்.... :-)

      நீக்கு
    4. /இன்னொரு பதிவுலயே பதில் போல எழுதி புலி வாலைப் பிடிக்க வேண்டியது தான்//

      அவ்வ்வ்... இதுக்கு நீங்க பாட்டு எழுதாமலயே இருந்திருக்கலாம்....

      நீக்கு
    5. அய்யய்யோ அப்படி இல்லிங்க.. உங்க கருத்துக்களின் தெளிவும் கூர்மையும் இத்தகைய பதிவுகளில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்னு சொல்றேன் அவ்வளவு தான்.. கோவிச்சுட்டிங்க போலிருக்கே?!

      உங்கள் விவரமான பின்னூட்டங்களுக்கு பொருத்தமான பதில் பின்னூட்டம் உடனே எழுத முடியாமல் போன வருத்தத்தில் தனிப்பதிவு எழுத நினைச்சதா சொன்னேன். தப்பா சொல்லியிருந்தா தயவுசெய்து மன்னிக்கணும்.

      நீக்கு
    6. இது(வும்) உங்க - (அப்பாதுரை) முகவரியா?

      /கருத்துக்களின் தெளிவும் கூர்மையும்//
      நம்ம்ம்ம்பிட்டேன். :-))))

      /பொருத்தமான பதில் பின்னூட்டம் உடனே எழுத முடியாமல் போன வருத்தத்தில் தனிப்பதிவு எழுத நினைச்சதா //
      ஓ... அப்படியா..... எதுக்கு சிரமப்படுறீங்க... பரவால்லை.. விடுங்க... நான் தப்பாவெல்லாம் நினைக்க மாட்டேன்.
      (பிழைச்சேன்) :-)))))

      நீக்கு
    7. A.Duraiயும் நானே.

      உண்மையிலேயே நான் சொன்ன கருத்தோடு எழுதின பாட்டுங்க... சரி உங்களைக் கொஞ்சம் கிண்டலா பாடலாமேனுட்டு எழுதினது..

      நீக்கு
    8. புலி இங்கே பாராட்டுனு தானே புரிஞ்சுட்டீங்க..?

      நீக்கு
  4. வலைப்பூவை கொஞ்சம் ஒதுக்கி விட்டது எனக்கே ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு. Self-control அதிகரிக்க வேண்டும். மீண்டு(ம்) எழுத ஆரம்பித்திருக்கிறேன் (உங்க பின்னூட்டமும் காணோம் அங்கே) இதுபோன்று அவ்வப்போது யாரேனும் கேட்பது, ஒரு உத்வேகத்தைத் தருகிறது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வெண்பாப்புலியின் இந்தப்பாடல் சூப்பர்ப்! வாழ்த்துகள் ஹுசைனம்மா.

    பதிலளிநீக்கு
  6. புலிவாலைத் தொழும்.....?

    பதிலளிநீக்கு
  7. அருமை.

    /முகநூல் கவர்ந்து கொண்ட வலைச் சொத்தா/

    நல்லாக் கேளுங்க :)! நானும் கேட்டாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி.. ஹி.. அக்கா.... நீங்க வச்ச குட்டு இன்னும் ஸ்ட்ராங்கா இருந்திருக்கலாம். :-)

      நீக்கு
  8. ஹுசைனம்மா அவர்கள் பின்னூட்டங்கள் துளசிதளம் வலையிலும் உங்கள் வலையிலும் படித்து ரசிப்பது உண்டு.

    எதை எழுதினாலும் தெளிவாக எழுதுவதில் வல்லவர். அவர்கள் எழுதினால் அது சரியாகத்தான் இருக்கும். சென்ற தடவை உங்கள் பதிவு ஒன்று. தலைப்பு நினைவுக்கு வரவில்லை. அதற்கு அவர் எழுதிய பின்னூட்டங்கள் அருமை. மிகவும் ரசித்து ஒவ்வொரு வரியையும் படித்தேன்.

    அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. நீங்க நினைச்ச பதிவு எனக்கும் பெயர் சட்டுனு ஞாபகம் வரலே. திருவிடைமருதூர் கோவிலைச் சுத்தி இஸ்லாமியர்கள் வீடு வாங்கி வருவதைப் பத்தினதா இருக்கலாம். கொஞ்சம் பைய வந்து பின்னூட்டம் போட்டதாலே நிறைய பேர் படிக்காம விட்டிருக்கலாம். பலமுறை படிச்சேன். இன்னொரு பதிவுலயே பதில் போல எழுதி புலி வாலைப் பிடிக்க வேண்டியது தான்.

      நீக்கு
    2. மதிப்பிற்குரிய சுப்புத் தாத்தா, உங்கள் பாராட்டு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எதிர்பார்க்கவேயில்லை. மிகவும் நன்றி ஐயா.

      நீக்கு
  9. பாடல் பெற்ற பதிவருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. "மை" ப்புலி எழுத்துப் புலி என்று பொருள் கொண்டேன். ஹுசைனம்மாவிற்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள் ஹுசைனம்மா... நானும் உங்கள் பின்னூட்டங்களின் ரசிகன்.. உங்களைப் போல், என் போல் வலை அரங்கம் விட்டு நழுவிச் செல்பவரை வெண்பாத் தூண்டில் போட்டு மீட்டெடுக்கும் வித்தைகார துரைக்கு வாழ்த்துக்கள். பதிவின் முக்கியத்துவம் பின்னூட்டங்களுக்கும் அளிக்க வேண்டும் என்பது என் முடிபு. எப்போது எழுதினாலும் சரி... பதிவு படிப்போர்க்குள் ஒரு சிறு அலையையாவது தோற்றுவிக்க வேண்டும் அல்லவா? மீண்டும் வாங்க ஹுசைனம்மா.. பதிவுகள் வரட்டும். கை தட்ட காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. எதிர்பாராத புறத்திலிருந்தெல்லாம் பாராட்டு வருவது மகிழ்ச்சின்னாலும், பொறுப்பும் கூடுதே!! :-)

      நீக்கு
  12. முக நூல் கவர்ந்து கொண்ட வலைச்சொத்து.. என்று பாடல் பெற்ற ஹுஸைனம்மாவிற்கு வாழ்த்துக்கள். முகநூல் இற்றைகள் என்று வலைத்தளம் எட்டிப்பார்ப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா. தற்போது பதிவுகள் எழுத ஆரம்பித்திருக்கிறேன். :-)

      நீக்கு
  13. ஆஹா!!.. கேள்விகளின் நாயகி :-)

    பாராட்டுகள் ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தெரியாமப் போயிருச்சே?! கேள்விகளின் நாயகி..ஹிஹி?

      நீக்கு
    2. அமைதிக்கா, இம்புட்டு லேட்டாவா வர்றது?? (என்னைவிட “சுறுசுறுப்பு” உள்ளவங்களைப் பார்க்கும்போது... என்ன ஒரு நிம்மதி :-) )

      நீக்கு