2015/03/02

பாடல் பெற்ற பதிவர்
சென்னை புதுமும்பை வாழ்வசை போடுகையில்
பன்னுவார் பாடல் பரமன்மேல் - என்னைக்
கவரும் எழுத்தாளர் மெட்ராஸ் தமிழன்
உவகை தரும்பதிவர் தான்.

பதிவர் பெயரில் புதியது:
எக்ஸ்பேட் குருவெழுதும் மெட்ராஸ் தமிழன்
கிக்ஸ்தரும் கற்கண்டுச் சொற்கூட்டு - மிக்ஸர்போல்
சென்னை புதுமும்பை வாழ்க்கை நினைவிடையே
மின்னும் மகேசன்மேல் பாட்டு.


தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும் நான் தொலைவில் நின்று பார்க்கும் விண்மீன் expatguru.


அடுத்து பாடல் பெறும் பதிவர்: திண்டுக்கல் தனபாலன்.


ராமலக்ஷ்மி10 கருத்துகள்:

 1. ஆஹா மெட்ராஸ் தமிழனுக்குமா? வாழ்த்துகள், வாழ்த்துகள். அடுத்து நம்ம டிடியா? டிடியை வாழ்த்தறதுக்கு எத்தனையோ விஷயம் இருக்கு! நீங்க வாழ்த்தப் போறது எப்படினு பார்க்கணும். :)))))

  பதிலளிநீக்கு
 2. மெட்ராஸ் தமிழனின் செருப்பு பதிவு அவரைப் பற்றி எழுத வைத்ததோ. இன்னும் எத்தனை பேருக்குப் பதிவர் பாக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நாவதனால் நற்றமிழில் நசிகேதன் கதையை வெண்
  பாவதனாய் படைத்தாயோர் காவியம் - தீட்டும்
  ஓவியம் போலுளதாமுன் எழுத்தில் மயங்கிமுனி
  காவியுமே வாழ்த்திடுமாம் துரையை!

  பதிலளிநீக்கு
 4. அருமை.. அருமை... மெட்ராஸ் தமிழனுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அருமை.....

  மெட்ராஸ் தமிழனுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. "பாடல் பெற்ற பதிவரா? பதிவா?" என்று கேட்ட நாசூக்கு நக்கீரருக்காக புதிதாகச் சேர்த்து விட்டேன். எப்படியெல்லாம் கவனிக்கறாங்கப்பா!!

  பதிலளிநீக்கு
 7. பாடலுக்கு பாராட்டும் பாடல் பெற்றவர்க்கு வாழ்த்தும்

  பதிலளிநீக்கு
 8. மெட்ராஸ் தமிழனுக்கு பாராட்டுகள். உங்களுக்கு ஏற்றப் பாட்டுதான்! எதிர்பாட்டும் அழகு.

  பதிலளிநீக்கு
 9. பாடல் பெற்றவருக்கு வாழ்த்துகள்...

  அறிந்திராத சிலரைத் தெரிந்து கொண்டோம்.

  பதிலளிநீக்கு