புதியது:
பச்சைக் கிளிகள் பனிமுல்லைப் பூக்களின்
அச்சுப் படங்கள் இவர்சிறப்பு - உச்சமிகு
கட்டுரைகள் நீள்கதை நற்கவிதை ராமலக்ஷ்மி
விட்டது உண்டேல் வியப்பு.
பிழையது:
பச்சைக்கிளி முல்லைக்கொடி கண்கண்ட அத்தனையும்
அச்செனச் சுட்டுத்தரும் முத்துச்சரம் - உச்சக்கரு
கட்டுரைகள் நீள்கதை நற்கவிதை ராமலட்சுமி
விட்டது உண்டேல் வியப்பு.
'சூபர்வுமன்' அடைமொழி இவருக்காக உருவானதோ என்று சில நேரம் தோன்றும். திறமையும் உழைப்பும் மலைக்க வைக்கின்றன.
அடுத்து பாடல் பெறும் பதிவர்: மெட்ராஸ் தமிழன்
உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டுபவர். அதுவும் அப்பாதுரையால் பாராட்டப் படுவது பெருமைக்குரியது.
பதிலளிநீக்குஅக்காவுக்கு பொருத்தமான பேர், ”சூப்பர் உமன்”!!
பதிலளிநீக்கு“பா” தொடரா? மெட்ராஸ் பாஷையில் “பதிவர்பா” என்று படித்து விட்டேன்.
:-)
நீக்குபாராட்டிற்கு உரியவர்
பதிலளிநீக்குபாராட்டுவோம்
காதலிப்பா, காதலன்பா, இப்ப பதிவர் பாவா? என்னப்பா...? அடுத்து மைசூர் பா பத்திக் கூட ஒரு பா எழுதுவீருபோலருக்கே... கண்ல பாக்கறத கண்ணுல ஒத்திக்கற மாதிரி தர்ற நம்ம ராமலக்ஷ்மி மேம்க்கு பொருத்தமா அருமையா சிறப்புச் சேக்கற பா அருமைப்பா.
பதிலளிநீக்குஆகா. அன்புக்கு நன்றி.
பதிலளிநீக்குஅடைமொழிக்கான தகுதி இருக்கிறதோ இல்லையோ. நிச்சயம் இது எனக்கு சூப்பர் எனர்ஜி டானிக்:)!
நட்புகளுக்கும் என் அன்பு நன்றி.
பாராட்டுக்குரியவர்தான் .
பதிலளிநீக்குபாராட்டுக்கள்...
பதிலளிநீக்குபாராட்டப்பட வேண்டியவர்.
பதிலளிநீக்குபாரட்டுக்கள். வாழ்த்துக்கள்.
மனமார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள். தகுதியானவருக்குத் தக்கதொரு பாடல்.
பதிலளிநீக்குஅது சரி, இந்தக் கவுஜ எல்லாம் எப்படி எழுத வருது உங்களுக்கு? :)))) நமக்கெல்லாம் ஒண்ணுமே தோணறதில்லை! :)
பதிலளிநீக்குகவுஜயே தான்.
நீக்கு'ராமலட்சுமி' என்றதில் வெண்பா யாப்பிலக்கிணப் பிழை இருப்பதைச் சுட்டி வெண்பா போலீஸ் பின்னாலேயே வந்துவிட்டது. நான் தமிழ் ஜெயிலுக்குப் போனால் ஜாமீன் கொடுத்துக் கூட்டி வந்துடுங்க ப்லீஸ்.
ராமலெட்சுமி அக்காவுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபிழைமிகு பழைய பாவுக்கு ராமலட்சுமி என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குபுதிய பாவிலும் விதிகளை சற்று விரித்தமைக்கு வெண்பாக் காவலர்கள் என்னை மன்னிப்பார்களாக :-).
பிழை என்று சொன்னாலும் சட்டென்று தெரியவில்லை.பொருட்சுவை அதை மறைத்து விடுகிறது.கனிச் சீர் என்பதால் அதுவும் இனிமையாகவே இருக்கிறது.
நீக்குராமலட்சுமி மேடத்திற்கு வாழ்த்துக்கள்
அப்"பா"துரையின் பாக்கள் பூக்கட்டும்
நல்ல கனிச்சீரின் கவர்ச்சி :-).
நீக்குதளை விதிகள் இங்கே தலை விதியானதால் காய்ச்சீருக்குக் காய வேண்டியிருக்கிறது. விதிகளை மாற்ற வேண்டும். தொல்காப்பிய காலம் தொட்டு அதையே அரைத்துக் கொண்டிருக்கலாமோ?
சூப்பர் உமன் தான் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ராமலக்ஷ்மிக்கு.
மிகத் திறமையான பதிவர். அவருக்கு ஒரு பா.... நன்று
பதிலளிநீக்குவாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
வாழ்த்துகள் ராமலஷ்மி
பதிலளிநீக்குராமலக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு‘’கூழுக்குப் பாடி குடிகெடுத்தப் பாவி” யாருன்னு தெரியுமா பாஸ்? நம்ம ஔவையார் தாங்க. திட்டுனது கம்பராம்.
ஒரு ஆட்டக்காரி..... சிலம்பியோ, சலம்பியோ....தன் பேர்ல ஒரு வெண்பா பாடகம்பரைப் போய்க் கேட்டாளாம். அவரு வெண்பாவுக்கு ஆயிரம் வராகன் பீஸ் கேட்டாராம். அவ கைல இருந்ததோ ஐநூறு வராகன்தான். பாடுபாடுன்னு அவரு உயிரை வாங்கினா. அவரு ரெண்டே லைன் எழுதிட்டு, இன்னும் ஐநூறு வராகன் கொண்டு வா, பாட்டை முடிச்சித் தரேன்’ன்னுட்டார். அந்த ரெண்டு வரியை வீட்டு சுவத்திலே எழுதி வச்சாளாம். இது தாங்க எழுதினது:
தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழமண்டலமே
ஒரு நாள் ஔவையார் வெயில்ல அந்தப் பக்கமா வந்தாங்களாம். ஆட்டக்காரி வீட்டு திண்ணைல உக்கார்ந்துகிட்டு, “பசிக்குது தாயீ... சாப்பிட ஏதும் இருக்கான்னு கேட்டாங்களாம். அவளும் கூழு தான் இருக்கு பாட்டி” ன்னு சொன்னாளாம். ‘குடுடியம்மா’ன்னு வாங்கி குடிச்சிட்டு சுவற்றைப் பார்த்தாளாம். பாதிவெண்பா சமாச்சாரத்தை கேட்டுகிட்ட ஔவைபாட்டி மீதி வெண்பாவை முடிச்சி கொடுத்தாளாம்.
“பாட்டி! என் கிட்டே பணமில்லையே”ன்னு டான்ஸ்காரி சொன்னப்போ “டோன்ட் ஒர்ரி.. யுவர் கூழு ஈஸ் தி பீஸ்’ன்னு சொல்லிட்டு போய்ட்டாளாம். ஔவை எழுதி முடிச்சப்புறம் வெண்பா இப்பிடித் தான் இருந்தது.
தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழமண்டலமே – பெண்ணாவாள்
அம்பொற்சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு
அவ்வையாராவது கூழுக்கு எழுதினாங்க. அப்பாதுரை சாமி! நீங்க வெறும் அன்புக்கு எழுதுறீங்க. ஓசி தானேன்னு காய்ச்சீர்.. அது இதுன்னு விட்டுடாதீங்க. சீரு செங்காயா இருந்தாலும் சரிதான். பாத்து செய்யுங்க முதலாளி !
ஆஹா! நான் ஜுரத்தில் கிடந்த நாட்களில் வந்த பதிவு. அப்போ இணையப் பக்கம் வராததால் விட்டுவிட்டேன். நல்ல பதிவு. எங்கள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅட்டகாசம்.. பாடல் பெற்ற சூப்பர் வுமனுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்கு