2015/03/16

பாடல் பெற்ற பதிவர்
'எண்ணங்கள்' என்றெழுதும் நற்கீதா சாம்பசிவம்
கண்ணன் கதைக்கோர் பதிவிடுவார் - வண்ணச்
சமையலும் சொல்வார் தமிழ்மரபைப் பேணும்
இமயப் பதிவர் இவர்.


நான் தினம் வியக்கும் பதிவர். பதிவுகள், குழுமங்கள் என்று சளைக்காமல் எழுதுகிறார். கண்ணனுக்காக masterpiece.

'உடல்நலமில்லை அதனால் அவசரமாக இப்போது எழுதுகிறேன். முடிந்த போது இன்னொரு பதிவில் தொடர்கிறேன்' என்று தொடங்கி விரிவாக எழுதும் ஒரே பதிவர் இவராகத்தான் இருக்கமுடியும். தன் எண்ணங்களை வெளியே பொதுவில் வைத்துத் தீரவேண்டும் என்கிற இவரின் எழுத்துப் பிடிவாதம் கவர்கிறது.
அடுத்து பாடல் பெறும் பதிவர்: ஜோதிஜி.

முன்னர்:


பாலகணேஷ்
சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி


45 கருத்துகள்:

 1. கீதா மேடத்திற்கு வாழ்த்துக்கள்
  அவரது வலைப் பதிவிற்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு சிவகுமாரனுக்கு செல்கிறது

  பதிலளிநீக்கு
 2. சகலகலா அம்மாவுக்கு வணக்கங்கள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. அம்மாவுக்கு அடியேனின் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. ஆம், எப்போதும் சுறுசுறுப்பாக உற்சாகமாக இயங்கி, வியக்க வைப்பவர். பாடல் அருமை. வாழ்த்துகள் கீதாம்மா!

  பதிலளிநீக்கு
 5. கீதாவைப் பற்றி இன்று பூராவும் சொல்லலாம். நல்ல மனுஷி.
  நேர்மை,பக்தி,சுறுசுறுப்பு,எதைக் கண்டும் அசராத குணம்.

  வலிமையான எழுத்துக்குச் சொந்தம் கொண்டாடுபவர். நன்றாக இருக்கணும். நன்றி துரை

  பதிலளிநீக்கு
 6. கீதா சாம்பசிவம் மாமி !!

  கங்க்ராட்ஸ்.
  "எல்லாப்புகழும் அந்த அரங்கனின் அனுக்ரஹம். பெரியவா ஆசிர்வாதம். " அப்படின்னு நீங்க சொல்றேள் இல்லையா...
  காதிலே விழரது.  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. satsangathve nissangathvam
   Nissangathve nirmohathvam
   Nirmohathve nischala thathvam
   Nischala thathve jeevan mukthihi

   Appadinnu geetha govindha thile ezhuthi irukku sankaracharyaar aadhi sankara composition
   The moment we think of righteousness we we think of peple who r right. Association of gpod people leads to good thoughts l

   நீக்கு
  2. (Continuing)
   Good thoughts lead to disassociation from unclean desires . which then leads to objective assessment of self and the things aroumd us and finally thos paves way of liberation.
   By penning a song on Madam GS i felt really blessed by Perumal .
   That is that
   Subbu thatha

   நீக்கு
  3. ஆஹா, இதானா விஷயம்! இப்போப் புரிஞ்சுது சுப்பு சார். நிஜம்மா அரங்கனின் அருள் தான் என் போன்ற சாமானியமான எழுதறவளுக்குக் கிடைச்ச மிகப் பெரிய கௌரவம்! அவனில்லையேல் அவன் அருள் இல்லையேல் இது எங்கே? சரியாச் சொல்லி இருக்கீங்க! ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுக்கும், பாடலை எழுதி என்னை மிகவும் கௌரவித்திருக்கும் அப்பாதுரைக்கும். கண்ணீரே வந்து விட்டது.

   நீக்கு
 7. சொல்லும் கருத்துக்களில் உறுதியாய் இருப்பவர். திருச்சி சென்றால் நான் சந்திக்க நினைக்கும் வலைப் பதிவர். துறை போகியவர் என்று கூறப் படுபவர். அவருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. //'உடல்நலமில்லை அதனால் அவசரமாக இப்போது எழுதுகிறேன். முடிந்த போது இன்னொரு பதிவில் தொடர்கிறேன்' என்று தொடங்கி விரிவாக எழுதும் ஒரே பதிவர் இவராகத்தான் இருக்கமுடியும். தன் எண்ணங்களை வெளியே பொதுவில் வைத்துத் தீரவேண்டும் என்கிற இவரின் எழுத்துப் பிடிவாதம் //

  :) மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். அதே.... அதே ! :)

  சளைக்காமல் தினமும் பல பதிவுகள் வெளியிட்டு, இதுவரை பல ஆயிரக்கணக்கான பதிவுகள் கொடுத்துள்ள, திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. பாடல் அருமை. கீதா மாமிக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. வித்தியாசமானவர் இவர்! கொள்கை; கோட்பாடு எல்லாம் கொண்டவர்!
  விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பார்; வேண்டியாங்கு தூவிடுவார்!
  எது குறித்து எழுதவும் தயார்! அது குறித்து எல்லாத் தகவலும் தந்திடுவார்!
  உரிமை எடுத்துக் கொண்டு இவர் எழுத்து எதையும் விமர்சிக்கலாம்;
  தகுதியுள்ளவர் விமரிசித்தால் தப்பாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்.
  தான் எழுதியதின் தாத்பரியத்தை தன் கருத்தை விளக்க முயற்சிப்பார்;
  வல்லடி சமருக்குப் போக மாட்டார்! வந்த சமரை விடமாட்டார்!
  நேரிடையாக எதிர் கொள்வார்: எந்தக் கருத்து வழுவலும் அறியார்!
  சவாலுக்கு சவால்; சல்லிசான சமாச்சாரம் இவருக்கு!
  மனச்சுணக்கம் கொள்ளாத மாமனுஷி!
  இயல்பாக எதையும் எடுத்துக் கொள்ளும் இல்லத்தரசி!
  நெடுங்காலமாக எழுதிவரும் மூத்த பதிவரசி!
  பழகிய பதிவுப் பட்டாளத்திற்குத் தானைத்தலைவி!
  ஊருக்கு உலகுக்கு நல்லதையே எழுதும் எழுத்தரசி!
  எந்தச் செய்தியைத் தேடினாலும் கூகுள் தகவலில் இவர் கிடைப்பார்!
  அந்த அளவுக்கு பதிவுலகில் இவர் வட்டாடல் உயரம்! உயரம்!
  இதுவரை கையாண்ட செய்திகளோ அனந்தம்! அனந்தம்!
  தன் கருத்தில் உடும்புப் பிடி உண்டுதான்;
  மாற்றுக் கருத்து கன்வின்ஸிங்காக இருப்பின்
  ஹிஹி என்று ஏற்றுக் கொள்ளவும் செய்வார்!
  :)) முதலான குறியீடுகளிலும் பேசுவார்!
  தனக்குப் பின்னூட்டம் போட்டவருக்குத் தான்
  தான் பின்னூட்டம் போடணும்ங்கற அரசியலெலாம் அறியார்!
  எப்பொழுதும் இவர் எழுத்தில் எனக்கு மலைப்புண்டு
  தப்பாமல் இவர் எழுத்தை சுடச்சுட வாசித்து விடுவதுண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட்டகாசம். இது தான் பாடல்!

   நீக்கு
  2. தனிப்பட்ட முறையில் எதுவுமில்லை; அட்டகாசங்கள் நம் கூட்டுச் சொத்து, இல்லையா?..

   நீக்கு
  3. ஆஹா, இங்கே நான் மிகவும் மதிக்கும் இன்னொரு பெரியவரின் ஆசிகளும் அவருடைய பாடலும். உண்மையிலேயே எனக்கு வார்த்தைகள் வரவில்லை. நன்றி என்று சொல்வது கூட அதிகப் பிரசங்கித்தனமாகிடும். அனைவரையும் பணிந்து வணங்கிக்கிறேன். இதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் மிகப் பெரிய பொறுப்பு இப்போது என் தோள்களில்! அந்த அரங்கன் அருளால் எல்லாம் நல்லபடி நடக்கும். மீண்டும் மீண்டும் மீண்டும் நன்றி.

   நீக்கு

 11. "எப்பொழுதும் இவர் எழுத்தில் எனக்கு மலைப்புண்டு
  தப்பாமல் இவர் எழுத்தை சுடச்சுட வாசித்து விடுவதுண்டு!"

  என்னுடய மதிப்பிற்குறிய்வர்..அவருக்கும், அவரை கவி பாடியதால் ,

  தங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  மாலி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, மாலி ஐயா.

   //"எப்பொழுதும் இவர் எழுத்தில் எனக்கு மலைப்புண்டு
   தப்பாமல் இவர் எழுத்தை சுடச்சுட வாசித்து விடுவதுண்டு!"//

   தங்கள் அருமைப் புதல்வியார் மாதங்கிக்கும் இந்த இரண்டு வரிகள் என் வரையில் பொருத்தமே.

   அன்புடன்,
   ஜீவி

   நீக்கு
  2. மாலி சார், நீங்களுமா? உண்மையிலேயே எனக்கு எந்தப் பெரிய விருது கிடைச்சிருந்தாலும் இத்தனை மகிழ்ச்சி இருந்திருக்குமா சந்தேகமே! எவ்வளவு அரிய மனிதர்களை நண்பர்களாகப் பெற்றிருக்கிறேன் என நினைக்கையில் கடவுளின் கருணையை எண்ணி வியக்கத் தோன்றுகிறது.

   நீக்கு
 12. கீதா மாமிக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 13. மேடத்தை இப்போதுதான் பார்க்கிறேன். (புகைப்படத்தில்). :-)

  பதிலளிநீக்கு
 14. இங்கு கருத்துத்தெரிவித்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ரொம்பவே நெகிழச் செய்து விட்டீர்கள். இந்த நாள் உண்மையிலேயே என்னால் மறக்கமுடியாத நன்னாளாகி விட்டது. அப்பாதுரைக்கும் மற்றவர்களுக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லாமார்ச் 18, 2015

  இமைய பதிவரா இமய பதிவரா? தமிழ் திருத்த ஆள் கிடைக்கவில்லையோ?

  பதிலளிநீக்கு
 16. நான் வியக்கும் கீதா மேமைப் பற்றி இத்தனை பெரிய ஆட்களெல்லாம் இத்தனை சொல்லிவிட்ட பின் நான் சொல்ல என்ன இருக்கிறது? இத்தனை நல்இதயங்களைப் பெற்ற கீதா மேம்க்கு மகிழ்வான, மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். (அதுசரி... இமயம்னு அவங்கள நீங்க குறிப்பிட்டதுல குறியீடு எதும் கிடையாதே அப்பா சார்? ஹி... ஹி... ஹி....)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னோட கருத்தை பாலகணேஷுக்குச் சொல்லி இருந்தேனே! அ தைக் காணோமே! இங்கேயுமா காக்கா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (

   நீக்கு
 17. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரரசிக்கு (க்ர்ர் அரசி) வாழ்த்துகள். தன் கருத்துக்கு எதிர்ப்பு வரும் என்று அறிந்தாலும் கருத்துகளை முன்வைக்கத் தயங்காதவர். எந்த ஒரு விஷயத்தையும் தெரியாது என்று சொல்லி பார்த்ததில்லை. கோபப் படாத மனுஷி. இவருக்குக் கோபம் வந்து நான் பார்த்ததில்லை. டேக் இட் ஈஸி பாலிஸிக் காரர்.

  "இன்னும் சொல்லவா...உண்மை அல்லவா... திறன் வடிவானவர் எங்கள் கீதா மேம்....கீதா மேம்..."

  இது பாடல் வரிகளாகப் பாடலாம். என்ன பாடல் என்று சொல்ல முடியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // என்ன பாடல் என்று சொல்ல முடியுமா?//

   நாகூர் ஹனீஃபா பாட்டு ஒண்னு உண்டு.

   ”இன்னும் சொல்லவா... அவர் புகழ்.. கருணை வடிவானவர்
   எங்கள் நபிநாதர்.. எங்கள் நபிநாதர்...”

   என்று வரும். இந்தப் பாடல் திரைப்பாடல் மெட்டா அவரது சொந்த மெட்டா என்று தெரியவில்லை. (அவரது சில பாடல்கள் திரைப்பாடல் மெட்டில் இருக்கும்)

   நீக்கு
  2. கரெக்ட் ஹுசைனம்மா. அதே பாடல்தான். இது பிரபல ஹிந்தி பாடல். எனக்கு இரண்டு பாடல்களையுமே மிகவும் பிடிக்கும்.

   1. https://www.youtube.com/watch?v=jeqNjWQEBlM

   2. https://www.youtube.com/watch?v=sod5WAZzWuc

   நீக்கு
  3. ஹனீபா பாடுவது "அருள் வடிவானவர் எங்கள் நபிநாதர்..நபிநாதர்.."

   நீக்கு
  4. ஆமா, அந்த பாட்டும் கேட்டது இப்பத்தான் ஞாபகத்துக்கு வருது... “மேரி மெஹபூபா... மேரி மெஹபூபா....” :-)

   நீக்கு
  5. 'ஓஹோ எந்தன் பேபி' பாட்டுனு நினைச்சேன்..(இன்னும் சொல்லவா.. அதில் மன்னன் அல்லவா..)

   நல்லவேளை ஹூஸைனம்மா காப்பாத்தினாங்க! நன்றி.

   நீக்கு
 18. நாகூர் ஹனீபா பாட்டுக்குத் தாவிய ஸ்ரீராம்! அதைக் கண்டுபிடித்த ஹூஸைனம்மா!

  இதெல்லாம் தான் பதிவுலக் போனஸ்!

  பதிலளிநீக்கு
 19. அத்தனை பின்னூட்டங்களுக்கும் நன்றி.

  பொழுது போகாமல் தொடங்கிய பதிவு.. இப்போது 'இவரைப் பத்திப் பாடுங்க.. அவரைப் பத்திப் பாடுங்க' என்று இமெயில்கள் வருமளவுக்குப் போகும் என்று நினைக்கவில்லை. அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. தாமதமாய் வந்தவனுக்கு சொல்ல ஒன்றும் மிச்சமில்லை. இவர் கருத்துக்களை ஆவலாக எதிர்பார்ப்பவன் நான்.
  எந்த ஒரு பதிவுக்கும் புதிதாய் மேலதிக விவரம் தரும் விஷயஞானம் உள்ளவர் கீதா சாம்பசிவம் மேடம். நான் சந்திக்க விரும்பும் ஒருசில பதிவர்களில் இவரும் ஒருவர். (சாப்பாட்டு வேளையாகப் பார்த்து சந்தித்து விட வேண்டியதுதான்!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சாப்பாட்டு வேளையாகப் பார்த்து சந்தித்து விட வேண்டியதுதான்!) //

   நானும் வந்துட்டேன்.


   சுப்பு தாத்தா.

   நீக்கு
 21. கீதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  தமிழ்மரபைப் பேணும்
  இமையப் பதிவர் இவர்.//

  பாடல் அருமை அப்பாதுரை சார்.

  வித்தியாசமானவர் இவர்! கொள்கை; கோட்பாடு எல்லாம் கொண்டவர்!
  விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பார்; வேண்டியாங்கு தூவிடுவார்!//

  ஜீவி சார், கீதா அவர்கள்பற்றி சொன்னது மிக சரியே அருமையான கணிப்பு

  பதிலளிநீக்கு
 22. முதலில் கீதாவிற்கு வாழ்த்துகள். எத்தனை பேர்கள் உங்களைக் கொண்டாடுகிறார்கள்! ஜீவி ஸாரின் பாடல் வரிகள் உங்கள் குணங்களை மிக அற்புதமாகச் சொல்லிப் போகிறது. உங்களைப் பற்றி அதிகம் தெரியாத எனக்கு இந்த பதிவு ஒரு பெரிய கண்திறப்பு. மீண்டும் நல்வாழ்த்துகள்!

  @ அப்பாதுரை - இது ஒரு தொடர் பதிவு என்பதை இன்றைக்குத் தான் தெரிந்து கொண்டேன். ஜோதிஜி பற்றி எழுதியதை படித்துவிட்டு, அடுத்து சுப்பு அவர்களைப் பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று அறிய வந்தேன். உங்கள் (வசிஷ்டர்) வாயால் பாடப் பெற்றவர்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள். உங்களால் அவர்களும், அவர்களால் நீங்களும் ஏற்றம் பெறுகிறீர்கள். நல்வாழ்த்துகள்!


  பதிலளிநீக்கு
 23. நான் இந்தப் பதிவிற்குப் போட்ட பின்னூட்டம் எங்கே போயிற்று?

  பதிலளிநீக்கு
 24. நம்ம கீதா சகோ! அவர் நகைச்சுவையாக எழுதுவதிலும் மன்னி! நடமாடும் தகவல் களஞ்சியம். எந்தத் தலைப்பாக இருந்தாலும் அதில் அவர் விளக்கம் நிச்சயமாக இருக்கும். ஆன்மீகத்திலிருந்து..நகைச்சுவை வரை எல்லா தளத்திலும் கலக்குபவர்....நேர்மையான தனது கருத்துகளை வெளிப்படையாகப் பேசுபவர். அதில் தயக்கம் என்பதே இருக்காது. நாம் எதிர்க் கருத்து சொன்னாலும் கூட "அட போங்கப்பா..இதெல்லாம் ஜுஜூபி அப்படினு சொல்லிட்டு அழகா அதுக்கும் கருத்து சொல்லிவிட்டுப் போவார்...நாங்கள் மிகவும் ரசிக்கும் பதிவர்களில் ஒருவர்....ஆன் மறந்துட்டோமே...சமையல் குறிப்புகளை கண்ணில் விளக்கெண்ணைப் போட்டு வாசிப்பவர் குறிப்பாக எங்கள் ப்ளாகில் நிறைய கர்ர்ர்ர்ர் இருக்கும்.,...ஹஹஹ்

  பதிலளிநீக்கு
 25. கீதா சாம்பசிவம் சகோ தங்களுக்கு வாழ்த்துகள்!!!!

  பதிலளிநீக்கு
 26. வாழ்த்துகள் கீதாம்மா..

  பதிலளிநீக்கு