2015/03/11

பாடல் பெற்ற பதிவர்




ருடம் முழுதும் தமிழ்க்கன்னம் வைப்பான்
திருடன் சிவகுமாரன் தேர்ந்து - திருட்டினில்
கிட்டுந் தமிழ்மொத்தம் கொட்டியே இன்புறுவான்
மட்டின்றி நம்முடன் சேர்ந்து.










ஓசை நயம் கருதி அவன் இவன் என்று குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.
சிவகுமாரன் என் பெருமதிப்பிற்குரியவர். இவருடன் தமிழ்க்கொள்ளையடிக்கப் பெருவிருப்பம்.



அடுத்து பாடல் பெறும் பதிவர்: பால கணேஷ்.

முன்னர்:


ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி



15 கருத்துகள்:

  1. 'பாடல் கற்ற கவிஞர்' உங்களிடம் பாடல் பெற்றதில் மகிழ்ச்சி.

    முதலில் உள்ளம் கவர் கள்வன் அடிப்படையில் திருடனைத் தேர்ந்து விட்டீர்கள் போலிருக்கு. அப்புறம் அந்த இரண்டாம் அடியின் ஆரம்பமான திருடனுக்காக முதல் அடி முதல் வார்த்தை 'வருடம்', இல்லையா? அதாவது இரண்டாம் அடியைத் தீர்மானித்த பிறகே முதல் அடி வந்தது என்று நினைக்கிறேன். அதே இரண்டாம் வரியில் மறுபடியும் 'திருட்டினில்' என்று இருப்பதற்கு வேறு வார்த்தை வந்திருக்கலாம் என்று தோன்றியது. ஒரே பொருள் கொண்ட பல வார்த்தைகள் தமிழின் சிறப்பு, இல்லையா?

    கடைசி வரியில், 'மட்டின்றி நம்முடன் மகிழ்ந்து' என்றால் இன்னும் கூடுதல் சுவை கூடியிருக்குமோ?.. இல்லை, வெண்பாவுக்கு தளை தட்டுமோ?.. எனக்கு வெண்பா இலக்கணம் தெரியாததால் தெரியவில்லை. (சொற்களின் நாட்டிய கூத்தாட்டத்தை வைத்தே ஒப்பேற்றுவது என் வழக்கம். வரிகள் அதுவாகவே ஏதாவது இலக்கண வரையறைக்குள் தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டால் எனக்குத் தெரியாமலே நடந்ததாக அவை இருக்கும்! )

    இந்த வெண்பா முயற்சியின் வரிகளையே மாற்றி மாற்றிப் போட்டு முயற்சித்தால் இன்னும் விதம் விதமான பாடல்கள் வருவது உங்களின் இந்தப் பாடலின் சிறப்பு. புதுமையான சோதனைக்கு வாழ்த்துக்கள்.

    சிவகுமாரனின் தேன் கவிதைக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆளைக் காணோமே என்று பார்த்தேன் ஜீவி சார்.
      எப்படியெல்லாம் அலசுகிறீர்கள்?! தொலைவிலிருந்து மனம் படிக்குங் கலை!

      'மகிழ்ந்து' மோனை தான் முதலில் தோன்றியது. தளையெல்லாம் தகர்த்துவிடலாம்.
      ஆனால் மூன்றாம் சீர் எதுகை இத்தகைய வெண்பாக்களில் ஓசை நயம் கூட்டுவதாகத் தோன்றியதால்...தேர்ந்து - சேர்ந்து என்றெழுதினேன்.

      இலக்கண விதியெல்லாம் நான் பார்க்கிறதில்லை. ஐந்தாயிரம் வருஷத்துக்குப் பின்னும் இலக்கண விதிகள் பார்த்துக்கொண்டிருப்பதால் மொழி விழிக்கிறதோ?

      நீக்கு
  2. சிவகுமாரன் கவிதைகளுக்கு நான் அடிமை. பார்த்துப் பழகுவதற்கும் நல்ல மனிதர். தமிழைத் திருடுவதுபோல் பலரது நெஞ்சங்களையும் திருட வல்லவர்.

    பதிலளிநீக்கு
  3. சிவகுமாரன் பாடல் பெற்ற பதிவர் விருது பெற்றாரா !!

    இவரது அருட்கவி.ப்ளாக் ஸ்பாட் காம் ஒரு தங்கச் சுரங்கம்.
    திருப்பாற்கடல் தனிலே பள்ளி கொண்ட பெருமானை
    பாடி மகிழும் பிரபந்தம்.
    பிரணவமும் மகிழும் சாம கானம்.
    அவர் வலை உள்ளே புகுந்து ஒன்றல்ல, இரண்டல்ல, எத்தனையோ
    பாடல்களை எவ்வளவு தரம் பாடிப் பாடி மகிழ்ந்தேனோ
    எனக்கே நினைவு யில்லை.

    மரபுக் கவிதைகள் இவர் கோட்டை.
    அந்தக் கோட்டைக்குள் நுழைந்தார்
    மற்றெல்லாவற்றையும் மறப்பர், துறப்பர்
    இதில் ஐயமில்லை.

    இருப்பினும்,
    அண்மையில் இவர் ஆன்மீகக் கவிதைகள் எழுதுவதில்லை.
    ஒரு வேளை
    அப்பாதுரை சாருக்கு சிஷ்யன் ஆகிவிட்டாரோ !!!

    எல்லாம் அந்த
    "உள்ளத்தில் பெருங்கோயில் உனக்காகக் கட்டி அதில்
    உன்திரு லிங்கம் வைத்து
    ஓமென்னும் மந்திரம் ஒவ்வொரு கணந்தோறும்
    உளமார உச்சரித்து
    தெள்ளத் தெளிவாக சீவனே சிவமென்று
    தேர்ந்து நான் போற்றுகின்றேன்"
    என்று சொல்கிறாரே
    அந்த சிவனே அறிவார்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  4. //சிஷ்யராகி விட்டாரோ !!!

    சிவகுமாரன் சிவகுமாரன் தான் சார். கவலையே வேண்டாம்.
    கீதா சாம்பசிவம் வேணும்னா ஆன்மீகத்தை விடலாம் - சிவகுமாரன்? ஊஹூம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிவகுமாரன் சிவகுமாரன் தான் சார். கவலையே வேண்டாம்.
      கீதா சாம்பசிவம் வேணும்னா ஆன்மீகத்தை விடலாம் - சிவகுமாரன்? ஊஹூம்.//

      அநியாயமா இல்லையோ? :)))) அதெல்லாம் நான் மாற மாட்டேன். ஆனால் ஒண்ணு, இந்த சிவகுமாரனைப் பத்தி இன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். கிணற்றுத் தவளையாகவே இருக்கேன் போல! :(

      நீக்கு
  5. மதுரை விழாவில் சந்தித்தேன்...

    எளிமையான மனிதருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. மதுரை விழாவில் சிவகுமாரனின் சுய அறிமுகம் உங்களுக்கு மெயிலில் அனுப்பி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. இந்தத் திருடனுக்குத்தான் எத்தனை ரசிகர்கள்..
    தளை தட்டாத கவிதை வரிகள்.
    எளிய வார்த்தைகளில் பாமாலை தொடுக்கும் லாவகம்.
    இவன் வலை நமக்குக் கொடுத்த கொடை.
    இன்னமும் இந்த அண்ணனைப் பார்க்காத தம்பி !

    அப்பாதுரை சார்! அழகான வெண்பா!
    ஜி.வி சார் சொன்னது போல் க்யூப் உருட்டல் சாத்தியங்கள் செறிந்தவை.
    தொடருங்கள் உங்கள் வெண்பாக் கணைகளை....

    பதிலளிநீக்கு
  8. என்ன தவம்செய்தேன் இந்தப் பிறவியில்நான்!
    சின்னப் பயலை சிலாகித்துக்- கன்னல்
    கவிசொன்ன அப்பாஜி காட்டும் பரிவால்
    புவிதன்னில் பெற்றேன் புகழ்.

    பதிலளிநீக்கு
  9. சிவகுமாரனின் அற்புதக் கவி மழையை நேரில் கேட்டு இன்புற்றவர்களில் நானும் ஒருவன்

    பதிலளிநீக்கு
  10. அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. அன்பு அப்பாஜி, ஓசை நயத்துக்காக மட்டுமல்ல. ஆசையாகவும் அழைக்கலாம் அவன் இவன் என்று.

    பதிலளிநீக்கு