2015/03/14

பாடல் பெற்ற பதிவர்




பாலகணேஷ் தந்த சரிதா யணம்படித்தோர்
காலம் மறந்துச் சிரிப்பார்கள் - மேலாகக்
கட்டுரைகள் நூல்வடிவம் குட்டிப் படங்கட்டும்
எட்டுக் கலைஞர் இவர்.









பாலகணேஷுக்காக மைசூர்பா:
கிருஷ்ணா கிராண்டு அடையார் என்றே
வருடம் வரட்டும் கடைகள் - ஒருபோதும்
அம்மா கைவண்ண மைசூர்பா சுவைவருமோ?
சும்மா இவர்கள் சிறப்பு.




குட்டிப்படம்:குறும்படம் - வேறே ஏதாவது நினைச்சுடாதிங்க.
சந்திப்பவரின் களைப்பொழிக்கும் சிரித்த முகம் இவருக்கு.



அடுத்து பாடல் பெறும் பதிவர்: கீதா சாம்பசிவம்.

முன்னர்:


சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி


26 கருத்துகள்:

  1. பாலகணேஷ் சாரை ரொம்பப் படித்ததில்லை..
    பின்னூட்டக் குறும்பை ரசிப்பதுண்டு..
    எட்டுக் கலைஞராமே? எட்டிப் பார்த்துவிட வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு எட்டு வந்துட்டுப் போங்கஜி.. எட்டெட்டா பாய்ஞ்சுட்டிருந்தவன் இப்ப கொஞ்சம் சுணங்கியிருக்கேன். எனக்கு எனர்ஜி டானிக் தந்திருக்காரு அப்பா ஸார்.

      நீக்கு
  2. பாலகணேஷ் அவர்களுக்கு பொருத்தமான வாழ்த்துப்பா.

    பதிலளிநீக்கு
  3. வலையுலக வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. சரிதாயணம் இன்னும் படிக்கலை. படிச்சுடுவோம். வாத்தியாரின் தீவிர ரசிகர் என்ற அளவிலே தான் எனக்குத் தெரியும். ஆகவே நம்ம வம்பு அங்கேயும் உண்டு. :)

    பதிலளிநீக்கு
  5. ஏற்கெனவே கொடுத்த கருத்துக் காக்கா தூக்கிட்டுப்போயிருக்கு! :(

    பதிலளிநீக்கு
  6. பால கணேஷ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. சென்னை பதிவர்கள் சில்ர் நடுவே வாத்தியாராக வலம் வருபவர் பாலகணேஷ். சென்னையில் நான் பல பதிவர்களை சந்திக்க ஏதுவாயிருந்தவர். சுவாரசியமான மனிதர்.

    பதிலளிநீக்கு
  8. Bala Ganesh Sir ! Present Sir.

    tomorrow discovery palace meeting you come Sir ?

    i coming sir.
    if u come sir,
    i see u sir.


    subbu thatha

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை வெவ்வேறு வேலைகளில் கட்டுண்டு கிடக்கிறேன் சுப்புத்தாத்தா. அதனால் கண்டுபிடிப்பு பக்கம் வர இயலாத நிலை. தங்களையும் மிஸ் பண்ணுகிறேன். அவ்வ்வ்வ்வ்.

      நீக்கு
  9. வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  10. நான் பாடினால் நிறையப் பேர் ஓடுவார்கள் என்பது அனுபவம். நானும் பாடல் பெற்றவர்களில் ஒருவனாவேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை அப்பா ஸார். நான் பின்னூட்டத்துல கேட்டத நினைவுல வெச்சுகிட்டு நீங்க தந்த மைசூர்பா கனஜோர். மிகமிக ரசித்தேன் இந்த மைசூர்பாவை.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. வம்புக்கு வருபவர்களுக்கு மகிழ்வான நல்வரவு. ஹா... ஹா.... ஹா....

    பதிலளிநீக்கு
  12. வாத்தியார் நான் வாழ்த்தவா வம்புக்கு வரவா ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுக்கவா கோர்க்கவா ங்கிற மாதிரி கேக்குறியே பா? நியாயமா?

      நீக்கு
  13. பாலகணேஷரை மூன்று முறைகள் சந்தித்துள்ளேன். மிகவும் சுவாரஸ்யமான நபர்.

    பதிலளிநீக்கு
  14. பா அருமை. வாழ்த்துகள் கணேஷ்!

    பதிலளிநீக்கு
  15. கீதா அம்மா ஏகாதசி இல்லையா இன்னிக்கு.
    அதனாலே பெருமாளையும் தாயாரையும் சேவிச்சுட்டு வர போயிருக்கா.
    அதான் வர நேரமாறது.

    வரும்போது ஞாபகமா, அப்பாதுரை சாருக்கு பெருமாள் பிரசாதம் துளசி வாங்கிண்டு வருவார் அப்படின்னு நினைக்கிறேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்பு சார், எதுக்கு இந்தக் கருத்துனு புரியலை. ஆனால் முந்தாநாள் கொஞ்சம் பிசி தான். ஆஞ்சிக்கு வேண்டுதல் நிறைவேற்றினோம். அதனால் வேலை மும்முரம். இரண்டு நாட்களாக வத்தல், வடாம் போடுவதில் மும்முரம். இன்னிக்கும் காலம்பர இருந்து வேலை சரியாக இருந்தது. இரண்டு நாட்களாக சரியாகவே இணையம் பக்கம் வர முடியலை.:)) இப்போத் தான் இதைப் பார்த்தேன். :) நீங்க சொன்னாப்போல் துளசி கிடைச்சது.

      நீக்கு
  16. வாத்தியாருக்கு வணக்கம். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. பாலகணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. பாடல் பெற்ற கணேஷண்ணாவுக்கு பாராட்டுகள். சரிதா மிகவும் மகிழ்வார் :-)

    பதிலளிநீக்கு
  19. வாத்தியாரு! எங்கள் குழுவில் அதான் குறும்படம் இப்படி இளவட்டக்!!! குழுவில்.....பேச்சே நகைச்சுவைதான்....எங்கள் இனிய நண்பர் தங்களிடம் பாடல் பெற்றமைக்கு எங்கள் வாழ்த்துகள்! வாத்தியாரே!!! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. சரிதா எங்கிருந்தாலும் ஓடோடி வந்து தங்க்ள் நாயகனைப் பற்றிய பாடலைப் படித்துவிட்டுச் செல்லுங்கோ! நீங்கள் பல பெண்கள் குழுவிலும் இருக்கலாம்...உங்க பொறந்தாத்துப் பெருமையும் பேசலாம்....என்றாலும் தாங்கள் புகழ்பெற்றது தங்கள் நாயகனில்தான் தெரியுமோ?!!!

    பதிலளிநீக்கு
  21. எங்க 'வாத்தியார்'க்கு ஒரு புகழ்மாலை போட்டிருக்கீங்க. இப்போதான் கவனிச்சேன்.. சூப்பர்..

    பதிலளிநீக்கு