2013/06/11

அப்பாவி

4


◀   1   2   3



    ஸ்டார்பக்ஸ் வாசலில் காத்திருந்த ஜீனாவைக் கண்டு காரை நிறுத்தி, தானியங்கிக் கதவு விசையை அழுத்தினேன். கதவு திறந்து உள்ளே ஏறிக்கொண்டாள். என்னிடம் ஒரு கோப்பையைக் கொடுத்து, "உன்னோட டோபியோ இன்னேரம் சூடு தணிஞ்சிருக்கும்.. என்னைத் திட்டாதே" என்றபடி வசதியாக முன்னிருக்கையில் உட்கார்ந்தாள். கதவு மூடிக்கொள்ள, காபிக்குச் சைகையால் நன்றி சொல்லிக் காரைக் கிளப்பினேன். பொன்னேசனை அவர் வீட்டில் சந்திப்பதாகத் திட்டம். இருபது நிமிடப் பயணம்.

தெரு தாண்டி நெடுஞ்சாலையில் சேர்ந்ததும், "மௌன விரதமா பாஸ்?" என்றாள்.

கீழுதட்டைக் கடித்தேன். "எத்தனையோ ஆசைகள் உலகில். மனிதனை சாத்தானாக்கக் கூடியவை மூன்று மட்டுமே தெரியுமா?" என்றேன்.

"காபி நல்லால்லியா பாஸ்?"

"பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை.. இந்த மூணும் தான் ஒரு மனிதனை சாத்தானுக்கு அண்மையாக்குது"

"கவலை விட்டது.. எனக்குப் பெண்ணாசையே கிடையாது" என்ற ஜீனா, என்னை ஒரு கணம் கவனித்து, "யு ஆஆஆர் சீரியஸ்" என்றாள். பிறகு, "காலங்காலைல எதுக்கு இந்த பிலாசபி?"

"நெவர் மைன்ட்" என்று அடங்கினேன்.

முதல் நாள் கண்டுபிடித்த விவரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னேன். ஜீனா திடுக்கிட்டதை மறைக்க முயன்றது புரிந்தது.

அதற்குப் பிறகு வழியில் நாங்கள் பேசவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் ஜீனா என் வலது தோளைத் தொட்டு, "சாத்தானுக்கு அடிவருடுவதும் நாம எடுக்குற முடிவு தானே பாஸ்?" என்றாள். என் மனதில் ரோர்ஷேக் படிமங்கள் போல் எண்ணங்கள் வந்து போயின.

    பொன்னேசனை அவருடைய வீட்டு அலுவலக அறையில் சந்தித்தோம். எளிய மேசை நாற்காலி. சுவரில் இரண்டு கடவுள் படங்கள். ஒரு குடும்பப் படம். ஓரமாக ஒரு பூந்தொட்டி. ஜரிகையுரை திண்டுக்களுடன் இரண்டு லெதர் சோபாக்கள். என் அத்லெடிக் கட் அர்மானி சூட், அந்த இடத்துக்குப் பொருந்தவில்லை. ஜீனா கிளிப்பச்சையில் முழங்கால் மறைக்கும் ஸ்கர்ட்டும், மெல்லிய வெள்ளைப் பனியன் மேல் கறுப்பில் அரைக்கை வலைச்சட்டையும் அணிந்திருந்தாள். எந்த இடத்துக்கும் அவளுடைய உடை பொருந்துவதை எண்ணி வியந்தேன். எங்களை ஒன்பது நிமிடங்கள் காக்க வைத்து உள்ளே வந்தார் பொன்னேசன். நீல ஜீன்ஸ் பேன்ட், இந்தியப் பட்டுக் குர்தா. கால் நகம் தெரியும் தோல் செருப்பு. நான் இந்தச் சந்திப்புக்கேற்ற உடை அணியாதது உறுத்தியது. வெறும் உடையலங்காரம் தான்.. இருந்தாலும் தொடக்கமே சரியாக அமையாதது போல் உணர்ந்தேன்.

அவருக்கென தனி நாற்காலி இருந்தும், பொன்னேசன் சற்றும் கூச்சப்படாமல் ஜீனாவின் அருகே நெருக்கமாக அதே சோபாவில் அமர்ந்தார். உடனே விலகாமல், மெள்ள இடம் கொடுப்பது போல் ஜீனா சாமர்த்தியமாக நகர்ந்ததை பொன்னேசன் ரசித்தது அப்பட்டமாகத் தெரிந்தது. "என்ன சாப்பிடுறே ஜீனா?" என்று அவளை மட்டும் கேட்டார். அவள் தோளைக் குலுக்க, என்னைப் பார்த்தார். "யூ?"

நான் தயங்க, உடனே மனைவியை அழைத்தார். "எல்லாருக்கும் ஜூஸ் கொண்டா நிர்மலா" என்றார். சிஇஓ.. அத்தனை வசதியான வீடு.. பெண்டாட்டியை விருந்தோம்பல் வேலை வாங்கியது, சற்றுச் சங்கடமாக இருந்தது. நிர்மலா எங்களுக்கு அன்னாசி ஜூஸ், வறுவல் என்று ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தார். உற்சாகம் வடிந்த முகம். அவர் கண்களில் இருந்தது பயமா, ஆயாசமா புரியவில்லை.

பேசத் தொடங்கிய என்னை "பொறுங்க" என்றுத் தடுத்த பொன்னேசன், மனைவியிடம் "நிர்மலா.. நாங்க பிசியா இருப்போம்.. தொந்தரவு செய்யாதே தெரியுதா?" என்றார். ஏன் சொன்னார் என்பது புரியவில்லை, ஆனால் நிர்மலா சத்தியமாகத் தொந்தரவு செய்யப் போவதில்லை என்பது எங்களுக்கு புரிந்தது. தலையசைத்த நிர்மலா அவசரமாக விலகியதும், "ஓகே, என்ன செடில்மென்ட் ப்ளான்?" என்றார் பொன்னேசன்.

    ஜீனா ஒரு கோப்பை அவரிடம் கொடுத்து விவரிக்கத் தொடங்கினாள். "இரண்டு ப்ரொபோசல் கொடுத்திருக்கிறோம் மிஸ்டர் பொன்னேசன். முதலாவது, கோர்ட் கேஸ் என்று போகாமல் பேச்சுவார்த்தையில் முடித்துக் கொள்ளும் சாத்தியம். இரண்டாவது, பேச்சு வார்த்தை முறிந்து வழக்கு போடும் சாத்தியத்தையொட்டி தயாரிக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில் முடிவதானால் நூறு மிலியனும், வழக்கு போடுவதானால் இருநூறு மிலியனும் நஷ்டஈடு கோரிக்கையாகக் கணித்திருக்கிறோம். இதில் 85% வரை ஏற்றுக் கொள்ளலாம் என்பதும் எழுபத்தைந்துக்குக் குறைவாக ஏற்க வேண்டாம் என்பதும் எங்கள் பரிந்துரை. இடைப்பட்ட பத்து சதவிகிதத்தில் எத்தனை தூரம் இழுத்துப் பிடிக்கலாம் என்பது உங்கள் விருப்பம்"

பொன்னேசன் தயங்கவேயில்லை. "இரண்டுமே எனக்குப் பிடிச்சிருக்கு" என்றபடி ஜீனாவின் மார்பிலிருந்து பார்வையை உயர்த்தி, அவள் முகத்தைப் பார்த்துப் பேசினார். பாலியல் மீறலின் மிகச் சாதாரணமான டெக்னிக் என்று மனதுள் குறித்துக் கொண்டேன். பொன்னேசன் தொடர்ந்தார். "நோ காம்ப்ரமைஸ். அவுட் ஆப் கோர்ட்னா நூறு, கோர்ட்னா இருநூறு. ஒட்டக் கறந்துடனும். ஒரு சென்ட் குறைஞ்சாலும் உங்க ஜட்டியை உருவிடுவேன்". மறுபடியும் மீறல். இவருக்கு வக்கிரக் கொச்சை இயற்கையாக வருகிறது.

அவர் பேச்சையும் பார்வையையும் பொருட்படுத்தாமல், "வழக்கு அணுகுமுறையைக் கீழே கொடுத்திருக்கிறோம் பாருங்கள்.." என்றாள் ஜீனா மிக அமைதியாக. "நூறோ இருநூறோ, செடில்மென்ட் மற்றும் வழக்குச் செலவுகள் போக, எங்கள் சம்பளம் இரண்டரை மிலியன். எல்லாவற்றையும் சிலிகான்கேட் தருவதால் உங்கள் செலவு எதுவுமில்லை. வழக்கு முடியும் வரை நாங்கள் தான் ட்ரஸ்டி. தோற்றால், வழக்குச் செலவுகளுக்கும் எங்கள் சம்பளத்துக்கும் நீங்கள் பொறுப்பு. அதனால் முதல் தவணையாக ஐந்து லட்சம் டாலர் ட்ரஸ்ட் கணக்கில் சேர்ப்பிக்க வேண்டும். நீங்கள் பணம் கட்டியவுடன் வழக்கு ஏற்பாடுகளைத் தொடங்குவோம்"

"ஐந்து லட்சம் இன்னைக்கு ட்ரேன்ஸ்பர் செய்யுறேன்.. அதுக்கு முன்னால இந்த அணுகுமுறை விவரங்கள்.."

ஜீனா அவரிடமிருந்து கோப்பைத் திரும்ப வாங்கினாள். உள்ளிருந்த ப்ரொபோசல் காகிதங்களைச் சுக்கலாகக் கிழித்துக் கோப்புக்குள்ளேயே போட்டு, என்னிடம் தந்தாள். நான் அதை என் ப்ரீபில் வைத்தபடி, அன்னாசி ஜூசை எடுத்து ஒரு மிடறு விழுங்கினேன். குரல் நனைந்ததும், "ஸ்டேன்டர்ட் ப்ரொசிஜர். இது யார் கையிலும் சிக்கக் கூடாது என்பதனால். இந்தக் கேஸ்ல நீங்க சொன்னது போல மூளையை உபயோகிச்சா போதும். இதையெல்லாம் யோசிச்சு எல்லா ஏற்பாடுகளையும் நீங்களே செஞ்சிருக்கீங்கனு எங்களுக்குப் புரியத் தாமதமானாலும், உங்களைப் பத்தி நல்லாப் புரிஞ்சுக்கிட்டோம்" என்றேன். என் உள்ளுணர்வை இவர் படிக்காமல் இருக்க வேண்டும்.

பொன்னேசன் பேசவில்லை.

தொடர்ந்தேன். "உங்க எம்ப்லாய்மென்ட் கான்ட்ரேக்ட் படி கம்பெனி லாபம், பெரிய கான்ட்ரேக்ட் வருமானம் - இவை ரெண்டு மட்டுமே உங்க நிர்வாக அளவைகள். நீங்க இரண்டிலும் அதிகமாகவே சாதிச்சிருக்கீங்க. கம்பெனி பங்கு விலை ஒரு இலக்காக இருந்தாலும், தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ, நீங்க உங்க கான்ட்ரேக்டில் அதை ஒரு அளவையாகச் சேர்க்கவில்லை. உங்க போர்டும் அதை அஞ்சு வருசமா மாற்றக்காணோம். இதை சாக்கா வச்சுக்கிட்டு நீங்க பங்கு உரிமைகளைக் குவிச்சுக்கிட்டீங்க. பங்குவிலை இலக்கைத் தொடாமல் இருக்கும் வரை உங்களுக்குக் கொண்டாட்டம். லாபம் உருவாக்குற சிஇஓவை உடனடியாக யாரும் வெளியேற்றப் போவதில்லை. அப்படி செஞ்சா நீங்கள் சட்டவிரோத வேலை நீக்கம்னு கேஸ் போட்டு மொத்தத்தையும் சுருட்டிக்குவீங்கனு பயம்.. யு வேர் இன் எ குட் ஸ்பாட் மிஸ்டர் பொன்னேசன்..

.. நாங்க விசாரிச்ச வரையில் உங்க போர்டு ஆபீசர்கள் அனில் மற்றும் சூரியை உங்களுக்கு முதலிலிருந்தே பிடிக்காது. அவர்களுக்கும் உங்களை பிடிக்காது. எனினும் கம்பெனி நஷ்டத்தில் இருந்ததால் உங்கள் திறமைக்காக உங்களை நியமித்தார்கள். நாளடைவில் உங்கள் தந்திரம் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. விரைவில் கன்ட்ரோலிங் இன்ட்ரஸ்ட் கிடைக்கும் அளவுக்குப் பங்குகளைச் சுருட்டிக் கொள்வீர்களோ என்று பயந்தார்கள். லாபமும் கேஷ் ரிசர்வுகளும் பிஇவும் மிகச் சாதகமாகக் கூடி வரும் வேளையில், வளர்ச்சி வருமானம் என்று பல காரணங்கள் காட்டி சிலிகான்கேட்டை விட நாலுமடங்கு பெரியதான பாட்னா சிஸ்டம்ஸ் கம்பெனியைக் கடன் கூட்டி வாங்கியது உங்க புத்திசாலித்தனம் போல் தெரிந்தாலும், உண்மையில் அது கம்பெனியின் பங்கு விலையைக் கட்டுப்படுத்த நீங்கள் செய்த தந்திரம் என்பது அனேகருக்குத் தெரிந்திருக்காது.. பாட்னா சிஸ்டம்சின் கடன் சுமை இருக்கையில் உங்களை தவறான வேலை நீக்கம் செய்து, நீங்கள் கேஸ் போட்டு உள்ளதையும் சுருட்டிக் கொண்டால், கம்பெனி நிதி நிலை தரைமட்டமாகி விடும் என்ற உண்மை நிலை புரிந்ததும் வயிற்றுக்கடுப்பு வந்துவிட்டது உங்கள் போர்டுக்கு, குறிப்பாக அனில், சூரி இருவருக்கும்..

.. அதனால் ஏற்கனவே பரவலாகத் தெரிந்த கள்ள உறவுப் புகையை நன்றாகத் தூண்டிவிட்டு அதைப் பயன்படுத்தி உங்களை எரிக்கப் பார்த்தார்கள்.. அதன் விளைவுதான் டேனிகாவின் செக்சுவல் ஹெரேஸ்மென்ட் வழக்கு இல்லையா?" கேள்வியைக் கேட்டு சட்டென்று பொன்னேசன் முகத்தைக் கவனித்தேன்.

"எக்சலன்ட்" என்றார் பொன்னேசன். "ஆனால் இங்கே ஹெரேஸ்மென்ட் எதுவும் இல்லை என்பது டேனிகாவுக்கு நல்லாத் தெரியும்.. அவளா என் கூடப் படுத்தப் பிறகு எப்படி ஹெரேஸ்மென்ட் ஆகும்?" என்று ஜீனாவைப் பார்த்தார். "ஜீனா.. நீ அன்னிக்கு சொன்னது புரியுது.. பிலீவ் மி.. ஐ லவ் விமன்.. பெண்களை மதிப்பவன்.. ஒரு வற்புறுத்தலோ அத்துமீறலோ கிடையாது.. நான் மென்மையானவன்.. என்னைப் பற்றித் தெரிந்தால் உனக்கு இது புரியும்.."

திடீரென்று பொன்னேசன் தலையில் ஜீனா சம்மடியால் ரத்தம் பீறிடத் திரும்பத் திரும்ப அடித்தாள் - என் கற்பனையில். பொன்னேசன் தொடர்ந்தார். ".. அதனால டேனிகா பணத்துக்கு ஆசைப்பட்டு எனக்கெதிரா திரும்பிட்டா.. பட் ஐ டோன்ட் ப்லேம் ஹர்.. இப்பவும் அவள் மேல் எனக்கு மதிப்பு உண்டு.. அவளை நான் விரும்பித்தான் பழகினேன்.. தெர் வாஸ் எவர் நோ ஹெரேஸ்மென்ட்.. என் மனைவியை எப்படி நேசிக்கிறேனோ அதே போல்.."

நான் திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன். என்ன சொல்கிறார் இந்த ஆள்?

"வெல்.. உண்மையைத் தான் சொல்றேன்.. நானொரு பொம்பளை பொறுக்கி.. எ பிலேன்டரர், ப்ரம் யுவர் பெர்ஸ்பெக்டிவ்.. இதையே கைல சங்கு சக்கரம் வச்சுக்கிட்டு பல பெண்களோட சல்லாபிச்சா என் ஸ்டேடசே வேறே இல்லையா? நான் இப்படிப்பட்டவன் என்பது எனக்கு நல்லா தெரியும்.. நிர்மலாவுக்கும் தெரியும்.. பட் ஐ டைக்ரஸ்.. வழக்குக்கு வருவோம்.. ஜீனா என்னைத் தப்பா புரிஞ்சுக்ககூடாதுனு சொன்னேன்.. ப்ரோசீட்.."

என்ன உளறுகிறார்? சில நொடிகள் பிடித்தது எனக்குப் பேச்சு திரும்ப. "உங்க அந்தரங்கம் கேசுக்கு சம்பந்தமில்லே.. அதனால அதைப் பத்திப் பேச வேண்டாம் மிஸ்டர் பொன்னேசன். இந்தக் கேசை ராங்க்புல் டெர்மினேசனா மாத்துறது தான் எங்கள் அணுகுமுறையின் முக்கிய தந்திரம். அதுக்கு டேனிகா தன் கேசை வாபஸ் வாங்குறதோடு, தான் சொன்னதைத் அவங்களுக்கு எதிரா திருப்பணும்.. ஜீனா ஏற்கனவே டேனிகாவைப் பார்த்துப் பேசி ஒப்பந்தம் செய்து விட்டாள்.. ஒரு மிலியன் ரொக்கமும், ஐந்து வருடங்களுக்கு மாதம் பத்தாயிரம் டாலர் உதவிப்பணமும், டேனிகா பிள்ளை கல்லூரி நிதிக்காக கால் மிலியன் டாலரும் நிழல் செடில்மென்டாகக் கொடுத்தால் கேசை வாபஸ் வாங்குவதோடு, 'லட்சம் டாலர் லஞ்சம் கொடுத்து உங்கள் மீது பழி சுமத்தச் சொல்லி வற்புறுத்தியதாகவும் இல்லாவிட்டால் வேலையை விட்டு நீக்குவதாக பயமுறித்தியதாகவும்' அனில்-சூரி மேல் புகார் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்.. இது உங்களுக்குச் சம்மதமானால் ஒப்பந்தம் தயார் செய்கிறோம். இந்த ஒப்பந்தமோ பணம் கைமாறியதோ உங்கள் இருவரையும் எங்களையும் தவிர யாருக்கும் தெரியாது..

.. உங்க மனைவி உங்களுக்காக உதவியதும் யாருக்கும் தெரியாது. அவங்க டேனிகாவைப் பார்த்து கேசை வாபஸ் வாங்கச் சொல்லி உங்க சார்புல ஏதாவது செடில்மென்ட் செய்யமுடியுமானு தொடர்ந்து கேட்டு வந்தது எங்களுக்கு உதவியாக இருந்தது.." என்றபடி பொன்னேசனின் முகத்தைப் பார்த்தேன். புன்னகை. ராஸ்கல். தொடர்ந்தேன். "பாலியல் மீறல் புகாரை டேனிகா வாபஸ் வாங்கியதும் உங்கள் பெயரில் தவறே இல்லையென்றாகிவிடும்.. புகார் தொலைந்தால் உங்களை வேலை நீக்கம் செய்தக் காரணமே செல்லாதாகிவிடும்.. உடனே சட்டவிரோத வேலை நீக்கம் பற்றி சிலிகான்கேட் மீதும் போர்ட் மீதும் வழக்கு போடுவோம்.. அனில், சூரி மீது தனியாக மான நஷ்ட வழக்கு.. திறமைசாலி சாதனையாளர் சிஇஓ ஒருவர் மீது அபாண்டமாகப் பாலியல் பழி சுமத்தி அவருடைய கேரீரையே நாசம் செய்ய முயன்றதாக அவர்களை கோர்ட்டில் நிறுத்தி கடைசி முடியையும் உருவிடலாம்.. நூறு இருநூறு எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை பொன்னேசன். சமரசமா அல்லது முழு வழக்கா என்பதே கேள்வி.. உங்கள் விருப்பம்.."

"சபாஷ்!" என்றார் பொன்னேசன். உற்சாகமும் வெற்றிச் சாத்தியத்தின் போதையும் அவருடைய தலைக்கேறியது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. இன்னும் கொஞ்சம்.

"உன்னை ரிடெய்னரில் வைத்தபோதே எனக்குத் தெரியும்.. நீ புத்திசாலி என்று.. நான் கோடு போட்டதை ரோடு போட்டுக் காமிச்சுட்டியே.. சபாஷ்.. என்னை நல்லாப் புரிந்த உன்னை மாதிரி ஒரு ஆளுதான் எனக்கு வேணும்.. அடுத்து ஒரு கம்பெனி வச்சிருக்கேன்.. அதுல நான் போர்டு சேர்மன்.. நான் வச்சது தான் சட்டம்.. கம்பெனி ஐபிஓ ஆவும்னு எல்லாரையும் நம்ப வச்சிட்டிருக்கான் என் சிஷ்யன் சிஇஓ.. அவனுக்கும் சேத்து வச்சிருக்கேன் ஆப்புத்திட்டம்.. நீதான் அதுக்கும் என்னுடைய நெகோசியேட்டர்.." பொன்னேசன் பலமாகச் சிரித்தார். "வெரி குட்.. உடனே செயல்படுத்து.. வீ ஆர் எ டீம்.."

"இல்லை சார். வீ ஆர் நாட் எ டீம். இந்த ப்ரொபோசலும் அணுகுமுறையும் உங்களிடம் தந்ததோடு என் வேலை முடிந்தது. உங்களிடம் இதுவரை வாங்கிய ரிடெய்னருக்கான வேலை. ஐ கேனாட் ரெப்ரசென்ட் யூ எனி லாங்கர் மிஸ்டர் பொன்னேசன்" என்றேன் நிதானமாக.

ஜீனாவின் முகத்தில் ஈயாடவில்லை. பொன்னேசன் முகத்தைப் பலவாறு சுருக்கினார். "என்ன சொல்றே? வை நௌ? அதிகம் பணம் வேணுமா? ஆர் யூ ப்லேக் மெயிலிங் மீ?"

"இல்ல சார். இந்த மீடிங் முடிஞ்சு நான் வெளியேறிய பிறகு என்னைப் பார்க்கக் கூட உங்களுக்கு வாய்ப்பிருக்காது.. ஐ'வ் நோ இன்ட்ரஸ்ட் இன் திஸ் கேஸ் எனிமோர்"

"பட் ஒய்?" என்றார் பொன்னேசன். ஜீனாவின் மனதிலும் அதே கேள்வி ஓடியதை அவள் முகம் சொல்லியது.

"உங்க நேர்மையைப் பத்தி இது நாள் வரை நான் கவலைப்படவில்லை. என் கண் முன்னே நீங்கள் ஒரு டாக்கெட். அவ்வளவு தான். ஆனால் இப்போ நீங்க நேர்மையற்றவர்னு தெரிஞ்சு போனதும் நீங்க.. யு ஆர் நாட் ஜஸ்ட் எ டாக்கெட் எனி மோர்.."

"என்ன சொல்றே?"

"உங்க மனைவி நிர்மலா, டேனிகாவிடம் பேரம் பேசி உங்களுக்கு உதவியதாகச் சொன்ன போது நீங்க புன்னகையோட இருந்தீங்க. தட் இஸ் வென் இட் ஹிட் மி. பாருங்க சார்.. உங்க மனைவி டேனிகாவை அடிக்கடிச் சந்தித்துப் பேசியதாக ஜீனா கண்டுபிடித்ததும் முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். வரம்பு மீறினாலும் கணவனுக்கு உதவ வேண்டுமென்று அவர் தியாகம் செய்வதாக.. ஆனால் ஏதோ பொறி தட்டி உங்க பழைய கேசைத் தேடிப் பார்த்தேன். இன்போசயன்ஸ் கேஸ். அங்கேயும் பெண் பித்து, பாலியல் புகார். வெளியுலகைப் பொறுத்தவரை சிலிகான்கேட் தந்த உங்க ரெண்டாவது சான்ஸையும் நீங்க பொம்பளை வெறி பிடிச்சுக் கெடுத்துக்கிட்டீங்கனு சொல்வாங்க.. பட் எனக்கு வித்தியாசமா தோணிச்சு, மிஸ்டர் பொன்னேசன்..

..உங்க கேஸ் விவரங்களை எடுத்துட்டு அந்தப் பெண்ணையும் சந்தித்துப் பேசினேன். என் போலீஸ் நண்பன் உதவியோடு மிரட்டினேன். உடனே விஷயத்தை எல்லாம் சொல்லிட்டாங்க. நீங்களும் உங்க மனைவியும் இதில் கூட்டு. உங்கள் பெண்பித்தை அவர் தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக்கிட்டார். நீங்க ஒரு பெண்ணுடன் பழக வேண்டியது. கொஞ்ச நாளில் அந்தப் பெண் கேஸ் போடுவதாக மிரட்ட வேண்டியது.. பிறகு செடில்மென்ட் என்று எல்லாவற்றையும் அமுக்கிவிடுவது.. அடுத்த டார்கெட்.. உங்க மோடிவ்களை இன்போசயன்ஸ் காரங்க கண்டுபிடிக்காதது உங்க லக்.. சுலபமா உங்களை உள்ளே தள்ளியிருக்கலாம்..

.. ஏன் இப்படி செய்யறீங்க, என்ன மோடிவ்னு ரொம்ப யோசிச்சேன்.. பேராசைக்கு மோடிவ் கிடையாதுனு சாக்ரேட்ஸ் காலத்துலந்து சொல்லிட்டிருக்குறது எத்தனை உண்மைனு இன்னைக்குப் புரிஞ்சுக்கிட்டேன். நீங்க உங்க மனைவி.. ரெண்டு பேருமே பேதலாஜிகலி க்ரீடி.. உங்களுக்கு இது ஒரு வியாதி போல.. திட்டம் போட்டு செய்யுறீங்க.. கல்லூரியில் ஒண்ணா படிச்ச காலத்துலந்து நீங்க ரெண்டு பேரும் சின்ன சின்ன திருட்டுக்கள் செய்து வந்திருக்கீங்க.. எல்லாத்தையும் விசாரிச்சேன். ஐ கேன் கோ இன்டு டீடெய்ல்ஸ்.."

பொன்னேசன் முகம் கறுத்திருந்தது.

தொடர்ந்தேன். "மிஸ்டர் பொன்னேசன்.. இது தெரிஞ்ச பிறகும் நான் உங்க கேசை எடுத்துக்கிட்டேன்னா அது என் தொழில் தர்மப்படி தப்பு. இருபத்து நாலு மாநிலத்துல பார் எக்சேம் எழுதி, நாயா உழைச்சு, கஷ்டப்பட்டு சேர்த்த பெயரும் போயிரும்.. மன்னிச்சுருங்க.."

"அப்படி என்னய்யா தப்பு செஞ்சுட்டேன்? புரூவ் பண்ண முடியுமா? அந்தப் பொண்ணு தான் ஹெரேஸ்மென்ட் புகார் கொடுத்தா.. இப்பவும் பொண்ணு தான் எம்பேர்ல புகார் கொடுத்து செடில்மென்டுக்கு ஒப்புக்குறாங்க.."

"எதையும் ப்ரூவ் பண்ணமுடியாது.. உண்மை தான். உங்க அணுகுமுறையில் ஒரு பிழையும் இல்லை.. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கீழ்த்தரமான செய்கையை மையமாக வைத்து உங்க குற்றங்கள் நடக்குறதால, கீழ்த்தரத்தின் பரபரப்பில் குற்றங்களின் விவரங்கள் யாருக்கும் தெரிவதில்லை. ஆனா இந்த முறை செடில் ஆனதும் யாருக்காவது சந்தேகம் ஏற்படலாம்.. அல்லது ஏதோவொரு விவகாரத்தில் நீங்க பிடிபடுவீங்க.. எல்லாக் குற்றவாளிக் கதைகளும் இப்படித்தான் முடியுது.. உண்மையைச் சொல்லணும்னா, என் சந்தேகங்கள் பொய்யாக இருக்கவேண்டுமே என்று விரும்பினேன்.."

"லுக்" என்று இதமாகச் சிரித்தார் பொன்னேசன். "லெட்ஸ் பர்கெட் இட்.. உன்னோட சம்பளத்தை ரெட்டிப்பாக்குறேன். அஞ்சு மிலியன்.. இந்த டயத்துல வேறே நெகோசியேடர் தேடிப் போயிட்டிருக்க முடியாது.. இதை முடிச்சுக் குடுத்துட்டுப் போ.. இல்லின்னா ஊர்ல நீ பிசினஸ் செய்யமாட்டே"

"மன்னிச்சிருங்க.."

"இந்த விஷயங்கள் வெளியில தெரிஞ்சா உன்னைக் கொன்னுருவேன்"

சிரித்தேன். "யு கெனாட் டச் மீ பொன்னேசன். கவலைப் படாதீங்க.. நான் ஒரு வக்கீல்ன்றதுனால இது ப்ரிவிலஜ்ட் இன்பர்மேசன். குட் பை" என்று எழுந்தேன். ஜீனாவுடன் வெளிவந்தேன்.

    நாங்கள் கெட்டால் ஸ்டார்பக்ஸ்.

என் வழக்கமான டோபியோவின் மணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். எதிரே ஜீனா புலம்பிக் கொண்டிருந்தாள். "என்ன பாஸ்.. கடைசி நிமிசத்துல இப்படிக் காலை வாரிட்டியே? தட் மேன் ஆபர்ட் பை மிலியன்.. அஞ்சு மிலியன்! அந்தாளு எந்த மாதிரிப் பொறுக்கியா இருந்தா என்ன பாஸ்.. பிழைக்கத் தெரியாதவரா இருக்கியே?"

"நாளைக்குக் கம்பி எண்ணவும் தயாரா இல்லே ஜீன். காலைல தத்துவம் சொன்னேனில்லே? மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை. இந்தாளு சாத்தானுக்கு அண்மையில்லே ஜீன். இந்தாளு சாத்தான். ஹி இஸ் எ டிஸ்ட்ரக்டிவ் போர்ஸ். சாதாரணமா தெருவுல போயிட்டிருக்குற ஒரு அப்பாவியைத் திடீர்னு ஒரு கார் இடிச்சு குத்துயிரா போட்டா எப்படி இருக்கும்? தட் இஸ் வாட் ஹி இஸ் டூயிங் டு கம்பெனிஸ். சபல ஊழல் பேர்வழிகளாகப் பார்த்து தன்னோட கீழ்த்தர ஆசையையும் தணிச்சுக்குறான்.. இடையில, சாதாரணமா இயங்கிக்கிட்டிருந்த லட்சக்கணக்கான பேருக்கு சம்பளம் கிடைக்க வழியாயிருந்த அப்பாவிக் கம்பெனி நாசமாகுது.. இன்போசயன்ஸ் காரங்களால சமாளிக்க முடிஞ்சது.. சிலிகான்கேட் காரங்களால முடியுமா சந்தேகம் தான்.. இதுக்கு அடுத்து என்ன கேட்டோ நெட்டோ யார் கண்டது! அப்படியே சமாளிச்சாலும் கம்பெனிக்கு உண்டான அவப்பெயர் மற்றும் பொருள் நஷ்டம் என்னிக்கும் மாறாதே? சிலிகான்கேட் கம்பெனியில வேலை பார்க்குறவங்களுக்கு எப்படி இருக்கும்னு உன்னால கற்பனை செய்ய முடியுதா? 'உன் மேலே கை வச்சானா உன் சிஇஓ?'னு ஒரு கணவனோ அப்பாவோ சந்தேகத்தோட கேட்க மாட்டாங்கனு, பார்க்க மாட்டாங்கனு, சொல்ல முடியுமா உன்னால?"

"கூல் இட் பாஸ்.. என் டயலாக் அது"

சிறிது நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் வெறித்துப் பார்த்தோம்.

"என்ன யோசிக்கிறே ஜீன்?" என்றேன்.

"உன்னை விட்டு அந்தாளோட போய் சேந்துரலாம்னு தோணுது. செக்சுக்கு செக்ஸ். செடில்மென்டுக்கு செடில்மென்ட். பிசினஸ் க்ளாஸ்ல நெக்கியடிக்காம ப்ரைவெட் ப்லேன்ல வெகேசன் போகலாம். உன்னை மாதிரி கொள்கை குடமிளகாய்னு இருந்தா செலவுக்கு என்ன செய்ய பாஸ்?"

"தாராளமா போ ஜீனா"

"அப்புறம் காலைலயும் பகல்லயும் சாப்பிடாம கிடந்து வேலை செய்யுறியோனு வருத்தமா இருக்குமே..?" சிணுங்கினாள். "போவுது போ! பிசினஸ் க்ளாஸ்னு என் தலையில எழுதியிருக்குது.."

சிரித்தேன். "தேங்க்ஸ் ஜீன். நீயில்லாமல் நான் ரொம்ப சிரமப்படுவேன்"

"என்ன செய்யப் போறே? எப்பிஐ எஸ்இசில சொல்லேன்?"

"நோ. அடர்னி-க்லையன்ட் சமாசாரம். என் தொழிலே போயிரும். உனக்குத் தெரியாதா?"

"அப்ப ஆர் யு கொனா லெட் ஹிம் ப்ரீ?"

நான் பதில் சொல்லாமல் எழுந்தேன். "ரொம்ப டயர்ட் ஜீனா. நாளைக்குப் பார்ப்போம்" என்று கிளம்பினேன். ஜீனா காரில் ஏறி மறையும் வரை என் காரில் உட்கார்ந்திருந்தேன். பிறகு என் ஐபோனை எடுத்து ஒரு எண்ணைத் தேடித் தொட்டேன்.

மறுமுனையில் குரல் வரும் வரைக் காத்திருந்து, "டேய் துரை.. நாந்தான்.. பிஸியா?" என்றேன்.

"என்ன பிஸி? ஒரு புண்ணாக்கும் இல்லை. மூணாம் பேஜுக்கு ஒரு பில்லர் வேணும்னு ந்யூஸ் எடிடர் தொந்தரவு செஞ்சுட்டிருக்காரு.. செவ்வாய்க் கிரகத்துலந்து ஒரு வண்டி தன் வீட்டுத் தோட்டத்துல இறங்கினதா ஒரு அம்மா சத்தியம் செய்யுறாங்க.. அதைப் பேட்டி எடுத்து இப்பத்தான் ந்யூஸ் கம்போஸ் செஞ்சுட்டிருக்கேன்.. என்ன விஷயம்?"

"என் தொழில்லந்து ஒரு கதைக்கான விஷயம் சொல்லுனு என்னை அடிக்கடி கேப்பியே..?"

[முற்றும்]



காதல் கடிதம் எழுதுங்கள்


35 கருத்துகள்:

  1. ஜீனா கற்பனையில், பொன்னேசன் தலையில் சம்மடியால் ரத்தம் பீறிடத் அடித்ததை பாஸ் செய்து விட்டார்... நல்ல முடிவு...!

    பதிலளிநீக்கு

  2. பொன்னேசன் மனைவி நிர்மலா உடந்தையா...?முதலில் அநியாயம் இழைக்கப் பட்டவள் போல் காட்டி அவளும் உடந்தை என்று.... அப்போ இது cat இல்லையா...?

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. Very good thriller. The climax is quite unexpected. Even your Jeena is not an exemption to this.

    பதிலளிநீக்கு
  5. நல்ல ட்விஸ்ட்.
    /
    /ஜீனா என் வலது தோளைத் தொட்டு..// Noted.
    /
    /இதையே சங்கு சக்கரம் கையில வச்சுகிட்டு...// தூண்டில். பின்னூட்டத் தூண்டில்!

    பதிலளிநீக்கு

  6. At least தீவினைக்குத் துணை நிற்கக் கூடாது என்பது புரிந்ததே.

    பதிலளிநீக்கு
  7. பதிவில் ஆங்காங்கே நவீன சிலேடைகள் தென்படுகிறதே ஹா ஹா ஹா
    //இந்தாளு சாத்தான். // சமீபத்துல கடல் படம் பார்த்தீங்களா :-)
    அப்பா ஒரு அப்பவியப் புடிச்சி ஒரு அப்-பாவியோட கதைய எழுதிடீங்க ...:-)
    ரொம்ப சுவாரசியமான கதை...

    பதிலளிநீக்கு
  8. ம்... பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்-னு சொல்லுவாங்களே அதுவோ?!
    கடைசியில் பொன்னேசன் டவுசர பப்ளிக்கா உருவரதா முடிச்சிட்டீங்க - என்ன துரைதான் மறக்காம - உண்மைச் சம்பவம் - பெயர்கள் மாற்றப்பட்டுன்னு போடனும்!

    எனக்கு ஒரே ஒரு டவுட்டு - கதையில் எல்லோரும் (நெம்ப) விவராம இருக்காங்க - யாருங்க அப்பாவி?

    பதிலளிநீக்கு
  9. தொடர்ந்து படித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    @GMB: ரொம்ப ஆழ்ந்து படிச்சிருக்கீங்க போல.. நன்றி. எப்பவும் போல பொழுது போகாம நான் எழுதுற சமாசாரம் தான். no messiah, no message :)

    @சீனு: சாத்தான் என்பது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சொல் - வீரமாமுனிவர் அல்லது தோமை (st. thomas) காலத்துச் சொல். இதை ஒரு மூன்றாந்தரப் படத்திலந்து நாம தெரிஞ்சுக்கணும்னா - என்னே கேனைத் தமிழனுக்கு வந்தச் சோதனை!

    @அரசூரான்: அப்பாவி இந்தக் கதையில சிலிகான்கேட் கம்பெனி. என்ரான், சியர்ஸ், Aன்டர்சன், எம்சிஐ, இப்படி எத்தனையோ நிஜ அப்பாவிகள் போல கற்பனை சிலிகான்கேட்டும் ஒண்ணு. இது உண்மைச் சம்பவம் எல்லாம் இல்லிங்க. கற்பனைக் கதை. any resemblance whatsoever to any real life incident whatsoever is purely coincidental, inferential and speculative. (யப்பாடி!)

    @கவிநயா: நினைவூட்டியதற்கு நன்றி. அல்சைமர் டெஸ்ட் எடுக்கப் போறேன் :)

    @ஸ்ரீராம்: விஷமக்கார ஸ்ரீராம்.




    பதிலளிநீக்கு
  10. இன்று காலை மணி 8 முதல் இப்ப மணி மாலை 5.32 வரை அப்பப்ப திரும்பத் திரும்ப‌
    மறுபடியும், மறுபடியும், இன்னும் ஒரு தரம், அந்தப் பாரா மட்டும், இல்ல அந்த வரி மட்டும்,
    கடைசியா அந்த வரி மட்டும், வார்த்தை மட்டும்,

    அப்படின்னு படிச்சு முடிச்சேன். சேன் என்று சொல்வதிற்கில்லை. பேன் என்று சொல்லும்படியாகவும்
    இருக்கிறது உங்கள் கதையின் ஓட்டம். இல்லை. கதை சொல்லும் நடையின் ஓட்டம். திருப்தி என்பதற்கும் ஒரு படி அல்ல , பதினெட்டு படிகள் அளவுக்கு உசரம். மறுக்கவோ, மறைக்கவோ, அல்லது மறக்கவோ முடியாது.

    இருப்பினும், சொல்லும் சட்டத்தொழிலுக்கென்று ஒரு நியாயம், தர்மம் என்று நீங்கள் சொல்வதில் சில ஓட்டைகள் இருக்கின்றனவோ என்ற சம்சயம் ஏற்படுகிறது. இது சம்சயமே. ஏனெனின், ஊருக்குச் சென்று என்னுடைய சீனியர்
    அவரிடம் நீங்கள் சொல்லும் சிலவற்றை கேட்டு பூரணத்வம் பெறவேண்டும்.

    அதனால், தொடர்ந்து.. சொல்வது தார்மீகமா என்று அல்லது தொழில் தர்மம் என்று சொல்கிறீர்களே
    அதன்படி சரியா என சரிவரத் தெரியவில்லை.
    contd. subbu thatha.

    பதிலளிநீக்கு
  11. இருந்தாலும், யுதிஷ்டரர் மாதிரி உண்மையைச் சொல்லுகையிலே அதிலே ஒரு வார்த்தையை அடக்கி இல்லன்னை
    ஸ்ருதி குறைச்சலா சொல்லுதலும் அல்லது பல சபாஷ் கோஷங்களுக்கிடயே ஒடுங்க வைப்பதோ உகந்தது அல்ல‌
    என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான் இருக்கிறேனா என்றும் தெரியவில்லை. நான் ஒரு முந்திரிக்கொட்டை. அவசரக்குடுக்கை.

    சில வார்த்தைகள். கமென்டுகள் அல்ல. அப்சர்வேஷன்ஸ். ஒபிடர் டிக்டா வகையைச் சார்ந்தவை.

    ஒரு குற்றவாளி, அதுவும் கிரிமினல் க்ரானிக் குற்றவாளி கானடெம்பொரரரி. சமூகத்தினால் இனம் கண்டுபிடிக்க இயலாத குற்றவாளி,
    அவனுடைய எம்.ஓ. வை ( மோடஸ் ஆஃப் ஆபரேஷன்) என்னவென ஒரு போலீஸ் டிடெக்டிவ் அல்லது வக்கீல்
    கண்டுபிடித்துவிட்டார்.

    அவன் யார் என்பதை புரிந்துகொண்டு விட்டார். அவன் செய்தது குற்றம். அவனை இந்தக்கேஸ் லே இருந்து
    தப்புவிக்கலாம். அதற்கான அப்ரோச்சையும் ஆல்டர்னேட்ஸையும் ஆல்ரெடி அவன் கைகளிலே கொடுத்து
    அதற்கான தக்ஷிணையையும் பெற்றுவிட்டார். இருந்தாலும், அந்த வாத்யாருக்கு மனச்சாட்சி ( அனாவசியமாக)
    உரைக்கிறது.உறுத்துகிறது. இவனை இந்த க்ஷணம் தப்பித்துவைப்பதில் தான் அனுகூலம் செய்தால், பிறகும் இதே மாதிரி
    துர்க்கார்யங்களிவன் பல தொடர்ந்து செய்வானே அதனால் தன் பெயர் கெட்டுப்போகுமே என்று .அப்பா சாமி, ஆளை விடுடா என்று அம்பேல் ஆகிறார் என்கிறது " கதை ". ( அது எப்படி என யோசிக்கிறேன்.
    அது போல் ஆகும் என்றால் இந்தியாவில் கிட்டத்தட்ட பாதி கிரிமினல் வக்கீல்கள் ஆத்தில் உட்கார்ந்து கொண்டு
    அம்மாவாசை தர்ப்பணம் செய்ய ஆள் தேடிக்கொண்டு இருக்கணும். இல்லைன்னா ஒரு ஜீனா வுக்கு ஆர்.எம் ஆ
    இருக்கலாம்)

    ஒரு குற்றவாளிக்காக அவன் குற்றவாளி தான் என மனம், அல்லது மனச்சாட்சி சொன்னாலும், ஒரு கோர்ட்டில் வாதாடுவது, அவனே எத்துணை சட்ட கில்லாடியாக இருந்தாலும், சட்ட தர்மப்படி குற்றமல்ல. யாருமே வாதாட‌
    தயாரில்லை என்னும்பொழுது, கோர்ட்டே ஒருவரை நியமிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த டெலிபரேட்
    குற்றவாளி தரப்பில் வாதாடும் நபருக்கு, சமூகத்தில் பெயர் கெட்டுவிடுமா என்ன? இல்லை, அவனைச் சார்ந்த
    நபர்களுக்குத் தான் பெயர் கெட்டுவிடுமா ? தட் இஸ் பார்ட் ஆஃப் த ப்ரொஃபஷன்.

    இந்த லாஜிக்கில் பார்த்தால், ஒரு குடிகாரனுக்கு டாக்டர் புத்தி சொல்லியும் கேட்கவில்லை. குடிக்கிறான். லீவர்
    கெட்டுப்போகிறது. நான் சொல்லியும் நீ குடிக்கிறாய். நான் உனக்கு வைத்தியம் பார்க்க மாட்டேன் என்றா சொல்கிறார் ? உனக்கு நான் வைத்தியம் செய்தால் எனது பெயர் கெட்டுவிடும் என்றா சொல்கிறார் ?

    பாவ மன்னிப்பு தரும் பாதிரிமார்கள், தாம் பாவ மன்னிப்பு தந்தபிறகும் அதே குற்றத்தை திரும்பத் திரும்ப செய்கிறானே என்ற வருத்தத்தில் உனக்கு இனி பாவ மன்னிப்பே தர இயலாது, எக்ஸ்யூஸ் மி என்றா சொல்கிறார்கள்?

    இன்னொரு விஷயம்.

    ஒரு கம்பெனி உருக்குலைந்து போகிறது. ஏதோ அதில் டாப்பில் இருக்கும் சிலர் டாப்லெஸ்ஸாக இருந்ததால்.
    என்று வைத்துக்கொள்வோம். அதில் இருக்கும் ஊழியர்களுக்கு எப்படி பேர் கெட்டுப்போகும்? ஊதியம் வேணா கிடைக்காது. அடுத்த வேலை கிடைக்கவரைக்கும் அமெரிக்காவாக இருந்தால், சோஷல் செக்யூரிடி கூட இருக்கிறதே. சத்யம் கம்பெனி டாப் ஒண்ணு தன் கம்பெனியில் இல்லாத லாபத்தை இருப்பதாகச் சொல்லி இன்னிக்கும் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார இல்லையா என்று தெரியவில்லை. சத்யத்தில் வேலை செய்தவர்களுக்கு அதனால் என்ன ?

    ஒரு அதர்மத்துக்குத் துணை போவது ஒன்று. அதர்மத்துக்கு, அதர்மம் என்று தெரியாமல் ஊழியம் செய்வது
    ஒன்று. நீங்க சொல்வது சார் கதையிலே நான் என்று சொல்பவர் சொல் படி பார்த்தால், கும்பகர்ணன் ராவணனுக்கு
    எத்தனை எடுத்துச் சொல்லியும் ஒத்துக்கொள்ளாத நேரத்தில், விபிஷணன் மாதிரி அம்பல் என்று போகாது, அஞ்சேல் என்று வந்தானே, அது அல்லவோ ராஜ தர்மம். !

    இன்னும் நிறைய பாயின்ட் இருக்கு. இஸ்யு பை இஸ்யூ வி வில் டிசைட் இன் ட்யூ கோர்ஸ்.
    கேஸ் இஸ் போஸ்ட்போன்டு சைனி டைய்.


    சுப்பு தாத்தா.

    to be contd.





    பதிலளிநீக்கு
  12. சம்பந்தியும் சம்பந்தியும் போட்ட சண்டைலே முக்கியமான சாலிட் பாயின்டை மறந்துபோயிட்டேன்.

    அது என்ன யாருக்கு அல்சைமர் ?
    அல்சைமர் வந்தது அப்படின்னா ஆல் சைபராயிடும்.

    அப்பவே நினைச்சேன்.

    அந்த கீனாவைப்போய் பெஞ்சிலே உட்கார்த்தி வச்சுட்டாரே. ...


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  13. கதையை ரசித்ததற்கும் பாராட்டுக்கும் மிக நன்றி சூரி சார்.

    இங்கே நடப்பது ஒழுக்கப் பிசகு - இதன் விளைவுகளை வைத்துத் தான் குற்றமா இல்லையா என்பது நிரூபிக்க முடியுமே தவிர prima facie இங்கே ஒரு மண்ணும் நடக்கவில்லை குற்றம் என்று சொல்வதற்கு. சட்டப்படி இங்கே யாரும் குற்றவாளியில்லை. குற்றம் நிரூபிக்கப் பட்டால் தான் சட்டப்படி குற்றவாளி. அதனால் உங்க வாதம் சட்டப்பிசகு என்று ஒட்டு மொத்தமாக நிராகரிக்கிறேன். ஆர்டர்! (நான் தான் ஜட்ஜு :)

    டாக்டர் ஒப்பீடு இங்கே பொருந்தவே பொருந்தாது. குணப்படுத்தமாட்டேன் என்று டாக்டர் சொல்வதும் கேஸ் எடுக்க மாட்டேன் என்று வக்கீல் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. வக்கீல் என்பவன் தன் கட்சிக்காரன் எபப்டிப்பட்டவன் என்ற judgment இல்லாதிருக்க வேண்டும். தன் கட்சிக்காரன் கெட்டவன் நல்லவன் என்ற judgmentல் சிக்கினால் ஒரு வக்கீலால் unbiasedஆக தன் கட்சிக்காரருக்கு உதவி செய்ய முடியாது. டாக்டர் சமாசாரம் அப்படியல்ல. நோயாளி, தீவிர நோயாளி, தன்னையும் பிறரையும் அவஸ்தைப்படுத்தும் கேடு கெட்ட நோயாளி.. you get the point.. இப்படி judge செய்தால் தான் மருத்துவரால் சிறப்பாகப் பணியாற்றமுடியும். டாக்டருக்கு judgmental behavior அவசியமாகிறாது. வக்கீலுக்கு அது கெடுதல். so, இந்த வாதத்தையும் நிராகரிக்கிறேன் :)

    அடுத்த கேஸ்?

    தர்மம்.

    ஓகே. விபீஷணன் செஞ்சது துரோகமும் இலை, கும்பகர்ணன் செஞ்சது தர்மமும் இல்லை. உண்மையிலேயே தர்மம் செய்யக் கூடியவங்கன்னா ராவணன் சீதையைக் கடத்திக்கிட்டு வந்தபோது அதை சரிப்படுத்தியிருக்கணும். அது தான் குலதர்மம், ராஜதர்மம், லோகதர்மம், ஸ்த்ரீதர்மம், தார்மீகம் எல்லாம். இவர்களுக்கும் தர்மத்துக்கும் ரொம்பத் தூரம். உண்மையில் ராமாயணத்துல தர்மத்தை தர்மத்துக்காக பின்பற்றியது ராமன் மட்டுமே.

    இன்னொன்று, அதர்ம avoidanceம் தர்மம் தான். ராமனோட பக்கத்து வீட்டுல பாத்தீங்கன்னா தெரிஞ்சுரும். அதாங்க வ.கிருஷ்ணன் வீடு. கீதாம்மா வரட்டும், இதைப் பத்தி பேசலாம். அதுவரை கோர்ட் அட்ஜர்ன்ட்.

    இந்தக் கதை protagonistன் அவஸ்தை இது தான். யோக்கியனில்லை என்பதற்கும் அயோக்கியன் என்பதற்கும் இடைப்பட்ட வெளியில் தொழில் தர்மத்தை வளர்த்துக் கொண்ட இந்த நாயகன், தன் கட்சிக்காரன் யோக்கியனில்லை என்பதில் கவலைப்படுவதில்லை, ஆனால் அயோக்கியன் என்று தெரிந்ததும் தன் தொழில்தர்மப்படி விலகுகிறான். அயோக்கிய எல்லையில் புழங்க அவன் விரும்பவில்லை.

    பதிலளிநீக்கு


  14. ஆர்டர்.. நான் தான் ஜட்ஜ்.//

    சரி.. சரி... நீங்க தான் ஜட்ஜு. யார் இல்லைன்னு சொன்னா ?

    ஆனா ஜட்ஜுன்னா கோபம் வரக்கூடாது. வக்கீல் அப்படிங்கப்பட்டவன் ஏகத்துக்கு உளறுவான்.
    உளறி உளறியோ சைட் ட்ராக் பண்ரதுக்கு முயற்சி செய்வான்.

    அப்ப எல்லாம் ஜட்ஜாகப்பட்டவன் ஜடம் போல உட்கார்ந்துட்டு அமைதியா இருக்கணும்.

    அப்பப ஆனா யூ கன்ஃபைன் டு த பாயின்ட் அப்படின்னு சொல்லலாம்.

    நான் தான் துவக்கத்திலேயே சொல்லிவிட்டேனே... இது சட்ட தர்மத்திலே சில ஓட்டை இருக்கு அப்படின்னு
    எது எது ராஜ தர்மத்துக்கு பொருந்துமோ எது எது வைத்தியர் தர்மத்துக்கு ரைட்டோ அது வக்கீலுக்கு அப்ளை
    ஆகாது. ஏன் ஆகாது அப்படின்னா ஒரு ரிப்ளையும் கிடையாது. அம்புடுதான்.

    பீஷ்மர் தப்புன்னு தெரிஞ்சப்பறம் கூட சைட் எடுத்துண்டு சண்டை போட்டாரே ... அது ராஜ தருமம்.
    காசு வாங்கியாச்சுன்னா அவங்க ஸைட் பேசித்தான் ஆகணும். தோக்கறோம். ஜயிக்கறோம் அது கேசு வலுவைப்
    பொருத்த சமாசாரம்.

    இங்கே முதல் பாகத்துலே நான் பாத்துக்கரேன் அப்படின்னு ஒரு அஷ்யூரன்ஸ் இருக்கு.
    கடைசியிலே அம்போன்னு ஒரு கட்சிக்காரனை விட்டுட்டு போரது சரியா தோணல்ல.

    என்னா ? இந்த கேசை ஒரு விதமா ஒப்பேத்திட்டு,
    ஓய். !! அடுத்த மாதிரி இதே போல் எதுனாச்சும் செஞ்சீன்னா, நானே போட்டு கொடுத்துடுவேன் ஜாக்கிரதை
    அப்படின்னு இங்கிலீஷிலே மிரட்டலாம்.

    அடுத்து , இன்னொரு பாயின்ட்.

    போலீஸ் ஃப்ரன்டைக்கூட்டிண்டு போய் மிரட்டினேன். என்று இருக்கு.
    இது தெரிஞ்சா அந்த ஃப்ரன்ட்டோட பாஸ் சும்மாவா இருப்பாரு ?

    டஸ் ஹி ஹாவ் எனி சான்க்ஷன் டு டு வாட் ஹி டிட். ஈவன் கன்சீடிங் இட் இஸ் ஃபார் எ குட் காஸ்.

    வித்தௌட் எ லீகல் சாங்க்ஷன் , இதெல்லாம் என்ன எங்க ஊர்லே நடக்கற கட்ட பஞ்சாயத்தா என்ன ?

    ஹாவிங் செட் திஸ்,
    ஒன்னு மட்டும் சொல்லணும். இன்னி தேதிக்கு லீகல் கம்யூனிடி நீங்க சொல்ற எதிகல் விஷயம்
    எல்லாத்தையும் யோசிச்சு பார்ப்பாங்க அப்படின்னு ....

    கனவிலே கூட நினைச்சு பார்க்க முடியாது...

    இன்னிக்கு தேதிலே....காசேதான் கடவுளடா.

    அந்த கடவுளுக்கும் அதில் கொஞ்சம் பங்கு கொடடா. அவன் வாயை அடைடா.

    அப்படில்லே இருக்குது. ஸாரே... நீங்க கொஞ்சம் எங்க பக்கம் வாங்க...

    என்னோட கோர்ட்டுக்கு ஒரு அஞ்சு பத்து நாள் வாங்க... அப்பறம் என்னன்னு புரியும்.

    என்ன கோர்ட்டுக்கா ? அப்படின்னு நீங்க கேட்கறது தெரியறது.

    அது கிடக்கட்டும். சீனா என்ன ஆனா.. அதச் சொல்லுங்க..


    நெக்ஸ்ட் ஒரு அழகா காதல் கதை எழுதுங்களேன். வூட்டு கிழவிக்கு படிச்சு காட்டும்படியா...

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  15. //போலீஸ் ஃப்ரன்டைக்கூட்டிண்டு போய் மிரட்டினேன்.

    சரியாப் பிடிச்சிங்க.. எனக்கும் அந்த வரியில் திருப்தியே இல்லை.. எப்படியெல்லாமோ எழுதிப் புரட்டி சரியாக வராததால் அப்படியே விட்டேன். எடுத்திருக்க வேண்டும். தேவையில்லாத வரி.

    லீகல் கம்யூனிடினு இல்லை; மெடிகல் கம்யூனிடி, டீச்சிங்க் கம்யூனிடி.. எல்லா சமூகமும்.. எல்லாமே காசு தான்.

    அரசுத் தொழிலும் ஆசிரியத்தொழிலும் தர்மம் கடைபிடிக்கணும்னு சொல்வாங்க.. அரசுத் தொழிலில் தர்மவாடையே கிடையாது.. ஆசிரியத் தொழில்ல தர்மம் என்ன விலைனு கேக்கறாங்க.

    நீங்களே இப்படிக் கேட்டப்புறம் எழுதாம விடலாமா சார்.. படிக்கிறதுக்கு ஒருத்தர் கிடைக்குறப்ப எழுதிட வேண்டியது தான். நன்றி.

    பதிலளிநீக்கு
  16. பீஷ்மர் கடைபிடிச்சது ராஜ தர்மமா? எப்படிச் சொல்றீங்க சார்? பீஷ்மரின் குருக்ஷேத்திர நடத்தை செஞ்சோற்றுக் கடன்னு நினைக்கிறேன். பீஷ்மருக்குத் தர்ம சிந்தை இருந்தால் சூதாட்டம் நடந்திருக்குமா, துகிலுரி நடந்திருக்குமா?

    இந்தக் கதையிலயும் செஞ்சோற்றுக்கடன் தான். இதுவரை வாங்கின ரிடெயினருக்கு பணிந்து வெற்றிக்கான அணுகுமுறையைச் சொல்கிறான் நாயகன் - ஆனால் வெற்றியில் பங்கு வேண்டாம் என்று ஒதுங்கிவிடுகிறான் - காரணம், அது கறைபடிந்த வெற்றி. அதனால் தான் தொழில் தர்மம் பற்றிப் பேசுகிறான்.

    பதிலளிநீக்கு
  17. Sir, related to banking industry in India, there are so many stories. For example, pesons who got the credit facilities is rounding the city in a Honda City car without bothering about his repayment and the officer/s who sanctioned the loans, are enjoying their retired life in an easy chair. But the person who occupies the chair now in the ARD, is being squeezed like anything. To put it Sujatha words, his testicles are being squeezed. Sorry for using the unparliamentary word.

    பதிலளிநீக்கு
  18. //ஏதோ அதில் டாப்பில் இருக்கும் சிலர் டாப்லெஸ்ஸாக இருந்ததால்.
    என்று வைத்துக்கொள்வோம். அதில் இருக்கும் ஊழியர்களுக்கு எப்படி பேர் கெட்டுப்போகும்?

    உங்க பின்னூட்டங்கள் உண்மையிலேயே சுவாரசியம் தான் சூரி சார். உங்கள் கேள்வியும் சுவாரசியமானது.

    இந்தியாவின் நேருக் குடும்பம் ஒரு கடைந்தெடுத்த ஊழல் குடும்பம், இந்தியத் தலைநகரில் ஒரு பெண்ணை பஸ்ஸில் ஏற்றி ஊரைச் சுற்றிக் காட்டிக் கற்பழித்தார்கள், உலகத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக இன்றுவரைக் கருதப்படும் பூஜ்யம் என்ற எண்ணைத் தந்த பூமி, ஆந்திரா கவர்னர் (பொறுக்கியின் பெயர் கூட மறந்துவிட்டது) சிறுவயதுப் பெண்களுடன் அடித்த கூத்து, சாதாரணமான விளையாட்டில் ஊழல், பரம்பரை பரம்பரையாக ரத்தப் போர்க்கள வெறி பிடித்த வெள்ளையரை கத்தியின்றி ரத்தமின்றி ஆட்டுப்பால் வேர்க்கடலையால் அடித்து வீழ்த்திய ஒரு தலைவன் - இவை நமக்குப் பெயரைத் தருவனவா அல்லது கெடுப்பனவா?

    சாதாரண குடும்ப விஷயம் - "எதுக்கெடுத்தாலும் காட்டுத்தனமா கத்தி கூப்பாடு போட்டு அடிச்சு உதைக்கிற அப்பனுக்குப் பொறந்தவனா இத்தனை அமைதியா இருக்கான்?" - இதில் பிள்ளைக்குப் பெருமையா சிறுமையா?

    ஒரு முட்டாளின் கீழ் வேலைபார்க்கிறேன் என்று எத்தனை பேர் வருத்தப்படுகிறார்கள்!

    ஊர்ப்பணத்தை ஏமாற்றிய என்ரானில் வேலை பார்த்தவர்கள் அடுத்த கம்பெனியில் வேலை தேடும் பொழுது ரெஸ்யுமெவில் என்ரான் என்பதை விளக்கும் பொழுது கூனிக்குறுகுவதை நேரில் பார்த்திருக்கிறேன். என்ரானில் வேலை பார்த்தோம் என்ற அவமானம் சாகும் வரை அவர்களை விடப் போவதில்லை. traumatic. களங்கம் என்பது காற்றில் வந்து விழுந்து ஒட்டிக்கொள்ளும் கறையாகவும் இருக்கலாம்.

    குடும்பமோ சமூகமோ - ஒரு மோசமான தலைமை அதைச் சார்ந்த அத்தனை பேரின் பெயரையும் கெடுக்கிறது என்றே நம்புகிறேன். இதை உணராமல் தலைமைப் பொறுப்பு ஏற்பவர்கள் கொடியவர்கள்.

    பதிலளிநீக்கு
  19. எரிச்சலின் காரணம் புரியுது மோகன். பொறுப்புணர்ச்சி என்பது சுலபமானதே அல்ல. பொறுப்பாகத் தொடங்குவோரும் சூழலில் அடிபட்டு மாறிவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  20. // ஒரு முட்டாளின் கீழ் வேலைபார்க்கிறேன் என்று எத்தனை பேர் வருத்தப்படுகிறார்கள்! //

    முட்டாளின் கீழ் வேலை பார்க்கமாட்டேன் என்பதை ஒரு யார்ட் ஸ்டிக் ஆக வைத்துக்கொண்டால்
    எங்கள் சூழ் நிலையில், ஏதாவது வேலை பார்த்தால் தான் அடுத்த வேளைக்கு கஞ்சி கிடைக்கும் என்ற
    நிலையில் முக்கா வாசிப்பேர் பட்டினி கிடக்கவேண்டியது தான்.

    இன் இந்தியா, மை டியர் அப்பாதுரை ஸாரே.... ஈவன் டு டே, தேர் அப்பியர்ஸ் டு பி நோ சாய்ஸ் ட்ரிவன்
    ஜாப்ஸ்.

    முக்காவாசி பப்ளிக் செக்டார் நிறுவனங்களில் ப்ரொமோஷன் அன்ட் போஸ்டிங் போது எதுனாச்சும் ஒண்ணை
    காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

    அப்படி கிடைத்து போகின்ற இடங்களிலே எனக்கு பாஸுமே எல்லாம் விவரம் தெரிஞ்சவனா இருக்கணும் அப்படின்னு
    எதிர்பார்ப்பது எல்லாம் எங்க நாட்டிலே கிடையாது. இது தான் பப்ளிக் செக்டார் நிலவரம். மோஸ்ட் ஆஃப் த சிசுவேஷன்ஸ்லே அஞ்சு சின்ன கொக்கி இருக்கா அப்படின்னு பார்த்து கையெழுத்து போடற கேசு தான் இருக்கிறது.

    subbu thatha.

    (contd.)

    பதிலளிநீக்கு
  21. இன்னொன்னு சொல்லணும். முட்டாள் அப்படின்னா யாரு ? இந்தியன் ஸ்டான்டர்டு லே இந்தியன் கன்டிஷன்ஸ்லே
    பிரச்னை எதுவில்லாம, அன்னின்னிக்கு காரியத்த ஓட்டின்டு போரவன் தான் ஒரு ப்ராக்மாடிக் மிடில் லெவல் மேனேஜர்.
    இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு அடம் புடிச்சுண்டு இருந்தா சீட்டு கிழிஞ்சுடும், இல்ல்லாட்டி, கௌஹாத்திக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிடும். பசங்க படிப்பு என்னாறது...?

    உங்களோட பாக் க்ரௌன்டுக்கு நீங்க சொல்றது சரியாகத் தோன்றலாம். அமெரிக்க கலாசாரம் , இங்க இருக்கும்
    டெமொக்ராடிக் வால்யூஸ் வேற. இங்க பேஸ் லெவெல் ஆர் ஈவன் மிடில் லெவெல் இன்டெலெக்சுவல் ஹிபோக்ரிசீ கிடையாது என்றே நினைக்கிறேன். அங்கே, சில சமயங்களில், நாட் இன் ஆல் சிசுவேஷன்ஸ், முட்டாளுக்கு கீழே வேலை பார்க்கறதை ஒரு க்ரேட் ஆப்பர்சூனிடியாக கூட நினைக்கக்கூடும். நம்ம செய்யற தப்புகளை கவனிக்க‌
    ஒரு ஆற்றல் இல்லை அப்படின்னா அது ஒரு ஃபர்டைல் க்ரௌன்டு ஆக கருதப்படுகிறது.

    ஆல் செட், முட்டாள் என்பதற்கு நீங்கள் தரும் அல்லது கருதும் டிஃபனிஷன் தான் எல்லாவற்றிற்கும் பேஸ். அடிப்படை.

    நெக்ஸ்ட். அப்பா இப்படி. பையன் மட்டும் எப்படி ? இதெல்லாம் ஒரு பக்கம் பேசிக்க நல்லா இருக்கும். நீங்க சொல்ற மாதிரி ஒரு குடும்பத்தலைவரை வச்சுத்தான் அந்த குடும்பத்திலே வர அத்தனை பேரையும் எடை போடறது என்பது வ்யூட் ஃப்ரம் எனி ஆங்கிள் இஸ் அன்சௌன்டு லாஜிகலி அன்டு ஃபாக்சுவலி ஆல்சோ. ஒரு குறிப்பிட்ட
    குடும்பத்தை வச்சுகின்டு எல்லாமே அவங்க குடும்பத்திலே இப்படித்தான் அப்படின்னு சொல்றது சரியா...?

    பெருமையும் ஏனைச் சிறுமையும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்

    subbu thatha.
    (being contd.)

    பதிலளிநீக்கு
  22. அருமையான பாயின்டுகள் சுப்பு சார்.

    சரியா தவறா என்பது என் கேள்வியில்லை. சொல்கிறார்களா இல்லையா என்பது தான்.

    பதிலளிநீக்கு
  23. என்று சொன்ன நாட்டில் பிறந்திருக்கிறோம். தத்தம் அப்படிங்கற வார்த்தைய படிக்கவும் பத்து தடவை.
    நம்ம குடும்பம் எப்படி இருந்ததோ அப்படித்தான் நம்ம வும் இருப்போம் அப்படின்னா, நீங்க ஒரு ப்ரீ டிஸைடட்
    ஃபோர்ஸ் ஒண்ணு இருக்கு, அது எப்படி நம்மை கூட்டிப்போகிறதோ அப்படித்தான் போக முடியும் என்ற வாதத்திற்கு உங்களையும் அறியாமல் உங்களை இழுத்துச் சென்று இருக்கிறது.

    காந்தி வழி பிறந்தவர்கள் காந்தி போல் இல்லை என்பது சரியென்றால், கோட்சே வழி பிறந்தவர்களும் கோட்சே போல் இருக்கமாட்டார்கள். எவரி ஒன் சார்ட்ஸ் ஹிஸ் ஓன் கோர்ஸ் ஆஃப் ஆக்சன்.

    நம்ம செய்யற கருமம் தான் நம்மை இழுத்துச் செல்கிறது. நம்முடைய குடும்ப செல்வாக்கு உதவி செய்கிறது
    என்பது ஓரளவுக்கு உண்மை தான். மறுப்பதற்கில்லை. இருந்தாலும் அது தான் வாழ்க்கை முழுக்கா கவர்ன் பண்ரது அப்படிங்கற் சித்தாந்தத்தை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.

    நீங்க சொல்ற உதாரணங்கள் மோஸ்ட் இஃப் நாட் ஆல் அவுட் ஆஃப் கான்டக்ஸ்ட். குடிகாரன் பசங்க நல்லவனா எத்தனையோ குடும்பங்களை நான் கண்ணால பார்த்திருக்கேன். நல்ல தலைவர்களுடைய குடும்பங்களில் பிறந்தவங்க கெட்டுப்போறதையும் பார்த்திருக்கோம்.

    சொன்னா கோவிச்சுக்காதீக.. ஒரு குடும்பத்திலே ஒருவன் அப் நார்மலா, அப் ஸ்டார்ட் ஆ, இல்லை, கிரிமினல் ஆக இருந்தா மத்த எல்லாருக்குமே ஒரு ஸ்டிக்மா வந்துவிடும் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயார் இல்லை.
    சில சமயங்களில் சமூகத்திற்கு அந்த மாதிரி குடும்பங்களின் மேல் ஒரு சிம்பதி கூட இருக்கிறது.


    லாஸ்ட்லி, ஐ ஆம் ரெடி ஃபார் ஆன் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் வியூஸ் ஆன் த சப்ஜக்ட். பட் நாட் த்ரூ யுவர் ப்ளாக் விச் கான்ட் பி எ ப்ளாட்ஃபார்ம்.

    நீங்க எழுதியது கதை. கற்பனை. என்று நீங்களே ஒரு பின்னூட்டத்தில் சொல்லிவிட்டீர்கள். ஸோ, அந்த கதையில்
    வரும் கதா நாயகர்கள் செய்வதை ஜஸ்டிஃபை செய்யவேண்டிய கட்டாயம் உங்களுக்கும் இல்லை. எனக்கும் இல்லை. நான் சொன்னதெல்லாமே ஒரு லாஜிகல் இன்கன்ஸிஸ்டன்ஸி. அதையும் என்னுடைய நாட்டின் பின்புலத்தில் அதை சொன்னேன். உங்கள் நாட்டின் சம்பிரதாயங்கள் வேறாக இருக்கக்கூடும். அவை எனக்கு பரிச்சயமில்லை.

    கதை கதையாகவே இருக்கட்டும்.
    Honestly, it is not my intention to score an edge over you in any of your field of activity.Your views,I concede, so sacred to you, are your domain. And I have little freedom to find fault with it.
    I am aware of this gospel.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  24. 'தப்பு சரி' 'இப்படி நடக்கும் நடக்காது' எல்லாம், குடிகாரன் பிள்ளை அப்படித்தான் இருப்பான், காந்தி வழி வந்தவர்கள் காந்தி போலவோ கோட்சே போலவோ இருப்பார்கள் இருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், எப்படிச் சொல்வது.. JUDGMENT

    கோட்சே வழியே ஒரு காந்தி வந்தால் 'அட, இவனுக்கு இப்படி ஒரு பிள்ளையா?' என்றோ அயோக்கியப் பொறுக்கி வேலை பார்க்கும் கம்பெனியில் இருக்கும் உத்தமனை 'என்ன உங்க ceo இப்படி இருக்காரு?' என்றோ உலகம் சொல்வதோ கேட்பதோ வியப்பதோ வருந்துவதோ, எப்படிச் சொல்வது.. FACTS

    அப்படிச் சொல்லலாமா செய்யலாமா கூடாதா லாஜிகலா இல்லையா என்பது உங்கள் கேள்வி. அப்படி சொல்கிறார்கள் செய்கிறார்கள் என்பது என் கருத்து.

    நான் facts மட்டுமே பார்க்கிறேன், நீங்கள் judgment மட்டுமே பார்க்கிறீர்கள்.

    காட்சி பார்வையைப் பொறுத்தது. context புரிதலைப் பொருத்தது. judgment cannot define posture, nor posture can inhibit judgment.

    yet, begging a question does not produce answers. சரியா?

    கோபிக்க இதில் எதுவுமே இல்லை.

    பதிலளிநீக்கு
  25. முடிவு அபாரம். சுப்புத் தாத்தாவின் பின்னூட்டங்களும் தங்கள் பதில்களும் தனி ட்ராக்கில் --- இன்னும் அபாரம்.

    பதிலளிநீக்கு
  26. கேள்விகளும் பதில்களும்... பின்னூட்டங்கள் சூப்பர்...

    பதிலளிநீக்கு
  27. Mr.Appadurai,
    In one of your replies you have said that if Godse has got a son like Mahatma Gandhi, we will be surprised. But in fact - you put it in other way - Gandhi's first son was just opposite to him and I read a book on his first son and how Gandhi treated him and how he behaved rather misbehaved?? etc etc. I have got a copy of this book on the day it was published by the author and now it seems I have given to some one. If I get another copy by any chance, I will give it to you. Please go through it.

    பதிலளிநீக்கு
  28. That is true Mr.Mohan, i forgot about it. (We studied Gandhi's family history in high school:)

    I am not saying people will be surprised, or be casual, about it = what i said is that the public would comment about the injustice or shame of it, regardless of whether it is right or wrong, rational or not.

    My teacher would make statements such as police pulla thirudan, vadhyar pulla makku, gandhi pulla ghotse, and so on, when we discussed the lesson in our class.

    Even though such conflicts are natural, we express our feelings about it because our mind is conditioned to perceive or accept a certain course or flow.

    Even to this day, while reading about Gandhi's family one cannot suppress the feeling that violence was a progeny of ahimsa, even though it wasn't gandhi's fault or his son's choice. (Apparently, Gandhi himself demonstrated inconsistencies in his doctrines when it came to accepting muslims into his family).

    My point is that anomalies, particularly high profile, tend to trigger public reaction = regardless of whether the reaction is right or wrong.

    பதிலளிநீக்கு
  29. //Even though such conflicts are natural, we express our feelings about it because our mind is conditioned to perceive or accept a certain course or flow.//

    None could deny the innate veracity in this statement, as almost everyone of us, me included, operate unawares many times, from this mental plane, leading us to adjust ourselves , a sort of self conceived appropriate behaviour with a view to gain social acceptance.

    Having said that,

    I am left wondering or left bewildered as to whether a lawyer of fame and name as u have painstakingly portrayed could have or even if he were to have one, could exhibit such a mindset .

    Professionals seldom display in public what is usually perceived as inappropriate public behaviour. Even if one decides to back out, a more appropriate phrase could be, escape from the mire, one would have then thought of other options.

    Albeit I said this, I had occasions in my classes, when high level executives often thought an aggressive approach would earn them gain better acceptance.


    /...anomalies, particularly high profile, tend to trigger public reaction = regardless of whether the reaction is right or wrong. //

    Plato has a lot to say on this.

    subbu thatha.

    பதிலளிநீக்கு
  30. //இதையே கைல சங்கு சக்கரம் வச்சுக்கிட்டு பல பெண்களோட சல்லாபிச்சா என் ஸ்டேடசே வேறே இல்லையா? //


    ஹா,ஹா, இதுக்குத் தான் ஆளையே காணோம்னு தேடினீங்களா? பின்னூட்டங்களை எல்லாம் இன்னும் படிக்கலை. முதல்லே அதை எல்லாம் படிச்சுக்கறேன். :)))

    ஆனாலும் கதையின் முடிவில் ஏதோ நெருடல் இருக்கு. மறுபடியும் வரணும்.

    பதிலளிநீக்கு
  31. என்னமோ இன்னிக்கு திடீர்னு உங்க நெனப்பு! உங்க ப்ளாக்கை மேய ஆரமிச்சி ரொம்ப நேரம் கழிச்சி டைம் பாக்குறேன்.. கிட்டத்தட்ட மூணுமணி நேரத்துக்கு மேல ஆகியிருக்கு.. ராட்சசன் சாமீ நீங்க!

    ஞாபகம் இருக்கா? 2011 ஜனவரில நீங்க சென்னை வர்றப்போ சந்திக்கலாமான்னு மெயிலியிருந்தீங்க.. நானும் வர்றேன்னு சொல்லி உங்க லோக்கல் நம்பருக்குப் பேசி டைம்லாம் சொல்லி..

    ஆனா மிஸ்ஸாயிருச்சி.. அப்போ என் வாழ்க்கையிலேயே ரொம்ப கடினமான ஒரு காலகட்டத்துல இருந்தேன்.. ஹூம்... இறந்துபோன நினைவுகள்! அடுத்தவாட்டி வாரப்ப கண்டிப்பா சந்திக்கணும் சார்!

    பதிலளிநீக்கு
  32. குட்னஸ் ராஜாராமன்! மறந்தே போச்சுங்க. நினைவு வச்சு வந்ததுக்கு மிக்க நன்றி. அடுத்த ட்ரிப் விரைவில், அவசியம் சந்திப்போம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  33. /இதையே சங்கு சக்கரம் கையில வச்சுகிட்டு...// தூண்டில். பின்னூட்டத் தூண்டில்!//

    ஆஹா, ஶ்ரீராம் சரியாச் சொல்லிட்டாரே! :))))


    //யாருமே வாதாட‌ தயாரில்லை என்னும்பொழுது, கோர்ட்டே ஒருவரை நியமிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த டெலிபரேட்
    குற்றவாளி தரப்பில் வாதாடும் நபருக்கு, சமூகத்தில் பெயர் கெட்டுவிடுமா என்ன? இல்லை, அவனைச் சார்ந்த
    நபர்களுக்குத் தான் பெயர் கெட்டுவிடுமா ? தட் இஸ் பார்ட் ஆஃப் த ப்ரொஃபஷன்.//

    இந்தியாவின் நிலை இது. அமெரிக்காவில் தெரியலை. ஆனால் நியாயமான நேர்மையான பாதையில் செல்லும் பல வக்கீல்களும் கிரிமினல் குற்றவாளியாகத் தன் கட்சிக்காரர் அமைந்தால் அவர் மேல் குற்றம் சாட்டப்போதுமான சாட்சியம் இல்லை என்பதைத் தங்கள் வரை பூரணமாக உணர்ந்தால் ஒழிய அந்தக் கேஸை எடுக்கமாட்டார்கள் என்பது ஒரு காலத்தில் இங்கேயும் நடைமுறையில் இருந்து வந்திருக்கு. இப்போல்லாம் காசேதான் கடவுளடா! ராம்ஜெத்மலானி போல் யார் பணம் கொடுத்தாலும் வாதாடும் வக்கீல்கள் இருக்காங்க தான்.


    //இன்னொன்று, அதர்ம avoidanceம் தர்மம் தான். ராமனோட பக்கத்து வீட்டுல பாத்தீங்கன்னா தெரிஞ்சுரும். அதாங்க வ.கிருஷ்ணன் வீடு. கீதாம்மா வரட்டும், இதைப் பத்தி பேசலாம். அதுவரை கோர்ட் அட்ஜர்ன்ட்.//

    ஹாஹா, நான் வரலை இந்த விளையாட்டுக்கு! கவுன்ட் மீ அவுட்! :)))))


    //ஹாவிங் செட் திஸ்,
    ஒன்னு மட்டும் சொல்லணும். இன்னி தேதிக்கு லீகல் கம்யூனிடி நீங்க சொல்ற எதிகல் விஷயம் எல்லாத்தையும் யோசிச்சு பார்ப்பாங்க அப்படின்னு ....

    கனவிலே கூட நினைச்சு பார்க்க முடியாது...

    இன்னிக்கு தேதிலே....காசேதான் கடவுளடா. //

    ஆமாம் சூரி சார் சொல்வது சரியே. இன்னிக்குத் தேதிக்கு இப்படித் தான் நடக்குது! அந்தக் காசுக்குத் தானே பொன்னேசனும், அவர் மனைவியும் இந்தப் பித்தலாட்டத்தையே செய்யறாங்க. கம்பெனி பாவம் தான், அப்பாவி! :))))


    //இந்தக் கதையிலயும் செஞ்சோற்றுக்கடன் தான். இதுவரை வாங்கின ரிடெயினருக்கு பணிந்து வெற்றிக்கான அணுகுமுறையைச் சொல்கிறான் நாயகன் - ஆனால் வெற்றியில் பங்கு வேண்டாம் என்று ஒதுங்கிவிடுகிறான் - காரணம், அது கறைபடிந்த வெற்றி. அதனால் தான் தொழில் தர்மம் பற்றிப் பேசுகிறான்.//

    ம்ம்ம்ம்ம் ஓரளவுக்கு ஒப்புக் கொள்ள முடிகிறது. என்றாலும் பொன்னேசன் மிரட்டியது கொஞ்சம் ஓவரா இருக்கு! இப்படியுமா மனிதர்கள் என்றே ஆச்சரியம் தோன்றுகிறது. அதே சமயம் பொன்னேசனின் இந்தத் தொடர் குற்றத்துக்குக் காரணம் மனைவியும் தான் என்றும் தோன்றுகிறது.

    அப்புறம் கோட்சே, காந்தி பத்திச் சொல்லி இருக்கிறதையும் படிச்சேன். என்னோட அபிப்பிராயம் இரண்டு பேர் பத்தியும் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். அதை விவரிக்க விரும்பலை! ஆனால் காந்தி தன் மகனையும் சரி, மனைவியையும் சரி, ஒழுங்காக நடத்தவில்லை. மனைவியை வீட்டை விட்டே வெளியே தள்ளி இருக்கார். பின்னால் வருந்தினாலும் தள்ளியது தள்ளியது தானே! தமிழிலேயே இது குறித்து ஒரு புத்தகத்தில் படிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு