2013/06/06

அப்பாவி



    ஸ்டார்பக்ஸ் டிரைவ்-இன் வரிசையில் கலந்து, முகமறியா பரிஸ்டா பெண்ணிடம் 'டோபியோ' என்று என் தேர்வைச் சொல்லி, பணம் கட்டும் ஜன்னலுக்கு ஏறக்குறைய ந்யூட்ரலில் நகர்ந்தேன். கதவைத் திறந்து என் அமெக்ஸ் கார்டைப் புன்னகையுடன் விரல்படப் பிடுங்கி நொடிகளில் திருப்பினாள். 'என்ன பற்பசை உ..?' என்ற என் நினைப்பை முடிக்குமுன் காபி மணக்கும் ஒரு அட்டைக் கோப்பையைத் தந்து, இன்னொரு புன்னகையுடன் "போய்வா" என்றாள். வரிசையில் ஊர்ந்து வெளியேறுமுன் காபியை உதட்டில் வைத்தேன். வயிற்றில் இறங்கிய காபியின் கேபீன் பிரிந்து ரத்தத்தில் கலந்து மூளை நரம்புகளை இடிக்க, அவசரமாக வரச்சொல்லி ரெஜீனா அனுப்பிய செய்தியுடன் ஐபோன் விட்டுவிட்டு உறும, மூன்றாம் கியரில் இரண்டு Zக்கள் செய்து ஏறத்தாழ அறுபது மைல் வேகத்தில் என் ஆபீஸை நெருங்கினேன்.

ஆபீஸ் என்றால் ஏதோ எள்ளுருண்டை. மூன்றாந்தர இரண்டடுக்குக் கண்ணாடிக் கட்டிடத்தில் முதல்தர வசதிகளுடன் ஒரு சிறிய ஸ்விட். என் காரியதரிசி தொழில் துணை ஆபீஸ் மேனேஜர் அகவுன்டன்ட் பேராலீகல் காபிரைடர் ஸ்போக்ஸ்பெர்சன் ஆல்-இன்-ஆல் அழகு ராணி, மினி ஸ்கர்ட் மேக்சி மூளை, ரெஜீனாவுக்கு பெரிய முன்னறை. கதவற்ற ஸ்க்ரீன் மறைவுக்கு பிந்தைய சிற்றறை எனது. ஆபீஸ் முழுதும் மிதமான லேவன்டர் காற்றைப் பரப்பும் குளிர்சாதனம், நாலங்குல அடர்த்தியில் மெத்தை போல் பெர்பர் கார்பெட் - நிறுவிய அன்று மாலை கார்பெட் மெத்தரையினால் வேறேதும் உபரிப் பயனுண்டா என்றப் பரிசோதனை நோக்கத்தில் ஒரு முறை ரெஜீனாவும் நானும் உருண்டு... ஒரே ஒரு முறை தான்... அதற்குப் பிறகு கறாராகத் தொழில்முறை நெருக்கம் மட்டுமே.. அல்ட்ரா மினி ஸ்கர்ட் என்று தெரிந்தாலும் நான் பென்சில் பேனா தவறவிட்டதில்லை.. சில நாட்கள் கருநீலத்தில் லியொடார்ட் அணிந்து, "பாஸ், இன்றைக்கு நான் கமான்டோ" என்பாள் வேண்டுமென்றே.. தேவையில்லை, தற்சமயத்துக்கு வருகிறேன் - தலா ஒரு அன்சல் ஆடம்ஸ், பிகாசோ, மோனே தொங்கும் மிக இளநீல பெயின்ட் அடித்த மூன்று சுவர்கள், இரண்டு கூரை-டு-தரை ஜன்னல்களைத் தழுவிய இந்தியப் பட்டு மஸ்லின் திரைகள், ட்ரேன்சுலசன்ட் பயோ-செக்யூர் வாயிற்கதவு, நுழைந்ததும் வலப்புறம் சுவரோரமாக ஒரு தண்ணீர் கூலர், ஒரு மினி ப்ரிட்ஜ், டோஸ்டரவன், ஒரு ப்லேஸ்மா டிவி, ப்லூ ரே டிவிடி, எதிரே இரண்டு சொகுசான இதாலியன் ரிக்லைனர்கள், எங்கள் அறைகளின் க்ரெசன்ட் மேஜை, மேகின்டாஷ், ப்ரின்டர், சிராக்ஸ்.. என் புடலங்காய் அலுவலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

என்ன பிடுங்குகிறேன் என்கிறீர்களா? எமக்குத் தொழில் நெகொசியேசன் அன்ட் லாபியிங். அது என்ன என்கிறீர்களா? நான் ஒரு மாஜி வக்கீல். ஒரு பெரிய நிறுவனத்தில் பார்டனராக இருந்து, விலகி வந்து இப்போது வக்கீலாகத் தொழில் செய்வதில்லை என்றாலும் அவ்வப்போது என் பயற்சியையும் அனுபவத்தையும் பயன்படுத்தி, ஒழுக்கச் சிக்கல் பிடித்த பணக்கார சிஇஓ அரசியல்வாதி மெகாஸ்டார்களின் ஊழல்களைத் திசைதிருப்பி, ஒரேயடியாகத் தடுக்கி விழாமல் அவ்வப்போது காப்பாற்றி வருகிறேன். ஐம்பது வாடிக்கையாளர்களுக்கு மேல் போவதில்லை. ஆளுக்கு ஐம்பதாயிரம் டாலர் வருடாந்தர ரிடெய்னர். அது தவிர, அசல் நிகழ்வுகளுக்கான தனி சம்பளம். வரிசையாக பூஜ்யங்கள் தொடரும் ஒரு ஒற்றைப்படை எண்ணை, டாலரில் வருடந்தோறும் கறந்து விடுகிறேன். ரெஜீனா வருடா வருடம் ஒரு புதுக் காதலனுடன் லக்சம்பர்க், கய்ரோ, யாங்ட்சி பள்ளத்தாக்கு என்று பிசினஸ் க்ளாஸ் விடுமுறை போகக் கட்டுப்படியாகிறது. பழைய புத்தகங்கள் வாங்குவதிலும் ஸூஷி பார்களிலும் என் பங்கில் கொஞ்சம் செலவழிக்கிறேன். என் அடாவடி மாஜி மனைவி பிடுங்கியது போக எஞ்சியதை, என் போர்ஷ டீலர் கார் சர்வீசுக்காக எடுத்துக் கொள்கிறான். ஏதோ காலட்சேபம் நடக்கிறது.

    "என்ன ஜீனா?" என்று கேட்டு உள்ளே நுழைந்த என்னை என் அறைக்குள் தள்ளினாள். "ஹேய்.." என்றேன்.

"மாருதி இன்னும் அரைமணியில் வருவதாகச் சொன்னார்.."

"யாருடா அது, ஜீனா கண்ணா ?"

"மாருதி பொன்னேசன். சிலிகான்கேட் சிஇஓ. நம்ம ரீடெய்னர் க்லையன்ட்.."

உடனே நினைவுக்கு வந்தார். "ஓகே..?" என்று இழுத்தேன்.

"விஷயம் தெரியாதா?" என்ற ஜீனா, என் பதிலுக்குக் காத்திராமல் ஒரு சிறிய மஞ்சள் கோப்பை என் முன் வைத்தாள். "இணையச் செய்திகள்"

"ஜீன், விஷயத்தைச் சொல்லு"

"வெல்.. பொன்னேசன் இஸ் அட் இட் அகெய்ன். ஆபீஸ் பெண்ணோட அவருக்கு இருந்த பலவருடத் திருட்டு சகவாசம் இப்ப வெளில வந்துருச்சு.. போர்ட் கவர்னென்ஸ்னு இழுத்துட்டிருந்தாங்க.. நேத்து அவரை வேலையை விட்டு எடுத்துட்டாங்க.. இப்ப ஹி நீட்ஸ் அஸ்.."

"டேமேஜ் கன்ட்ரோல்?"

"அன்ட் க்ரைசிஸ் கன்ட்ரோல். ஹி இஸ் ஆல் ஓவர் த மீடியா. சிலிகான்கேட் போர்ட் மெம்பர்ஸ் சூரி அகர்வாலும் அனில் குமாரும் மாத்தி மாத்தி அறிக்கை விட்டிருக்காங்க.. பாலியல் அத்துமீறல்களை தீவிரமாக எடுப்பதாகவும், யாராக இருந்தாலும் பொறுக்கமுடியாது என்றும், உடனே மாருதி பொன்னேசனை வேலையை விட்டு நீக்குவதாகவும் அறிக்கை விட்டிருக்காங்க"

"ஹெரேஸ்மென்ட் புகார் எதுனா இருக்கா?"

"சம்பந்தப்பட்ட பெண் அவருடைய காரியதரிசி. மூணு வருசமா ரெண்டு பேரும் உலகம் முழுக்க மீடிங் அப்படி இப்படினு சுத்தியிருக்காங்க. கொஞ்சம் விசாரிச்சேன். சிலிகான்கேட் வட்டத்துள்ளயே இது அரசல் புரசலா தெரிஞ்சிருக்கு. மெனி பீபில் நோ தேர் பெட்ரூம் பிகேவியர்.."

"கோல்ட் டிக்கர்?"

"தெரியாது. ஆனா அந்தப் பெண் திடீர்னு ஹெரேஸ்மென்ட் புகார் கொடுத்திருக்காங்க.."

"அந்தப் பெண் பற்றி என்ன தெரியும் நமக்கு?"

"பொன்னேசனின் காரியதரிசி. 41 வயசு. கல்யாணமானவ. ரெண்டு குழந்தைங்க. இரண்டாவது குழந்தை சமீபத்துல பிறந்தது.."

"யு மீன்?"

"பாஸிபில்" என்றுத் தோள் குலுக்கினாள் ஜீனா. "அந்தக் குழந்தை பொன்னேசனுடையது என்கிறாள் இப்போ.."

"பொன்னேசனோட மனைவி?"

"பாரம்பரியப் பெண்மணி. மஞ்சள் மகிமை.. மணாளனே மங்கையின் பாக்கியம்.. கல்லானாலும் கணவன் கேஸ்.."

சிரித்தேன்.

"ஏன் சிரிக்கிறே பாஸ்?"

"இவனுக்குனு மாட்டுறாங்க பார்.. வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்.."

"ஆண்கள் காட்டுப் பன்றிகள் பாஸ்"

"எல்லா ஆண்களும் அப்படியில்லை ஜீன். நீ மட்டும் வருசத்துக்கு ஒரு காதலனை சட்டை மாத்துறாப்புல மாத்தலியா?"

"ஒரு சமயத்துல ஒரு காதலன் தான்.. ஸ்டில்.. பன்னிங்களோட என்னைக் கம்பேர் பண்ணாதே பாஸ்.. வாந்தி வருது.. திஸ் மேன் இஸ் மேரீட்.. இருபத்தஞ்சு வருடத் திருமணம்.. படிச்ச, கண்ணியமான மனைவி.. இருபது வயசுல காலேஜ் போற ஒரு பையன், பனிரெண்டு வயசுல ஒரு பொண்ணு.. சைடுல இப்படி ஒரு செட்டப்.. வாட் ஏ ராட்டன் பிக்!"

சிரித்தேன். "நீ ஏன் இமோசனலாவுறே ஜீன்? இட் இஸ் நாட் யுர் ஸ்ட்ரெஸ்"

"யூ மென் ஆர் ஆல் அலைக். சாமானைக் கைலயே பிடிச்சிட்டு அலைவீங்க போல. உனக்கு சிரிப்பாவா இருக்குது பாஸ்? ஒரு லீடர்னா ஒரு கண்ணியம், நெறிமுறை, கட்டுப்பாடு வேணாம்? முப்பதாயிரம் பேர் வேலை பாக்குறாங்க.. எத்தனை பெற்றோர்கள் தங்கள் பெண்களை.. எத்தனை கணவர்கள் தங்கள் மனைவிகளை அனுப்புறாங்க.. இந்த ஆள் சிஇஓ என்கிற முறையில நெருங்கி வந்தா எந்தப் பொண்ணு என்ன செய்யும்? அதை விடுங்க பாஸ்.. கீழே வேலை பாக்குறவங்களுக்கும் இளைஞர்களுக்கும் இவனெல்லாம் எந்த மாதிரி முன்னுதாரணமா இருப்பான்? இவனோட கஸ்டமர்கள் என்ன நினைப்பாங்க இவங்க கம்பெனியப் பத்தி? வாட் எ சீப் மேன்! சாக்கடைப் பீப்புழு இவனை விட மேல்.. பொறம்போக்கு நாய்... தேவடியா பையன்.. பன்னாடை.. துண்டா வெட்டியிருப்பேன் நானா இருந்தா.."

"ஐ'ம் சாரி.. உன் எரிச்சல் புரியுது.. காம் டௌன் ஜீன்.. காம் த ஷிட் டௌன்.. ஐ ரிபீட், திஸ் இஸ் நாட் யுவர் ஸ்ட்ரெஸ்" என்று அழுத்தமாகச் சமாளித்தேன். அவள் தந்த கோப்பைப் புரட்டுவது போல் சில நொடிகள் பாவித்து.. ஒரு புகைப்படத்தைக் காட்டி, "இந்த மாருதி பொன்னேசன் ஆசாமி.. முன்னால ஒரு தடவை மாட்டினார்ல?" என்றேன்.

"ஐ'ம் சாரி" என்றாள் ரெஜீனா சுதாரித்து. "நாமதான் அப்பவும் டேமேஜ் கன்ட்ரோல் சர்வீஸ்.."

"நினைவிருக்கு.. ஐபிஎம்ல ரைட்?"

"நோ.. இன்போசயன்ஸ்.. அப்போ டெபுடி சிஇஓவா இருந்தாரு பொன்னேசன். அங்கே வேலை பார்த்த ரெண்டு பொண்ணுங்க கிட்டே ஒரே டயத்துல கள்ளத்தொடர்பு வச்சிருந்தாரு. இந்தியப் பொண்ணை கேஸ் வருமுன்னமே அமுக்கிட்டோம். வெள்ளைக்காரப் பொண்ணை அவுட் ஆப் கோர்ட் செடில் செஞ்சோம். மொத்தம் நாலு மிலியன் செடில்மென்ட். நம்ம சம்பளம் அரை மிலியன் ப்லஸ் எக்ஸ்பென்ஸ்" என்றபடி, எனக்கு ஒரு பீங்கான் தட்டில் ஆம்லெட் சேன்ட்விச்சும் ஆரஞ்சூஸ் ஒரு கப்பும் கொண்டு தந்தாள். நன்றியுடன் பார்த்தேன். தொடர்ந்தாள். "அதுக்குப் பிறகு ரெண்டு வருசம் கழித்து சிலிகான்கேட்ல சிஇஓ.. நாலு வருசமா நம்ம வாடிக்கை.. அம்பது கே வருடாந்தர ரீடெய்னர் கொடுத்திட்டிருக்காரு.. நோ இன்சிடென்ட்ஸ் அன்டில் நௌ"

போன் அலறியது. எடுத்து என்னிடம், "ஹி இஸ் ஹியர்.. நான் போய் கூட்டி வரேன்" என்றாள்.

"நோ நோ.. நீ கொஞ்சம் ரிலேக்ஸ் பண்ணிக்க.." என்று நான் வெளியேறி, கராஜுக்கான எஸ்கலேடரில் இறங்கினேன்.

    றுப்பு பீமர் எம் சீரீஸ். தானே ஓட்டி வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கதவைக் கீழிறக்கிக் கையசைத்தார். புகைப்படத்தை விட இளமையாக இருந்தார். வேகமாகச் சென்று கைகுலுக்கினேன். "நானே உங்களைப் பார்க்க வந்திருப்பேனே?" என்றேன். கார்க் கதவைத் திறந்தேன்.

"நோ.. திஸ் இஸ் எ டிஸ்க்ரீட் விசிட்.." என்று வெளியே இறங்கினார். காத்திருக்காமல், "உன் ஆபீசுக்குப் போகலாமா? இஸ் இட் ப்ரைவேட்?"

"என் பார்டனர் ஜீனா தவிர வேறு யாரும் இல்லை.. வாங்க போலாம்"

"ஜீனா, இஸ் இட்? அழகா இருப்பாளா?" கம்பீரமாக நடந்த மாருதி பொன்னேசனின் குரலில் தொனித்த இயல்பான அமைதி, என் முதுகில் குறுகுறுத்துப் புரியும் நேரத்தில் எஸ்கலேடர் ஏறி ஆபீசுக்குள் நுழைந்துவிட்டோம்.

[வளரும்] ➧ 2



காதல் கடிதம் எழுதுங்கள்


24 கருத்துகள்:

  1. "ஜீனா, இஸ் இட்? அழகா இருப்பாளா?" - மறுபடியுமா...?

    டேமேஜ் and கன்ட்ரோல்...!

    பதிலளிநீக்கு
  2. கதை நல்லாயிருக்குப்பா...

    பதிலளிநீக்கு
  3. So you are back after a mini vanavasam. Very good. Story is good but the descriptions about the office atmosphere is quite perplexing to understand. Kindly put it in english also in ( ) so that we can make it out clearly. This has been used in our tamil medium books in those days particularly in science and history books. Hope you will do it.

    பதிலளிநீக்கு
  4. PALLU IRRUKERAVAN PATTANI THINGARAN. UNGA JEEAN ENN GOPA PADANUM?

    பதிலளிநீக்கு
  5. செய்தித் தாளில் வந்த செய்தி உங்கள் எழுத்துக்களில் எப்படிப் போகிறது என்று பார்க்க வேண்டும்.
    ஏன் இந்த மாதிரி விஷயங்களில் உண்மை வெளி வருவதே இல்லை?

    பதிலளிநீக்கு
  6. "ஜீனா, இஸ் இட்? அழகா இருப்பாளா?"
    மறுபடியும் முதலில் இருந்தா

    பதிலளிநீக்கு
  7. நாங்களும் ஆர்வமுடன் ஆபீஸுக்குள்
    நுழைந்திருக்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. நீங்களும் ஒரு குறுந் தொடரா ... உங்கள் எழுத்துக்களில் அற்புதம், சில வார்த்தைகள் உகல் எழுத்துக்களில் படிப்பதால் ஆபாசமாய் தெரிவதில்லை :-)

    எல்லாம் சரி அமெரிக்காவில் z போடா முடியுமா என்ன? தண்டனை இல்லையா

    வாவ் காதல் கடித விளம்பரம் பார்த்தேன்... மிக்க மகிழ்ச்சி சார்

    பதிலளிநீக்கு
  9. பொன்னேசன்...அ(டப்)பாவி!

    பதிலளிநீக்கு
  10. ஆமாம்... அவர் பொன்னேசனா, பெண் நேசனா! :)))

    பதிலளிநீக்கு
  11. //நான் பென்சில் பேனா தவறவிட்டதில்லை...//

    ஒரு பென்சில் பேனா எதுக்ககத்தான் இருக்கு பின்னே?

    அது அது அதன் அதன் காரியத்தை அப்பப்போ செய்யணும்.
    அதுல தான் அழகு அப்படின்னு

    எதோ கேட்ட மாதிரி இருக்கே...

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  12. அப்பாவியா , அடப்பாவியா ?

    பதிலளிநீக்கு
  13. சபாஷ் ஸ்ரீராம்! இப்படி பட்டுனு உடைச்சிட்டீங்களே.. ரொம்ப யோசிச்சு வச்ச காரணப்பெயர்.. உளற்ரேனே.. இது முழுக்க முழுக்க கற்பனையாச்சே.. ரஞ்சனிம்மா.. எனக்கு எந்த செய்தியும் தெரியாது.. இது கற்பனைக் கதை.

    பதிலளிநீக்கு
  14. நெருடலுக்கு மன்னிக்கவும். முடிந்தவரை தமிழிலேயே எழுதுகிறேன் மோகன்.

    பதிலளிநீக்கு
  15. கதைக்குள்ளே இன்னும் என்னென்ன குண்டு வச்சிருக்கிங்களோன்னு( முதிராத வாசகருக்கான) பயமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. //PALLU IRRUKERAVAN
    ரசித்தேன்.. இதை உங்க அனுமதியோட உபயோகிச்சுக்கறேன் மோகன்.

    பதிலளிநீக்கு

  17. கலியாணமாகாத ஆணோ பெண்ணோ யாருடன் வேண்டுமானாலும் சுற்றலாம். திருமணமாகிவிட்டால் அதுவே தவறு, AMERICAN MIND SET.?
    ஆஃபீஸ் விவரணைகள் நன்றாக இருக்கின்றன. ஆமாம் இந்தப் பதிவில் சுஜாதாவின் நெடி தெரிகிறதே.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லாஜூன் 09, 2013

    "மாருதி பொன்னேசன். சிலிகான்கேட் சிஇஓ" is equal the same as Mr. Phanish Moorthy, igate CEO. All the same similarily happening.

    பதிலளிநீக்கு
  19. அன்பரே! ஒன்றில் தமிழில் எழுதுங்கோ இல்லை ஆங்கிலத்தில் எழுதுங்கோ இது அசிங்கமாக இருக்கின்றது இரண்டு கெட்டானாக இதுபற்றி இன்று தமிழர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை என்பதே மிகவும் அசிங்கம் இதுவே ஒரு வெள்ளையன் நாட்டில் என்றால் மக்கள் கொதிப்பர்கள் அந்தளவுக்கு அவர்கள் தங்கள் மொழியை நேசிக்கின்றார்கள் எங்கள் ஆட்களுக்கு சோறு உள்ளே போன சரி மற்றப்படி எது கேட்டாலும்
    அக்கறை கிடையாது படித்தவர்களே இப்படி இருந்தால் படியாத மக்கள் எப்படி இருப்பார்கள் தமிழை தமிழாக எழுதுவதில் ஏன் அச்சம் வெட்க்கம்

    பதிலளிநீக்கு
  20. யாரைப் பார்த்து 'படித்தவர்களே' என்கிறீர்கள் neithalan? ஹிஹி.. :)-

    தமிழை தமிழாக எழுதுவது எனக்குப் பிடிக்கும் - எழுத வந்தால். எனினும், தமிழ் தமிழ் என்றுத் தேவையில்லாமல் கொடி பிடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை அன்பரே. எல்லாவற்றையும் தமிழாக்கம் செய்து சொல்லின் அழகைக் குலைப்பதிலும். எந்த வெள்ளைக்காரன் நாட்டிலும் மக்கள் கொதிக்க மாட்டார்கள்.. ஆங்கிலம் இன்றைக்குப் படும் பாட்டைப் பார்க்கிறீர்கள் தானே?

    பதிலளிநீக்கு
  21. "தமிழ் தமிழ் என்றுத் தேவையில்லாமல் கொடி பிடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை அன்பரே". "எந்த வெள்ளைக்காரன் நாட்டிலும் மக்கள் கொதிக்க மாட்டார்கள்.. ஆங்கிலம் இன்றைக்குப் படும் பாட்டைப் பார்க்கிறீர்கள் தானே? "

    மீ த பஸ்ட், அக்ரீ வித் யு அப்பாதுரை சார்

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஐயா ! ஆங்காங்கே ஒரு சில ஆங்கில வார்த்தைகள் வந்தால் பொறுக்கலாம் கட்டுரையின் முக்கால் பகுதியும் ஆங்கிலமாகவே இருக்கின்றது என்பதே எனது வருத்தம். உங்கள்மீது தனிப்பட கோபம் இல்லை, எனது கருத்தை தெரிவித்தேன் அவ்வளவுமே. மற்று அடியேன் சொல்லவந்தது ஆங்கிலேயர் அன்றில் வேறு வெள்ளையர்கள் நாட்டில் அவர்களின் மொழியில் எழுதும் போது அந்நிய மொழியினை கலக்க மாட்டார்கள், வேற்று மொழியினை கலந்தால் மக்கள் கோபமுற்று வழக்கு போட்டு விடுவார்கள், எழுதியவர் தண்டம் செலுத்தவேண்டி வரும்

    அன்றில் சிறைவாசம் அனுபவிக்கவேண்டிவரும், சில ஆண்டுகள் முன்பு ஜெர்மனியில் ஒரு எழுத்தாளர் அந்நிய வாத்தையை எழுதியதால் சிறை சென்றார் என்பது நினைக்கத்தக்க . ஆங்கில மோக அடிமைத் தனத்தில் வாழும் தமிழ் நாட்டினரை உங்களைப் போன்ற நல்ல எழுத்தாளர்கள் அவர்களை அந்நிய மோகத்திலிருந்து மீட்டு எடுக்க வேண்டும், இப்படியே மொழிப்பற்று இன்றி ஒவொருவரும் கவனமின்றி இருந்தால் நாளை அம்மா என்ற சொல்லுக்கே அகராதியை புரட்டவேண்டியிருக்கும் - தமிழர்கள்தான் தமிழுக்கு கொடி பிடிக்கவேண்டும் நண்பர்களே, மாற்றான் வந்து கொட்பிடிக்க்மாட்டான் உணர்க . தங்கள் மொழியின் மீது எத்தகைய பற்றுதல் வைத்திருக்கின்றார்கள்

    மற்றைய நாட்டினர் என்று ஜப்பான்,கொரியா, அரேபிய நாடுகள்,பிரான்ஸ் இங்கிலாந்து ஜேர்மன் இத்தாலி ஸ்கண்டினேவிய ,தென்னமரிக்க நாடுகள் என்று

    சென்று பார்த்தால் புரியவரும். தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிங்கிலிசு பேசும் மக்களுக்கு

    அவை புரிய வாய்ப்பில்லையே - எனக்கு பதில் தரும் வாதம் வேண்டாம் சொல்லிய கருத்தை உள்வாங்கி சிந்தித்து செயலாற்றுங்கள் அடியேன் எழுதியதில் ஐயம் இருந்தால் நன்கு தமிழறிந்த

    ஒருவரிடம் சென்று எனது கருத்தை கட்டி விளக்கம் கேளுங்கள் . வாழ்க நலம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்த தமிழ் அவ்வளவுதான் நெய்தாளன். என்ன செய்ய?

      உலகம் முழுதும் பார்த்து மக்களின் மொழியார்வத்தை நன்கறிந்தவராய் சொல்லும் பொழுது, கிணற்றுத் தவளையான நான் வாதம் செய்ய விரும்பவில்லை. இருந்தாலும் ஒரே ஒரு கேள்வி..

      அம்மா என்பது தமிழ் வார்த்தையா? யார் சொன்னது? விவரம் தெரிந்தால் எழுதுங்களேன்?

      நீக்கு
  23. வணக்கம் அப்பாத்துரை அவர்களே - பொறுப்புடன் பதில் பகின்றதுக்கு நன்றி ஐயா - அம்மா என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று உங்கள் மூலமே அறிகின்றேன் அப்படியாயின் தமிழில் எப்படி பெற்றவளை அழைப்பது - வாழ்க நலம்

    பதிலளிநீக்கு