◀ 1 2
என் தொழில் விசித்திரமானது. பிற தொழில்களில் 'சரி தவறு' என்றுத் தீர்மானித்து ஏதோ ஒரு வழியில் போக முடியும். என் கட்சிக்காரர் அல்லது வாடிக்கையாளர் நல்லவரா கெட்டவரா என்பதைத் தீர்மானிக்கும் தகுதி இருந்தாலும், தொழில் தர்மப்படி எனக்கு உரிமை இல்லை. இன்னவர் எனத் தீர்மானிக்கும் அக்கணத்திலே, நான் பழகும் குருட்டுச் சட்டத்துக்கு கண்களைக் கொடுத்தக் குற்றத்தைச் செய்தவனாகிறேன். எனக்குத் தெரிந்த விவரங்களின் அடிப்படையில், அவை உண்மையா பொய்யா என்றக் கவலையில்லாமல், என் கட்சியை நிரபராதியென்று வாதம் செய்கிறேன். கட்சிக்காரர் எப்படிப்பட்டவர் என்பது அவருக்கு மட்டுமே தெரியும், எனக்கு அக்கறையில்லை. நான் பிரபல வக்கீலாக இருந்த நாட்களில் ஒரு கொலைக் குற்றத்தில் எக்கச்சக்கமாகச் சிக்கியிருந்த என் கட்சிக்காரரை நிரபராதி என்று வாதாடி வெற்றி பெற்றேன். தீர்ப்பு வெளியான அன்று மாலை லாஸ்வேகஸ் ஹோட்டலில் பேட்டி கொடுத்த என் கட்சிக்காரர், வெற்றிக் களிப்பில் தன் எதிரிகள் மூன்று பேரை பொதுவில் சுட்டுக் கொன்றார். வழக்கு என்னிடம் வர, அன்று தினசரி வக்கீல் தொழிலுக்கு முழுக்கு போட்டவன் - திரும்பவில்லை.
என் இப்போதைய தொழிலிலும் உத்தமர்கள் என்று எவரும் இல்லை. ஒழுக்கச் சிக்கல் விளைவுகளைத் தீர்த்து வைக்கும் தொழிலில் நான் உத்தமரை ஏன் தேடப்போகிறேன்? எனினும், என் வாடிக்கைகளின் எல்லைகளைப் புரிந்து வைத்திருக்கிறேன். செல்வத்துக்கு அப்பாற்பட்ட சில நாலெழுத்துத் தேடல்களுக்கு இந்த எல்லைகளின் புரிதல் முக்கியம் என்று உணர்ந்திருக்கிறேன்.
மாருதி பொன்னேசன் முதல் முறையாக என்னைச் சீண்டிவிடுவதாகத் தோன்றியது. 'இந்த ஆளின் எல்லைகள் என்ன?' என்று யோசித்துத் தடுமாறினேன்.
"என்ன பாஸ்.. ரொம்ப யோசிக்கிறே?" என்றாள் ஜீனா. வாசனையாக இருந்தாள். கறுப்பு மினிஸ்கர்டும் இளஞ்சிவப்பில் கையில்லாத ஷர்டும் அணிந்திருந்தாள். இன்னொரு சமயமாக இருந்தால் மேலும் தேடியிருப்பேன். பார்வையில்தான்.
அவள் என் முன் வைத்த ஸ்ட்ராபெரி கெபீரைக் கலக்கி ஒரு வாய் அருந்தினேன். "இந்தப் பொன்னேசனைப் பத்தி யோசிச்சிட்டிருந்தேன்.."
"அதான் என்ன யோசிக்கிறேனு கேட்டேன்?"
"இந்தாளு எப்படிப்பட்டவர்? புத்திசாலி. நிறைய சாதிக்கிறார். அற்ப விஷயத்துல அத்தனை சாதனைகளையும் அழிக்கிறார்னு தெரிஞ்சே செய்யுறாரா? அவர் மனைவி.. யாரிவர்? இன்னொரு பெண்.. அதுவும் தன் கணவனின் வேலை போகக் காரணமாகக் கூடியவள் என்று தெரிந்து.. அதற்கும் மேலாக தன் வாழ்க்கை.."
"ஸ்டாப் ரைட் தேர், பாஸ். வீ ஆரின்ட் ப்ரைவேட் டிக்ஸ். திஸ் இஸ் நாட் அவர் த்ரில். இந்தக் கவலையெல்லாம் கதை எழுதுறவங்களுக்கு. நமக்கில்லே. நாம யாரு? வீ ஆர் பார்ட் டைம் லாயர்ஸ் அன்ட் புல் டைம் ஸ்பின்னர்ஸ். நமக்குத் தேவை அழுக்கு வாடிக்கை, தொழிலில் வெற்றி, சுதந்திர வாழ்வுக்கானப் பணம். பொன்னேசன் ஒரு அழுக்கு வாடிக்கையாளர். வெற்றிக்கும் பணத்துக்கும் ஒரு சாதனம். அதுக்கு மேலே அனாவசியமா கவலைப்படாதே பாஸ், எனக்குக் கவலையாயிருக்கு.."
"யு ஆர் ரைட். தேவையில்லாத விஷயம்.. லெட்ஸ் ரிவ்யூ த நம்பர்ஸ்.." என்றேன்.
2005, 2006 வருட சிலிகான்கேட் வருடாந்தரக் கணக்குகளை முதலில் ஆய்ந்தோம். குறைந்து கொண்டிருந்த வருமானம், 2005ல் பத்து சதவிகித மொத்த லாபம், நெகடிவ் கேஷ் ப்லோ. 2006ல் தேங்கிய வருவாய், ஒரு சதவிகித மொத்த லாபம், பெரும் நிகர நஷ்டம், நெகடிவ் கேஷ் ப்லோ. 2007ல் பொன்னேசன் வருகை. 2007ல் அதே வருவாய், ஆனால் தீவிர ஆள்குறைப்பின் காரணமாக பாசிடிவ் கேஷ் ப்லோ, சிறிய மொத்த லாபம். 2008ல் வருவாய் முன்னேற்றம், தொடர்ந்த ஆள் குறைப்பு, பாசிடிவ் கேஷ் ப்லோ, பதினாறு சதவிகித மொத்த லாபம். தொடர்ந்து 2009ல் முன்னேற்றம். 2010-12ல் பெரும் முன்னேற்றம். மூன்று வருடங்களிலும் இருபது சதவிகித நிகர லாபம்.
கம்பெனி நிகர லாபத்தின் அடிப்படையில் 2007லிருந்து 2012 வரை, பொன்னேசனுக்கு எழுபது லட்சத்து ஐம்பதாயிரம் பங்கு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 2007ல் ஐந்து லட்சமும், 2008ல் ஒன்பது லட்சமும், 2009லிருந்து மிச்ச பங்குகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சரியாக ஏழரை லட்சம் பங்குகளின் முழு உரிமையும் அவருக்குக் கிடைத்துவிட்டது. மிச்ச பங்குகளில் அவருக்கு முழு உரிமை கிடைக்கவில்லை. கம்பெனி ரூல்ஸ்படி உடனடியாக அவர் அத்தனை உரிமைகளையும் இழக்கிறார்.
2012 மற்றும் இந்த வருடத்து எதிர்பார்த்த லாபக்கணக்கு என்று ஏதாவது இழுத்தாலும் ஊக்கத்தொகை இரண்டு மூன்று மிலியனுக்கு மேல் தாண்டாது. ஒரு வருட உபரி சம்பளம் என்று சேர்த்தாலும் அரை மிலியன். கம்பெனி ரகசியம் அது இது என்று மிரட்டியோ புரட்டியோ எடுத்தால் கூட அதிக பட்சம் ஐந்தைத் தாண்டாது.
"ஒண்ணும் சரி வரலியே ஜீனா?" என்றேன். "ஐந்து மிலியன் - அதுவே ரொம்பக் கஷ்டம்"
"புரியுது. அந்தாளு கொட்டைய நசுக்குறதா சொன்ன பயமா?" சிரித்தாள் ஜீனா. "சாரி பாஸ்.."
"ஹி வாஸ் சீரியஸ் அபவுட் த மனி.. நாம என்ன தவற விட்டிருக்கோம்?"
"நான் நினைக்கிறேன்.. இழக்கப் போற பங்குரிமைகள்.. அதைச் சொல்றாரோ? பாரு பாஸ்.. அந்தாளு உரிமை இழக்கப் போவது அறுபத்து மூன்று லட்சம் பங்குகள். இன்றைய பங்கு விலையான பதினொரு டாலரின் அடிப்படையில் அது சுமார் அறுபத்தொன்பது மிலியன் டாலர். மிகப் பெரிய தொகை. அதைத் தான் சொல்றாருனு நினைக்கிறேன்.."
"ஆனால் அந்த வாதம் செல்லாதுனு அவருக்கே தெரியுமே? கான்ட்ரேக்டில் 'தகாத நடத்தையில் வெளியேற்றப்பட்டால் வழங்கப்படாத அத்தனை ஊக்கத்தொகையும் இழக்க நேரிடும்'னு சொல்லியிருக்குதே.. கையெழுத்துப் போட்டிருக்காரே? நிச்சயம் இங்க தான் ஏதோ விஷயம் இருக்கு"
"பாஸ்.. ஒண்ணைக் கவனிச்சேன்.. 2007ல் இந்தாளு வந்தபிறகு லாபம் கிடுகிடுனு ஏறிச்சே தவிர, பங்கு விலை அவ்வளவா முன்னேறல பாஸ்.. 2007ல மூணு டாலர் இருந்த பங்கு இப்ப பதினொரு டாலருக்கு வந்திருக்கு.. இருபது சதவிகிதம் நிகர லாபம் பார்க்கும் மிச்ச கம்பெனிங்க முப்பதிலிருந்து நூறு டாலர் வரை பங்கு விலையேற்றம் பார்க்குறப்ப, இவங்க கம்பெனி பத்து டாலர்ல ததிங்கிணத்தோம் போடுறது கொஞ்சம் ஆச்சரியமா இல்லே?"
"ரைட். பிஇ ரேஷியோ பாரு? பனிரெண்டைத் தாண்டவில்லை..ஹ்ம்ம்.. ரிசீவபில்ஸ், டெட் ரேஷியோ, எல்லாமே ஆரோக்கியமாத்தான் இருக்கு.. தன்னை விடப் பெரிய பாட்னா சிஸ்டம்ஸ் வாங்கியும் கடன் நிலமை ஆரோக்கியமாத்தான் இருக்கு.. இருந்தாலும் சம்திங் இஸ் ஹோல்டிங் பேக்."
"எனக்கென்னவோ இந்த ஆளு பங்கு விலை முன்னேற்றத்துல அதிகமா அக்கறை காட்டலேனு தோணுது பாஸ்"
பட்டென்று அறைந்தாற் போலிருந்தது. "மறுபடி சொல்லு" என்றேன்.
"இந்தாளு லாபத்துல அக்கறை காட்டின மாதிரி பங்கு விலைல அக்கறை காட்டலியோனு.."
"ஜீனா.. என் ஸ்வீட்.. என் கண்ணு" என்று அவள் கன்னத்தைக் கிள்ளினேன்.
"என்ன பாஸ்..?"
"எனக்கு ஒரு கப் ஜூஸ், அப்புறம் சேன்ட்விச் எடுத்துட்டு வாயேன் ப்லீஸ்.. உனக்கு ஏதும் வேணாமா? பசிக்குது.. சாப்பிட்டுக்கிட்டே இந்தாளோட கான்ட்ரேக்ட்டை மறுபடி படிச்சுரலாம்.."
அவசரமாக உணவை உள்ளே தள்ளத் தொடங்கினேன். கான்ட்ரேக்டை வேகமாகவும் உரக்கவும் படித்தாள் ஜீனா.
"ஹோல்ட் இட்" என்றேன், அரை சேன்ட்விச்சை கையில் பிடித்தபடி. "ரிபீட் தட் ப்லீஸ்"
ரிபீட்டினாள்.
"இப்ப புரியுது அனில் குருமாவும் சூரி சம்சாவும் நம்மாளை ஏன் வெறுக்கிறாங்கனு" என்றேன்.
"புதிர் போடாதே பாஸ்"
"நீ படிச்ச கான்ட்ரேக்ட்படி மாருதியோட பர்மார்மன்ஸ் அளவைகள் ரெண்டு தான் - கம்பெனி லாபம், பெரிய கான்ட்ரேக்ட் வருமானம். பங்கு விலை அறுபது டாலர் என்பது ஒரு இலக்கே தவிர, அது அவருடைய பர்மார்மன்ஸ் அளவை இல்லை. பங்கு விலை உயர்வு அளவைக்கு மாருதி ஒப்பவில்லை. அன்றைய மூணு டாலர் விலை, இன்னும் நிரூபிக்கப்படாத இவருடைய திறன், அல்லது கம்பெனி நிதி நிலவரம்.. எல்லாமே காரணமா இருந்திருக்கலாம்.. ஆனால் அடுத்து வந்த வருடாந்திர கான்டிரேக்டுகளில் ரெண்டு குடாக்குங்களும் பங்கு விலையைப் பத்தின விவரத்தை மாத்தவேயில்லே. நம்மாளு கில்லாடி. லாபத்தையும் வருமானத்தையும் மட்டும் கூட்டி மெள்ள மெள்ள பங்குகளை அநியாயத்துக்குச் சேத்துக்கிட்டாரு.."
"பங்கு விலையேற்றம் பர்பார்மன்ஸ் அளவையாக இல்லாததால இவரை வெளில தள்ள முடியலே அவங்களாலே.. ஆனா ஸ்டாக் ஆப்ஷன் அள்ளிக்கிறதையும் தடுக்க முடியலே"
"எக்சாக்ட்லி.. வருசா வருசம் பங்கு விலையைப் பத்திக் கவலைப்படாம நம்மாளு பங்கு உரிமை குவிக்குறதுல கவனம் செலுத்தினாரு"
"ஆனா.. என்ன ப்ரயோஜனம் பாஸ்? பங்கு விலை உசந்தாத் தானே எல்லாருக்கும் கொள்ளை லாபம்?"
"ரைட்.. இந்தாளு பங்கு விலையை உயர்த்தும்படி எதுவும் செய்யமாட்டாரு. சம்சாவுக்கும் குருமாவுக்கும் இந்தாளை வெளியில தள்ள முடியலே.. பாத்தாங்க.. எல்லாருக்கும் தெரிஞ்ச கதையான பொன்னேசன்-டேனிகா கள்ள உறவை வச்சு இவரை வெளியேத்த ப்லேன் போட்டாங்க.. அவங்களே டேனிகாவைத் தூண்டிவிட்டு.."
"பொன்னேசனை வேலையை விட்டு நீக்க ஒரு சுலபமான வழி.. அந்தம்மாவுக்கும் கணிசமான செடில்மென்ட்.. இவங்களுக்கும் பங்கு மிச்சம்.. இன்னொரு ஆளைக் கொண்டு வந்து.."
"எக்சாக்ட்லி.. அதான் நம்மாளு தொலைஞ்சு போன பங்கு உரிமைகளோட விலையைப் பத்திக் கவலைப்படறாரு"
"ப்ச.. என்னவோ பாஸ்.. இந்தாளோட நடத்தை எனக்குப் பிடிக்கலே.. சுத்த அயோக்கியன்.. அவன் பக்கம் நியாயம் இருக்குறதா தோணுறது எனக்குப் பிடிக்கலே பாஸ்"
"ஏய்.. நீ தானே சொன்னே? அழுக்கு, வெற்றி, பணம்னு? இந்தாளு லூஸ் பேன்ட் தான். ஆனா தொழிலில் கெட்டி. தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ளும் புத்திசாலி. நம்மளைப் பொருத்தவரை, அந்தாளோட அந்தரங்கம் அந்தாளுடையது.."
"ஸ்டில்.. அறுபது மிலியன் செடில்மென்டுக்கு எங்கே போறது பாஸ்? கான்ட்ரேக்ட்ல தகாத நடத்தை பற்றி தெளிவா போட்டிருக்காங்களே? இந்தம்மா தகாத நடத்தைனு பாலியல் மீறல் அடிப்படையில் புகார் கொடுத்திருக்காங்களே? அதன்படி அத்தனை உரிமையையும் இழக்க வேண்டிவருமே? சட்டப்படி ஏற்கப்படுமே?"
"அங்க தான் நீ முந்தா நாள் சொன்ன விஷயம் பொருந்தி வருது.."
"என்ன விஷயம்?"
"நிர்மலா பொன்னேசன்.. டேனிகா வீட்டுக்கு அடிக்கடி வரதா சொன்னியே.."
திடீரென்று விளங்கியக் குதூகலத்தில், "பாஸ்!" என்று கூவினாள் ஜீனா. "யூ ஆர் ப்ரிலியன்ட். ஒரு முத்தம் குடுக்கலாம்னு பாத்தா அப்புறம் நீ கையை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டே, அதான்"
"தேங்க்ஸ்.. ஆனா அது ஒரு ஹஞ்ச். அவ்வளவு தான். நீ விசாரிக்க வேண்டியது இன்னும் கொஞ்சம் இருக்கு" என்று விவரம் சொன்னேன். "இப்பவே கிளம்பு. நான் செடில்மென்ட் ஸ்டேட்மென்ட் தயார் செய்யுறேன்.. போறதுக்கு முன்னால பொன்னேசனுடன் வெள்ளிக்கிழமை மீடிங் செடப் செஞ்சுட்டுப் போ ப்லீஸ்.. ஐ திங்க் வி ஆர் ஹிட்டிங் பே டே"
"நீ என் மேலே எங்கே கை வச்சாலும் பரவாயில்லே" என்று என் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டாள் ஜீனா. "புத்திசாலி.. கொட்டையைக் காப்பாத்திக்கிட்டே.. நான் வரட்டா?".
சற்று நேரத்தில் ஜீனா கிளம்பியதும், நான் செடில்மென்ட் கணக்குகளில் மூழ்கினேன். பொன்னேசனைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது. நான் புரிந்து கொண்டது எனக்கே அச்சமூட்டியது. சட்டென்று ஏதோ தோன்ற, பழைய கோப்புக்களைப் புரட்டினேன். தேடியது கிடைத்தது. எடுத்துக்கொண்டு கிளம்பினேன். 'நான் சந்தேகப்படுவது சரியாக இருக்கக் கூடாதே! அனாவசியமான சந்தேகமாக இருக்கட்டுமே. உண்மையாக இருக்கக்கூடாதே!' என்றக் கலக்கத்துடன் காரைக் கிளப்பினேன்.
[வளரும்]▶ 4
கதையில் ஸ்வாரசியம் கூடிக்கொண்டே போகிறது துரை.....
பதிலளிநீக்குஅடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன் ஆவலுடன்!
கிடைத்துள்ள 'முடிச்சு' சுவாரஸ்யம்... என்ன நடக்கும் பார்க்கலாம்...
பதிலளிநீக்குகாஷ் ஃப்ளோ, தேங்கிய வருவாய், லாபம், பங்குவிலை... இவையெல்லாம் கதையை நீட்டவும் திசை திருப்பவுமான உத்திகள் என்று நினைக்கிறேன். I am trying to look for the cat..! தொடர்வேன்.
சந்தேகம் சரிதான் என்று பட்சி சொல்கிறது!
பதிலளிநீக்குகதை அப்படின்னு யதார்த்தம் சொன்னாலும் அங்கங்கே சூரி சூரி அப்படின்னு சொல்றீகளே ?
பதிலளிநீக்குஅது என் பெயராச்சே !!
பைனல் செட்ட்லேமென்ட் லே இந்த சூரிக்கு எதுன்னச்சும் உண்டா ?
அது ஒரு பக்கம்.
என் அப்பாவும் ஒரு லாயராத்தான் இருந்தார். 68 வரைக்கும். அதுக்கப்புறம் இந்த லோகம் வ்யர்த்தம் அப்படின்னு கந்தர்வ லோகத்திலே இப்ப இருப்பார்னு நினைக்கிறேன்.
ஒரு கேஸை அவர் யோசிச்சிக்கினு இருந்தபோது , கேசை விட்டுட்டு கேசை போட்டவரை அவர் யோசிச்சு பார்த்தது நினைவுக்கு வருகிறது.
சுப்பு தாத்தா.
எந்த ஒரு கேசும் சிவில் சைடு ஆக இருந்தால் ஒரு சப்ஜக்ட் ஒரு சிவில் ராங் இருக்கணும்.அந்த சிவில் ராங் லா ஆப் த லாண்ட் க்கு எதிராக இருக்கணும். அட் லீஸ்ட் வயலெட் பண்ணனும். கிரிமினல் அபன்ஸ் ஆக இருந்தால் ஒரு மென்ஸ் ரீ இருக்கணும்.
பதிலளிநீக்குஇந்த பொன்னீசன் மோர் sinned than sinned against அப்படின்னு தோணறது.
அது கிடக்கட்டும். குப்பை.
லெட் அஸ் கம் டு பராஸ் டாக்ஸ்.
அந்த சீனாவா ஜீனாவா எங்கே இருக்கா ?
ஒரு காதல் கடிதாசு அனுப்பிச்சு இருக்கேன்.
.
சுப்பு தாத்தா.
நானும் கதையை விட்டுட்டு எப்படி கதாசிரியர் இப்படியெல்லாம் யோசிக்கிறார்ன்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்!
பதிலளிநீக்கு//அது கிடக்கட்டும். குப்பை.
லெட் அஸ் கம் டு பராஸ் டாக்ஸ்.
அந்த சீனாவா ஜீனாவா எங்கே இருக்கா ?
ஒரு காதல் கடிதாசு அனுப்பிச்சு இருக்கேன். //
ஹாஹா... அமெரிக்கா வந்த பிறகு சுப்பு தாத்தாவுக்கு பொழுது போகலை போல :) பாட்டிக்குத் தெரியுமா தாத்தா?
ரொம்ப தேடாதீங்க GMB சார்.. அப்படி எல்லாம் எதுவும் இல்லே.
பதிலளிநீக்குஆ! எனக்குத் தோணவே இல்லையே சூரி சார்.. கன்னாபின்னானு திட்டி வேறே வச்சிருக்கேனே..
பதிலளிநீக்குஉங்க வீட்லயும் வக்கீலா.. டபுள் வணக்கங்கள்.
இதுவரைக்கும் ஜீனாவுக்கு மொத்தம் நாலு காதல் கடிதங்கள் வந்தாச்சு சுப்பு சார்.. சிகாகோவுலந்து மட்டுமே அஞ்சு வந்திருக்கு :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு//அமெரிக்கா வந்த பிறகு சுப்பு தாத்தாவுக்கு பொழுது போகலை போல :) பாட்டிக்குத் தெரியுமா தாத்தா? //
பொழுது போகறதாவது ? பொழுது போறமாட்டேன் கரது. நேத்திக்கு மேடம் துச்சாத் போய் அங்கே மெழுகு
சிலைகள் எல்லாம் பார்த்தேன். அங்கே அடிச்ச கூத்தெல்லாம் என்னோட பதிவுலே போடறேன்.
அப்பறம்,
எம்பயர் ஸ்டேட் கடைசி மாடிக்கு போனேன்.102 வது மாடி. ஒரே ஏமாற்றமாய் போயிடுத்து. க்ளாஸ் பானல் வழியாத்தான்
பார்க்கவேண்டி இருக்கிறது. 1125 முதல் 1250 அடி உயரம் ... ந்யூயார்க் எல்லாம் தெரிஞ்சது.
ஆனா, ஒரு அளவுக்கு மேலே போனவனை, இன்னும் மேலே போ அப்படின்னு சொல்லாம், கீழே பாரு அப்படின்னு சொல்றது சரிப்பட்டல.
எங்க ஊரு திருச்சி,
உச்சிப்பிள்ளையார் கோவில் இருக்கற மாதிரி ஒரு புள்ளையாரோ இல்லை , திருப்பதிலே இருக்காமாதிரி, பெருமாள் தாயார் சன்னதி இல்லாட்டியும் போறது, ஒரு படம், பக்கத்துலே ஒரு விளக்கு, கொஞ்சம் துளசி, கல்கண்டு இருக்கக்கூடாதோ !!
திரும்பி நைட் 11 மணிக்கு வந்தப்புறம் தான் அப்பாதுரை சார் பதிவு பார்த்தேன்.
ஜீனாவையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமேன்னு தோணித்துன்னா அது தாத்தாவுக்கு வயசாயிடுத்து, ஒரு துணைக்குத்தான் என்று நம்பணும்.
சுப்பு தாத்தா.
கதை வாத்தியார் பாணியில் சூப்பரா போகுது.
பதிலளிநீக்குசுப்பு சாரின் பின்னூட்டங்கள் இன்னும் சுவை.
Same situation again. igate CEO take a lot of stock option for profit goals, but stock price is not focus area. Patna Systems is same as Patni Systems. This story is too much like real. Very much want to see the ending.
பதிலளிநீக்குகதையில் விறுவிறுப்புக் கூடிக் கொண்டே போகிறது. அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கிறேன்
பதிலளிநீக்குவிறுவிறு, சுறுசுறு. அருமையான கதையோட்டம். எப்படி எல்லாம் யோசிக்கிறீங்கனு நினைச்சால் ஆச்சரியமா இருக்கு.
பதிலளிநீக்குNot only the story but also the comments are quite thrilling to read. Hope the next part will be the last one but I am unable to make out what you got from the heap of files. Waiting eagerly to read the next part.
பதிலளிநீக்குNot only the story but also the comments are quite thrilling to read. Hope the next part will be the last one but I am unable to make out what you got from the heap of files. Waiting eagerly to read the next part.
பதிலளிநீக்குஅடுத்த பாகம் எங்கே?
பதிலளிநீக்குமூன்று பாகத்தையும் ஒருசேர படித்ததில் புரிந்தது விருட்சத்திற்க்காண விதை! கூட்டிக் கழிச்சி அனானி அதை அம்பலப்படுத்தி விட்டார்.
பதிலளிநீக்குஎன் மண்டைக்கு நசிகேத வெண்பா புரியவில்லை, ஆனா நசுக்குற வெண்பா புரிகிறது :)
கம்பன் வீட்டுக் கட்டுத்தறி - சுப்பு தாத்தாகிட்ட ஜாக்கிரதையா இருங்க. கதையில் பொன்னேசனோட டவுசர நீங்க உருவப்போறீங்களோ இல்லையோ, சுப்பு தாத்தா பின்னூட்டம் போட்டு உங்க டவுசர உருவிட்டடாங்கோ :) :) - சிரித்து மகிந்தேன் - நன்றி.