◄◄ 1
"நீ எதுக்கு வருத்தப்படுறே? ஐ டோன்ட் நீட் எனி சிம்பதி" என்றார் பொன்னேசன், காபி பருகியவாறு.
எனக்கு வேண்டும். ஒரு பேச்சுக்காக சொல்லி வைத்தேன், அவர் நிலமைக்கு வருந்துவதாக. மனிதர் சிறிதும் அவமானனோ வருத்தமோ படவில்லை என்பது புரிந்ததும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஜீனா ரகசியமாக என்னைக் கிண்டல் செய்தாள்.
அடுத்த சில நிமிடங்களில் பொன்னேசன் தன் பார்வையில் நடந்ததை விளக்கி முடித்தார். "ஸீ.. தெர் இஸ் நோ ஹெரேஸ்மென்ட்.. அந்தப் பொம்பிளை ஹெரேஸ்மென்ட்னு சொன்னா நான் எதிர் கேஸ் போடுணும்.. என்ன சொல்றீங்க? என் மேலே பாலியல் மீறல் வழக்கு போட அந்தம்மாவுக்கு உரிமையில்லே.. கம்பெனி ரூல்ஸ்படி இந்தக் காரணத்துக்காக என்னை வெளியேறச் சொன்னதே என்னைக் கேட்டா தப்பு.. இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உண்டான கன்சென்சஸ் உறவு.. வீட்டுக்கு வெளிய இப்படி ஒரு உறவு வச்சதுக்காக, என் பெண்டாட்டி என் மேலே அடல்ட்ரி கேஸ் போடட்டும்.. இல்லே அந்தப் பொண்ணு எதுனா செய்யட்டும்.. அதை விட்டு பாலியல் மீறல்னு சொல்றது அபாண்டம்.. மூணு வருசமா தானா வந்து தானே என் பக்கத்துல படுத்தா? புருசனுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ தானே எங்கூட ஊர் ஊரா சுத்தினா? ஓட்டல் ஓட்டலா படுத்தா? இப்ப ஹெரேஸ்மென்ட்னு சொன்னா?"
"சார்.. செக்சுவல் ஹெரேஸ்மென்ட்னா என்னனு நினைக்கிறீங்க?" என்றாள் ஜீனா. சரியாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறாள் என்று அஞ்சினேன். ஜீனா கவலைப்படவில்லை. "மிஸ்டர் பொன்னேசன்.. ஒரு பொண்ணு உங்ககூட படுத்த பிறகு கூட பாலியல் மீறல்னு புகார் தரலாம்.. இட் இஸ் நாட் ஜஸ்ட் த ஆக்ட்.. ஒரு பொண்ணைத் தொடாமலே கூட ஹெரேஸ் பண்ணலாம்.. ஒரு புருஷனோ பெண்டாட்டியோ கூட தங்களுக்குள்ளே செக்சுவல் ஹெரேஸ்மென்ட் அனுபவிக்க முடியும்.."
"இதை நீ தெளிவா சொல்லுறப்ப என்னால் ஏற்க முடியுது.." சிரிக்காமல் சொன்னார் பொன்னேசன்.
"வொர்க்ப்லேஸ் ஹெரேஸ்மென்ட் சட்டம் என்ன சொல்லுதுனா.. ஒருவரின் பதவி, பதவியினால் கிடைக்கும் அதிகாரம், செல்வாக்கு.. இவை தன்னுடன் அல்லது தனக்குக் கீழே வேலை செய்வோரிடையே தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ பாலியல் மீறலைத் தூண்டினால், அது ஹெரேஸ்மென்ட். நீங்க ஒரு சிஇஓ என்கிறதால உங்க கம்பெனியில இருக்குற அத்தனை பேரும் இந்த விதிக்கு உட்பட்டவங்க.. இன்னொரு விதத்துல சொல்லணும்னா, அவங்க அத்தனை பேரும் உங்க கீழே இருக்குறதால நீங்க இந்த விதிக்கு உட்பட்டவர். உங்க செயலுக்குப் பின்னால இருப்பது உங்க பதவி, அதனால் கிடைக்கிற அதிகாரம், அதனால் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ நடக்கக்கூடிய மீறல்.. லெட் மி டெல் யு.. உங்க கம்பெனி ஆட்கள்னு மட்டுமில்லே, உங்க கஸ்டமர் சப்லையருங்க கூட பாலியல் மீறலை உங்க அதிகாரத்தின் அடிப்படையில் உணரமுடியும்".
பொன்னேசன் விளையாட்டு அதிர்ச்சியுடன் ரிக்லைனரில் சாய்ந்தார். கைகளைக் குறுக்கி பாசாங்குப் பயத்துடன், "மை குட்னஸ், போற போக்குல பொம்பளை சாமிங்களைத் தவிர யாரையும் விட்டு வைக்கலே போலிருக்கே?" என்றார். அடுத்த நொடியில் நிமிர்ந்தமர்ந்து எங்களை நேராகப் பார்த்தார். "குட் ஜீனா. ஒண்ணு செய், என்னோட அடுத்த கம்பெனியில் பாலியல் மீறல் பத்தி நீ வந்து லெக்சர் குடு.. ஹோல்ட் ஆன் டு தட் ப்ரோமைட் அன்டில் தென். இப்ப வந்த வேலையைக் கவனிப்போமா?" என்றார் மிக இயல்பாக.
ஜீனா சுதாரித்து, "சாரி மிஸ்டர் பொன்னேசன்.. ஐ நெவர் மென்ட் டு சவுன்ட் ரைஷ்சியஸ்" என்றாள்.
பொன்னேசன் கண்டுகொள்ளவில்லை. "லுக்" என்றார் என்னைப் பார்த்து. "இந்த விவகாரத்தை நீங்க ஹேண்டில் பண்ணுங்க.. கோர்ட் கேஸ்னு போக வேண்டிய அவசியமில்லே.. அப்படித் தேவைப்பட்டா யு கேன் டேக் கேர்.. இதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாத்தீங்கன்னா அபாண்டமா என்னை வேலையை விட்டு நீக்கியிருக்குறது தெரியும்".
ஜீனா ஒரு பவர்பாயின்ட் ஸ்லைடை அவர் முன் நகர்த்தினாள். எனக்கொன்று தந்தாள். மிதமாகக் கனைத்து, "சார்.. உங்க எம்ப்லாய்மென்ட் கான்ட்ரேக்ட் படி நீங்க மூணு இலக்குகளை ஏத்துக்கிட்டீங்க.. நஷ்டத்துல ஓடிட்டிருந்த சிலிகான்கேட் கம்பெனியை லாபகரமா மாத்துறது, ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்த பெரிய கான்ட்ரேக்டுகளின் வருமான அளவை முப்பது சதவிகிதத்துக்கு உயர்த்துறது, கம்பெனி பங்கு விலையை அறுபது டாலருக்கு எடுத்துட்டுப் போறது. இந்த மூணுல பங்குவிலை ஒரு மென்னிலக்கு. முதல் இரண்டு இலக்குகளை ஏற்கனவே சாதிச்சிட்டீங்க.. இன் பேக்ட்.. கடந்த மூணு வருசமா சிலிகான்கேட் இருபது பர்சென்ட் நிகர லாபத்துக்கு ஓடிட்டிருக்கு.. பிலியன் டாலர் கம்பெனியாவணும்னு நீங்க சமீபத்துல வாங்கின பாட்னா சிஸ்டம்ஸ் சேர்த்து மொத்த வருமானம் கூடினாலும்.. பங்கு விலை குறையவும் அதுவே காரணமாயிருக்கு.. உங்க இலக்குகளை அடையவில்லைனு உங்களை வேலை நீக்கம் செஞ்சா அது அபாண்டம்.. ராங்க்புல் டெர்மினேசன்.. ஆனா.."
ஜீனாவை அடக்கினேன். "ஜீனா என்ன சொல்றாங்கன்னா.. இதைக் காரணம் காட்டாம எதையோ சொல்லி உங்களை வேலையை விட்டு எடுத்தது தப்புதான்.. தே ஹேவ் டு பே" என்றேன். பொன்னேசனின் முகம் சற்று அமைதியானது.
'இனி வாயைத் திறக்காதே' என்று ஜீனாவுக்கு சைகை காட்டினேன். பொன்னேசனை நேராகப் பார்த்தேன். "இந்தக் கணத்துலந்து நாங்க உங்க ஸ்போக்ஸ் டீம். நான் எல்லாத்தையும் கவனிச்சுக்குறேன். டூ கன்டிஷன்ஸ். ஐ'ம் யுர் நெகோசியேடர் அன்ட் லாபியிஸ்ட், அதனால நான் சொல்றதை நீங்க கேட்கணும்.. நோ மோர் இன்டர்வ்யூஸ்.. பத்திரிகை, டிவி, இன்டர்னெட் எதுக்கும் என்னைக் கேட்காமல் பேட்டி தராதீங்க.. ஏற்கனவே கொடுத்த பேட்டிகளை நாங்க பார்த்துக்குறோம். சிலிகான்கேட் கார்பரேட் போர்ட், இல்லே வக்கீல் நோட்டீஸ், கோர்ட் சம்மன், எதுவானாலும் எங்கிட்டே அனுப்பிருங்க. அனேகமா யாரும் நாளைலந்து உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டாங்க". ஜீனாவை நோக்கித் தலையசைத்தேன். ஜீனா நாலைந்து படிவங்களை அவர்முன் வைத்தாள். "இந்தப் பேப்பருங்கள்ள கையெழுத்துப் போடுங்க.. இந்த கேஸ் தொடர்பா அந்தம்மா, சிலிகான்கேட் போர்ட், எதிர்தரப்பு வக்கீல்கள் அத்தனை பேருடனும் உங்கள் சார்பில் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த நீங்கள் தரும் சம்மதம்.." என்று விளக்கினாள்.
சமாதானமாக, "திஸ் வில் நாட் கோ டு கோர்ட்.. ஒரு வாரத்துல இதை மக்கள் மறந்துருவாங்க.. ஒரு மாசத்துல மறைஞ்சே போயிரும்.." என்றேன்.
"ஐ நீட் எ செடில்மென்ட்.. எவ்வளவு எதிர்பார்க்கலாம்? எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டாங்களே?" என்றார் பொன்னேசன்.
அவர் குரலில் தொனித்தது கலவரமா கேலியா புரியவில்லை. எனினும் கவனமாக, "உங்க செவரென்ஸ் அஞ்சு இல்லே ஆறு மிலியன்? அந்தப் பெண்ணோட அமைதிக்கும் ஒத்துழைப்புக்கும் மிஞ்சிப் போச்சுனா அரை மிலியன். அதைத் தவிர எங்க சமபளம். அத்தனையும் சிலிகான்கேட் கம்பெனிகிட்டே வாங்கிடறேன்.." என்றேன். ஆறுதலாகத் தொனிக்காமல் அதே நேரம் கரிசனத்தோடு, "பொன்னேசன்.. இந்தக் கேஸ் அமுங்கிரும். இந்தக் கையெழுத்துங்களுக்குப் பிறகு நீங்க யார் கிட்டேயும் முகம் கொடுத்துப் பேச வேண்டிய அவசியமே இல்லை, லீவ் இட் டு அஸ். நான் பார்த்துக் கொள்கிறேன். ஒரு வாரத்துல செடில்மென்ட் டேபிலுக்கு எடுத்து வந்துடறேன்.."
பொன்னேசன் சிரித்தார். "ஆனா அஞ்சாறு மிலியன் இல்லே ப்ரதர்.. ட்ரை அம்பது அறுபது.. டு யு கெட் இட்? நீ எதுவுமே செய்ய வேண்டாம், மூளையை உபயோகிச்சா போதும். அதுக்குத்தான் உனக்கு வருசாந்தர ரிடெய்னர் கொடுத்தேன்.. யோசிக்காம சும்மா ஏதானும் குட்டையைக் குழப்பினே, கொட்டையை நசுக்கிறுவேன், ஓகே?" என்றார். கையெழுத்திட்டு எழுந்தார். ஜீனாவிடம், "இந்த ஆளோட ஏன் டயத்தை வேஸ்ட் செய்யுறே? கம் வித் மி" என்றார்.
விருட்டென்று எழுந்து என்னைப் பார்த்து, "கீப் மி போஸ்டட்" என்றார். நொடிகளில் எஸ்கலேடரில் மறைந்தார்.
அடுத்த அரைமணி நேரத்துக்குள் மாருதி பொன்னேசன் விவகாரம் முழுதும் எங்கள் அலுவலகத்துச் சொந்தமாகிவிட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக அவர் சார்பில் இனி எங்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டுமென்று அத்தனை பேருக்கும் செய்தி சொல்லியாகிவிட்டது.
தொடர்ந்து செய்ய வேண்டியவற்றை ஜீனாவும் நானும் பட்டியல் போட்டோம்.
- சிலிகான்கேட் போர்ட் அதிகாரிகளான அனில் குமார், சூரி அகர்வாலுடன் பேட்டி - நான்
- பாலியல் மீறல் வழக்கு போட்டிருக்கும் பெண்ணான டேனிகா ஹிக்ஸுடன் பேட்டி - ஜீனா
- பொன்னேசன் சேருவதற்கு முந்தைய இரண்டு, சேர்ந்த பின்னர் வெளியான அத்தனை, வருடங்களின் சிலிகான்கேட் வருடாந்தர வரவு செலவு அறிக்கைகளின் ஆய்வு - ஜீனா
- இந்த வருடத்தின் இடைக்கால கணக்கறிக்கையை சிலிகான்கேட் கம்பெனியிலிருந்து பெறுவது - ஜீனா
- சிலிகான் கேட் கம்பெனியின் ஹெச்.ஆர் தலைமையுடன் பேச்சு - நான்
- டேனிகா ஹிக்ஸின் வக்கீலுடன் பேச்சு வார்த்தை - நான்
- பொன்னேசனுக்குச் சேரவேண்டிய தொகையின் முதல் கட்ட கணக்கெடுப்பு - நானும் ஜீனாவும்
- பொன்னேசன் அனுமதியுடன் செடில்மென்ட் திட்டம் - நானும் ஜீனாவும்
- செடில்மென்ட் பேச்சுவார்த்தை - நானும் ஜீனாவும்
- தீர்வு, சுபம், எங்கள் சம்பளத்துக்கான செக் - சிலிகான்கேட்
பேட்டிகளுக்கான ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்தாள் ஜீனா.
அடுத்த மூன்று நாட்களில் அனில் குமாரையும் சூரி அகர்வாலையும் தனித்தனியாகச் சந்தித்தேன். அவர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு என்னுடன் பேசியது சுலபமாகப் புரிந்தது. ஒரு வக்கீலோ பிஆரோ இல்லாமல் என்னுடன் நேராகப் பேசியது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. இருவருக்குமே மாருதி பொன்னேசனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது.
"அவருக்கு நாங்க கொடுத்தது செகன்ட் சான்ஸ். வேறே யார் கொடுப்பாங்க? அதை மதிக்காம மறுபடி இப்படி செக்ஸ் வெறி பிடிச்சு அலஞ்சு கம்பெனி பெயரையே நாசம் பண்ணிட்டாரு"
"அவரை நீங்க வேலைக்கு எடுக்குறப்ப இந்த பின்புலம் தெரிஞ்சு தானே எடுத்தீங்க..? இது மறுபடி நிகழாம தடுக்க என்ன செஞ்சீங்க?"
பதிலில்லை.
"அவரை நீங்க வேலைக்கு எடுத்த காரணம் அவரோட திறமை. இரண்டு தரப்புலயும் ஒத்துக்கிட்ட இலக்குகள். அதுல ஏதும் சந்தேகம் இல்லையே?"
"இல்லை"
"கம்பெனி லாபம், வருமான உயர்வு இரண்டையும் அவர் பல மடங்கு அதிகமா சாதிச்சுக் காட்டியிருக்காரு, உண்மை தானே?"
"உண்மை"
"அதனால் அவருக்குச் சேர வேண்டியதைக் கொடுக்கத்தானே வேண்டும்?"
"அதை நாங்க மறுக்கலியே? ஆனா அதே நேரம் அவர் கான்ட்ராக்டை சரியாப் படிச்சுப் பாருங்க.. தகாத நடவடிக்கையின் காரணமாக வேலை நீக்கம் செய்யப்படுமானால் ஊக்கத்தொகை அத்தனையும் மறுக்கப்படும்னு தெளிவா சொல்லியிருக்கு பாருங்க.. திஸ் இன்க்லூட்ஸ் அன்வெஸ்டட் ஸ்டாக்"
"தகாத நடவடிக்கைனு எதைச் சொல்றீங்க?"
"வாட் மிஸ்டர்? அந்தப் பொண்ணு செக்சுவல் ஹெரேஸ்மென்டுனு புகார் கொடுத்திருக்காங்க.."
"புகார் தானே? இன்னும் நிரூபணமாகலியே?"
"வாட்? ஏற்கனவே பாலியல் மீறல் பின்புலம் இருக்குற ஒரு சிஇஓவை வச்சுக்கிட்டிருக்குறது போதாதுனு, இப்ப புகார்கள் வரத்தொடங்கிய பிறகும் எப்படி இவரைத் தொடர்ந்து வேலையில் வச்சிருக்க முடியும்? எங்க எம்ப்லாயீஸ் என்ன நினைப்பாங்க? கஸ்டமர்ஸ் ரெண்டு பேர் ஏற்கனவே விளக்கம் கேட்டு இமெயில் அனுப்பியிருக்காங்க.. வேணும்னா உங்களுக்கு அந்த இமெயிலை காட்டுறோம். ஒரு ஒழுங்கீனம் நடந்துச்சுன்னா அதை உடனடியாக முறைக்குக் கொண்டு வரது தான் போர்டின் கடமை. அதைத்தான் நாங்க செஞ்சோம்.."
"போர்ட்ல அதிக வாக்குரிமை உங்க ரெண்டு பேருக்குத்தானே இருக்கு? மிச்ச போர்ட் மெம்பர்ஸ் எல்லாரும் விசாரிச்சாங்களா?"
"லுக் ஹியர்.. அதிக வாக்குரிமை இருக்குற நாங்க ரெண்டு பேர்தான் மாருதியை உள்ளாற கொண்டு வந்தோம்.. இப்ப எங்க கடமையைச் செய்யுறோம்.."
"பொன்னேசனுக்குச் சேர வேண்டியதை தர மறுத்தா நீங்க கோர்டுக்கு வரவேண்டியிருக்கும்.. இன்னும் நிறைய கணக்கு வழக்குகளை பொதுவில் கொண்டு வரவேண்டியிருக்கும்"
"வி வில் ஸீ அபவுட் தட்.. மொதல்ல பொன்னேசன் ஜெயிலுக்குப் போகாம இருக்காரா பார்க்கலாம்.."
"ஹி வில் நாட். அவசியமேயில்லை. இங்கே நடந்திருக்குறது ஒரு குற்றம் அல்ல. தவறு, அவ்வளவுதான். ஒரு முதிர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டிருக்குற ஒழுக்கச் சிக்கல். அந்தம்மா பாலியல் மீறலை நிரூபிக்கவே முடியாது. இத்தனை வருஷங்களுக்குப் பிறகு. அதுவும் இப்ப ஒரு குழந்தை மாருதியுடையதுனு சொல்றாங்க.. விச் இஸ் கவுன்டர் டு ஹர் க்லெய்ம். இது கோர்ட்ல பத்து நிமிசம் கூட நிக்காது. உண்மையைச் சொல்லணும்னா, உங்க கம்பெனிக்கு எதிரான சிவில் கேஸ் தான் ஜெயிக்க சான்ஸ் இருக்கு. உங்க கம்பெனியில வேலை பார்த்த அந்தம்மாவுக்குத் தகுந்த பாதுகாப்பு கொடுக்கத் தவறிய காரணத்துனால உங்க கம்பெனி தான் அவங்களுக்கு பெரிய நஷ்ட ஈடு தரவேண்டியிருக்கும்.."
"ஹெரேஸ்மென்ட் கேசை நாங்க பாத்துக்குறோம். பொன்னேசன் செய்தது எங்க கம்பெனி ரூல்ஸ்படி அத்துமீறல். பாலியல் அத்துமீறலுக்கு உடனடி வேலை நீக்கம் என்பது கம்பெனி ரூல். அதைத்தான் செய்திருக்கிறோம். வேறே ஏதாவது வேணும்னுனா பிறகு பேசுவோம்".
அத்துடன் அவர்களின் பேச்சு வார்த்தை முடிந்தது. ஹெச்.ஆர் தலைமையுடன் பேசியதில் பிரமாதமாக ஒன்றும் தெளிவாகவில்லை. அந்தப் பெண்மணியே கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தார். கம்பெனிக்கு என்ன ஆகுமோ என்றக் கவலை. தற்செயலாக சிலிகான்கேட் விற்பனைக் குழுவில் இருவரைச் சந்தித்துப் பேசியதில், இரண்டு மூன்று வாட்காவுக்குப் பிறகு, சூரி அனில் இருவருக்குமே பொன்னேசனைப் பிடிக்காது என்பது தெரிய வந்தது. மெள்ளப் பேச்சுக் கொடுத்தேன். விழுந்தார்கள்.
"பொன்னேசனின் திறமைக்காக உள்ளே கொண்டு வந்தார்கள், ஆனால் தொடர்ந்து லாபம் காட்டியதில் லட்சக்கணக்கில் ஸ்டாக் ஆப்ஷன் பார்த்துவிட்ட பொன்னேசனைக் கண்டால் இருவருக்கும் வயிற்றெரிச்சல்.. நல்ல வேளையாக பொன்னேசனின் பெண்பித்து ஒரு வழி காட்டி விட்டது.. உடனே வேலை நீக்கம் செய்து விட்டார்கள்.."
"அதுமட்டுமில்லே.. என்னைக்கேட்டா சூரியும் அனிலும் அந்தம்மாவைப் புகார் தரச்சொல்லித் தூண்டியிருப்பாங்கனும் தோணுது"
"பொன்னேசன் பொம்பளைப் பொறுக்கி சார்.. இன்போசயன்சுலயே வெள்ளாண்டவன் தானே? இங்க வந்து சும்மா இருப்பானா? பொம்பளைப் பொறுக்கித்தனம் ஒரு வியாதி மாதிரி.."
எல்லாவற்றையும் மனதுள் குறித்துக்கொண்டேன். குடிக்கும் சாப்பாட்டுக்கும் பணம் கட்டி அவர்களுக்கு நன்றி சொல்லி வெளியே வந்தேன். ரெஜினாவுக்கு போன் செய்தேன்.
"டேனிகா நிச்சயம் கேஸ் போடுவதாகச் சொல்லுறா" என்றாள் ஜீனா. "அவளுக்குக் கல்யாணமாயிடுச்சே தவிர அவளும் கணவரும் லீகலி செபரேடட். கேதலிக் சமாசாரம். இங்கே அடல்ட்ரி கொஞ்சம் கொழகொழ விவகாரம். ஷி இஸ் டெக்னிகலி சிங்கில். பொன்னேசனைத் தவிர அவளுக்கு ரெண்டு சினேகிதர்கள் இருக்காங்களாம். ஒருத்தனோட ஸ்டெடியா வேறே இருந்தாளாம். பக்கத்து வீட்ல சொன்னாங்க. நான் போனப்ப அவ வீட்டுல ஒரு ஆம்பிளை இருந்தான். கேட்டா உறவுக்காரப் பையன்னு ஏதோ சொல்றா. ரொம்ப குழப்பமான விஷயம், பாஸ். ஆனா இந்தக் குழந்தை நிச்சயம் பொன்னேசனதுனு அடிச்சு சொல்றா. இத்தனை நாள் ஏன் பேசாம இருந்தேனு கேட்டப்ப, பயம்னு சொல்றா. இப்ப ஏன் வெளில வந்து எல்லாத்தியும் சொல்றேனு கேட்டா.. தான் செய்யுறது தப்புனு தோணுறதாவும் பிறந்த குழந்தைக்கு பொருளாதார சமூக ரீதியில் பாதுகாப்பு வேணும் என்கிற காரணத்துனாலயும் அதை பொன்னேசன் தர மறுத்த காரணத்துனாலயும்னு சொல்றா.. இந்த மாதிரி கேஸ்ல வழக்கமா வர பதில்கள்"
"நம்புறியா?"
"பிப்டி பிப்டி. உன் மீடிங்லாம் எப்படிப் போச்சு பாஸ்?"
சொன்னேன். "கம்பெனி போர்டே அந்தம்மாவைத் தூண்டிவிட்டிருக்கும்னு சொல்றாங்க என் குடிகார இன்பார்மர்ஸ்" என்றுச் சிரித்தேன்.
"இன்ட்ரஸ்டிங்"
"ஏன்?"
"பிகாஸ்.. நான் ஒரு நம்ப முடியாத விஷயம் தெரிஞ்சுக்கிட்டேனே!"
"என்னனு கேட்டாதான் சொல்வியா?"
"என்ன விஷயம்னு பணிவா கேளேன் பாஸ்?"
"என்ன விஷயம் சொல்லுங்க ரெஜினா, ப்லீஸ்"
"பெடர். டேனிகா வீட்டுக்கு திருமதி பொன்னேசன் அடிக்கடி வந்திருக்காங்க.."
"வாட்?"
"பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டே போட்டோஸ் காட்டினேன். பொன்னேசனைப் பார்த்ததே இல்லை, ஆனா நிர்மலா பொன்னேசனை அப்பப்போ பாக்குறதா சத்தியம் செய்றாங்க".
[வளரும்]➧ 3
கதை (வேறு விதமாக) சுவாரஸ்யத்துடன் செல்கிறது...
பதிலளிநீக்குOh my God!!! What a twist in the last line of this story.
பதிலளிநீக்கு"After this signature, you need not talk to anybody showing your face". Does it mean that he will not have face to face anybody.
//"பெடர். டேனிகா வீட்டுக்கு திருமதி பொன்னேசன் அடிக்கடி வந்திருக்காங்க.."
பதிலளிநீக்கு"வாட்?"//
வாட்?!
(சிறுகதை?)
நீங்கள் கதை சொல்லும் விதம் சுஜாதாவை நினவுபடுத்துகிறது.
ஒரு வித்தியாசமான கதைக் களம்.. அந்த அப்பாவியின் முடிவை தெரிந்து கொள்ள ஆவலுடன்
பதிலளிநீக்குகடைசி லைன்..... :)
பதிலளிநீக்குபார்க்கலாம் இன்னும் எங்கே செல்லப் போகிறது கதை என....
வித்தியாசமான கதைக் களம். தொடர்கிறேன் அய்யா
பதிலளிநீக்குஅப்பாவியா...அப் பாவியா?
பதிலளிநீக்குவாவ் துரை.
ஏதோ களேயபரமான கதைகள் குவிந்துவிட்ட பிரமை. எங்கேயோ போயிட்டோம் நாம். இப்படியேல்லாம் நடக்கிறதா:)
லாஸ்ட் லைன் பிரமாத பன்ச்.
சுவாரஸ்யம் குன்றாத வரிகள்.
யார் அப்பாவி??? பொன்னேசனா? :)மறுபடி வரேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகேசின் நெளிவு சுளுவுகளைப் புரிந்து கொண்டு உள்வாங்கிப் படிப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. டீடெயில்ஸை விலக்கி மேலோட்டமாக கதை யைப் படித்தால் ...... ஹும் ...இருந்தாலும் ... தொடர்ந்துபார்க்கிறேனே....!
அனில் குமாரையும் சூரி அகர்வாலையும் is equal the same as Shri. Sunil Wadhwani and Shri. Ashok Thrivedhi - both don't get well along with the CEO inside - you have bring the same situation in story.
பதிலளிநீக்கு