2012/08/23
எந்தப் புதிரில் எந்தப் பதிவோ?
பதிவர் விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவறிவைக் கொஞ்சம் உரைத்துப் பார்க்கலாமா?
கீழ்வரும் 'குறுக்கெழுத்துப் புதிர்' என்றத் தலைப்பை (சுட்டியை) க்ளிக்கினால், பதிவுகள்/பதிவர்களை அடையாளம் காட்டும் குறுக்கெழுத்துப் புதிர் புதிய பக்கத்தில் தோன்றும்.
அறிக:
1. புதிரின் மேல் இடப்பக்க முனையில் தெரியும் '+' சின்னத்தைச் சொடுக்கினால் தமிழ் எழுத்து அட்டவணை தோன்றும். விடைக்கான எழுத்தை அட்டவணையிலிருந்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. விடைகளுக்கான துப்புகளும், விடைகளும் புதிர்ப் பக்கத்தில் கிடைக்கும். (பிட் அடித்தே பிழைத்தவர்கள் மேல் பாசமுண்டு, நேசமுண்டு)
குறுக்கெழுத்துப் புதிர்
மேலும் அறிக:
1. புதிரைச் செயல்படுத்த Flash மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். சமீபத் தேடலில் Flash இங்கே கிடைத்தது
2. சில உலாவிகளில் புதிர் காணாமல் போகிறது அல்லது கிறுக்கலாகத் தோன்றுகிறது. அட்டவணையில் எழுத்துக்கள் நெட்டித்தள்ளி வருகின்றன. முதல் வரிசையை மாதிரியாகப் பாவித்துத் தேவையான எழுத்தைத் தீர்மானிக்கவும். உதாரணத்துக்கு: முதல் வரிசை 'ஔ' உயிரெழுத்தின் கீழே இருப்பவை 'கௌ'லிருந்து 'ஹௌ' வரையிலான உயிர்மெய்கள். குளறுபடிக்குக் காரணம் தெரியவில்லை, தீர்வும் தெரியவில்லை. (க்கும்.. அத்தனை தொழில்நுட்பம் தெரிந்தால் நான் கைப்பூனையை என்றோ துரத்தியிருப்பேனே?)
முடிவாக அறிக:
கணினியில் புதிர் கடவுள் போல் தெரிந்தால் இந்த எளியோனை மன்னித்து, சேர்த்திருக்கும் ரஸ்ஸ்சமான 'A' certified எஸ்பிபி டூயட்களில் உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் துணையோடோ தனியாகவோ முணுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். (பாடல்களைப் புதிர்ப்பக்கத்திலும் யோசித்தபடியே கேட்கலாம் அ கேட்டபடியே யோசிக்கலாம். புதிர் முயற்சி பண்றவங்களுக்கு ஒரே ஒரு சின்ன surprise).
எஸ்பிபி 'A' டூயட்கள் சில | 2012/8/23
புதிரை (விடைகளோடு) தனியாக பிடிஎப் வடிவில் சேர்த்திருக்கிறேன். கணினியில் பார்க்க முடியாதவர்களுக்காக.
pdf வடிவில் புதிர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்துகளே வரவில்லை.வெறும் கட்டம் கட்டமாக வருகிறது!
பதிலளிநீக்குVOW.... WONDERFUL.......
பதிலளிநீக்குPavala
(http://s105737641.onlinehome.us/blog/msuzhi/xword/padivar/index.html)
பதிலளிநீக்குஎதுவுமே வரவில்லை சார்....
படிச்சது பத்தாது. இன்னும் நிறைய பதிவுகளைப் படிக்கணும். அப்போ தான் பதில் சொல்ல முடியும்.
பதிலளிநீக்குரா. கி. ரங்கராஜன் கடிதத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
பதிலளிநீக்குசெம உழைப்பு அப்பாஜி!
பதிலளிநீக்குபார்த்த பார்வையில் அந்த 'மேலிருந்து கீழ்' 2-க்கான நாலெழுத்து விடை மட்டும் 'சட்'டென்று தெரிந்தது. ஆற அமர உட்கார்ந்து எல்லாவற்றிற்கும் விடை காண வேண்டும்.
அந்த கட்டங்களை நிரப்புவதற்கு வழிகாட்டியிருப்பதை சோதித்துப் பார்த்தலில் ஏற்பட்ட குஷி விசிலடிக்க வைத்தது.
அறிவார்ந்த உழைப்பு. மிக்க நன்றி, அப்பாஜி!
விடை பார்த்த பிறகு தான் தெரிந்தது உங்கள் உழைப்பு. மனம் திறந்து சொல்கிறேன். அருமை! நன்றி!
பதிலளிநீக்குஉங்கள் உழைப்பு மலைக்க வைக்கிறது....
பதிலளிநீக்குபாராட்டுகள் அப்பாதுரை ஜி!
என்னடா ரொம்ப நாளா மெல்லிசை நினைவுகளை நீங்க மீட்டவேயில்யேன்னு பாத்துண்டே இருந்தேன். ஒரு வாரம் வலைப்பூ பக்கம் வர முடியல. அதுக்குள்ள பாட்டெல்லாம் போட்டு தூள் கிளப்பி இருக்கீங்க. நானே உங்க கிட்டேயும் எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள், அதிலும் குறிப்பாக ஸ்ரீராம் கிட்டேயும் பாடல்கள் போட்டுங்களேன், நாளாச்சேன்னு கேக்கணும்னு இருந்தேன். இப்ப எல்லாம் முன்னாடி மாதிரி பதிவுகளுக்கு உடனே கமெண்ட் போட முடியறதில்லை. ஆடிக்கு ஒரு அமாவாசைக்கு ஒரு நாள் கமெண்ட் போடறவங்க கேக்கறத நாங்க மட்டும் உடனே பண்ணனுமான்னு நீங்க உடனே வரிஞ்சு கட்டிண்டு வந்தா, என்ன பண்றதுன்னு கம்முனு இருந்தேன். நல்ல வேளையா நீங்களாவே மெல்லிசை பதிவு போட்டுடீங்க. கூடவே போனஸும் குடுத்துடீங்க. அடுத்து ஸ்ரீராம் சார் கிட்டதான் எப்படி கேக்கறதுன்னு ஹிஹிஹிஹி........தெரியலைங்கோ! :)
பதிலளிநீக்குபுதிர் பிரமாதம். இந்த மாதிரி ஒரு ஐடியா வந்ததுக்கே உங்களுக்கு ஒரு சபாஷ் போடணும். சபாஷ்! எனக்கு தெரிந்த வலைப்பூவின் பெயர்களை மட்டுமே என்னால் கண்டு பிடிக்க முடிந்தது. மீதியை விடைகளை பார்த்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது. புதிருக்கான கேள்விகள் பிரமாதம். கலக்கிடீங்க!
பாடல்களில் 'அழைத்தால் வராவிடில்' எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
-எஸ் பி பி பாடலை நீங்கள் ரசித்திருப்பது ஆச்சர்யம்!
பதிலளிநீக்கு-எனக்குக் கட்டங்கள் தெளிவாகத் தெரிகின்றன. அபார முயற்சி. ஆனால் எனக்குதான் எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை!
-மீனாக்ஷி... சமீபத்தில் எங்கள் இடத்தில் பாடல் பகிர்வுகள் இருந்தனவே... இளையராஜா என்ற தலைப்பில் பார்க்கவும்/கேட்கவும்/ரசிக்கவும்!
-ஜீவி சார்... 'எங்கள்' பக்கம் வந்து நாளாச்சே...!
பதிலளிநீக்குகணினி வைத்துக் கொண்டு வலைப் பூவில் என்னமா அசத்துகிறீர்கள். இவ்வளவு தெரிந்தும் செய்தும் இன்னும் சரியாகத் தெரியவில்லை என்னும் குறை வேறு.!பாராட்டுக்கள் சார்.
அப்பாதுரை சார்,
பதிலளிநீக்குக்ராஸ்வர்ட் ஃபோர்ஜ் ன் அட்டகாசமான பயன்பாடு...
இதற்கான முயற்சியை விட, ஈடுபடும் ஆர்வம் பாராட்டத் தக்கது; என்னுடைய பெரியப்பா சாதாரணமாக எழுதும் கடிதம், மறக்க இயலாத படிப்பனுவத்தைத் தரும்..அவற்றைப் பார்க்கும் போது எப்படி இவருக்கு இந்த அளவு ஐடியாக்களும்,அதைச் செயல்படுத்துவதில் நையாண்டியும், நகைச்சுவையையும் சேர்க்கிறார் என்று பலமுறை வியந்திருக்கிறேன்..
அது போன்ற ஒரு அனுபவத்தைத் தந்த புதிர்ப்போட்டி.
நான்காரச்சக்கர பந்த'த்திற்கு ஒரு தனியான நன்றி. :))
அருமையாப் போட்டிருக்கீங்க. பார்த்து மலைச்சுப் போயிட்டேன். வல்லி சிம்ஹனையும், துளசியையும் மட்டுமே அடையாளம் காண முடிந்தது; மத்ததுக்கு நேரம், பொறுமை இல்லை. :)))) விடையைப் போட்டுப் பார்த்துட்டு மறுபடி அசந்தேன். :)))))))அபாரம்.
பதிலளிநீக்குபாட்டு கேட்டுட்டே இருக்கேன். ஆனால் ரொம்ப மாசம் வராததால் கண்டுப்பிடிக்க சிரமம்பா... இல்லன்னா மட்டும்... ம்க்கும்... அப்டின்னு நீங்க அங்க கேட்பது எனக்கு கேட்கிறது :)
பதிலளிநீக்குஹை பாட்டு கேட்க நல்லாருக்கே...
கீதா உங்கள் பெயரும் இருக்கிறது. மின்னல் வரிகள் கணேஷ் பெயர் இருக்கிறது. வீடுதிரும்பலும் இருக்கு.
பதிலளிநீக்குசபாஷ் துரை:)
குறுக்கெழுத்துப் புதிரில் உங்கள் திறமையையும் உழைப்பையும் பாராட்டுகிறேன். நிறைய பதிவுகள் படிக்க முடியவில்லையே என்ற எண்ணம் ஏற்படுகிறது.
பதிலளிநீக்குஅப்பாதுரை அவர்களே! என் போன்ற கணீணீ மூடர்களூக்காக விடிகளை கொடும் ஐயா! புதிரைப் படித்தேன். சிவகுமரன், போன்ற ஒன்றிரண்டுதான் தெரிந்தது.விடையை சரிபார்க்க கணிணி ஞானம் இல்லையே! ---காஸ்யபன்.
பதிலளிநீக்குஅப்பாதுரை அவர்களே! என் போன்ற கணீணீ மூடர்களூக்காக விடிகளை கொடும் ஐயா! புதிரைப் படித்தேன். சிவகுமரன், போன்ற ஒன்றிரண்டுதான் தெரிந்தது.விடையை சரிபார்க்க கணிணி ஞானம் இல்லையே! ---காஸ்யபன்.
பதிலளிநீக்குபின்னூட்டங்களுக்கும் இமெயில் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குபுதிரை (விடைகளோடு) தனியாக பிடிஎப் வடிவில் சேர்த்திருக்கிறேன். கணினியில் பார்க்க முடியாதவர்களுக்காக.
(பேரிஸ் விமான நிலையத்திலும் அங்கிருந்து சிகாகோ திரும்பி வருகையிலும் நிறைய நேரமிருந்தது கைவசம். அதான் :-)
பாராட்டுக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி.
தங்கள் கணிணிப் புலமையும் உழைப்பும் வியக்கவும் பொறாமைப்படவும் வைக்கிறது.
பதிலளிநீக்குஇந்தப் புதிரில் எனக்கு 50 மதிப்பெண் தான் . பாஸ் மார்க் எவ்வளவு அப்பாஜி?
ஆகா பெருமையாய் இருக்கிறது. காஷ்யபன் அய்யா என்னைக் கண்டு பிடித்து விட்டார்
பதிலளிநீக்குசார், கலக்குறீங்க சார். ரொம்ப நாள் ஆச்சே நிறைய படிக்க இருக்கும்னு வந்தேன்... நல்ல விருந்து. பதிவறிவு புதிர் தெளிவாக வருகின்றது, எனக்குதான் பாதியறிவு கூட இல்லை (?!) கொஞ்சம் பின்னூட்டங்களை தொடரந்து முன்னேறினேன். நன்றி.
பதிலளிநீக்கு