 |
பற்றியவன் பிள்ளைகள் உற்றவரைப் பேணியே
வற்றலாகிப் போகுதெம் பெண்ணினம் - சிற்றெலும்புப்
போடச் சிறுநாயும் காட்டுமே பன்றிகளாம்
ஆடவர் ஆளாத பண்பு.
ஆளாத: பெறாத, கொள்ளாத, பயன்படுத்தாத |
 |
சேயும் சகோதரியும் தாரமும் தாயுமிவர்
ஓயாப் புலம்பல் உயிர்ப்பிடுங்கி - பேயா
அறியும் அரைக்காசுத் தேடிவரும் ஆணின்
சொறிநாயும் பட்டிராதப் பாடு? |
 |
தீய்ந்துபோன ரொட்டியும் தின்றமிச்சச் சோறுமிவர்
வாயிலாதோர் என்றெறியுங் காரணத்தால் - காய்ப்புகளின்
சொல்லடியும் கல்லடியும் நாயா படவேண்டும்?
இல்லையோ எங்களுக்கு மாண்பு?
காய்ப்பு:வெறுப்பு
|