2013/04/12

புலம்பற்பா


யார் வேண்டுமானாலும் புலம்பலாம்.


பற்றியவன் பிள்ளைகள் உற்றவரைப் பேணியே
வற்றலாகிப் போகுதெம் பெண்ணினம் - சிற்றெலும்புப்
போடச் சிறுநாயும் காட்டுமே பன்றிகளாம்
ஆடவர் ஆளாத பண்பு.


ஆளாத: பெறாத, கொள்ளாத, பயன்படுத்தாத


சேயும் சகோதரியும் தாரமும் தாயுமிவர்
ஓயாப் புலம்பல் உயிர்ப்பிடுங்கி - பேயா
அறியும் அரைக்காசுத் தேடிவரும் ஆணின்
சொறிநாயும் பட்டிராதப் பாடு?


தீய்ந்துபோன ரொட்டியும் தின்றமிச்சச் சோறுமிவர்
வாயிலாதோர் என்றெறியுங் காரணத்தால் - காய்ப்புகளின்
சொல்லடியும் கல்லடியும் நாயா படவேண்டும்?
இல்லையோ எங்களுக்கு மாண்பு?

காய்ப்பு:வெறுப்பு

34 கருத்துகள்:

 1. ப்பா! எப்படியெல்லாம் யோசிக்கறீங்க!
  // சிற்றெலும்புப்
  போடச் சிறுநாயும் காட்டுமே பன்றிகளாம்
  ஆடவர் ஆளாதப் பண்பு.// இது புரியல.

  பதிலளிநீக்கு
 2. சிறுநாயும் காட்டுமே பன்றி - நன்றின்னு இருக்கணுமோன்னு தோணுது அப்பா ஸார்! நாய் படாத பாடுன்னு வார்த்தையில சொல்வாங்க...! பெண், ஆண், அப்புறம் நாயின் பாடுகளைச் சொல்லி ரொம்பவே ரசிக்க வெச்சுட்டீங்க!

  பதிலளிநீக்கு
 3. கணேஷ் சொன்னது போல நன்றி., பன்றி என்று தவறுதலாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். முதல் இரண்டு வெண்பாக்களில் ஆண் பெண் வாழ்க்கையை நாயின் வாழ்வோடு சிந்தித்ததும் மூன்றாவது பாடலில் நாயின் வழியாக சிந்தித்தது சிறப்பு. மூன்றிலுமே நாயை தொடர்பு படுத்தியது அருமை ஐயா!

  பதிலளிநீக்கு
 4. மாடய் உழைத்து ஓடாய் தேய்ந்து போன பெண் இனத்திற்கு ஆடவர் நன்றி காட்டவில்லை,ஆனால் நாயுக்கு சிறு எலும்பு போட்டதற்கு நன்றி காட்டுகிறது என்கிறீர்கள்.

  இரண்டாம் கவிதையில் மனைவி,குழந்தை தாய் அடங்கிய குடும்பத்திற்கு நாயாய் உழைக்கும் ஆணின் பாடு புரிகிறது.

  ஆண், பெண் மட்டும் தான் புலம்ப வேண்டுமா? நாங்களும் புலம்புகிறோம் என்கிறதோ நாய் மூன்றாவது கவிதையில்.

  பதிலளிநீக்கு
 5. எல்லோரின் பாடுகளையும்
  பாட்டாய் வடித்த பகிர்வுகள்.

  பதிலளிநீக்கு

 6. ஏதோ ஞானத்தைப்போதிக்கிறது என நினைக்கிறேன்.
  நான் ஒரு ஞான சூன்யம்.
  ஞானம் என்பதும் என்ன எனத்தெரியாது.
  சூன்யம் என்பதும் என்ன என விளங்காது.

  அலம்பல் அதிகம் பண்ணியாச்சு இனி
  புலம்பல் ஒண்ணு தான் பாக்கி இருக்கு.
  விரும்பல் என்றே இல்லை எனினும்...
  விசும்பல் கொஞ்சம் மிச்சமிருக்கு.

  நாற்திசை ஈட்டிய பொருளும் போச்சு.
  நான்முகன் தந்த நேரமும் போச்சு.
  நாயாப் பிறந்தாச்சு. கல்லடிக்கு அஞ்சுவதென்?
  வாயால் வாழ்பவனே !! ஊருக்கு பயமும் என்?

  சுப்பு தாத்தா.
  நாட் ஆன் ஆன்சர் டு யுவர் கவிதை விச் ஐ ஷல் ட்ரை டு அன்டர்ஸ்டான்ட்.
  www.subbuthatha.blogspot.in

  பதிலளிநீக்கு
 7. பெண், ஆண், நாய் என படும்பாடை இனிய பாவினால் அழகாகச் சொன்னீர்கள் ஐயா.
  அருமை! ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 8. நன்றி கோமதி அரசு மேடம்.

  கணேஷின் கேள்வி எனக்கும்!

  பதிலளிநீக்கு
 9. ஆண், பெண் சரி - நம்மிடம் திண்டாடும் நம் குழந்தைகள் ?

  பதிலளிநீக்கு
 10. பெண்ணின் புலம்பலுக்கு ஸ்ரீவித்யா, ஆணின் புலம்பலக்கு கமல்ஹாசன் - பாவிற்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டா?

  பதிலளிநீக்கு
 11. பின்னூட்டங்களுக்கு நன்றி.
  @Ranjani Narayanan - பிடிச்சீங்களே பாயிண்டு!
  ஹிஹி.. அது ஒண்ணுமில்லெங்க.. சிவகுமாரன் சிவகுமாரன்னு ஒரு கவிஞர். (அசல் கவிஞர்ன்றது வேறே விஷயம்).
  அவரு என்ன செஞ்சாருன்னா சிவாஜி கணேசன் படத்தைப் போட்டு காதல் வெண்பா எழுதினாரு. அதைப் படிச்சுட்டு நானும்.. அட இவருக்குத்தான் சினிமா ஸ்டார் படத்தைப் போட்டு பாட்டெழுத வருமா, எனக்கு வராதானு நானே சூடு போட்டுக்கிட்டு.. இவரு ஒரு ஸ்டார் படத்தைப் போட்டு எழுதினா நான் மூணு ஸ்டாருங்க படத்தைப் போட்டு எழுதுறதுனு தீர்மானம் செஞ்சேன்.

  ஸ்ரீவித்யா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் படத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். (இருங்க அக்கம்பக்கம் பாத்துட்டு வந்து எழுதுறேன்.)
  கமல்ஹாசன்.. மொதல்ல சிவாஜி படத்தைப் போடலாம்னு இருந்தேன். பாருங்க சிவகுமாரன் அதைச் செஞ்சுட்டாரு. அப்புறம் ரஜினிகாந்த் படம் போடலாம்னு பாத்தா.. ஏற்கனவே எழுதுற தமிழ் காமெடி, அதுல இவர் படத்தையும் போட்டா வெண்பா ரொம்ப காமெடியாயிரும்னு பயம்.. கடைசிலே கமல்ஹாசன் படத்தைப் போட்டேன். போட்ட வேளை பாருங்க, வெண்பா பாதிப் பேருக்குப் புரியவேயில்லை. இப்ப பாருங்க.. முதல் வெண்பாவுக்கு சரியான அர்த்தம் சொல்லுறவங்களுக்கு ஏதாவது பரிசு கூடத் தரலாம்னு யோசிக்கற அளவுக்கு வந்துட்டுது.. கமல் படம் போட்ட வேளை. (கோமதி அரசு கிட்டே வந்து வெலகிப் போயிட்டாரு).
  சார்லி: மூணு ஸ்டார்ல எனக்குப் பிடிச்ச ஸ்டார் கடைசியில் சார்லி தான். ஸ்ரீவித்யா கூட அப்புறம் தான். (பின்னால ஒருத்தர் பாத்துக்கிட்டே இருக்காங்க)

  @sury Siva: ஞானம் எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை. இது டமாஸ் கவதை.
  நீங்க எழுதியிருப்பது என்னவோ தத்துவம் தான்.

  பதிலளிநீக்கு
 12. Usually when I don't understand something, I try to look at the pictures and guess the story. Here, guessing the story takes it to an entirely different track. I fold ...

  பதிலளிநீக்கு
 13. விளக்கத்திற்கு நன்றி! மேலே Matangi Mawley கூறியிருப்பது போல புலம்பற்பா புரியாததால் புரிந்த ஸ்ரீவித்யா, கமலஹாசன் இவர்களைப் பற்றி எழுதிவிட்டேன்!
  எனக்கும் ஸ்ரீவித்யா ரொம்பவும் பிடிக்கும். நீங்கள் பெண் புலம்பலில் எழுதியிருப்பது ஓரளவுக்குஅவருக்குப் பொருந்தும். அதற்கு கீழே இருப்பவரும் காரணம் என்று சொல்வார்கள்.

  இனிய விஜய வருட புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 14. நல்ல வேளையாப்போச்சு. சீக்கிரமே வந்து பதில் சொல்லிட்டீக. ரொம்ப தாங்க்ஸ். நாந்தான் இருக்கிற இரண்டு முடியையும் பிச்சுகினு என்னா அர்த்தம்னு சுவத்தை முட்ட்கினு இருந்தேன்.

  // எனக்கு வராதானு நானே சூடு போட்டுக்கிட்டு.. இவரு ஒரு ஸ்டார் படத்தைப் போட்டு எழுதினா நான் மூணு ஸ்டாருங்க படத்தைப் போட்டு எழுதுறதுனு தீர்மானம் செஞ்சேன்.//

  1. சர்த்தான். கான மயிலாட... அந்த கேஸா...

  2. சிவ குமார் ஒரு உண்மையான கவிஞர். பிறவி கவிஞர். அவர் பேனாவே கவிதை எழுதுகிறது. அவரது
  பாடல்கள் அதுவும் அருட்கவி என்ற வலையிலே எழுதுபவை மரபுக்கவிதைகள். பொன்னான பாடல்கள் அவை
  தமிழ் இருக்கும் வரை நிலைத்து நிற்கும் சக்தி உடையவை.

  3. நான் மூணு ஸ்டார் படத்தைப்போட்டு...

  எனக்குத் தெரிஞ்சதெல்லாம் அசுவதி, பரணி, கார்த்திகை இதெல்லாம் ஸ்டார்.
  மத்ததெல்லாம் பவர் ஸ்டார்.

  மத்தாப்பு மாதிரி. கலர் கலரா எரிஞ்சு தீஞ்சு போய்விடும். அத வச்சுக்கினு விளையாடினவங்க தூக்கிப்போட்டுடுவானுக.

  அப்பாடி, அப்பாதுரையும் புரியறாப்போல எழுதிட்டாரு.

  தமிழ் வருஷம் பிறப்பு இன்று. விஜய வருஷம்.
  சர்வ மங்களானி பவந்து.

  எல்லாரும் ஜே ஜே அப்படின்னு இருக்கணும்.

  சுப்பு தாத்தா.  பதிலளிநீக்கு
 15. நல்லவேளையா விளக்கமெல்லாம் வந்ததும் வந்து படிச்சேனோ, பிழைச்சேன். :)))))

  பதிலளிநீக்கு
 16. ஸ்ரீவித்யாவின் சோகத்துக்குக் கொஞ்சம் தீனி போட்டவர் அடுத்தபடத்தில் இருப்பவர்.
  இவருடைய பலபாடுகளுக்கு அவரே காரணம்.

  இருக்கிறதிலியே சார்லி ரொம்பப் பாவம்.

  மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

 17. பலருக்கும் புரியாதபடி எழுதுபவனே கவிஞனோ...? டமாஸா எழுதினாலும் சொல்ல நினைப்பது போய்ச் சேர வேண்டும் என்று நினைப்பவன் நான். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. @Ranjani Narayanan & வல்லிசிம்ஹன். இது சுவாரசியமான விஷயமா இருக்கும் போலிருக்குதே? கூகிலில் தேடுறேன், கிசுகிசு ஏதும் காணோமே?
  வம்பு கிம்பு கிளம்புறதுக்கு முன்னால நானே சொல்லிடறேன். ஒரு கிசுகிசும் கிடையாதுங்கோ.

  பெண்: கணவன், பிள்ளைகள் மற்றும் உறவினருக்குப் பணிவிடை செய்தே எமது பெண்ணினம் வாடிப் போகிறது. பன்றிகளான ஆண்கள் அறியாத நன்றி எனும் பண்பை, சிறிய எலும்பை வழங்கியக் காரணத்துக்காக சிறிய நாய் கூட வெளிப்படுத்துகிறது.
  ஆண்: மகள், சகோதரி, மனைவி, தாய் எனும் பல வடிவங்களில் வரும் இந்தப் பெண்கள் ஓயாது புலம்பி உயிரை வாங்கும் வகையினர். அரைக்காசு தேடிவர ஆண்கள் படும் பாடு சொறிநாய் படும் பாட்டை விட மோசமானது என்பது பேய்களான பெண்களுக்கு எப்படித் தெரியப் போகிறது.
  நாய்: கருகிப் போன ரொட்டித்துண்டும் தின்று மிச்சமான சோற்றையும் எமக்கு வழங்கினீர்கள் என்பதற்காக நீங்கள் (உங்கள்) வெறுப்புக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் எங்களை ஏன் இழுக்க வேண்டும்? எங்களுக்கு தன்மானம் இல்லையா என்ன?

  a (ஓகே.. அடுத்து எழுதப்போற வெண்பா கோமதி அரசுக்குக் கூட புரியலின்னா நான் பொறுப்பில்லை :-)

  b (பைரவிக்கு என்ன சோகம் தெரியாது - ஆனால் அதற்கு சப்பாணி காரணமென்றால் இனிமேல் சப்பாணி படம் பார்க்கப் போவதில்லை. காசிக்குப் போய் கொத்தவரங்காய் விட்ட மாதிரி - ஏற்கனவே கொத்தவரங்காய் பிடிக்காது)

  பதிலளிநீக்கு
 19. //தமிழ் இருக்கும் வரை நிலைத்து நிற்கும் சக்தி உடையவை

  பிரமாதமாச் சொன்னீங்க. சிவகுமாரன் தனித்தட்டு.

  பதிலளிநீக்கு
 20. உத்தேசமா இதுவரை எட்டு தபா படிச்சிருப்பேன். ஸாரி, நிஜமாலுமே
  புரிஞ்சிக்க முடிலே. ஏதோ 'டிரிக்'கோன்னு கூட நெனைச்சேன்.
  தப்பும் தவறுமா எழுதறதை விட நீங்க என்ன சொல்லப்போறீங்கங்கறதுக்காக காத்திருந்தேன். இப்போ சொல்லீட்டீங்க; ஆனா,இப்போ கூட.. அது வேறு விஷயம்.

  தவறுகளைத் திறுத்தி, ஒழுங்குபடுத்தி
  எழுதறத்துக்காக இப்படியோன்னு கூட ஒரு சம்சயம் இருந்திச்சு. அதுக்காக ஒழுங்கில்லாம, கலைச்சு கலைச்சு வார்த்தைகளைப் போட்டிருக்கீங்களோ ன்னு கூட நெனைச்சேன். உதாரணமா,

  //சிற்றெலும்புப் போடச் சிறுநாயும் காட்டுமே பன்றிகளாம்
  ஆடவர் ஆளாத பண்பு.//

  இந்த வரிகளை இப்படி, அப்படி, எப்படிலாமோ மாத்தி மாத்தி போட்டுப் பார்த்தேன். ஒண்ணும் வசப்படலே.

  அப்பாஜின்னா படிச்சோம், போனோம்ன்னு போக முடிலே பாருங்க, அதான் உங்க வெற்றி! இல்லேனா, அதான் அப்பாஜி!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், அப்பாஜி!
  பதிலளிநீக்கு
 21. Sir, at the first instance I could not understand anything and same is the case even after reading two times. Then I read the comments and also your POZHIPURAI for your own poetry and then only I could understand the essence of all the
  Venbas.
  Good effort. Please keep it up.

  பதிலளிநீக்கு
 22. இது த‌ன் "பெரிய‌வாள் சென்னாப், பெருமாள் சொன்ன‌து மாதிரிங்கிற‌து"
  நீஙக எழுதின‌ க‌விதைவ‌ரிக‌ளை விடவும், எங்க‌ளிட‌ம் அத‌ன் வ‌ரிக‌ளுக்கிடையே,
  (ஊடாடும்) தேடுத‌ல் தொட‌ங்கிவிடுகிற‌து.

  இர‌ண்டாவ‌து கா,ம‌ன்ன‌ன் அவ‌ரைன் கால‌க‌ட்ட‌ எல்ல‌ ந‌டிகைக்ளோடும் ஏதாவ‌து ஒரு வித‌த்தில் ஊடோடி இருப்பார் என்ப‌து த‌மிழ‌க (திரைப‌ட‌) ம‌க்க‌ள் அறிந்த‌தே. உங்க‌ளுக்கு கொத்த‌வ‌ர‌ங்காயெனுல் எனக்கு சுரைக்காய், ஆனால் க‌ம‌ல் விச‌ய‌த்தில் உங்க‌ க‌ட்சிதான்.

  சிவ குமார், சிவ‌ குமார் தான்!!
  (A Rose is a Rose is a Rose)

  பதிலளிநீக்கு
 23. awesome! எப்படி ஸார் இவ்ளோ எளிமையா அருமையா புதுமையா? நாய்க்கவிதை நன்கு புரிகிறது கமல்படம் அருகே உள்ளது யோசிக்கவைக்கிறது ஸ்ரீவித்யாவின் குரலும் கண்ணும் மறக்கமுடியுமா? போட்டோ(ஸ்ரீவித்யா) சொல்லாத கவிதை ஒன்றும் இருக்கிறதே!

  பதிலளிநீக்கு
 24. ஸ்ரீவித்யாவுக்கும் கமலுக்கும் நடுவில் ஒரு urban legend உண்டே...அதைவைத்து ஒரு மலையாளப் படம் கூட வந்தது ...இந்தக் கவிதைக்கும் படத்துக்கும் அதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டோ என்று நினைத்தேன்

  பதிலளிநீக்கு
 25. துரை,
  ஸ்ரீவித்யாவே சொல்லி இருக்கிறார் இதைப் பற்றி.
  தன்னை மணக்கச் சொல்லிக் கேட்டதாகவும் மறுக்கப் பட்டதாகவும்.
  அவரைக் கடைசியாக இறக்கும் முன்னால் போய்ப் பார்த்ததும் இவரே.
  அதுவும் வித்யா செய்தி அனுப்பிய பிறகு.
  சோகம்.

  பதிலளிநீக்கு
 26. நாய்க்கவிதை நம் பாட்டை நச் என்று சொல்லியது வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 27. நீங்கள் ஆண்களை பன்றி என்று வசை பாடி இருக்கிறீர்கள் என்று தெரியும் ந,ப தெரியதவரா நீங்கள் எழுத்து பிழை வர.(நன்றி என்பதற்கு பன்றி என்று சொல்ல)
  நான் அதை சொன்னால் நாகரீகம் இருக்காது.

  அடுத்த வெண்பாவில் பெண்களை வசைபாடி இருக்கிறீர்கள்.
  உலகத்தில் அப்படியும் ஆண்கள், இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள்.

  எல்லோருக்கும் வாய் இல்லா ஜீவன் தான் அகபடும்.
  நாய் கேட்கும் கேள்வி அருமை.

  பதிலளிநீக்கு
 28. ஓகே.. அடுத்து எழுதப்போற வெண்பா கோமதி அரசுக்குக் கூட புரியலின்னா நான் பொறுப்பில்லை :-)//

  நான் வெண்பா புலவர் இல்லை சார்.
  கம்பன் வீட்டு கட்டுதறியும் கவி பாடும் என்பதால், என்னிடம் எதிர்பார்த்தீர்களோ!
  என் மாமனார் தமிழ் புலவர், என் கணவர் முனைவர். தமிழ் இலக்கியம் படித்தவர். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதால் எனக்கு இந்த பெறுமை என்றால் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 29. //என் மாமனார் தமிழ் புலவர், என் கணவர் முனைவர். தமிழ் இலக்கியம் படித்தவர்.
  வாவ்.. தமிழ் அறிந்தக் குடும்பம். சந்தோஷமா இருக்குங்க.

  பதிலளிநீக்கு
 30. லேட்டா வந்தா இவ்ளோ சவுரியமா...?!!

  இலக்கணம் மீறிய கவிதைகளை விட மீறாக் கவிதைகளை படிப்பதொரு சுகம். கரக் முரக் என சாப்பிடும் காரசேவின் ருசியாக.

  தேடித் தேடி பல பொருள் கொள்வதும்.

  பதிலளிநீக்கு
 31. சிவகுமரன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

  அவாளுக்கு ஃபேனா இருக்கறதை விட சிவாவுக்கு ஃபேனா இருப்பதுமொரு சுகமே.

  பதிலளிநீக்கு

 32. அய்யய்யோ எப்படி விட்டேன் இந்தக் கவிதைகளை?. நம்மை வச்சு ஒரு கதா கலாட்சேபமே( Spelling சரியா? ) நடந்திருக்குதே இங்கே.
  முதலில் படிக்கும் போதே புரிந்தது எனக்கு. "பன்றிகளாம் ஆடவருக்கு இல்லாத பண்பு நாய்களுக்கு கூட உண்டு"
  கவிதையை என்னால் முழுமையாக ரசிக்க முடியவில்லை ... காரணம் எனக்கு படங்கள் ஏதும் தெரியவில்லை. ஏன்?

  சுப்புத் தாத்தாவுக்கும், நிலாமகளுக்கும் என் நன்றிகள். .

  பதிலளிநீக்கு