2018/06/23

புள்ளி - 4

    .
  . . .
. . . . .



◄◄ 1 2 3

        ந்த சனிக்கிழமையுடன் ஆறு வாரம் தொடர்ந்து கோவிலுக்கு போய் வருகிறேன். ஒவ்வொரு சனிக்கழமையும் நெடியோனைப் பார்த்து உள்ளுக்குள் உருகி வருகிறேன். என்னைச் சுற்றி இருக்கும் பிறரைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் சிலிர்க்கும். இத்தனை பக்தர்களில் எத்தனை பேர் அச்சுதனை அமரர் ஏறை பச்சை மேனியனை புருஷோத்தமனை நேரில் சந்தித்திருக்கப் போகிறார்கள்?

ஐம்பத்தாறு சனிக்கிழமைகள் வாக்குக் கொடுத்திருக்கிறேன். இன்னும் ஐம்பது வாரங்கள்.

புள்ளி.

"என்னடா இது? வந்ததும் வராததுமா இப்படிப் பண்றே? எல்லாத்தையும் திருப்பி எடுத்து வந்துட்டே?" என்றார் அம்மா. எனக்காகக் கொடுத்திருந்த சாமி படங்கள்.. பரம்பரையாக வந்த சிவன் பார்வதி படம்.. குலதெய்வம் வெங்கடாஜலபதி படம்.. அம்மா பூஜை செய்த வெள்ளி கிருஷ்ணர் மகாலக்ஷ்மி குட்டி விக்ரகங்கள்.. தாத்தா வீட்டு திருநாங்கூர் பெருமாள் அச்சு.. ஸ்ரீசக்ரம்.. ருத்ராக்ஷம்.. என்று எல்லாவற்றையும் திருப்பினேன். அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது.. "என்ன இப்படி பண்றான் இவன்?" என்று பூஜையறை சுவற்றைப் பார்த்துக் கேட்டார்.

சுவரில் காஞ்சிப் பெரியவர் படம். ஜெயேந்திரர். "அந்தாளையே புடிச்சு உள்ளே போட்டாச்சு. அவரைக் கேட்டு என்ன பிரயோஜனம்?" என்றேன். அம்மாவுக்கு இன்னும் அழுகை வந்துவிட்டது. கோபமும்.

"என்னடா இது? இப்படிப் பண்றே? உனக்கே நல்லாருக்கா?" என்று அதட்டினாள் அக்கா.

"நான் என்ன பண்றேன்? எனக்கு நம்பிக்கையில்லை. நீங்களாவது உபயோகிக்கலாம்னு அமெரிக்காலந்து மூட்டை கட்டி எடுத்துட்டு வந்தேன்.. இல்லைன்னா அங்கயே குப்பைனு தூக்கிப் போட்டிருப்பேன்"

அம்மாவுக்கு என்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அந்த நிலையிலும் "இவனை ஒண்ணும் செஞ்சிடாதே அபிராமி" என்றாள்.

நான் குளிக்கத் தயாரானேன். "துண்டு இருக்கா.. குளிக்கணும்.. ப்ளைட்ல வந்து ட்ரெயின்ல வந்து பஸ்ல வந்து.. ரொம்ப களைப்பா இருக்கு.. உடம்பெல்லாம் நாறுது" என்று நான் குளியலறைக்குப் போனேன்.

"பயப்படாதம்மா.. அவனை இந்த மாதிரி பண்ண வச்சதே அபிராமி தான்.. " என்று என் அக்கா சொன்னது தெளிவாகக் கேட்டது. இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.

புள்ளி.

லன்டனில் விமானம் தரை தொட்டதும் பைலட் ஒருவர் என்னைத் தேடி வந்தார். "உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. விமானம் நின்றதும் உங்கள் மனைவியுடன் பேசுங்கள்" என்று தொலை பேசியைக் காட்டினார். என்னிடம் செல்போன் இருக்கிறது என்றேன்.

"பதட்டப்படாமல் சொல்லு" என்றேன் மனைவியிடம்.

அவள் மறுமுனையில் அழுது கொண்டே சொன்னபோது திக்கென்றது. என் பெண்ணைக் காணோம். இரவு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் கொடுத்துத் தேடுகிறார்கள். இந்த நேரம் பார்த்து நான் பயணத்தில்.. ஐயோ என்று அடித்துக் கொண்டேன்.

"என்ன ஆச்சு?" இப்போது நான் பதறினேன்.

தொடர்ந்து அழுதாள் மனைவி. "என் பெற்றோரை எனக்குப் பிடிக்கவில்லை" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காணாமல் போய்விட்டாள் பெண். பதிமூன்று வயது. எங்கே போயிருப்பாள்? நண்பர்கள் வீட்டில் தேடியாகி விட்டது. அவளால் கார் ஓட்ட முடியாது. சைக்கிள் ஒட்டக்கூடத் தெரியாது. எங்கே போயிருப்பாள்? மறுமுனையில் போலீஸ் வந்தது. அவள் எழுதியிருந்த கடிதம் பற்றி கேட்டார்கள். துன்புறுத்தினோமா கொடுமைப்படுத்தினோமா.. என்று என்னிடம் விசாரித்தார்கள். முதல் நாளிரவு மைகேல்ஸ் காய்கறி மார்கெட் பக்கம் என் பெண்ணின் அடையாளங்களுடன் ஒரு சிறுமி வெள்ளை நிற பிக்கப் டிரக் ஒன்றில் ஏறியதாக யாரோ சொல்ல அதைப் பற்றி விசாரித்தார்கள். என் உறவினர் நண்பர்கள் யாரிடமாவது அப்படி பிக்கப் டிரக் இருக்கிறதா என்று கேட்டார்கள். பகீரென்றது. இல்லை இல்லை. என் பெண்ணைப் கண்டுபிடியுங்கள் என்று கெஞ்சினேன். அழுகை தொண்டையை அடைத்தது. உடனே திரும்பி வருவதாகச் சொன்னேன். "தைரியமாக இருங்கள்" என்றார்கள்.

பெண்பிள்ளை கடத்தலில் முதல் இருபத்து நாலு மணி நேரம் மிக முக்கியம். அதற்குள் முக்கிய திருப்பங்களோ தடயங்களோ கிடைக்கவில்லை என்றால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆண்பிள்ளை கடத்தலில் உடனடியாக தொலைவாக இடம் மாற்றுவார்கள். பெண்பிள்ளை கடத்தலில் முதல் நாலைந்து நாட்கள் போல் அனேகமாக உள்ளூர் சுற்று வட்டாரத்தில் தனியிடத்தில் அடைத்து வைப்பார்கள். பனிரெண்டு வயதுக்கு மேலான சிறுமிகளுக்கு சுய நினைவுகள் சுத்தமாக அழியும் வரை தொடர்ந்து நாலைந்து நாட்களும் போதைப் பொருள் கொடுத்து... அதற்குப் பிறகு அடுத்தக் கட்டத்தைத் தீர்மானிப்பார்கள். பெரும்பாலும் வெளியூர் ஆசாமிகளுக்கு விற்று விடுவார்கள். இதைப் பற்றி ஆராய்ந்து கதை கதையாக எழுதியிருக்கிறேன். எல்லாம் இப்போது வந்து அச்சுறுத்தியது. அதுவும் என் பெண் எங்களைப் பிடிக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருக்கிறாள். அவளைக் கண்டுபிடித்தாலும் DCFS காரர்கள் பிடித்துக் கொள்வார்கள்.

லன்டன் ஏர்போர்ட்டில் தாறுமாறாக ஓடினேன். என் லக்கேஜ் கூட எடுக்கவில்லை. எப்படியோ போகிறது. எனக்கு என் பெண் வேண்டும். பத்திரமாக ஆபத்தில்லாமல் வீடு திரும்ப வேண்டும். அடுத்த இரண்டு அமெரிக்கன் விமானங்களில் சிகாகோவுக்கு இடமில்லை. நிலையை எடுத்துச் சொன்னேன். முதல் வகுப்பில் இரண்டு இடம் இருக்கிறது என்றார்கள். ஒரு டிக்கெட் ஆறாயிரம் டாலர். முதல் வகுப்பு டிக்கெட் எடுக்க காசில்லை. பெண் காணாமல் போய்விட்டாள் என்பதற்காக டிக்கெட் விலை குறைக்க முடியாது என்று சொல்லாமல் சொன்னார்கள். எனக்குத் தலை சுற்றியது. யுனைடெட் பிரிடிஷ் டெல்டா லுப்தான்சா என்று மாறி மாறித் தேடி கடைசியில் மறு நாள் காலை ஏர் லிங்கசில் எழுநூறு டாலருக்கு இடம் பிடித்தேன். பெண் காணாமல் போய்விட்டாள் என்றாலும் உடனடியாகக் கிடைத்த விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட் வாங்க மனமில்லாமல் சுற்றியது மிக உறுத்தியது. பெண்ணை விட ஆறாயிரம் டாலர் பெரிதா? ஆறாயிரம் போகிறது என்று கிரெடிட் கார்ட் கொடுத்து எடுத்திருக்க வேண்டுமோ? இந்நேரம் சிகாகோ சேர்ந்திருக்கலாமோ? ஆறாயிரம் டாலர் என்றதும் என் தயங்கினேன்? என் பெண் முக்கியமில்லையா? 'என் பெற்றோர்களை எனக்குப் பிடிக்கவில்லை' என்று பெண் எழுதி வைத்தது நினைவுக்கு வந்தது. இத்தகைய உணர்வுச் சிக்கல்கள் யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

'என் பெண் கிடைக்க வேண்டும்.. கிடைக்க வேண்டும்.. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தேன். யாரிடம் சொல்கிறேன்? அதைப் பற்றிக் கவலைப்படாமல் மனதுள் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.

"கண்டிப்பாகக் கிடைப்பா. பயப்படாதீங்க" என்று ஸ்பஷ்டமாகத் தமிழில் குரல் வர, திரும்பினேன். பக்கத்தில் இருந்தவரை அதுவரை கவனிக்கவே இல்லை. "பயப்படாம போங்க.. எல்லாம் சரியாகிடும்" என்றார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

"உங்களுக்கு எப்படி?"

"எனக்கு எல்லாம் தெரியும்" என்றார். உடனே அமைதியுடன் சிரித்து "நீங்க அமெரிக்கன் ஏர்லைன் காரிகிட்டே நிலைமையை விவரமா சொன்னதை நானும் கேட்டேன்.. உங்க பின்னாடியே நின்னுட்டிருந்தேன்.. அதான்" என்று என் தோளை ஆதரவாகத் தொட்டு அழுத்தினார். சுரர்ர்ர்ரென்றது. "எல்லாம் சரியாகிடும்" என்றார் என்னை தீர்க்கமாகப் பார்த்து.

நிச்சயம் இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

புள்ளி.

"நாளைக்குப் பணத்தை ரிலீஸ் பண்ணுகிறோம்" என்றான் வசீம்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். மூன்று வருடங்களாக சவுதியில் கைதி போல் வாழ்ந்த வாழ்க்கை முடியப்போகிறது என்ற நிமமதி. ப்லாக் நண்பரை நம்பிப் பணம் கொடுத்துத் தொடங்கிய தொழில். என்னையும் எமாற்றி வாடிக்கைக் காரரையும் ஏமாற்றி... சவுதி அரசாங்கமே வாடிக்கை என்றால் சும்மா விடுமா? நண்பர் அவசரமாக என்னை அழைத்து நீங்கள் தான் எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பதற மூன்று வருடங்களுக்கு முன் இங்கே வந்தவன் ஏறக்குறைய கைதி போல் வாழ்ந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றி இருக்கிறேன்.

உள்ளே காலடி வைத்ததும் எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டுள் என்பது புரிந்தபோது தாமதமாகி விட்டிருந்தது. உள்ளே வந்து விட்டிருந்தேன். அமெரிக்க பாஸ்போர்ட் இருந்ததால் இரண்டு மாதங்களில் கொஞ்சம் கனிவுடன் நடத்தினார்கள், இல்லையெனில் நண்பர் செய்த மோசடிக்கு என்னை ஏதாவது செய்திருக்கலாம். என்னதான் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் பார்க்க இந்திய லட்சணம் தானே? அதுவும் தமிழ்க் கறுப்பு. சவுதியில் இந்தியருக்கு மதிப்பு பிலிபினருக்கு கொஞ்சம் உயர்வான மட்டில், அவ்வளவே. மத்தியக் கிழக்கு முழுதும் அப்படியே என்று நினைக்கிறேன்.

வீட்டுக்கு வந்தேன். டிரைவர் கண்ணன் மட்டும் இல்லையென்றால் எனக்கு இன்னும் கடினமாக இருந்திருக்கும். தினம் என்னை ரிபைனரி-வீடு என்று மேலும் கீழும் சாரதியாக இருந்து.. வெள்ளி சனியில் தயங்கி தயங்கிப் பழகி.. ஒரு பிடிப்பில் இருந்தான். "கண்ணன்.. எல்லாம் முடிஞ்சிருச்சு.. நாளைக்குப் பணம் வந்ததும் சவுதிக்கு ஒரு சலாம்" என்றேன். "நல்லது சார்.. ரொம்ப சந்தோசம் சார்" என்று சிரித்தான்.. கன்னத்தில் குழி விழ அவன் சிரிப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.

உடனே சென்னையில் ப்லாக் நண்பரை அழைத்து விவரம் சொன்னேன். "என்னை மன்னிச்சிருங்க.. உங்களை இப்படி வம்புல மாட்டிவிட எண்ணியதேயில்லை.. நல்லவேளை முடிச்சிருச்சே.. ரொம்ப சாரி துரை.." என்றார்.

"விடுங்க.. விடுங்க.. மூணு வருசமாயிருச்சு விடுங்க.. ஏதோ செஞ்சுட்டீங்க.. ஐம் ஓவர் இட்" என்றேன்.

மறுநாள் பணம் கிடைக்கவில்லை. "நீங்க கடன் வாங்கினதா பேங்குல முடக்கிட்டாங்க" என்றான் வசீம்.

"வாட்?" அதிர்ந்தேன். "என்னமோ பிழை நடந்திருக்கு.. யார் கிட்டே கடன்?"

"அப்தப் சையத் பைசல்னு ஒருத்தர் புகார் கொடுத்திருக்கார். ஜட்ஜ்மென்ட் வாங்கி பேங்குல சமர்ப்பிச்சிருக்காரு. சவுதி நாட்டவருன்றதால அவருக்கு முன்னுரிமை இருக்கு"

விழித்தேன். வசீம் தொடர்ந்தான். "அது மட்டுமில்லே.. கடன் தொகைல மிச்சம் எட்டாயிரம் ரியால் நீங்க தர வரைக்கும் ட்ரேவல் பேன் பண்ணியிருக்காங்க.. நீங்க வெளியே போக முடியாது"

எனக்கு தலை சுற்றியது. நடுங்கினேன். என்ன இது, புதுக் கதை?

வசீமிடம் அப்தப் பற்றிய முழு விவரம் வாங்கிக் கொண்டு கண்ணனுடன் விரைந்தேன். அப்தப் விவரமாகச் சொன்னார். ப்லாக் நண்பர் இந்த கான்ட்ராக்ட்டைக் காட்டி லெட்டர் அப் கிரெடிட் பாணியில் சுத்தமாக வழித்து எடுத்து கடன் வாங்கியிருந்தார். தனிக் கடன். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அப்தப்பிடம் சொல்லி பார்த்தேன் "ஐயா.. இது நான் வாங்கின கடன் இல்லை.."

அப்தப் விடவில்லை. "இந்த கான்ட்ராக்ட் பேர்ல கடன் கொடுத்தேன்.. கான்ட்ராக்ட் பணம் கடன் திருப்பத்தான் எடுக்குறேன்"

ப்லாக் நண்பர் (?) மறுபடி மன்னிப்பு கேட்டார். இந்த முறை அழுதார். "உங்க கால் செருப்புக்கு கூட நான் சமானம் கிடையாது துரை.. உங்களை எப்படி ஏமாத்தியிருக்கேன்.. எனக்கு மன்னிப்பே கிடையாது.. எனக்கு வெட்கமா இருந்ததால உங்க கிட்டே மறைச்சுட்டேன்.. எனக்கு விமோசனமே கிடையாது.. ஆனா என்னை நம்புங்க.. நான் எப்படியாவது இந்தப் பணத்தைத் திருப்பிடுவேன்.."

"எப்படிங்க? எப்படித் திருப்புவீங்க? இதென்ன ஆயிரமா பத்தாயிரமா ஒரு லட்சமா திருப்பித் தரேன்னு நீங்க சொல்றதுக்கு? நானும் நம்புறதுக்கு?"

ஒரு வாரம் அலைந்தேன். பணம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நாட்டை விட்டு வெளியேற அனுமதி கிடைத்தால் போதுமென்றாகிவிட்டது. கண்ணன் என்னிடம் "சார்.. இந்த ஊர்ல வாஸ்தா இருந்தா எல்லாமே நடக்கும் சார்.. நான் ஒருத்தர் கிட்டே கூட்டிப் போறேன்.. நூறு இருநூறு ரியால் கொடுத்தா விஷயத்தை முடிச்சுக் கொடுத்துருவாரு.." என்றான். நம்பிக்கையில்லாமல் சரியென்றேன்.

எங்கேயோ சுற்றி கவனமாக என்னை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றான் கண்ணன். என்னை வரவேற்றவருக்கு அறுபது வயதாவது இருக்கும். முகம் நிறைய புன்னகைத்தார். உள்ளே அழைத்து உட்கார வைத்து டீ கொடுத்தார். சிறிய தட்டில் அல்வா போல் ஒரு இனிப்பு. "சாப்பிடுங்க" என்றார். "மஜ்தூல் பேரீச்சம். உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும்.. நபிகள் கைப்பட விதைச்ச மரத்துலருந்து வந்தது.. மக்காவுக்கு பத்து கிலோமீடருல இருக்கு தோப்பு"

என் விவரங்கள் எல்லாம் கேட்டார். உடனே நாலைந்து பேருக்கு செல் போன் செய்தார். பிறகு அமைதியாக "உங்க கான்ட்ராக்ட் கடன் பணம் திரும்ப வராது. ஆனா அந்த எட்டாயிரம் ரியாலை தள்ளுபடி செய்யுறதா சொல்லிட்டாரு அப்தப். உங்க பயணத் தடை நாளைக்கு நீக்கிடறதா பேங்குல சொல்லிட்டாங்க.. என்னால இதான் பண்ண முடியும்"

என்ன செய்வதென்று புரியவில்லை. மூன்று வருட உழைப்பு வீணான துடிப்பு. ப்லாக் எழுத்தின் திறனை வியந்து எந்தப் பொறுக்கியையோ நம்பிக் கடன் கொடுத்த அசட்டுத்தனம். அதைத் தொடர்ந்து ஏமாந்த முட்டாள்தனம். எல்லாம் என்னைப் புரட்டி எடுத்தது.

"போகுது விடுங்க.." என்றார் பெரியவர். "நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும்" என்று ஆதரவாக என் தோளை அழுத்தினார். "இந்தப் பணம் உங்களது இல்லை.. யாருக்கோ நீங்க பட்ட கடன்"

"இல்லிங்க.. எப்படி.."

"உங்க நண்பரை மன்னிச்சு நிலைமையை ஏத்துக்கிட்டு அடுத்த கட்டத்தை நோக்கிப் போங்க.. எல்லாம் உன்னதமா இருக்கும்"

நீண்ட பெருமூச்சு விட்டேன். ப்லாக் நண்பரை மன்னித்தேன். சட்டி சுட்டதடா. மெள்ள எழுந்தேன். பெரியவருக்குத் தர வேண்டிய பணத்தை எடுத்துக் கொடுத்தேன். சிரித்தபடி வாங்கிக் கொண்டார். "கொஞ்சம் இருங்க" என்று உள்ளே சென்றார். திரும்பி வந்து "நிறைய இழந்துட்ட வருத்தம் உங்க முகத்துல தெரியுது. இருந்தாலும் உங்களுக்கு துரோகம் செஞ்சவங்களை மன்னிச்ச பெரிய மனசு உங்களுக்கு நிம்மதியையும் உன்னதத்தையும் கொடுக்கும்" என்று ஒரு சிறிய உருள் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார். "விலை மதிப்பில்லாத ஒன்றை உங்களுக்கு பரிசா கொடுக்க விரும்பறேன். எடுத்துக்குங்க"

பிரித்தேன். திடுக்கிட்டேன். என் மனைவியின் உறவினர் சாகும் தறுவாயில் எனக்குக் கொடுத்தப் பிள்ளையார். அதே வில்லேந்திய பிள்ளையார். எத்தனை வருடங்களுக்குப் பின்.. அதுவும் இங்கே..

திகைப்பு அடங்காமல் அவரை ஏறிட்டேன். "இது எப்படி உங்க கிட்டே? ஆச்சரியமா.. நம்பவே முடியலியே?"

பெரியவர் என்னை வழியனுப்பி "நம்ப முடியாதது எதுவுமே இல்லை.." என்றார். தயங்கி என்னை நேராகப் பார்த்து "..நம்பினால்" என்றார்.

என் மிக அருகே வந்து, "நம்புறீங்க இல்லையா?" என்றார் என் தோளை அழுத்தி. பிறகு கண்ணனை அழைத்து "இவரை ஜாக்கிரதையா சேர்க்க வேண்டிய இடத்துல கொண்டு போய் சேர்த்துடு" என்றார்,

வீட்டுக்கு வந்ததும் உறைத்தது. பெரியவர்.. சவுதியில் கால் வைத்த ஐந்தாம் நிமிடம் என்னுடன் உரையாடிச் சேர்ந்து தொடர்ந்து முடிவில் பெரியவரைப் பார்க்க அழைத்துச் சென்ற கண்ணன்.. திரும்பக் கிடைத்த வில்லேந்திய பிள்ளையார்.. "இவரை சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துடு" என்ற பெரியவரின் சொற்கள்.. என் டிரைவரின் பெயர் கண்ணன் என்பது கூட ஒரு பெரிய விஷயமாக முதல் முறையாகத் தோன்றியது. எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நானென்றான்.

புள்ளி.


<இன்னும் உண்டு>


*DCFS: Department of Children and Family Services - பிள்ளை வளர்ப்பு முறைகேடுகளை விசாரணை செய்யும் அரசு மையம்.


36 கருத்துகள்:

  1. எழுத்துகள் போகும் விதம் சில ப்ளாக் நண்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் கலர்ச் சட்டையை உருவி காவி அணிய நினைக்கிறீர்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஜேபி தான் அடுத்தது :-)

      நீக்கு
    2. இன்றைக்கு இந்தப் பதிவுக்கு மீண்டும் வந்தேன். ஜிஎம்பி சார் ஏன் இப்படி எழுதியிருக்கார்னு தெரியலை (அதாவது அவர் கட்சி மெம்பர் அடுத்த கட்சிக்குத் தாவுவதைப் போல் எண்ணி).

      அனுபவம்தான் ஒருவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். ஆன்மீகத்திலிருந்து நாத்திகத்துக்கும், நாத்திகத்திலிருந்து ஆன்மீகத்துக்கும். இரண்டு கூட்டங்களிலும் பெரும்பாலானவர்கள் போலி என்பதும் உண்மை. வாழ்க்கையில் அனுபவமே ஆசான். மற்றபடி சொல்லிச் சொல்லி வளர்ப்பதால், வேறு மாதிரி சிந்திப்பதற்கு பயம் இருக்கும். ஆனால் அனுபவம் ஒருவரது எண்ணத்தைச் செம்மைப்படுத்தும்.

      நீக்கு
    3. நெ.த. உங்க கருத்தைப் படிச்சதும் மீண்டும் இங்கே வந்து மறுபடி முழுப்பதிவையும் படிச்சேன். ஒரு மனிதனின் உணர்வுகள், நம்பிக்கை மாறும் விதம்! எந்த எந்தச் சந்தர்ப்பங்களில் என்பதைப் படிப்படியாக அப்பாதுரை விவரித்திருக்கிறார். அதைப் படிச்சும் ஜிஎம்பி ஐயா அவர் காவிக்கு மாறிட்டாரோ என எழுதுவது அவர் லௌகிகச் சிந்தனையிலிருந்து விலகி இதைப் பார்க்க மறுப்பதையே காட்டுகிறது. பக்திமான்கள், ஆன்மிகவாதிகள் அனைவருமே "காவி" என்பதைப் போன்ற முட்டாள்தனம் வேறே எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான கோயில்களில் உள்ள கூட்டத்தைப் பார்த்தால் அனைவருமே பக்திமான்களாகத் தான் தோன்றுகிறது. அதற்காக எல்லோருமே பிஜேபியை ஆதரிக்கின்றனரா என்ன? அப்ப்படி இருந்தால் இங்கே பிஜேபி தான் வெற்றி பெற முடியும். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டில் அவருக்கு உள்ள எதிர்ப்பு வேறே எந்த மாநிலத்திலும் இல்லை. ஆகவே ஒருவர் கடவுள் நம்பிக்கையைப் படிப்படியாகப் பெற்றதற்கு அவர் பிஜேபி கட்சிக்கு மாறிட்டார் எனப் பொருள் கொள்வது சரியில்லை.

      நீக்கு
    4. நாத்திகத்தில் ஆன்மீகம் உண்டே?
      ஆத்திகர்கள் ஆன்மீகத்தின் உரிமையாளர் போல் ஆத்திகம் ஆன்மிகம் இரண்டையும் ஒன்றே போல் வழக்கமாக சொல்கிறார்கள்.

      நீக்கு
    5. கருப்பு சட்டை நாத்திகர்கள் ஆன்மிக வாசனை இருந்தால் கடவுள் மறுப்பு/வெறுப்பு காரணமாக கீழ்த்தரமாக நடக்க மாட்டார்கள்.

      நீக்கு
    6. ஆத்திகவாதிகள் ஆத்திகம் என்பதன் பொருளே புரிஞ்சுக்காமல் இரண்டையும் ஒன்றாய் நினைக்கிறார்கள். அதான் காரணம். உண்மையில் ஆத்திகம், ஆன்மிகம், லௌகிகம், வைதிகம் இவற்றைப் பற்றி எல்லாம் எல்லோரும் புரிஞ்சுக்கறாப்போல் யாரேனும் எடுத்துச் சொல்லலாம்.

      நீக்கு
    7. கருப்புச் சட்டை நாத்திகர்கள் கடவுள் மறுப்பு என்னும் பெயரில் கடவுள் வெறுப்பு செய்கின்றனர். ஆனால் தங்களை Rationalist என அழைத்துக்கொள்வார்கள்.

      நீக்கு
    8. //ஆத்திகம் என்பதன் பொருளே புரிஞ்சுக்காமல்..

      எத்தனை உண்மை.

      நீக்கு
  2. என்ன எழுத்து! பிரமிப்பாக இருக்கிறது! நீங்க மாறிட்டீங்களோ இல்லையோ அது தேவை இல்லை இங்கே! ஆனால் ஒருவன் படிப்படியாக நம்பிக்கை என்னும் கருத்துக்கு வரும் விதம் மிக அழகாகத் தெளிவாகச் சொல்லி இருக்கீங்க! நீங்க எழுதுவதைப் படிக்கையில் கதை என்னும் உணர்வே தோன்றாமல் பக்கத்தில் யாருக்கோ நடப்பதை /நடந்ததை அவங்க சொல்லும்போது நாம் கேட்கும் உணர்வு! ஒவ்வொரு புள்ளியும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.
      மூன்றாவது மனிதர் பார்வையில் (ரகு) தான் முதலில் எழுதத் தொடங்கினேன்.. அதில் இருக்கும் வாசகரைத் தொடும் சிரமம் காரணமாக முதல் மனிதர் பார்வைக்கு மாறினேன்.

      நீக்கு
  3. ஜிஎம்பி சாருக்கு நீங்க மாறிட்டீங்களோனு சந்தேகம்! :)))))) நீங்க எப்படினு தெரியாது அப்பாதுரை! ஆனால் என்னோட அத்திம்பேர் தீவிரமான கம்யூனிஸ்ட். கல்கத்தாவில் பொலிட் பீரோ மீட்டிங் நடக்கும்போதெல்லாம் கட்டாயமாப் போய்க் கலந்துப்பார். தீக்கதிர் பத்திரிகை வேலைக்காக மத்திய அரசுப் பணியை 20 வருஷங்களில் விட்டார். பிள்ளைக்குப் பூணூல் போடச் சம்மதிக்கவில்லை. பின்னர் பெரியவங்க வற்புறுத்தலின் பேரில் அரைமனதாகக் கலந்து கொண்டார். தீக்கதிரில் சேர்ந்த சில வருடங்களிலேயே ஏதோ வேலை நிமித்தம் திருமியச்சூர் போனவர் நண்பர் ஒருவருடன் கோயிலுக்குப் போய் லலிதாம்பிகையைத் தரிசனம் செய்ய! அவருக்கு என்ன ஆச்சுனு தெரியலை! அங்கிருந்து திரும்பி வரும்போது பக்திமானாக இல்லை, இல்லை முழு ஆன்மிகவாதியாக வந்தார்! குமுதம் பக்தி மாதாந்தரி/ மாதத்துக்கு இரண்டு, பின் வாராந்தரியாக ஆனவரைக்கும் அதில் மாவட்டம் மாவட்டமாகக் கோயில்களைச் சென்று தரிசித்து எழுதி வந்தார். தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் கிடைத்துக் கடைசியில் தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறைக்காகப் புத்தகம் தயாரிக்கையில் திடீரென இறந்து போனார். அவர் மீனாக்ஷியையும் ராஜராஜேஸ்வரியையும் வரைந்தார் எனில் அற்புதமாக இருக்கும். அவர் அப்பாவும் அந்தக் காலத்துப் பிரபலமான ஓவியர் ஷர்மா என்னும் பெயரில் படங்கள் வரைந்து இருக்கிறார். ராஜராஜேஸ்வரி படம் ரொம்பப் பிரபலம். நீங்களும் இது மாதிரி மாறுவீங்களோனு எனக்கு அவ்வப்போது தோணும்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..
      கடவுள் தேவையா இல்லையா என்பது வேறு கடவுள் உண்டா இல்லையா என்பது வேறு - இது புரிய எனக்கு நிறைய காலமானது.

      நீக்கு
    2. தெரியலை, ஆனால் அவருக்குள் என்ன நடந்தது, ஏன் இந்த மாற்றம் என்பது எங்கள் அனைவருக்கும் வியப்பைக் கொடுத்த ஒரு விஷயம்! கடவுள் உண்டு என்பவர்களால் தானே தேவையா இல்லையா என முடிவெடுக்க முடியும்? உங்கள் கருத்து வேறாக இருக்கலாம். யோசிக்கறேன்.

      நீக்கு
    3. கடவுள் நம்பிக்கை தேவையா இல்லையா என்று எழுத நினைத்தேன்.. கடவுள் தேவையா இல்லையா என்று விழுந்து விட்டது.. இப்போ தான் கவனிக்கிறேன்.

      சரியாகச் சொன்னீர்கள். உண்டு இல்லை என்று அறிந்தவர்களா தேவை இல்லை என்பதை சற்று தெளிவுடன் முடிவெடுக்க முடியும்.

      கடவுள் உணர்வைப் பெற முடியும். அதை உங்கள் அத்திம்பேர் பெற்றார் என்பது புரிகிறது.

      நீக்கு
  4. எழுத்து நல்லாருக்கு.

    பொதுவா்எல்லாரும் எழுதி எழுதி, இல்லை சொல்லிச் சொல்லி பக்திமானாகவோ இல்லை நாத்திகனாகவோ ஒருவரை ஆக்கி விடலாம் என்று நினைப்பார்கள். ஆன்மீகம் அல்லது பக்தி, அவரவர் அனுபவத்தால்தான் வரும். அதை பிரீச் பண்ணி வரவழைக்கமுடியாது. அதனால்தான் ஆத்திகர்கள் வீட்டில் நாத்திகர் உருவாவதும், நாத்திகர்களால் தங்கள் வீட்டு ஆட்களையே மாற்ற முடியாததும் நிகழ்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. i think it is the opposite.. உலகில் 99% ஆத்திகர்கள் சொல்லிச் சொல்லிச் பக்திமான் ஆனவர்கள் என்றே ந்மபுகிறேன். கலர்சட்டையில் இதைப் பற்றி எழுதி இருப்பதாக நினைவு.

      பிறந்த மறு நாள் முதல் கடவுள் பிரசாரம் நடத்தி பெற்றோரும் குடும்பமும் மனிதரை ஆத்திகராக ஐந்து வயதுக்குள் மாற்றி விடுகிறார்கள். கடவுள் நம்பிக்கையைத் திணித்து விடுகிறார்கள். ஒரு குழநதையின் மனதையும் அறிவையும் தன வயப்படுத்தி விடுகிறார்கள். கேட்டால் குழநதைக்கு எதுவும் தெரியாது.. பெற்றோர்கள் அதற்கு பேசக் கற்றுத் தரவில்லையா சாப்பிடக் கற்றுத் தரவில்லையா சுத்தம் செய்து கொள்ளப் பழக்கவில்லையா.. என்று வரிசையாகக் காரணம காட்டி கடவுள் திணிப்பை நியாயப் படுத்தி விடுகிறார்கள்.. ஒரு சிறு குழநதையின் சிந்திக்கும் திறனை திருடிய குற்ற உணர்வு இல்லாமல் நியாயப் படுத்தி விடுகிறார்கள். (றோம்).

      அப்படி சிறுவயதில் மாற்றப்பட்ட ஆத்திகர்கள் ஆன்மிகர்களாக ஆவது மட்டுமே அனுபவத்தால் வருகிறது என்பது என் கருத்து. அதே போல் சிறு பிராயத்திலேயே ஆத்திகர்களாகக் சிந்தை கெடுக்கப் பட்டவர்கள் நாத்திகர்களாக மாறுவதும் அனுபவத்தால் வருவதே.

      மற்றபடி அப்பாவி அறிவைத் திருடி ஆத்திகத் திணிப்பை நடத்திய குற்றத்துக்கு நம்மில் பெரும்பாலானோர் எந்த தண்டனையும் பெறுவதில்லை - காரணம் நாம் ஒவ்வொருவருமே victim and perpetrator :-)

      நீக்கு
    2. எனக்குத் தெரிஞ்சு கடவுள் பக்தி உள்ள தாய், தந்தையருக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாக் குழந்தைகள் உண்டு. என்னதான் சின்ன வயசிலே இருந்தே கடவுள் நம்பிக்கையைப் புகுத்தினாலும் எல்லோரும் அதை ஏற்பது இல்லை! இதை என் சொந்த அனுபவத்தில் பார்த்திருக்கேன். சின்ன வயசில் நம்பிக்கையுடன் இருந்தவர்கள் பின்னர் மாறீ விடுகின்றனர். சிந்தனையே மாற்றம் கண்டு விடும்.

      நீக்கு
    3. ஆத்திகர்கள் பக்திமான்களா என்பதே கேள்விக்குறி. கடவுளை நம்பிக்கை வேறே பக்தி என்பது வேறே என்று நினைக்கிறேன்.
      உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்.. அனேகமாக ஒவ்வொரு வாரமும் கோவிலுக்குப் போகையில் நிறைய கூட்டத்தைப் பார்க்கிறேன்.. ஸ்பெஷல் தோசை சப்பாத்தி குருமா அனுபவத்துக்காக எத்தனை பேர் வருகிறார்கள் என்பது தெரிந்ததும் ஆச்சரியமாக இருந்தது. இன்றைய நிலைமையில் அப்படியாவது அவர்களை ஆலயத்துக்குள் வரவழைத்தால் நல்லது தானே என்கிறார் இந்த ஊர் புரோகிதர். ரைட். அதே போல் வரிசையில் நின்று அரட்டை அடித்து சன்னதிக்குள் வந்ததும் சம்ஸ்தாபராதம் என்று கன்னத்தில் போட்டு கடமை முடிந்த திருப்தியில் வெளியேறும் கூட்டம் பெரும்பான்மை. இவர்கள் சிந்தை திருடப்பட்ட ஆத்திகர்கள். இவர்கள் சந்ததிகளும் நாளை சிந்தை திருடப்பட்ட ஆத்திகர்களாக மாறும் அபாயம் இருக்கிறது.

      இதில் ஒன்றிரண்டு பேர் வித்தியாசப்படுகிறார்கள். ஒரு இளைஞா வாரா வாரம் வருகிறார். திரிபுரசுந்தரி விக்கிரகத்துடன் மனம் விட்டுப் பேசுகிறார். அவருடன் திரிபுரசுந்தரியும் பேசுகிறாரோ என்ற ஐயம மூன்று வாரங்கள் பொறுத்து எழுந்தது. இவர் அனுபவ ஆத்திகர். எனக்கென்னவோ இவருடைய சந்ததியின் சிந்தை திருடப்படாது என்று தோன்றுகிறது.

      நீக்கு
  5. நீங்க எழுதறது சொந்த அனுபவம் போன்ற புனைவுன்னு நினைக்கறேன். ரொம்ப நல்லா கைவரப்பெறுது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. ஒருவித குழப்பம்... ஆனால் சுவாரசியம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழபபமா? அப்படா.. இப்பத் தாங்க எழுதின பலன் கிட்டிச்சு..

      நீக்கு
  7. இவனை ஒண்ணும் செஞ்சிடாதே அபிராமி" என்றாள். //

    உங்கள் அம்மா அபிராமி அந்தாதி பாடியதை கேட்ட நினைவு வந்து விட்டது.
    உண்மையை போல புனைவு.
    அக்கா சொல்வதும் உண்மைதான். அபிராமிதானே எல்லாம் செய்ய வைக்கிறாள்!
    பிள்ளையார் மீண்டும் கிடைத்து விட்டார், அவர் சொல்ல வருவது என்ன?
    கண்ணன், பெரியவர் மூலம் பச்சை மேனியனை சந்திக்க வைத்து விட்டீர்கள். இனி 50 வாரம் சனிக்கிழமை தோறும் கோவில் போய் நெடியோனைப் பார்த்து விட்டால் என்ன அற்புதங்கள் சொல்வீர்களோ!

    பதிலளிநீக்கு
  8. உண்மையைப் போன்ற புனைவோ, புனைவு போன்ற உண்மையோ... துரை துரைன்னு சொல்றா மாதிரி அந்த ப்லாக் நண்பர் பெயரையும் போட்டிருக்கலாம்!!!

    ஜி எம் பி ஸாரின் கவலை சிரிப்பு வருது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கருத்தில் கவலை தெரிந்ததா நான் இன்னு கவனமாக இருக்கவேண்டும்போல

      நீக்கு
  9. OOH Neengal yezhudha arambithtu vitteergalla!! Sollave Ille. Irunga irunga nanngu pulligalaiyumm padiththuvittu karuththu idugirenn

    பதிலளிநீக்கு
  10. ஸ்வாரஸ்யம், தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. எழுத்து நடை கதையோடு ஒன்றிப் பயணிக்க வைக்கிறது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. நாங்களும் சனிக்கிழமை போகிறோம். உங்களைப் பார்த்ததாகப் பெண் சொன்னாள்.
    ரொம்பப் படபடப்பாக இருக்கிறது துரை.
    இனி ஒரு துன்பமும் வராது உங்கள் வாழ்வில்.
    புனைவோ நிஜமோ
    சரியாக இருக்கட்டும்.
    நாங்கள் இரவு ஏகாந்த சேவைக்குச் செல்கிறோம். அற்புதமான சேவை.

    பிரசாதமாகக் கிடைக்கும் பால் அமிர்தம்.

    பதிலளிநீக்கு
  13. I read all the dots at one go. I know not how to give my comments. But I enjoyed the way it was written by you in your style.

    பதிலளிநீக்கு
  14. உங்களுக்கு பிடித்த வீடியோவை பதிவேற்றம் செய்து பணம் சம்பாரியுங்கள் http://vidsking.in

    பதிலளிநீக்கு
  15. //மஜ்தூல் பேரீச்சம்// நேற்று காஸ்ட்கோ-வில் பார்த்தபோது தான் புரிந்தது.. இது இந்த ஊர் ப்ராண்ட்! எவ்வளவு அழகா இணைத்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  16. கடந்த சில வருடங்களாக நான் வலைப்பக்கம் வருவதே இல்லை.இன்று ஜி.எம்.பி அவர்கள்  அவரது தளத்திற்கு வருகை வேண்டி இருந்ததைக் கண்டு அங்கு சென்றதில் உங்கள் புள்ளி கண்ணில் பட்டது. 
    புள்ளி, புள்ளிகள் அடங்கிய கோலம். தள்ளிப் போக இயலவில்லை. உள்ளிப் பூண்டு ஒன்றை கிள்ளி உண்ட பிரமை 

    புள்ளி 1 முதல் புள்ளி 4 வரை ஒரே மூச்சில் படித்தேன். 
    கதையா இல்லை, தங்கள் கருத்துக்களின் கோர்வையா என்று எப்பொழுதும்போல இருக்கிறது. தங்கள் எழுத்து. 
    இருப்பினும் ஒன்று சொல்ல ஆவல். https://www.youtube.com/watch?v=oOVjXhDvGFc&t=372s 
    சுப்பு தாத்தா. 

    பதிலளிநீக்கு