2018/06/12

புள்ளி - 3

    .
  . . .



◄◄ 1 2


        ப்போதெல்லாம் வெளியே இந்தப்பக்கம் பரங்கிமலை அந்தப்பக்கம் முகப்பேர் வரை கூட்டம் வெயிலில் நிற்கிறது என்கிறார்கள். தெரியாது. அந்நாளில் ஒன்பதரை மணிக்குத் திறக்கும் அமெரிக்க தூதரக விசா அலுவலக வளாகத்தில் காலை எட்டரை மணிக்கே கூட்டம் சேர்ந்து விடும். அலுவலக வெளியில் மரத்தடியில் வரிசையாக கயிறு கட்டி ஒரு மணி நேரம் நிற்க வைப்பார்கள். அமெரிக்கா செல்லும் ஆர்வத்தில் ஒரு மணி நேரம் வெளியே நாய் போல் நிற்கும் அவதியைச் சகித்தேன். உள்ளே சென்ற பின் இன்னொரு அரை மணி நேரம். என் விவரமெல்லாம் சரி பார்த்தார்கள். கூண்டுக்கு அந்தப்புறம் இருந்த வெள்ளைக்காரப் பெண்மணி "that's a very good school.. what is your ph.d in?" என்றாள்.

"application of cognitive science models for consumer marketing precision" என்றேன்.

"i don't understand a word of what you said" என்றாள்.

"me neither" என்றேன்.

உரக்கச் சிரித்தாள். என் விவரங்களை சரி பார்த்தாள். வழக்கமாக கேட்பாளா என்னை மட்டும் கேட்டாளா தெரியாது. "what will you do when you come back.. or would you look to stay in America?"

"why else would i go there? actually.. i intend to run away soon as i land in America; my ambition is to find a job at a petrol bunk and work my way up"

"we call it gas station" என்றாள் நிதானமாக. "do you know i can disqualify you for expressing vagabond intent?" என்று முறைத்தாள். ஆழமான பார்வை தொடர்ந்த மிதமான புன்னகையுடன் "your application seems in order.. we'll verify.. come back at 4pm for visa" என்றாள்.

அடக்க முடியாத சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். பெருமையுடன் எதிரே உட்லண்ட்சில் நுழைந்து ஒரு சூடான பாதாம் பால் தரவழைத்தேன். சிகாகோவுக்கான டிக்கெட் போக கையில் ஆயிரம் ரூபாயோ என்னவோ இருந்தது. அமெரிக்கா போகும் வரை இதை வைத்து ஓட்டியாக வேண்டும். மாலை விசா வந்தவுடன் நேரே பர்மா பஜார் சென்று ஒரு நல்ல சூட்கேஸ் வாங்க வேண்டும். தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு எத்தனை சீக்கிரம் முடியுமோ இந்த நரகத்தில் இருந்து கிளம்பி ஒரே ஓட்டம் திரும்பி வரவே கூடாது.. ஐயே.. நாடா இது? பல வித சிந்தனைகளுடன் பொங்கல் வடை பூரி என்று வெட்டினேன். பொழுதை எப்படிக் கழிப்பது என்று எண்ணியபடி வெளியே வந்து நடந்தேன். எதிரே சபையர் தியேடர் வளாகத்தில் நுழைந்தேன். மூன்று தியேடர்களிலும் ஆங்கிலப் படங்கள். அமெரிக்கா போவதால் இனி ஆங்கிலப் படங்கள் மேற்கத்திய வழக்கங்கள் மட்டுமே ஏற்பது என்று தீர்மானித்திருந்தேன். நாகேஷ் நினைவு வந்தது. நாகேஷுக்கு இணையாக ஒரு மேற்கத்திய நடிகன் உண்டா என்ற நினைப்பை அசை போட்டபடி ப்லூ டைமன்ட் தியேடரில் 'the world according to Garp" என்று ஒரு படத்துக்கு டிகெட் எடுத்தேன். சகிக்கவில்லை. உடனடியாக ஜம்பு ஜகன்மோகினி பாணி படம் பார்த்து துக்கத்தைத் துடைத்துக் கொள்ள நினைத்து வெளியே வந்தேன். எல்ஐசி பக்கமாக நடந்தேன். விக்டோரியா காட்சியகத்தில் ஈயடித்தது. நேரம் கடத்த எண்ணி உள்ளே நுழைந்தேன். விதவிதமான சிலைகள் அலங்காரங்கள் காட்சியில் இருந்தன. எட்டு கைகள் கொண்ட நாட்டியப் பிள்ளையார் சிலை ஏனோ கவர்ந்தது. ஒவ்வொரு கையிலும் ஒரு ஆயுதமோ சங்கோ என்னவோ வைத்திருந்தார். போதாக்குறைக்கு தகப்பன் ஸ்டைலில் காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே டான்ஸ் வேறே. வெண்கலமோ செம்போ தெரியவில்லை. செம விலை. இதையெல்லாம் எந்த மனுஷன் வாங்குவான் என்று நகர எண்ணிய போது பிள்ளையாரின் ஒரு கை வளைந்து என்னைச் சுட்டியது "டேய்!" என்பது போல. சட்டென்று விலகி நின்று பார்த்தேன். பிள்ளையார் சிலை லேசாக என் பக்கம் திரும்பி கால்களை ஊன்றி இரண்டு கைகளை இடுப்பில் வைத்து மூன்றாவது கையால் அதே விரல் சுட்டு. "டேய்!". லேசான நடுக்கத்துடன் பிள்ளையார் அருகே சென்று பார்த்தேன். நிச்சயமாக பிரமையில்லை. அதிர்ந்து அவசரமாக வெளியே வந்தேன். சீ சீ நிச்சயம் பிரமை தான்.. இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோ.. அதன் பிறகு இந்த கண்றாவியெல்லாம் இல்லை. அமெரிக்கா.

அங்குமிங்கும் சுற்றி மறுபடி தூதரகத்துக்கு வந்தேன். வந்தவருக்கெல்லாம் விசா கொடுத்துவிட்டு கடைசியில் என்னை அழைத்தார்கள். இந்த முறை ஒரு ஆண். டிப்டாப் வடக்கத்தி இந்தியர். என்னை ஏற இறங்கப் பார்த்து "உங்களைப் பற்றி ஒரு புகார் வந்திருக்கிறதே? நீங்கள் கொடுத்திருக்கும் படிப்பு விவரங்கள் வங்கி விவரங்கள் எல்லாம் ஏமாற்று என்று புகார். பெங்களூர் இந்திரா நகர் போலீஸ் ஸ்டேஷனில் உங்களைப் பற்றிய மோசடி புகாரின் நகல். ஆளை அடித்து மிரட்டி ரவுடித்தனம் செய்ததற்கான புகார்.." என்று வரிசையாக அடுக்கினார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"இதோ" என்று ஒரு கடிதத்தைக் காட்டினார். "இந்தா.. இதன் நகல்" என்று என்னிடம் கொடுத்தார். விடுவிடுவென்று படிக்கத் தொடங்கினேன். சேஷாத்ரி என்று கையொப்பம் பார்த்தேன். உடனே புரிந்து விட்டது. "சார்.. இது வெறும் பொய் சார்.. நான் கொடுத்த விவரமெல்லாம் உண்மை.. போலீஸ் புகார் எல்லாம் பொய் என்று போலீசே சொல்லிவிட்டது.. கேட்டுப் பாருங்கள்" என்றேன். எனக்கு அழுகையே வந்து விட்டது.

சமாதானப்படுத்துவது போல "we will find out.. அதனால நீங்க ரெண்டு நாள் கழித்து வாங்க.. visa is on hold" என்றார்.

உலகமே இடிந்தது போல் வெளியே வந்தேன். இந்த சேஷாத்ரி என் மேனேஜர். கம்பெனி என்னை அமெரிக்கா அனுப்ப எண்ணி எல்லாம் செய்தது. ஆனால் எனக்கும் அவனுக்கும் ஒத்து வராமல் நான் வேலையை விட்ட போது இந்த மாதிரி ஒரு விஷமக் கடிதம் அனுப்பி என்னை இக்கட்டில் விட்டிருக்கிறான். எச்சக்கலைப் பரதேசி. சொறி நாய். சாக்கடைக் காளான். பன்னி. உடனே பெங்களூர் சென்று அவன் கொட்டையை சுத்தியலால் அடித்து நசுக்க ஆத்திரமும் வேகமும் வந்தது.

சோர்வுடன் வெளி வந்து பஸ் பிடிக்க நடக்கையில் விக்டோரியா பிள்ளையார் நினைவுக்கு வந்தது. ஏன்? எனக்கு உதவக்கூடாதா? பிள்ளையாரப்பா? நீயெல்லாம் ஒரு அப்பனா? உன்னைப் போய் சாமினு கொண்டாடினேன் பாரு? உனக்கு எத்தனை பூஜை செய்திருப்பேன்.. கடவுளே.. இந்த சேஷாத்ரிக்கு குஷ்டமோ தீராத மூலமோ வந்தால் தான் நீ இருக்கிறாய் என்று அர்த்தம்.. இல்லாவிட்டால் கடவுள்னு பேரை வச்சுகிட்டு ஊரை ஏமாத்துற கல்.. கல் கூட பரவாயில்லை சாணி தட்ட உதவுது.. சாமிக்கல் எதுக்கும் உதவாத நாய் மூத்திரம் போகிற கல். அரை மணி போல் அத்தனை கடவுளையும் திட்டிவிட்டு பல்டி அடித்தேன். பிள்ளையாரப்பா.. எப்படியாவது இந்த விசா வாங்கிக் கொடுத்துரு.. நூத்தி எட்டு தேங்காய் உடைக்கிறேன். ஏதேதோ மனதுள் புலம்பியபடி சைதாப்பேட்டை வரை நடந்தே வந்தேன். வீட்டில் சொன்னதும் அம்மா "கவலைப்படாதடா.. அபிராமி இருக்கா பார்த்துப்பா" என்றாள்.

இரண்டு நாள் பொறுத்துக் கொஞ்சம் தெளிந்திருந்தேன். விசா கிடைக்கிறதோ இல்லையோ வருந்தப்போவதில்லை. சேஷாத்ரியை மன்னித்து விட்டேன். போகிறான் அல்பன். தூதரகம் சென்றேன். வரிசையில் நின்று என் முறை வந்ததும்.. முன்பு பார்த்த பெண்மணி. "ah.. the gas station aspirant" என்றாள். இன்டர்காமில் யாரையோ பெயர் சொல்லி அழைத்தாள். அதே வடக்கத்தி டிப்டாப் வந்து ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான். என்னைப் பார்த்தான். முறைத்தான். விலகினான். "ok.. here's your visa.." என்று என்னிடம் பொட்டலத்தைக் கொடுத்தாள் பெண்மணி. பரவசமானேன். "thank you.. thank you" என்றேன் இரட்டைக்கிளவியில். "thank the man who was here" என்றாள். மறுபடி "thank you.. thank you" என்றேன்.. "goodluck" என்றாள். மனம் மாறி விசாவைப் பிடுங்கிக் கொள்ளுமுன் இங்கிருந்து ஓடி விட வேண்டும்.. தலையாட்டி வெளியே வந்தேன்.

தூதரக வாயில் கடந்தபின் உறைத்தது. அவள் இன்டர்காமில் அழைத்த டிப்டாப். மிஸ்டர் கேனஷ்ரேம். மிஸ்டர் கணேஷ்ராம்.

புள்ளி.

அப்பா இறந்து ஒரு வருடம் போலிருக்கும் பூணலைக் கழற்றி எறிந்திருந்தேன். "எனக்கு வேணாம்மா"

"என்னடா இப்படி அக்கிரமம் பண்றே?" என்றாள் அம்மா. "செலவழிச்சு போட்டது.. அடுத்த மாசம் வர்ஷாப்தீகம் முடிஞ்சு காசில கர்மா எல்லாம் பண்ண பூணல் வேணும்.."

"என்ன செலவு? எதுக்காக போட்டீங்க.. அப்பனுக்கு ஸ்ரார்த்தம் பண்ணத்தானே? என்னவோ ஆசையா பூணல் போட்டாப்புல பேசுறே?"

"வாய மூடுறா சண்டாளா" என்றார் தாத்தா.

"யோவ்.. யாருயா நீ? யாரைப் பாத்து சண்டாளன்ற? வயசனவன்னு பாக்க மாட்டேன் ஆமா"

"என்னடா இது..?" அம்மா அதிர்ந்தாள்.. அவளுக்கு அழுகை வந்துவிட்டது.

"அப்பனைப் பெத்தவனையே யாருன்னு கேக்குறான்.. உருப்படுவானா இவன்.. சல்லிப்பய..?"

"அப்பனே பூட்டான்.. அப்புறம் அப்பனுக்கு அப்பன் என்ன வேண்டிக்கிடக்கு?"

"கூறுகெட்டப் பய.. வளத்திருக்கே பாரு? " என்று அம்மாவிடம் பாய்ந்தார்.

"டேய்.. மரியாதை கெட்டுரும்.. எங்கம்மாவை பத்திப் பேசினா.. உன் பையனை நீ ஒழுங்கா வளத்திருந்தா இதெல்லாம் வந்திருக்குமா? பேச வன்டான்"

"தாத்தா.. பிள்ளையார் சிலையை கிணத்துல போட்டான்.. நான் பார்த்தேன்.." என்று நேரம் தெரியாமல் வத்தி வைத்தாள் தங்கை.

"ஒ.. ஏதுரீ.." என்று பாட்டி சேர்ந்து கொண்டார். "சாமியார் கொடுத்த பிள்ளையார் ஆச்சே? திரும்ப வந்து வாங்கிப்பார்னு சொல்வானே அம்பி?"

"சாமியார் என் கனவுல வந்து பிள்ளையாரைக் கிணத்துல போடச் சொன்னார்.." என்றேன்.

"புத்திர சோகம் போறாதுன்னு இப்படி தெய்வச் சேதம் பாக்கணும்னு எழுதியிருக்கானே.." கண் கலங்கினார் பாட்டி.

"அப்புறம் அம்மா.. நான் காசி எல்லாம் போறதா இல்லே.." என்றேன். தாத்தாவைப் பார்த்தேன். "யோவ்.. உன் பையன் தானே? வேணும்னா நீ போய் காசில எல்லாம் போட்டுக்க"

என் அம்மா வழக்கம் போல் எதுவும் சொல்லவில்லை. ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றாள். பாட்டி என்னிடம் வந்து "அந்தப் பிள்ளையாரையாவது எடுத்துக் கொடுரா.. நீ நல்லா இருப்பே.." என்றார்.

புள்ளி.

<இன்னும் உண்டு>►► 4




23 கருத்துகள்:

  1. கொஞ்சம் நிஜம், கொஞ்சம் கற்பனை! அப்படியா? என்றாலும் உங்களை மிஞ்ச யாராலும் முடியாது! மறுபடி எழுத ஆரம்பித்ததுக்கு வாழ்த்துகள். தொடருங்க, காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  2. //இரண்டு நாள் பொறுத்துக் கொஞ்சம் தெளிந்திருந்தேன். விசா கிடைக்கிறதோ இல்லையோ வருந்தப்போவதில்லை. சேஷாத்ரியை மன்னித்து விட்டேன்//

    கிட்ட போனால் விலகி போகும், விலகி போனால் கிட்ட வரும் என்று சொல்வது நினைவுக்கு வந்தது.

    மன்னித்தல் பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னித்தல் மனிதம். என்றால் தெய்வம்?

      நீக்கு
    2. எல்லோராலும் எல்லாத்தையும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் தெய்வத்தன்மை உள்ளவர்களால் தான் முடியும்!

      நீக்கு
    3. சரியாச் சொன்னீங்க.. மனிதர்களால் நிரந்தரமாக எதையும் யாரையும் மன்னிக்க முடியாதுனும் தோணுது... மனித மன்னிப்பு தற்காலிகமாகவே இருக்கிறார் போல்.. இன்னிக்கு மன்னித்தாலும் பத்து நாள் நாலு மாசம் பொறுத்து உறுத்தலும் காழ்ப்பும் தொடர்ந்த கசப்பும் திரும்பிக் கொண்டே இருக்கின்றன - இது என் அனுபவம்.

      ஒருவரை மன்னித்தோம் என்றால் அதற்கு பிறகு இயல்பான மன்னிக்க வேண்டிய அவசியத்துக்கு முன்பான இயல்பு நிலைக்கு வரக்கூடிய பக்குவம் வந்தால் மன்னிப்பா? அல்லது செயலை மட்டும் மன்னித்தோம் என்ற பெயரில் நினைவில் வைத்துக் கொண்டே இருப்பதா?

      மன்னிப்பதற்கு பதில் மண்டையில் ரெண்டு போட்டால் நிறைவு கிடைக்குமோ என்று தோன்றுகிறது. வயதான அறிவுக்கு அடையாளமே அல்ல. :-)

      நீக்கு
  3. போன வாரம் ராமர். இந்த வாரம் பிள்ளையார் ஸ்ரீராம்.
    அடுத்த வாரமும் வருவார், வெகு சுவாரஸ்யம் துரை.

    பதிலளிநீக்கு
  4. இந்த புள்ளியில் வந்தது எல்லாம் உண்மையா அல்லது கதையா? எது எப்படியோ சென்னையில் நான் இருந்த பகுதிகளை மீண்டும் என் கண்முன் கொண்டு வந்திட்டீங்க

    பதிலளிநீக்கு
  5. //சாமிக்கல் எதுக்கும் உதவாத நாய் மூத்திரம் போகிற கல்.//ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்திருக்கிறேன்

      நீக்கு
    2. பம்மல் மூங்கில் ஏரியில் அறுபதுகளில் தூக்கி எறியப்பட்ட அம்மிக்குழவி அடிபட்டு அடிபட்டு எண்பதுகளின் தொடக்கத்தில் ஏரி வெள்ளத்தில் முத்தமிழ் நகர் அருகே "சுயம்பு"வாக வந்த கதையை என்ன சொல்ல! எப்படிச் சொல்ல!

      நீக்கு
  6. கதை கட்டுவதில் தேர்ந்தவர் நீங்கள் அதிலும் உண்மையோ என்று எண்ணும் வகையில் எழுதுவதுகை வந்தகலை

    பதிலளிநீக்கு
  7. சுவாரஸ்யமாக செல்கிறது. அதிவேக நடை.
    முதல் அத்தியாயத்தில் அப்பாவின் கொலைக்குப் பிறகு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் அடுத்த அத்தியாயங்களில் விவரம் இல்லை. மேலும் கதாநாயகனுக்கு அவன் அப்புவின் மேல் அப்படி என்ன கோபம்? அடித்தது மட்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க.. வருக.. ஒரு அத்தியாத்துல ஏதாவது சொன்னா அப்புறம் அவ்ளோ தான்.. இப்பனு இல்லே எப்பவுமே.. நான் கதை எழுதுற லட்சணமே அதான். ஹிஹி.. இந்தக் கதைல நிறைய அப்படி வந்து வந்து போகும்.. கண்டுக்கப் படாது. பொதுவான இழை என்னான்னா introவுல காரண காரியம் தொட்ட கடவுள் சந்திப்பு தான்.. (அப்படின்னு நினைச்சுட்டிருக்கேன்). :-)

      நீக்கு
    2. சில சமயம் ஒரு கதைல ஆரம்பிச்சதை இன்னொரு கதைல முடிச்சிருக்கேன்.. எனக்கென்ன, எழுதுறதோட போச்சு.. படிக்கிறவங்க பாடு தானேனு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல எண்ணம் தான்.

      நீக்கு
  8. பிள்ளையார் வெளியில் வந்தாரா? தொடருங்கள்..

    பதிலளிநீக்கு