2012/06/08

உரையாடும் முறை


    ன் இமெயில் கிணற்றில் பழைய கதை ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த போது சிக்கிய நகைப்பெட்டி. ஆசிரிய நண்பர் அரசன் 2007 வாக்கில் அனுப்பிய மின்னஞ்சல்கள்.

நினைவுகளைக் கிளறிய இமெயில் ஒன்று.


பாளையங்கோட்டை புனித ஜான் பள்ளியில் இலக்கியம் பேச அழைத்திருந்தார்கள். அப்படியே பழைய நட்புகள் சிலவற்றின் நலம் கண்டு வரலாம் என்று சற்று முன்னதாகவே சென்றேன். நான் வருவதறிந்தோ என்னவோ உம்மைப் போலவே உள்ளூர் நட்புகளும் ஊரை விட்டு ஓடியதறிந்தேன்.

ஒன்றை அறிவீரோ? காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிருக்கையில் செல்லாக் காசு. எப்படிச் செலவழிப்பது என்று புரிவதில்லை.

என்ன பேசுவது என்று தீர்மானிக்காத மனம், மண்ணில் வட்டமிடும் மணப் பெண்ணின் கால்விரல் போல் எதிர்பார்ப்புகளுடன் இலக்கின்றிச் சுற்றியது. அருகே நூலகத்தில், பண்பைப் பற்றிய வ.உ.சி பெருந்தகையாரின் தமிழ்ப் புத்தகக் குறிப்பொன்றைப் படித்தது பெரும் உதவியாக இருந்தது. 'உரையாடும் முறைகள்' பற்றிய அவருடையக் கருத்துக்களிலிருந்து என் அறிவிற்கு எட்டிய விளக்கம் ஒன்றை அவசரமாகக் குறித்துக் கொண்டு, ஏதோ பேசி முடித்தேன்.

சிதம்பரனாரின் சிந்தனைகளைப் படித்தபோது மனதில் பதிந்தவற்றை உம்முடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

முகம் நோக்கிக் கண் கலந்து நேரில் உரைக்க வேண்டியவை:
    அன்பு, பாசம், நேசம், காதல்
    வாழ்த்து, ஆசி, பாராட்டு
    எழுச்சி, ஊக்கம்
    நன்றி
    துக்கம், வருத்தம்

குறிப்பால் மறைவில் உணர்த்த வேண்டியவை:
    திருத்தம், வருத்தம்
    காமம், கோபம், ஏமாற்றம்
    ஈகை, பசி

மௌனம் காக்க வேண்டியவை:
    ஆத்திரம், வெறி
    வாதம்
    அவசரம்

நாமறியாத கருத்து ஒன்றுமில்லை, அடிக்கடி மறந்து விடுகிறோம் என்பதே சாட்டை முனையாகச் சுட்டெறிக்கிறது.

உரையாடும் முறைகளுக்கான சொற்களைப் பாருங்கள்: உரைக்க, உணர்த்த, காக்க.
சிந்திக்க வைக்கும் தேர்வு அல்லவா? உணர்த்த முடிவதை உரைப்பதனால் பலன் குறைவே. நம்முடைய நட்பை நினைத்துக் கொண்டேன்.

'என்ன சொல்ல?' என்பதே கேள்வியாக இருக்கையில், 'எப்படிச் சொல்ல?' எனும் விடையறிந்து என்ன பயன்? இது என்னுடைய வலி நண்பரே.


அரசன் குறிப்பிட்டிருக்கும் 'உரையாடும் முறை'களை எப்போதாவது பின்பற்றியிருக்கிறேனா என்று யோசிக்கிறேன். அரசன் என்னைத் தன் நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொண்டார் என்பது, எனக்கு இன்னும் அடங்காத ஆச்சரியம்.

25 கருத்துகள்:

 1. சிதம்பர ரகசியங்களின் ராஜ பகிர்வு. எல்லோரும் பின்பற்ற வேண்டியவை. எத்தனை பேர் செய்கிறோம்...?

  பதிலளிநீக்கு
 2. அன்பின அப்பாதுரை சார்,

  அருமையான பகிர்வு. உண்மைதான் நாம் அறியாதது ஒன்றுமில்லை அதில்.. ஆனால் உணர்வுகள் பலநேரங்களில் நம் கண்களையும் மறைத்து, மூளையையும் செயலிழக்கச் செய்துவிடுகிறது என்பதுதான் உண்மை.. மாற்றிக்கொள்ள முயற்சி செய்வோம்.. நல்ல நட்பிற்கு உதாரணமான உங்கள் நண்பருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  அன்புடன்
  பவளசங்கரி

  பதிலளிநீக்கு
 3. அருமையான கருத்துகள். நல்லாசிரியரை அடைய நேர்ந்த உங்களுக்கு அதிர்ஷ்டம்.

  பதிலளிநீக்கு
 4. காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிருக்கையில் செல்லாக் காசு. எப்படிச் செலவழிப்பது என்று புரிவதில்லை.


  நாமறியாத கருத்து ஒன்றுமில்லை, அடிக்கடி மறந்து விடுகிறோம் என்பதே சாட்டை முனையாகச் சுட்டெரிக்கிறது.!!

  பதிலளிநீக்கு
 5. ஆத்திரம் வரும் போதும், வாதத்தின போதும் மெளனம் காக்க வேண்டும் என்பதைக் கடைப்பிடித்தாலே மற்றதெல்லாம் சரியாகி விடும் போலிருக்கிறதே... அருமையான கருத்துக்கள்! கடைப்பிடிக்க சிறிதேனும் முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. மிக நல்ல பகிர்வு.

  / காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிருக்கையில் செல்லாக் காசு./

  அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 7. /நாமறியாத கருத்து ஒன்றுமில்லை.
  அடிக்கடி மறந்து விடுகிறோம்
  என்பதே சாட்டைமுனையாகச்
  சுட்டெரிக்கிறது/ நாம் முக்கியத்துவம்
  கொடுக்காத எண்ணங்களை மறந்து
  விடுகிறோம் என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 8. //காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிருக்கையில் செல்லாக் காசு/

  how true it is

  பதிலளிநீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 11. சின்ன வயதில் ரொம்பப் பிடித்ததைக் கடைசியில் சாப்பிடும் ஒரு ஸ்வபாவம் உண்டு.ஆனால் கடைசியில் அதை அண்ணாவோ தங்கையோ பிடுங்கிக் கொண்டுபோய்விடுவார்கள்.

  அதுமாதிரி ஒரு வருஷமாகவே எல்லாவற்றையும் முடித்துக் கடைசியில் மூன்றாம் சுழிக்கு வரும்போது தடையாய் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் படித்துவிட்டுப் பின்னூட்டம் எழுதாமல் போவதற்கு.

  சமீபத்திய உதாரணம் நேற்றைய முயற்சி ரேயின் இடுகையைப் படித்தபின் எழுதமுடியாமல் கணிணி தெவங்கியதுடன் வெறுத்துப்போய் விலகிக்கொண்ட நிகழ்வு.

  இந்த இடுகைக்குப் பின்னூட்டமிட வாய்த்தது பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளியில் நானும் கற்றேன் என்பதாயிருக்குமோ அல்லது எனக்கு மிகப் பிடித்த ஆளுமையான சிதம்பரம் பிள்ளையின் வார்த்தைகளாயிருக்குமோ தெரியவில்லை அப்பாஜி.

  கட்டிக்கொடுத்த சோறு வெகுநாளைக்கு வரும் என்பதற்கான உதாரணம் இந்த வார்த்தைகள்.

  அரசனுக்கும் துரைக்கும்(என்ன பெயர்ப்பொருத்தம்!) என் நன்றி மேலும் என்னைச் செதுக்கிக்கொள்ள உளி கொடுத்தமைக்கு.

  பதிலளிநீக்கு
 12. அருமையான கருத்துகள்.... பின்பற்றினால் நன்றாகத்தான் இருக்கும். சிலவற்றையாவது பின்பற்ற வேண்டும்... பார்க்கலாம்...

  பதிலளிநீக்கு
 13. உரையாடும் முறை --- உள் வாங்க வேண்டிய பதிவு...

  தமிழ் அரசன் அவர்களுக்கும் அதை புரிந்து பகிர்ந்த தமிழ் துரை அவர்களுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 14. பின்னூட்டங்களுக்கு நன்றி.
  வருக சுந்தர்ஜி. throes of feedback - எனக்குப் புரிகிறது. படிப்பதே பெரிது என்றே நினைக்கிறேன்.
  தமிழரசன், தமிழ்த்துரை - அடடே.. பத்மநாபன்.

  பதிலளிநீக்கு
 15. உங்கள் தமிழரசன் போன்ற நண்பர் வாய்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அற்புதமான கருத்துகள்?

  //காலம் என்பது, கடந்த பின்னரே பொன்னாகிறது. கையிலிருக்கையில் செல்லாக் காசு//

  இன்னமும் உள்ளே அதிர்கிறது துரையையா !

  பதிலளிநீக்கு
 16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 17. நிஜமாகவே throes of feedback இல்லை அப்பாஜி.இன்றைக்குப் படித்து ரசித்ததில் வந்தவைதான்.நசிகேத புராணம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.மொத்தமாக வாசித்தபின் நிச்சயமாக எழுதுவேன் என்னுடைய ப்ளாகில். அசுர அபார முயற்சி.

  ஆங்கிலத்தின் கூர்மையான ப்ரயோகங்களுக்கு நீங்கள் ப்ரஸித்தி.

  ஆனால் வலைச்சர அறிமுகத்தில் என்னை vagrant wandererஆக அறிமுகப்படுத்திவிட்டு திடீரென wanderer ஆக ஆக்கியது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

  vagrant wanderer நான் அடைய விரும்பும் இலக்கும் தகுதியும்.

  பதிலளிநீக்கு
 18. ஆ..ஹா! பிடிச்சுட்டீங்களா சுந்தர்ஜி. good catch. ரெண்டும் ஒண்ணு தானேனு ஒண்ணை நீக்கி விட்டேன். literal viewவுக்கும் literary viewவுக்கும் இருக்குற அரையங்குல உயர கண்ணுக்குத் தெரியாத வேலிக்கு இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் வசதிப்படி தாவிக்கலாம் பாருங்க! வலைச்சரம் பதிவு எழுதின அன்னைக்கோ முதல் நாளோ தான் தக்ஷிணாயனம் மறுபடியும் resume பண்ணியிருந்தீங்களா.. அதைப் படிச்சதும் என்னவோ நீங்க wanderer நாங்க vagrantனு தோணிப்போச்சு.. அதான்.

  பதிலளிநீக்கு
 19. சில பேருக்கு மச்சம் kgg.
  பாருங்களேன்.. நான் மாஞ்சு மாஞ்சு எழுதினா "ஜூட்"னு கமெந்ட் விழுது..
  யாரோ சொன்னதை எடுத்து சொன்னா இந்தாளுக்கு "thought provoking"னு கமெந்ட் விழுது.
  மச்சமா இல்லையா?

  பதிலளிநீக்கு
 20. அரசன் போன்ற ஆசிரியர் கிடைத்தமைக்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,.
  ||உணர்த்த முடிவதை உரைப்பதனால் பலன் குறைவே//
  வெகு நேரம் சிந்திக்க வைத்த வரிகள்.
  உரைத்தும், உதைத்தும் உணர்த்த முடியாது போனால்?
  உதவாது என்று உணர்ந்து கொள்ள வேண்டுமோ?

  பதிலளிநீக்கு
 21. //உரைத்தும், உதைத்தும் உணர்த்த முடியாது போனால்?
  சிவகுமாரன் என் சிக்கலும் அதே.. :)
  மௌனம் அல்லது கைகழுவல் - இது தான் என் வழி.

  பதிலளிநீக்கு
 22. 'உரையாடும் முறை'களை எப்போதாவது பின்பற்றியிருக்கிறேனா என்று யோசிக்கிறேன்....சில இடங்களில் பின்பற்றியிருக்கிறேன்.தவறியுமிருக்கிறேன்.இனி என்னைச் சரியாக்கிக்கொள்ளவேணும்.நன்றி அப்பாஜி !

  பதிலளிநீக்கு
 23. எத்தனையோ அறிவுரைகளை மற்றவர்கள் சொல்லி கேட்டு இருக்கின்றேன். ஆனால் வாழ்க்கைப் பாதையில் சவுக்கடி போல சொடுக்கி நீ இப்படி இருந்தால் தான் இனி நல்லதுப்பா என்று சொல்லும் போது தான் மனம் முழுக்க வலிக்கின்றது. உரைக்கின்றது. அமைதியாக ஏற்றுக் கொண்டு கடைபிடிக்க முடிகின்றது.

  பதிலளிநீக்கு