2012/06/05

எடிபஸ்


மிக அழகாக இருந்தாள்.
கச்சிதமாக வெட்டியக் கூந்தல். களையான முகம். நீண்ட கண்கள். செதுக்கிய மூக்கு. ஏந்தச் சொன்ன முகவாய். புதுக்கனி உதடுகள். அடக்கமான கழுத்து. அடங்காத மார்பு. முத்தாய்ப்பாய் முலை. வழுக்கும் இளவயிறு. பரந்த பிட்டம்.
என்று என் பார்வை இறங்கி வந்தது.
"யார் நீ?" என்றேன்.
"உன்னுடன் இருப்பவளை இப்போது தான் கவனிக்கிறாயா?" என்றாள்.
"தொடவா?"
"நான் உனக்குத் தாய்"
தயங்கினேன். "பொதுவாகச் சகோதரியில் தொடங்குவார்கள். நீ நேரே தாய்க்குத் தாவுகிறாயே?" என்றேன்.
"நீதானே என்னைத் தாயென்று சொல்லி வருகிறாய்?" என்று என்னைச் சீண்டினாள்.
"நானா? உன்னைக் கட்டி முத்தமிடத் தோன்றுகிறதே? உன் மார்பில் என் உதடுகளைப் பதிக்கத் தோன்றுகிறதே? உன் மடியில்.."
"சீ.. பொல்லாது.. தாயிடம் இப்படியா பேசுவது?" என்று இமை படக்கச் சிரித்தாள்.

ஹ்ம்ம்ம்.
ஒரு மாதமாக ப்ரயனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
எனக்கு எரிச்சலாக வருகிறது.
"லவ் திஸ் டேமில் ஷிட்.." என்கிறான் ப்ரயன்.
"எக்சைடிங்.." என்று உருகி உருகிப் போகிறான்.

இனி ப்ரயன் எனக்கு நண்பனல்ல.
அவள் எனக்குத் தாயுமல்ல.


11 கருத்துகள்:

 1. அப்பாதுரை அவர்களே! எடிபஸ், இன்செஸ்ட், எல்லாம் மனிதர்களுக்கு.பிற உயிர்களுக்கு -தாய்,சகோதரி,அப்பா ,அம்ம, அண்ணன் ,தங்கை என்பது இல்லை. வமசவிருத்தி ஒன்றே நோக்கம். மனிதகுல வரலாற்றில் இந்த பேதம் எப்போது ஆரம்பித்தது?ஏன்?---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 2. முதிர்ந்த வாசகருக்கான கருத்தும் நடையும் ஆங்காங்கே காணலாம். நான் இன்னும் முதிரவில்லையோ.?

  பதிலளிநீக்கு
 3. மிருகம் மனிதனாக மாறத்தொடங்கிய காலம் தொட்டு இருக்கலாம் காஸ்யபன் சார். வம்சவிருத்தி ஒன்றே நோக்கமாக இருப்பதால் இன்னும் சில மனிதங்கள் மிருகங்களாகவே இருக்கின்றன. சுவையானக் கேள்வி.

  பதிலளிநீக்கு
 4. //வம்சவிருத்தி ஒன்றே நோக்கமாக இருப்பதால் //

  இந்த கருமம் தேவையா என்று சிலசமயம் தோன்றும். வேண்டாத வேலை விபிரிதமான தொல்லைகள்.

  ஆண் / ஆண் மற்றும் பெண் / பெண் உறவுகள் இன்னும் அதிதமாய் இனி வரும் காலங்களில் புலப்படும் என்று தோன்றுகின்றது.

  பதிலளிநீக்கு
 5. ஒரு குழந்தைத்தனமான ஜோதிடம்:

  பிறக்கும் ஆண் குழந்தை சாயலில்+குணத்தில் அப்பாவைப் போல இருந்தால், அம்மா மீது அதிக ஆசையாகவும், அம்மா போல் இருந்தால் காதல் வசப்படுகிறவனாகும் இருக்கலாம்.

  பிறக்கும் பெண் குழந்தை சாயலில்+குணத்தில் அப்பாவைப் போல் இருந்தால் அம்மாவை நேசிப்பவளாகவும், அம்மாவைப் போல இருந்தால் காதல் வசப்படுகிறவளாகவும் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 6. சொன்னா கேட்டுக்கணும்...அவ்ளோதான் !

  பதிலளிநீக்கு
 7. எப்படிப் பாத்தாலும் அம்மா பக்கத்திலிருந்து தான் காதலா? அப்பா வழி என்ன காட்டானா? இதென்ன அக்கிரமமா இருக்கே ஜீவி சார்??

  பதிலளிநீக்கு
 8. கொஞ்சம் புரிந்து நிறைய புரியாமல் - ஆனாலும் நல்லாருக்கு.
  காஷ்யபன் அய்யாவின் கேளிவிக்கான பதில்.. மனித நாகரிகம் வளரத் தொடங்கியதிலிருந்து இந்த பேதம் வளரத் தொடங்கி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 9. முதல்ல யாழ்மஞ்சு சொன்னதை செய்யுங்க ! காஸ்யபன் சார் கேள்விக்கு நீங்க தனிப்பதிவு போடத்தான் வேண்டும்.. போடுங்க... கூடிக்குறோம்!

  பதிலளிநீக்கு
 10. ஏன் சார், , கவிதை எழுதுறதுக்கு நிறைய பேர் இருக்காங்களே?

  பதிலளிநீக்கு