2011/08/25

கோமதீ
1 ◀◀ முன் கதை

    வீங்கியிருந்த முகத்தின் கோரத்தைக் கண்டு ஒரு கணம் திடுக்கிட்ட மருத்துவர், இறந்தவன் கண்களை இமை விலக்கிப் பார்த்தார். நாடி பிடித்தார். பிறகு உதட்டைப் பிதுக்கி, "சுதேனி சிந்தே" என்றார். ஏர்போர்ட் தொலைக்காட்சி கேமராவைப் பார்த்ததும் சுதாரித்து, 'ஐகோ' என்றபடி ஆங்கிலத்துக்குத் தாவினார். "அல்ரெடி டெட். க்ளினிகலி அண்ட் பிசிகலி டெட்" என்றார். மரணச்சான்றிதழில் கையெழுத்திட்டு அருகிலிருந்த சிப்பந்தியிடம் கொடுத்து, "மோர்க்" என்றார்.

அதுவரைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த ஏர்போர்ட் போலீஸ்காரர், "இவர் தங்கியிருந்த ஷிஞ்சுகு ஹோட்டலில் இவருடன் இன்னொரு நபரும் பதிவு செய்திருக்கிறார். அவரை விசாரணை செய்யப் போகிறோம்" என்றார்.

"ம்ம்..என் வேலை முடிந்துவிட்டது. அடாப்சி, பேதாலஜி ரிபோர்ட் வந்ததும் சொல்லுங்க" என்றபடி நகர்ந்தார் மருத்துவர். எஞ்சியிருந்த மருத்துவ உதவிக்குழு, இறந்து கிடந்தவனைப் பிணக்கிடங்கிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யத் தொடங்கியது.
**

    'எதற்காக இத்தனை கூட்டம்?' என்று நான் விசாரிக்க முனையும் போது, அவளை மறுபடி பார்த்தேன். இப்போது எனக்கு பத்தடி தூரத்தில் வந்துவிட்டாள். அவளைக் கவனிப்பதில்லை என்று தீர்மானித்து நகர்ந்தேன். நான் பார்ப்பதைத் தெரிந்து கொண்டவள் போல் சிரித்தாள்.

சிரிப்பு என்றால் அடக்கமான புன்னகையில்லை. எக்காளச் சிரிப்பு. எக்காளம் விடாமல் எதிரொலிக்கவே, அவளைப் பார்த்தேன். அவள் வாய் வழியாகக் குபுகுபுவெனச் சிலந்திகள் வெளிவர, நாக்கு இருக்குமிடத்தில் கருங்குழியைப் பார்த்து வெலவெலத்தேன்.
**

    "உள்ளே போங்க" என்று இருவரையும் தள்ளாத குறையாகத் தள்ளினான். "நான் உங்க பெட்டியை எடுத்துட்டு வரேன்".

"வீடு வசதியா இருக்குது, நல்ல வியாபாரம்னு சொல்லுங்க" என்றார் வைத்தி.

"அக்கா எங்கே?" என்றாள் கோமதி, முதல் வேலையாக.

பெட்டிகளை உள்ளே கொண்டு வந்து வைத்தவன், "இங்கதான் கடைக்குப் போயிருக்கும், வந்துரும். நீங்க மாடில போய் குளிச்சுட்டு வாங்க" என்றான். அவன் சொல்லும் போதே உள்ளறையொன்றின் கதவைத் திறந்துகொண்டு வெறும் ஜட்டியுடன் வந்த ஒரு வெள்ளைக்காரி அவனருகில் நின்று, திறந்த மார்பைக் குலுக்கி, டிம்பர்லேக் பாணியில் 'ஐம் ப்ரிங்கிங் செக்சி பேக்' என்று அவன் கன்னத்தைத் தட்டிவிட்டுப் போனாள்.

"இவங்க உங்க அக்காவா?" என்றாள் கோமதி, அதிர்ந்து போய்.

"இல்லமா.. என் கூட்டாளியோட பெண்டாட்டி. இதெல்லாம் இந்த ஊர்ல அப்படித்தான் இருக்கும், நீங்க போய் குளிச்சுட்டு வாங்க, போங்க" என்றான் சிரித்துக் கொண்டே.

அவர்களுடன் மாடியேறி ஒரு தனி அறையில் பெட்டிகளைப் போட்டுவிட்டு "பத்து பதினஞ்சு நிமிஷத்துல வந்துருங்க... எனக்குப் பசிக்குது, சேர்ந்து சாப்பிடலாம்" என்றான். வைத்தியிடம், "சார், அவங்க குளிச்சு வந்துரட்டும், ஒரு கை குடுக்கறீங்களா? இந்த மெத்தையைத் திருப்பிப் போட்டுறலாம்" என்றான்.

கோமதி குளிக்கப் போனதும் இருவரும் கட்டிலிலிருந்து மெத்தையை எடுத்துத் திருப்பிப் போட்டனர்.

"நாங்க தரையிலேயே படுத்துக்குவோங்க, எதுக்கு.." என்றபடித் திரும்பிய வைத்தியைக் கீழே கிடந்த கட்டையால் ஓங்கி அடித்தான்.

ஓசையின்றிக் கீழே விழுந்த வைத்தியை இழுத்துப் போய் இன்னொரு தனியறையில் அடைத்தான். சட்டைப் பையிலிருந்து ஒரு சாக்லெட் பொட்டலத்தைப் பிரித்து ஒரு சிட்டிகை கோக் எடுத்து உள்ளங்கையில் கோடு போல் பரப்பி அவசரமாக மூச்சிலிழுத்தான். தலையைச் சிலுப்பிக் கொண்டே இன்னொரு சிட்டிகை எடுத்து, கீழே மயங்கி விழுந்து கிடந்த வைத்தியின் வாயைத்திறந்து பற்களில் தேய்த்தான். கைகளைக் கழுவிக்கொண்டு கதவை அடைத்துவிட்டுக் கீழே இறங்கினான்.

படியிறங்கியவன், ஏதோ வேகம் வந்து மறுபடி மாடியேறி, குளியலறைக் கதவை ஆவேசமாக உதைத்துத் திறந்து உள்ளே போனான். "கடவுளே" என்று அலறி உடம்பை அடக்கி ஒடுக்கிக் கொண்டாலும் கோமதியால் தன் உடலை மறைக்க முடியவில்லை. மஞ்சள் சிலையாய் இருந்த அவள் உடலில் நீர்த்துளிகள் வேகமாகத் தெறித்து விழுந்ததை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்துவிட்டு, சிவந்த கண்களுடன் வெளியே வந்தான். படிகளில் தாவி இறங்கிக் கீழே இறங்கி வெளிக்கதவை அடைத்தான். சோபாவில் சாய்ந்து படுத்து, மேல்சட்டையைக் கழற்றி எறிந்தான். சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துப் பிடித்தான்.

வெகு நேரமாகக் கீழே இறங்கி வராமல் இருந்தவள் மீது கோபம் வந்து மாடிக்கு விரைந்தான். அறைக்குள்ளே சுவற்றில் சாய்ந்தபடி அழுது கொண்டிருந்தாள் கோமதி. அவனைப் பார்த்ததும், "எங்களை தயவு செய்து ஏதாவது கோவில்ல கொண்டு விட்டுருங்க, இந்த இடம் எங்களுக்குப் பிடிக்கலை. அவர் எங்கே?" என்றாள் அழுவதை நிறுத்தாமல்.

"சரிதான், எழுந்திருடி" என்று அவள் கைகளைப் பிடித்திழுத்தான். அதிர்ச்சியுடன் நகராமல் இருந்தவளின் முடியைப் பிடித்தெழுப்பி நிறுத்தினான்.

உதட்டில் முத்தமிட வந்தவனைத் தள்ளினாள் கோமதி. "வேண்டாம்.. நீங்க அண்ணன் மாதிரி. இந்தப் பாவம் வேண்டாம். நாங்க போயிடறோம்".

அவள் மேல் பாய்ந்துக் கட்டிப் பிடித்தான். வெறியோடு அவளை மெத்தையில் தள்ளினான். அவள் இடுப்பில் ஒரு கை வைத்து, புடவைக்குள் மறு கை நுழைத்த்தான். ஆத்திரத்தோடு இரண்டு கைகளாலும் அவன் முகத்தைப் பிடித்துத் தள்ளி, வேகமாகப் புரண்டு எதிர்புறம் போய் விழுந்த கோமதி, கட்டிலைச் சுற்றி ஒடினாள். அவன் கைகளில் சிக்காமல், ஏதாவது ஆயுதம் தென்படுகிறதாவென்று பார்த்தாள். "என்னங்க, இங்கே வாங்க..." என்று கணவனைக் கூவியழைத்து அலறினாள்.

போதையேறியவனுக்கு இது விளையாட்டாயிருந்தது. கோமதி அங்கே இங்கே ஓடுவதையும் தேடுவதையும் அலறுவதையும் பார்த்துச் சிரித்தான். திடீரென்று தன் கால்சட்டையை அவிழ்த்து அவள் மேல் எறிந்தான். வேகமாக அவள் மேல் தாவி அவள் மார்பில் இரண்டு கைகளையும் வைத்து, "வா" என்றான். திமிறி, அவன் முகத்தில் நகத்தால் கீறினாள்.

கோமதியின் கைகளை உதறி விலகியவன், அவள் முந்தானையைப் பற்றியிழுத்தான். கீழே தடுமாறி விழுந்தவளுடைய புடவையை, குனிந்து அவள் வயிற்றிலிருந்து கணத்தில் நீக்கினான். தன் வயிற்றருகே குனிந்தவனுடைய தலையைத் தன் முழங்காலால் பலம் வந்தமட்டும் இடித்தாள். தலையில் அடி வாங்கியவன் இன்னும் சிரித்தான். அவள் அலறினாள். "ஐயோ.. யாராவது என்னைக் காப்பாத்துங்க... கடவுளே... முருகா... பராசக்தி... பரமேஸ்வரி.. என்னை விட்டுறுங்கண்ணே.... உங்களுக்கு இந்தப் பாவம் வேண்டாம்". கைகூப்பிக் கதறினாள்.

கோமதியைச் சுவரோரம் தள்ளி, அவள் கைகளைப் பிணைத்து உடலோடு உடல் வைத்து அழுத்தினான். பிறகு அவள் கால்களில் தன் முழங்கால்களை வைத்து மண்டியிட்டு அழுத்தி, அவள் தொப்புளில் வாய் வைத்தான். அவள் நகர முடியாமல் கதறினாள். "யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்... என்னங்க..எங்கே இருக்கீங்க? என்னைக் காப்பாத்துங்க... முருகா.. முருகா".

    "அவளை விடுறா, நாயே" என்று கதறியபடி அறைக்குள் வந்தார் வைத்தி. நிற்க முடியாமல் தடுமாறினார். கையில் கொண்டு வந்திருந்த கட்டையால் அவன் தலையில் அடிக்கப் போய், குறி தவறி அவன் கைகளில் அடித்தார். அவளை விட்டு நகர்ந்தவன் சுதாரிக்குமுன், சுவற்றில் மாட்டியிருந்த ஒரு படத்தை எடுத்து அவன் முகத்தில் அடித்தார். "என் தங்கமே கோமதி..." என்று அவள் கைகளைத் தொட்டார். பிறகு ஆத்திரத்துடன் அவனை உதைத்தார்.

உதைத்த வைத்தியின் கால்களைப் பற்றித் தூக்கியடித்தான். வைத்தி சுவரோரமாக விழுந்தார். அவன் உடனே எழுந்து கட்டிலருகே இருந்த மேஜையைத் திறந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து, இன்னும் தடுமாறி எழுந்து கொண்டிருந்த வைத்தியை நெற்றியில் சுட்டான்.

"ஐயோ" என்று அலறிய வைத்தியைக் கைத்தாங்கலாகப் பிடித்த கோமதி, அவருடன் சேர்ந்து கீழே விழுந்தாள். கண்களில் வருத்தத்துடன் தன் மனைவியையே பார்த்தபடி, சில நொடிகளில் இறந்து போனார் வைத்தி.

அவள் விடாமல் அலறிக்கொண்டிருந்தாள், "ஐயோ".

    அலறிக் கொண்டிருந்தவளை அப்படியே தூக்கிக்கொண்டு அடுத்த அறைக்கு நடந்தான். "ஐயா என்னை விட்டுடு, புண்ணியமா போகும்" என்று அவள் கெஞ்சக் கெஞ்ச, அவன் அவளைப் படுக்கையில் தள்ளினான்.

கீழேயிருந்து கோக் கலந்த விஸ்கியை எடுத்து வந்தக் கூட்டாளி மிகேலும் வெள்ளைக்காரியும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். வெள்ளைக்காரி கோமதியை அழுத்திப் பிடித்துக்கொள்ள, அவன் கொஞ்சம் கோக் எடுத்து கோமதியின் உதட்டில் ஒற்றி முத்தம் கொடுத்தான்.

காறித்துப்பினாள். "இந்தப் பாவம் உன்னை விடாது. ஏழு பிறவியிலும் உன்னை விடாது. உன்னை என்ன பாடு படுத்துகிறேன் பார்" என்றாள்.

மிகேல் கோமதி மேல் கோகெய்னை அள்ளி வீசினான். வெள்ளைக்காரி கோமதியின் இடுப்பைக் கட்டிப் பிடித்தாள். அவன் கோமதியின் வாயில், அவள் கதறக்கதற, கோக் கலந்த விஸ்கியை ஊற்றினான்.

சக்தியில்லாமல், "தெய்வமே தெய்வமே" என்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த கோமதியை மூவரும் மாற்றி மாற்றி அனுபவித்துக் களைத்துப் போய் ஓய்ந்தபோது, அதிகாலை மணி மூன்றுக்கு மேலானது.

அவர்கள் ஓய்ந்து விலகியதும், உடலெங்கும் விஸ்கியும் போதைப்பொருளும் பரவி அருவருப்பூட்ட, முரட்டுத்தனத்தினால் ஏற்பட்ட காயங்களிலிருந்து ரத்தம் கசிய, உடல் வலியால் நகர முடியாமல் "முருகா முருகா" என்று அழுதாள். சிறிது நேரம் பொறுத்து மெள்ள அடி மேல் அடியாகத் தவழ்ந்து, பக்கத்து அறையில் நான்கைந்து மணி நேரமாக இறந்து கிடந்த கணவனருகே வந்து அவர் கைகளைப் பற்றினாள். சில நொடிகளில் நினைவிழந்தாள்.
**

►►

16 கருத்துகள்:

 1. அப்பாதுரையின் சிறுகதை, எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையை ஞாபகப்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 2. வருக "என் ராஜபாட்டை"- ராஜா, தமிழ் உதயம்,..

  புஷ்பா தங்கதுரை - மறந்தே போனது சார்! அவர் புத்தகங்களைக் கூட காணோமே?

  பதிலளிநீக்கு
 3. Durai Sir,

  Long story - Draviyam - after 16 episode no update ?

  today only i started and couldn't find after 16....

  more than 18 months ? or i am making some mistakes in searching...

  seshan/dubai

  பதிலளிநீக்கு
 4. துடிக்க துடிக்க ஒரு பெண்ணின் அனுமதி இல்லாது இப்படி அவள் கணவனைக்கொன்று பெண்மையை சூறாடியது இறைவனுக்கே கூட பொறுக்காது....

  அவரவர் விதியை மிக மோசமாகவே எழுதிக்கொண்டனர்...

  அழுத்தமான அருமையான கதை நடை....

  அன்பு வாழ்த்துகள்...

  தொடருங்கள்......தொடர்கிறோம்....

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லாஆகஸ்ட் 26, 2011

  அருமையான கதை ...

  பதிலளிநீக்கு
 6. வருக Seshadri

  திரவியம் கதையைத் தேடிப் படித்ததற்கு மிகவும் நன்றி. ஒரு சென்னைப் பயணத்தில் நான் எழுதியக் கதையின் ஜீவனை நானே அழித்துவிட்ட சோகத்தில்.. தொடரவில்லை. 16லே நின்றுவிட்டது. ஒரு நாள் முடிக்க விரும்புகிறேன்.

  எடுத்துப் படித்ததற்கு மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 7. நன்றி மஞ்சுபாஷிணி, ரெவெரி.

  பதிலளிநீக்கு
 8. அநியாய கொலையும் , கொதரளும், கதறலுமாக போய் க் கொண்டிருக்கும் கதைக்கு காரணம் அடுத்த பகுதியில் கிடைக்குமா

  பதிலளிநீக்கு
 9. கோம தீயாய் புறப்படுவாளா... இன்னும் திசை புரியவில்லை!

  பதிலளிநீக்கு
 10. நல்ல கேள்வி பத்மநாபன்.

  சிலரின் வாழ்க்கை முறைகளும் செயல்களும் நமக்கு முரணாகப் படுகிறது. அவர்களுக்கு இயல்பாகப் படுகிறது.

  இந்த இரண்டு முறைகளுக்குமான சந்திப்பில் சிக்கினால் விபத்து.

  விபத்தில் சிக்கிய சிலர் ஒரு இயல்பிலிருந்து இன்னொரு இயல்புக்கு மாறுகிறார்கள். பலர் காயங்களோடு தப்பிக்கிறார்கள். சிலர் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஆழ்ந்த வலியிலும் சோகத்திலும் துக்கத்திலும் சிக்கி வெளியே வருவதே இல்லை.

  அநியாயத்துக்கு எங்கேயாவது காரணம் உண்டா? இது போல் விபத்தில் சிக்காதவர்கள் தங்கள் வாழ்க்கை எத்தகைய வரம் என்பதை மறந்துவிடுவது தான் அநியாயம் (என்னைக் கேட்டால் :).

  பதிலளிநீக்கு
 11. சில அநியாயங்களின் தீர்வோ இன்னும் அநியாயமாகப் படுகிறது. கற்பழிப்புக்கு ஏழு வருடக் கடுங்காவல் எப்படிப்பட்ட நியாயம்? ஒசாமாவின் சுலபமான மரணம் செப்11 கொடுமையை நியாயபடுத்தவே முடியாது இல்லையா? ஹிட்லரின் தற்கொலை எந்த விதத்திலும் நியாயமே இல்லையே? இலங்கைத் தமிழரின் துயரம் நியாயமே இல்லை. கொஞ்சம் யோசித்தால் இவை எல்லாவற்றுக்கும் உண்மையில் காரணமே கிடையாது என்பது புரிந்து அதிர்ச்சியாக இருக்கிறது. உலக நியதிகளின் மேலிருக்கும் நம்பிக்கை தளர்ந்து போகிறது. சில கதைகள் வாழ்வை விட மோசமானவை. பல வாழ்வுகள் கதையை விட மோசமானவை.

  (கேப்பீங்க? கேப்பீங்க இனி கேள்வி, பத்மநாபன்?)

  பதிலளிநீக்கு
 12. வழக்கம் போல் ஸ்ரீராம் - கோல். :)
  கோமதீ = ஹோமத்தீ.

  பதிலளிநீக்கு
 13. //சில அநியாயங்களின் தீர்வோ இன்னும் அநியாயமாகப் படுகிறது.// இது நியாயம்

  பதிலளிநீக்கு
 14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு