2016/04/26

பல்கொட்டிப் பேய்

8



7◄

        தவைத் தாளிட முடியாமல் கயிறு தடுத்தது. "கயிறு இருக்குற வரைக்கும் நாம பிழைச்சுக்கலாம் தம்பிங்களா" என்றார் தணிகாசலம். "நல்ல வேளை.. கதவைத் தொறந்து என்னை உள்ளே விட்டீங்க.. இல்லைன்னா இன்னிக்கு உங்க அத்தினி பேர் கதியும் அதோகதி தான்"

"இதை சொல்லத்தான் ஓடி வந்தீங்களா? எங்க கதி அதோகதின்றதுல அப்படி ஒரு சந்தோசமா?" என்றான் ரமேஷ்.

"இல்ல தம்பி.. குடிச்சுட்டு படுத்திருந்தனா? திடீர்னு.. எந்திரிடா வந்திருச்சு.. எந்திரிடா வந்திருச்சுனு ஒரு குரல்.. ஏதோ எம்பொஞ்சாதி அதுக்கு ஒண்ணுக்கு வந்திருச்சு, எந்திரிக்க சொல்லுதுனு நான் கண்டுக்காம படுத்தினுருந்தனா.. தடால்னு எம்மூஞ்சில ஒரு அறை விட்டுச்சு.."

"யாரு, பொஞ்சாதியா?"

"சேசே.. எம்பொஞ்சாதி செருப்பெடுத்து வீசுமே தவிர என் மேலே கை வக்காதுபா.. தங்கம். நான் சொல்றது எங்க பேயாத்தாபா"

அருகிலிருந்த மர நாற்காலிகளை வேகமாக இழுத்துக் கதவின் பின்னே பாரமாக அடுக்கிய ரகுவும் நானும் "தணிகாசலம்.. விஷயத்தைச் சொல்லுங்க" என்றோம்.

"பேயாத்தா என்னை எயுப்பி உங்களைக் காப்பாத்தச் சொல்லிச்சுபா.. அதுக்கு உங்க வீடுனா ரொம்ப இஷ்டம்.. உங்கம்மாவும் தங்கச்சிங்களும் வெள்ளிக்கெயமை மாவெளக்கு போடுவாங்கள்ள? அத்த துன்னது துர்கையம்மன்னு உங்கூட்டுல நெனச்சினுகிறாங்க.. துன்னதெல்லாம் எங்க பேயாத்தாபா! இப்பதான் சொல்லுது.. அதனால உங்களை காப்பாத்த சொல்லி ஐடியா குடுத்து என்னை அனுப்பிச்சு.. ஒரு பேயைப் பத்தி இன்னொரு பேய்க்குத்தானே தெரியும்?"

"கரெக்டு.. பேயின் கால் பேயறியும்னு ஔவையாரே சொல்லியிருக்காங்க" என்றான் ஸ்ரீராம்.

"பேயின் பல் பேயறியுமா? இது பல்கொட்டியாச்சே?" கடித்தான் ரமேஷ்.

"சொம்மா இருங்கப்பா. இதப்பாருங்க.. வெள்ளாட்டா இருந்தா வினையாயிரும். பல்கொட்டி உச்ச நிலைக்கு வர ஒரு மணியாவுமாம்.. அதனால தயாராவுங்க. உச்ச நிலை வந்துச்சுனா அத்தனை பேரையும் தலைகீழா தொங்கவச்சு நடுமண்டைல பல்லால கொத்தி விட்டுருமாம்.. ரத்தம் அத்தினியும் கொட்டி வடிஞ்ச பிறவு.. இதா இப்பப் பாத்தமே.. அது போல காட்டேறிப் பல்லுங்களை அப்படி மொத்தமா துப்பி ஊதி உடம்பு அத்தினியும் கூறு போட்டு கிழிச்சுருமாம்.. பிறவு சாவுற மட்டும் சுத்தி சுத்தி வருமாம்.. செத்த பிறவு எலும்புங்களை பல்லுங்களா மாத்தி வாயுல போட்டுகினு போயிருமாம்"

வவ்வாலாய்த் தொங்கிச் செத்தாலும் சரி, பேய்க்குப் பல்செட்டாவதில்லை என்றுத் தீர்மானித்தோம். "என்ன செய்யணும் பூசாரி?" என்றான் ரகு.

"உங்கள்ள யாரு போணிப் பொணம்?" என்று தணிகாசலம் கேட்டதும் திடுக்கிட்டோம். "என்னங்க இது.. என்ன சாவுக் கடையா வச்சிருக்கோம்? போணிப் பொணம் போட?"

"அதுக்கில்லே தம்பிங்களா.. போணிப் பொணத்தை வச்சுதான் உங்களைக் காப்பாத்த முடியும்.. பேயாத்தா திட்டமா சொல்லியிருக்கு.."

"அப்ப ரமேஷ் தான் போணி" என்றான் ரகு.

"ஏண்டா? எங்கம்மாவுக்கு நான் ரெண்டாவது பையன்.. எங்கப்பாம்மா இரண்டுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம் கட்சி.. நீ இரேன் போணி? உங்க வீட்டுல உன்னை எதுக்கும் லாயக்கில்லாத அராத்துனு சொல்றதா நீயே சொல்லியிருக்கே?"

"தம்பிங்களா.. உங்கள்ள ஒருத்தர்தான் போணிப் பொணம் ஆவ முடியும். பல்கொட்டி எச்சில் பட்டவங்க நிச்சயமா தொங்கல் கேஸ்.. எச்சல் படாதவங்கதான் போணி.. போணிப் பொணம்ன்றது பல்கொட்டி குடுக்குற காவாட்டம்.. போணியோட எலும்புங்களை பல்கொட்டி எதுவும் செய்யாது.. ஆனா போணி சுறுவா இருந்தா அத்தினி பேரையும் காப்பாத்திறலாம்.. உங்கள்ள யாரு பல்கொட்டி எச்சில்?"

"எச்சிலா? சேசே, நாங்கலாம் பாப்பார பசங்க தணிகாசலம்.. ரொம்ப ஆசாரம்.. உனக்கு தெரியாதா?" என்றான் ரமேஷ்.

7◄ ►9

14 கருத்துகள்:

  1. ஆஹா, நான் பிஸியாக எதையோ செய்துகொண்டு, மனதில் என்னவோ நினைத்துக்கொண்டு என் டேஷ்போர்டை திறந்து பார்த்ததும், அப்போதே நம்ம பல்கொட்டிப்பேய் காட்சியளித்ததும், மிகுந்த மகிழ்ச்சியாகி ஓடியாந்துட்டேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  2. //ஏதோ எம்பொஞ்சாதி அதுக்கு ஒண்ணுக்கு வந்திருச்சு, எந்திரிக்க சொல்லுதுனு நான் கண்டுக்காம படுத்தினுருந்தனா.. தடால்னு எம்மூஞ்சில ஒரு அறை விட்டுச்சு.."

    "யாரு, பொஞ்சாதியா?"

    "சேசே.. எம்பொஞ்சாதி செருப்பெடுத்து வீசுமே தவிர என் மேலே கை வக்காதுபா.. தங்கம். நான் சொல்றது எங்க பேயாத்தாபா"//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எழுத்து என்றால் இதுதான் எழுத்து, சும்மா அந்தப் பேய்போலவே நகைச்சுவையும் நல்லாத் தாண்டவமாடுகிறது.

    படிப்போரில் சிலருக்கு நிச்சயமாக ஒண்ணுக்கு வந்திடும் :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  3. //”ஒரு பேயைப் பத்தி இன்னொரு பேய்க்குத்தானே தெரியும்?"//

    அடடா, மகளிர் அணியினர் இதனைப் படித்தால் என்ன ஆவது. நல்லாவே மாட்டினீங்க, சார்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  4. //"என்னங்க இது.. என்ன சாவுக் கடையா வச்சிருக்கோம்? போணிப் பொணம் போட?"//

    :)))))))))))))

    நகைச்சுவைத் தொடர் தொடரட்டும். பாராட்டுகள். வாழ்த்துகள். இனி இந்தப்பேய்த் தொடரைத் தொடராமல் பொழுதே போகாது போலிருக்கே. :)

    பதிலளிநீக்கு
  5. நாங்க எல்லாம் பாப்பாரப் பசங்க. ஹா ஹா.
    எச்சில் இறக்கடிக்கும்னு சொல்வாங்க .
    இப்படியும் ஒரு பேய்.

    பதிலளிநீக்கு
  6. கரடி விடறதுக்கும், காட்டேரி விடறதுக்கும் என்ன வித்தியாசம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரடியை காட்டேரி மாதிரி விடலாம்; காட்டேரியை கரடி மாதிரியும் விடலாம்.

      நீக்கு
  7. நீங்கள் போணிப்பிணாமாக முன்வரவில்லையா நீங்கள் குடும்பத்தில் மூத்தவரா/ உச்ச நிலை வந்துச்சுனா அத்தனை பேரையும் தலைகீழா தொங்கவச்சு நடுமண்டைல பல்லால கொத்தி விட்டுருமாம்/ பல் கொட்டிப் பேயும் தலைகீழாக நின்று கொத்தி விடுமோ?

    பதிலளிநீக்கு
  8. ஹாஹாஹா, பல்கொட்டிப் பேய்க்குக் கூட போணிப் பொணமெல்லாம் உண்டா? அவ்வளவு பார்த்துத் தான் போணி ஆனதும் தான் பல்கொட்டி வேலையை ஆரம்பிக்குமா? போணியே ஆகலைனா என்ன செய்யுமாம்?

    பதிலளிநீக்கு
  9. பேய்க்கதை எல்லாம் படிக்க ஜாலியாத் தான் இருக்கு! ஆனால் இதை எல்லாம் நினைச்சு ஒரு சொப்பனம் கூட வரலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு வல்லை. எனக்கு வந்துடுத்தே !!
      நேத்திக்கு ராத்திரி ஒரு பயங்கர கனவு.

      டிரிங்...டிரிங் ......ஃ போன் அடிக்கிறது.

      பார்யாள் சொல்றாள். ராத்திரி நேரத்திலே போன் வரதே ! எடுங்களேன் !

      ஏ ன் நீ தான் எடேன்...

      நீங்க எடுத்தா என்ன ?

      நான் மாட்டேன். பல் காட்டி , இல்ல பால் கொட்டி, பேய் ஆ இருக்குமோ நு பயமா இருக்கு.

      நீங்க ளே ஒரு பேய் . உங்க குடும்பத்திலே புதுசா ஒரு பேய் வராது. தைரியமா எடுங்க ....என்றாள்.

      எடுத்தேன். ஹலோ...

      ஹலோ...நீங்க தான் சுப்பு தாத்தாவா ?

      என்னடா இது...அர்த்த ராத்திரி லே ..யாரு ன்னு கேட்டேன்.

      நான் உங்க சிகாகோ பிரண்டு சொல்லி த்தான் வந்து இருக்கேன்.

      வந்து இருக்கேளா ? எங்க இருக்கேள் ?

      இப்ப உங்க போனுக்கு ள்ளே வந்து இருக்கேன்....

      என்ன வேணும் உங்களுக்கு...?

      போனி....... "
      அதைக் கேட்குமுன்னே போனை டொப் எனக் கீழே போட்டு விட்டேன்.

      என்னது ! என்னது ! அப்படின்னு பதறிப்போய் பார்யாள் லைட்டை போட்டாள்.

      அந்த போன் ரிசீவரில் முடி முடியாய் நீட்டிக்கொண்டு இருக்கிறது.

      என்ன இது கிரகசாரம் .! என்று எனைத் திட்டிக்கொண்டே போனை அவள் எடுக்கிறாள்.

      " என்ன இது எச்சல் மாதிரி கையில் ஓட்றது ? " என்கிறாள்.

      நான் மூர்ச்சையாய் போறேன்.

      ஆத்துக்காரி ஆம்புலன்சுக்கு போன் பண்றாள்.

      சு தா.

      (ஐ. சி. யூ வில் இருந்து )

      நீக்கு
  10. श्रीरामसौमित्रिजटायुवेद षडाननादित्य कुजार्चिताय ।
    श्रीनीलकण्ठाय दयामयाय श्रीवैद्यनाथाय नमःशिवाय ॥ १॥

    शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव ।
    शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव शम्भो महादेव ॥

    गङ्गाप्रवाहेन्दु जटाधराय त्रिलोचनाय स्मर कालहन्त्रे ।
    समस्त देवैरभिपूजिताय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ २॥

    शम्भो महादेव ....

    भक्तःप्रियाय त्रिपुरान्तकाय पिनाकिने दुष्टहराय नित्यम् ।
    प्रत्यक्षलीलाय मनुष्यलोके श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ३॥

    शम्भो महादेव ....

    प्रभूतवातादि समस्तरोग प्रनाशकर्त्रे मुनिवन्दिताय ।
    प्रभाकरेन्द्वग्नि विलोचनाय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ४॥

    शम्भो महादेव ....

    वाक् श्रोत्र नेत्राङ्घ्रि विहीनजन्तोः वाक्‍श्रोत्रनेत्राङ्घ्रिसुखप्रदाय ।
    कुष्ठादिसर्वोन्नतरोगहन्त्रे श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ५॥

    शम्भो महादेव ....

    वेदान्तवेद्याय जगन्मयाय योगीश्वरद्येय पदाम्बुजाय ।
    त्रिमूर्तिरूपाय सहस्रनाम्ने श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ६॥

    शम्भो महादेव ....

    स्वतीर्थमृद्भस्मभृताङ्गभाजां पिशाचदुःखार्तिभयापहाय ।
    आत्मस्वरूपाय शरीरभाजां श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ७॥

    शम्भो महादेव ....

    श्रीनीलकण्ठाय वृषध्वजाय स्रक्गन्ध भस्माद्यभिशोभिताय ।
    सुपुत्रदारादि सुभाग्यदाय श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ८॥

    शम्भो महादेव ....

    वालाम्बिकेश वैद्येश भवरोगहरेति च ।
    जपेन्नामत्रयं नित्यं महारोगनिवारणम् ॥ ९॥

    शम्भो महादेव ....

    ॥ इति श्री वैद्यनाथाष्टकम् ॥

    பதிலளிநீக்கு