2013/11/08

ஓட்டி சொன்ன கதை



    "சும்மா நீங்க ஏதோ பத்து நாளைக்கு ஆட்டிகிட்டு வந்து ஆட்டிகிட்டு போறதுனால அக்கறையிருக்காப்புல இதெல்லாம் கேக்குறீங்க.. விடுங்க, உங்களுக்கும் பொழுது போவுது.. எங்களுக்கும் பேச்சுத் துணை.. இல்லாதபோனா எங்ககூட மொவம் கொடுத்து யாரு பேசுறா? அதேன். இவங்கள்ள பலவேரு நாயிங்க...செலவேரு பன்னாடையிங்க.. இன்னுஞ் செலவேரு பீ சாக்கடை புளு மூத்திரம்.. ஐயோ நெசமாத்தாங்க.. மத்தவங்களைப் போல இவிங்களும் ஆறு வேள தொளுவானுங்க... மதம்பானுங்க.. ஆனா உள்ள கெட்டவளக்கம் ஒட்டும் மனசாலயும் உடம்பாலயும் செஞ்சுத் தீத்துருவானுங்க.. அரசாங்கமா? போலீஸா? என்னா சொல்றீங்க நீங்க? ஐயா.. உங்களுக்கு ஒண்ணு தெரியுங்களா? ஒரு தப்பு நடந்துச்சுனு வையுங்க.. அட.. இப்ப கார்ல போயிட்டிருக்காங்க.. ஆக்சிண்டு ஆயிருச்சுனு வையுங்க.. இடிச்சவன், இடிவாங்குனவன், ரெண்டுவேரும் இந்த நாட்டாளுங்களா இருந்தா போலீஸ் வராது.. அவனுங்களே தீத்துக்குவானுங்க.. அப்படியில்லாம இடிச்சவன் இந்த நாட்டாளா இருந்தா, எதிராளி யாராருந்தாலும் அவன் மேலதான் பளினு சொல்லிருவானுங்க போலீஸ்காரனுங்க.. இடிச்சவனோ இடிவாங்குனவனோ ரெண்டுத்துல யாருமே இந்த நாட்டு ஆளில்லேனு வைங்க.. இப்ப நியாயம் கிடைக்குற டெக்குனிக்கு இருக்குது பாருங்க.. இந்த சூச்சுமம் உலகத்துல வேறெயெங்கியும் கிடையாதுங்க.. கேளுங்க சொல்றேன்.. இடிச்சவன் எதிராளி ரெண்டு பேத்தையும் பாப்பானுங்க.. ரெண்டும் ஒரே சனமாருந்தா அடிச்சுட்டு சாவுங்கறானு விட்டுருவாங்க.. அதில்லாம ஒருத்தன் அமெரிக்கனா இருந்தா அவன் மேலே பளி வராது.. அமெரிக்கன் இல்லின்னா இங்கிலிஸ்காரனா இருக்கணும்.. அதில்லின்னா ஏதோ வெள்ளைத்தோலா இருக்கணும்.. அதுக்குப் பிறவு இந்தியனா இருக்கணும்.. அதுக்குப் பிறவு மத்த அரபியில்லாத முஸ்லிம் ஆளுங்க மலேசியா, பாகிஸ்தானி இப்படி யாராவதா இருக்கணும்.. அப்படியில்லின்னா பிலிப்பினோ.. இருக்குறதுல மோசம் பங்லாதேசு ஆளுங்கதான்.. வண்டில அடிவட்டு செத்துக் கிடப்பான் பங்லாதேசி.. இருந்தாலும் அவன் மேலேதான் பளி.. செத்துட்டு வந்து மோதிட்டான்னு சீட்டு எளுதிருவானுங்க. சில நேரம் ஆக்சிண்டுல கலக்காத ஆனா அந்தப் பக்கமா வந்து வண்டிய நிறுத்தின பங்லாதேசியைப் பிடிச்சு அவன் மேலே பளி போட்டுருவாங்க.. இதான் நியாயம் இங்கே. இங்க கிடைக்குற நியாயமெல்லாம் தோல் நெறம், பாஸ்போர்ட்டு பாத்து கிடைக்குற படிக்கட்டு நியாயம்.. அதனால போலீஸையெல்லாம் யாரு கூப்புடறாங்கய்யா? ஆனா நியாயத்துக்கெல்லாம் நேரமில்லிங்க போலீஸ்காரனுங்களுக்கு.. அவனுங்களுக்கு நிறைய சோலியிருக்குதுங்க பாவம்.. பொதுசன நியாயத்தைப் பாத்துட்டிருந்தா சீமைச் சாராயம் விக்குறது, பொண்ணுங்களைக் கூட்டிக் கொடுக்குறது.. இதையெல்லாம் யாரு செய்வாங்க? ஐயோ நிசமாத்தாங்க.. இப்படித்தேன் ஒரு தடவை என்னாச்சு.. ஒரு புருசன் பொஞ்சாதி.. கொளந்தைங்க இல்ல.. அவங்க மட்டுந்தேன்.. ரெண்டு பேரும் ஹம்ராஸ்பத்திரிலே பெரிய தபீபு கிட்டே நர்சா இருந்தாங்க.. பொண்ணு அளகா தளதளனு இருக்கும் முஸ்லிம் பொண்ணு, ஆனா அரபி கிடையாது.. ரெண்டு போலீஸ்காரனுங்க அந்த வீட்டை நோட்டம் பாத்துட்டே இருந்திருக்காங்க.. தீடீர்னு ஒரு நா சாயந்திரம் அவங்க வூட்டுல புவுந்துட்டாங்க.. புருசங்காரன் பொஞ்சாதியை உள்ளாற போவச் சொல்லிட்டு என்னா விசயம்னு அவங்களைக் கேட்டிருக்கான்.. நாயிங்க ரெண்டும் அவங்கிட்டே டேய் ஒம்பொஞ்சாதியை எங்ககூட ராப் படுக்கவிடுனு கேட்டிருக்காங்க... அவன் திகைச்சுப் போனதும் இவங்க விடாம டேய் எப்படியிருந்தாலும் இன்னிக்கு அவளை ஆண்டுருவோம் ஒங்க ரெண்டு பேத்தையும் கொன்னுருவோம்னு மெரட்டியிருக்காங்க.. புருசங்காரன் நிதானமா, கொஞ்சம் இருங்கய்யா எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லே.. எம்பொஞ்சாதிக்கும் பிரச்சினையில்லே.... ஆனா தயவுசெஞ்சு ஒத்தொத்தரா அனுபவியுங்க.. அவ ஏற்கனவே ஒரு மாச கெர்ப்பமா இருக்கா.. கொஞ்சம் கண்ணியமாப் போவும்னு கெஞ்சியிருக்கான்.. நாயிங்க சரின்னதும் புருசங்காரன் ஐயா நான் போயி பொஞ்சாதிகிட்டே பக்குவமா சொல்லி படுக்கையை சுத்தம் செஞ்சிட்டு ஓடியாறேன்னு உள்ளாற போய்.. பொஞ்சாதி கிட்டே விவரம் சொல்லி எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டு வந்தான்.. சொல்றேன்.. ரூம்புல ஒரு விடியோ கேமராவை செட் பண்ணிட்டு, கோளி சீவுற கத்தி ஒண்ணை கட்டில் தலைமாட்டுல மறைவா மாட்டி வச்சுட்டுப் போயிருக்கான் புருசங்காரன். ஐயா நாய்மாருங்களே.. போங்க எம் பொஞ்சாதி தயாரா இருக்கா.. கொஞ்சம் பக்குவமா நடந்து கருணை காட்டுங்க.. புள்ளத்தாச்சினு சொல்லி நாயிங்களை அனுப்பியிருக்கான்.. மொத நாயி உள்ளாற போயிருக்கான்.. பொண்ணு போத்திப் படுத்திருக்கா.. அளுதுகிட்டே ஐயா வேணாங்கனு கெஞ்சுறாப்புல கெஞ்சியிருக்கா.. இதைப் பாத்த போலீஸ்காரனுக்கு கோவம் வந்து புருசங்காரனையும் உள்ளாற வரச்சொல்லி என்னங்கடா ரெண்டுவேரும் வெளையாடறீங்களா ஒளுங்கா படுத்தா உயிரோட விடுவோம் அப்படி இப்படினு கத்தியிருக்கான்.. புருசங்காரன் சமாதானம் சொல்றாப்புல பொஞ்சாதிட்ட தாஜாவா பேசுறாப்புல பேசி வெளியே போய் கதவடைச்சான்.. பொஞ்சாதி அமைதியா போலீஸ்காரங்கிட்ட ஐயா வாங்கனு சொல்லி போர்வைய வெலக்குனா.. பாத்தா அம்மணமா படுத்திருக்கா.. ஒட்டுத் துணியில்லாத தக்காளி அம்மணத்தைப் பார்த்ததும் கெறங்கிப் போய் எல்லாத்தையும் களட்டிப் போட்டு கெடாவாட்டம் பாஞ்சிருக்கான் நாயி.. அவ வெரசலா நவுந்து, ஐயா போலீசு நீ கீள படுத்துக்கய்யா, நான் கெர்ப்பமா இருக்குறதால மேல ஏறி வரேன்னு சொல்லியிருக்கா.. அவனும் சந்தோசமா தலைமாட்டுல ரெண்டு தலையாணி அடுக்கி வச்சு வசதியா அகண்டு நல்லா நெட்டுகிட்டுப் படுத்திருக்கான்.. இவ மொள்ள அவன் வயித்து மேலே கால் மாத்திப் போட்டுக் குந்தி.. அந்தால ஏறுறாப்புல அவன் முகம் பாத்துக் குனிஞ்சு.. சட்டுனு மறைவா இருந்த வெட்டுக்கத்திய எடுத்து அவன் வாயிலயே நச்சு நச்சு நச்சு நச்சுனு நாலு தரம் குத்திக் கொன்னுட்டா.. ஊடால புருசங்காரன் கடப்பாரையால மத்த போலீசை மார்ல குத்தி, வெறி வந்தாப்புல சதையைக் கிண்டிக் கிண்டிக் குடைஞ்சுக் கொன்னுட்டான்.. வெறியடங்கின புருசன் பொஞ்சாதி ரெண்டுவேரும் விடியோவையும் அங்கருந்த எல்லாத்தையும் நாலஞ்சு போட்டாவும் எடுத்துட்டு வெளில வந்து கிடைச்ச மொத டாக்சியைப் பிடிச்சு தூதரகம் போனாங்க.. அவசர உதவி முறையில தூதர் கிட்டே பேசி விவரம் எல்லாம் சொன்னாங்க.. தூதர் அவங்களை அங்கயே தங்கச் சொல்லி யார் கிட்டேயும் எதுவும் பேசக் கூடாதுன்னுட்டாரு.. உள்ளூர் போலீஸ் பெரியதிகாரிகிட்டே விவரம் சொன்ன தூதரு, நாசூக்கா மிரட்டியிருக்காரு.. இதப்பாரு இந்த விசயத்தை இப்படியே விட்டா யாருக்கும் தெரியாம அமுக்கிறலாம், எங்க ஜனங்களை நாளைக்கே நாட்டை விட்டு அனுப்பிடறேன்.. அதைவிட்டு நீ கேஸ் போட்டு தொந்தரவு கொடுத்தீன்னா எல்லா விவரத்தையும் எங்க நாட்டு டிவியிலே போட்டுருவோம்ன்ருக்காரு.. விசயம் வெளிய வரவேயில்லே.. எனக்கு எப்படித் தெரியுங்களா.. என்ன இப்படிக் கேக்குறீங்க? விடுங்க.. இந்த ஊர்ல நெறய பேத்துக்கு இந்த விவரம் தெரியுங்க.. தா வந்திருச்சு ஐயா.. சரிங்கய்யா, போயிட்டு வாங்க. இருக்கட்டும்யா.. ரொம்ப நன்றிங்க

................. அட, எல்லாரும் மனுசங்க தானே சாமி? நாலு கடலை எடுத்து வாயில போட்டோம்னா ரெண்டு அவிசலா கடிபடுறப்ப என்ன செய்யுறோம்? மொத்தத்தையும் தானே துப்புறோம்? அது போலத்தான் சாமி.. ரெண்டு பன்னிங்க இருந்தா மொத்தமும் பன்னிப் பண்ணைனு சொல்லிடறோம்.. மன்னிச்சுருங்க. இந்த ஜிசிசி ஏரியாவுல பன்னின்ற வார்த்தையே ஆவாது.. நாயின்னே வச்சுக்குவோம்.. பாவம் வாயில்லாப் பிராணியை அடையாளமா வச்சுத்தான் கேடுகெட்ட மனுசங்களைப் பாக்குறோம்.. நம்ம மனசோட விகாரம் அப்படி.. இவங்க என்ன செய்வாங்க? ஒண்ணு கவனிச்சிருக்கீங்களா? எவன் மதம் கடவுள்னு ரொம்ப மூடி மூடிக் கும்பிடுறானோ, அவந்தான் இருக்குற அட்டூழியம் அத்தனையும் செய்றான். இத்தனை கட்டுப்பாட்டோட இருக்குற இவங்க என்ன செய்றாங்க? வியாழக்கிழமைனா துபாய்க்கு ஓடிறானுங்க. அங்கே இருக்குற கொட்டம் அத்தனையும் அடிச்சுட்டு.. கொட்டம்னா அப்படி இப்படி லேசுபட்ட கொட்டம் இல்லிங்க.. அடிச்சுட்டு ஞாயித்துக்கிழமை ஊருக்கு வந்துருவாங்க.. கடவுளுக்கு நெருக்கமாப் போகப்போக கச்சடாத்தனம் அதிகமாயிட்டே இருக்கும்னு நினைக்கிறேன். இந்த ஊர் தாடி, நம்ம ஊர் காவி, அதா அந்தப்பக்க அங்கி எல்லாரும் அப்படித்தான். இந்த ஊர்ல மட்டும் கொஞ்சம் பரவாயில்லை சாமி. இருக்குற அரபி நாடுகள்ள இது கொஞ்சம் ஏழை நாடுனு சொல்வாங்க அதனாலயோ என்னவோ.. நம்ம ஊர் அரசியல்வாதிங்களுக்கு ஆசான் யாருனு நினைக்கிறீங்க? எல்லாம் இந்த மதகுருங்க தான். மதமும் சாமியும் என்ன சொல்லுது? எங்கே போறோம்னு சொல்ல மாட்டோம். போற இடம் நல்லாவும் இருக்கலாம் கெடுதலாவும் இருக்கலாம். இந்த மதத்து சாமியைக் கும்பிட்டா நல்ல இடத்துக்குப் போவலாம். கும்பிடாம இருந்தாலோ இன்னொரு சாமியைக் கும்பிட்டாலோ கெட்ட இடத்துக்குக் கேரன்டியா போவலாம். இதானே சொல்லுது? அரசியல்ல பாருங்க.. தலைவரு மட்டும் பதவிக்கு வந்தா நாட்டை எங்கேயோ கொண்டு போயிடுவாருனுவாங்க.. எப்படிக் கொண்டு போவாரு, அட அந்த எங்கியோன்றது எங்கே எப்படி இருக்கும்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா தலைவருக்கு மட்டும் ஓட்டுப் போடலின்னா நிச்சயம் அழிவுதான்னு சொல்லிருவாங்க. ஜனங்களைப் பயமுறுத்திக் தன்னோட கட்சிக்கு ஆதரவா மாத்துறதுல அரசியல்வாதியும் மதகுருவும் ஒண்ணுதான் சாமி.. ரைட்டுங்க.. நாலு மணிக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்க, வந்துர்றேன்.

............... ராயப்பேட்டை பிரதர். வச்சிருக்குற இந்தத் தாடியெல்லாம் வேஷம்னாலும் ஒரு நன்றிக்கடன் பிரதர். ஊர்லந்து வந்தப்ப எம்பேரு அழகரசன்னு நல்ல தமிழ்ப்பேரு. சவுதி வந்து அகமது ரியாசுனு மாத்தியாச்சு.. ஏன்னா எப்படி பிரதர்? மின்னூத்தம்பது ரியால் சம்பளம்னு வீட்டு டிரைவர் வேலைக்கு வந்த எத்தினியோ ஆளுங்கள்ள நானும் ஒருத்தன்.. மதம் மாறினா நூறு ரியால் சம்மானமும் அம்பது ரியால் கூடுதல் சம்பளமும் கொடுக்குறப்ப விடுவானேன்? அதில்லாம இந்தூர்ல முஸ்லிமா இருந்தா கொஞ்சம் மதிப்பாங்க... என்ன கேட்டீங்க? இல்லே பிரதர். என்னை யாரும் கட்டாயப்படுத்தலே. என்னைக் கூட்டிவந்த பெரியவரு உண்மையிலயே பெரிய மனுசன் பிரதர். மதம் மாற சம்மதமானு அவரா கேட்டாரு. நான் சரின்னேன். தங்கமான மனுசன் பிரதர். ஹஜ்ஜு போய் வந்தவங்க பெரும்பாலும் உயர்ந்த குணமா இருப்பாங்க பிரதர். நான் மொதொ வேலைக்கிருந்த வீட்டுல என்னை டிரைவர் போல நடத்தாம வீட்டுல ஒருத்தராத்தான் நடத்துனாங்க. வருசத்துக்கு ரெண்டு செட் துணி, மாசா மாசம் சம்பளம், மூணு வேளை கறிசோறு, தங்குறதுக்கு இடம், ரெண்டு வருசத்துக்கு ஒருக்கா டிக்கெட்டு, நூறு ரியால் போனசு.. இதெல்லாம் போக.. பெரியவரு காலமாயிட்டப்ப வீட்டுக்காரங்க எனக்கு மெட்ராசுல பீடர்ஸ் ரோடு பக்கமா வீடு வாங்கித் தானமாக் கொடுத்தாங்க. அதெல்லாம் குறை சொல்லவே மாட்டேன் பிரதர். இன்னிக்கு என் பெண்டாட்டி பிள்ளைங்க ஊர்ல நல்லா இருக்காங்கனா அந்த முஸ்லிம் பெரியவங்க குடும்பம் தான் காரணம் பிரதர். என்ன.. இது போல ஆளுங்க கம்மி. நெறய பேரு..ஆமாமா.. பாஸ்போர்ட்டை பிடுங்கி வச்சுக்கிட்டு அடிப்பாங்க பிரதர்.. அதும் பொம்பிளங்க வேலைக்கு வந்தா செக்சுலந்து எல்லாப் பிரச்சினையும் கொடுப்பாங்க பிரதர்.. பெத்தவங்க பெத்துப் போட்டு வேலைக்காரி தான் பதிமூணு வயசு வரைக்கும் வளத்திருப்பா.. இருந்தாலும் வளந்ததும் வயசுக்கோளாறுல தொட்டுப் பார்ப்பான்.. ஓசியில கிடைக்குற முலையாச்சே பிரதர்? வேலைக்காரி முரண்டா அப்பங்கிட்ட சொல்லி அடிச்சு நொறுக்குவான்.. மெய்யாலும் பிரதர். அது சரி.. நீங்க கேள்விப்பட்டதும் உண்மைதான்.. நம்மூர்லந்து வேலைக்கு வந்த சிலபேரு அக்காமா வாங்கிக் கொடுத்தவங்க வீட்டுலயே ரெகளை பண்ணுவாங்க.. ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாத்தீங்கன்னா அதுல இருக்குற ஒருதலை நியாயம் புரிஞ்சுரும்.. அக்காமா எடுத்து வேலைக்கு வக்குற அளவுக்கு வசதியிருக்குறவங்க புலம்புறதுக்கும், வழியே இல்லாம எல்லாத்தையும் பறிகொடுத்து நாதியில்லாமப் புலம்புறவங்களுக்கும் வித்தியாசம் இல்லியா பிரதர்? வேலைக்கு வந்தவங்களைக் கொடுமைப்படுத்துற முதலாளிங்க தான் அதிகம் பிரதர். தம்மாமுல இன்னிக்கு கெடந்து நாறுது பிரதர் நம்ம நிலமை.. நம்ம அரசாங்கம் எல்லாம் எதுவும் செய்யாதுங்க.. நானா? நான் ஓரளவுக்கு லக்கி பிரதர். பெரியவரு போன பிறவு மத்த இடத்துல வேலைக்குப் போனப்ப எனக்கும் இந்த செக்சு தொல்லைங்க இருந்திருக்கு.. வீட்டுக்கு ரெண்டு மூணு பெண்டாட்டிங்களைக் கட்டிப்போட்டு பத்தாதுனு வாரக்கடைசில பஹ்ரெய்ன் ஓடிறுவாங்க.. பொண்ணுங்க என்ன செய்வாங்க? அவங்களும் மனுசங்க தானே? வீட்டு வேலை செய்யறவங்க அக்கம் பக்கம்னு யாருக்கும் தெரியாம கசமுசா நடக்கும்.. பொண்ணுங்க தப்பா நடந்தாத்தான் சொல்லடியும் கல்லடியும் சவுக்கடியும் பிரதர்.. ஆம்பிளங்க என்ன வேணா செய்யலாம்.. ஆனா இதெல்லாம் தப்புனு ஆண்டவன் சொல்லியிருக்காருனு அப்பப்போ வெளிப்படையா பேசிக்குவாங்க.. என்ன செய்ய.. இவங்க மதத்துல பெண்ணுங்களை அடக்கி வைக்க அலோ பண்ணியிருக்குது.. எஞ்சாய் பண்றாங்க.. நாமெல்லாம் பொறாமை பிடிச்சு அலைய வேண்டியது தான்.. மதம் மாத்துறதா? அது நடந்துட்டு தான் இருக்கு பிரதர்.. இன்னிக்கு உலகத்துல இஸ்லாம் வேகமா வளறுதுன்றாங்க.. வளரட்டும்.. இஸ்லாம் அல்லாத மதக்காரங்க நரகத்துக்குப் போவாங்க, அதனால அவங்களை மதம் மாத்தி சொர்க்கத்துக்கு கொண்ட்டு போய் சேக்குறோம்பாங்க.. தனக்கும் சொர்க்கம் கிடைக்கும்னு நம்புறாங்க.. ஹஹ.. ஆமா பிரதர்.. இவங்க இதே இஸ்லாத்து சியாக்காரங்களை லச்சக்கணக்குல கெமிகல் ஊத்தி வெடி வச்சுக் கொளுத்தி சாகடிப்பாங்க.. ஆனா அதுல தப்பே இல்லை.. ஒரு பாவமும் இல்லேன்னுறுவாங்க.. மதமே இப்படித்தான் பிரதர். இப்ப பாருங்க.. அடுத்த வருசம் இந்தியாவுல தேர்தல் வருதுல்ல. ஆட்சிக்கு வந்தா முஸ்லிம்களை விரட்டுவாருன்றதுக்காகவே பெரிய கூட்டம் மோடிக்கு ஓட்டுப் போடக் காத்துட்டிருக்குதுன்றாங்க பிரதர்.. வெக்கக்கேட்டை என்னானு சொல்ல.. ஹஹ.. இவங்களுக்காவது ஆண்டவன் எண்ணையக் கொட்டிக் கொட்டிக் கொடுத்திருக்கான், காசை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கான், நூத்தாண்டுக் கணக்கா ஒட்டகம் ஓட்டுனவங்க இன்னக்கு காரு பங்களானு வசதியா இருக்காங்க.. இருக்கட்டும்.. ஆண்டவன் கொடுத்தான்னு ஒரு சின்ன நன்றியோட இருக்காங்க மதத்தைக் கொண்டாடுறாங்கன்னு வச்சுக்குவோம்.. ஆனா நம்ம ஊர்லந்து வந்தவங்களைக் கவனிச்சீங்களா? நம்மளைப் போலவே காசுக்காக சொந்த பந்தம் பொறந்த மண்ணை விட்டு இங்க வந்தப் பிறவு.. நம்மகிட்டயே உங்க நாட்டுல முஸ்லிம் நிலமை இப்படி இருக்குதுனு இந்தியாவைப் பத்திப் பேசுவானுங்க ஒட்டுவாரொட்டிப் பல்லிங்க.. என்னவோ இவங்க இங்கியே பொறந்து வளந்தாப்புல கட்சி கட்டி இந்தப் பொறம்போக்குங்க அடிக்குற கூத்து இருக்குதே பிரதர்.. டூ மச்.. என்ன செய்யுறோம்னு கூடத் தெரியாம கூத்தடிப்பாங்க பிரதர். நம்மூர்க்காரன் கூத்தைக் கேளுங்க பிரதர். ஆமா.. நம்ம ஊர் ஆளு தான். ஊர்ல ஒரு கல்யாணம் கட்டி மூணு கொழந்தைங்க இருக்கு. இங்க வீட்டுக்குத் தெரியாம ஒரு பிலிபினோ பொண்ணைக் கட்டி வச்சிருக்கான். எல்லாம் அரேஞ்சுமென்டு. ரெண்டு மாசத்துக்கொருக்கா ஊருக்குப் பணம் அனுப்புவான். என்ன எழவோ திடீர்னு அவனுக்கும் அந்தப் பிலிபினோ பொம்பளக்கும் சண்டை. போட்டுத் தள்ளிட்டான். ரெண்டு நாள் தலமறைவா இருந்து போலீஸ்ல சரணடைஞ்சான். அப்புறம் என்ன செஞ்சான் தெரியுமா பிரதர்? அவ இஸ்லாம் மதத்துக்கு விரோதமா நடந்தா அதான் கொன்னு போட்டேன்னு கூசாம சொல்லிட்டான்... ஜட்ஜுங்க கிட்டே அய்யா என்னை இந்தியா அனுப்பிறாதீங்க.. முஸ்லிமுன்னு பாக்காம என்னை கொலைகாரன்னு அடிச்சுப் போட்டுருவாங்க அப்படி இப்படினு ஒப்பாரி வச்சான்.. என்ன ஆச்சா.. ஒரு வருசம் ஜெயிலு பிறகு வெளில வந்துட்டான்.. இன்னொரு கல்யாணம் செஞ்சுட்டு இன்னிக்கு வண்டி ஓட்டிட்டுருக்கான். இடையில போன வருசம் ஊர்ல வெவரம் தெரிஞ்சு போச்சு. அங்க ஒரு குடும்பம். இங்க ஒரு குடும்பம். என்ன செய்வாங்க.. அவங்களுக்கு சோறு வீடு எல்லாம் தேவையாச்சே.. இத்தனை வருசம் பொறுத்தவங்க அப்படியே இருந்துட்டுப் போறோம்னு விட்டுட்டாங்க. இந்தாளு எஸ்கேப்பு. நிம்மதியா இருக்கான். ஆக எல்லாரும் ஒரே குட்டைல ஊறின மட்டைங்க தான். இந்த ஊர்க்காரங்க வெளிப்படையா செய்றாங்க.. திருட்டுத்தனம் இல்லாம.. அதைப் பாக்குறப்ப இவங்களே மேல் ..யார் சொன்னது? துபாய்லாம் ஒண்ணுமில்லே பிரதர்.. அய்யய்யே.. பஹ்ரெய்ன் ஈசிடில பாருங்க.. தாய்லந்து கெட்டுது.. சாவான் போட்டுவறதுக்காகவே உருவாக்குன இடம் பிரதர் ஈசிடி.. இவனுங்க மட்டுல்ல இங்க்லிஸ்காரனுங்க நம்மூராளுங்க எல்லாம் வாரக்கடைசியானாப் போதும் கைல பிடிச்சுட்டு பஹ்ரெய்ன் ஓடிருவாங்க..ஹஹ.. நீங்களும் போயிருக்கலாம்ன்றீங்களா? அட, முன்னாலயே சொல்லாட்டிப் போனா என்னா? இப்பக்கூட போவலாம்.. அழகா பாலம் கட்டியிருக்காங்க.. சல்லுனு போயிட்டு வந்துறலாம்.. சூப்பரா எஞ்சாய் பண்ணிட்டு வரலாம்.. வேலையை முடிச்சுட்டு வந்து வேணும்னா சொல்லுங்க பிரதர்

................. நானா சார்? மன்னம்பந்தல் ஏவிசி காலேஜுல பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி படிச்சிருக்கேன் சார். இந்த நாட்டுல வண்டியோட்டுறதா? அது ஒரு கதை. மாயரம் திருச்சி மதுரை மெட்ராசு பக்கம் எங்கயும் வேலை கிடைக்கலே சார்.. அப்புறம்.. உங்ககிட்டே சொல்றதுக்கு என்ன சார்.. ஒரு அவசரத்துல இங்க வர வேண்டியதாப் போச்சு. இந்தப் படமா..? என்னோட காதலி. இல்லே சார், நான் கல்யாணம் பண்ணாத காதலி.. சொல்றேன் சார்.. வேணும்னுதான் கண்ணை வெள்ளைத்தாள் ஒட்டி மறைச்சிருக்கேன். என்னோட தோள்ல சாஞ்சுக்குறதுனா அவளுக்கு ரொம்ப பிடிக்கும் சார். சாஞ்சுகிட்டே இருப்பா. அப்பல்லாம் தோள் நல்லா உரமேறி கெத்தா இருக்கும்.. சின்னய்சுலந்தே கர்லா சுத்துவேன்.. இப்படி கழுத்துலந்து இறங்குறப்ப தோள்சதை மாம்பழக் கதுப்பாட்டம் இருக்கும்.. அவ அந்த சதைல வாய் முழுக்க வச்சு, ஆனா கடிக்காம அப்படியே விளையாட்டா உறிஞ்சுவா.. சட்டுனு கடிச்சுருவா.. யம்மா ராச்சசி ஏண்டி இப்படி கடிக்குறேம்பேன்.. உன்னை அப்படியே கடிச்சு சாப்பிட்டுறலாம் போல இருக்கும்பா.. உண்மையில அவளால அழுத்திக் கடிக்கவும் முடியாது.. அவ கடிச்சா தோள் லேசாத்தான் வலிக்கும்,. ஆனா நிறுத்தினா நெஞ்சு நல்லா வலிக்கும் சார். பல்லு பட்டாலே சில்லுனு இருக்கும். அதனால அவ எச்சிலும் பல்லும் பட்டுக்கிட்டே இருக்கட்டும்ணு விட்டுறுவேன்.. ஒரு தடவை அப்படி எடுத்த படம்.. இல்லே சார்.. எல்லாத்தையும் விட்டு வந்துட்டேன்.. எங்கே இருக்கான்னே தெரியாது சார்.. அவ எங்க எதிர்வீட்டுப் பொண்ணு. சின்ன வயசுலந்தே ஒருத்தருக்கொருத்தர் பிடிக்கும்னாலும் நான் காலேஜ் செகன்ட் இயர் போன பிறகுதான் காதலிக்கத் தொடங்குனோம். அவ பக்கத்துல பாலிடெக்னிக்குல படிக்க வருவா. ரெண்டு பேரும் ப்ரெண்டா பழகறாங்கன்ற அளவுக்குத்தான் வீட்டுல தெரியும். மொதல்லியே சொல்லியிருந்தா கல்யாணம் செஞ்சு வச்சிருப்பாங்களோ என்னவோ. எங்களுக்கு பயம். இதுல என்னாச்சு பாருங்க அவளுக்குப் பொண்ணு பாத்தாங்க. பெண் பாக்க வந்த ஆளு இவகூட ஒரு வார்த்தை கூட பேசலியாம். பின்னால சொன்னா. என்ன புண்ணியம் சார்? அந்தாளுக்கு அவளைப் பிடிச்சு போச்சு. ரெண்டு வீட்டுக்கும் பிடிச்சுப் போச்சு. இவளுக்குப் பிடிக்குதானு யாரும் கேட்கக்கூட இல்லை. எங்கிட்ட சொல்லி அழுதா. எங்க வீட்டுல சொல்லிக் கல்யாணம் செஞ்சுக்கலாம்னேன்.. பயந்தா. ஓடிப்போயிறலாம்பேன்.. அதுக்கும் அவளுக்கு அனியாயத்துக்கு பயம். வேணாம்.. இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ என்னை சந்திக்காதே.. தேவைப்பட்டா நானே உன்னை வந்து சந்திக்கிறேன் அப்படி இப்படினு அறிவில்லாம உளறுவா.. இன்னிக்கு ஒண்ணு சொல்லுவா, மறுநாள் அதுக்கு நேர்மாறா எதுனா செய்வா.. ஏண்டி சனியனே, காதலிக்க மட்டும் தெரியுதானு எரிச்சலோட கேப்பேன். அதுக்கு என் தோளைக் கடிச்சுகிட்டு அழுவா. என்ன செய்யுறது சார்? சிக்கல் காதல்கள்ல பாருங்க... காதலி காதலனை நம்பணும்.. இவன் நம்மளைக் கைவிட மாட்டான்னு நம்பணும்.. யார் என்ன சொன்னாலும் இவனை மட்டும் ஒதுக்கக் கூடாது.. இவன் சொன்னதை மட்டும் மறக்கக் கூடாது, வார்த்தை பிசகக் கூடாதுனு இருக்கணும்.. ஆனாப் பாருங்க, நம்ம ஊர்ப் பெண்ணுங்க கடவுளை நம்புவாங்களே தவிர காதலனை நம்பமாட்டாங்க.. ஒரு எதிர்ப்பு சிக்கல்னு எதுனா ஆச்சுனா காதலனைத்தான் மொதல்ல மண்டையில அடிப்பாளுங்க.. தூக்கி எறிஞ்சிருவாங்க.. துரோகிங்க.. இவளும் அப்படித்தான்.. என்னாச்சு.. அவளுக்குக் கல்யாணமாச்சு வேறென்ன? தூக்கம் வருதா சார்.. தம்மாம் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆவும் சார்.. வேணா படுங்க.. சரி சொல்றேன்.. அவ கல்யாணம் செஞ்சுகிட்ட அந்தாளு குடிகாரன் சார். மொந்தைக்குடி. அதான் அவன் பெண் பார்க்க வந்தப்ப வாயே தொறக்கலே. அரசாங்க உத்யோகத்துல இருக்குற திமிர். சீட்டாட்டம் சினிமா ரேஸுனு சம்பளத்தை விட்டுறுவான்.. இவகிட்டே வந்து நகையக் கொண்டா, பணத்தைக் கொண்டானு அடிப்பான் சார்.. ரொம்ப அடிப்பான் சார்.. என் செல்லத்தை ரொம்பத் துன்புறுத்திட்டான் சார்.. வாயை வீசினா தேவடியா முண்டை கையை வீசினா கன்னிப் போறாப்புல அடி! ரொம்பக் கொடுமைப்படுத்திட்டான் சார்.. இப்பவும் எனக்கு எரியுது. நான் அப்ப ஒரு டீலர் கிட்டே வேலைல இருந்தேன் சார். மார்கெட்ல போய் சரக்கு போட்டு பணம் வாங்கிட்டு வரணும். அவ வீடு என் ரூட்லதான் இருந்துச்சு சார். ஒரு நாள் பாக்குறேன், வீட்டு வாசல்ல நின்னு அழுதிட்டிருக்கா. என்னாடின்னேன். புருசன் கோவத்துல வெளில தள்ளிக் கதவை அடைச்சுட்டான்றா. எவ்வளவு நேரமா நிக்குறேன்றேன்.. காலையில ஆபீஸ் போறப்ப என்னை வெளியே தள்ளி கதவைப் பூட்டிக்கிட்டு போயிட்டாருன்றா.. இதென்ன கூத்துனு கேட்டா மெள்ள விவரம் எல்லாம் சொன்னா. வெளில வந்துருன்னேன். சும்மா இருந்தப்பவே பயந்து செத்தவ இப்ப வருவாளா சார்? பாருங்க.. ஏற்கனவே அடிபட்டு விளாறாக் கிடப்பா சனியன்.. பத்தாதுனு பதட்டத்துல அடிக்கடி சமையல் அடுப்புல தானே சுட்டுக்கிட்டு கஷ்டப்படுவா.. புருசங்காரன் சிகரெட்டால சுட்டானானு கேப்பேன்.. கிழக்கு மேற்கா நல்லா மண்டைய ஆட்டுவா.. மறை கழண்டாச்சு.. பாத்து.. மண்டையும் கழண்டுறப்போவுது.. உனக்கென்ன வெக்கம் மானம் ரோஷம் சுயமரியாதை அறிவு கிறிவு எதுவும் இல்லையானு கடுப்பா கேப்பேன் சார்.. இல்லேனு சொல்வா சார்.. அப்ப என்னதான் இருக்குனு கேப்பேன்.. பயமா இருக்குனு அழுதுகிட்டே சிரிப்பா சார். என்னத்த செய்ய? எனக்குப் பாவமா இருக்கும்.. என்னால முடிஞ்சவரை ஆறுதலா எதுனா பேசிட்டு வருவேன். இடையில எனக்கு டீலர் கடை வேலை போயிடுச்சு. எனக்கு நல்லப் பழக்கமான ஊராட்சித் தலைவர் என்னை வீட்டுக்குக் கூட்டிவந்து சாப்பாடு போட்டாரு. இது போல மஸ்கட்ல டிரைவர் வேலையிருக்குறதாவும், கூடவே நாலஞ்சு டிரைவருங்களை மேய்க்கணும்னும் இன்னும் சில வேலைகளும் சொன்னாரு. பத்தாயிரம் ரூவா அட்வான்சா கொடுத்தாரு சார். வேலையும் இல்லாம இவளையும் நெனச்சு நொந்து நொந்து சாவுறதை விட கண்காணாமப் போயிறலாம்னு தோணிச்சு. யோசிச்சு சொல்றேன்னு பணம் வாங்காமக் கிளம்பின எங்கிட்டே அஞ்சாயிரம் சேர்த்துப் பதினஞ்சாப் பணத்தைக் கொடுத்து யோசிச்சு சொல்லு ஒண்ணும் அவசரமில்லேன்னாரு. ரெண்டு நாள்ல பம்பாய்க்கு டிகெட் வாங்கியிருக்குறதாவும் அங்கே நாப்பது நாள் தங்கி அக்காமா எல்லாம் கிடைச்சப்புறம் அங்கருந்தே மஸ்கட் போவலாம்.. ஆனா யோசிச்சு சொல்லுன்னாரு சார். பணத்தையும் டிக்கெட்டையும் கொடுத்து இவ்வளவு விவரமும் சொன்ன பிறகு என்னாத்தை யோசிக்குறது? எனக்கு எங்கம்மாவை விட்டா வேறே யாருமில்லே சார்.. பணத்தை அவங்ககிட்டே கொடுத்து பம்பாய் போற முடிவோடு வீட்டைப் பார்க்கப் போனேன். போனா அங்கே இவ அழுதுட்டிருக்கா சார்.. எங்கம்மா அவ தலையைத் தடவிக்கிட்டே நீ எதுக்கும் கவலைப்படாதே தங்கம்னு சொல்லிட்டிருக்காங்க சார். ஊர் உலகத்துல எத்தனையோ பேர் அவங்க அம்மாவைப் பத்தி பரந்த மனம், எல்லாத்தையும் புரிஞ்சுக்குற பாங்கு, அப்படி இப்படினு சொல்வாங்க இல்லிங்களா? நானும் நிறைய அம்மாக்களைப் பாத்திருக்கேன் சார். ஒரு சிக்கல்னு வந்ததும் தன் வட்டத்தைத் தவிர வெளில யாரையும் எதையும் சகிச்சுக்க முடியாத அம்மாங்க தான் அதிகம். நல்ல நிலைனாலும் சரி, தீவிர சிக்கல்னாலும் சரி, தன் குடும்பத்தைப் போலவே மத்த குடும்பத்தையும் நினைக்குற ஒரே மனம் உலகத்துல எங்கம்மாவுக்கு மட்டுந்தான் சார். சத்தியமான வார்த்தை. நேரில பாத்துப் புரிஞ்சுக்கிட்டவன் சார்.. அவளைச் சமாதானம் செஞ்சுகிட்டே எங்கம்மா எல்லா விவரமும் சொன்னாங்க. புருசன் மறுபடி சம்பளத்தைத் தொலச்சுட்டு அவளை அடிச்சு தொம்சம் பண்ணியிருக்கான். ஒரு கடை வைக்குறதா சொல்லி வீட்டுலந்து அஞ்சாயிரம் ரூவா வாங்கிட்டு வானு அனுப்பியிருக்கான். எங்கப்பா கிட்டே பணம் ஏதும் கிடையாதுனு இவ சொன்னதுக்கு அவனுக்கு வந்த கோவத்துல இவளை நல்லா புடைச்சுட்டான் சார். இனி பணம் இல்லாம திரும்பி வராதேனு சொல்லியனுப்பிட்டானாம். தன் வீட்டுக்கு வந்த இவ, இனிமே அவனோட வாழமாட்டேன்னு அடம் பிடிச்சாளாம். ஆனா அவங்க அப்பா வீட்டுல இருந்ததையெல்லாம் அடகு வச்சு பணம் வாங்கிட்டு வரதாவும் இல்லே பிச்சை எடுத்தாவது வாங்கிட்டு வரதாவும் சொல்லி.. வாழ்ந்தாலும் செத்தாலும் நீ உன் புருசனோட தான் இருக்கணும்னு கட்டாயப்படுத்தி.. இவளைப் பாத்துக்குங்கனு எங்க வீட்டுல விட்டுப் போயிருக்காரு.. எங்கம்மா விவரமெல்லாம் சொல்லச் சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள எரியுது சார். திடீர்னு அவளைப் பார்த்துக் கத்தினேன். எங்கூட வந்துருனு எத்தனை தடவை சொன்னேன் கேட்டியா உனக்கு நல்லா வேணும் நல்லா வேணும்னு கடுப்புல கண்மண் தெரியாம பேசிட்டேன். பேசின வேகத்துல வெளில போனவன் தான். மன உளைச்சலோட அங்க இங்க சுத்திட்டு அன்னிக்கு நைட்டே ஊராட்சித் தலைவர் கிட்டே பம்பாய் டிகெட் வாங்கிட்டு மெட்ராசுக்கு பஸ் ஏறிட்டேன். ஊர்ப் பக்கமே போவலே.. பார்டர் வந்துருச்சு சார்.. அக்காமா எல்லாம் எடுத்து தயாரா வச்சுக்குங்க.. அப்புறம் என்ன சார்.. மஸ்கட் வந்து ரெண்டு மாசம் பொறுத்து அம்மாவுக்கு போன் செஞ்சேன். அம்மா எல்லாம் சொன்னாங்க.. ஒண்ணும் ஆகலே சார்.. அவளுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாருங்க.. அவ புருசன் ரோட்டுல அடிபட்டு செத்துக் கிடந்தானாம்.. அதுவும் நான் மெட்ராசுக்குக் கிளம்பின அதே நாளில.. அது போதாம அவ வீட்டு அரிசிப் பானைக்குள்ள கத்தை கத்தையா ரூவா நோட்டாம் சார்.. பதினஞ்சாயிரமாவது இருக்கும்னாங்க அம்மா.. ஓசைப்படாம பணத்தை எடுத்துக்கிட்டு அவ எங்கம்மா கிட்டே ஓடி வந்து விவரம் சொல்லியிருக்கா.. திருட்டுப் பணமா இருக்கும் அதான் எவனாவது போட்டுத்தள்ளியிருப்பான்.. பணத்தை வச்சுக்க. உனக்கு விடுதலைனு நெனச்சுக்கனு அம்மா சொல்ல, இவ விட்டது சனினு எங்கம்மா கால்ல விழுந்து பணத்தை எடுத்துக்கிட்டுப் போயிட்டாளாம்.. இந்த மாதிரி ஒரு புருசனோட என்னை சேத்து வச்சியேனு அவ அப்பா மேலே ரொம்பக் கோவமாம்.. அதனால அவங்க வீட்டுல கூட சொல்லாமலே போயிட்டாளாம்.. எல்லாத்தையும் சொன்ன எங்கம்மா எங்கிட்டே அமைதியா டேய் அவ எங்கியோ நல்லா இருக்கா.. நீ எந்தக்காரணம் கொண்டும் இனி இந்தப்பக்கம் வராதடானுட்டாங்க.. அதனால நானும் ஊர்ப்பக்கமே போகலே சார். ஊருக்குப் போகலின்னாலும் அவ நினைவு அப்படியே இருக்கு.. அப்பப்ப அவ நினைவு தோள்ல கடிவலி மாதிரி வந்து போகும்.. போட்டோவைப் பார்த்துக்குவேன்.. அவ கண்ணைப் பார்த்தா எங்கே எல்லாத்தையும் விட்டு உடனே ஊருக்கு ஓடிருவேன்னு ஒரு பயம் சார்.. அதான் வெள்ளைத்தாள் ஒட்டி நிரந்தரமா மறைச்சுட்டேன். வந்தாச்சு சார்.. நீங்க உள்ளாற போய் விசா பாஸ்போர்டு காமிச்சு ஸ்டாம்ப் அடுச்சுட்டு வாங்க.. நான் இதா இங்க இருக்கேன்.



32 கருத்துகள்:

  1. ஒருவரிக் கதைம்பாங்க... இது ஒரு பாராக் கதையா!

    பதிலளிநீக்கு
  2. ஒரு பாராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆக் கதை. ஆனா வெரி இண்டரஸ்டிங். கதை மாதிரி இல்லையே.பாராக் கதை இல்லை .பார்த்த கதை.

    பதிலளிநீக்கு
  3. Howdy..

    Where are the rest of your posts Appaji..' came to catchup...I see only the current post...

    பதிலளிநீக்கு
  4. ஓட்டி சொன்ன கதை பகிர்வு அவர் சொல்வது போன்ற பாணியில் சொல்லப்பட்டு இருக்கிறது.
    அவர் மட்டும் பேசுகிறார்.
    வித்தியாசமான கதை.

    பதிலளிநீக்கு
  5. வல்லிம்மா... பாராக்கதை-பார்த்தகதை... அசத்திட்டீங்க.

    பதிலளிநீக்கு
  6. ஹாஹா, வழக்கமான சாடல். அதுவும் கடவுளை நம்பறவங்கனா அவங்க மோசமானவங்களாத் தான் இருப்பாங்க என்றதொரு பிடிவாதமான கருத்து. ஹிஹிஹிஹிஹிஹி!!!!!!!! நாத்திகர்கள் என்று சொல்லுபவர்களிலும் மோசமான ஆளுங்க நிறையவே உண்டு. பக்திமான்களின் தவறுகளை வெளிப்படுத்தறாப்போல் அவங்களோடது வெளிப்படாமல் இருக்கலாம். :)))))

    பதிலளிநீக்கு
  7. கதையென்று விலக்கவும் முடியாது கோமதிமா. இவையெல்லாம் அங்கே நடப்பவையே. எத்தனையோ நிகழ்வுகள் அங்குள்ளபத்திரிகைகளைப் படித்தாலே தெரியும்.
    வகையாகத் தொகுத்திருக்கிறார் ஓட்டி.அதைத் தெளிவாகத் தந்துவிட்டார் துரை.

    பதிலளிநீக்கு
  8. நானும் உடன் பயணித்துக் கேட்ட உணர்வு
    கதையெனச் சொல்லத்தான் மனம் வரவில்லை
    மீண்டும் ஒருமுறை படிக்கவேணும்

    பதிலளிநீக்கு
  9. என்னமோ திட்டம் இருக்கு?

    பழைய கழிதலா?

    பதிலளிநீக்கு
  10. ஹூம். நாமும் தமிழ்ப் படிச்சிருக்கோம் இல்ல ஸ்ரீராம்:)

    பதிலளிநீக்கு
  11. // செத்துட்டு வந்து மோதிட்டான்னு சீட்டு எளுதிருவானுங்க.// ஹா ஹா ஹா

    //அவ கடிச்சா தோள் லேசாத்தான் வலிக்கும்,. ஆனா நிறுத்தினா நெஞ்சு நல்லா வலிக்கும் சார்.// செம டயலாக் சார்...

    // ஆனாப் பாருங்க, நம்ம ஊர்ப் பெண்ணுங்க கடவுளை நம்புவாங்களே தவிர காதலனை நம்பமாட்டாங்க..// :-)

    வித்தியாசமான கதை அப்பா சார், இது போல் எழுத உங்களால் மட்டும் தான் முடியும், அங்காங்கே கொஞ்சம் தொய்வாக இருந்தாலும்.. அப்படி எதுவும் இல்லை தொடர்ந்து படி என்று படிக்கச் சொல்லியது வித்தியாசமான முயற்சி தான்...

    உங்கள் பயணத்தில் உங்களோடு இல்லை உங்கள் கற்பனையில் உங்களோடு பயனித்தவனின் கதையா ?

    பதிலளிநீக்கு
  12. ஓட்டி சொன்ன கதை என்றால் அரபு நாட்டில் உங்களுக்கு சாரதியாக வந்தவன் கூறிய கதையா?

    அக்காமா என்றால் என்ன.. இந்தக் கதையில் புரியாமல் ,மண்டையைப் போட்டு குழப்பும் ஒரே ஒரு விஷயம் இது ஒன்று தான்

    பதிலளிநீக்கு
  13. இந்தப் பாணியில் கதை சொல்ல ஒரு தைரியம் வேண்டும். கொஞ்சம் தளர்ந்தாலும் சுவாரசியம் குறைந்து விடும். கதை மூலம் பல உண்மைகளை தெரிந்து கொள்ள முடிந்தது
    அக்காமா என்றால் விசா வா?

    பதிலளிநீக்கு
  14. //சும்மா நீங்க ஏதோ பத்து நாளைக்கு ஆட்டிகிட்டு வந்து ஆட்டிகிட்டு போறதுனால அக்கறையிருக்காப்புல இதெல்லாம் கேக்குறீங்க..// இந்தவரி இப்போது மீண்டும் நல்ல அழுத்தமாக புரிகிறது :-)))

    பதிலளிநீக்கு
  15. I fully endorse the views of the driver in one point i.e. those who publicly show that they are theist, most of them seem to be corrupt and cut throat beggars.

    பதிலளிநீக்கு
  16. Akkama means documents like visa, passport to show to the authority while entering the new country in Saudi. Am I right Mr.Appadura?

    பதிலளிநீக்கு
  17. அருமையான கதை...
    நல்லாயிருக்கு...

    பதிலளிநீக்கு
  18. சாமீய்ய்ய்.... நீரு ராட்ஷசனய்யா!

    என்னாச்சி பழைய கதைங்கள்லாம்? ஏன் அழிச்சீங்க? இடையில சிலகாலம் உங்க ப்ளாக்கை ஓபன் பண்ண முடியலை.. ஃபார் இண்டைட்டட் ரீடர்ஸ் ஒன்லின்னு வந்திச்சி..

    பழைய கதைகளைக் குறைஞ்சது எனக்கு மெயில்லயாச்சும் அனுப்புங்க.. புண்ணியமா போவும்

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. இரண்டு முறை படித்தேன். எங்கள் அலுவலகத்தில் காரோட்டியாக இருந்த ஒரு முஸ்லீம் கத்தாரில் ஒரு அரபியிடம் வேலை பார்த்தவர் சொன்னகதை --- இதைப் போன்றே இருந்தது, நீங்கள் அரபு நாட்டுக்கு கதை எழுதத் தான் போனீர்களோ ?
    இவ்வளவும் சொல்லிப்புட்டு அரபு நாட்டுக்கு வேலைக்கு போறீங்களானு கேக்கறீங்களே சாமி -- நியாயமா ?

    பதிலளிநீக்கு
  22. வேலை பார்த்தோமா சம்பாதித்தோமா பணம் சேர்த்தோமா என்று இருப்பவர்களே அரபு நாடுகளிலும் அதிகம் சிவகுமாரன். (அதில் சுவாரசியமுண்டா சொல்லுங்க :)

    பதிலளிநீக்கு
  23. உலகமெங்கும் நல்லதும்(வர்களும்), கெட்டதும்(வர்களும்) கலந்தே உள்ளது என்றாலும், குதிரைக்கு சேனம் கட்டியது போல, உங்களுக்கு - குறிப்பாக அரபு நாடுகளின் கெட்டது மட்டுமே தெரிகிறது.

    அதிலும் ‘பொண்டாட்டி பிள்ளைகள்’ இருக்க, ‘கல்யாணம் பண்ணாத காதலி’யின் படத்தை மட்டும் கண்முன் வைத்திருக்கும் ‘ஓட்டி’ இன்னும் சுவாரசியமானவர் போல!!

    நானும் எனது 17 வருட அமீரக வாசத்தில் சந்திக்கும் பணிப்பெண்களிடமெல்லாம் பேசிப்பார்க்கிறேன் - இப்படி சுவாரசியமான கதை ஒன்றுகூட தேறுவதில்லை!! :-)))))))

    பதிலளிநீக்கு
  24. வாங்க ஹூஸைனம்மா.

    உண்மையிலே அரபு நாடுகள்ள எனக்கு எதுவுமே கெட்டதா படலிங்க.

    இதான் நல்லது இதான் கெட்டது என்கிற வரையறை குழப்பமூட்டுவதாகவே இருக்கிறது. அதனால் நல்லது கெட்டது என்று பார்ப்பதை என்றைக்குமே தவிர்த்திருக்கிறேன். உதாரணத்துக்கு, சில பேர் கடவுள் கும்பிடுறது நல்லதுன்னு சொல்வாங்க. பெண்டாட்டினா புருஷனுக்கு அடங்கி நடக்குறது தான் நல்லதுன்னு சொல்வாங்க. சிட்டுக்குருவிகளை சாவடிக்கிற செல்போன் கெட்டதுனு சொல்வாங்க. அவங்கவங்க பார்வை இல்லிங்களா?

    பரவாயில்லையே, காலங்காலைல சுவாரசியமான வம்பு கிடைக்கும் போல இருக்குதே?

    பதிலளிநீக்கு
  25. பெண்டாட்டி பிள்ளைகள் ஒரு ஒட்டி. கல்யாணம் பண்ணாதவர் வேறே ஒட்டிங்க. குழப்பியிருந்தா என்னுடைய பிழை.

    கல்யாணம் பண்ணாத டிரைவர் என்னைத் திடுக்கிட வச்சாருன்னு சொல்லணும். அவரைப் பத்தி இன்னும் ரெண்டு பேரா எழுதலாம். (எழுதுறேன் :-)

    பதிலளிநீக்கு
  26. ஒரு கதாபாத்திரத்தின் பேச்சிலேயே உலகம் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  27. தொகுப்பு போடும் எண்ணமிருந்தால் எங்களுக்கும் சேர்த்து.

    பதிலளிநீக்கு