2013/05/28

திருவே உமது கானம்செவி நாடும் தேன் சுவை அன்றோ?32 கருத்துகள்:

 1. வாவ்....... அப்பாதுரை சார் அற்புதமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து இத்தனை அழகாக கொடுத்திருக்கிறீர்கள். சக்கரைப் பந்தலில் தேன்மாரிப் பொழிந்தது போல இருக்கிறது. வாழ்த்துக்கள். டி.எம்.எஸ்.என்ற ஒரு நல்ல கலைஞருக்கு அருமையான அஞ்சலி! அத்தனையும் முத்தான பாடல்கள். நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

  பதிலளிநீக்கு
 2. இதை சிறப்பான அஞ்சலிக்கு
  வாய்ப்பே இல்லை
  அவரது இசைச் ஜோதிகளைக் கொண்டே
  அஞ்சலி செலுத்தியது அருமை
  அவர் பாடலாய் நம்முடன் எப்போதும்
  அடைகிற தூரத்தில் இருக்கையில்
  சோகாஞ்சலிகள் தேவையில்லைதான்

  பதிலளிநீக்கு
 3. தொட்டதும் தங்கத்தின் நிறம் போமோ. கற்றவன் கலங்குதல் அழகாமோ. ?
  துரை டாப் ஆஃப் டி எம் எஸ்.பாடல்களை இப்படி அமைக்க எப்படி முடிந்தது.அவசரப் பின்னூட்டம். மிச்சமிருக்கும் தேனிசையையும் ரசித்துவிட்டு வருகிறேன்.
  சக்கை போடு போடு ராஜா இருக்கான்னு பார்க்கணும்:)
  இனிய காலைக்கு அருமருந்து.

  பதிலளிநீக்கு
 4. அத்தனையும் முத்துக்கள் மனதோடு ஒட்டி மலர்ந்த ராகங்கள்.கடைசி ரோஜா
  எப்பொழுதோ கேட்ட பாடல்.உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது.நன்றாக இருங்கள் துரை.

  பதிலளிநீக்கு
 5. இதையும் வித்தியாசமாக் கொடுத்திருக்கீங்க துரை! எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க? எப்படி முடிந்தது என்று ஆச்சர்யம்.

  என் இந்தக் கணினியை வைத்துக் கொண்டு பாட்டு கேட்க போக மாட்டேன்.
  அதற்கு இன்று முழுதும் வேண்டும்!!! பின்னூட்டதாரர்கள் என்னென்ன பாடல்கள் என்று ரசிக்கும்போது பட்டியலிட்டால் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் உங்களிடமிருந்து கட்டாயம் ஒரு பதிவு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

  பதிலளிநீக்கு
 6. ஒன்றே ஒன்று தான் கேட்டேன். அருமையான தொகுப்பு. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்கனு நினைக்கவே ஆச்சரியமா இருக்கு. :)))))

  பதிலளிநீக்கு
 7. அதுதான் டி.எம்.எஸ்.

  எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுடன், உங்களுக்குப் பிடித்த பாடல்களும். இப்படி ஒவ்வொருத்தருடனும் ஒரு காம்பினேஷனுக்கு சரக்கு வைத்திருக்கும் பொக்கிஷம்.

  34பாட்டுக்களையும் கேட்ட லாஹிரியில் பக்கத்து ரோஜாவையும் சுண்டிவிட்டேன்.பேராசை.

  டி.எம்.எஸ்.ஸே எதிர்பார்த்திருக்கமாட்டார் இப்படி ஒரு அஞ்சலியை.

  பதிலளிநீக்கு
 8. அப்பாதுரை அவர்களே ! அசுரத்தனமான மூளை,ஆக்கம், பயன்பாடு ! உம்மால் மட்டுமே முடியும் ! நன்றீ ! ---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 9. You keep saying you don't know technology, but have presented it so very nicely. Hats off. I have not picked up the phone to call Venkatesh but if I do so, I am sure I will end up speaking the entire day with him on TMS !!

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லாமே 28, 2013

  அட்டகாசம் அப்பாதுரை! ஸ்ரீராம் போலவே நானும் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். கலக்கிடீங்க!
  ஒவ்வொரு பாடலாக கேட்டபடியே அடுத்து என்ன இருக்கும் என்ன இருக்கும் என்று ஒரு
  ஆர்வத்தோடும், படபடப்போடும் எல்லாவற்றையும் கேட்டாகி விட்டது. சமீபத்தில் கேட்டு
  கேட்டு நெகிழ்ந்து போன பாடல் 'ஆடாத மனமும் உண்டோ'. இப்பொழுது இதிலும் ஒரு முறை ரசித்து கேட்டேன். இந்த வரிசையில் நான் வருமென மிகவும் எதிர்பார்த்த ஒரு
  பாடல் 'பொன் மகள் வந்தாள்'. 'கண்ணுக்கு தெரியாதா' எப்பொழுது கேட்டாலும் மனம் துள்ளி குதிக்கும். அவ்வளவு என்ஜாய் பண்ணி கேட்பேன்.
  அவரின் ஒவ்வொரு பாடலிலும் அவர் என்றுமே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
  இப்படியும் கூட ஒரு அஞ்சலி செலுத்த முடியும் என்று மிக அழகாக செலுத்தி விட்டீர்கள். நன்றி!

  //34பாட்டுக்களையும் கேட்ட லாஹிரியில் பக்கத்து ரோஜாவையும் சுண்டிவிட்டேன்.பேராசை.//
  ஹிஹிஹி... நானும்தான் சுந்தர்ஜி.:)

  பதிலளிநீக்கு
 11. வித்தியாசமான தேனிசை அஞ்சலி ...!

  பதிலளிநீக்கு
 12. ஆஹா இப்படியெல்லாமும் யோசித்து அளிக்க இயலுமா வளமான குரல்கொண்டவருக்கு இதைவிட சிறப்பு அஞ்சலி வேறு என்னவாக இருக்கமுடியும்? டி எம் எஸ்ஸின் குரலில் நாணமோ இன்னும் நாணமோ பாட்டு என் ஃபேவரிட்!!

  பதிலளிநீக்கு


 13. மலர்களினூடே மணம் எங்கே
  கண்டுபிடி என்றான். தோற்றுப்போனேன்.
  மனங்கவரும் ராகங்களிலே முதலாயதெங்கே
  கண்டுபிடி என்றான். தோற்றுப்போனேன்.

  ஆழ்கடல்கள் பலவற்றின் அதிசயம் என்ன
  கண்டுபிடி என்றான் . தோற்றுப்போனேன்.
  அண்டத்திற்கும் அப்பால் ஒன்று உண்டா என‌
  கண்டுபிடி என்றான். தோற்றுப்போனேன்.

  நிற்பன, நடப்பன பறப்பதுலே நித்தியம் எது எனக்
  கண்டுபிடி என்றான். தோற்றுப்போனேன்.
  கற்பன, கற்பனை, கதைகளிலே வித்தகன் எவரெனக்
  கண்டுபிடி என்றான்.

  கண்டுவிட்டேன்.

  அப்பாதுரை.

  என்றோ எங்கோ எழுதிய என் எழுத்துகளுக்கு
  நன்றாயொரு சான்றும்
  இன்றே தந்துவிட்டீர்கள்  //அப்பாதுரை சார் எழுதியதை இப்பதான் பார்த்தேன்.

  அவருக்கு தோணறாபோல வேற யாருக்குமே தோணாது.

  திங்கிங் டிஃபரன்ட்லி. ரியலி எ ரைட் பிரைனி மேன். //


  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  பதிலளிநீக்கு
 14. வித்தியாசமான இசை அஞ்சலி ...! வாழ்த்துக்கள் & பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 15. ஆகா... அற்புதம் சார்...

  இணைத்தது எவ்வாறு...? எப்படி...? என்று எனக்கு சொல்லியாக வேண்டும்... ஹிஹி...

  பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 16. புதுமை + அருமை + இனிமை = TMS பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 17. என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
  என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
  என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்........


  உள்ளம் உருகுதையா........

  இனி ஒரு டி.எம்.எஸ்ஸும் கண்ணதாசனும் பிறக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 18. from the comments, I understand that you have given the best of TMS but it needs to be listened when I am in a different mode of mood. Let me listen first and then will offer my comments. But still thanks in advance for giving the best of TMS.

  பதிலளிநீக்கு

 19. அன்பின் அப்பாதுரை, நீங்கள் மட்டும் என்னருகில் இருந்தால் உச்சிமோந்து ஒரு உம்மா கொடுத்திருப்பேன். கற்பனையிலும் எண்ணமுடியாத அஞ்சலி. டிஎமெஸ்-இன் நூற்றுக் கணக்கான பாடல்களில் இருந்து சிறந்தது என்று தொகுப்பதே கடினம். இருந்தாலும் இப்படி ஒரு நூதன முறையில் தொகுத்த நீர் , நான் அன்று சொன்னது போல் ஒரு GENIUS. YOU ARE DIFFERENT. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 20. //Expatguru கூறியது...

  என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்
  என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
  என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்......//

  So true for TMS and Kannadasan.

  பதிலளிநீக்கு
 21. ரசித்தமைக்கும் உணர்வுபூர்வ பாராட்டுக்கள்/வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, இப்படியொரு வரவேற்பை - எல்லாம் டிஎம்எஸ்சின் குரல் வளத்துக்குச் சொந்தம். மனமார்ந்த நன்றி.

  @ஸ்ரீராம்: எல்லாமே 30-45 second clips; இதுவே தளமேற நேரமாகும் என்பதால் முழுப் பாடல் எதையும் சேர்க்கவில்லை. இந்த முப்பத்து நாலு துண்டுகளை ஒன்று விடாமல் கேட்டாலே குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது ஆகும் - கணினி/இணைய வசதி நிலையைப் பொறுத்து. முழுப் பாடல்களையும் சேர்த்தால் எனக்கே கஷ்டமாக இருக்கும் (குற்ற உணர்வாகவும்).

  முப்பத்து நாலு என்று எண்ணிப் பார்த்த பேராசைக்கார சுந்தர்ஜி: உங்களைத்தான் டிஎம்எஸ் பாடியிருப்பதாகத் தோன்றும்.. கேட்டுப் பாருங்களேன்? "சொர்க்கத்தைஐ தேஏடுவோம், சுந்ந்தர்ர்ஜி.." :-)

  @வல்லிசிம்ஹன்: காலங்காலையில் பழைய நினைவுகளைக் கிளறும் நல்ல சங்கீதம் மிகவும் அருமையான அனுபவம். உங்கள் உணர்வுபூர்வமான வாழ்த்துக்கு என் நன்றியும் நமஸ்காரமும்.

  @சுப்புத்தாத்தா: என்ன சொல்வதென்று தெரியவில்லை - திக்குமுக்காட வைத்திருக்கிறீர்கள். நன்றியும் வணக்கமும்.

  @காஸ்யபன்: ஒரேயடியாக இப்படி உயர்த்திச் சொல்லிட்டீங்களே.. நன்றி, வணக்கம். டிஎம்எஸ் was my muse.

  @GMB: ரொம்ப ரொம்ப நன்றி சார். உங்களருகில் இல்லையே என்று எனக்கும் தோன்றியது. நன்றியும் வணக்கமும்.

  @தித: உங்களுக்குத் தெரியாத டெக்குனாலஜ்ஜியா? ஒரு காலத்தில் ascii characterஐ வைத்துக்கொண்டு எழுத்து/படம் என்று டிஜிடல் கோலம் வரைவார்கள் பார்த்திருப்பீர்கள், அதே உத்தி. விவரங்களை இமெயில் அனுப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 22. அசத்தலுக்கு ஒரு அப்பா ஸார்! வேறென்ன சொல்ல? இதைவிடச் சிறப்பான அஞ்சலி எதுவும் இருக்க முடியாது. டி.டி.யைப் போலத்தான் நானும்... பதிவேற்றும் விதம் புரியாமல் குழம்பிக்கிட்டு இருக்கேன். டெக்னிகலா எப்படின்னு எனக்கும் ஒரு மெயில் தட்டி விடுங்க அப்பா ஸார்!

  பதிலளிநீக்கு
 23. அப்பாதுரை! என்னவென்று சொல்வது! அனைவருடைய பின்னூட்டங்களையும் முதலிலிருந்து இன்னொரு முறை நான் சொல்வதாகப் வாசித்துக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 24. அற்புதமான அஞ்சலி .. அவரது மறைவுக்கு இன்றைய பிரபலங்கள் அதிகம் வரவில்லை என்று பத்திரிகைகள் மூலம் அறிந்தேன் ஆனால் ரசிகர்கள் திரளாக வந்து அவரது பாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தினர். உங்களது வித்தியாசமான அஞ்சலி. மிக அருமை

  பதிலளிநீக்கு
 25. என்ன சொல்வதென்று புரியவில்லை. டி.எம்.எஸ். அவர்களுக்கு இப்படி ஒரு சிறப்பான அஞ்சலி.

  ஒவ்வொரு பாடல்களையாக க்ளிக் செய்து கேட்க வேண்டும். இணையம் ஏதோ படுத்துகிறது! :( மீண்டும் முயற்சிக்கிறேன்....

  பதிலளிநீக்கு
 26. அய்யா(யோ), அய்யா(யோ) துரை... என்னை தருமி மாதிரி ஆக்கிட்டீங்களே! பதிவு தெரியுது, அதில் ரோஜாவும் தெரியுது, ஆனா பாட்டுதான் தெரியமாட்டேன் என்கிறது. ஒரு மணி நேரமாகியும் (34 items remaining) waiting for...ன்னு சொல்லுதே தவிர பாட்டு தரவிரக்கம் ஆகமாட்டேன் என்கிறது.

  எனக்கில்லை, அப்பாதுரை போட்ட 34 பாட்டையும் கேட்கிற வாய்ப்பு எனக்கில்லை.

  பதிலளிநீக்கு
 27. அரசூரான், வேற உலாவியில் (browser) முயற்சி செய்ங்க.

  பதிலளிநீக்கு
 28. போவுது விடுங்க அரசூரான்.. பாட்டு வக்குற இடத்துல பூ வச்சுருக்குறதா நெனச்சுக்குங்க.

  பதிலளிநீக்கு
 29. நானும் மூணு நாளா முயற்சிக்கிறேன் . பக்கத்து ரோஜா எனக்கு மட்டும் வாயே திறக்கலை. மத்தது எல்லாம் சரியா வருது! :(

  பதிலளிநீக்கு
 30. அப்பாதுரை சார்ம் பாடல்கள் எல்லாம் நல்ல தேர்வு.
  எம்.ஜி. ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெயசங்கர், ரவிசந்திரன் என்று இவர்களுக்கு பாடிய பாடல்களின் தொகுப்பு அருமை.
  வித்தியாசமாய் யோசித்து வழங்கிய விதம் அருமை.
  கடைசி பாடலில் பாடியது போல் டி.எம்.எஸ் அவர்கள் அருமையான இன்ப சங்கீதம் தான்.
  அவர்பாடல்களில் என்றும் வாழ்வார்.
  ஊருக்கு (கோவைக்கு ) போய் விட்டதால் தாமதமாய் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 31. தங்களின் இப்பதிவு, இன்றைய பதிவிற்கு (http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/KALAM.html) ஒரு தூண்டுகோல்...

  தங்களின் வரவை எதிர்நோக்கி... (நேரம் கிடைப்பின்)

  அன்புடன் DD

  பதிலளிநீக்கு