2013/05/10

மகரயாழ் தேவமார் முகமுரச வருமட்டும்      சாயம்     


    சுதோஷ் வீட்டில் துக்கம் விசாரித்து இரவு எட்டு மணிக்குத் திரும்பியதிலிருந்து.. சாப்பிடத் தோன்றாமல் வத்சன் வீட்டுப் பால்கனியில் உட்கார்ந்தபடி.. நள்ளிரவைத் தாண்டிப் பேசிக்கொண்டிருந்தோம். தீர்ந்திருந்த ஜானி வாகர் ப்லூ லேபில் விஸ்கிப் புட்டி, அது கிளறிய நினைவுகளை அறியாமல் சாதுவாகக் கவிழ்ந்திருந்தது. இன்னமும் திறக்காத கடைசிப் புட்டி, நினைவுக் கரண்டியோடு காத்திருந்தது. வத்சனின் நுரையீரல் அனுப்பிய மார்ல்ப்ரோ வளையங்கள் உயரே எழுந்து காணாமல் போவது, மெல்லிய நிலவொளியில் சுவாரசியமானத் திகில் காட்சியாகத் தோன்றியது. பால்கனிக்கு வெளியே, அடர்ந்த மரங்களைத் தாண்டி ஜெயநகரின் அமுங்கிய சாலையொலிகள். பால்கனிக்கு உள்ளே, சுவரொட்டியப் படுக்கையறையில் அயர்ந்துறங்கும் ரம்யா வத்சனின் இடைவெளி விட்ட குறட்டையொலி. இடையே நான், வத்சன், இரவு, நிலவு, அமைதி. எங்கள் நினைவுகள் மட்டும் உரத்த ஓசையுடன்.

"ஆ! மறந்து போச்சுபா.. உங்க்ட்ட ஒண்ணு காமிக்ணம்" என்று உள்ளே போனான் வத்சன். திரும்பி வந்தவன் கைகளில் ஒரு கலர் படம், ஒரு எல்இடி ப்லேஷ் லைட், சில தலையணை போர்வைகள். படத்தை என்னிடம் தந்தான். "பால்கனி லைட் போட்டுமாடா?"

"வேணாம்.." அவன் நீட்டிய ப்லேஷ் லைட்டை வாங்கி அழுத்தினேன். படம் கண்களை நிறைத்தது. என் இரட்டைபாத் வட்டம். வருடாந்தரச் சாதனைப் பயணமாக ஒருமுறை கம்பெனி செலவில் கொடைக்கானல் போனபோது எடுத்த படம். இடம் நினைவில்லை. ஏதோ ஒரு ஏரி, அருவி, மலைப் பாங்கான இடம். உயர்ந்த பாறை மீதிருந்து நீரில் குதித்து விளையாடியதன் நினைவாக எடுத்த படம். அவனுடைய யாஷிகா காமெராவில் தானியங்கி டைமர் வைத்து, வெங்கட் அனைத்துமாட ஓடி வந்து சேர்ந்து கொண்டது நினைவு கிடாரை இதமாய்த் தட்டியது. நாங்கள் அனைவரும் அம்மணமாக எடுத்துக்கொண்ட ஒரே படம்.

நான் ரிச்சர்டை இரண்டு முறை அவனுடைய ஆபீசில் சந்தித்திருக்கிறேன். இந்த முதல் சந்திப்பில் அசுதோஷும் என் இரட்டைபாத் வட்டமும். அசுதோஷ் எங்கள் மேற்பார்வை அதிகாரி. ரிச்சர்ட் மேலதிகாரி.

"so.. young men.. you like skinny dipping?" என்றான் ரிச்சர்ட்.

கொடைக்கானலில் நாங்கள் அம்மணமாக அருவியில் குளித்தது பற்றி நிறைய பேர் புகார் கொடுத்திருந்தார்கள். ரிச்சர்ட் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டி எங்களை அழைத்திருந்தான்.

"ரிச்சர்ட்.. எங்க கிட்டே இருந்தது ஒரே டிரஸ் தான்.. அதை ஈரமாக்க விரும்பலே.." என்றான் விஜய்.

எனக்குச் சிரிப்பு வந்தாலும் அடக்கினேன். "அக்கம்பக்கத்துல யாருமே இல்லை ரிச்சர்ட்.. besides.. எங்க தனிப்பட்ட விஷயம் இல்லையா? நாங்க எந்த சட்டத்துக்கும் முரணா நடக்கலியே?"

"generally accepted decorum.. common decency.. அதுக்கு முரணா நடந்திருக்கீங்க.. law comes later.. இருபது இருபத்திரண்டு வயசாவுது உங்களுக்கு.. அம்மணமா இப்படி பொது இடத்துல குளிக்கலாமா?"

"கொடைக்கானல் போனதே எஞ்சாய் பண்ணத்தானே ரிச்?" என்றான் அசுதோஷ்.

"ஓ!" என்ற ரிச்சர்டின் பார்வையில் இருந்தது வெம்மையா பொறாமையா தெரியவில்லை. "அடுத்து ஆபீஸ்ல அம்மணமா சுத்துவீங்க போல?"

"as a punishment.. சொல்லுங்க, வேணும்னா சுத்துறோம்.." என்றான் விஜய், தயங்கி.

ரிச்சர்ட் வெடியாகச் சிரித்தான். "யாருக்கு punishment? you dirty rogues.." கண்ணீர் வரச் சிரித்தான். "கம்பெனி செலவுல இனி அம்மணமா சுத்தாதீங்க.. புரியுதா?" என்று எழுந்தான். அசுதோஷைத் தோளில் தட்டி, "get these mavericks out of my office" என்றான்.

ப்லேஷ் லைட்டை அடக்கி நொடி பொறுத்து மீண்டும் இயக்கினேன். வெளிச்ச அலையில் படம் படபடத்தது. "வத்சன்.. அன்னைக்கே ரிச்சர்ட் நமக்கு கல்தா கொடுத்திருக்கலாம்.. improper conduct.. அசுதோஷ் நம்மளைக் காப்பாத்தினான்.." என்றேன்.

"நா.. நாம ஒண்ணும் தப்பு செய்யலியேடா.. நாம அவனைக் கூப்பிடலியேனு ரிச்சர்டுக்கு பொறாமையாம்.. அசுதோஷ் சொன்னான்.."

சிரித்தேன். படத்தை இடது உள்ளங்கை மேல் தட்டினேன். "நம்ம வட்டத்துல மூணு பேர் தான் உயிரோட இருக்கோம்" என்றேன் கனமாக.

இன்னொரு புகை வளையத்தை விட்டபடி, "நம்ம நட்பு வரலாற்றின் கடைசி அத்தியாயங்கள்.. to the remaining chapters" என்று கீழே கிடந்த விஸ்கிப் புட்டியை உயர்த்தினான் வத்சன்.

"நம் மரண வேளையில், தேவர்கள் முகம் வருடி யாழ் மீட்டட்டும்" என்று என் வெறுங்கோப்பையை உயர்த்தினேன்.

"no..none of that bender shit.. எனக்கு தேவதைகள் மட்டும்.. அதுவும்.." நெஞ்சருகே இரு கைகளையும் குவித்துக் காட்டினான்.

"நல்லது. உன் மரண வேளையில், மார்வளம் மிகுந்த அழகு தேவதைகள் முகம் வருடி மகர யாழ் மீட்டட்டும்" என்றேன்.

மௌனம்.

"நேன்ஸ் வருவான்னு நினைச்சேன்.. நாளாச்சுப் பாத்து.. ரெண்டு சம்மர் முந்தி ந்யுயோர்க் வந்திருந்தான்.." என்றேன்.

"அசுதோஷ் சாவுக்கு வந்திருந்தான்.. வரும்போதே, 'ஒத்தா பூட்டானா'னு சொல்லிட்டே வந்தான்.."

"நேன்ஸ் மாறவே மாட்டான்.."

"he has changed alright.. பெரிய சிஇஓ ஆச்சே? கால ஓநாயின் நகம் அவன் உடம்பெல்லாம் தாறுமாறாக் கீறியிருக்கு.. அவனோட பேச்சும் அவனோட வளந்துடுச்சு .. from shockingly funny to appallingly hilarious.. பொண்டாட்டி பசங்களைக்கூட 'ஒத்தா இங்க வாங்க எல்லாரும்'னு கூப்பிடறான் தெரியுமா?"

மனம் விட்டுச் சிரித்தோம். சிறிது நேரம் நாங்கள் எதுவும் பேசவில்லை. திடீரென்று, "அசுதோஷுக்கு எய்ட்ஸ் தெரியும்ல.. you were in touch with him, right?" என்றான்.

"எய்ட்ஸ்னு தெளிவானதும் எனக்கு இமெயில் அனுப்பியிருந்தான். அப்பப்போ போன் செஞ்சிருக்கேன் till he was able to talk.. சாவுறன்னிக்கு எனக்கு ஒரு இமெயில் அனுப்பியிருந்தான்.. i think he knew"

நீண்ட மௌனம்.

"அசுதோஷ் பட்டாசார்ஜி.. நம் வட்டத்துக்கு குறுக்கே வந்த ஒரு கோடு" என்று ஒரு நீண்டப் பெருமூச்சு விட்டேன்.

"வட்டத்தை வெட்டிய கோடு" என்றான் வத்சன். "that fucker!"

சற்றே நீண்ட மௌனம்.

வத்சனின் கண்களைச் சந்தித்து, "i fucked him once" என்றேன் நிதானமாக.

"no.. i think he fucked you.. you just.. let him go.. நீ ஒரு தொடை நடுங்கி.."

"இல்லே, நான் சொல்றது வேறே..." என்று அவனிடமிருந்த பாதி சிகரெட்டை வாங்கித் தீர்க்கமாக உள்ளிழுத்தேன்.

என்னைக் கேள்விப் பார்வை பார்த்தவனிடம் சிகரெட்டைக் கொடுத்துப் புகையை வெளிவிட்டேன். ஆமென்றுத் தலையாட்டினேன்.

ஜோகாவில் கடைசி வாரம். படிப்பு முடிந்து, ப்ப்பெரிய கம்பெனி வேலையை ஏற்றுக்கொண்டாகிவிட்டது. என் வகுப்பிலேயே எனக்கு அதிகச் சம்பளம் என்பது எப்படியோ வெளியாகி அந்தப் பெருமை வேறே. வெள்ளிக்கிழமை இரவு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். என், எதிர் மற்றும் பக்கத்து அறைகளில் பார்ட்டி. என்னுடன் படித்தவர்கள், சில ஜூனியர்கள், கல்கத்தாவில் வசித்த சில சீனியர்கள், அலம்னை, சில நம்பத் தகுந்த புரபசர்கள்.. எனக்கு வேலை கொடுத்த அசுதோஷ், ஷர்மிளா முகர்ஜி.. நண்பர்களுடன் நான் துரத்திய அல்லது எங்களைத் துரத்திய சில அலிபொர், பவானிபொர், டாலிகஞ்ச் பிரதேச மேல்தட்டுப் பெண்கள்... என்று அழைத்திருந்தேன். ஹாஸ்டல் சமையல்காரருக்குப் போனஸ் பணம் கொடுத்து சமைக்கச் சொல்லியிருந்தேன். எடுபிடி டோபிவாலாவிடம் strictly prohibited சமாசாரங்களை strictly stealthyஆகக் கொண்டு வரச் சொல்லியிருந்தேன். விஷயம் வெளியில் தெரியாதிருக்க யார் யாருக்கு சம்திங் வெட்ட வேண்டுமோ, பிறழாமல் புரிந்திருந்தேன்.

மாலை ஐந்து மணிக்கு கூட்டம் சேரத் தொடங்கியது. கஞ்சா கல்யாணி மெக்டாவல் என்று நான் வாங்கி வைத்திருந்தவை தவிர, பவானிபொர் பெண்கள் கொண்டு வந்திருந்த ஹஷிஷ், எல்எஸ்டி மற்றும் உயர்தர ஷேம்பேன் என்று பார்ட்டி களை கட்டியது. அழையாமல் வந்திருந்த ஒரு டாலிகஞ்ச் பெண் என்னைக் கவர்ந்தாள். அவளைக் கணக்கு போட்டபடி, வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ஷர்மிளா முகர்ஜி என்னை மெலிதாக அணைத்து, "கங்கிராட்ஸ்" என்றாள்.

ஷர்மிளா helpage என்ற இயக்கத்தின் இந்திய சேர்மன். முதியோர் பராமரிப்புச் சேவை நிறுவனம். என்னை வற்புறுத்தி வேலைக்குச் சேரச் சொன்னாள். ஒரு வருடத்தில் என்னை சிஇஓ ஆக்குவதாகச் சொன்னாள். சம்பளம் எவ்வளவு என்று சொன்னதும், "ஒரு நாளைக்கா?" என்றேன். சிரித்துவிட்டாள். வேலை வேண்டாமென்று அங்கேயே சொல்லிவிட்டேன். "please think it over" என்றாள். "you can't afford my thought" என்ற என் ஆணவமான பதிலைப் புன்னகையோடு ஏற்றாள். நான் எந்தத் தொடர்பையும் வெட்டியதில்லை. அவளைப் பிடித்திருந்தது. நல்ல பதவியும் செல்வாக்கும் வசதியும் உள்ளவள். என் வளர்ச்சிக்குப் பயன்படுவாள். "didn't mean to be rude. i will think it over" என்றுச் சமாதானமாக விலகினேன். என்றாலும் வாரம் எனக்கு ஒரு கார்டு அனுப்புவாள். ஏதோ ஒரு கிழம் எங்கோ அனாதையாகக் கிடப்பதாகவும் helpage இயக்கம் அது போன்றக் கிழங்களை மீட்டு ஆதரவும் அன்பும்.. வள வள என்று ஏதாவது எழுதியிருப்பாள்.

சுதாரித்து, "தேங்க்ஸ் ஷர்மிளா.. பார்ட்டிக்கு வந்ததுக்கு மகிழ்ச்சி. helpageல சேரலனு உங்களுக்கு வருத்தமில்லையே?" என்றேன்.

"வருத்தம் தான். உன் போல் திறமைசாலிகள் எங்களுக்குத் தேவை. ஆனால் உன் தினக்கூலி எங்களுக்குக் கட்டுப்படியாகாதே?" என்றுச் சிரித்தாள். "எங்களை மறக்காதே. another time.."

"நிச்சயமா.." என்று விலக, டாலிகஞ்ச் பெண் கண்ணில் பட்டு உறுத்தினாள். 'இவளைத் தொடமுடியுமா' என்று நினைத்தக் கணத்தில் என் முதுகில் யாரோ தொட்டார்கள். திரும்பினேன். "அசுதோஷ்! ஹலோ.. வெல்கம்.. வெல்கம்.." என்று வழிந்தேன்.

வலது கையால் என் கைகளை இறுக்கப் பிடித்து இடது கையால் என் தோளை அணைப்பது போல் தட்டி, "கங்கிராட்ஸ்" என்றான். "பார்ட்டி அட்டகாசமா இருக்கு.. இதெல்லாம் லீகலா?"

என்ன சொல்வது என்று விழித்த என்னிடம் "சும்மா தமாஷ்" என்றான். மறுபடியும் சிரித்து ஒரு சிறிய கவரைக் கொடுத்தான். பிரித்தேன். புத்தம் புது நூறு ரூபாய் நோட்டு. "to my best hire" என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தான். நன்றி சொன்னேன். "எஞ்சாய்" என்று விலகிய அசுதோஷ், வந்திருந்தோரிடம் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டு அங்கே இங்கே பேசிக் கூட்டத்தில் கரைந்தான்.

யாரோ ஸ்டீரியோ கேசட் ப்ளேயரைத் தட்ட, பானிஎம் பொலீஸ் ஒஸிபிஸா அபா என வரிசையாகப் பாடல்கள். நடுவே பப்பி லஹரியின் கூத்திசை. சிலர் ஆடத்தொடங்கினார்கள். கையில் சிகரெட் இல்லாத ஆணோ பெண்ணோ இல்லை. அவ்வப்போது டோபிவாலா "ஆவாஜ் கம்" என்று சொல்லிப் போனதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இருந்த ஒரே திவானில் மையமாக முழங்காலிட்டு, சட்டை துறந்த ஒரு பவானிபொர் பெண் மெல்லிய பெங்காலிப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றியிருந்த தாடிக்கார ஜூனியர்கள் அவளது குரலை ரசித்தார்களா அல்லது பாடலுக்கு ஏற்பக் குலுங்காமல் அசைந்த அவளுடைய சற்றே காம்பெழுந்த இளமுலைகளை ரசித்தார்களா என்றுத் தீர்மானமாகச் சொல்லமுடியவில்லை.

இரவு பரவத் தொடங்கியிருந்தது. டோபிவாலா கடைசி முறையாக வந்து "சப் டீக் பந்து" என்று ஐம்பது ரூபாயும் கட்டுச்சோறும் எடுத்துக் கொண்டு மறைந்தான். போதை தவிர்த்த சிலர் விடைபெறத் தொடங்கினர். நான் அளவாகக் குடித்திருந்தேன். கஞ்சா கலந்த ஒன்றிரண்டு சிகரெட் இழுத்திருந்தேன். பாத்ரூம் போகலாம் என்று அறைக்குள் போனபோது.. டாலிகஞ்ச் பெண்! ஒரு கையில் சிகரெட்டும் இன்னொரு கையில் தங்டி கபாபுமாக என் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். போதையிலிருந்தாள்.

"ஹாய்.." என்றேன். பதிலுக்குக் காத்திராமல் அவளருகே உட்கார்ந்தேன். "நான் உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்"

"நீ கவனிப்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள். "பலா உபாத்னா.." என்றாள் சிகரெட்டைக் காட்டி. "really good stuff"

உடைந்த பெங்காலியில் "தாயியாமி" என்றேன், என்னைச் சுட்டி. சிரித்தாள். அவளை நெருங்கி, "இது என்னுடைய படுக்கை.. meant for good stuff too.. பலா உபாத்னா" என்றேன். அவளைத் தொடப் போனபோது சரிந்தாள். போதையின் உச்சம். அவள் கையிலிருந்ததைப் பிடுங்கி எறிந்து, படுக்கையில் அவளைச் சீராகக் கிடத்தி, மின்விசிறியைத் தட்டிவிட்டு ஒரு பெருமூச்சோடு வெளியே வந்தேன்.

அறையோரமாகச் சுவரில் சாய்ந்து, கால் நீட்டி அமர்ந்திருந்தான் அசுதோஷ். "ஹாய்.. நீ கிளம்பியிருப்பேனு நினைச்சேன்" என்றேன்.

"இல்லே.. உன்னை மாதிரி கம்பெனி கிடைக்காததுனால ஐ'ம்.. ஜஸ்ட் தனியா.. ரிலேக்ஸ் பண்ணிட்டிருக்கேன்.. மால் அச்சா ஹை" என்று விஸ்கியைக் காட்டினான். "நீ உன் நண்பர்களைக் கவனி.. நாம் பிறகு பேசலாம்.. ஐ'ம் ஓகே பை மைசெல்ப்"

"நோ.. அந்த நட்பெல்லாம் இந்த வாரத்தோட முடிஞ்சுரும்.. நீ என்னுடைய எதிர்காலம்.." என்றேன்.

"தாராலொ பந்து!" என்றான். "astute. அந்த டாலிகஞ்ச் சோக்ரி என்ன ஆனா? காம்கி நஹி?"

"big boob, small brain.." என்றேன். அசுதோஷைத் தெரிந்து கொள்வது எனக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்று அந்தக் கணத்தில் தீர்மானமாக உணர்ந்தேன். "நீ பார்ட்டிக்கு வந்தது எனக்குப் பெருமை.. பசங்க காயுறாங்க.. இங்கே இரைச்சலா இருக்கு.. எதிர் ரூமுக்குப் போகலாம்" என்றேன்.

நாலைந்து சிகரெட்களையும் ஒரு விஸ்கி பாட்டிலையும் எடுத்துக் கொண்டு, எதிர் அறையில் யாருமில்லாததால் அங்கே போனோம்.

"யு நோ.." இழுத்தான் அசுதோஷ், சோபாவில் சரிந்தபடி. "கேம்பஸ் இன்டர்வ்யூல உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சுது. ஸ்ட்ரேடஜி புதிர்கள் அத்தனைக்கும் சரியான பதில் சொன்னே; அது மட்டுமில்லே வித்தியாசமான, எங்களுக்கே தெரியாத பதில்கள் சிலவற்றைச் சொன்ன ஒரே ஆள் நீ தான். வெரி ப்ரைட்"

"என்னுடைய அறிவுக் கூர்மையின் ரகசியம்" என்றேன், கஞ்சா சிகரெட்டையும் விஸ்கி பாட்டிலையும் காட்டி. சிரித்தேன். அவனுக்கு இடதுபுறம் சோபாவில் சரிந்து உட்கார்ந்தேன்.

எங்களுக்கிடையே நிறையப் பொது ரசனைகள் கண்டோம். ஷேக்ஸ்பியர், வோடவுஸ், டூமா, இங்க்ரிட், சேப்லின், பீடில்ஸ், அமிதாப், பாசு சேடர்ஜி.. மேக்பெத், ஜீவ்ஸ், ஊஸ்டர், கேஸப்லான்கா, மாடர்ன் டைம்ஸ், தீவார், மான்டி க்ரிஸ்டோ.. என்றுப் பேசினோம். அவன் உலக சினிமா, அரசியல் பேசியதை இமைக்காமல் கேட்டேன். ஷா, கார்டர், ரேகன் என்று இரானியப் பணயம் பற்றி வாய் பிளக்க விவரங்கள் சொன்னான். அவன் அமெரிக்கச் சுயநலத்தைச் சாடியபோது நானும் சோசலிஸ்ட் போல் உணர்ந்தேன். pink floydன் dark side of the moon பின்புலம் சொன்னான். லெனன் மரணத்தின் அநியாயத்தைச் சொல்லி அழுதபோது நெஞ்சைக் கட்டியது... மிக நெருங்கி என் கைகளைப் பிடித்தபோது, 'இவன் என் பாஸ்' என்ற எண்ணம் கரைந்து சமன் போல் உணர்ந்தேன்... எனக்குப் பழக்கமில்லாத சோல்சனிட்சின் எழுதிய புத்தகங்கள் பற்றிப் பேசினான். ஜனதா கட்சி உடைந்ததன் பின்னும் சமீப காங்கிரஸ் வெற்றியின் பின்னுமிருந்த அரசியல் தந்திரங்கள் பற்றிப் பேசினான். ராஜ்நாராயணுக்கு ஆதரவாக ரே பரேலியில் பிரசாரம் செய்ததாகச் சொன்னான். சஞ்சய் காந்தியின் மரணம் பாதித்தது என்றான். "சாஜிஷ்.." மிக நெருங்கி உடல் பட ஒட்டி உட்கார்ந்தேன். எனக்கும் sophistication உண்டு என்று அறிவிக்க கஜல் பற்றி.. பங்கஜ் உதாஸ், ஜக்ஜித் சிங்க் என்றதும் என் மனம் புண்படாது அழகாகச் சிரித்தான். படே குலாம் அலிகான் என்று நான் கேள்விப்பட்டிராத பெயர் சொல்லிப் பதினைந்து நிமிடங்களில் என் கஜல் அறிவை மேம்படுத்தினான். மெல்லிசையில் சலீல் சௌத்ரிக்கு ஈடில்லை என்றான். 'b,v' குழப்பாத அவனது நளின ஆங்கிலப் பிடிப்பு ஆச்சரியம் எனில், அழகான ஹிந்தியில் அவ்வப்போது பேசியது போதை. முகமது ரபியை விட கிஷோர்குமார் பிடிக்கும் என்றான். "அய் தில் ஹை முஷ்கில் ஜீனா யஹான்" என்று மனங்கவரப் பாடினான்... மெல்ல என்னை மென்மையாகக் கன்னத்தில் முத்தமிட்ட போது நன்றாக இருந்தது... பொறுமையாக உதட்டில் முத்தமிட்ட போது இனிமையாக இருந்தது... artful seduction.. அவன் பின்புறத்தைத் தேடித் தடவினேன்.

என் கைகளை விலக்கி, "this is getting awkward.." என்றான்.

"i like awkward" என்றேன், அவன் கழுத்தில் உரசி.

மிச்சமிருந்த விஸ்கியை பாட்டிலோடு ஒரு மிடறு குடித்து என்னிடம் கொடுத்தான். "எனக்குத் தெரியாமப் போனது ஆச்சரியம். எனக்கு இருபத்தாறு வயசாவுது. பருவம் வந்த நாள்லந்து நான் ஹோமொ, அதே மாதிரி மத்த ஹோமொசெக்சுவல்களை என்னால் சுலபமாக அடையாளம் காண முடியும். அந்தப் பெண்ணைத் துரத்துறே.. என்னையும் தடவுறே.. நீ ஹோமொசெக்சுவலா? ஆச்சரியமா இருக்கு"

சிரித்தேன்.

"நீ சிரிப்பது புறாக்கள் படபடத்து எழுவது போல் அழகாக ஒலித்தாலும், காரணம் கேட்கத் தோணுது"

"நான்-வெஜிடேரியனானு கேட்குற மாதிரி இருக்கு, உன் கேள்வி.."

"புரியலியே?"

"எங்க ஊர்ல சில பேரை 'அவுரு என்வி'ம்பாங்க.. அதாவது நான்வெஜ்காரர்கள் வெஜ் சாப்பிடமாட்டாங்க என்கிற மாதிரி பிரிப்பாங்க.. நீ ஹோமொசெக்சுவலானு கேட்டதும் எனக்கு அதான் நினைவுக்கு வந்தது.."

"good example, bad analogy.. சாப்பிடுவது காய்கறிகளா மாமிசமா என்பதைப் பொறுத்து அப்படிச் சொன்னாங்க.. அதற்கும்.."

"சிக்கன்ல வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு கலந்து செய்தா.. அது வியா என்வியா? என்வினா அதுல இருக்குற சிக்கனை மட்டும் சாப்பிடணுமா?"

"okay.. good analogy, bad example then" சிரித்தான். "சரி, ஹோமொ ஹெடரொ இதுல யார் வெஜ் யார் நான்வெஜ்..? அப்போ வெங்காயம் தக்காளியோட சிக்கன் சாப்பிடுற நீ யார்? bisexual?"

"தெரியாது. i am.. just sexual. sexல் ஹோமொ ஹெடரொ என்று பேதம் பார்ப்பதில்லை என்பது மட்டுமே தெரியும்" என்றேன். "இது தான் செக்ஸ் என்று ஒரு குழப்ப வரையறைக்குள் சிக்க விரும்பவில்லை.. எனக்கு இன்னும் அத்தனை வயதாகவில்லை.. செக்ஸ் என்றால் என்னவெனறு தெரிந்து கொள்ளும் சோதனைக் கட்டத்தில் தான் இன்னும் இருக்கிறேன்.."

"interesting.. பொதுவா நானறிந்தத் தென்னிந்தியர்கள்.. pardon me.. ரொம்ப கவனமாக நேர்க்கோட்டில் போகிறவர்கள்.. சுற்றி நடப்பது தெரியாத, பொருட்படுத்தாத, closed-mind righteous folks.. won't take a step unless pushed.."

"sexual discretionல தெற்கு வடக்கு என்று எதுவும் இல்லை.. உலகமெங்கும் ஒரே மொழி. அர்ஜூனன்-க்ருஷ்ணன் உறவை, உங்களைப் போல் நாங்களும், வேறு எந்தக் கோணத்திலும் பார்க்கத் தயங்குபவர்கள். இவனுக்கும் அவனுக்கும், இருப்பதற்கும் இல்லாததற்கும், சமூகத்துக்கும் சமயத்துக்கும் பயந்து இயல்பான உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறவர்கள் இந்தியாவெங்கும்.. உலகெங்கும் உண்டு. இருந்தாலும் நீ சொல்வது புரிகிறது. வடக்கை விட தெற்கே அதிகமா hypocrites இருக்கலாம். you know.. என் குடும்பத்தில் சில closet homosexuals உண்டு. என் உறவினர்.. என்னைவிட இருபது வயசு மூத்தவர்.. ஒரு தடவை.. விடுமுறைக்குப் போயிருந்தேன்.. பதினாறு வயசிருக்கும்.. தூங்கிட்டிருந்தேன்.. திடீர்னு விழுப்பு வந்து.. பார்த்தா.. this uncle.. என்னோட கருவியைப் பிடிச்சு உருவிட்டிருக்காரு.. that was my first real experience with a man.." அசுதோஷுடன் என் நிழல்களை இயல்பாகப் பகிர முடிந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

"do you feel guilty?"

"guilty? no. violated? yes"

"makes me sick.. that is not homosexual.. that is hideously perverted"

"i was bred in perversion... my cross of burden until tormented shadows lead to the pulpit of torturous death"

"shakespeare சொன்னதா?"

"இல்லை, நான் சொன்னது"

"குடும்பத்திலே அல்லது சமூகப் பெரியவங்க யாருடனாவது இதைப் பற்றிப் பேசினாயா?"

"யார் கிட்டே இதைப் பத்தி என்ன சொல்ல? என் ஆசிரியர் ஒருத்தர் கிட்டே பேசினேன். கடவுள் விதினு என்னென்னவோ சொன்னாரு.. எல்லாம் ஆண்டவன் விதிச்சது போல நடக்குமாம், எப்படியிருக்கு? oh, god! that i might read my book of fate.."

"நீ சொன்னதா?"

"இல்லை, shakespeare சொன்னது"

என்னிடமிருந்த சிகரெட்டை வாங்கி இழுத்து விஸ்கி பாட்டில் மீது வைத்தான். "you have turned out okay.." என்று என்னை நெற்றியில் முத்தமிட்டான். மூக்கில். உதட்டில். "பகுத் லம்பா சபர் கியே ஹைன் ஆப்" என்று என்னைத் தோளோடு இறுக்கி இழுத்துக் கொண்டான்.

இடது கையால் அவன் கைகளைக் கோர்த்தேன். திரும்பி வலது கையால் அவன் கன்னங்களை வருடினேன்.

"is there a man in your life?" என்றான்.

"isn't" அவன் கண்களைச் சந்தித்தேன்.

"woman?"

"was" அவன் மூக்கில் உரசினேன்.

"ah.. அதனால் தான் ஆண்கள் மேலென்று நினைக்கிறாயா?"

"உன்னை மேலேன்று நினைக்கிறேன், அவ்வளவு தான்.. நீ ஆண் என்பது தற்செயல்"

"உன் பாஸ் என்பதாலா? என்னுடன் படுத்தால் ஏதாவது சலுகை கிடைக்கும் என்று நினைக்கிறாயா?"

"இருக்கலாம். நாளைக்கு நான் உன் பாஸானாலும், உன்னுடைய கவர்ச்சி என்னுள் நிலைக்குமென்றே நினைக்கிறேன்.."

"உன்னுடைய துணிவு எனக்குப் பிடித்திருக்கிறது"

"நன்றி" என்று அவனை மெல்ல முத்தமிட்டேன்.

"இந்த வகைச் சேர்க்கையின் முரண் பற்றி உனக்குக் கவலையில்லையா? இது தப்பு பாவம்னு எதுவும்.." என்று என் இடதுகையை தன் மார் மேல் வைத்துக் கொண்டான்.

பலமாகச் சிரித்தேன். "the immoral, the divine.. inseparable till the end of time"

"shakespeare சொன்னதா?" என்று கேட்டு என்னை அணைத்தான்.

"no, நான் சொன்னது" என்று அவனைப் பதிலுக்கு அணைத்தேன். "பாவக்கணக்கு போடவேண்டிய அவசியமே இல்லை. nothing is good or bad, thinking makes it so"

"that your own?"

"no, shakespeare".

வத்சனுக்குச் சில நிமிடங்கள் பிடித்தது எல்லாவற்றையும் ஜீரணிக்க. "whoa! நீயும் அசுதோஷும் நெருக்கம்னு தெரியும். ஆனா படுக்கை நெருக்கம்னு இது வரைக்கும் தெரியாது.. குட்நெஸ் மச்சி! எனக்கு என்ன சொல்றதுனு தெரியலே.." என்றான்.

"சொல்றதுக்கு எதுவும் இல்லே.." என்றபடி பால்கனிச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தேன்.

"காதலிச்சீங்களா? how long?"

"just that one time. வேலைக்குச் சேர்ந்த பிறகு உறவாடுவதில்லை தொடுவதில்லை என்று அந்த இரவே தீர்மானித்தோம்.. strictly platonic after that night. but what a night! அந்த இரவுக்குப் பிறகு நான் கவிதை படிப்பதையே நிறுத்திட்டேன் தெரியுமா?"

"அப்புறம் என்ன ஆச்சு.. இவ்வளவு நெருக்கமா இருந்து, he turned against you..".

ரிச்சர்டை இரண்டாவது முறை அவன் அலுவலகத்தில் சந்தித்த போது நானும் அசுதோஷும் மட்டும்.

"young man.. i am disappointed.. நீ ஒரு மாடல் ஆபீசராக வருவாய்னு நினைச்சேன்.. இப்படி ஒரு குற்றவாளியாக மாறுவாய்னு நினைக்கவேயில்லை.. you have betrayed our collective trust.."

"ரிச்சர்ட்.."

"எதுவும் பேசாதே. நீ செய்திருப்பது குற்றம். உன்னை மட்டுமல்ல, எங்க எல்லாரையும் ஜெயிலுக்கு அனுப்பக் கூடிய குற்றம். என்ன ஆகுமோ தெரியாமல் விழிக்கிறேன். நாங்கள் திரும்பி வரும் வரையில் இந்த அறையிலேயே இரு" என்று ரிச்சர்டும் அசுதோஷும் அடுத்த அறையில் கூடியிருந்த சிலருடன் பேசப் போனார்கள்.

நான் தலைகுனிந்தபடி இருந்தேன்.

நான் செய்தது தப்பு. தெரிந்தே செய்தது. விளைவுகளின் தீவிரத்தைப் பற்றிப் புரியாமல் செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, என் தொழிலில் சாதாரணமாக நிறைய பேர் செய்வது தானே என்றப் போலிச் சமாதானத்துடன் செய்தது.

நாங்கள் விரும்பி ஏற்ற fmcg, ஒரு விசித்திரமான தொழில். எங்கே எது எப்படி எதனால் விற்கிறது, மக்கள் ஏன் வாங்குகிறார்கள் என்பதற்கான காரணம் சரிவர நியமிக்க முடியாமலே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் மந்திரத் தொழில். ஒரு மார்க்கெட்டில் காபிப்பொடி விற்காது, தேயிலை விற்கும். சூப் விற்கும் கெச்சப் விற்காது. ஒரு இடத்தில் பற்பசை விற்கும், டூத் பிரஷ் விற்காது. அரை கிலோ பேகட் விற்கும், நூறு கிராம் பேகட் விற்காது. ஆனால் எல்லா மார்க்கெட்டிலும் எல்லாவற்றையும் இத்தனை கேஸ் விற்கவேண்டும்.. மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ, எல்லாப் பொருளுக்கும் எல்லா மார்க்கெட்டிலும் கோட்டா. கோட்டாப்படி கடைகளுக்கு விற்கவில்லையென்றால் கல்தா.

வினியோகஸ்தர்களுக்கு நாங்கள் விற்றதை மறுபடி மார்க்கெட் கடைகளுக்கு விற்க வேண்டும். இந்த மறுவினியோகம் தான் fmcg கம்பெனிகளின் கார்கில். market share யுத்தங்களின் பீரங்கி. கம்பெனியின் நிகர லாபத்துக்கு வேர். கடைகாரர்களோ விற்பனையாகும் சரக்கை மட்டுமே கேட்பார்கள். எங்களுக்கோ எல்லாவற்றையும் விற்றாக வேண்டும். பரவலான ஒரு மறுவினியோகத் தந்திரம், அடாவடி. வத்சனின் மார்க்கெட்டில் பால்பொடி அநியாயத்துக்கு விற்கும். சூப் கெச்சப் விற்காது. வத்சன் கடைக்காரர்களுக்கு இத்தனை கேஸ் சூப் கெச்சப் வாங்கினால் இத்தனை கேஸ் பால்பொடி கொடுப்பது என்று பிடிவாதமாக இருப்பான். ரங்கன், உமேஷ், விஜய் எல்லாருமே இதைக் கடைபிடித்தார்கள். விற்காத சரக்கை கடைக்காரர்கள் ஆறு மாதம் கழித்துத் திருப்புவார்கள். இது போதாது என்று அக்கம்பக்கத்து எல்லைக் கடைகளிருந்தும் சரக்கு வரும். அனேகமாக எல்லாமே எங்கள் வினியோகஸ்தர்களிடம் வந்து சேரும். அசுதோஷின் மேற்பார்வைப் பகுதியின் நிகர லாபம் இதனால் பாதிக்கப்பட்டது.

இப்படி காபி, சூப், கெச்சப், தேயிலை, பற்பசை, பால்பொடி, ஊறுகாய் என்று விற்காதப் பொருட்களைச் சேதமாக விடாமல், எங்கள் நிகர லாபமும் குறையாமல், சுலபமாகச் சென்னையில் நிழலாக விற்க முடியுமென்றுத் தோன்றியது எனக்கு.

அசுதோஷ் அந்த வருட அகில இந்திய விற்பனை மேலதிகாரிப் போட்டியில் முன்னணியில் இருந்தான். 100% மறுவினியோகம், அதாவது எந்த வித சரக்கு வாபசும் இல்லையென்றால் போட்டியில் வெல்வதோடு நில்லாமல் கம்பெனியின் இந்திய வரலாற்றில் நிகழாதச் சாதனை படைப்பான். இது "நடைமுறைக்கு ஒத்து வராத, ஏங்கவைக்கும் கனவு" என்று என்னிடம் சொன்னான். "ஒரு முறையாவது நனவாக்குகிறேனே?" என்றேன். அசுதோஷ் சாதனை படைக்க விரும்பினேன். என் யோசனையைச் சொன்னேன். "திரும்பிவந்தக் கடைச்சரக்குகளைச் சென்னைக்கு ரெயிலில் கொண்டு போகிறேன். சென்னையில் ஆவடி அம்பத்தூர் அருகே இறங்கிகொண்டால் ஒரு பிரச்சனையும் இருக்காது. என் ஆவடி விநியோகஸ்தர் மிகுந்த அரசியல் செல்வாக்குள்ளவர். பேட்டை ரௌடி. எனக்கு நல்ல நண்பர். சகோதரன் போல. அவர் வந்து சரக்கை எடுத்துக்கொண்டு பணத்தைக் கொடுத்துவிடுவார். சென்னையில் இந்தப் பொருட்கள் சற்றே விலையதிகம் என்பதால் அவருக்கு கொள்முதலில் லாபம் வேறே.. யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை.. மார்க்கெட்டிலும் நமக்கு ஒரு control கிடைக்கும்".

அசுதோஷ் சம்மதிக்க, நான் அவ்வப்போது சரக்குடன் சென்னைக்குப் பயணமானேன். அந்த வருடம் அசுதோஷுக்கு மிகப்பெரியப் பரிசாகத் தங்க மெடல் கிடைத்தது. என்னையும் அசுதோஷையும் தவிர இந்த வெற்றியின் ரகசியம் யாருக்கும் தெரியாது.

ருசி கண்ட பூனையாதலால் இந்தக் கடத்தல் அடுத்த வருடமும் தொடர்ந்தது. ரிச்சர்ட் மார்கெட் விசிட் வந்தால் வியந்து பொதுவில் விசாரிப்பான். அசுதோஷ் என்னைப் பெருமையாக முன்னிறுத்துவான். எனக்குக் கிறங்கும். இரண்டாம் வருடம் ரிச்சர்டுக்குத் தங்க மெடல். தில்லி பம்பாய் லன்டனிலிருந்து அதிகாரிகள் வந்தார்கள். 'அசுதோஷின் வட்டம் அத்தனை பொருட்களையும் சரக்குத் திருப்பம் இல்லாமல் எப்படி விற்கமுடிகிறது!' என்று சிவந்த மூக்கில் விரல் வைத்து வியந்தார்கள். ரிச்சர்டுக்கு தென் கிழக்காசிய அளவில் 'மார்கெட் ஆல் ரவுண்டர் ஆப் தி இயர்' பதக்கமும் பரிசும், ஒரு வார ஹாங்காங் உல்லாசப் பயணமும் கிடைத்தது.

வெற்றியின் போதை அலாதியான கடிவாளம். திக்குத் தெரியாத அதிலாபாதில் கெச்சப் எப்படி இத்தனை விற்கிறது என்று எவரும் ஆராயவில்லை. நான், அசுதோஷ் மற்றும் இந்தக் கடத்தலில் பங்கேற்ற முக்கிய வினியோகஸ்தர், கடைக்காரர்கள் எல்லோருமே வெற்றிக் குமிழியுள் மிதந்தோம். எந்தச் சரக்கும் சேதமடையாமல் விற்கிறது என்ற பரந்த நோக்கில் இது சரியென்று பட்டாலும், மார்க்கெட் கண்ணோட்டத்தில் இது பிழை. எல்லை கடந்து விற்பது கடத்தல். குற்றம். ஆனால் வெற்றியின் ஒளி அறிவுக்கண்களைச் சுலபமாக கூசச் செய்துவிடும் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் கவலைப்படவில்லை. ஆண்டவனே வந்தாலும் ஒன்றும் பிடுங்க முடியாது என்று இருந்தேன். இருந்தோம்.

ஆண்டவன் வரவில்லை. ஆடிட்டர்கள் வந்தார்கள்.

எங்கே எப்படி யாரால் துப்பு கிடைத்தது என்பது தெரியாது. ஆவடியில் இறங்கியதும் கம்பெனி ஆடிட்டர்கள், சுங்கவரி, வணிகவரி ஆடிட்டர்கள் என்று சிறிய மானாடு போல் கூட்டம். இரண்டு தொப்பை போலீஸ்காரர்கள் என்னைப் பிடித்தார்கள். ஆடிட்டர்கள் வரிசையாக என் குற்றங்களைச் சொல்லி அங்கங்கே கையெழுத்து பெற்றார்கள். பிறகு இன்ஸ்பெக்டர் போலிருந்த பெண் என்னை அன்றிரவு ஆவடிக் காவல் நிலையத்தில் சிறைவைப்பதாகச் சொன்னாள். தற்செயலாக அங்கு வந்தது போல் நடித்த என் ஆவடி நண்பர் கொடுத்த ஜாமீன், எங்கள் கம்பெனி ஆடிட்டர்கள் கொடுத்த உத்தரவாதங்களின் பெயரில், 'ஓடிப்போக நினைத்தால் என்ன ஆகும்' என்பதைத் தெளிவாகப் பயமுறுத்திய இன்ஸ்பெக்டர் என்னை மறுநாள் எங்கள் கம்பெனி அலுவலகத்துக்கு வரச்சொன்னாள்.

ரிச்சர்டும் அசுதோஷும் திரும்பிய போது அரைமணிக்கு மேலாகியிருக்கும். அசுதோஷ் பேசினான். "உன் மேற்பார்வை அதிகாரியான எனக்கோ அல்லது மேலதிகாரியான ரிச்சர்டுக்கோ தெரியாமல், சட்ட விரோதமாகவும் கம்பெனி விதிமுறைகளுக்குப் புறம்பாகவும், உன் விருப்பத்துக்கு நீயே தீர்மானித்துப் புரிந்த இந்த அத்துமீறல்களினால் கம்பெனிக்குப் பெரும் நஷ்டமும் அவமானமும் ஏற்பட்டுள்ளது" என்றான்.

நான் திடுக்கிட்டேன். "அசுதோஷ்.. உனக்குத் தெரியாமலா.."

ரிச்சர்ட் என்னை அமைதியாக இருக்கச் சைகை செய்தான். அசுதோஷ் தொடர்ந்தான். "சட்ட ஆலோசனையின் பெயரில் உன்னைக் காவலில் ஒப்படைக்க வேண்டுமானாலும், உன் குடும்ப நிலை கருதி போலீஸ் கேஸ் எதுவும் பதியாமல், உன்னை உடனடியாக வேலை நீக்கம் செய்யும்படி சிபாரிசு செய்கிறேன்".

ரிச்சர்ட், "உன் அதிகாரி என்றப் பொறுப்பில் அசுதோஷ் சொன்ன சிபாரிசை ஏற்று உன்னை உடனடியாக வேலையை விட்டு நீக்குகிறேன்" என்றான். அசுதோஷிடம் "நீ போகலாம்" என்றான்.

"அத்துமீறல்களினால் ஏற்பட்ட அத்தனை நஷ்டங்களையும் கம்பெனி ஏற்கும்" என்று சொன்ன ரிச்சர்ட், அடுத்த ஐந்து நிமிடங்களில் என்னிடம் நூறு கையெழுத்துக்களும் உறுதிமொழிகளும் வாங்கிக்கொண்டு, பதிலுக்கு என் பெயரில் போலீஸ் கேஸ் எதுவும் பதிவு செய்யாமல் வேலையை விட்டு நீக்கினான்.

நான் வெளியே வந்தபோது அசுதோஷைக் காணவில்லை.

"bastard!" என்றான் வத்சன். "இந்தியாவுல எந்த fmcgம் உன்னை வேலைக்கு எடுக்க முடியாம செஞ்சுட்டான் பாரு.. விஷயம் தெரிஞ்சதும் எங்களுக்குத் தாங்கலேடா... இதைப் பத்தி எங்க கிட்ட சொல்லியிருக்கலாமேடா? நாங்க சாட்சி சொல்லியிருப்போமே? உமேஷ் விவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வந்து சொன்னப்போ.. it was late.. you were destroyed.."

"the fact is அசுதோஷ் நினைச்சிருந்தா அன்னிக்கு நான் ஜெயிலுக்குப் போயிருக்கலாம்.. என் வாழ்க்கையே நாசமாகியிருக்கும். உங்க யாராலயும் எதுவும் செஞ்சிருக்க முடியாது. உமேஷ் கிட்டே சில விவரங்களை நான் தான் சொன்னேன்.. நான் தற்கொலை செஞ்சிக்குவேனோனு.. அந்த எண்ணம் என் மனசுல இருந்துச்சு.. அதை அவன் எப்படியோ தெரிஞ்சுகிட்டு என் கூடவே நிழலாட்டம் without sleep இருந்தான்.."

"லூசு.. அசுதோஷும் ரிச்சர்டும் உடந்தை.. அவங்க சூத்து பழுத்துறுமேனு பயந்து உன்னை மாட்டிவிட்டாங்க.. they sequestered you.. it all happened so fast.. இதுல அசுதோஷ் உங்கிட்டே மன்னிப்பு கூடக் கேட்காதது.."

"he did. சாவுறன்னிக்கு இமெயில் எழுதினானு சொன்னனே... அதுல வரிவரியா, துடிக்கத் துடிக்க, மன்னிப்புக் கேட்டிருந்தான். நோயினால வாடுறதையும், வலி தாளாம துடிப்பதையும்.. நாக்கு தொண்டைக்குள்ளயே அழுகத் தொடங்கிடுச்சாம்.. ஒவ்வொரு கணமும் மரணத்தை வேண்டினாலும் இழுத்துக்கிட்டே இருந்ததாகவும், என்னுடைய மனமார்ந்த மன்னிப்பு மட்டுமே அவனுக்கு மரணத்தைக் கொடுக்கும்னும் எழுதியிருந்தான். மரண தானம் கேட்டு ரொம்பக் கெஞ்சி எழுதியிருந்தான். 'i forgive you'னு பதில் எழுதினேன். 'கருணைத் தேன் தோய்ந்த உன் மன்னிப்பே என் உயிரணைக்கும் மருந்து. தகுதிகளுக்கு அப்பாற்பட்ட உனக்கு, தகுதியற்றவனின் நன்றி'னு அவன் பதில் போட்டான். மறுநாள் he passed away.. அடுத்த நாளே மரணம்!"

நீண்ட மௌனம்.

"things could have been different.." என்றேன் நிதானமாக.

"how so?"

"வத்சன்.. நானும் அசுதோஷும் சேர்ந்திருந்த அன்னிக்கு ராத்திரி.. 'வேலைக்குச் சேர்ந்த பின்னே தொடுவதில்லைனு தீர்மானிச்சோம்'னு சொன்னனே.. he offered to quit his job for me.. for me! அவன் வேறே வேலை தேடிக்கொள்வதாகவும் எங்கள் நெருக்கத்தைத் தொடர விரும்புவதாகவும் சொன்னான்.. என் பதிலுக்கு ரெண்டு நாள் அவகாசம் தரதா சொன்னான்.. நான் தேவையில்லைனு ஒதுக்கிட்டேன்.. என்னால உறவுக்கு commit பண்ணமுடியாதுனு சொன்னேன்.. besides, அப்போ எனக்கு எந்த மாதிரி உறவு வேணுமுன்னு ஒரு ஐடியா கூட இல்லாமருந்தேன்.."

திடீரென்று அழத் தொடங்கினேன்.

விக்கலாகத் தொடங்கிய அழுகை நெஞ்சைப் பிழிந்து துடித்துத் துடித்து வெளிவந்தது. குலுங்கிப் புரண்டு நெஞ்சிலடித்து அழுதேன். வத்சன் திகைத்தாலும் என்னைத் தடுக்கவில்லை. என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. பொங்கிப் பொங்கி வந்தது. வத்சன் என்னருகே வந்து என் தோள்களை மெள்ள அழுத்தினான். அமைதிப்படுத்தினான். அவன் தோள்களில் சாய்ந்தபடி அழுது முடித்தேன்.

"i am sorry.. நீ அசுதோஷை இத்தனை நேசிச்சது எனக்குச் சத்தியமா தெரியாதுடா.." என்றான்.

"எல்லாமே இப்போ கண்ணீர்ல கரைஞ்சு போச்சு.." என்றேன். "i feel better"

சிறிது நேர அமைதி.

"i cannot forgive him.. உன்னுடைய பெருந்தன்மை அவனுடைய வலி நிவாரணியாப் போச்சு.. பெருந்தன்மையா முட்டாள்தனமா தெரியலே.. அவன் இன்னும் துடிச்சிருக்கணும்.." என்றான் வத்சன்.

"let go, i did.."

"talk about death wish! on a lighter vein, உன்னோட இமெயில் தான் அசுதோஷோட மரண யாழிசை"

புன்னகைத்தேன்.

வத்சன் பெரிதாகச் சோம்பல் முறித்தான். "என் மரண ambiance கவலை நீங்கியது நண்பா!" ஏனோ அடுக்காய்ச் சிரித்தான். "கற்பனை செஞ்சுப் பார்த்தேன்.. தேவதைகளின் யாழிசை, சுமைகளைக் கரைக்குதோ இல்லையோ நிரந்தரமாக் கண்மூட இதமாகவே இருக்கும்னு தோணுது.." என்றவன், தலையணையைப் பொருத்தி பால்கனியில் வசதியாகப் படுத்தான். "i need to crash.. மணி அஞ்சாவுதுடா.. what a night! வருஷக் கணக்காகும்டா இது செறிக்க.." என்றான். தன்னிடமிருந்தப் போர்வையால் தலைகால் மூடிக் கொண்டான்.

"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும், அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்"

"shakespeare சொன்னதா?" சிரித்தான்.

"ஆமாம்.. மறுபிறவியில்" என்றேன்.

சில நிமிடங்களில் வத்சனின் குறட்டையொலி கேட்டது. பரவிக் கிடந்த குப்பையை ஒதுக்கித் தள்ளினேன். இன்னொரு போர்வையை வத்சன் மீது போர்த்தினேன். சுவரோரமாகத் தலையணையைப் பொருத்தி, சாய்ந்து, இழுத்துப் போர்த்துப் படுத்தேன். வெளியே ஜெயநகர் விழிக்கத் தொடங்கியது. நான் உறங்கத் தொடங்கினேன்.

      தோஷம்     

32 கருத்துகள்:

 1. வித்தியாச கதைக்களம்.

  பதிலளிநீக்கு
 2. அப்பாதுரை அவர்களே! என்னால் ரசிக்க் முடியவில்ல ! ---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 3. அடேயப்பா எவ்வளவு பெரிய கதை... படிக்க படிக்க நீண்டு கொண்டே இருந்தது...

  ஆனாலும் கதை முழுவதும் என்னை ஒரு சந்தேகத்தின் நிழல் தொடர்ந்து கொண்டே இருந்தது

  ஆமாம் இது கதை தானே ? :-)

  பதிலளிநீக்கு
 4. ஹா!என்ன ஒரு கதை!

  கரைந்துகொண்டிருக்கிறேன்.மறுபடி மறுபடி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

  முதுகில் ஒரு விர்ச்சுவல் ஷொட்டு.

  //"please think it over" என்றாள். "you can't afford my thought" என்ற என் ஆணவமான பதிலைப் புன்னகையோடு ஏற்றாள்.//

  //'இவளைத் தொடமுடியுமா' என்று நினைத்தக் கணத்தில் என் முதுகில் யாரோ தொட்டார்கள்.//

  //அவளை நெருங்கி, "இது என்னுடைய படுக்கை.. meant for good stuff too.. பலா உபாத்னா" என்றேன்.//

  //படே குலாம் அலிகான் என்று நான் கேள்விப்பட்டிராத பெயர் சொல்லிப் பதினைந்து நிமிடங்களில் என் கஜல் அறிவை மேம்படுத்தினான்.//

  //b,v' குழப்பாத அவனது நளின ஆங்கிலப் பிடிப்பு ஆச்சரியம் எனில், அழகான ஹிந்தியில் அவ்வப்போது பேசியது போதை.//(பெங்காலிகளின் டார்ச்ச்சர்!)

  //நான்-வெஜிடேரியனானு கேட்குற மாதிரி இருக்கு, உன் கேள்வி.."//

  //"தெரியாது. i am.. just sexual. sexல் ஹோமொ ஹெடரொ என்று பேதம் பார்ப்பதில்லை என்பது மட்டுமே தெரியும்" என்றேன்.//

  //i was bred in perversion... cross of burden until tormented shadows lead to the pulpit of torturous death"//

  //the immoral, the divine.. inseparable till the end of time"//

  //அந்த இரவுக்குப் பிறகு நான் கவிதை படிப்பதையே நிறுத்திட்டேன் தெரியுமா?"//

  //வெற்றியின் போதை அலாதியான கடிவாளம்.//
  //besides, அப்போ எனக்கு எந்த மாதிரி உறவு வேணுமுன்னு ஒரு ஐடியா கூட இல்லாமருந்தேன்.."//

  //உன்னோட இமெயில் தான் அசுதோஷோட மரண யாழிசை"//

  fmcg அனுபவங்களைச் சொல்ல வத்சனிடம் கடன் வாங்க வேண்டும் -what a night! வருஷக் கணக்காகும் இது செறிக்க.

  அசுதோஷுடனான உரையாடல்கள் அத்தனையும் கவிதை-கதையின் தலைப்பு தொடங்கி.

  ஒரு தடவை சொல்லிப் பார்த்துக்கொண்டேன் - மகரயாழ் தேவமார் முகமுரசவருமட்டும்.

  மீண்டும் மீண்டும் வாசிக்க புக்மார்க் செய்துகொண்டேன்.

  மிகச் செறிவான மொழியில் மனம் கனக்க வைத்த கதை.

  இந்த வருஷத்தில் இதுவரை எழுதப்பட்ட சிறப்பான கதை.

  இந்த வருஷத்துக்கு இந்த ஒரு கதை போதும் அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 5. இப்போதுதான் சரிகைச் சாயம் வாசிக்க ஆரம்பித்தேன்.

  உங்கள் கன்ஃபெஷன்ஸ்க்கு முதலில் ஒரு பாராட்டு.

  இதுபோல என் வாழ்க்கை ரகசியங்களையும் நான் எழுத நினைத்திருக்கிறேன்.

  ஒருவேளை இன்னும் சிறிது காலமும், இன்னும் சிலரின் மரணமும் வாய்க்கவேண்டியதிருக்கும்.

  பதிலளிநீக்கு
 6. எவ்வளவு உன்னதமாக எழுதினும், அதனால் சமூகத்திற்கு கடுகளவாவது பயன் இல்லையெனில், அப்படியான எழுத்து விழலுக்கு இறைத்த நீர் தான் என்று என் ஆசான் சொன்னது நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 7. நானும் மூன்றாவது நபராக
  அந்த அறையில் இருப்பதை உணர்ந்தேன்

  பதிலளிநீக்கு
 8. பொய்யாய்ப் புகழ முடியவில்லை. காஷ்யபன் ஜீவி போன்றோரின் கருத்துக்களை ஆமோதித்தாலும், தங்கள் திறமையை வியக்காமல் இருக்கவும் முடியவில்லை. ( என்ன கொடுமை சார் இது? )
  ஷேக்ஸ்பியர் சொன்னது , நான்( நீங்கள்) சொன்னது .. என்று மாறி மாறி ...வந்தது அனைத்தும் கவித கவித.
  இறுதியில் சேக்ஸ்பியரின் மறுபிறவி கொஞ்சம் கர்வம் கொள்ள வைத்தது.

  நீங்கள் சொல்லும் முதிர்ந்த வாசகன் நான் இல்லையோ?

  பதிலளிநீக்கு
 9. வழக்கமாய் பின்னூட்டமிடும் தங்களின் வாசகர்கள் சிலர் படித்து விட்டு ஒன்றுமே சொல்லாமல் போனதைக் கவனித்தீர்களா அப்பாஜி?

  பதிலளிநீக்கு
 10. சிவகுமரன் அவர்களே1 ஒளிந்து கோள்ள வேண்டாமே! லார்டு பைரனின் porno விலீருந்து ,மாடம்பவாரி,லேடி சாட்டர்லிஸ் லவ்,,கிங்க்ஸ்லீ ரெபொர்ட் ,என்று படித்திருக்கிறேன்! ரசித்திருக்கிறேன்! இதை ரசிக்க முடியவில்லை1 முதுமை கூட காரணமாக இருக்கலாம்! "காதல்" பற்றி நான் எழுதுவதில்லை! அதனை எழுதுவதற்கு ஆயிரம்பேர் இருக்கிறார்கள்! அதே போன்றுதான் இதுவும்! அப்பாதுரை அவர்கள் எழுத வேண்டியவை ஆயிரம் இருக்கு ! ஒருவேளை அதனால்தான் ரசிக்க முடியவில்லையோ! ---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 11. அப்பாஜி (வலைப்பூ தலைப்பிலேயே) கவனம்: கருத்தும் நடையும் முதிர்ந்த வாசகருக்கானவை.

  சிவகுமாரன்: நீங்கள் சொல்லும் முதிர்ந்த வாசகன் நான் இல்லையோ?

  காஷ்யபன்: இதை ரசிக்க முடியவில்லை1 முதுமை கூட காரணமாக இருக்கலாம்!

  முதுமையும் முதிர்ந்தவும் முரண் பட்டுப் போயினவோ?.. முதுமையும் முதிர்ந்தவும் வெவ்வேறாயின் வயதின் அடிப்படையில் முதுமையும், அப்படி வயதின் அடிப்படையில் இல்லாத வேறு ஏதாவது ஒன்றின் அடிப்படையில் முதிர்ந்தவும் இருக்கலாமோ?..

  பதிலளிநீக்கு
 12. மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கையில் தெளிவாகப் புலப்படுவது இது தான்: எதெல்லாம் முதிர்ந்த வாசகர்களுக்கானவை என்று கவனப்படுத்தப்படுகிறதோ, அவையெல்லாவற்றையும் தவிர்த்து விட்டுப் படித்துப் பார்த்தால், தவிர்க்கவே முடியாமல் அப்பாஜி தனி சிம்மாசனமிட்டு தனிக்கொடி நாட்டியிருப்பது புரிபடும்.

  ஆக, இந்த 'முதிர்ந்த' சமாச்சாரம் தான் அப்பாஜியின் தனித்தன்மை சிறப்பிற்கு வில்லங்கமாக வழியடைத்திருப்பது தெரிகிறது.
  தடையைத் தகர்த்தெறிந்தால் தனித் தீவாய் போய்விடாமல் பரந்துபட்ட வாசகர் வட்டம் அவருக்கென்றாகும்.

  பதிலளிநீக்கு
 13. அப்பாதுரை அவர்களே! நான் ஆட்டைக்கே வரலங்கறேன் ! ஜீவியும்,சிவகுமரனும் என்னை வம்புக்கு இழுக்கராங்க! முதுமை,முதிர்ச்சி அண்ணே என்னை விட்டுருங்க சாமிகளா!---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 14. அப்பாஜி! 'முதிர்ந்த' என்பதற்கு 'Maturity' என்கிற அர்த்தத்தை நீங்கள் கொள்ளவில்லை என்று மட்டும் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 15. பின்னூட்டங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  படிப்பதே பெரிய ஆறுதல். அதுவும் இத்தனை நீளமான விவகாரமான எழுத்தைப் படிப்பது மகத்தான ஆறுதல். படித்து மனதில் பட்டதை பின்னூட்டமாக வழங்கிப் போவது கர்ணகொடை.

  இரண்டு நாட்களாக எங்கள் வீட்டு வாலாட்டும் பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. வைத்தியரிடம் அழைத்துப் போக வேண்டும். தொடர்ந்து மனதைச் சிறிதும் வளப்படுத்தாத சில்லறை வேலைகள். என் கருத்துக்களை இன்னொரு பின்னூட்டத்தில் எழுதுகிறேன். இப்போதைக்கு நன்றி மட்டும்.


  பதிலளிநீக்கு
 16. எதையுமே விளக்க வேண்டிவந்தால் அதன் சாரம் தொலைந்து விடுகிறது என்பது என் எண்ணம். (விளங்காமல் எழுதுவது என்ற என் கொள்கைக்கும் பங்கமாகிவிடுகிறது.)

  நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் சிவகுமாரன். அதனால் என்ன? படித்தோ படிக்காமலோ ஒதுங்குவது அவரவர் விருப்பமும் உரிமையும் தானே? இந்தக் கதைக்களம், சம்பவங்கள், நடை எல்லாமே 'நாகரீக எல்லை' என்ற விவாதத்துக்குரிய வரம்பை ஒட்டியிருப்பதால் ஒதுங்குவதும் இயல்பென்றே கொள்கிறேன்.

  இந்தக் கதையின் கரு இன்றைய சமூக உணர்வு நிலையில் ஆபாசம் தான். ஆபாசத்தில் தவறில்லை, என்னால் ஏற்கமுடியும் என்ற எண்ணத்தில் இதை எழுதினேன், பகிர்ந்தேன். ஆபாசம் என்பது எல்லாராலும் ஏற்க முடியுமா என்றப் பெருந்தயக்கம் என்னுள் இருந்த போதும். தயக்கத்தைவிட, ஆபாசமாக எழுதுவது சிலருக்கு உரிமை மீறலாகத் தோன்றலாம் என்ற அச்சமும். இந்தக் கதையை சாதாரண ஆண்/பெண் அல்லது திருமணத்துக்கு வெளியிலான உறவு என்ற ரீதியிலும் எழுதியிருக்கலாம். இப்போது உணரப்படும் அருவருப்பும் ரசனைகுறைவும் அப்போது உணரப்படுமா? இதே அளவு உணரப்படுமா? இவை நான் பொதுவில் வைக்கும் கேள்விகள்.

  முதிர்ச்சிக்கு வருகிறேன். எந்த விஷயத்தையும் நேரே ஆணிவேரைப் பிடித்து ஆய்வது ஜீவிக்கு வழக்கமாகி விட்டது. maturity என்ற பொருளைத் தான் கொண்டேன். இருந்தாலும், இந்த maturity அல்லது முதிர்ச்சி என்பது பிசைந்த வாழைப்பழத்தில் வெண்டைக்காய் குழநீரை ஊற்றி எண்ணை கலந்த சமாசாரம். பதிவின் முகப்பில் சொல்லியிருப்பது cdw - common decency warning - என்னை நானே சட்டவரம்புக்குள் புகுத்திக் கொள்ளும் அற்பத் தற்காப்புத் தந்திரம். பதிவில் வரும் சொற்கள் சம்பவங்கள் நடை ஆபாசமாக இருக்கலாம் என்கிற ஒரு முன்னெச்சரிக்கை.

  16க்கு மேற்பட்ட வயதுக்கும் முதிர்ச்சிக்கும் பெரும்பாலும் தொடர்பு இல்லை என்று அவ்வப்போது நம்புகிறேன் - சில 41 வயதுக்காரர்கள் 14 போல் நடந்து கொள்வதை எரிச்சலுடன் ஏற்க வேண்டிவந்தாலும் :) முதிர்ந்த வாசகருக்கு மட்டும் என்றதற்கு, என் பதிவை பதினெட்டு வயதுக்கு இளையவர்கள் யாரும் படிக்க நேர்ந்தால் அந்த வயதுக்குத் தேவையற்றதை நான் திணிக்கிறேன் என்ற சிறிய குற்ற உணர்வும் காரணம். (கடவுள் மறுப்புக் கருத்துக்களைத் தவிர :) மற்றபடி, வயது எனக்கு ஒரு பொருட்டல்ல.

  ஆபாசம் விரசம் எல்லாவற்றையும் பக்தி என்று மிகச்சுலபமாக ஏற்பது சிலருக்கு எளிது. ஆபாசம் விரசத்தை ஆபாசம் விரசமாக ஏற்பது எனக்கு எளிது. பொய்மை, துரோகம், வஞ்சகம் இவற்றைத் தவிர வாழ்வில் இயல்பாக எல்லாவற்றையும் ஏற்க முடியும் - இது என் நெறி. காஸ்யபன் ஐயா, உங்களிடம் விஷயம் இருப்பதால் தானே வம்புக்கு இழுக்கிறார்கள்?

  பதிலளிநீக்கு
 17. அப்பாதுரை அவர்களே ! மிகச்சிறந்த தத்துவத்தைச் சொல்லும் நாவலை டி.எச்.லாரன்ஸ் எழுதினார். ஒரு பாவியும் அதை அச்சடிக்கமுன்வரவில்லை! வஞ்சம் தீர்க்க அதில் தகுந்த இடத்தில் "சமாசாரங்களை" நுழைத்து கோடுத்தார் ! அதன் பிறகு தான் அது பிரசுரமாயிற்று ! அது தான் "லேடி சாடர்லீஸ் லவ் "! அந்தப் பெண்ணின் கணவன் இடுப்புக்குக் கீழே செயலிழந்தவன்! ஆனாலும் அவர்களிருவரும் அன்பொடும் காதலோடும் வாழ்ந்தார்கள்! அவன் அவளைத்தொடுவான்! "நான் உன்னைத்தொடுவதாக நினைக்கவில்லை ! உன் ஆத்மாவைத்தொடுவதாக நினைக்கிறென் !" என்பான்! உடலுறவு தவிர்த்த அற்புதமான காதல் வாழ்க்கையை வாழ்வார்கள்! இதனை பிரசுரிக்க மருத்தார்கள் ! கதையை லாரன்ஸ் மாற்றினார்! கனவன் சுரங்க முதலாளி! பிசினஸ் போச வரும் முதலாளிகள் அவன் மனைவியை கவர முயல்கிறார்கள்! அந்தப் பெண்ணின் உறவினர்கள் அந்தப் பேண்ணின் தாம்பத்திய வாழ்க்கை சிதறி போனதை அவளிடமே குறையாகச் சொல்லி விசும்புகிறார்கள்! மெல்ல மெல்ல அவள் தான் இழந்த ஆண் சுகத்திற்காக ஏங்குகிறாள்! தோட்டத்தில் நீக்ரோ வேலைக்காரன் நிர்வானமாக குளிப்பதைப் பார்த்து கிலெசமடைகிறாள்! பலர்,பலர் அவளொடு சங்கமிக்கிறார்கள்! இதனை ஆபாசம்,விரசம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்-- லாரன்ஸ் விவரித்திருப்பார்! அந்தக் காலத்தில் அது தடை செய்யப்பட்ட நாவல்! நான் டைப் செய்த பிரதியைப் படித்த நினைவு ! அப்பாதுரை அவர்களே! உங்கள் இலக்கியப் பாணி ,பணி இரண்டும் இன்னும் உயரத்திற்கு போகவேண்டும் என்று விரும்பும் ஒருவாசகன் என்று என்னை எடுத்துக் கொள்ளக் கூடாதா! "நசிகேத வெண்பா" ஒன்று போதுமே காலம் காலத்திற்கும் உம் பெயரச் சொல்ல! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 18. அனுபவச் செறிவின் அறிதலே முதிர்ச்சி.

  வயதாக வயதாக பெறும் அனுபவங்களின் எண்ணிக்கைக் கூடலாம் என்பதின் அடிப்படையில் வயதுக்கும் முதிர்ச்சிக்கும் பொத்தாம் போக்கில் ஏதோ சமன்பாடு காண்கிறார்களே தவிர இரண்டிற்கும் இதைத்தவிர வேறு எந்த சம்பந்தமும் கிடையாது.

  ஆனால் வாழ நேர்ந்தினால் அமைந்து போன வாழ்க்கை அமைப்பிற்கும் முதிர்ச்சிக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. துன்பத்தையும் துயரையும் அனுதின அனுபவமாகக் கொண்டு மீண்டவர்கள் அந்த அனுபவச் செறிவில் இளம் வயதிலும் ஞானம் நிரம்பப் பெற்ற ஞானசம்பந்தர்களாய் காணக் கிடைக்கிறார்கள்.

  முதிர்ச்சியின் மிகப்பெரிய சிறப்பியல்பு என்னவெனில், முதிர்ச்சியற்ற செயல்கள் எதிர்ப்படுகையில் அவை
  குறித்து கொண்டுள்ள அறிவின்
  பிரக்ஞையில் ஒரு புன்முறுவலுடன் அவற்றைக் கடந்து போவதுவே.

  பதிலளிநீக்கு
 19. அனுபவச் செறிவு அடர்த்தியான கடிவாளம். பல நேரம் ஆணவத்கின் அஸ்திவாரம். இது முதிர்ச்சியற்றது என்றுத் தீர்மானிக்கும் கணத்தில் அங்கே முதிர்ச்சி காணாமல் போய்விடுகிறது. முதிர்ச்சியின் முக்கிய இலக்கணம் 360 டிகிரி பார்வை. இது முதிர்ச்சியற்றது என்றத் தீர்மானப் பாங்கற்றப் புன்முறுவல்.

  பதிலளிநீக்கு
 20. பெயரில்லாமே 14, 2013

  எதையுமே ஆராய முற்பட்டால் அதனுடைய அழகு போய்விடும் என்பது முற்றிலும் உண்மைதான். எதையுமே அதன் போக்கில் அப்படியே ரசித்தால் காலத்திற்கும் அதன் அழகு குறையாது. ஆனால் அந்த அழகில் ஆழ்ந்து விட வேண்டும் என்று நினைக்கும்போது ஆராயாமல் இருக்க முடிவதில்லை.

  //ஆபாசத்தில் தவறில்லை, என்னால் ஏற்கமுடியும் என்ற எண்ணத்தில் இதை எழுதினேன், பகிர்ந்தேன்.//
  ஆபாசத்தை பார்க்கவே முடியாத எனக்கு ஏற்பது மிக மிக கடினம். :) கடினம் என்பதை விடவும் முடியாது என்றே சொல்வேன்.

  //இந்தக் கதையை சாதாரண ஆண்/பெண் அல்லது திருமணத்துக்கு வெளியிலான உறவு என்ற ரீதியிலும் எழுதியிருக்கலாம். இப்போது உணரப்படும் அருவருப்பும் ரசனைகுறைவும் அப்போது உணரப்படுமா? இதே அளவு உணரப்படுமா? இவை நான் பொதுவில் வைக்கும் கேள்விகள்.//
  நிச்சயம் உணரப்படும். ஆனால் அளவை நிர்ணயிக்க இயலாது. மலத்தை பார்த்தாலும் அருவெறுப்புதான், சிலர் குணத்தை பார்த்தாலும் அருவெறுப்புதான். இதில் அளவை உணர வைப்பது சிரமம்.
  கணவன் மனைவி உறவிலேயே ஒருவர் மேல் ஒருவருக்கு மதிப்பு குறைவு ஏற்படும்போது, இந்த உறவிலா இவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்று ஒரு அருவெறுப்பு சிலருக்கு தோன்றத்தானே செய்கிறது.

  //ஆபாசம் விரசம் எல்லாவற்றையும் பக்தி என்று மிகச்சுலபமாக ஏற்பது சிலருக்கு எளிது. ஆபாசம் விரசத்தை ஆபாசம் விரசமாக ஏற்பது எனக்கு எளிது.//
  ஆபாசம் விரசம் எல்லாம் ஆபாசம் விரசம்தான். இதை பக்தியில் சிலர் ஏற்பது மருந்தை தேனில் குழைத்து சாப்பிடுவதை போல.

  என்னை பொறுத்தவரை இந்த கதையின் கரு என்னை மனதை மிகவும் பாதித்து விட்டது. இந்த கதையின் நாயகனுக்கு அந்த ஒரு நாள் உறவு நீறு பூத்த நெருப்பாய் மனதில் இருந்திருக்கிறது. தான் விரும்பவது இதுதான் என்பதை உணராமலேயே இருந்திருக்கிறான். இத்தனை வருடம் அவன் வாழ்ந்த வாழ்கையில் இருந்த ஒரு வெறுமை இறுதியில் அவன் அழுத அழுகையிலும் சொன்ன வார்த்தைகளிலும் வெளிப்பட்டு இருக்கிறது. நாயகனின் இந்த நிலை பரிதாபத்தை கொடுத்தாலும் மனதில் ஒரு பய உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு


 21. இது கதை தானா என்று ஒருவர் கேட்டிருக்கிறார்.
  கதையின் ஸ்வாரசியம் அவரது கேள்வியிலே தெரிகிறது.

  அப்பாதுரைக்கு எழுதவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. இருக்கலாம்.
  ஆனால் எழுதவேண்டியது என்ன, அதை எப்ப எழுதவேண்டும் என்று
  எழுதுபவர் தான் தீர்மானிக்கவேண்டிய விஷயம்.

  இதற்கும் வயசுக்கும் சம்பந்தமில்லை.
  காய்ந்த கருவாடுகளுக்கு காலமில்லை.
  கலைந்து போன கனவுகளுக்கும்
  கடந்து சென்ற குழப்பங்களுக்கும்
  காலப்போக்கில் ஒரு வழியோ வென்டிலேட்டரோ தேவை.


  " செக்ஸ் என்ன என்று அறியும் ஒரு சோதனைக்கட்டத்துக்குள் தான் இன்னமும்
  இருக்கிறேன் "

  எனும் உங்கள் வார்த்தைகளின் நெடி அடங்குமுன்னே

  இந்த வரி தென்பட்டது.

  '" இரண்டு நாட்களாக எங்கள் வீட்டு வாலாட்டும் பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. வைத்தியரிடம் அழைத்துப் போக வேண்டும் "

  பாவம். !!! நாலு கால் ஜீவன்(னாவது ) பிழைத்துப்போகட்டும்.

  HOW ONE ENJOYS HIS LIFE IS ONE'S CHOICE. SOMETIMES IT IS SHEER CHANCE.

  சுப்பு தாத்தா.


  இது வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே படிக்க உகந்தது என்று நான் சொல்லவேண்டுமா
  இல்லயா என்று முடிவெடுக்கும் நிலையில்.....

  சற்று பொறுங்கள்.... கிழவி வருகிறாள்....கரண்டும் வந்துவிட்டது...

  இங்க என்ன பண்ணிட்டு இருக்கீக ?

  ஒண்ணுமில்ல,...என்ன பண்ணலாம் அப்படின்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்.


  பதிலளிநீக்கு
 22. ஊரில் இல்லாததால் இப்போதுதான் வந்து படித்தேன். வழக்கம் போல் எழுத்தில் சில எண்ணத்தடைகளையும் மனத்தடைகளையும் தகர்த்திருக்கிறீர்கள். சொல்ல வருவதைத் தங்கு தடை ஏதுமின்றி எந்த ஒரு inhibition-ம் இல்லாமல் சொல்ல முடிவது உங்கள் தனித்தன்மையைக் காட்டுகிறது,சர்வ சாதாரணமாக , ஆனால் taboos என்று கருதப்படும் விஷயங்கள் நடப்பது அநேகம் பேருக்குத் தெரிந்தாலும் ஒரு moral வேலிக்குக் கட்டுப்பட்டு பேசவே கூசுகிறார்கள். சில சம்பவங்கள் நடக்கிறது என்று அறிவதே அதை ஞாயப்படுத்தும் செய்கையாக கொள்ளக் கூடாது. அவனவன் வாழ்க்கை அவனவன் வாழ்வது, சரி எது தவறு எது என்பதெல்லாம் அவரவர் வாழ்ந்த பின்னணியையும், வித்தியாசமாக இருக்க நேரும் சந்தர்ப்பத்தையும் பொறுத்தது. நான் உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். ஒரு நப்பாசை. இது வாழ்வின் பல பரிமாணங்களை அறிந்த ஒருவர் எழுதும் கதை கற்பனையாகவே இருக்கக் கூடாதா என்பதே.

  பதிலளிநீக்கு
 23. //SOMETIMES IT IS SHEER CHANCE
  recognition is immense wisdom; acceptance is infinite grace.
  அழகாச் சொன்னீங்க.

  //கரண்டும் வந்துவிட்டது...
  என்ன சார்? கரண்டு இல்லாமலா இத்தனை நேரம் எழுதுனீங்க?

  பதிலளிநீக்கு
 24. //சில சம்பவங்கள் நடக்கிறது என்று அறிவதே அதை ஞாயப்படுத்தும் செய்கையாக கொள்ளக் கூடாது
  ஆழமான கருத்து சார். இந்த messageஐ வைத்து ஒரு கதை எழுதலாம் போலிருக்கிறதே?

  //ஒரு நப்பாசை. இது வாழ்வின் பல பரிமாணங்களை அறிந்த ஒருவர் எழுதும் கதை கற்பனையாகவே இருக்கக் கூடாதா என்பதே
  ஹிஹி.. கற்பனைகள் நிஜமாகக் கூடாதா என்பது என் சில சமய நப்பாசை :)

  பதிலளிநீக்கு
 25. //recognition is immense wisdom; acceptance is infinite grace.//
  Chance occurrences are too many to narrate.
  Recognition is instinctive, whereas
  acceptance cognito or in cognito reveals one's innate worth .

  subbu thatha

  பதிலளிநீக்கு
 26. இது இன்னும் insightful சுப்பு சார். நன்றி.

  சாத்தியமற்றக் கற்பனைகளைத் தேவையான நிஜங்களாக ஏற்கும் பக்குவமும் சாத்தியமுள்ள நிஜங்களை தேவையற்றக் கற்பனைகளாகப் புறக்கணிப்பதன் முரணும் மட்டும் புரிந்துவிட்டால் மனிதத்தின் சாரம் விளங்கி விடும் (ஆபத்து இருக்கிறது :)

  பதிலளிநீக்கு
 27. I read the entire story (part of your life story). Not matured enough or exposed enough, to offer my comments. But one thing is sure. Recalling the good old days of your friendship, your last day farewell party, joining the big company with a fat pay, how you sold the company's products etc., etc., though interesting to read but it leaves a mark of sadness in the heart. Had you not been a homosexual, this post would have received lot many comments.

  பதிலளிநீக்கு
 28. appreciate the thought, mohan. thank you for 'reading the entire' story - in itself a fine gesture.

  பதிலளிநீக்கு
 29. மகரயாழை அருமையா வாசிச்சி இருக்கீங்க, ஒரு கட்டையில் (monotinic) இருந்து எட்டு கட்டை (Octatonic) வரை வாசிச்சி இருக்கீங்க, நான் ரசித்தேன்... எனக்கு இது மறதியாழ் - ஆழ்ந்த மனதில் மறந்து கிடந்த பலவற்றை மீட்டியது.

  பதிலளிநீக்கு


 30. // சாத்தியமற்றக் கற்பனைகளைத் தேவையான நிஜங்களாக ஏற்கும் பக்குவமும் சாத்தியமுள்ள நிஜங்களை தேவையற்றக் கற்பனைகளாகப் புறக்கணிப்பதன் முரணும் மட்டும் புரிந்துவிட்டால் மனிதத்தின் சாரம் விளங்கி விடும் (ஆபத்து இருக்கிறது :)//

  சாத்தியமுள்ள தேவையான கற்பனைகளை நிஜங்களாக்கும் உத்தி மானுடனுக்குப் போகப்போக புரிகிறது என்பது
  ஒரு இன்டெலெக்சுவல் பரிணாம வளர்ச்சி என இருந்தாலும் , அவற்றினைச் சாத்தியப்படுத்தும் துணிச்சல் சிலரிடம் தான் இருக்கும் போல் தோன்றுகிறது என்று தான் சொல்லவேண்டும்.

  அது கிடக்கட்டும்... எனக்கு ஒரு சந்தேகம் ஸார்.

  கோல்ஃப் வருவதற்கு முன்னாடியே ஆர்செரி வந்துவிட்டதா ?

  ஒலிம்பிக் விளையாட்டுகளிலே ஆர்செரி ரூல்ஸ் புரிவதே கடினம்.
  அதை விளையாடுகிறார்கள் என்றால் உண்மையிலேயே
  கில்லாடி தான் சாரே....

  இன்னொரு தரம்.. அது கிடக்கட்டும்.

  மோஹன் பரோட்டா ஸாருக்கு பதில் சொல்லும்பொழுது இது கதை தான் அப்படின்னு கன்ஃபர்ம் பண்ணியிருப்பதை
  பார்த்தேன். ( நிஜத்தைப் புறக்கணிப்பதில் இருக்கும் முரண் புரிந்தால் மனிதத்தின் சாரம் ஆபத்து இருக்கிறது ._)

  இந்த மனிதத்தின் சாரம் என்னும் டெர்மினாலஜியே ஒரு காக்னிடிவ் டிஸ்ஸொனன்ஸ். ஒரு தனி மனிதன் அனுபவிக்கும் சுக துக்க அனுபவ நிலைகளை அப்படியே இன்னொருவனுக்கு எடுத்துச்சொல்லவும் முடியாது.
  அந்த இன்னொருவன் புரிந்துகொள்ளவும் முடியாது. ஜாங்கிரி ஸ்வீட். ஸோ இஸ் ஸ்பெஷல் மைஸூர் பாகு.
  எது எனக்கு ரொம்ப பிடிக்குமோ அது எல்லோருக்கும் அப்படியே இருக்கும் என நான் நினைப்பது , அதாவது
  தட் பப்ளிக் பர்செப்ஷன் ஷுட் பி டாலியிங் வித் மைன் , சரியா என நீங்கள் தான் சொல்லவேணும்.

  ஸம் டைம்ஸ், தான் எடுத்த நிலைகளில் அடம் புடித்துக்கொண்டு மத்தவங்க அட் லீஸ்ட் அதை ஒரு கான்செப்ட் லெவல் லிலே
  ஆகவாவது ஒப்புக்கொள்ளவேண்டும் என நினைப்பதே ஒரு ஸைக்கிக் அபெரேஷன் என்று நினைப்பது உண்டு.
  யாரையும் குத்தம் சொல்ல முடியாது. எல்லாமே அந்த செரோடினின் பண்ற கூத்து.

  ஸார் ! ப்ளீஸ் ரிலாக்ஸ்.


  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 31. பெயரில்லாமே 29, 2013

  இந்தக் கதையில் வரும் ஆண்-ஆண் காதலையும் உறவையும் ஆபாசமென்றோ விரசமென்றோ கருதவில்லை.. You have justified them clearly/intentionally by showing that they kept their relation out of their professional needs.. as if it was a love born out of personal choice/liking and not out of professional advantage.. the guy otherwise being shrewd enough to maintain his contacts (for example, Sharmila Mukerji) for future benefits..

  ஆனால் எனக்குப் பரிச்சயமற்ற கதைக்களன் என்பதால் ஒட்ட முடியவில்லை.. இதுவே ஆண்-ஆண் நட்பு, பெண்-பெண் நட்பு, ஆண்-பெண் நட்பு அல்லது ஆண்-பெண் காதல் என்று விரிந்திருந்தால் ஒட்டியிருப்பேன்..

  இந்த உறவு ஒரு கற்பனை என்றும் அறிந்த/வாழ்ந்த பின்புலத்தில் கதாசிரியரால் ஒட்டவைக்கப்பட்டுள்ளது என்றும் தோன்றுகிறது.. could be experimental trying to depict/explain the love in a homosexual relation.. அதனாலும் ஒரு விலகல் ஏற்படுகிறது.. கதையை இவ்வாறாக வாழ்ந்த ஒருவர் எழுதியிருந்தால் இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக்க முடியலாம்..

  நன்றி..
  தென்றல்

  பதிலளிநீக்கு
 32. நசிகேத வெண்பா என்ற அமர காவியத்தை எழுதிய அப்பாதுரைக்கு இது போன்ற குப்பையை எழுத வேண்டிய அவசியமே இல்லை என்று நினைக்கிறேன். மன்னிக்கவும். என்னால் ரசிக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு