2011/03/19

சுசுமோ
முன் கதை 1


***
"சத்யேந்த்ர போஸ்" என்றார்.

"யார்?" என்றேன்.

"எங்க நாட்டு" என்றார். பிறகு நிதானித்து, "இந்திய விஞ்ஞானி. அவரோட உழைப்பால இந்த மாதிரி கூடு பாயுற முயற்சியெல்லாம் நடைமுறைக்கு வந்திருக்கு" என்றார்.

"ஓகே" என்றேன். என்னவோ சொல்கிறார். உற்சாகத்தைத் ஒடுக்க விரும்பவில்லை. இருந்தாலும் என் அவசரம் எனக்கு. "எனக்கு உதவி செய்வீங்களா?" என்றேன்.

"சுசுமோ பத்தி சொல்லுங்க" என்றார், நான் சொன்னதைக் கவனிக்காதது போல்.

***
EH எல்லையைத் தாண்டியும் EM radiation பரவி வேலை செய்வது விசித்திரமாக இருந்தது. என் அறிவும் உணர்வும் இயங்குவது புரிந்தது. இருந்தாலும் இலேசாக உணர்ந்தேன்.

***
நேரம் காலம் என்று புலம்பியதன் முட்டாள்தனம் புரிந்து அடங்கினேன். தியா சொல்படிக் கேட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. இந்த எண்ணங்களையும் திரட்டுகிறாளோ? அடங்கினேன். அமைதி அச்சமூட்டியது.

எத்தனை நேரம் அப்படி இருந்தேனோ.. மறுபடி நேரம் என்கிறேனே? 'கார்கி' என்று ஒலித்ததும் சுதாரித்தேன்.

"கார்கி" என்றேன்.

"நான் உனக்கு உதவி செய்யத் தீர்மானித்திருக்கிறேன். அதிகம் பேச முடியாது, அதனால் கவனமாகக் கேள்"

"உன்னை எப்படி நம்புவது?"

"உன் இஷ்டம், உன் நஷ்டம். நேரமில்லை, சொல்வதைக் கேள்"

"சொல்"

"தியா சொன்ன static விவகாரம் அத்தனையும் உண்மை. அதில்தான் உனக்கும் ஊர் திரும்ப ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஒரு ஓசையை trap செய்தோம். அடிக்கடி வருகிறது. உன் அண்மையில் பூமி நேரப்படி அரைமணிக்கொரு முறை வருகிறது. குறித்துக் கொள். நைலான் கயிறு. குறிச்சொல்லாக இருக்கலாம். தேடிப் பார்த்த பொழுது"

***
"விவரமாகச் சொல்" என்றான். அவன் தன் மனதின் வேகத்தைக் குரலில் அடக்கியதைப் புரிந்துகொண்டவள் போல், "hold your g.force, boy" என்றாள் தியா.

"நீயும் நானும் சேர்ந்து உலகத்தையே கைக்குள் போட்டுக்கொள்ள ஒரு வாய்ப்பு. we need an anchor.. an..an.. illusion-proof proof. that's where you come, my kitkat" என்றாள். "எத்தனை நாள் சாதா டெல்போ செய்து காலத்தை ஓட்டுவாய்? onto something space shattering here. டெல்போ எல்லாம் பிசாத்து" என்ற அவள் குரலில் புதைந்திருந்த வேகத்தை அவனும் புரிந்துகொண்டான். "சொல்" என்றான்.

"உன்னைத் துண்டு போட்டு பல இணையுலகங்களுக்கு ஒரே நேரத்தில் அனுப்பப் போகிறேன்" என்றாள். "who knows? you may uncover the ultimate secret. the holy grail. eternal presence of mind. மனிதர்களின் வெவ்வேறு கால உருக்கள் இணையுலகங்களில் நடமாடுவது பற்றிய theory நமக்குத் தெரியும். தியரி வெங்காயத்தை உரித்துப் பார்ப்போமே? நூறு வருஷங்களுக்கு மேலாக இதைப் பற்றிய நிழல் ஆராய்ச்சிகள் நடப்பதும் நமக்குத் தெரியும்" என்று அவனருகில் வந்தாள். அவள் பார்வையின் தீர்க்கத்திலும் குரலிலும் புலப்பட்ட உறுதி அவனை உலுக்கியது. காதருகே நெருங்கி, "மனித மூளையின் கதிர் வீச்சு காலம் கடந்து, பரிமாணம் கடந்து, பரவுவதை அளக்கவும் நிரூபிக்கவும் இந்தச் சிறப்பு டெல்போ உதவும். அதை நிரூபிக்க நீ உதவப்போகிறாய். நீயும் நானும் கூட்டு" என்று கிசுகிசுத்தாள். அண்மையில் கண்ணாடிப் பெட்டி போல் தெரிந்த ஒன்றைச் சுட்டினாள்.

"உன் திட்டம் என்ன?"

"உன் அணுக்களைக் கூறு போட்டு இணையுலகங்களுக்கு அனுப்பி.. அங்கே உலவும் நினைவலைகளை.. ஒலியலைகளை.. whatever the fuck form it is.. நீ எதிர்கொள்ளும் அத்தனை அனுபவங்களையும் இங்கே பதிவு செய்யப் போகிறேன். நாங்கள் செய்த சோதனைகளில் திடுக்கிடும் சில உண்மைகளைக் கண்டோம். சோதனைகளை விரிவாக்க விரும்புகிறோம். with a real person. real travel. real tracking. we want you to experience it first hand. be the horse. யார் கண்டார்கள்? ஒரு வேளை நீ கொலம்பசின் அலைகளைக் கூடச் சந்திக்கலாம். it's gonna be a thrill ride" என்றாள்.

"எப்படி அனுப்பப் போகிறாய்? what pushes me past event horizon?"

"in time, ecstasy.. in time. முதலில் உடல்நலப் பரிசோதனை. vitals" என்றபடி அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியைச் சாய்த்துப் படுக்கையாக்கினாள். எதிரிலிருந்த டேஷைத் தட்டி இயக்கினாள்.

***
சிரிப்பது போல் தோன்றியது. "is it amusing?" என்றேன், என் நிலையின் நகைச்சுவை புரியாமல்.

"சிற்றின்பமே பேரின்பத்துக்கு வழினு சித்தர் வாக்கு நினைவுக்கு வந்தது.. உங்க state transfer உத்தியைக் கேட்டதும்.. அதான். உங்க நிலையைப் பரிகாசிக்கவில்லை" என்றார்.

அவர் சொன்னது சுத்தமாகப் புரியவில்லை. இருந்தாலும், "பழையபடி சிற்றின்பத்துக்கு வழி சொல்லியிருக்கிறாரா சித்தர்? அதைச் சொல்லுங்கள். please help me" என்றேன். "i need to return. my shell's shutting". இந்த நிலையில் கெஞ்சக்கூட முடியவில்லை. emotionless.

"என்னால் முடிஞ்ச உதவியை செய்றேன். இப்படித்தான் காயத்ரினு ஒரு"

***
மேகம் போல் பரவிக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் கிரகித்தபடி என் தொடர்புக்குக் காத்திருந்தேன். ஒலியலைகள். திடீரென்று கேட்டது. "கார்கி. கமின் கார்கி" என்ற ஒலி கேட்டது. குறிச்சொல்! "கார்கி" என்றேன்.

கொஞ்சம் அமைதி. கொஞ்சம் கூச்சல். பிறகு, "vitals check. நீ இணையுலகத்தில் இருக்கிறாய். வாழ்த்துக்கள். கார்கி" என்றது குரல். பின்னணியில் குதூகலம் ஒலித்தது. "wet kisses from தியா" என்றது.

"my shell" என்றேன்.

"நல்ல காதலி பிடித்தாய் போ! அலறித் துடித்து நிறையப் பயந்தாள். சரியான சமயத்தில் நீ சிலையானதும் பாவம், என்ன செய்வாள்? EH கடந்த பத்து நொடிகளில் உன் ரூமுக்கு வந்து விட்டோம், முரட்டுக் காதலரே" என்றாள். சிரிப்பு கேட்டது. "விவரம் தெரிந்தும் நீ உடனே விவகாரத்தில் இறங்குவாய் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு மணி நேரத்தில் நாலு தடவையா? that pushed you past EH"

"eve flow rate normal" என்றது கார்கி குரல்.

மறுபடி தியாவின் குரல். "உன் உடலை உடனே கொண்டு வந்து விட்டோம். your shell is fine. கவலைப்படாதே, என்னிடம் பத்திரமாக இருக்கும்...". கவலைப்படாதே என்ற தியாவின் குரலில் என்னவோ பயமுறுத்தியது. கவலைப்பட்டேன்.

***
"சுசுமோ... எப்படிச் சொல்வது? ஒரு சிறு இயந்திரம்" என்றேன். அவர் கேட்கிறாரா என்பது தெரியவில்லை. தொடர்ந்தேன். "சுருக்கமாகச் சொல்வதானால் poppy seed சைசில் ஒரு சின்ன lateral accelerator" என்றேன். "இணையுலகக் குதிரை. ஒளியை விடப் பலமடங்கு அதிகமான வேகம் பிடிக்கும் பொழுது பக்கவாட்டில் பயணம் செய்ய முடிகிறது. நுண்ணணுக்களை ஒரே நேரத்தில் பல இடங்களில் எறிந்தும், எறிந்த இடத்துக்கேற்றபடி மறுமுனையில் சேர்த்தும் தொடர்ந்து கண்காணிக்கிறது சுசுமோ. வந்த வேலை முடிந்தவுடன் பழையபடி அணுக்களைச் சேர்த்து உருவைக் கொண்டு வருகிறது. விளக்குவது சுலபம்.." என்றேன்.

"எப்படிக் கண்காணிக்கிறார்கள்?"

"old school. electromagnetic radiation. மூளை, பேச்சு, மூச்சு மூன்றிலிருந்தும் வெளிவரும் அலைகளைக் கண்காணிக்கிறார்கள். ectoplasm பரவலை வைத்து இணையுலக நடமாட்டத்தைக் கவனிக்கிறார்கள்."

"கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. EM radiation சரி. eveம் சரி. state transfer... மனித உலகிலிருந்து விலக வைத்த ஆதார நிகழ்ச்சியை"

***
எதிரில் தெரிந்த டேஷ்போர்டைக் கவனித்த தியா, "vitals, go" என்றபடி அவன் சோல்பேட்ச் தாடியை நிமிண்டினாள். "lover... are you ready for the thrill of your life, or, shall we say.. not life?" என்றாள். கண்ணாடிப் பெட்டியை எடுத்துக் காட்டினாள். இரண்டங்குலப் பெட்டிக்குள் பஞ்சுப் படுக்கையில் கால் சென்டிமீடருக்கும் குறைவாக ஒரு சிறிய குப்பி. குப்பிக்குள் கரும்புள்ளி போல் ஏதோ தெரிந்தது. "சுசுமோ.. pimple size particle accelerator and state transmitter" என்றாள்.

"எனக்குத் தெரியாததைச் சொல். என் நேரத்தை வீணாக்குகிறாய்" என்றான். "என் கம்பெனி தயாரிக்கும் டெல்போக்களிலும் இதே நுட்பம் தான்".

"agreed. ஆனால் எங்கள் டெல்போ event horizon தாண்டியும் ஒழுங்காக வேலை செய்யும். வெடித்துச் சிதறி ஆளைப் பஸ்பமாக்காது" என்றாள். அதிர்ந்தான். அவன் கம்பெனி டெல்போவின் குறையை எப்படியோ கண்டுபிடித்திருக்கிறாளே கிராதகி!

"எப்படி நம்புவது? test data உண்டா?" என்றான்.

"உன்னையே அனுப்பி அசல் அனுபவத்தை பதிவு செய்யலாம்னு பாத்தா test dataனு இப்பத்தான் வயசுக்கு வந்தாப்புல பேசுறியே?"

உண்மை புரிந்து திடுக்கிட்டான். "நானா? இணையுலகப் பயணமா?" என்றான்.

"yes, why not? you're a maverick genius. உனக்கு இதில் இருக்கும் ஆர்வமும் அறிவும் வேகமும் எனக்கு நன்றாகத் தெரியும். just imagine, sugar. உன் அசல் பயண அனுபவத்தை விட இந்த டெல்போவுக்கு வேறென்ன testimony வேண்டும்? இரண்டு பேருக்குமே ஆதாயம். என்ன சொல்கிறாய்?" என்றாள். ஒரு காலை உயர்த்தி அவன் இடுப்பருகே நிறுத்தி அசைத்தாள். பட்டாம்பூச்சியின் சிறகு தொடையில் தெரிந்தது.

"மேலும் சொல்" என்றான்.

***
i am stranded. என் நிலைமை புரியத் தொடங்கியது. சலித்தேன். ஆத்திரம் வந்தாலும் இலேசாகவே உணர்ந்தேன். எப்படித் திரும்புவது? யாருக்கு செய்தி சொல்லி உதவி பெறுவது? நைலான் கயிறு சொன்ன ஐடியா நினைவுக்கு வந்தது. என் எண்ணங்களையும் அனுபவங்களையும் பதிவு செய்யத் தோன்றியது. இந்த அலைகள்... எண்ண அலைகள்.. ஒலியலைகள் நிரந்தரம். விட்டு விட்டு நினைவுக்கு வந்ததைச் சொல்லத் தொடங்கினேன். யாராவது அலைகளைப் பிடிக்க மாட்டார்களா? இன்னொரு பரிசோதனை. இன்னொரு இடியட்? இன்னொரு தீரன்?

அவர் உதவிக்கு வருவார் என்ற நம்பிக்கை மெள்ளக் குறையத் தொடங்கியது. பொய் சொல்லியிருக்கலாமோ?

அரைகுறையான தகவலுடன் பாதியில் வெட்டுப்படும் அலைகள் வேறு. சலித்தேன். fucked, obliterated and stranded.

***
தியாவின் குரல் தெளிவாகக் கேட்டது.

"உன் eve flow கண்காணிக்கும் பொழுதும், உன் குரலை பதிவு செய்யும் போதும் நிறைய static புலப்பட்டது. பிரித்து ஆராய்ந்த போது get this சில அலைகள் பிரமிக்க வைத்தன. இங்கிருந்த எண்ண அலைகளின் காலம் கடந்த பரவலா அல்லது இன்னொரு பரிமாணத்தில் தொடரும் எண்ணங்களா தெரியவில்லை.. எப்படியிருந்தாலும் stunningly serendipitous"

"என்ன சொல்கிறாய்?" என்றேன்.

"voices, lover! நாம் எதிர்பார்த்ததை விட potent discovery! உன் நடமாட்டத்தையும் குரல்களையும் பிரிக்கையில் பின்னணியில் கேட்டதை ஒலியலைகளாய் மாற்றி map செய்து பார்த்ததில் get this மோகன்தாஸ் காந்தியிலிருந்து ஹீத் லெட்ஜர் வரை தெரிந்த ஒலியலைகளுடன் பொருந்துகிறது. you might be among them.. or, among them waves"

"brilliant! உனக்குத் தேவையானதற்கு மேலேயே கிடைத்துவிட்டது. get me back" என்றேன் உற்சாகத்துடன்.

"not yet. நீ அங்கே இருந்தால் தான் எனக்கு லாபம். i want you to help us trap substantiating traces. dig the discovery. ஏதாவது குறிச்சொல் வைத்து, கென்னடி கார்ல் சேகன் போல் யாருடைய அலைகளையாவது சந்திக்க முடியுமா பார். கார்கியை குறிச்சொல் தேடச் சொல்லியிருக்கிறேன். you will get the data soon" என்றாள்.

"தியா.. பூமிக் கணக்கில் பத்து நிமிடத்துக்குத்தான் நான் ஒப்புக்கொண்டேன். i want back" என்றேன். முதல் முறையாகக் கலங்கினேன்.

"no way. இத்தனை செலவு செய்து உன்னை அனுப்பி பத்து நிமிடத்தில் ஒன்றும் பிடுங்க முடியாது. உனக்கே தெரியும். listen, you are doing great work. நான் சொன்னபடி கேள். we need a transcending contact. யாராக இருந்தாலும் பரவாயில்லை. கிடைத்ததும் பதிவு செய்வோம். உடனே நீ திரும்பிவிடலாம்" என்றாள். அக்கறையாகச் சொன்னாலும், அவள் குரலின் தீர்மானம் என்னை உலுக்கியது.

"if i don't?"

"don't be silly" என்றாள். நிதானமாக, "..you will, you have to" என்றாள். கணம் விட்டு, "என் சொல்படி நட. இல்லாவிட்டால் உனக்குத்தான் தொல்லை. i can destroy your shell. you'd be stranded forever. nobody knows. உன் காதலி வாயே திறக்கமாட்டாள். எனக்கு எல்லாம் தெரியும் darling" என்றாள்.

"தியா.. let me back you bitch. கார்கி, please!"

"i will. எனக்குத் தேவையானது கிடைத்ததும்" என்றாள்.

***
வரு ►►

14 கருத்துகள்:

 1. அப்பாஜி! அற்புதம்... எவ்ளோ விஞ்ஞான விஷயங்களை போட்டு கலந்துருக்கீங்க.. Electro Magnetic Radiation பிச்சுகிச்சு படிக்கும்போது படிச்சது... அப்புறமா இப்ப உங்க கதையில தான் அந்த வார்த்தைகளை பார்க்கிறேன்... டச்சு விட்டு போச்சு.. ;-)))))

  பதிலளிநீக்கு
 2. முதல் பகுதியையும் இப்போது தான் வாசித்தேன். ரெம்பவும் மாறுபட்ட ஒரு அனுபவம்.

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமான பகிர்வு அப்பாஜி.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. இரண்டு பதிவும் இப்பத்தான் வாசிச்சேன் அப்பாஜி.ஏதோ ஒரு புது உலகமா இருக்கு.என்னமோ எல்லாம் சொல்றீங்க !

  பதிலளிநீக்கு
 5. முதல் பாகம் புரிந்ததால் மிகவும் ரசிக்க முடிகிறது. வித்யாசமாய், சுவாரசியாய் தொடர்கிறது. தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லாமார்ச் 20, 2011

  என்னவொ நடக்குது மர்மமா இருக்குது
  ஒண்ணுமே புரியலே உலகத்திலே.

  பதிலளிநீக்கு
 7. பிரமிக்க வைக்கும் விதத்தில் கொண்டு செல்கிறீர்கள்...சுசுமோ வில் ஒரு சு சுஜாதாவா...!

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லாமார்ச் 21, 2011

  //Electro Magnetic Radiation// oho! idhu தான் EMR groupaa :)) Superb Appaji!

  muthalil படித்தேன், puriyavillai. etharkku என்று சில paravai vittu vittum படித்தேன். piragu appajiyin என்ன alaigalai karpanitthu payanithen. Ambowwww!! :))

  //என்னமோ எல்லாம் சொல்றீங்க !// அப்படி இல்லைங்க சார், என்neன்னமோ, எல்லாம் என் என்னமோ!!? என்று எல்லாம் sollugindrar Appaji. Nanum தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லாமார்ச் 21, 2011

  ஒன்று mulutum kol indrel mulumayaai kol என்று serthu மற்றும் pirithu parkindrathu தங்களின் pathivu.

  பதிலளிநீக்கு
 10. வாங்க RVS, தமிழ் உதயம், புவனேஸ்வரி ராமநாதன், ஹேமா, meenakshi, ஸ்ரீராம், ...

  ரசித்தமைக்கு நன்றி.

  பெயரில்லா கமென்டுகள் மூணுமே மர்மமா இல்லே இருக்கு?

  பதிலளிநீக்கு
 11. RVS.. பிச்சுகிச்சு இப்பத்தான் புரிஞ்சுது. ரெண்டு நாளாச்சு.

  பதிலளிநீக்கு
 12. ஸ்ரீராம்.. உங்களுக்கென்று தோன்றுகிறது பாருங்களேன்?
  >>>ஒரு சு சுஜாதாவா...!

  பதிலளிநீக்கு
 13. என் மரமண்டைக்கு கொஞ்சமா புரிஞ்சா மாதிரி இருக்கு. ஆகா ஓகோ சூப்பர் அப்பாஜி (இங்க்லீஷ் படம் பார்க்கும் போது எல்லோரும் சிரிக்கும் போது நாமும் சிரிப்போம் - அப்படித்தான்)

  பதிலளிநீக்கு
 14. :) சிவகுமாரன்! நானும் உங்க கட்சி தான்!

  பதிலளிநீக்கு