2011/03/30

சுசுமோ




முன் கதை 1 2


***
"கார்கி" என்றேன். ஆத்திரம் வந்தது. "our deal?"

"i know. and i am sorry. தியா reverse keyஐ என்னிடம் தரவேயில்லை. உன் கூட்டை cryoவிலிருந்து எடுக்கச் சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டாள். she doesn't dig you anymore. நான் தான் மறுபடியும் எல்லாம் பொருத்தி உன் கூட்டைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். but without a reverse key உன்னைத் திருப்ப முடியாது"... சிறிது அமைதிக்குப் பிறகு... "unless" என்றான்.

"என்ன?"

"shrodinger-everett hypothesis" என்றான். "இணையுலக வாயில்கள் குறியொலி வைத்துக் கடக்கப்படுவதாகத் தியரி".

"i know that. அதற்கும்..?"

"அங்கிருக்கும் அலை ஒன்று, பூமி என்கிற இந்த இணையுலகத்துக்கு வந்து போவது தெரிந்தால் அதை வைத்து நீயும்.."

"crossportal transit?"

"yes"

***
"வாடகைக்கு வாங்கின சுகசொப்பனம்" என்றார்.

"என்ன சொல்கிறீர்கள்?" என்றேன்.

"சுசுமோ பத்தி நீங்க சொன்னதைச் சொல்றேன்" என்றார். நிதானித்து, "இருந்தாலும் பயணத்தைத் தொடங்க ஒரு நிகழ்வு..ஒரு உந்துதல் வேணுமே?" என்றார்.

"இதயத் துடிப்பு நிற்கும் போது.. let me rephrase it.. இதயத் துடிப்பு துள்ளி மெய் மறக்கும் போது பயணம் தொடங்குகிறது. இதயத் துடிப்பு துள்ளி மெய் மறக்கும் தருணங்கள் இரண்டு. ஒன்று தும்மல். இன்னொன்று"

"தெரியும்" என்றார்.

"என்னுள் சுசுமோ செலுத்தப்பட்டக் கொஞ்ச நேரத்தில், என் காதலியுடன் முரட்டான தொடர் கலவி செய்தேன்" என்றேன். அவர் சிரிக்கிறாரா என்ன?

***
"சார்! ஹலோ! please!" என்றேன். பதிலேயில்லை. தொலைத்து விட்டேன். எத்தனை நாள் நேரம் காலம் அப்படி இருந்தேனோ? முடிந்த போதெல்லாம் நைலான் கயிறையே நினைத்தேன். சொன்னேன். திரும்பி வருவாரா? என்னுடைய ஒழுக்கச் சிக்கலைப் பெரிது படுத்தி கோபம் கொண்டாரோ? why?

***
தியா அவன் மேற்சட்டையை விலக்கி, அவன் வயிற்றில் மென்மையாக அழுத்தினாள். "சுசுமோவை உன் உடலில் செலுத்தப் போகிறோம். ரத்த நாளங்களில் பயணம் செய்து internal cartoids அடைய பத்து நொடிகள் ஆகும் என்று நினைக்கிறோம். we'll dock at circle of willis, barring unforeseen circs. அங்கே சுசுமோ ஒரு control base ஏற்படுத்தும். அங்கிருந்து உன் event horizonஐக் கண்காணிக்கும்; நீ இணையுலகம் சென்றதும் உன் அலைகளைக் கண்காணிக்கும்; eve மற்றும் EEG, EMR கண்காணிப்புக்கு வசதியாகும். இணைந்திருக்கும் status transmitter உன் உடல்நிலையைக் கண்காணிக்கும், குறிப்பாக cerebral blood flow. ஏதாவது அசம்பாவிதம் என்றால் உடனே தெரியப்படுத்தும். கவலைப்படாதே, உன்னைப் பூ போலக் கவனிப்போம். ஒரு ஆபத்தும் வராது. கார்கி EEG EMR வித்தைகளில் புலி" என்றாள்.

"ஆபத்து வராது என்று எப்படிச் சொல்கிறாய்? and, no offense, who the fuck is கார்கி?" என்றான்.

அருகே வரும்படி யாருக்கோ சைகை காட்டினாள். பெரிய தொப்பையோடு வந்தவன் தியாவின் தொடையையே பார்த்தபடி நின்றான். "meet கார்கி" என்றாள் தியா. "கார்கி உன்னுடைய pilot. நீ இணையுலகம் சென்று திரும்பி வரும்வரை உன்னைக் கண்காணிப்பான்" என்றாள். கார்கி இன்னும் தியாவின் தொடையிலிருந்து பார்வையை விலக்கவில்லை.

"பாத்துப்பா கார்கி. முழுங்கிடப் போறே" என்று சொல்லத் தோன்றினாலும் பொறுத்து, "மேலும் சொல், தியா" என்றான்.

"கார்கியின் உடலுக்குள் ஒரு சுசுமோவை செலுத்தி ஒரு வாரத்துக்கு மேலாகிறது. he is perfectly fine and normal. பார், ஒரு ஆபத்துமில்லை. சாதாரணமாக இயங்குகிறான்" என்றாள். கார்கியைப் பார்த்து, "when did you have sex last?" என்றாள். "காலையில்" என்றான் கார்கி. "see?" என்றாள் தியா. முழங்காலின் பளிங்கு வயிற்றில் வழுக்கியது. அவன் முகத்துக்கு நேரே குனிந்து, "relax, ஒரு ஆபத்துமில்லை. கார்கியினுள் இருக்கும் சுசுமோ, உன் உடலில் புகும் சுசுமோவுடன் உரையாடும். communication map செய்ய ஒரு குறிச்சொல் தேவை. how about கார்கி? கார்கி தான் உன் குறிச்சொல்" என்றாள்.

***
சொன்னேன். "என்னை மன்னியுங்கள். உங்களுக்கு என் செய்கை மன வருத்தத்தைத் தருமென்று நினைக்கவில்லை" என்றேன்.

"மன வருத்தம் எதுவுமில்லை" என்றார். "மனம்னு எதுவும் இல்லையே இப்ப?" மறுபடி சிரிப்பது போல் பட்டது.

"உதவி செய்கிறேன். உங்கள் private indiscretions are not my business. உங்களோடு பேசியதில் எனக்கும் இதில் ஒரு ஆர்வம் வந்து விட்டது. என்னுடைய portal anchor சமீபத்தில் வருகிறது. கூட்டிலிருந்து கடந்தபின் குறிப்பிட்ட இடைவெளிகளில் crossportal கடக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஜனங்கள் என்னை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்களா என்று பார்க்க எண்ணமிருக்கிறது. i might enter the crossportal. என்னுடைய key வைத்து நீங்களும் உடன் வரலாம். உங்களுக்கு வேலை செய்யுமா தெரியாது. ஆனால் இப்போதிலிருந்து you need to synchronize with my wave" என்றார்.

"வேலை செய்யாவிட்டால்?"

"ஒண்ணு செய்யலாம்" என்றார். "நீங்க சொன்னதை வச்சு முடிஞ்ச வரை செய்தியனுப்பப் பாக்கறேன். இப்பல்லாம் நிறைய abandoned blogs இருக்கு. சில சமயம் நான் கூட anonymous பின்னூட்டம் போடுறேன். எதுலயாவது உங்க நிலமையை comment போடலாம்" என்றார். "படிச்சு யாராவது"

***
"கார்கி, உன் உதவியை மறக்க மாட்டேன்."

"பேசாதே" என்றான். "திரும்பிய பின் பார்த்துக் கொள்ளலாம். தயாரா?"

***
"இன்னும் சொல்லவில்லையே? what pushes me past EH?" என்றான்.

"ரத்த ஓட்டம் மிக அதிகமாகும் போது. இதயத்துடிப்பு துள்ளும் போது. ஒன்று sneeze; இதயத் துடிப்பு துள்ளுவதோடு ரத்த ஓட்டமும் சாதகமான வேகம் பிடிப்பது during orgasm" என்றாள்.

"ஹேய்.. அது என்னோட.." என்றவனின் உதடுகளை இடது கை விரல்களால் அழுத்தினாள். "right.. உன்னுடைய ஐடியாவைத் தான் பயன்படுத்தியிருக்கிறோம். patent infringement என்று வம்பு செய்யமாட்டாய் என்று நம்புகிறேன். உன்னுடைய ஐடியாவை நாங்கள் உருப்படியாகச் செயல்படுத்தியிருக்கிறோம். அது தான் முக்கியம். win win. உன் இதயத் துடிப்பு வேகமாகி உச்சத்தில் துள்ளும் பொழுது you reach event horizon. இதயத் துடிப்பு துள்ளிய கணம் உன் அணுக்களைத் துண்டு போடுவோம். அந்தக் கணத்திலிருந்து உன் இணையுலகப் பயணம் ஆரம்பம்" என்றாள்.

அவன் எதுவும் சொல்லவில்லை. தன் கண்டுபிடிப்பின் பயனில் பெருமையடைந்தான். உள்ளுக்குள் வேகம் அதிகமாவதை உணர்ந்தான். 'i am a sexy beast!'.

"EH கடந்த கணமே சுசுமோ எங்களுக்குச் செய்தி சொல்லும். உன் இருப்பிடத்துக்கு பத்து நிமிடங்களுக்குள் வந்து உன் உடலைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்வோம். பயப்படாதே" என்றாள். "are you ready?"

யோசித்தான். "முதலில் கார்கியுடன் தனியாகப் பேச வேண்டும். i need to get to know him" என்றான்.

"என்ன பேசப்போறீங்களோ? anyway, you lovebirds talk it over. ஐந்து நிமிடத்தில் வருகிறேன். get ready" என்று விலகினாள் தியா. அவனுடைய வயிற்றில் கை வைத்துத் தடவினாள். "hello, woody!" என்றாள்.

அவளையே பார்த்தபடி, பேசக் காத்திருந்த கார்கியின் கண்களில் ஏக்கமும் வஞ்சமும் இருந்ததைக் கவனித்தான்.

***
"get ready, i have been tuning" என்றான் கார்கி. "response வருகிறது. சீக்கிரம்" என்றான்.

தயங்கினேன். "now, now, now!" அவசரமானான் கார்கி.

மெல்ல "நைலான் கயிறு" என்றேன். விசித்திரமாகப் பட்டது. எங்கேயோ போய், ஏதோ சொல்கிறேனே? என் மேல் எரிச்சலாக வந்தது. எதுவும் நிகழவில்லை. ஒரு வேளை அடையாளம் எங்களைக் காணவில்லையோ? கணம் பொறுத்து "நைலான் கயிறு" என்றது. சட்டென்று நினைவுக்கு வந்தது. wave synchronization latency! அடையாளம்! "நைலான் கயிறு" என்றேன் உற்சாகத்துடன். எதுவாக இருந்தாலும், இன்னொரு அலையுடன் உரையாடுகிறேன் என்ற புத்துணர்ச்சி என் பரிதாப நிலையைக் கூட மறக்கடித்தது! "நைலான் கயிறு!" என்றேன் மறுபடியும். "can you hear me?"

அமைதி. அமைதி. what seemed eternal அமைதி. பிறகு "yes" என்றது.

***
"தியா. நீ கேட்டதற்கு மேலேயே கிடைத்து விட்டது. இன்னொரு அலையுடன் தொடர்பும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டேன். என்னைப் பழையபடி திருப்பு"

தியா சொன்னதைக் கேட்டு நிலைகுலைந்தேன். "உன்னால் எனக்கு ஒரு பயனுமில்லை இங்கே. அங்கேயே இரேன்? உனக்கென்ன குடும்பமா குழந்தையா குட்டியா? besides, let's make this repeatable" என்றாள்.

"i won't cooperate" என்றேன். "உன்னால் முடிந்ததை செய்து கொள்". என்னால் பொறுக்க முடியவில்லை. திரும்பியதும் அவள் மென்னியை முறிக்கப் போகிறேன்.

"nice working with you" என்றாள். nonchalant! what the.. திடீரென்று தள்ளப்பட்டது போல் இருந்தது. தொடர்புகள் அறுந்தனவா? தியா ஏதாவது செய்தாளா? "தியா! கார்கி!" அலறினேன். பதிலில்லை. அலைக்கூச்சல்.

okay.. இனி தியாவுக்குச் சந்தேகம் வராதபடி நடக்க வேண்டும்.

***
"எல்லாமே அலைகள்" என்றார். "some are vestiges of physical existence, some are metaphysical" என்றார் பழுத்த ஆங்கிலத்தில்.

"பழக முடியவில்லை. i had a comfortable carbon footprint" என்றேன். என் சொற்களின் irony என்னைப் பாதித்தது.

"என் crossportal key உங்களுக்கு ஒத்தாசையாகுதா பார்ப்போம்" என்றார். "ஒரு சந்தேகம்".

"என்ன?"

"உங்கள் காதலி ஏன் போலீசுக்குப் போகவில்லை? ஏன் வேறு உதவி எதுவும் தேடவில்லை? உடலை அப்புறப்படுத்த அனுமதிப்பானேன்? அவளுக்கு எதுவும் தெரியாது என்றீர்களே?"

"என்னுடைய காதலி, இன்னொருவர் மனைவி" என்றேன். என் சங்கடம் எனக்கே வியப்பாக இருந்தது.

நீ..ண்ட அமைதிக்குப் பிறகு, "மன்னிக்கவும். i can't help the morally delinquent" என்றார். "என்னை இனிமேல்"

***
"portal crossover செய்ததும் புதுக் குறிச்சொல்லைப் பயன்படுத்து. கார்கி2. i will be tracking. குறிச்சொல் கேட்டதும் உன்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடலாம். சுசுமோ மறுபடியும் உன் அணுக்களைச் சேர்க்கும். உன் கூடு பத்திரமாக இருக்கிறது" என்றான் கார்கி.

கார்கியின் உற்சாகம் என்னையும் தொற்றியது. "நைலான் கயிறிடம் சொல்ல வேண்டுமா? courtesy" என்றேன்

***
"பிடித்திருக்கிறதா?" என்றான்.

"என்ன?" என்றான் கார்கி.

"தியாவின் தொடை. விழுங்குவது போல் ஏக்கத்தோடு பார்த்தாயே அதான்"

"நான் தான் பச்சை குத்தினேன்"

"ஓ! nice" என்றான்.

"பச்சை குத்திவிட்டால் என்னோடு படுத்துக் கொள்வதாகச் சொன்னாள். குத்தினதும் மாறி விட்டாள்"

"அழகான, முட்டாள்தன ஏழைப் பெண்களையே நம்ப முடியாது கார்கி. தியா பணக்காரி, புத்திசாலி. i feel your pain. அதனால் தான் உன்னுடன் பேசத் தோன்றியது. let's make a deal"

"என்ன?"

"நான் EH தாண்டியவுடன் தியா ஏதாவது தில்லுமுல்லு செய்தால், you need to bring me back"

***
கதவை உதைத்து உள்ளே வந்தவனைக் கண்டு தியா அதிர்ந்தாள். "you?"

அருகில் வந்து அவளை ஓங்கி அறைந்தான். "yeah, me. bitch is back, you bitch".

தியாவைக் கீழே தள்ளினான். தளர்ந்த skirtஐ அறுத்தான். விக்டோரியா ரகசியம் அம்பலம் என்றது. "hey" என்றாள். "rough eh? i like it" என்றாள். இடுப்பை வெட்டி உயர்த்தினாள்.

"not me" என்றான். அறை வாயிலைச் சுட்டினான். "him" என்றான். வாயிலில் தாடி, தொப்பையோடு சிரித்த கார்கியை உள்ளே தள்ளினான். "yours" என்றான். கதவையடைத்துப் பூட்டினான். வெளியேறினான்.
◉▣



பின்குறிப்பு:
1. அத்தனை பின்னூட்டங்களையும் தொகுத்து பதிவு செய்துவிட்டேன். ஒரு புகைப்படம் கொஞ்சம் X|NC-17|(A) போல் பட்டது. பொதுவில் வேண்டாமென்று தோன்றியது. எனக்கே எனக்கென்று வைத்துக் கொண்டேன்.
2. அத்தனை அனாமத்து பின்னூட்டங்களையும் படிக்கையில் போரடித்து யாஹூவை தூசு தட்டி இணையம் மேய்ந்த போது தூக்கிவாரிப் போட்டது: ஏறக்குறைய பின்னூட்டங்கள் வந்த அதே நேரத்தில் ந்யூஆர்லீன்ஸ் காமிக்-கான் கலைவிழாவில் டிலோரியன் காலஎந்திரம் பற்றியச் செய்தி! பிறகு தேடிப்பார்த்ததில் கலைவிழாவில் களேபரம் பற்றி அறிந்தேன். காலப்பயண தொழில் நுட்பம் காரணமாகத் தகராறு ஏற்பட்டு, உடன் வேலை செய்த பி.எச்டி பெண்ணை யாரோ தாக்கியதாகவும்... எல்லாம் இணையத்தில் இருக்கிறது. குறுகுறுங்குதுடா சாமி.

பின் குறிப்புக்குப் பின்:
1. இந்தக் கதை, நண்பர் பத்மநாபனுக்காக எழுதியது. நட்சத்திரப்பதிவு காலக்கட்டத்தில் சுஜாதா பற்றி ஏதாவது எழுதச் சொன்னார். ஒழியவில்லை. கதையில் சுஜாதா கௌரவ அலை. purists மன்னிக்கவும்; முடியாவிட்டால் பக்கத்து blogல் கவிதை எழுதுகிறார்கள், அங்கே போகவும். கதை சுமாராகவாவது இருந்தால் பத்மநாபனுக்குக் காணிக்கை.
2. அடுத்து பேய்க்கதை ஒன்று எழுதக் கேட்டிருக்கிறார் poefan.


22 கருத்துகள்:

  1. நான் சொன்னது சரிதான் போலேருக்குன்னு சொல்லிப் பார்க்கலாமா, பயமா இருக்கு படிக்கவேன்னு சொல்லலாமா, பாதி புரியவில்லை, தமிழ்ல வந்ததே புரியவில்லை, ஆங்கிலத்துல பயமுறுத்தின டெக்னிகல் வார்த்தைகள் என் சிற்றறிவுக்கு எட்டாம மிரள வச்சுதுன்னு உண்மையை ஒத்துக்கலாமா, அனானி பின்னூட்டங்களை நாங்களும் தொகுக்க ஆரம்பிக்கணுமா, என்ன பண்றதுன்னே புரியாம கையைப் பிசைஞ்சுகிட்டு...."முடிஞ்சிடுச்சா.."

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் அதே கேள்வி: முடிஞ்சிடுச்சா?
    ஆனா வேறே பயம்: பொண்டாட்டியை தொடலாமா, வம்பாயிடுமா? :)

    வித்தியாசமான கதை, அப்பாதுரை. நடுவுல கொஞ்சம் புல்லரிச்சது என்னவோ உண்மை.

    பதிலளிநீக்கு
  3. நானும் ஒரு ரிக்வெஸ்டு போட்டுக்கறேன் அப்பாதுரை: புரியற மாதிரி ஒரு கதை எழுதுங்க அடுத்தாப்புல. :)

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப சயின்ஸ் போயிட்டீங்க.. கூடு விட்டு கூடு பாயறது... ஆனா நல்லா இருந்தது.. நிறைய திடீர்னு அங்கங்க தியா கூட சரசமும்..
    சல்லாபம் வேற..

    "shrodinger-everett hypothesis" parallel universe பற்றி எங்கயோ எப்பயோ படிச்சது...அசத்தல் அப்பாஜி! நாங்கெல்லாம் 'C' சென்ட்டர். நீங்க 'A' சென்டருக்கு படம் எடுக்கறீங்க...

    கார்கி கார்கி2 ... நவீன சித்தர்கள்... மிகவும் ரசித்தேன் அப்பாஜி!

    கடைசியா என் காதுக்கு மட்டும் X|NC-17|(A) அப்டின்னா என்னன்னு சொல்லுங்க ப்ளீஸ். அஞ்சு நிமிஷமா யோசித்தேன். விளங்கலை... ;-))

    பதிலளிநீக்கு
  5. வாசிச்சேன் அப்பாஜி....ஒரே குழப்பமாயிருக்கு.ஒருவேளை அமைதியா பொறுமையா வாசிக்கணுமோ.

    பேய்க்கதை வரப்போகுது.அது பிடிக்கும்.சாதாரணமா எழுதுங்க அப்பாஜி.ரொம்பக் குழப்பாதீங்க.அதுக்கு நடுவில ரிலாக்ஸ் ப்ளீஸ்.ஒரு பழைய காதல் பாட்டு.இன்று ஒரு பாட்டுக் கேட்டேன்.”குபு குபு குபு நான் வண்டில்.ஜிகு ஜிகு நான் இஞ்சின்....”சுவாரஸ்யமா இருந்திச்சு !

    பதிலளிநீக்கு
  6. வாங்க ஸ்ரீராம், ராமசுப்ரமணியன், RVS, ஹேமா,... படிச்சதுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீராம், பயப்படாதீங்க, முடிஞ்சிடுச்சு! சரியா தமிழ் தெரியாம இது போல எழுத ஆரம்பிக்கக்கூடாதுனு புரிஞ்சுகிட்டேன்... kills the flow.. மறுபடியும் பாருங்க!

    பதிலளிநீக்கு
  8. ஹிஹி ராம். எனக்கு புரியற மாதிரி எழுதணுமா, உங்களுக்குப் புரியற மாதிரியா?

    பதிலளிநீக்கு
  9. RVS.. ரசிச்சதுக்கு மிக நன்றி.
    அவை திரைப்படத் தணிக்கை content rating; ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு விதம். (இல்லே.. அந்தப் போட்டோல என்ன இருந்துச்சுனு கேக்குறீங்களா?)

    நேரமும் விருப்பமும் இருந்தா everett படிங்க. சுவாரசியம். புரியாமல் போன ஆயிரத்தில் ஒருவர்.

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம்.. உங்க நசிகேதன் கமென்ட் இப்ப புரிஞ்சுத் (கொஞ்ச் ட்யூப் லைட்)

    இறந்தவங்க கூடு பாயுறாங்கனு ஒரு தியரி நம்ம சித்தர்கள் கிட்டயே இருந்துச்சு (போகன் கேட்டா இன்னும் இருக்குன்னுவாரு). existence is different from matter (shape)னு புரிஞ்சுகிட்டா மரணம் கூட existence without matterனு புரியலாம். (புரியலனா என்னைப் போல் ரெண்டு பெக் சிங்கில் மால்ட் ஸ்காட்ச் அடிச்சுட்டு யோசிங்க, தன்னால புரியும் :)
    ஒரு வேளை life என்பது matter-anti matter விவகாரமோ என்று முன்பெல்லாம் நிறைய யோசிப்பேன் (இப்ப ஸ்காட்ச் வாங்குறதை நிறுத்திட்டேன்).

    மத்தபடி எனக்கும் எதுவும் புரியலை.

    பதிலளிநீக்கு
  11. ஹேமா.. அமைதியா வாசிச்சாலும் அதே தான்! (ஏதாவது உருப்படியா எழுதியிருந்தா தானே?)

    நீங்களும் அதே கட்சி போல இருக்கு - எதுவும் சரியில்லைனா நான் கூட பாட்டு கேட்கப் போய்விடுவேன்.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் எழுத்தை உங்கள் எண்ணத்திலேயே நான் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது பேராசைதான். இருந்தாலும் ஓரளவு புரிந்து கொள்ள முயற்சி செய்து அது புரியும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது, உங்கள் அறிவும் வியக்க வைக்கிறது. எனக்கு இந்த கதை அப்படித்தான்.

    //பெண்டாட்டியை தொடலாமா, வம்பாய்டுமா?// :))))))

    பதிலளிநீக்கு
  13. நன்றி meenakshi.
    நீங்களுமா? இன்னிக்கு சூன்ய பாஷை நாள் போல. எல்லாரும் போட்டுத் தள்றாங்க.

    உங்க கமென்ட் கொஞ்சம் யோசிக்க வைக்குது. எழுத்தை எழுதியவர் பார்வையில் புரிந்து கொள்ள நினைத்தால் சுவையாக இருக்காது. பாதி நேரம் எழுதியவருக்கே என்ன எழுதினோம் என்பது தெரியாது (என்னைப் பொறுத்த வரை நிச்சயமான உண்மை). வேர்ட்ஸ்வர்த்தோ கீட்சோ தெரியாது, அவையில் தான் எழுதிய கவிதையைப் படித்தவுடன், அவையில் ஒரே வாக்குவாதமாம். கவிதையின் பொருள் இன்னதென்று ஆளுக்காள் தோண்டியெடுத்தார்களாம். சமரசம் செய்யக் கடைசியில் எழுதியவரிடமே கேட்டபோது, கிழக்கே உதிக்கும் சூரியன்றாப்புல ரொம்ப ரொம்ப.. ரொம்பச் சாதாரண பொருளைச் சொல்லி வெட்கப்பட்டாராம் எழுதியவர். இங்கேயும் சபாபதே. ஏதோ அறிவு கிறிவுன்றீங்க - ரொம்போ டேங்க்ஸ்.

    கலைஞனை ஒதுக்கிட்டு கலையைப் பாக்கணும். ராமனா வர்றவன் ரெண்டு பெண்டாட்டிக்காரனாச்சேனு பாத்தா ராமனைப் பாக்க முடியாது. சொன்னது கமல்ஹாசன். (உருப்படியா சொன்னது:)

    பதிலளிநீக்கு
  14. Profile படம் March 18th அன்னிக்கு நீங்க எடுத்ததா? ரொம்ப அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லாஏப்ரல் 02, 2011

    //பொண்டாட்டியை தொடலாமா, வம்பாயிடுமா? :)//

    பெண்டாட்டியை தொட கேட்கணும் - வைப்பாட்டியை தொட !

    பதிலளிநீக்கு
  16. //பெயரில்லா சொன்னது…

    //பொண்டாட்டியை தொடலாமா, வம்பாயிடுமா? :)//

    பெண்டாட்டியை தொட கேட்கணும் - வைப்பாட்டியை தொட !
    //

    பெயரில்லா

    அது சரி, இரண்டுமே அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் தொட்டால் அதக்கு பெயர் கற்பழிப்பு ?!?

    - சாய்

    பதிலளிநீக்கு
  17. முதலில் மிக்க நன்றி ... தமிழ் மண நட்சித்திர வாய்ப்பு உங்களுக்கு கிட்டிய சமயத்தில் , வாத்தியாரின் கதை நினைவுகளை கிளற சொல்ல.. இக்கதையின் மூலம் பெரும் பொங்கலே வடித்து விட்டீர்கள் .
    முதல் பாகம் படித்து , இரண்டாம் பாகம் பார்க்கும் பொழுது முன்றாம் பாகத்தை முடித்து விட்டீர்கள் . இந்த மாதிரி கதைகளை படிக்கும் பொழுது , கதை கற்பனையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க மனதை தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும் . அதற்கு சற்று காலம் பிடித்தது.
    இந்த கதையின் FORMAT வித்தியாசமாக இருந்தது ... அறிவியல் களம் .... பாலுணர்வு சற்று கூடுதலாக இருந்தாலும் கதைக்கு பொருந்தி இருந்தது ... காட்சியகப்படுத்தியது அழகு
    சுஜாதாவின் எழுத்து ரசிகனுக்கு கிடைத்த அழகான கதை ... திரும்ப திரும்ப படித்துக் கொண்டுள்ளேன் ..
    மீண்டும் நன்றி ..உங்களுக்கும் வாத்தியாருக்கும் ........

    பதிலளிநீக்கு
  18. நன்றி பத்மநாபன்..
    என்ன? திரும்பத் திரும்பப் படிக்கிறீங்களா? அப்டி சொல்றீங்களா.. எனக்கு கூட புரியலிங்க கதை :)

    பதிலளிநீக்கு
  19. ///எனக்கு கூட புரியலிங்க கதை :)// இது சற்று கூட தான்...

    கதை பற்றி அதிகம் கவலைப் படவில்லை... நடையும் அமைப்பும் திருப்பி படிக்க வைக்கிறது ...

    பதிலளிநீக்கு
  20. கொஞ்சம் மார்க்கமாதான் எழுதறீங்க...சட்டென்று பிம்பங்களை மாற்றி மாற்றி எழுதுவது பிடித்திருக்கிறது.ஒரு கலைடாஸ்கோப் போல...வந்து விழும் சித்திரங்கள் சில சமயம் பிரமிக்க வைக்கின்றன.அற்புதம் ...ஆனால் அடுத்த கதையை தமிழில் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்!))))

    பதிலளிநீக்கு