2011/03/02
சுசுமோ
முன் குறிப்பு:
ஆளில்லாத பிலாக் பல வகைகளில் பயனாகிறது. கள்ளக்காதல் சந்திப்புக்குச் சங்கேதச் செய்தி, வயாகரா விற்பனை, ஆப்பிரிக்கக் கிழவி விட்டுப்போன கோடிகளைப் பட்டுவாடா செய்ய அழைப்பு, திருமண உறவை மட்டுமே நாடும் போலந்துப் பெண்ணின் விவரங்கள், புதுப்பட்டினம் அருகே குறைந்த விலையில் வீட்டுமனை,.. நிறைய அனாமத்துப் பின்னூட்டங்கள் வருகின்றன. spam filter இருப்பது ஓரளவுக்கு உபயோகமாக இருக்கிறது. ஓய்வு என்று தீர்மானித்திருந்ததால் பின்னூட்டங்களை மட்டும் பார்க்க அவ்வப்போது இங்கே வருவேன். எவளாவது தீவிர செக்ஸ் வன்முறை பற்றிப் பின்னூட்டம் போட்டிருப்பாளா என்று பார்த்துப் படித்து நீக்குவதற்கும்.
நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டால் நாலு வரி தள்ளிப் போங்கள். பிப்ரவரி 27-28 வாக்கில் spam என்று blogger ஒதுக்கியிருந்த பின்னூட்டங்களின் தொகுப்பு இது. சுசுமோ திட்டக் குறிப்புகள். படிக்க சுவாரசியமாக இருந்ததால் (எனக்கு), அப்படியே எடுத்துப் பதிவிடத் தோன்றியது. எப்படி வரிசைப்படுத்துவது என்று புரியாமல் குழம்பி, வந்த வரிசையிலேயே பதிவிடத் தீர்மானித்தேன். என்ன? உடான்சா? புனிதக்கருனு ரெண்டாயிரம் வருசமா மதம் சொல்றதை நம்பலியா? பாயசம் சாப்பிட்டா பாப்பா பிறக்கும்னு சொன்னதை நம்பினதால ஒரு காவியக்கதை கிடைக்கலியா? போச்சுரா.. உடனே கொடி பிடிக்காதீங்க; சஞ்சேரியப்பன்னு பொறம்போக்கு சைட்நோட் எழுதாதீங்க. நம்பாவிட்டால் எனக்கொரு நஷ்டமும் இல்லையென்று சொல்ல வந்தேன், அஷ்டே! வாழு, வாழவிடு!
***
NOTES FROM THE SUSUMO PROJECT
***
திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. "விவரமாகச் சொல்லுங்கள்" என்றார்.
***
"imagine your status when you return!" என்றாள்.
'statusஆ! freaking ball busting sexy! திரும்பியதும் என்னைப் பிடிக்க முடியாது' என்று அவன் உள்ளுக்குள் அறுபது மைல் வேகத்தில் பனிச்சறுக்கினாலும் வெளிக்காட்டாமல், அலட்டாமல், "தொடர்பை எப்படித் தெரிந்து கொள்வது? அதைச் சொல்" என்றான்.
"கவலைப்படாதே. குறிசொல்லை நினைவு வைத்துக் கொள். நிறைய நினைவுகளை இங்கிருந்து எடுத்துச் செல்ல முடியாது. குறிச்சொல்லை வைத்துத் தான் தொடர்பு, மறந்து விடாதே. மூளையும் இதயமும் இங்கேயே கண்காணிக்கப்படும். இங்கிருந்தே உன்னுடன் தொடர்பு கொள்வோம். நீ காண்பதை அங்கிருந்து எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தால் போதும். பத்து பூமி நிமிடங்கள் தான். அங்கே எத்தனை காலமோ என்னவோ! how exciting! உன் அனுபவங்களையும் சந்திப்புக்களையும் பற்றியத் தொடர்ந்த விளக்கங்கள், வர்ணனைகளைக் கொடுத்தால் போதும். running facts of your encounters, vivid as you can. உன்னை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருப்போம். we'll run with you here. உன் பயணங்களை இங்கிருந்தே விடியோ செய்வோம்"
"susumo!" என்றான்.
"yup!" என்று அவன் வயிற்றை அழுத்தினாள். அவனுடைய உற்சாகத்தை ரசித்தாள். அருகில் வந்து அவன் மார்பிலிருந்து ஒரு சிறு முடியைப் பல்லால் பிடுங்கி எடுத்தாள். "ouch" என்றான். பிடுங்கிய இடம் சுருக்கெனச் சிவந்தது. சிவந்த இடத்தை மென்மையாகக் கடித்தாள். சிரித்தாள். "நீ ஒப்புக்கொள்வாய் என்று தெரியும். we're the same" என்றாள். தயங்கி, "எங்களுக்கும் உன்னை விட்டால் வேறு துணிச்சலான ஆள் கிடையாது. do we hitch?" என்றாள்.
***
அறைக்குத் திரும்பும் வழியெல்லாம் பிரமித்துக் கொண்டிருந்தான். தியாவின் வாசனையைக் கூட மறந்து போனது மனம். இந்தத் தொழில்நுட்பம் தன்னைப் புது உச்சத்துக்குக் கொண்டு போகும் என்பதை உணர்ந்து சிலிர்த்தான். வெற்றிப் போதையின் எதிர்பார்ப்பில் ஆண்மை எழும்பியது. அறைக்கதவைத் தட்டினான். திறந்த கதவின் பின்னே, அவிழக் காத்திருந்த சிவப்பு சேடின் உள்ளாடையில் கவிழக் காத்திருந்தாள் காதலி. 'ஏன் இத்தனை நேரம்?' என்றன கண்கள். சிலிர்த்தான். தொடர்ந்து அவன் வெளிப்படுத்திய அவசரங்களை, பின்வரும் பெரும்புள்ளிகளில் காண்க:
• அவளை நெருங்கி, சுவரோடுச் சேர்த்து உடலழுத்தி நெருக்கியதில்
• "ஷ்!" என்ற அவள் உதடுகளை மாற்றி மாற்றிக் கவ்வியதில்
• அவள் கைகளைப் பிணைத்துத் தோளுக்கு மேலுயர்த்திக் கட்டியதில்
• முகத்தைச் சற்றே விலக்கியவளின் காதுமடல் கழுத்து என்று மென்கடிகளை உறுப்பிறக்கியதில்
• உதடுகளை விலக்காமல் தன் உடை களைந்ததில்
• தன் முதுகில் விரல் வைத்துக் குனிந்து "ஈசி" என்றவளை, எழுந்து இரு கைகளாலும் ஏந்தியதில்
• ஏந்தி, டவுன் கம்பளி சுற்றிய பெர்மோன் தெளித்த தெர்மோபெடிகில் தள்ளியதில்
• களைந்த உடைகளை எறிந்து அவளருகே பாய்ந்ததில்
• சிவப்புச் சேடினுடன் சேர்ந்து எழும்பிய அவள் மார்புகளைக் கையாண்டதில்
• அவள் இடுப்பை ஒடிக்க ஒடிக்க, அவன் கைவிரல்களால் கீழிறங்கியதில்
• தோள்பட்டியைப் பல்லால் தொட்டுச் சிவப்பு சேடினைக் காணாமல் போக்கியதில்
• தொடர்ந்து அவள் முதுகின் வழுப்பில் அவன் கைகள் நழுவியதில்
• அவள் திறந்த மார்பின் இளஞ்சூடு அவன் முகத்தில் பட, மறுபடியும் விட்டு விட்டுச் சிலிர்த்ததில்.
"வா" என்றாள். "வந்தேன்" என்றான்.
காம பாஷையில் முனகி, அவனை இறுக்கிச் சுற்றிக்கொண்டாள். கடைசியாகச் சிலிர்த்தான்.
ஒன்று, இரண்டு, மூன்று. அதிர்ந்தாள். அவன் உடல் அசைய மறுத்தது. அலறினாள். திடுக்கிட்டாள். அலறினாள்.
***
"நோ, தியா. that wasn't in the plan. இதற்கு என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. let me back, you bitch!". அலறினான். துடித்தான்.
சிரிப்பு போல் கேட்டது. "கார்கி பேசுகிறேன். தியா போய்விட்டாள். நீ அவள் சொல்படி கேட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் நீ திரும்பவே முடியாது. உன் கூட்டை எரித்துவிடுவாள். சொல்வதைக் கேள். be smart, bro!"
"கார்கி, நோ! இது blackmail! என்னுடைய ஆர்வத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள்!"
"அவள் கேட்ட தகவல்களை நீ சேகரித்தது தெரிந்ததும் உன்னைச் சந்திக்கிறேன்".
***
"உங்கள் எழுத்தை நான் படித்ததில்லை. நிறைய எழுதியிருக்கிறீர்களா? பிரபலமானது எதுவும் உண்டா?" என்றேன்.
"நிறைய. நான் எழுதிய லான்டரிக் கணக்குக் கூட பிரபலம்" என்றார். சிரித்தார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. am not an idiot. "சுசுமோ பற்றிச் சொல்லுங்க" என்றார்.
"subatomic superposition monitor" என்றேன்.
உடனே, "க்வான்டம் மேனிபுலேசன்!" என்றார் உற்சாகத்துடன். 'அட!' என்று நினைத்தேன். "ஆமாம். இந்தப் பிரயாணமே அதனால் தான் சாத்தியம். என்னைக் கண்காணிக்கிறார்கள்" என்றேன்.
"எப்படி?" குழந்தையின் ஆர்வத்துடன் விவரம் கேட்டார்.
"eve"
"நிஜமாகவா? எக்டோப்லேஸ்மிக் வேரியன்ஸ்! இதைப் பற்றி விபரீதக் கோட்பாடு என்று ஒரு கதையில் நானும்.. வேண்டாம், நீங்கள் சொல்லுங்கள்"
***
இன்னும் சில ஒளித்துளிகளில் சந்திப்பு நிகழும் என்று கார்கி சொல்லியிருந்தான். கார்கி என்றதும் கை கால் பால்குறி சேர்ந்த ஒரு மனித உருவம் மனதில் தோன்றினால், என் பிழையல்ல. கார்கியின் குரல் கேட்டது என்று சொல்ல வந்தேன். குரல் என்றதும் உடனே இத்தனை டெசிபல் கணக்கில் சுரபேதமுள்ள ஒலி என்று தோன்றினால், அதற்கும் நான் பொறுப்பல்ல. இந்தப் பரிமாணத்தில் ஒலியலையை அறிய முடிகிறது, அத்தோடு விடுகிறேன். கார்கி என்ற அடையாளப் பெயரே எனக்குக் கார்கி சொல்லித்தான் தெரியும். சில ஒளித்துளிகளில் சந்திப்பு நிகழும் என்று கார்கி சொன்னான் என்பதை மட்டும் இப்போதைக்குப் புரிந்துகொண்டால் போதும். இருளா ஒளியா என்றே தெரியாத போது, "ஒளித்துளி என்றால் என்ன?" கேட்டேன். சிரித்த கார்கி, "புரியும்" என்றான். என்றது? உருவம் தெரியாத பொழுது என்றான் என்பது அபத்தமாக இருப்பதால் என்றது என்கிறேன். அதுவும் அபத்தம் தானோ? "சந்திப்பு நிகழும் என்றாயே, எப்படி அடையாளம் காண்பது?" என்று கேட்டேன். "நீ அடையாளம் காண முடியாது" என்றான். "என்னை அடையாளம் காண்பாரா?" என்றேன். "அவராவது சுவராவது. ஓகே..மரியாதையா? சரி. அவராலும் அடையாளம் காண முடியாது. லிசன், உனக்கும் உருவம் கிடையாது, மறந்து விட்டாயா?" என்றது. "அப்ப எப்படி ஒருவரை ஒருவர் கண்டு கொள்வது?" என்றேன், அடங்காத எரிச்சலுடன். "அடையாளம் உங்கள் இருவரையும் காணும்" என்றான், அடங்கிய சித்தர் போல்.
***
உருவமிருந்தால் மென்னியை முறித்திருப்பேன். பொறுத்தேன். சந்திப்பு நிகழ்ந்தாக வேண்டும். என் பழைய நிலையை அடைவதற்கு இந்தச் சந்திப்பு உதவும் என்று கார்கி சொல்லியிருந்தான். தவறவிடக்கூடாது என்று எச்சரிக்கை வேறே. பொறுத்தேன். எல்லாம் என் அவசரம். என் தவறு. இப்போது கிடந்து விழிக்கிறேன்.
***
பாருங்கள், நான் ஒரு வாலிபன். மானிட நியதிகளின் படி கட்டுமஸ்தான அழகன். சோல் பேட்ச் தாடி வைத்திருப்பவன். இடது புருவத்தில் கால் மிலிமீட்டர் பருமனில் ஒரு தங்க வளையம் அணிந்திருப்பவன். இரண்டு நாள் முடி வளர்ச்சி அக்குளில் தெரியும் விதமாக, பெரும்பாலும் கையில்லாத இடேலியன் சில்க் சட்டையும் பாமர டெனிம் ஜேகெட்டும் அணிகிறவன். இதையெல்லாம் வைத்து, நான் எட்டாம் தலைமுறை வர்சுவல் ரியேலிடி துறையில் வளர்ந்து வரும் ஒரு சிறிய கம்பெனியின் மொத்தப் பங்கையும் கைக்குள் அடக்கி வைத்திருப்பவன் என்று எவருமே சரியாகக் கணிப்பதில்லை. சொன்னாலும் மேலும் கீழும் பார்த்து "ர்ரைர்ட்" என்பார்கள். பிடுங்கிகள். பிறகு என் போர்ஷ் பேனெமெராவைப் பார்த்ததும் வாயிலிருந்து சூத்து வரை பிளப்பார்கள். எலலாம் பழகிவிட்டது.
ந்யூஆர்லீன்சில் நாலு நாள் கலைவிழா. வர்சுவல் ரியேலிடி உலகத்தின் அத்தனை நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். நானும் என் காதலியுடன் வந்திருந்தேன். காதலி அறைக்குள் குறையாகக் காத்திருக்க, நான் மட்டும் கலைவிழா அரங்கத்துக்கு வந்திருந்தேன். வழக்கம் போல் என்னைப் பார்த்து 'ர்ரைர்ட்' என்ற நிருபர்கள், என்னுடைய சிறிய கம்பெனி வெளியிட்ட வன்பொருளை சோதனை செய்து பார்த்ததும் முன்சொன்ன மாதிரியே பிளந்தார்கள். என் தயாரிப்பை வர்சுவல் ரியேலிடி என்கிற பருப்புசாத வட்டத்துக்குள் அடக்கியது அமெரிக்க FCC தேவடியாப் பசங்க செய்யும் அநியாயக் கூத்து. தொலைகிறது. அப்படி என்ன செய்கிறேன்? teleportation கேள்விப்பட்டிருப்பீர்களே? பழைய சினிமாக்களில் இந்த இடத்திலிருந்து அந்த இடத்துக்கு தாவும் காதில் பூ பாணி டெலபோர்டேசன் இல்லை. புராணங்களில் ஒரே நேரத்தில் பத்து பெண்களின் பக்தியை ஏற்று அருள் பாலித்த கடவுள்களின் அனுபவத்தை என் கம்பெனியின் டெல்போ வன்பொருள் கொடுக்கும். parallel universe teleportation. இணையுலகப் பயணம். இந்த உலகத்தில் படுத்துக்கொண்டே இன்னொரு உலகத்துப் பெண்ணின் இளவயிற்றில் பம்பரம் விடலாம். கனவில் நடப்பதில்லையா? கனவில் தொட்டாலும் உருகவில்லையா? அதையே நிஜமாக்கி மூன்று மாடல்களில் தருகிறோம். என்ன செய்வது? இதில் புதைந்திருக்கும் அபாயங்களினால் இருபது வருடப் பரவலான சோதனை முடியும் வரை பொதுமக்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. மிலிடெரிக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். எக்கச்சக்கப் பணம் இருந்தால், ரிசர்ட் ப்ரேன்சன் போல் தில் இருந்தால், ரகசியமாக என்னைச் சந்தியுங்கள். ரகசியமாக. இன்றைக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் என் கம்பெனியின் புது மாடல் இன்னும் முழுமையான சோதனைக்கு ஆளாகவில்லை என்பது எனக்கு மட்டுமே தெரியும். இருந்தாலும் அதைச் சோதனை முறையில் பழகிப் பார்த்தவர்கள், வேறு உலக அனுபவங்களைப் பெற்றதாக பைபிள் குரான் கீதை டோரா எல்லாவற்றின் மேலும் நிர்வாணமாகப் புரண்டு சத்தியம் செய்யத் தயாராயிருந்தார்கள். அதைப் பார்த்த மாபெரும் வினியோகஸ்தர்கள், உடனே லைன் கட்டி ஆளுக்கு ரெண்டு டிரக் வேண்டும் என்று அப்போதே வெளுப்பில் பாதிப்பணம் தருவதாகச் சொல்லி ஒரே பிடுங்கல். திடீரென்று என்னுடைய சிறிய கம்பெனி சூபர் ஹாட்!
வெற்றியின் உற்சாகத்தில் காதலியுடன் படுக்க வேண்டும் என்று அவசரமாக அரங்கத்தை விட்டு வெளியே வந்தவனைத் தடுத்து நிறுத்தியது எதிரில் வந்த பழச்சோலை. இருபத்திரண்டரை வயதிருக்கலாம் அவளுக்கு. "ஒரு நிமிடம்" என்றாள். ஆப்பிள் திராட்சையைப் பார்த்தபடி நின்றேன். "என் பெயர் தியா. என்னுடன் வந்தால் நம் இருவருக்குமே உடன்பாடான ஒரு செயலில் இறங்கலாம்" என்றாள். மாதுளையைக் கவனித்தேன்.
"எனக்காக இப்போது ஒரு காதலி காத்திருக்கிறாள். அவளுக்குக் கூட்டுறவில் நம்பிக்கை கிடையாது, இருந்தால் உன்னையும் உடன் வரச்சொல்வேன்" என்று நிறுத்தி, அவளைப் பார்த்தேன். "மாலையில் சந்திப்போமே?" என்றேன் புருவத்தை உயர்த்தி.
சிரித்தாள். "உங்கள் பிராடக்டின் முக்கிய வீக்னெஸ் எங்களுக்குத் தெரியும்" என்றாள் நிதானமாக. உள்ளுக்குள் ஆடினேன். அவள் கவனித்திருக்க வேண்டும். "நானும் உங்களைப் போல் டெல்போ கருவிகள் தயாரிப்பதில் முனைந்திருப்பவள். உங்கள் கருவியின்..." என்று என்னைக் கீழ்ப்பார்வை பார்த்துப் புன்னகை செய்து, "உங்கள் கருவியின் இயலாமை எனக்கு நன்றாகத் தெரியும். என்னுடன் வந்தால் இருவருக்குமே சாதகமான ஒரு தொழில் சூழலை உண்டாக்கலாம். என்ன சொல்கிறீர்கள்?" என்றாள்.
தயங்கினேன். "என்னுடன் வாருங்கள். இல்லையென்றால், அதோ நிருபர் போல் நிற்கும் என் கம்பெனி ஆள் உங்கள் கருவியின் குட்டை உடைத்து விடுவான்" என்றாள். பார்த்தேன். என் கம்பெனி டெமோ பேட் அருகிலிருந்த ஒருவன் காற்றில் ஒற்றை விரல் பறந்தான். அவளைப் பார்த்தேன். "வாருங்கள். you won't regret. ஒரு மணி நேரத்தில் உங்கள் காதலியிடம் திரும்பலாம்" என்று, திரும்பினாள். தொட்டுப் பார்க்கச் சொன்னது ப்பழம்.
உடன் சென்றேன். சிவப்பில் பளபள கார் ஏதாவது இருக்கும் என்று நினைத்தால் மொட்டை மாடியில் சின்ன கஸ்டம் ஜி6 நிறுத்தியிருந்தாள். "இது இன்னும் மார்கெட்டுக்கே வரவில்லையே?" என்றேன். பதில் சொல்லாமல் எனக்காகக் கதவைத் திறந்தாள். என்னைவிடப் பணக்காரியாக இருக்க வேண்டும்.
உள்ளே ஏறி அமர்ந்ததும், தன் இருக்கைக்குச் சுற்றி வராமல், என் மடியில் ஏறி உட்கார்ந்து உரசி மறுபுறம் தாவினாள். தானே ஓட்டினாள். ஜி6 குப்பென்று செங்குத்தாய்க் கிளம்பிக் கிட்டத்தட்ட ஒரு மேக் வேகம் பிடித்து நிதானித்துப் பறந்த போது, அவள் கால்களின் நீளத்தைக் கவனித்தேன். ப்லேடினம் கொலுசு அணிந்திருந்தாள். உள் தொடைகளில் பட்டாம் பூச்சியின் சிறகைக் கலர் குழைத்துப் பச்சைக் குத்தியிருந்தாள். hypnotic. கால் அசைக்கும் போது தொடை மேல் பட்டாம் பூச்சி படபடத்தது. wish your girlfriend was raw, don'tcha?
***
ளம் ►►
வகை
சிறுகதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அட்டகாசம் அப்பா சார்...இது உங்க ஏரியா...
பதிலளிநீக்குஇங்கிருந்து கொண்டே அடுத்த உலகப் பெண்ணின் தொப்புளில் பம்பரம்![எங்கே போனாலும் தொழிலை விட முடியுமா என்ன!]
அப்பாதுரை சார்! ரொம்ப நாளாச்சு உங்களை ஜீன்ஸ் போட்டுப்பார்த்து... கொஞ்சம் அதைக் கழட்ட வேறு செஞ்சிருக்கிறீங்க. படிக்கும் போது என்னவோ ஹர்டில்ஸ் ரேஸ்ல தாண்டித் தாண்டி வந்த உணர்வும் மூச்செறிதலும்... அதான் தொடரச் சொல்லிட்டீங்களே?you rock..
பதிலளிநீக்கும்ம்...அப்பாஜி உங்க ஸ்டைல்.தொடங்குங்க !
பதிலளிநீக்குஅட்டகா......................................சம்..... ஆசம்............ ;-))))))))
பதிலளிநீக்குஅவிழ ... கவிழ.. மிகவும் ரசித்தேன் அப்பாஜி!
ஆப்பிள், மாதுளை ன்னு ஒரே பழவரிசை.. பழவாசனை..
அப்புறம் அந்த பம்பரம் மேட்டர்.... விஜகாந்துகிட்ட சொல்லிடாதீங்க... அவரு அப்புறம் அஞ்சலினா ஜோலியோட தொப்புளுக்கு இங்கேர்ந்தே விடறேம்பாரு....
Teleporting வச்சு சுஜாதா ஒரு அறிவியல் புனைவு எழுதியிருப்பார்... ஒரு ஆளை ஒயர் வழியா அனுப்பி இன்னோர் இடத்துல திரும்பவும் அந்த ஆளை ரிசீவ் பண்ணிப்பாங்க.. முடிவு படு வித்தியாசமா இருக்கும்...... முடிஞ்சா அந்தக் கதையோட சுருக்கத்தை பகிர்ந்துக்கறேன்...
தெருவை தோண்டிபுட்டானுங்க.. ஒவ்வொருத்தர் வீட்டு முன்னாடியும் சவக்குழி... வீட்டில் நெட் வேலை செய்யலை...
முதல் முறை படித்தபோது கதையின் போக்கு சற்று புரியாவிட்டாலும், உங்கள் எழுத்து நடையின் அழகை மனம் ரசிக்காமல் இல்லை, எப்பொழுதும் போல்! மீண்டும் படித்தேன், ரசித்தேன் கதையையும், ரசிப்பேன் தொடருவதையும்.....
பதிலளிநீக்குவருக bogan, மோகன்ஜி, ஹேமா, RVS, meenakshi,...
பதிலளிநீக்குசுஜாதா தொடாதது மிகக் குறைவு RVS.. நீங்கள் சொல்லும் கதையைப் படித்திருக்கலாம், நினைவுக்கு வரவில்லை. பெயர் சொல்லுங்கள், என்னிடம் இருக்கிறதா பார்க்கிறேன்.
பதிலளிநீக்குமன்னிக்க வேண்டும் அப்பாதுரை! கதையை ரசித்தேன் என்றதிலும் உங்கள் எழுத்து நடையைதான் ரசிக்க முடிந்ததே தவிர, கதை புரியவில்லை. இது தொடர்வதையும், சிலர் எழுதும் பின்னூட்டங்களின் மூலமும் கதையை புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். அப்படியும் புரியவில்லை என்றால் நீங்களே தான் கோனார் உரை விளக்கம் கொடுக்கவேண்டும். :)
பதிலளிநீக்குஅதனால் என்ன meenakshi.. புரியாம போனா உங்க பேர்லயா தப்பு? தாராளமா சொல்லுங்க - 'என்னய்யா புரியாத கதை எழுதுறே?'னு.
பதிலளிநீக்குஎன் உறவினர் ஒருவரின் சமையல் பற்றி என் பாட்டி சொல்வார்: "அவ சாம்பார் பண்ணுவா பாரு.. தேங்காய் கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு கலரும் மணமும் நல்லா இருக்கும், நிறைய காய்கறி போட்டிருப்பா, பருப்பை கரைச்சு விட்டிருப்பா, கூழாவும் இல்லாம நீராவும் இல்லாம இருக்கும்..". சரி, இப்படியெல்லாம் சொல்கிறாரே என்று உறவினருக்கு 'சாம்பார் திலகம்' என்று பட்டம் கொடுக்க விரைந்தால்..சாப்பிட்டுப் பார்த்தால் விஷயம் தெரியும். உப்பு இருக்காது, புளி மறந்திருப்பார் அல்லது காய்கறி வெந்திருக்காது.. மொத்தத்தில் சாப்பிட்டால் சகிக்காது. பார்ப்பதற்கு சாம்பார் போலவே இருப்பது புரியும். என் பாட்டியும் அதை மட்டும் சொல்வார்.
சாம்பார் மாதிரியே இருக்குனு சொல்றீங்களா?
ஹிஹி..meenakshi.. சமாளிக்கறேன்னு நினைக்காதீங்க.. இப்பத்தான் கவனிச்சேன். விகிபீடியாவில superposition என்பதற்கு இப்படி விளக்கம் கொடுத்திருக்காங்க: F(x) = y, where x is some sort of stimulus (input) and y is some sort of response (output)... எதையோ இடிச்சா எதுவோ உடையும்னு தான் அவங்களும் சொல்றாங்க. பாருங்க, எல்லாமே உத்தேசமா தோராயமா சொல்றது தான். கோனார் போட்டுச் சொல்ற அளவுக்கு கதைல ஒண்ணும் இல்லிங்க. (கதைல இல்லையா, கதையே இல்லையானு கேக்கறீங்களா?)
பதிலளிநீக்குசுசுமோ இருந்த என்னைக் கிளப்பி விட்டது பத்மநாபன். அவரைப் பிடிங்க.
aniyaayama irukkeda? pozhuhu pohaama kathai padikka vandhaa paada pusthahathai eduthu netru panna solriye? sarithaan po.
பதிலளிநீக்குகதை அப்படியே அடுத்த ஜென்மம், மரணம் என்று லேசாத் தொட்டு கடோவை Refer செய்யுமோ என்ற சந்தேகம் இருக்கு.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம். கடோவா? என்ன சொல்றீங்க?
பதிலளிநீக்குநன்றி அப்பாதுரை ..வாத்தியாரின் நினைவில் நிறுத்தி இக்கதையை இட்டதற்கு.. என்னுடைய தாமதத்திற்கு நசிக்கேதத்தில் காரணம் சொல்லியுள்ளேன்..
பதிலளிநீக்குபார்த்தவுடன் இந்த பின்னூட்டம் படித்தவுடன் மீண்டும் வருகிறேன்...
fantastic!
பதிலளிநீக்குOhh....Ohh...Ohhh.... :) nice.
பதிலளிநீக்குநன்றி பத்மநாபன், ராமசுப்ரமணியன், Nanum enn Kadavulum (வாங்க!)...
பதிலளிநீக்குபயணம் காரணமாகவும், எதிர்பாராத சுவையான jury dutyல் சிக்கியிருப்பதாலும் தொடர இயலவில்லை. திங்கள் காலையிலிருந்து சனி பகல் வரை வெளியுலக தொடர்பில்லாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள். வரும் வெள்ளிக்கிழமையோடு ஜூரிப் பணி முடிகிறது. வந்ததும் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குவாவ்! ஓய்வுக்குப் பிந்தைய புத்துணர்வு தெரிகிறது அப்பாஜி!
பதிலளிநீக்குஆரம்பிச்சிட்டாருப்பா தொரை .
பதிலளிநீக்குஅடங்க மாட்டாரு இனிமே
பயத்தோடு தொடர்கிறேன்