2010/11/27

மெல்லிசை நினைவுகள்




கொஞ்சம் மெல்லிசை; கொஞ்சம் நினைவுகள்.

வளரும் பருவத்தில் பி.சுசீலா பாடியத் தனிப்பாடல்களை ரசிக்கவில்லை. பிறகு திடீரென்று பி.சுசீலா தனிப்பாடல்கள் நிறைய கேட்கத் தொடங்கினேன். சுசீலா போல் குரல் வண்மை கொண்டவர்களை ஒரு விரலில் எண்ணி விடலாம் என்று இப்போது நினைக்கிறேன். எழுபத்தைந்து வயதாம் இவருக்கு. வயதுக்கு மேற்பட்ட சாதனையாளர். எனக்கு முந்தைய தலைமுறை, என் தலைமுறை, பாசிப்லி எனக்குப் பிறகு ஒரு தலைமுறை... என்று தலைமுறைகள் இவர் குரல் கேட்டு வளர்ந்திருப்பதை நினைத்தால் கொஞ்சம் புல்லரிக்கிறது. சிலருக்கு வாழ்வில் அப்படி ஒரு தவப்பயன். சுசீலா வாழ்க. சுசீலா குரலில் மயங்கிய ஒருவரின் நினைவில் இந்தப் பதிவு - அவரைப் பற்றிக் கொஞ்சம் பொறுத்து சொல்கிறேன்.

குரோம்பேட்டை நாட்களில் என் தங்கையும் அவளுடைய தோழிகளும் ('விஜி' என்று இரண்டு பெண்கள் - ஒருவரை நன்றாக நினைவிருக்கிறது :) பி.சுசீலா என்றால் விழுந்தடித்துக் கொண்டு கேட்பார்கள். 'இப்படி உருகுகிறார்களே!' என்று தோன்றும் அப்போதெல்லாம்.

ரகசியப் போலீஸ் படம் பம்மல் ஷண்முகா கொட்டகையில் பார்த்துக் கொண்டிருந்தோம். தரை டிகெட். 'சந்தனம் குங்குமம் கொண்ட தாம்ரைப்பூ' பாட்டின் போது கூட்டத்திலிருந்து இரண்டு பெண்கள் குஷாலாக ஆடியது நினைவுக்கு வருகிறது. கூட்டம் ஜெயலலிதாவை விட்டு இவர்களைக் கவனிக்கத் தொடங்கியதென்றால் பாருங்கள்! பாட்டு நடுவில் எம்ஜிஆர் நாக்கைச் சுழித்து கையை வீசும்போது பதிலுக்கு இந்தப் பெண்கள் செய்த சைகையில் கொட்டகையே அதிர்ந்தது. அதனால் நினைவிருக்கிறது. குரோம்பேட்டை ஜெயந்தி (?) கொட்டகையில் திருவிளையாடல் படம் பார்த்த போது 'நீலச்சேலை' பாட்டில் வெளியே வந்து விட்டேன். டிகெட் கிழிசலைத் தொலைத்து விட்டதால், வெளியே இடைவேளை வரை நிற்க வேண்டி வந்தது. என்ன சொல்லி அழைத்தும் உள்ளே இருந்த உடன்பிறப்புகள் உதவிக்கு வரவில்லை. 'நீலச்சேலை' பாட்டுக்காகவே பின்னாளில் படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். 'உனக்கு வந்த அனுபவத்தைச் சொல்லடி மெல்ல..' வரிகளில் சாவித்ரியும் சுசீலாவும் ஜாலம் செய்வதை நிறைய ரசித்திருக்கிறேன். 'வசந்தத்தில் ஓர் நாள்' பாடல், எனக்குப் பிரியமான எங்கள் வட்டப் பழவந்தாங்கல் பெண்ணின் விருப்பமான முணுமுணுப்பு. "உனக்கு வேறே பாட்டே தெரியாதா?" என்று நாங்கள் சலிக்கும் அளவுக்கு முணுப்பாள். 'அத்தானின் முத்தங்கள்' பாடலை என் உறவினர் ஒருவர் ரகசியக் குரலில் அடிக்கடி பாடுவதை நானும் ரகசியமாகக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் பழ்ழ்ழைய பாட்டென்றாலும் சுசீலாவின் குரல் வளத்துக்கும் வெரைடிக்கும் ஒரு உதாரணம் 'நிலையாக என் நெஞ்சில்' பாட்டு. 'எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும் நீங்காது உன் நினைவு' வரிகளை சுசீலா குரலில் கேட்க வேண்டும் - காதலின் ஆதங்கம் நெஞ்சை உருவும். 'ஆலயமென்பது வீடாகும்' பாட்டு என் டாப் 10 பாடல்களில் ஒன்று.

பி.சுசீலா குரலில் மயங்கியவர் என் நண்பர் அரசன். ஒவ்வொரு நாளையும் அனுபவித்து வாழ்ந்த எனக்குத் தெரிந்த சிலரில் ஒருவர். சின்னச் சின்ன சுகங்களில் வாழ்க்கையைக் கண்டவர். மெரீனா பீச் உப்பு-மிளகாய் தடவிய மாங்காய் பத்தைகளில் கிறங்கிப் போவார். வறுத்த வேர்கடலை இரவின் குளிரில் கையைச் சுடுவதில் கவிதை உண்டு தெரியுமா என்பார். மீனம்பாக்கம் - சைதாப்பேட்டை மின்சார ரயில் நெரிசல் பயணத்தை ரசிப்பார். அதைவிடக் கொடுமை - கிண்டி ரயில் நிலையக் கேன்டீன் 'டபுள் ஸ்ட்ராங் - டபுள் சுகர்' காபியை சப்புக்கொட்டிக் குடித்து 'ஆகா! இது வாழ்க்கை!' என்பார். தூத்துகுடி வானொலி நிலையத்தில் வேலை செய்த அவர் நண்பரிடம் சொல்லி 'சுசீலா நேரம்' என்று வியாழன் வெள்ளி இரவுகளில் அவருக்காக அரை மணி நேரம் ஒலிபரப்ப வைப்பாராம் - அதைத் தன்னுடைய சாதனையென்று பெருமையடித்துக் கொள்வார்.

அரசனிடம் தமிழைத் தவிரவும் நான் நிறையப் பயின்றிருக்கிறேன். அவர் சொன்னப் பின்னணிக் கதையிலிருந்து 'மூங்கிலிலை மேலே' பாடலை ரசிக்கத் தெரிந்து கொண்டேன். 'மூங்கிலிலை மேலே' பாட்டின் பல்லவி கம்பன் காலத்தது தெரியுமோ? கம்பனை அசத்தியப் பாமரன் கதை சுவையானது. அரசனுக்குப் பிடித்த இன்னொரு குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியம். எனக்கு டிஎம்எஸ் பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். சினிமா பாடல்கள் பற்றி விவாதிக்கும் பொழுது "எஸ்பிபி போல் வராது, சுசீலாவினால் தான் டிஎம்எஸ்சுக்கு பெருமை" என்பார். "என்னங்க இது, தமிழனா இருந்துகிட்டு கொல்டி பாடகர்கள் தான் பிடிக்கும்ன்றீங்களே?" என்பேன். "போமய்யா, ரசனை கெட்டவரே" என்பார். எழுபதுகளின் முடிவில் நங்கநல்லூர் ரங்கா தியேடருக்கு என்னையும் சில மாணவர்களையும் அவரே செலவழித்து சினிமா அழைத்துச் செல்வார். தியேடர்காரனுக்கு ஒரு ரூபாய் கொடுத்து 'கண்ணன் எங்கே' பாட்டை இடைவேளையில் போடச்சொல்லி ரசித்துக் கேட்பார். 'என்ன ரசனையோ?!' என்று நாங்கள் முணுமுணுப்போம். இன்றைக்கு இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது லேசாகத் தொண்டை அடைக்கிறது.

அவர் நினைவில் இந்தப் பதிவின் மெல்லிசைத் தேர்வுகள். சுசீலாவுக்கு நன்றி. நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
மெல்லிசை நினைவுகள் | 2010/11/27

91 கருத்துகள்:

  1. பி.சுசிலா அம்மா அவர்கள் இனிய பாடல்களையும் கேட்டேன். அரசன் அவர்களுடனான நட்புச்செய்திகளையும் படித்தேன். உண்மையில் நிங்கள் அதிர்ஷ்டக்காரர் தான் –இவ்வளவு ரசனையான நண்பராக கொண்டதற்கு.

    சுசிலாம்மாவை விட ஜானகியம்மாவின் ஒரு படி மேல் ரசிகன் நான்...இப்பாடல்களை கேட்டபிறகு அந்த படியை சீர் செய்து விட்டேன். இப்பொழுது கேட்கும் பொழுது இரு குரலுக்கும் இனிமை எனும் ஒற்றுமையை உணரமுடிகிறது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாடல்கள்!
    பி. சுசீலா அவர்களின் ‘நாளை இந்த வேளை பார்த்து’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்!

    பதிலளிநீக்கு
  3. எல்லாமே அருமையான பாடல்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  4. பி.சுசீலாவின் குரலினிமை எல்லா தலைமுறையினரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

    பதிலளிநீக்கு
  5. எப்பவும்போல அருமையான பழைய பாடல் அப்பாஜி.

    "கடவுள் ஒருநாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்..."ன்னு ஒரு பாட்டு ஞாபகம் கனவுபோல ஞாபகமிருக்கு.அந்தப் பாட்டும் ஒருதரம் பதிவிடுங்களேன் !

    பதிலளிநீக்கு
  6. முதல் பாட்டைக் கேட்டபடியே பின்னூட்டம் போட்டேன்.தொடர்ந்து நிறையப் பாடல்கள் வருமென்று நினைக்கவேயில்லை !

    பதிலளிநீக்கு
  7. சுசீலாவின் குரலுக்கு மயங்கவில்லை என்றால் அவர் மாங்காயாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் அந்த மலர்ந்தும் மலராத பாடலின் இடையில் ஒரு விம்மல் வருமே.. அதற்காகக் காத்திருப்பதாக அனைவரும் கூறுவரே. வைரமுத்து உட்பட..

    பதிலளிநீக்கு
  8. உங்கள் காலத்து சுசீலா பாடல்கள் அருமை. ;-)
    (திட்டக்கூடாது.....)

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. அப்பாஜி! சுசீலா ஒரு தேவக்குயில்.. ஒன்றா இரண்டா! இன்று வரையில் அவருக்கு மனதில் நான் போட்டிருக்கும் சிம்மாசனத்துக்கு, அருகில் மற்றொரு பாடகி வரவில்லை.அவரே மறந்து போன பாடல்களைக் கூட சேகரித்து, ஒன்று விடாமல் வைத்திருக்கிறேன்.

    அறுபது எழுபதுகளில் மகாராணியாக தமிழ்த் திரைப்பாடல்களில் வலம் வந்த அவர், அதே காலகட்டத்தில் தெலுங்கு திரைப்பாடல்களிலும்
    உச்சம் தொட்டிருக்கிறார்.தெலுங்கு அவர் தாய்மொழியாதலால் இதயத்தில் இருந்தே பாடியிருக்கிறார்.
    உங்கள் வலையில் உள்ளது போல், பாடலை பதிவில் ஒலியிடும் விட்ஜெட் எனக்கு வரமாட்டேன் என்கிறது.வந்தவுடன் சுசீலாம்மாவின் ஆச்சர்யமான பல பாடல்களை உங்களுக்கு நினைவுறுத்துவேன்... அறிமுகப் படுத்துவேன்.(தெலுங்கு பாடல்களுக்கு கோனார் நோட்சுடன்!)

    அரசன் சாருடன் உங்கள் நட்பின்
    ஆழம் பார்த்து வியப்புறுகிறேன்! நீங்கள் ஏன் அந்த ரசிகமணியைப் பற்றி ஒரு பதிவை வெளியிடக் கூடாது?
    11/28/2010

    பதிலளிநீக்கு
  11. // 'மூங்கிலிலை மேலே' பாட்டின் பல்லவி கம்பன் காலத்தது தெரியுமோ? கம்பனை அசத்தியப் பாமரன் கதை சுவையானது.//
    அப்பாஜி! இவ்விரண்டையும் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். ;-)

    பதிலளிநீக்கு
  12. வருக KANA VARO,பத்மநாபன், எஸ்.கே, meenakshi, geetha santhanam, ஹேமா,ஆதிரா,RVS,மோகன்ஜி,...

    எதிர்பார்க்காத பாடல்கள் ஏமாற்றவில்லையே ஹேமா? ரசிக்கும்படி இருந்ததா?

    வாங்க ஆதிரா - மாங்காயா? அப்படின்னா?

    RVS: இதெல்லாம் எதிர்காலப் பாடல்கள் :)

    மோகன்ஜி: என் வாழ்வின் 'பேறு' நல்ல நட்பும் என் உடன்பிறப்புகளும் தான். சுசீலா மறந்து போன பாடல்களா? சரிதான்!

    RVS: பூதக்கதை சொல்ல விட மாட்டேங்குறாரு. ஹரித்ராநதிக் கதையொண்ணு சொல்றேன். ராமாயண அரங்கேற்றம் முடிஞ்சு கம்பன் ஓய்வெடுக்க மன்னார்குடி போனாராம். நதியும் நீரும் வயலும் சோலையும் பாத்து சொக்கிப் போய் அங்கேயே டென்ட் போட்டு காலம் தள்ள நெனச்சாராம். மாலை வேளை. புள்ளினம் கூட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது; சூரியன் இறங்கிக்கொண்டிருந்தான்; நாள் முடிந்து கொண்டிருந்தது. தென்னங்கள்ளை சுவைத்தபடியே கம்பன் இருந்தபோது ஒரு பாட்டு கேட்டுச்சாம். "மூங்கிலிலை மேலே...". இனிமையான குரல். மறுபடியும் "மூங்கிலை மேலே மூங்கிலிலை மேலே"னு அதையே இழுத்துக்கிட்டிருந்துச்சாம் குரல். யார் பாடுறாங்கனு கம்பன் வெளியே வந்து பாத்தப்ப, கூப்பிடு தூரத்துல ஒரு பெண் நீரேத்தத்துல கை கால் சுத்தம் செஞ்சபடி பாடிக்கிட்டிருக்கா. கம்பன் வெயிட் பண்றார் அடுத்த வரிக்காக. ஆனா அந்தப் பொண்ணு அடுத்த வரியைப் பாடாமலே போயிடறா. கம்பனுக்கு இருப்பு கொள்ளவில்லை. "மூங்கிலிலை மேலேயா? அது மேலே என்ன இருக்கும்"னு யோசிச்சு யோசிச்சு மாஞ்சு போறாரு. ராத்தூக்கம் இல்லை. மறுநாள் வயல் தொறந்ததும் ஓடிப்போய் அந்தப் பொண் கிட்டே கேட்டாரு, "அம்மா, அந்தப் பாட்டோட அடுத்த வரி என்ன?". அந்தப் பொண்ணு, "தெ.. இன்னா நீ.. பெரீய பாட்டெல்லாம் எய்திகிற.. படா ஷ்டாரு நீ.. இது தெர்லியா?"னு கிண்டல் செஞ்சு அடுத்த வரியைப் பாடுறா. வரியோட எளிமையான பொருளில் மயங்கிப் போய் கம்பன் அந்தப் பொண்ணை அப்படியே கட்டிப்பிடிச்சுடறார். "யோவ்.. வுடுயா யோவ்"னு அந்தப்பொண்ணு அலறவும் நினைவுக்கு வந்து அவ கிட்டே மன்னிப்பு கேட்டு முழுப் பல்லவியையும் கேட்டு எழுதிக்கிட்டுப் போனாராம். போறப்ப ஒண்ணு ரெண்டு பொற்காசையும் கொடுத்துட்டுப் போனாராம்.

    பதிலளிநீக்கு
  13. மரிஷ்காவின் ஆதங்கம் என்று வருகிறது. ஆனால் படிக்க முடியவில்லையே ஏன்?

    பதிலளிநீக்கு
  14. சாரி, மரிஷ்காவின் பூதங்கள் என்று படிக்கவும்

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை, அடுத்து பதிவுல 'அப்பாதுரையும் ஆறேழு பூதங்களும்' கதையா? அந்த கதைலதானே அந்த ஹீரோயின் பேரு மரிஷ்கா. இந்த கதையின் தலைப்பை அரசன் அவர்கள்தானே தேர்ந்தெடுத்தார். அவர் பூத்தூரிகை பதிவில் இருந்தபோது தினம் தினம் பதிவை படிப்பதே மிகவும் சுவாரசியமாக இருந்தது.
    மனதில் தேங்கி நிற்கும் சில இனிமையான நினைவுகளில் அந்த சில நாட்களும் ஒன்று.

    'மூங்கில் இலையின் மேலே' நானும் என் அண்ணாவும் மிகவும் ரசித்து கேட்கும் பாடல் இது. காட்டு ராணி படத்தில் வரும் இந்த பாடலுக்கு இசை திவாகர். நான் வெகு நாட்கள் வரை இதை கே.வீ. அவர்களின் பாடல் என்று நினைத்திருந்தேன். பாடல் வரிகள் இன்றும் நினைவில் இருக்கிறது. படிப்பில் இப்படி இருந்திருந்தால் கொஞ்சம் தேறியிருக்கலாம். 'கண்ணன் எங்கே' பாடலை ரெகார்ட் செய்ய என் அண்ணாவிடம் போட்ட சண்டை இன்றும் நினைவிருக்கிறது. எனக்கு பிடித்த அளவு அவனுக்கு இந்த பாடலில் அவ்வளவு ஆர்வம் இல்லை. 'நீலக் கடலை' பாடலை கேட்டபோது கூடவே நினைவுக்கு வந்த சுசீலாவின் இன்னொரு பாடல் 'என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி'. வெகு நாட்கள் கழித்து அதையும் மீண்டும் கேட்டேன். அருமையான பாடல்களை தொகுத்து வழங்கி ரசிக்க வைத்தீர்கள். மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. //வாங்க ஆதிரா - மாங்காயா? அப்படின்னா?//

    நான் தப்பா சொல்லிட்டேனா.. குயிலிசைக்கு மயங்காதவர்களை மயங்கா மன்னன் னு சொல்ல வந்தேன்.. ஃபிங்கர் ஸ்லிப் ஆயிடுச்சு.. தப்பா நெனச்சக்காதீங்க அப்பா...

    பதிலளிநீக்கு
  17. அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க, ஆதிரா. ஒரு புது வார்த்தை வடிவேலு கவுண்டமணி ஸ்டைல்ல கத்துக்கலாம்னு நெனச்சேன்... போச்சே!

    பதிலளிநீக்கு
  18. கொஞ்சம் வேலையா இருந்துட்டேன், பதிவை இன்றுதான் பார்த்தேன்...
    சரி, என் பங்குக்கு, 'அமைதிப் புறாவே அமைதிப் புறாவே' பாட்டு எப்படி?
    கண்ணன் எங்கே பாடலின் ஒரிஜினல் பற்றி குறிப்பிடாத துரைக்கும், மீனாட்சிக்கும் கண்டனங்கள் ...!! எங்கள் தலைவரை இருட்டடிப்பு செய்வது போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  19. என்ன சொல்றீங்க geetha santhanam, meenakshi, ஒண்ணும் புரியலியே?

    (மழுப்பல் கேஸ்)

    பதிலளிநீக்கு
  20. வாங்க ஸ்ரீராம். அமைதிப் புறாவே - பாட்டு என்னிடம் இல்லை; எப்ப்பவோ கேட்டது.

    'கண்ணன் எங்கே' ஒரிஜினல்? இந்திப் பாட்டை சொல்றீங்களா? இந்தப் பாட்டே சுமார் தான்; ஒரிஜினல்ல வசனம் சேத்து ரொம்ப டார்சர். (ம்ம்ம்... டெலிபோன் கதை போல் எழுந்து வந்து அடிக்கப் போறாரு அரசர்)

    பதிலளிநீக்கு
  21. மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடலை விட்டு விட்டேனே...கலங்கடிக்கிற பாட்டுங்க...

    பதிலளிநீக்கு
  22. ஜம்பு என்ற கர்ணன் படத்துல 'ஏனிந்த மயக்கம் ஏனடி ராதா' என்ற (ஜெயந்தஸ்ரீ ராக?) பாடல், ரோஜாவின் ராஜா படத்தில் ஜனகனின் மகளை பாடல்....

    பதிலளிநீக்கு
  23. ஜம்பு படமா!!! எங்கியோ போயிட்டீங்களே ஸ்ரீராம்?! படத்தை அந்தப் பாஆஆட்டுக்காகவே எத்தனை தடவை பார்த்திருக்கிறேன்!! (ஹிஹி)

    பதிலளிநீக்கு
  24. தமிழுக்கும் அமுதென்று பேர், கங்கைக் கரைத் தோட்டம் காவியத் தலைவியில் வரும் ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு பாடல்...பாடல்கள்...

    பதிலளிநீக்கு
  25. பின்றீங்க ஸ்ரீராம்.. சுசிலாவின் தலைமை ரசிகரா?

    பதிலளிநீக்கு
  26. துளித் துளி துளி மழைத் துளி, மலர் எது என் கன்னம்தான் என்று சொல்வேனடி...

    பதிலளிநீக்கு
  27. மன்னிச்சுக்குங்க இதோட விட்டுடறேன்...காதல் சிறகைக் காற்றினில் விரித்து, ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே, மலர்கள் நனைந்தன பனியாலே, உறவு என்றொரு சொல்லிருந்தால்,

    பதிலளிநீக்கு
  28. இனிமே சுசீலானு வாயைத் தொறந்தா கேளுங்க ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  29. ஆஹா ஸ்ரீராம்! தூள் கிளப்பறீங்க. 'ஏனிந்த மயக்கம்' மறந்தே போனேனே. அழகான பாட்டு. 'கண்ணன் எங்கே' ஒரிஜினல் எப்பவோ கேட்டது. அதனால மறந்தே போச்சு சொல்ல. அப்பாதுரை முதலிலேயே மன்னிப்பு கேட்டுடறேன், என் பங்குக்கு கொஞ்சத்தை எடுத்து விடலைன்னா எனக்கு தூக்கமே வராது!
    என்னதான் ரகசியமோ இதயத்திலே, இன்று வந்த இந்த மயக்கம், காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ, என் ராஜாவின் ரோஜா முகம், பொன் மேனி தழுவாமல் - ஸ்ரீராம் இந்த பாட்டோட ஹிந்தி version-m super! - பாவை பாவைதான் ஆசை ஆசைதான், கல்யாண சந்தையிலே, கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே, சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது, தென்றலில் ஆடை பின்ன, ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து, அவள் என்ன நினைத்தாள், முத்து சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும், மலர்கள் நனைந்தன பனியாலே, தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா, என்னை மறந்ததேன், காவேரி ஓரம் கவி சொன்ன பாடல்.......................

    மோகன்ஜி, உங்க பதிவுல சுசீலா பத்தி சீக்கிரமா எழுதுங்க. ரொம்ப ஆவலை தூண்டி விட்டிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  30. பாட்டுக் கும்மியில கம்பன் கதையை விட்ற போறேன்...பத்துவரியில அதகளம் பண்ணிட்டிங்களே ....கம்பன் கழகத்தார் கம்போட வரப்போறாங்க...
    கவியரசனுக்கு உணர்ச்சியை எழுத்தில் கொட்டவும் நேரில் காட்டவும் தடையேது? ..இப்ப பாத்திங்கன்ன தமிழ் பட விழாக்களில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் பொழுது நம்ம கவிஞர்களுக்கு இருப்புக் கொள்ளாமல் கவிதையாய் வடித்து தள்ளுவார்கள்.....

    பதிலளிநீக்கு
  31. //மயங்கா மன்னன் னு // சூப்பர் சமாளிப்பு ஆதிரா..தமிழ் அழகாக கைகொடுத்துள்ளது...

    பதிலளிநீக்கு
  32. என்னுடைய விருப்பப் பாடல்களையும் சேர்த்துக்கங்க--
    சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து...
    உன்னை ஒன்று கேட்பேன்...
    சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு...

    பதிலளிநீக்கு
  33. அரைக்கண் மூடின சாமியார் தபஸ் மாதிரி இல்ல என் கதை ஆயிடுச்சி!
    பொங்கல் பண்டிகை முடிந்த கையோடு, சுசீலாம்மாவின் பாடல்கள் பற்றி 'பெரும்' பதிவாகப் போடுகிறேன்.. மீனாக்ஷி மேடம்..
    ப்ளீஸ்.. எனக்காக இந்த ஆட்டத்தைக் கொஞ்சம் ஒத்திபோடுங்க அப்பாஜி.
    எனி வே,'உம்மாச்சி' பாட்டா ரெண்டுமூணு சொல்லிட்டு "தெரிந்தும் தெரியாமலும்" சமஸ்தாபராதம் கேட்டுக்கிறேன் ஐயப்பன் கிட்ட.. சரியா?
    1.சரவணப் பொய்கையில் நீராடி..
    2. அழகன் முருகனிடம் ஆசை
    வைத்தேன்
    3.கண்ணா கருமை நிறக் கண்ணா..
    4.செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
    சேதியை..
    5.சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா..

    கஷ்டம்ங்க.. சாமிப்பாட்டாக சொல்ல யோசிக்கும் போது மத்தபாட்டேல்லாம் கூட நினைக்கவேண்டி இருக்கே! அடடா! ரெண்டு மூணு வருஷ விரதம் சேர்ந்து கலையும்ன்னு பத்மனாபன் சொன்னது சரியா போச்சே!(மேல் விவரம் வேண்டுவோர் என் வானவில்லுக்கு வருக!)

    ஒரு ஜென்மம் அவங்களுக்குப் பிள்ளையாப் பொறக்கணும் அப்பாஜி.
    அவங்க தாலாட்ட,நான் தூங்கணும்...

    பதிலளிநீக்கு
  34. 'மாங்கா'ன்னு சொல்லிட்டு 'போங்கா' அடிக்கிறீங்க ஆதிரா?!

    பதிலளிநீக்கு
  35. என்பதுகளில் கோவைக்கு தொலைக்காட்சி முதன் முதலாக கொடைக்கானல் வழியாக வருகிறது..தொடக்கத்தின் முதல் நிகழ்ச்சி பாட்டுதான்..சுசிலாம்மாவின் ..ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் ... ஒலி ஒளியாக கூட்டமாக டி.வி பார்க்கும் அனுபவமும் வராது அது மாதிரி பாட்டும் வராது....

    பதிலளிநீக்கு
  36. ///அரைக்கண் மூடின சாமியார் தபஸ் மாதிரி இல்ல என் கதை ஆயிடுச்சி!///
    கற்பனை பண்ணினாலே சிரிப்பை அடக்கமுடியலையே மோகன்ஜி... இதுக்கெல்லாம் அய்யன் கோவிச்சக்கமாட்டாரு.

    பதிலளிநீக்கு
  37. ஆஹாதிரா.. அப்படியா சேதி? பத்மநாபனும் மோகன்ஜியும் மாங்காயறிந்தார்களோ நான் பிழைத்தேனோ?

    பதிலளிநீக்கு
  38. அரைக்கண் சாமியார் - அடடே, நம்ம கட்சி!

    பதிலளிநீக்கு
  39. முதல் தொலக்காட்சி அனுபவம் அருமை பத்மநாபன்.. நினைத்துப் பார்க்கும் பொழுது நம் தலைமுறை அனுபவங்கள் பலவற்றுக்கு இணையாகச் சொல்ல எதுவுமில்லை. சுசீலா பாட்டு தான் முதல் ஒளிபரப்பா? ஸ்ரீராம் ஏதாவது கொடி பிடித்திருப்பார் என்று தோன்றுகிறது. இல்லையென்றால் டிஎம்எஸ் பாட்டை இல்லையா போட்டிருக்க வேண்டும்?

    பதிலளிநீக்கு
  40. 'செந்தூர் முருகன்' சுசீலா தனிப்பாட்டைச் சேர்த்திருந்தேனே? காணோமே? (awkward!)

    பதிலளிநீக்கு
  41. நெஞ்சைத் தொட்டீர்கள், மோகன்ஜி. 'சுசீலா அபிமானத்'தின் சிகரத்தையும்.
    >>>அவங்க தாலாட்ட,நான் தூங்கணும்...

    பதிலளிநீக்கு
  42. சுசீலா பாட்டு புக் எதுனா வச்சிருக்கீங்களா meenakshi? இப்படி வரிசையா எடுத்து விடறீங்களே? சுசீலா இந்திப் பாட்டு பாடினாரா என்ன?

    பதிலளிநீக்கு
  43. ஸ்ரீராம்

    உங்களை பற்றிய என் எண்ணம் இன்னும் வலுவடையும் வண்ணம் இருக்கின்றது உங்களின் பாட்டு செலெக்ஷன் ! வாவ், வரேவா !!

    பதிலளிநீக்கு
  44. >>அவங்க தாலாட்ட,நான் தூங்கணும்... >>

    மோகன்ஜி, Wow !

    பதிலளிநீக்கு
  45. //நினைத்துப் பார்க்கும் பொழுது நம் தலைமுறை அனுபவங்கள் பலவற்றுக்கு இணையாகச் சொல்ல எதுவுமில்லை//

    என் ப்ளோகில் ஒரு முறை சென்னை விஜயத்தின் போது துக்கம் வராமல் (எப்போது / எங்கே தூங்கி இருக்கின்றேன் நான் !! - இப்போதும் நான் இரண்டு / மூன்று மணிக்கு எழுந்து அல்லாடுவதை கண்டு என் தாய்க்கு ஒரே டென்ஷன் !) ஆண் பாடகர்கள் இருவருக்கு மேல் பாடிய பாடல்கள் என்று ஒரு ப்ளாக் செய்தி போட்டேன் - அதேபோல் நடிகர் நாகேஷின் இறப்புக்கு பின் போட்ட செய்தியிலும் - நம் தலைமுறை கொடுத்து வைத்த தலைமுறை என்று சொன்னேன்.

    உண்மை அப்பழுக்கற்ற உண்மை.

    பி சுஷீலா அவர்களுக்கு வெப்சைட் இருக்கு - அதில் நிறைய பாடல்கள் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  46. ஆமாம் மீனாக்ஷி, பொன்மேனி தழுவாமல் என்னையும் மிகவும் கவர்ந்த பாடல். இதுவும் சரி, நானே வருவேன் பாடலும் சரி ரெண்டுமே தமிழும் ஹிந்தியும் டாப். லதா டாப்பா, சுசீலா டாப்பா என்று போட்டியே வைக்கலாம்! மேலும் துள்ளலான பாடலுக்கு கொஞ்சும் கிளி வந்தது, அப்புறம் மனம் படைத்தேன் உன்னை, அன்பில் மலர்ந்த நல் ரோஜா....கர்ணன், புதிய பறவை பாடல்கள், வா அருகில் வா,..........
    செந்தூர் முருகன் கோவிலிலே சுசீலா சோலோ இருக்கா என்ன..?

    பதிலளிநீக்கு
  47. இருக்கு ஸ்ரீராம்; சேர்த்திருக்கேன். எப்படியோ தவறிடுச்சு முதல் சுத்துல. (எங்கே... சுசீலா தனிப்பாட்டை உண்மையிலே கேட்டா தானே? சும்மா வெளிப் பாசாங்கு செஞ்சா இப்படித்தான் - lesson learned :)

    அந்தப் பாட்டை அரசன் விரும்பிக் கேட்பார் - பாட்டின் நடுவில் சுசீலா ஹம்மிங், வயலின், குழல் மூணும் ஒரே ட்யூனை இழுக்கும்.. குழலினிது வயலினிது என்பார் நம்சுசீலா ஹம்மிங் கேளாதவர்னு ரீலடிப்பாரு அரசன்.. கேட்டுப்பாருங்க.

    பதிலளிநீக்கு
  48. பெயரில்லாநவம்பர் 30, 2010

    இப்பத்தான் படிச்சேன் பதிவை. வாத்தியாரை மறக்காத புள்ளாண்டான்.

    விவரம் தெரிஞ்சதும் ரொம்ப் கஷ்டமா இருந்தது. ஒரு மாதிரி கதை முடிஞ்சாச்சு போ! ஒண்ணு மாத்தி ஒண்ணு Closure. நமக்கெல்லம் வயசாயிடுச்சப்பா!

    பதிலளிநீக்கு
  49. Exactly ஸ்ரீராம்! சுசீலாவா, லதாவான்னு பட்டி மன்றம் நடத்தினாலும் தீர்ப்பு சொல்ல முடியாது.

    இதை கேளுங்க ஸ்ரீராம்!
    http://tamilmp3songslyrics.com/songpage/Shanthi-Cinema-Film-Movie-Song-Lyrics-Sendhoor-murugan-kovililey-1/3462

    சில பாடல்களை கேட்க்கும்போது எப்பொழுதுமே ஏனென்றே தெரியாமல் கண்கலங்கும். சாந்தி படத்தின் பாடல்கள் எல்லாமே அப்படித்தான், மனம் உருகிவிடும்.

    பதிலளிநீக்கு
  50. சுசீலாவின் ரசிகர் மன்றம் கன ஜோரா போய்கிட்டு இருக்கு. எனக்கு கேட்கத்தான் தெரியும். நான் ரொம்ப சின்னப் பையனா அதனால இங்க நீங்க சொல்ற சில பாட்டெல்லாம் கேட்டதே இல்லை. முதலில் கேட்டுட்டு அப்புறமா கமேன்டறேன்.

    மோகன்ஜி இன்னும் சில சாமியார்(?) வகையறா உண்டு. அரைக்கண் கூட திறக்கவேண்டாம். கண்ணை மூடிண்டே மூக்கை உறிஞ்சி மஞ்சள் வாசனை தூக்கலா இருந்தா கோமா மாமி, லாவெண்டர் பவுடர் மூக்கில் யேரித்துன்னா பட்டு மாமி, "ஜல் ஜல்" ன்னு பொங்கல் மாடு மாதிரி கொலுசு சத்தம் கேட்டுதுன்னா பக்கத்தாத்து பங்கஜம் மாமி, "புஸ் புஸ்"ன்னு புல்டோசர் மாதிரி மூச்சிரைக்க வந்தா அது டபுள் டக்கர் ரேவதி மாமி.......

    (என்னது ஒரே மாமி புராணமா இருக்கா... கண்ணை மூடிண்டு என்னவெல்லாம் கரெக்ட்டா கண்டுபிடிக்கலாம் அப்படின்னு தனி பதிவே போடலாம். மூக்கும் காதும் ரொம்ப பொல்லாது. ஆளை இழுத்து மனசுக்குள்ள உட்டுடும்... போதும்...போதும்...யாரும் அடிக்க வரதுக்குள்ள நிப்பாட்டிக்கறேன்... )

    பதிலளிநீக்கு
  51. RVS super! :) பாவம் மோகன்ஜி! ஒரே மாமி புராணமா பாடி மலைக்கு மாலை போட்டுண்டு இருக்கறவரை உண்டு இல்லைன்னு ஆக்கறீங்க. பரவாயில்லை, எல்லாத்தையும் படிச்சுட்டு, 'அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும்' ஸ்லோகத்தை கூட ஒரு நாலுதடவ சொல்லிடட்டும்.

    பதிலளிநீக்கு
  52. ஆர்.வி.எஸ்..அடங்கமாட்டே நீ ...
    என மோகன்ஜி கத்தறது அரபிக்கடல் தாண்டி கேக்குது...

    ஐயப்பா..ஜனவரியில் இதுக்கெல்லாம் பதில் வச்சுக்கலாம்..சரணத்தை டைட் பண்ணிக்கொங்க....

    பதிலளிநீக்கு
  53. கண்டுபிடிச்சிட்டீங்களே பத்மநாபன்.. சந்தடி சாக்குல கம்பன் கசமுசா எடுத்து விட்டா.. (மையைக்கதை நிஜம் என்று நிறைபேர் நம்புகிறார்கள். எல்லாம் தெரிந்தவன் என்று நினைக்கக் கூடாது, எளியவர்களுக்கும் திறமை உண்டு... என்பதற்கு பாடமாகவும் இதைச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  54. boganஇன் பக்கத்து வீட்டு மாமி கமெந்ட் இப்பத்தான் புரியுது RVS

    பதிலளிநீக்கு
  55. //RVS சொன்னது… நான் ரொம்ப சின்னப் பையனா //

    மோகன்ஜி சாமி !! சுகம்தன்னே !!

    "ஆர்.வி.எஸ் யூத்தாமாம் - Youth !!" (வடிவேலு சச்சின் படத்தில் சொல்லுவார் !!)

    பதிலளிநீக்கு
  56. லதா மங்கேஷ்கருக்கும், சுசீலாம்மாவிற்கும் ஒப்பீடு செய்ய மனம் வருவதில்லை. வெண்கல மணிக்கும் வெள்ளிமணிக்கும் ஓசையில் கேட்கும் வித்தியாசமே அது. தாமரையையும் ரோஜாவையும் எதைக் கொண்டு ஒப்பிடுவீர்கள்? மென்மை கொண்டா? மணம் கொண்டா?அழகு கொண்டா??
    லதா,பக்தமீராவின் கையில் உள்ள தும்புரு. சுசீலா ஆண்டாளின் கைக்கிளி!சுசீலா தேர்! லதாவோ முத்துப் பல்லக்கு. ஒப்பிட மனம் ஒப்புவதில்லை ஸ்ரீராம்!

    மீனாக்ஷி மேடம்! ஆர்.வீ.எஸ் கொட்டம் பார்த்தீங்க இல்ல?! திரும்ப வந்து கச்சேரியை வச்சுக்குவோம். மறக்காம எனக்கு நினைவூட்டுங்க!உங்ககிட்ட இதை சொல்லிகிட்டிருக்கும் போது சுசீலம்மா,'ரக்ஷரக்ஷ ஜெகன்மாதா! ரக்ஷரக்ஷ ஜெய துர்கா'ன்னு சிஸ்டம்ல பாடிக்கிட்டு இருக்காங்க!

    சாய்!ரொம்ப நாளாச்சு! நலமா?

    பத்துஜி! இந்த வருடம் விரதகாலத்தில் வலைப்பூ புது சேர்க்கை.. ரொம்பவே துழாவும் ஆர்வத்தை, அடக்கிக் கொள்கிறேன்..ஆர்.வீ.ஈஸ்க்கு அடுத்த வருஷம் மாலையைப் போட்டு விடலாம்! என்ன செய்வார் அப்போது எனப் பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  57. சரிதான் மோகன்ஜி. சுசீலாவையும் லதாவையும் ஒப்பிடுவானேன்? இரண்டுமே டாப்ஸ். இதே டிஎம்எஸ் கிசோர் புசோர் ரபி குபினு ஏதாவது சொல்லுங்க - கம்பேரை கிம்பேர் பண்ணிறமாட்டோம்?

    பதிலளிநீக்கு
  58. இன்னும் கொஞ்சம்(சும்) சுசீலா
    ஹிந்தியில் கிஷோரே குமார் பாடி சூப்பர் ஹிட் ஆனா 'மேரா ஜீவன் கோரா காகஸ், கோரா ஹீ ரே கயா' என்ற பாடலின் சாயலை கொண்டு தமிழில் வந்த பாடல் 'வசந்தங்கள் வரும் முன்னே வெயில் வந்தது'. எம்.எஸ்.வீ. இசையில் கண்ணதாசன் வரிகளில் வந்த அருமையான பாடல்.
    இதே போல் 'மறக்க முடியுமா' படத்தில் வரும் 'வசந்த காலம் வருமோ' என்ற பாடலும் மறக்க முடியாத பாடல்.

    மோகன்ஜி, தயவு செஞ்சு இந்த மேடம் எல்லாம் வேண்டாம் ஜீ. நீங்க மலைக்கு போயிட்டு வாங்க, மறக்காம நானே உங்களுக்கு நினைவு படுத்தறேன்.
    என்னது 'ரக்ஷ ரக்ஷ ஜகன் மாத' கேட்டுண்டு இருக்கீங்களா, நான் இங்க 'ரகசியம் பரம ரகசியம்' கேட்டுண்டு இருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  59. என்னுடைய சாய்ஸ்:
    மேலே உள்ள எல்லா பாடல்களும் + உன்னை நான் சந்தித்தேன், நீ ஆயிரத்தில் ஒருவன் - இந்த பாடலின் சிறப்பம்சம்: அதிகம் பேர் சீண்டாத, 'சுபபந்துவராளி' இராகப் பாடல்.
    (பதிவில் உள்ள பாடல்களைக் கேட்க முடியவில்லை. )

    பதிலளிநீக்கு
  60. பெரியோர்களின் வேண்டுகோளுக்கிணங்க என்னுடைய இந்த இப்பதிவின் பின்னூட்ட ஆட்டத்தை இத்தோடு முடித்துக் கொள்கிறேன். சாய்! எந்த லாங்குவேஜில் சொன்னாலும் எப்படி அழுத்திச் சொன்னாலும் நான் யூத் தான். வேண்டுமானால் பத்துஜியை கேட்டுப்பாருங்கள். சென்னைக்கு வந்திருந்த பொழுது என் குரல் வளத்தில் மயங்கி ஒரு மணி நேரம் என்னுடன் டெலி காலிங் மங்கையரோடு கடலை போடுவது போல பேசினார். (யாரப்பா அது... கொஞ்சிப் பேசினாரா என்று தாறுமாறா கேள்வி கேட்பது...)

    மோகன் அண்ணா மலைக்கு போய்விட்டு வந்தவுடன் சுதியாக கச்சேரி வைத்துக் கொள்ளலாம் என்கிறார். சிரம் தாழ்த்தி ஏற்கிறேன். மோகன்ஜி ஐயா நான் இரண்டு வருடங்கள் சபரிமலை யாத்திரை என் அத்திம்பேருடன் சென்றிருக்கிறேன் என்ற அறிய தகவலை இங்கு சமர்ப்பிக்கிறேன். ஐயப்பன் அருளாசியுடன் மொக்கை இனிதே நடக்கக் கடவது. சாமி மலையேறி விட்டு வந்தப்புறம் மாமி கதைகள் தொடரும் அப்படின்னு ஒரு கார்டு போட்டுடலாமா? (சரி..சரி...பத்துஜி அரபிக்கடல் தாண்டி காட்டுக் கத்தலா கத்தறது காதில் விழுகிறது... அடங்கிட்டேன்.. அடங்கிட்டேன்... )

    பதிலளிநீக்கு
  61. //அப்பாதுரை சொன்னது…

    boganஇன் பக்கத்து வீட்டு மாமி கமெந்ட் இப்பத்தான் புரியுது RVS
    //
    எனக்கு கீழ்கண்ட பாடும் மாமிகள் ரொம்ப பிடிக்கும்.
    1. நித்யஸ்ரீ மகாதேவன்
    2. சுதா ரகுநாதன்
    3. பாம்பே ஜெயஸ்ரீ
    4 சௌம்யா
    அடுத்தமுறை பக்கத்தாத்து பாடும்... இல்லை.. இல்லை.. கத்தும் மாமியை கண்டால் என் காதை அறுத்து தூக்கி எறிந்துவிடலாம் என்று நினைக்கிறேன். ;-)

    பதிலளிநீக்கு
  62. வாங்க kgg; ரொம்ப நாளாச்சே? நேத்து தான் உங்களப் பத்தி நெனச்சுட்டிருந்தேன் RVS பதிவுல மார்கழி கச்சேரி சீசன் பத்தி படிச்சப்ப.

    'உன்னை நான்' பாட்டுக்காகவே க்கும் பாட்டுக்ககவே பாட்டுக்ககவே அந்தப் படத்தை நிறைய தடவை பாத்திருக்கேன். ஏ ஒன் சாங்க்.

    (பாடல் கேட்க முடியலியா, கேட்க சகிக்கலியா? :)

    பதிலளிநீக்கு
  63. RVS.. புச்சா இருக்குதே கோணம்? இத வச்சு ஒரு கதை எழுதலாம் போலிருக்கே?
    >>>டெலி காலிங் மங்கையரோடு கடலை போடுவது போல

    பதிலளிநீக்கு
  64. // (பாடல் கேட்க முடியலியா, கேட்க சகிக்கலியா? :)//

    சாரி - கேட்க இயலவில்லை. ஒரு வெற்று, வெள்ளைச் சுவர்தான் தெரிகின்றது, மியூசிக் பிளேயர் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  65. சிக்கல்தான் kgg; flash player தேவைப்படும்; apple தவிர மிச்ச உலாவிங்கள்ள இருக்கும்னு கேள்வி - என் டெக்னிகல் ஞானம் அத்தோடு சரி..

    பதிலளிநீக்கு
  66. ஆர். வி. எஸ் யூத்து தான் ஒத்துக்கேறேன் ....

    வாத்தியார் ரிட்டையர்மென்ட் பத்தி ஒரு கட்டுரையில் இப்படி சொல்லியிருப்பார் '' கிரிக்கெட் விளையடுபவர்களுக்கு 60 வயதும் சினிமா கதாநாயகர்களுக்கு 70 வயதும் ஒய்வு வயதாக அறிவிக்க வேண்டும் ''

    இந்த ஜெர்க் ல பார்த்திங்கன்னா சிக்கிரம் ரிட்டையர் ஆகி தொலைங்கப்பா ங்கற ஆதங்கம் நகைச்சுவையா வரும் .... அந்த மாதிரி யூத் வயதை 60 க்கு நிர்ணயம் பண்ணிட்டம்ன .... இன்னமும் 20 , 25 வருஷம் யூத்து யூத்துன்னு கழக இளைநர் அணி செயலாளர்கள் மாதிரி வலம் வரலாம் ... ரொம்ப நோண்டுனா மனசுல யூத்துன்னு சொல்லிக்க வேண்டியதுதான் .....

    பதிலளிநீக்கு
  67. ///1. நித்யஸ்ரீ மகாதேவன்
    2. சுதா ரகுநாதன்
    3. பாம்பே ஜெயஸ்ரீ
    4 சௌம்யா//

    இந்த மாமிகளின் பாட்டு எனக்கும் பிடிக்கும்...நாம பாட்டு கேட்போம் ..ஆனா நம்ம வீட்டு மாமிகள், அவங்க லோலாக்கு , ஆரம், சேலை ,வளையல்
    ஒன்னொன்னா பார்த்துட்டு நம்மள பாட்டு கேட்க விடமாட்டாங்க ...ஜண்ட வரிசையை விட்டுட்டு சரளவரிசையில் சண்டை போடறது தான் மிச்சம்....

    பதிலளிநீக்கு
  68. @பத்மநாபன்
    ஒரு அக்மார்க் யூத் இந்த உலகத்தில யூத்ன்னு சொல்லிக்க முடியலன்னா என்ன சுதந்திரம் இருக்கு சொல்லுங்க... இதுக்குத்தானா காந்தி தாத்தா நாட்டுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தார்.. நா இனிமே யூத்ன்னு சொல்லிக்கலை சார்! அதுக்கு பதிலா அப்பாஜி, பத்துஜி, மோகன்ஜி, சாய் போன்றோர் வலையுலக மார்க்கண்டேயர்கள் என்று அறிவித்து வெள்ளைக்கொடி பிடிக்கிறேன். நன்றி...

    எந்த மாமி பாடும்போது என்ன அட்டிகை போட்டுன்ட்ருக்கா, என்ன ஜிமிக்கி மாட்டிண்டுருக்கா, கட்டின்டிருக்கறது வஸ்த்ரகலா பட்டா சாமுத்ரிகா பட்டா போன்ற இன்றியமையாத கேள்விகளுக்கு தெளிவான விரிவான விடை தெரிய திருவாளர் பத்துஜியை அணுகவும். நன்றி ;-)

    பதிலளிநீக்கு
  69. //RVS சொன்னது… சாய் போன்றோர் வலையுலக மார்க்கண்டேயர்கள் //

    ஆர்.வி.எஸ்.

    நான் மார்க்கேண்டேயன் கிடையாது, சாவை எண்ணி காத்திருக்கும் ஓர் சாதாரண ஜந்து, நீங்கள் வேறு. என்னுடைய அடுத்த ப்ளாக் செய்தியே "நான் இறந்தால்" என்று தான் !!

    பதிலளிநீக்கு
  70. கோட்டுக்கு புள்ளிவச்சா புள்ளிய இழுத்து கோடாக்கி ..அந்த கோடை ரோடா மாத்தி நடுவுல வெள்ளைக் கோடும் வரையறதல ஆர்.வி.எஸ் கில்லாடின்னு தெரியும்....அதுக்காக அட்டிகையெல்லாம் ஓவரு சுப்ரமணி...

    சரி சரி கேளுங்க கேளுங்க...திருமதி பத்துஜி யை கேட்டு சொல்றேன்...

    பதிலளிநீக்கு
  71. RVS, எங்கிருந்து பிடிக்கிறீங்க இந்த மாதிரி வார்த்தையெல்லாம்? கேக்குறதுக்கே கிக்கா இருக்கே? இதுக்கு உங்களுக்கு ஏதாவது யூத் பட்டம் கொடுக்கலாம்னு தோணுதே?
    >>> வஸ்த்ரகலா பட்டா

    (யாரு கலா? அவங்க வஸ்த்ரம் என்னாச்சு? கலா யார் மேலே பட்டா? இல்ல, யார் கலா மேலே பட்டா? விவரமா சொல்லுங்க... உங்க பதிவுல சொன்னாலும் சரிதான்)

    பதிலளிநீக்கு
  72. கோடு போட்டா ரோடு போடுறதைப் பத்தி சாய் சொன்னது இப்பத் தான் புரியுது.. இவ்வளவு மகத்துவம் இருக்குதா இதுக்குப் பின்னால? நன்றி பத்மநாபன்.
    >>>கோட்டுக்கு புள்ளிவச்சா புள்ளிய இழுத்து கோடாக்கி ..அந்த கோடை ரோடா மாத்தி நடுவுல வெள்ளைக் கோடும் வரையறதல...

    பதிலளிநீக்கு
  73. அதுக்கு முன்னாலே எரிகறி (கேள்விப்பட்டதே இல்லையே சாய்?), கார உப்புமா, மோர்க்களி ரெசிபி எல்லாம் பதிவுல போட்டுறுப்பா... இல்லென்னா துரத்திக்கிட்டு வந்துருவம்.
    >>>அடுத்த ப்ளாக் செய்தியே "நான் இறந்தால்"

    பதிலளிநீக்கு
  74. // வஸ்த்ரகலா பட்டா

    (யாரு கலா? அவங்க வஸ்த்ரம் என்னாச்சு? கலா யார் மேலே பட்டா? இல்ல, யார் கலா மேலே பட்டா? //

    மொத்தம் மூன்று பேர்கள் என்று நினைக்கின்றேன்.
    வஸ்த்ரா
    கலா
    பட்டு

    ஹ ஹ ஹா!

    பதிலளிநீக்கு
  75. மூணு பேரா? த்வா?
    kgg, எங்கியோ போகுதே இது?!
    என்ன்ன்ன்னதிதூ RVS?

    பதிலளிநீக்கு
  76. செந்தூர் முருகன் கோவிலிலே.... பாடலை நான் கேட்டேன் - இப்போ. இதுக்கு அறுபது மார்க்குதான். மறந்துபோன இன்னொரு பாடல் ஞாபகம் வந்துவிட்டது. 'மாலை சூடும் மண நாள், இள மங்கையின் வாழ்வில் ....'
    இந்தப் பாடலில் வருகின்ற "எ..ல்... லை, ----- இ...ல்...லை" வார்த்தைகளின் கொஞ்சல் கெஞ்சல்களை கனம் கோர்ட்டார் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

    பதிலளிநீக்கு
  77. //அப்பாதுரை சொன்னது… அதுக்கு முன்னாலே எரிகறி (கேள்விப்பட்டதே இல்லையே சாய்?), கார உப்புமா, மோர்க்களி ரெசிபி எல்லாம் பதிவுல போட்டுறுப்பா... இல்லென்னா துரத்திக்கிட்டு வந்துருவம்.

    >>>அடுத்த ப்ளாக் செய்தியே "நான் இறந்தால்"//

    காசிக்கு போனாலும் கர்மம் விடாது மாதிரியா !! அங்கேயாவது ரம்பை, ஊர்வசியுடன் ஜல்சாவா இருக்கேன். ஆளை விடு.

    ஆஹா ஆஹா, கிழே என் அம்மாவின் சமையல் மூக்கை துளைக்குதே !! இன்னிக்கு என்னவென்று பார்ப்போம்.

    அதுவும் ஏகாதசி, துவதேசி, அம்மவாசை என்று ப்ரஹ்மணா போஜனப்ரிய தான் !! இன்று துவதேசியாம் !!

    பதிலளிநீக்கு
  78. எரிசேரி - நான் அதை ரெட் மோர்க்குழம்பு என்று நினைத்தேன் ?

    கீது கரெக்டா ? இல்லே எனக்கு ரெண்டும் தெரியலையா ?

    என் அம்மா நீ கேட்டாய் என்று நிறைய ஸ்பெஷல் யோசித்து வைத்து இருக்கா. ரிலீஸ் பண்ணறேன்.

    அவள் சாமியடிப்பதுபோல் சந்தியாவேளையில் தூங்கி, ராத்திரி சன் டி.வி.யில் பதினொரு மணிவரை சீரியல் பார்க்காமல் தூங்குவதில்லை !!

    வரும் ஆனா வாராது இல்லை. வரும் ஆனால் லேட்டாய் வரும்.

    பதிலளிநீக்கு
  79. கம்பர் கதையில்,
    முதல் நாள் அவர் கேட்ட (ஏற்றம் இறைக்கும் பெண்ணின்) பாடல்:
    "மூங்கில் இலை மேலே
    தூங்கும் பனி நீரே...
    தூங்கும் பனி நீரை ..."
    நீட்டி முழக்கி இராகமாக இந்த மூன்று வரிகளைப் பாடி முடிப்பதற்குள்,
    நீர் நிரம்பி விட்டதால், ஏற்றப் பெண் ஏற்றத்திலிருந்து இறங்கிச் சென்றுவிட்டாள். அவள் இறங்கிச் சென்று விட்டாலும், கம்பர் மனதில் ஆர்வத்தை ஏற்றிச் சென்றுவிட்டாள்.
    மறுநாள் அங்கே ஆர்வமாக வந்த கம்பர் மீண்டும் அந்த மூன்று வரிகளை ஆதியோடு அந்தமாகக் கேட்டு -- அடுத்த வரி என்ன என்று காதைத் தீட்டிக் கேட்க முனைய....
    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  80. //'மாலை சூடும் மண நாள், இள மங்கையின் வாழ்வில் ....'//

    KGG good one to get reminded off.

    பதிலளிநீக்கு
  81. அப்படிப் போகுதா கதை? சொல்லுங்க kgg.. (பின்னூட்டதிலேயே தொடரும் போடறீங்களே.. மொதல் க்ரெட்டி உங்களுக்குத்தான்னு நெனக்கிறேன்.. கில்லாடி சார்.)

    மாலை சூடும் பாட்டு எனக்கும் பிடிக்கும். வருசக்கணக்காச்சு கேட்டு.

    பதிலளிநீக்கு
  82. ரெட் மோர்குழம்பு எரிசேரி எதுவானாலும் சரி சாய். சேனைக்கிழங்கு கறி/மசியல்.. பெங்களூர் நாட்களின் நினைவு.

    பதிலளிநீக்கு
  83. ஆஆஆவ் ...
    இரவு மணி பதினொன்று (இங்கே)
    ஏற்றப் பெண் என்ன பாடினாள் என்பதை,நாளைக் காலையில் வந்து பதிகின்றேன்...
    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  84. //அப்பாதுரை சொன்னது… ரெட் மோர்குழம்பு எரிசேரி எதுவானாலும் சரி சாய். சேனைக்கிழங்கு கறி/மசியல்.. பெங்களூர் நாட்களின் நினைவு. //

    I am almost having those days now !! Thanks to my mother visit.

    Infact kids are enjoying the diversity of Thirunelveli food

    சுட சுட தோசை, இட்லி அதனுடன் நச்சுன்னு ஏற புளி-மிளகாய்-இஞ்சி ? சுகம் சுகம் !!

    பெங்களூர் - பன்னி மாதிரி திண்ண காலங்கள்.

    பதிலளிநீக்கு
  85. சாய்ராம், அதுவும் குளிர்காலத்தில் புளி மிளகாய் இஞ்சி கூடுதல் சுவைதான். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

    பதிலளிநீக்கு
  86. //பிளாகர் kggouthaman கூறியது...

    கம்பர் கதையில்,
    முதல் நாள் அவர் கேட்ட (ஏற்றம் இறைக்கும் பெண்ணின்) பாடல்:
    "மூங்கில் இலை மேலே
    தூங்கும் பனி நீரே...
    தூங்கும் பனி நீரை ..."//
    வாங்கும் கதிரோனே
    :-)

    பதிலளிநீக்கு
  87. // பாலராஜன்கீதா கூறியது...
    //பிளாகர் kggouthaman கூறியது...

    கம்பர் கதையில்,
    முதல் நாள் அவர் கேட்ட (ஏற்றம் இறைக்கும் பெண்ணின்) பாடல்:
    "மூங்கில் இலை மேலே
    தூங்கும் பனி நீரே...
    தூங்கும் பனி நீரை ..."//
    வாங்கும் கதிரோனே //

    (முற்றும்!)

    பதிலளிநீக்கு
  88. அப்போ கம்பன் மன்னார்குடி போவலியா?

    (நன்றி கௌதமன், பாலராஜன் கீதா)

    பதிலளிநீக்கு
  89. அப்பாஜி! உங்களுக்கு கம்பனும் ஔவையும் அடிச்சுகிட்ட "ஒரு காலில் நாலிலைப் பந்தலடி!" கதை தெரியுமோ?

    பதிலளிநீக்கு
  90. //சுசீலாவினால் தான் டிஎம்எஸ்சுக்கு பெருமை" என்பார்//

    இதுவரை மறுமொழிகளே படித்ததால் அங்கவஸ்திர ஜரிகை போலே கடைசியில் எழுதிய இதை பார்க்க மறந்துவிட்டேன்.

    அவருக்கு டி.எம்.எஸ். பிடிக்காது என்று தெரிந்து இருந்தால் முன்பே சண்டை போட்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  91. //geetha santhanam கூறியது... சாய்ராம், அதுவும் குளிர்காலத்தில் புளி மிளகாய் இஞ்சி கூடுதல் சுவைதான். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் //

    ஐயோ சொல்லாதே. நேற்று முறுமுறு தோசையுடன் நச்சென்று நாக்கில் சுள்ளென்று புளி-மிளகாய்-இஞ்சி - சூப்பாரோ சூப்பர் !

    என் பெரியப்பா ஒருவர் (எனக்கு எக்கச்சக்க பெரியப்பா / சித்தப்பா என்று உனக்கு தெரியுமோ !) சுட சுட ரசம் சாதம் சாப்பிடும்போது மின்விசிறியை அணைத்துவிட்டு உதட்டின் மேல் வேர்க்கவேண்டும் என்று இருப்பார் !! அதுவும் நான் மெடிக்கல் ரெப் ஆக இருக்கும் போது சென்னையில் மின்விசிறியை அனைத்துவிட்டாரே என்று கடுப்பாக இருக்கும் ! அது ஒரு சுகம் என்று புரிய நாள் ஆனது !!. உஸ் உஸ் சென்று சொல்லியே சாப்பிடுவார்.

    எனக்கு அதேபோல் நேற்று இந்த குளிரில் வேர்த்துவிட்டது !

    பதிலளிநீக்கு