2010/11/18

தமிழ் வேட்டி



            'ரசமன்பு பற்றி விளக்குவதாகச் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆயிட்டீங்களே?' என்று இதுவரை வந்த ஏழு மின்னஞ்சல்களின் நெருக்கடி காரணமாக, இதோ ரசமன்பு விளக்கம். (அனுப்பியது ஒரே நபர் என்றாலும் ஏழு மின்னஞ்சல் என்று சொல்லும் பொழுது ஆயிரக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில், படுத்துக் கொண்டே ஜெயித்த திருப்தி)

என் தந்தைவழிப் பாட்டனார் அதிகம் பேச மாட்டார். ஆனால் பேசினால் ஜாலியாக நிறைய ரீல் விடுவார். பி.யூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் அவருக்குப் பிடிக்கும். எங்களுடைய ஓட்டை மர்பி ரேடியோவில் எப்போதாவது வரும் இவர்களின் பாடல்களை, "ஏலே.. இதாம் பாட்டுலே. அம்புட்டும் ஃபஷ்டாக்கும்" என்று ரசித்தபடியே அவர் மட்டும் கேட்பார். எனக்குப் பாவமாக இருக்கும். ஒரு முறை சுந்தராம்பாளின் 'ஞானப்பழத்தைப் பிழிந்து' பாடல் ஒலிபரப்பானது. சும்மா பேசுவோமே என்று, "தாத்தா, ரசமம்புனா என்ன?" என்றேன். 'ஞானப் பழத்தைப் பிழித்து ரசமம்பினால்' என்று பாடியதாக நான் நினைத்தேன்.

"ரசமம்பு இல்லேடா, ரசமன்பு" என்றார் தாத்தா. "எதோ ஒண்ணு, அப்படினா என்ன தாத்தா?" என்றேன் விடாமல். "ஞானப் பழத்தை பிழிஞ்சா அன்பு ரசமா வரும், அதான் ரசமன்பு" என்றார். தாத்தாவின் ஞானத்தை வியந்து ரசித்தேன். சில வருடங்கள் கழித்து அந்தப் பாடலைப் பொறுமையாகக் கேட்டபின் தான் கே.பி.சுந்தராம்பாள் பாடிய அசல் 'ரசமன்பு' என்னவென்றே தெரிந்தது! 'தவறான பதில் என்று தெரிந்தும் சரியான பதில் போல் சொல்வது - எல்லாம் தெரிந்தவர் போல் பேசுவது' அன்றிலிருந்து ரசமன்பாகிவிட்டது. என் தாத்தா போலவே நானும் ரசமன்பு விவகாரத்தில் முனைவர் பட்டம் பெறத் தகுதி வாய்ந்தவன்.

'ஞானப்பழத்தைப் பிழிந்து...' அற்புதமான கவிதை. எழுதியவர் எங்க ஊர்க்காரர் தெரியுமோ? சங்கரதாஸ் சுவாமிகள். (ரசமன்பு?)

            ந்த இடுகைக்கு நானும் ஒரு கவிதை எழுதுவது என்று தீர்மானித்திருந்தேன். இயற்கை, காதல் என்று மாவு திரிக்காமல் இலக்கியத்தரமாக எழுத நினைத்தேன்.
        லீப் வருட முதல் தேதி
        உலகெங்கும் தற்கொலைத் தினம்.

சொன்னால் நம்ப வேண்டும், இந்த இரண்டு வரிகளை வைத்துக்கொண்டு இரண்டு நாள் விழித்தது தான் மிச்சம். நம் இலக்கியத்தரம் இவ்வளவுதான் என்று சலித்தேன். சவால் கவிதைப் போட்டி வைக்கலாமென்று கூடத் தோன்றியது. சிவகுமாரன் எப்படி ஹைகூ, மரபுக்கவிதை என்று இந்தப் பின்னல் பின்னுகிறார்? எனக்கும் கவிதை வந்த காலம் உண்டு. ஹ்ம்!

உ.வே.சாமிநாதய்யர் 1940ல் தன் சுயசரிதையில் இப்படி எழுதியிருக்கிறார்:

        'இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புகள் அந்தக் காலத்தில் இல்லை. ஆனாலும் அழகு இருந்தது. அமைதி இருந்தது. ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் காணவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்து விடவில்லை. அவர்கள் உள்ளத்தில் சாந்தி இருந்தது. இப்போதோ அந்த சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
        அந்தக் காலத்தில் பெண்களுடைய நிலைதான் மிகவும் கஷ்டமானதாக இருந்தது. மாமனார், மாமியார், நாத்தனார் முதலியவர்களால் அவர்கள் படுங்கஷ்டங்கள் பெரும்பாலான வீடுகளில் உண்டு. மற்ற எல்லா விஷயங்களிலும் அக்கால வாழ்க்கை சிறந்ததாக இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் குறைபாடாகவே இருந்தது.'

எழுபது வருடங்கள் கழித்து இதைப் படிக்கும் பொழுது இன்று காலையில் எழுதினாற் போலிருக்கிறது எனக்கு. ('என் சரித்திரம்' படிக்கத் தொடங்கியிருக்கிறேன். சுவையான புத்தகம். அறிமுகத்துக்கு நன்றி, மோகன்ஜி)

            பெண்களுடைய கஷ்டத்தைப் படித்ததும், பாருங்கள், அப்படியே மனமுருகிவிட்டது. நான் நட்புடன் பழகும் தம்பதிகளில் ஒரு பெண்மணி 'வேலை வேலை' என்று புலம்பிக்கொண்டே இருப்பார். மூணு பேருக்கு சமையல், இத்தனை பாத்திரம் விழுது, துணி தோய்க்கணும், வீட்டைச் சுத்தம் செய்யணும், கடைக்குப் போகணும் அப்படி இப்படி என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு நாள் கேட்டு விட்டேன். "அம்மணி... பத்து பாத்திரம் எங்கே தேய்க்கிறீங்க? பாத்திரத்தை டிஷ் வாஷருல அடுக்குறீங்க. துணியை வாஷர் டிரையருல போடுறீங்க. கடைக்கு, கார்ல போய்ட்டு கார்ல வரீங்க. வீட்டுல என்ன சாணி போட்டா முழுகுறீங்க? வேகூம் க்ளீனரை வச்சு அப்படி இப்படி வாகிங்க் போறீங்க.. எவ்வளவு வேலை, நியாயம் தான்" என்ற என் நக்கல் புரிந்ததோ இல்லையோ, புலம்புவதை நிறுத்தி விட்டார். வளரும் பருவத்தில் நாங்கள் அழுக்குத் துணிகளை வாளியில் நனைத்து, லைன் கட்டி நின்று கல்லில் கசக்கித் தோய்த்தோம். என் சகோதரிகள், அம்மா எல்லோரும் 'விம்'மில் தோய்த்த தேங்காய் நாரினால் பத்து பாத்திரம் சுத்தம் செய்தார்கள். இன்றைக்கு எனக்கு ரோபாடிக் வேகூம் க்ளீனரின் விசையைத் தட்ட மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. வளர்ச்சியின் வலிகள்.
விஞ்ஞானத்தை வளக்கப் போறண்டி | 2010/11/18


            ணின் கஷ்டத்தை யாரிடம் சொல்லி அழுவது? ஆணின் கஷ்டம் பெரும்பாலும் பணம் அல்லது புணர்ச்சி இரண்டில் ஏதாவதொன்றாக இருக்கிறது, ஏனென்று தெரியவில்லை.

இன்னொரு நட்புக் குடும்பம் இந்தியா திரும்புகிறது. இரண்டு பெண்களையும் படிக்க வைத்து முறையே வெள்ளைக்காரனுக்கும் சைனாக்காரனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு, கடமை முடிந்த களிப்பில் இந்தியா திரும்புகிறார்கள். அவர்களையும் இன்னும் சில நட்புக் குடும்பங்களையும் சமீபத்தில் என் வீட்டிற்கு அழைத்திருந்தேன். இந்தியா திரும்பும் மனநிலையில், நண்பர் அமெரிக்கா வந்த இருபது வருடங்களில் தான் சாதித்த பெருமைகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். "அமெரிக்கா வந்து நடக்கணும்னு நெனச்சது, எதுனா நடக்காம போச்சா?" என்று கேட்டேன்.

கொஞ்சம் யோசித்து விட்டு, "பர்சனலா எதிர்பார்த்தது நடக்காம போயிருச்சு, ஆனாலும் பாதகமில்லே...பெரிசு படுத்த விரும்பலை.. இங்க வந்து மேற்கத்திய நாகரீகப்படி நடந்துக்குவானு நெனச்சேன்" என்றார், தன் மனைவியின் பெயரைச் சொல்லி. செக்ஸ் விஷயம் என்று அவருடைய தயக்கத்திலேயே தெரிந்து விட்டது. "இது வரைக்கும் என் மனைவி என் உதட்டுல முத்தமே கொடுத்ததில்லை துரை" என்றார். "கல்யாணமாகி முப்பது வருசமாச்சு. தானா ஒரு முத்தம் கொடுத்ததில்லை. நானா கொடுத்தாலும் கன்னத்துலதான்" என்றார். உண்மையிலேயே வருத்தப்பட்டார்.

நான் இதை எதிர்பார்க்கவில்லை. உதட்டில் முத்தம் கொடுக்காமல் ஒரு திருமண வாழ்க்கையா? அதுவும் முப்பது வருடங்களா?! முத்தமில்லாத இடத்திலே அன்பில்லை என்பார்கள் (மாற்றிச் சொல்கிறேனோ?). இவர்களைப் பார்த்தால் அப்படித் தெரியாது. நண்பரும் அவர் மனைவியும் ஒருவரையொருவர் மதித்து நடப்பவர்கள். தங்களுக்குள் தாய்மொழியில் பேசிக்கொள்ளும் பொழுது சுமுகமாகவும் அன்பாகவும் பேசுவது போலத்தான் இருக்கும். தன் எதிர்பார்ப்பை மனைவியிடமே சொல்லியிருக்கலாமே அவர்? நண்பரின் மனைவி நல்ல அழகு. உதடுகள் ஒவ்வொன்றும் பலாச்சுளை போல இருக்கும். 'இப்படி வேஸ்ட் பண்றாங்களே?!' என்று தோன்றியது. அவர்கள் சென்றதும், மற்ற நண்பர்கள் இதைப் பற்றிப் பேசினோம். இன்னொரு நெருங்கிய நண்பர் என்னிடம், "அவள் உதட்டில் முத்தம் கொடுப்பாள்; கொடுக்கையில் நாவையும் புரட்டி எடுப்பாள்" என்றார் ரகசியமாக. நான் ஏறிட்டதும் பொருளுடன் புன்னகைத்தார். "பத்து வருச நெருக்கம். இனிக் கிடைக்காது" என்றார். இவரும் உண்மையிலேயே வருத்தப்பட்டார்.

அடப்பாவி! பலாச்சுளையை இவனா ருசித்துக் கொண்டிருக்கிறான்? இவரையும் அவர் மனைவியையும் இணைத்த போது தோன்றிய சரோஜாதேவிச் செய்யுள்:
        இதழினி லிதழிடென் இடைகலந் திடையினில்
        மதகளி றெனப்புகு மன்மதரே - விதவிதப்
        புணருத லறுபது வகையொடு பொறுத்திடென்
        கணவரும் பெறவிடு நான்கு.


            ண்பரின் ரகசியக் களியாட்டத்தைப் பற்றிப் பதிவெழுத வந்தால், 'ப்ளாக் பற்றிய புள்ளிவிவரங்கள்' கிடைப்பதைப் பார்த்தேன். எத்தனையோ நாளாக இந்த வசதி இருந்திருக்கலாம், நான் இப்பொழுது தான் கவனிக்கிறேன். க்ளிக்கிப் பார்த்தால், எந்தப் பதிவை எங்கிருந்து எத்தனை பேர் வந்து பார்த்தார்கள் என்று விவரம் கிடைக்கிறது. போதாக்குறைக்கு எந்தெந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தினார்கள் என்று ஒரு பட்டியல் வேறு. பார்த்தேன். ஹார்ட் அட்டேக் வராத குறை தான். 'இனிமையான ஆண்கள், கசம், குளியலறை ஓட்டை, தகாத புணர்ச்சி கதைகள், மாமா, காமம், ஆப்பிள் மஃபின், விலங்குகளுடன் கில்மா' என்றெல்லாம் மக்கள் இணையத்தில் தேடிய பொழுது, 'மூன்றாம் சுழி'ப் பதிவுகளைச் சுட்டியதாக கூகுல் சொல்கிறது. மற்றச் சொற்கள் சரி, குளியலறை ஓட்டை? விலங்குகளுடன் கில்மா? கில்மா என்ற சொல்லையே நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன். கூகுல் சொல்வது நிஜம் தானா என்று சரிபார்க்க இந்தச் சொற்களை இணையத்தில் தேடிப் பார்த்தேன். அதை ஏன் கேட்கிறீர்கள்! நகைச்சுவைக் கதையில் 'ப்ளூபெரி மபின்' சாப்பிடுவதாக எழுதினேன். ப்ளூபெரி மபினுக்கு நிழலான அர்த்தமா?! தேடலில் கண்டது: 'மஜா மல்லிகா' என்று ஒருவர் கலவியாலோசனை தருகிறார் - முன்பின் அறிந்திராத மகத்துவமெல்லாம் அறிந்தேன். இணையத்தில் பதிவெழுதிப் பலர் தமிழ்த்தொண்டு புரிகிறார்கள்; நான் தமிழ் வேட்டி உருவுகிறேன் போலிருக்கிறது.

            'மூன்றாம் சுழி'யைத் தேடி இத்தனை பேர் வருகிறார்களே, வலைப்பூவுக்கு நிறைய வரவேற்பு இருக்கும் என்ற எண்ணத்தில் - இப்பொழுதெல்லாம் 'இணைய தள மதிப்பு' என்று போடுகிறார்களே - இந்தக் குளியலறை ஓட்டை எவ்வளவு பெறும் என்று அறிய ஆசை வந்தது. பத்தொன்பது டாலர் என்று தெரிந்து கொண்டேன்.
Yes, I have arrived!

26 கருத்துகள்:

  1. மக்கள் இணையத்தில் தேடிய பொழுது, 'மூன்றாம் சுழி'ப் பதிவுகளைச் சுட்டியதாக கூகுல் சொல்கிறது. மற்ற சொற்கள் சரி, குளியலறை ஓட்டை? //


    இப்படி தான், ஏதோ சில வார்த்தைகளை போட்டு கூகுளில் தேடி நமது தளத்திற்கு வருகிறார்கள். எப்படியோ வந்தால் சரி தானே.

    பதிலளிநீக்கு
  2. ரசமன்பு விளக்கம் நன்றாக இருந்தது!:-)

    பதிலளிநீக்கு
  3. ரசமன்பு..ஞான பழத்தை பிழிந்து வரும் அன்பான ரசம் தான் ரசமன்பு..ரசமான விளக்கம். ( வர்றப்ப ஞானப்பழம் ஒரு கிலோ வாங்கிட்டு வரச்சொன்ன பக்கத்துவிட்டு நண்பருக்கு நான் சொன்னபதில் - இங்க பேரிச்சம்பழம் தான் கிடைக்கும் )

    //சரோஜாதேவிச் செய்யுள்//
    உங்களை இப்படியே விட்டா, வாத்சன்யரின் தமிழ் பதிப்பு ஆயிடுவிங்க போல...செய்யுளின் தமிழைமட்டும் ரசித்தேன் என்று சொன்னால் உலகம் நிச்சயம் நம்பாது....

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. என்ன பிரதர், ரொம்ப "மிஸ்ஸை" மிஸ் பண்ணிடீங்க போலிருக்கே !! விவரமா இருக்க தேவல்ல ! என்ன பையன் நீ.

    நீங்க தான்னா, அட்லீஸ்ட் இந்தியாவில் ஆன்டி எங்கே போறங்கன்னு கேட்டு சொல்லுங்க. உதவும் !! படிப்பினை கண்ணகியே என்றாலும் கடலை போட்டு வைக்கணும் !!

    பதிலளிநீக்கு
  6. //நான் நட்புடன் பழகும் தம்பதிகளில் ஒரு பெண்மணி 'வேலை வேலை' என்று புலம்பிக்கொண்டே இருப்பார். மூணு பேருக்கு சமையல், இத்தனை பாத்திரம் விழுது, துணி தோய்க்கணும், வீட்டைச் சுத்தம் செய்யணும், கடைக்குப் போகணும் அப்படி இப்படி என்று சொல்லிக்கொண்டே இருப்பார். .....வளரும் பருவத்தில் நாங்கள் அழுக்குத் துணிகளை வாளியில் நனைத்து, லைன் கட்டி நின்று கல்லில் கசக்கித் தோய்த்தோம். என் சகோதரிகள், அம்மா எல்லோரும் 'விம்'மில் தோய்த்த தேங்காய் நாரினால் பத்து பாத்திரம் சுத்தம் செய்தார்கள். //

    ரொம்ப கேட்ட மாதிரி இருக்கே !!

    பெங்களூர் லிங்கரஜபுரம் வீட்டில் நினைவு இருக்கின்றதா ? இருக்கும் இரண்டு மூன்று சட்டையை வேலைக்காரி மேரி கிழித்துவிடுவாளோ என்று நாமே தோய்ப்போம் !

    பதிலளிநீக்கு
  7. வாங்க சாய், பத்மநாபன், எஸ்.கே, தமிழ் உதயம், ....

    என்னவோ தெரியலிங்க தமிழ்.. குளியலறை ஓட்டை கொஞ்சம் கனக்குது... ஒரு வேளை சுழிக்கு ஓட்டைனு அர்த்தமோ?

    ஒரே கட்சி பத்மநாபன் :)
    >>>செய்யுளின் தமிழைமட்டும் ரசித்தேன் என்று சொன்னால் உலகம் நிச்சயம் நம்பாது....

    சபாபதே, சாய் :)
    >>> ரொம்ப கேட்ட மாதிரி இருக்கே !!

    சாய், பக்கத்து மாநில.. அட, உங்க ஊர்க்காரங்கப்பா! வெள்ளைக்காரனை நெருங்க விட்டாங்க, நம்மளவங்களை பிடிக்குமோ என்னவோ?
    >>>இந்தியாவில் ஆன்டி எங்கே போறங்கன்னு கேட்டு சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  8. //சாய், பக்கத்து மாநில.. அட, உங்க ஊர்க்காரங்கப்பா! வெள்ளைக்காரனை நெருங்க விட்டாங்க, நம்மளவங்களை பிடிக்குமோ என்னவோ?//

    சார், என் முடி வெள்ளை !! புதிய ப்ரோபைல் படம் பாருங்க !! மனசு அதைவிட வெள்ளை

    பதிலளிநீக்கு
  9. அப்ப எஞ்'சாய்' (ஊட்ல ஒரு தபா சொல்லிகினு)
    >>>முடி வெள்ளை !! புதிய ப்ரோபைல் படம் பாருங்க !! மனசு அதைவிட

    பதிலளிநீக்கு
  10. //அப்பாதுரை சொன்னது…

    அப்ப எஞ்'சாய்' (ஊட்ல ஒரு தபா சொல்லிகினு)//

    ஊட்ல நான்கு மாதங்களுக்கு ஊருக்கு போறாங்க (அதுவும் நாடு விட்டு நாடு வேறே) !! கொண்டாடிட வேண்டியது தான் !

    ஜனகராஜ் சொல்லுவதுபோல் - "தங்கமணி என்ஜாய் தான்" !!

    பதிலளிநீக்கு
  11. //குளியலறை ஓட்டை// ரொம்ப நல்லா இருந்தது. என்னிக்குமே வெட்டிப் பேச்சுக்குதான் மதிப்பு ஜாஸ்த்தின்னு நிரூபணம் ஆகறது. என்னான்னா இந்த இணையதள மதிப்பு என்னோட சைட்டுக்கு போட்டுப் பார்த்தா $1391 வருது சார்!!
    சரோஜாதேவி செய்யுள் ஒரு இலக்கியம். போகன் சைட்ல சொன்ன இலக்கிய விளக்கம் விபரமாக அறிந்தபின் இதை எழுதுகிறேன். இப்போது தான் எனக்கு கொஞ்சம் ஜுரம் விட்டார்ப் போல இருந்தது. மீண்டும் தொற்றிக்கொள்ளுமோ?
    திருவாளர் பத்மநாபன் செய்யுளின் தமிழை மட்டும் ரசித்தேன் என்று உள்குத்தாக எழுதியிருப்பதற்கு ஒரே கட்சி என்று நீங்கள் பதில் போட்டிருப்பது இரண்டையும் பார்த்தால் வேலிக்கு ஓணான் சாட்சி போன்று உள்ளது. ;-) ;-)
    தொடரட்டும் உங்கள் செய்யுள் பணி.. நன்றி

    பதிலளிநீக்கு
  12. //"நான் தமிழ் வேட்டி உருவுகிறேன் போலிருக்கிறது."//

    சட்ட சபையில் இருக்க வேண்டியவர் போலும் நீங்கள் ... அதனால் என்ன..! சத்த சபையில் இருக்கிறீர்களே..!

    பதிலளிநீக்கு
  13. ஹிஹிஹி...அங்கே போவாதீங்க RVS. (போறதா இருந்தா நானும் கூட வரேன் :)
    >>>சரோஜாதேவி செய்யுள் ஒரு இலக்கியம்

    பதிலளிநீக்கு
  14. ப. சொன்னது வேறேனு தோணுது RVS.. தமிழ்வேட்டி கிழிஞ்சிருந்தாலும் மறைச்சுக் கட்டுறதா சொல்றாருனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. சட்டசபையா ஸ்ரீராம்? 'பாவாடைக்குள் தெரியும் பார்'னு சொன்ன தானைத்தலைவர்கள் வழி வந்தவங்க முன்னாலே என் சத்தம் செல்லுமா?

    ஆசையைக் கிளப்பிட்டீங்க.. இந்த ஊர் சட்டசபைல போய் ஒபாமாவுக்கு எதிரா சத்தம் போட முடியுமானு பாக்கறேன்.

    பதிலளிநீக்கு
  16. அப்பாஜி! உங்கள் ரசமன்பை ரசித்தேன். உ.வெ.சா படிக்கிறீர்கள்.சந்தோஷம். மணிப்ரவாளமாய் எளிய நடையில் ஜாலங்கள் இல்லாத நடை.

    மற்ற சங்கதிகளுக்கெல்லாம்....'ஸ்வாமி சரணம்'ங்க!!

    பதிலளிநீக்கு
  17. துரை, நானும் எண்ணசிதறலின் மதிப்பை estimate பண்ணிப் பார்த்தேன். $8 வருகிறது!!!

    பதிலளிநீக்கு
  18. கைச்செலவுக்கு ஆச்சு கீதா!
    >>>$8 வருகிறது!!!

    பதிலளிநீக்கு
  19. $$ எல்லாம் அவங்க கொடுப்பாங்களா நாம குடுக்கணுமாமான்றது தான் சரியாப் புரியலே கீதா

    பதிலளிநீக்கு
  20. என்னுடைய தளத்துக்கு பெரும்பாலும் ஆணுறையைத் தேடித்தான் வருகிறார்கள் என்று கூகிள் சொல்கிறது!கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் உண்மைதான் சராசரிக்கும் அதிகமாக நான் ஆணுறையை உபயோகப் படுத்தி இருக்கிறேன் எனத் தெரிந்தது![அரசாங்கம் சொன்னதைக் கேட்டால் தப்பா]அந்த கெட்ட பேரை ரப்பர் [ச்சே இதுவும் ஒரு ஆணுறைச் சொல்]போட்டு அழிக்கத்தான் இலக்கியம் இலக்கியம் என்று கொஞ்ச நாளாக பினாத்தியும் கூகிள் ம்ஹூம் நீ இலக்கியவாதி எல்லாம் இல்லை என்று புணர்ச்சிவிதி சொல்லிவிட்டது.கந்தன் புத்தி கவட்டைக்குள் என்று எங்கள் பக்கம் ஒரு சொலவடை [வடை என்றால் வடை அல்ல.அதுவும் நீங்கள் நினைப்பது நிச்சயமாக அல்ல ]சொல்வார்கள்.அதை காண்டத்துக்குள் என்று நவீனப் படுத்திவிடல்லாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  21. இலக்கியம் தான் அங்கே கொண்டு போகிறதோ என்று தோன்றுகிறது, bogan. 'இருட்டில் இலக்கியம் படிக்கும்...' என்பது காமத்தை மட்டும் குறிப்பதாக நினைத்திருந்தேன் இதுவரை. இலக்கியம் இருட்டையழிக்கும் ரப்பர் என்பது இப்போது தான் புரிகிறது :) கூகுலுக்கு நன்றி?

    பதிலளிநீக்கு
  22. நன்றி நண்பரே. உங்கள் ப்ளாக் இல் என்னைப் பற்றி எழுதியதற்கு.

    அப்புறம் பெரிய பெரிய விசயமெல்லாம் பேசறிங்க. சின்னப் பையன் எனக்கு ஒண்ணும் புரியல

    பதிலளிநீக்கு
  23. //bogan சொன்னது…[வடை என்றால் வடை அல்ல.அதுவும் நீங்கள் நினைப்பது நிச்சயமாக அல்ல //

    இது எல்லாம் என்னமா புரியுது எனக்கு !! பலே பலே

    பதிலளிநீக்கு
  24. பச்சையப்ப ஞானியாச்சே, புரியாம இருக்குமா சாய்?
    >>>இது எல்லாம் என்னமா புரியுது

    பதிலளிநீக்கு
  25. //அப்பாதுரை சொன்னது…

    பச்சையப்ப ஞானியாச்சே, புரியாம இருக்குமா சாய் ? //

    இப்போது "வெறும் ஞானி" ஆக எண்ணம்.

    பதிலளிநீக்கு