2010/05/20

கிணற்றுக்குள் பூதம்

போக்கற்ற சிந்தனை



அலோ, அல்லோ...ஒபாமா அண்ணனா, நான் தாண்ணே தம்பி பேசுறேன்... சும்பி இல்லண்ணே, தம்பி...வணக்கம்ணே.

எண்ணைக் கிணறு வெடிப்பை நீங்க கையாண்ட விதத்தைக் கன்னா பின்னானு பேசுறாங்கனு வருத்தப்படாதீங்க. வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குறதுக்கு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடலனு... நான் இல்லிங்க... மக்கள் சொல்றாங்கனு மனசு ஒடஞ்சு போயிடாதீங்க. பொருளாதார வளர்ச்சிக்கு ஒண்ணும் புடுங்கலைனு.. அய்யோ நான் இல்லிங்க, மக்கள்.. மக்கள் புலம்புறாங்கனு ஒடிஞ்சு போயிராதீங்க. இடைதேர்தல் தோல்விக்கு நொந்து போயிராதீங்க.

அனுபவமில்லாத ஆளை ஆட்சியில வைச்சதுக்கு எங்களைத் தானுங்க குத்தம் சொல்லணும். உங்களை யாருனா எதுனா சொன்னா, மக்களுக்கு அறிவு இல்லனு சொல்லி மழுப்பிடுங்க. சரியா? உங்க மேலே இருந்த நம்பிக்கைலயா ஓட்டு போட்டோம்? நீங்க வேறே? அந்த ஆளு புஷ்ஷூ மேலே இருந்த வெறுப்புல ராவணன் வந்தா கூட பரவாயில்லனு... நான் இல்லிங்க... எத்தினியோ பேருங்க ஓட்டு போட்டாங்கனு சொல்ல வந்தேன்.

இல்லாகாட்டி ஐரோப்பா போயிடுங்க. அங்க இன்னொரு பரிசு எதுனா கொடுப்பாங்க. ஆமா... என்ன கேட்டீங்க? ராவணன் யாரா? ராமனோட பொண்டாட்டிய... என்னா, ராமன் யாரா? சரிதான், வேணாம் விடுங்க... அந்த நாட்டுல உங்கள காந்தினு கொண்டாடிக்கிட்டிருக்காங்க. அடுத்த எலக்சனுல நீங்க அங்கே போயி நிக்குறது நல்லதுனு தோணுதுங்க.

அது வரைக்கும் எங்க ஊரு பாணியில ஒரு கும்மிப் பாட்டு சொல்லித் தாரேனுங்க. நீங்களும் மிசலம்மாவும் கும்மி அடிச்சிக்கிட்டே பாடிக்கிட்டிருங்க. இன்னும் ரெண்டு வருசம், அதா, ஓடியே போயிறும்.

கும்மிங்களா? கைத்தட்டத் தெரியுங்களா? ரெண்டு கையையும் சேத்து தலைக்கு மேலே ஒரு தரம், குனிஞ்சு கால்கிட்டே ஒரு தரம் தட்டணுங்க... பாடிக்கிட்டே தட்டணுங்க. தட்ட சொல்ல ஒரு காலால குதிச்சுக்கிட்டே தட்டினீங்கன்னா இன்னும் கிக்குங்க. அவ்வளவுதாங்க கும்மி ரகசியம். ரெடிங்களா? மிசலம்மாவும் ரெடிங்களா? இந்தாங்க பாட்டு.

போட்டு வச்சேனே, உத்தரவப் போட்டு வச்சேனே
    ஓட்டு வாங்கும் ஆசையிலே உள்ளூரில் கெணறு வெட்ட (போட்டு வச்சேனே ...)

வேட்டு வச்சானே, மொத்தமா வேட்டு வச்சானே
    ஊருபக்கம் கிணறு வெட்ட பொல்லாத பூதங் கெளம்பி (வேட்டு வச்சானே ...)

சிரிக்கி றாங்களே, ரகசியமா சிரிக்கி றாங்களே
    புச்சு சேனி கான்டலீசா பொக்கவாயி அப்பனுஞ் சேந்து (சிரிக்கி றாங்களே ...)

கரிக்கி றாங்களே, கட்சியிலே கரிக்கி றாங்களே
    கருப்பன் ஆட்சி காளான் ஆச்சென கண்டதுஞ் சொல்லி (கரிக்கி றாங்களே ...)
சேந்து பாடுங்க... மறுபடியும் சொல்லித்தாரேன்... என்ன? போனை வக்கவா? என்னங்கண்ணே திட்டுறீங்க? மக்கள் உங்களைத் திட்டுறாங்கன்னு நான் வருத்தப்பட்டா...

பிரிடிஷ் பெட்ரோலியம் தலைமையதிகாரி வாக்குமூலம்

நான் சொல்றதெல்லாம் உண்மைங்க; உண்மையைத் தவிர வேறொன்றுமில்லைங்க.

ம்ம்ம்ம்.. இந்த உண்மையை சொல்றதா, அந்த உண்மையைச் சொல்றதா?

விபத்துகள் நேர்வது அரசியலில் தவறுகள் நிகழ்வது போல் சாதாரணம் என்றாலும், எண்ணைக்கிணறு சம்பவத்தை ஒபாமா கையாண்ட விதம் அறிவற்ற விதமாக எனக்குப் படுகிறது. அரசியல் ஆதாயத்துக்காக கொஞ்சம் கூட சிந்திக்காமல் எண்ணைக் கிணறு வெட்ட உத்தரவு கொடுத்து விட்டு பிறகு பொறுப்பை ஏற்க இயலாத கோழைத்தனத்தை நினைத்தால் எரிச்சலும் வருத்தமும் பொங்குகிறது. பிரிடிஷ் பெட்ரோலியம் மற்றும் டெமொக்ரேட் கட்சிக்காரர்கள் சேர்ந்து நடத்தும் கூத்து சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இதனால் ஏற்பட்டிருக்கும் உயிர் மற்றும் பொருளிழப்பு, இன்னும் பத்து வருடங்களுக்கு தொடரப் போகிறது என்பதை எண்ணும் பொழுது ஆத்திரமாக மாறுகிறது.

ஏற்கனவே 2050 வாக்கில் உலக மகாக்கடல்களில் மீனினம் அழிந்துவிடும் என்று சொல்லி வருகிறார்கள். இதில் நாம் இன்னும் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டால் வெட்கமாக இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. அமைதிக்காவலன் அறிவாளி என்ற போர்வையில் உலா வரும் ஒபாமா, எண்ணைக் கிணறு வெட்டுவதற்கான உத்தரவுக்குப் பதில் மாற்று எரிசக்திகளை உற்பத்தி செய்ய அல்லவா உத்தரவு போட்டிருக்க வேண்டும்? பித்தலாட்டக்காரர்கள் எல்லா நிறத்திலும் வருகிறார்கள்.

இழப்பைப் பற்றி அரிய விவரங்களை அறிய, இங்கே செல்லுங்கள். மிக அருமையான தெளிவான விளக்கம்.

தண்ணீரில் மிதக்கும்/கலக்கும் எண்ணையை எடுக்க என்னென்னவோ முயற்சி செய்தார்கள்; செய்து வருகிறார்கள். நடுவே இந்த முயற்சி அல்லோலகல்லோலப் பட்டு, உள்ளூரே திருப்பதியானது.

எத்தைத் தின்னா..

என்ன கிண்டலா? யாரு கிட்டே என்ன கேக்குறதுனு ஒரு லிமிட்டு வேணாமா? போங்கடி சர்தான்.

20 கருத்துகள்:

  1. ஏற்கனவே 2050 வாக்கில் உலக மகாக்கடல்களில் மீனினம் அழிந்துவிடும் என்று சொல்லி வருகிறார்கள்//

    நல்ல வேளை நான் மீன் சாப்பிடறதில்லை...!

    ஆருயிர் அண்ணன் ஒபாமா கறுப்பர் ங்கற ஒரே காரணத்துனாலதான இப்படி எல்லாம் குறை சொல்றீங்க...

    பதிலளிநீக்கு
  2. ஒபாமா அண்ணே! அப்பா ஸார் சொன்ன மத்த விஷயத்தை விடுங்க. உங்களுக்கு இன்னும் இரண்டு வருஷங்கள்தான் இருக்குன்னு சொன்னார் பாத்தீங்களா! புஷ்ஷுக்கே second chance கொடுத்தாங்களே, நமக்கும் கொடுப்பாங்கன்னு நப்பாசை படாதீங்க! நாட்டுக்கு நல்லது செய்யறேன்னு வேஷம் போட்டு டயத்த வேஸ்ட் பண்ணாதீங்க. இங்க எங்க தமிழ்நாட்டுத் தலைவனைப் பாத்து கத்துக்கங்க. சுற்றுச் சூழல் பத்தியெல்லாம் கவலைப்படாமல் சூழ்ந்துள்ள சுற்றத்தைப் பத்தி கவலைப் படுங்க; சுகுரா நடந்துக்கங்க; சொல்லிட்டேன்!!!---கீதா

    பதிலளிநீக்கு
  3. // ஆருயிர் அண்ணன் ஒபாமா கறுப்பர் ங்கற ஒரே காரணத்துனாலதான இப்படி எல்லாம் குறை சொல்றீங்க... //

    அமைச்சர் ராஜா தலித் என்பதாலேயே .....

    நண்பர் ஸ்ரீராமிற்கு " பதிவுலக கலைஞர் " பட்டம் அளிக்கிறேன் அன்புடன் ...

    வாங்கிக்கிங்க ஸ்ரீ!

    பதிலளிநீக்கு
  4. தோழர் அப்பாதுரை!
    மேற்கத்திய உலகில் நடைபெறுகிற சம்பவங்கள் நான் அறியாத ஒன்று....
    தங்கள் பதிவிற்கு நன்றி ....
    // ...ஏற்பட்டிருக்கும் உயிர் மற்றும் பொருளிழப்பு, இன்னும் பத்து வருடங்களுக்கு தொடரப் போகிறது என்பதை எண்ணும் பொழுது ஆத்திரமாக மாறுகிறது... //
    நான் கடலோர கிராமம் ஒன்றில் வளர்ந்தவன் ...
    சேது சமுத்திர திட்டமும் கூடங்குளமும் மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே சிதைக்கப் போவதை நினைக்கும் பொழுது அடிவயிறு பற்றி எரிகிறது ....

    பதிலளிநீக்கு
  5. உள்ளூர் அரசியல், வெளியூர் அரசியல் ரெண்டயுமே எப்பவாவது படிக்கறதோட சரி. ராமன் ஆண்டா என்ன, ராவணன் ஆண்டா என்னங்கற கதைதான் என்னோடதும். உங்க பதிவை படிச்ச போது நிலைமையை நெனச்சு பாத்தா வயிறு எரியறது. இயலாமைல கட்டுண்டு இருக்கும்போது ஆத்திரப்பட்டு, பொருமி என்ன பிரயோஜனம். இந்த மாதிரி எழுதி கோவத்தை வெளி காட்டிக்க வேண்டியதுதான்.

    கும்மி பாட்டு நல்லா இருக்கு. ஆனா மக்கள் பாவம் இதை ஒப்பாரி மாதிரிதான் பாடணும்.

    பதிலளிநீக்கு
  6. உலகை "ஓப்...தில்" மனிதனக்கு இணை மனிதன் தான். விடுங்க விடுங்க

    பதிலளிநீக்கு
  7. நண்பர் ஸ்ரீராமிற்கு " பதிவுலக கலைஞர் " பட்டம் அளிக்கிறேன் அன்புடன் ...

    வாங்கிக்கிங்க ஸ்ரீ//

    நன்றி நியோ...

    ஆனால் பட்டங்கள் (இப்படி just like that கொடுத்தா)எனக்குப் பிடிக்கறதில்லை..சிம்பிளா ஒரு மேடை போட்டு நாலு சினிமாக்காரங்க என்னை 'மந்தி'ரன் இந்திரன்' னுல்லாம் 'நாலு வார்த்தை' பேசிட்டு கொடுத்தா எனக்கு ஆட்சேபணை இல்லை.. ஏன்னா எனக்கு(ம்) புகழ்ச்சிகள் பிடிக்காது..!

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீ சார் ...
    மிக அருமையான பதில் ...
    கோபப்படுவீங்கன்னு நான் நினைச்சேன் ...
    சிம்ப்ளி கிரேட் ..

    அப்பாதுரை சார் ...
    good morning !

    பதிலளிநீக்கு
  9. பட்டம் பதவி எதிலும் விருப்பமில்லாமல் என் உயிரினும் மேலான தமிழ் மக்களிடையே தமிழ்க்கலையும் தமிழ் நினைவும் பரவி நிற்க வேண்டும் என்கிற பரந்த கொள்கையுடன் பதிவு செய்து வரும் என்னை விட்டு ஸ்ரீராமுக்குப் பட்டத்தை கொடுக்கலாமா என்ற பொறாமையினால் பதறவில்லை மனம்.

    இருந்தாலும் இது... நியோயமா?

    பதிலளிநீக்கு
  10. //இருந்தாலும் இது... நியோயமா? //

    Super

    பதிலளிநீக்கு
  11. priya schaefferமே 25, 2010

    Saw your blogpost listed on Monday's Whitehouse PR digest. Movin'on up, eh?

    பதிலளிநீக்கு
  12. Saw that - thanks, priya. (pari monsieur schaeffer n'y étais pour rien! ca va?)

    பதிலளிநீக்கு
  13. priya schaefferமே 26, 2010

    don't know, does it matter? (i'll tell you what matters - your french! i think you should stick to english - it took me all day to figure out what you were trying to say. ha! ha! :)

    பதிலளிநீக்கு
  14. // ...பட்டம் பதவி எதிலும் விருப்பமில்லாமல் என் உயிரினும் மேலான தமிழ் மக்களிடையே தமிழ்க்கலையும் தமிழ் நினைவும் பரவி நிற்க வேண்டும் என்கிற பரந்த கொள்கையுடன் பதிவு செய்து வரும் என்னை விட்டு ஸ்ரீராமுக்குப் பட்டத்தை கொடுக்கலாமா என்ற பொறாமையினால் பதறவில்லை மனம்... //
    நீங்களுமா அப்பாதுரை சார் .... உங்களுக்கும் வந்திடுச்சா ... மஞ்சள் போபியா ....

    // இருந்தாலும் இது... நியோயமா? .. //
    நண்பர் சங்கமித்திரனை உடனடியாக அலைபேசியில் அழைத்து பேசினேன் ... "அறிவுச் சுரங்கம் அப்பா துரையார்" என்ற பட்டத்தை உங்களுக்கு தந்திருப்பதாக கூறினார் ....
    http://paraneetharan-myweb.blogspot.com/2010/05/blog-post_26.html

    வாழ்த்துக்கள் தோழர் ...
    சொல்லொண்ணா பெருமிதம் எனக்கு தங்கள் குறித்து ...

    வருகிறேன் பின்னர் ....

    பதிலளிநீக்கு
  15. Monday's Whitehouse PR digest பத்தியெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது... இருந்தாலும் வாழ்த்துக்கள் தோழர் ... தகவல் தெரிவித்த ப்ரியாவிற்கு நன்றிகள் ....

    பதிலளிநீக்கு
  16. > priya schaeffer சொன்னது… (i'll tell you what matters - your french!


    that bad, huh? ouch.. (okay, did you skip subtle school?)

    பதிலளிநீக்கு
  17. ஒண்ணும் பெரிய விசயமில்லை நியோ. ப்ரெஸ் என்கிற பெயரில் பாதுக்காப்புக்காகச் செய்யப்படுகிற வேலை இது. ஒபாமா என்ற பெயரை (கட்சித் தலைவர்கள், தீவிர வாதிகள் என்று இன்னும் சில பெயர்களும் அடக்கம்) தினமும் இணையத்தில் தேடி விவரங்களைத் தொகுத்து அதிகாரிகளிடம் தெரிவிப்பது சாதாரண நிகழ்ச்சி. ஒபாமாவைப் பற்றி உலக மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் அவருடைய அலுவலகத்துக்குத் தெரிவிப்பார்கள். ஒபாமாவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தொடர்ந்து முப்பது நாள் நான் ஒபாமாவைத் திட்டி எழுதினால் ஒரு வேளை கொஞ்சம் தட்டி வைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    தமிழில் எழுதப்பட்ட காரணத்தால் சர்வதேசக் கருத்துக்கள் வகையில் சேர்த்துவிட்டார்கள். ஆட்சி லட்சணம். ஒரு வேளை என்னை யாராவது தேடி வந்து, ஒபாமாவுக்குக் கும்மியடிக்க விருப்பமிருப்பதாகத் தெரிவித்தால் அதையும் பதிவு செய்கிறேன்.

    சங்கமித்திரன் பதிவை நானும் நேற்றே பார்த்தேன். நப்பாசை :-)

    பதிலளிநீக்கு
  18. சங்கமித்திரன்ல தலைப்பை படிச்சுட்டு ஆஹா... அப்படின்னு நெனச்சு படிக்க ஆரம்பிச்சா, அப்பறம்தான் புரிஞ்சுது. நியோ ரொம்ப படுத்திடீங்க! ஆனால் சுவாரசியமான படுத்தல்தான். :) பெயர் மட்டும்தான் பொருத்தம் என்பதற்கில்லை, இந்த அப்பாதுரையும் அறிவு சுடர்தான்!

    பதிலளிநீக்கு
  19. தோழர் மீனாக்ஷி ...
    // " namm அப்பாதுரையும் அறிவு சுடர்தான்! "... //
    நானும் வழிமொழிகிறேன் தோழர் ...
    யாருக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை ...

    பதிலளிநீக்கு