2015/06/05

வெத்துவேலை    ள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அடுத்த வாரம் முதல் அந்தந்த மாநிலத்தைப் பொறுத்து எட்டிலிருந்து பத்து வாரங்களுக்கு நடை சாத்திடுவார்கள் அறிவுக் கோவில்களில்.

பக்கத்து ஊர் அரோரா உயர் நிலைப்பள்ளிப் பாதுகாப்பு அதிகாரி (பள்ளிக்கூடத்துக்காக ஒதுக்கப்பட்ட உள்ளூர் போலீஸ்) நேற்று தன் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்த செய்திகளில் இரண்டு என் சிற்றறிவைக் கவர்ந்தன.
  ✹ வடக்கு அரோரா உயர்நிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் இதுவரை 44 துப்பாக்கி சூடுகள் நடந்திருக்கின்றன. வருட முடிவுக்குள் இதை ஐம்பதுக்குள் கொண்டுவர அத்தனை முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
  ✹ சென்ற கல்வியாண்டில் 19 துப்பாக்கி சூடுகள்.. இந்த வருடம் 44ஆக முன்னேறியிருக்கிறது. ஹைஸ்கூல் பிள்ளைகள் ரௌடிகளாக அங்கீகாரம் பெற வேண்டித் தேவையற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதும், பெற்ற்றோர்கள் பிள்ளைகளுடன் முறையாகப் பேசி வளர்க்காததும் இரு பெருங்காரணங்களாகும்.

அலோ அல்லல்லோ அதிகாரி அய்யா! வருட முடிவுக்குள் துப்பாக்கிச் சூடுகளை ஐம்பதுக்குள் கொண்டு வர முயற்சி செய்யறீங்களா? ஏன் 44 பத்தாதா? ஒரு பொறுப்புள்ள அதிகாரியா இருந்துகிட்டு அறிக்கை விடுறதுனா இப்படியா? அடுத்த ரெண்டு வாரத்துக்குள்ளாற ஆறு துப்பாக்கி சூடுங்க எங்கே நடக்கப் போவுதோனு பொதுமக்கள் பயப்பட மாட்டாங்களா? என்னய்யா அதிகாரி நீ? ஹைஸ்கூல் பிள்ளைகள் தேவையற்றத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடறாங்களா? அப்ப.. தேவையுள்ள துப்பாக்கிச் சூடு பள்ளிக்கூடத்துல இருக்குதுன்றே? இரண்டாவதா ஒரு முத்து உதிஞ்சுச்சே? என்னாது? 19லிருந்து.. 44ஆக.. முன்..னேறியிருக்கிறதா? அய்யா, அறிவுக்கொழுந்தே, பாதுகாப்புத் திலகமே, இதுவாய்யா முன்னேற்றம்? ஏலே, ஞானப்பேனே.. என்ன சொல்றோம்னு தெரியாம நீயெல்லாம் எதுக்கய்யா அதிகாரியாவணும்? அதிகாரியாகி அறிக்கை விடணும்? அறிக்கை விட்டு எங்களை வாட்டணும்? கடைசியிலே இன்னொரு குண்டைப் போடுறீங்களே அய்யா? ரௌடிகளாக அங்கீகாரம் பெற விரும்பும் பதின்மர்களைப் பள்ளிக்கூடத்தில் வைக்க என்ன புடலங்காய் முயற்சி செய்கிறீர்கள் அய்யா? இவர்கள் பிள்ளைகள் அய்யா. இன்னும் பதினாறு வயதுகூட நிரம்பாத பிள்ளைகள்! பெற்றோர்கள் பிள்ளைகளுடன் முறையாகப் பேசி வளர்க்கவில்லையா? ஏன்யா.. பின் தங்கிய ஊர்ல ஏதோ கூலி வேலை பாத்துகிட்டு.. தான் படிக்கலே தன் பசங்களாவது நல்லாயிருக்கட்டும்னு பசங்களை பள்ளிகூடத்துக்குத் தினம் அனுப்புறதே வடக்கு அரோரா பெற்றோர்களுக்குக் கஷ்டமா இருக்குறப்ப... பள்ளிக்கூட பாதுகாப்பு அதிகாரியா பதவியிலே உக்காந்துகிட்டு நீ என்னய்யா ஆணியடிச்சுட்டிருக்கே? பசங்களுக்கு ஒரு முன்னோடியா உதாரணமா முனைப்பு தர வேணாமா? ஆசிரியர்களை வச்சுகிட்டு ஒரு சின்ன சைஸ் சமூகப் புரட்சி செய்ய வேணாமா? அட, புரட்சி வேணாம் ஒரு பாதுகாப்பாவது தர வேணாமா? அலோ.. உன் ஜாப் டைட்டில் பாரு நைனா. இன்னா செக்யூரிடி கொடுத்துக் கியிக்கிறே நீ? உம்ம தலையைச் சுத்தி கருப்பா இருக்குறது முடினு நெனச்சேன்.. எப்பேற்பட்ட ஞான இருளய்யா உமக்கு!

இப்படியெல்லாம் கூவத் தோன்றினாலும், யாரும் எதுவும் சொல்லவில்லை. ஊர் மக்களுக்குக் கூவ நேரமில்லை. கூவக்கூடினால் வால் மார்ட்டிலோ மெக்டானல்ட்ஸிலோ கிடைத்த அடிமட்ட மணிக்கூலி வேலையும் போய்விடுமே?

அடுத்த ஆறு துப்பாக்கிச் சூடுகளில் தன் பிள்ளைகள் குறுக்கே வராமல் இருக்கட்டும் என்று எல்லாமறிந்த மேய்ப்பனிடம் மனமுருக முறையிட்டு, ஈடாக வரும் ஞாயிறன்று திருச்சபை உண்டியலில் ஒரு டாலர் காணிக்கையிடத் தீர்மானித்தனர் மெக்சிகோவிலிருந்து பிழைப்புக்காக வந்து அல்லல்படும் மரியாக்களும் பெர்த்தாக்களும்.

    'முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை தரக்கூடாது, பறித்துவிட வேண்டும்' என்று ஒரு இந்திய மத்திய அமைச்சர் சொல்லியிருப்பதாக டிவி செய்திகளில் பார்த்தேன். அதிர்ந்தேன். மோடியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களுக்கு இதுவும் வேண்டும். அவர் பொறுப்பில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. அவர் அறியாது வெளிவந்த செய்தியென்றால் உடனே அப்படிப் பேசியவரை பதவியிலிருந்து நீக்கியோ பொதுவாக அறிக்கை விட்டோ மறுத்திருக்க வேண்டும். செய்தாரா தெரியவில்லை. மாறாக இதைப்பற்றி அர்னாப் கூ(ச்சல்)ஸ்வாமிகள் பொதுமக்கள் காது கிழிய கத்திக் கொண்டிருப்பதே மிச்சம் (பிறகு வருகிறேன்).

ஒரு பக்கம் மோடியின் உலகப்பயண செலவுக்கான அலசல். இன்னொரு பக்கம் ராகுல் காந்தி ஏன் காணாமல் போனார் என்ற புலம்பல் (நிஜமாவேவா?). இன்னொரு பக்கம் அஷ்டலக்ஷ்மிகளின் அவதாரமான அம்மாவைப் பற்றிய அலசல். மோடி ஆட்சிக்கு வருகிறேன். இந்தியாவின் secular அரசியல் சட்ட அமைப்பு இந்த அளவுக்கு எப்போதேனும் அசைக்கப்பட்டிருக்கிறதா தெரியவில்லை. எத்தனையோ இனக் கலவரங்களைப் பார்த்திருந்தாலும் தொடர்ந்து வரும் செய்திகளின் பின்னே ஏதோ ஒரு ஒழுங்கும் திட்டமும் இல்லாதிருக்குமோ என்ற கேள்வியும் அச்சமும் தோன்றவே செய்கின்றன. இந்துவாக மதம் மாறினால் லட்சக்கணக்கில் ரூபாய் கிடைக்கும் என்று ஒரு அறிக்கை வந்ததாக அல்லல்பட்டது.

அரசியலில் மதம் கலக்கலாம். மதத்தில் அரசியல் கலக்கலாம். இரண்டையும் ஒன்றாக்கினால் அடுத்த தேர்தலில் காவி காலி.

"மோடி என்ன சாதித்திருக்கிறார்?" என்று பழைய பம்மல் நண்பர் ஒருவரிடம் கேட்ட போது "செல்போன்ல் கேக்குறதோட நிறுத்திக்க. ப்லாக்ல எல்லாம் எழுதிடாத. உள்ளே தள்ளிடப் போறாங்க' என்றார். "66A" என்றேன் பதிலுக்கு. "தாம்பரம்-பூந்தமல்லி" என்றார். "இல்லே" என்றேன். "தாம்பரம்-குன்றத்தூர்?" என்றார். "இது வேறே" என்றேன். "நீ திமிர் பிடிச்சவன்டா" என்றார்.

இந்தியா வந்த ஒபாமா செய்தியின் பின்னணி இப்போது எனக்கும் புரியத் தொடங்கியிருக்கிறது. ஒபாமாவை மோடி நிறைய காபி அடிக்கிறார் என்கிறார்கள். பாவம் பாரதம்.

    அர்னாப் ஸவுன்ட்ப்லேஸ்டர்ஸ்வாமி தன் சிறு வயதில் இரண்டு ஒலிக்கூட்டிகளை விழுங்கியிருக்க வாய்ப்பு இருக்கிறது. இரும்புச்சத்து குறை என்பதைத் தவறாக எடுத்துக்கொண்டிருக்கலாம். இவருடைய குரலின் அளவுக்கு முகத்தின் மேற்பகுதியில் ஏதாவது இருந்தால் சரிதான். 'இவர் செல்போன் இல்லாமலே லாங்க் டிஸ்டென்ஸ் பேசலாம்' 'இவர் குரலிலிருந்து எலக்டிரிசிடி டிரா பண்ணமுடியும்னு நினைக்கிறேன்' 'இவர் ப்ரோக்ரேம் டேப்பிங் பார்க்க ஸ்டூடியோவுக்கு வந்தவங்கள்ள தினம் பத்து பேராவது செவிடாயிருப்பாங்க' 'ஒரு வேளை இந்த ஆள் பரம செவிடோ?' என்று வரிசையாக அடுக்கிவிட்டு, 'இவர் வீட்டில் எப்படிப் பேசுவார்?' என்ற என் மகனின் கேள்வி சுவாரசியமாகப் பட்டது. அர்னாப் டெசிபல்க்ரேக்கர் வீட்டில் உரையாடல்கள் எப்படி இருக்கும்? எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். அவர் பாடு, அவர் பக்கத்துவீட்டுக்காரர் பாடு. என்றாலும் இவர் அழைப்புக்கு இசைந்து தொலைக்காட்சியில் இப்படி காட்டுக்கூச்சலைக் கேட்டு அனுபவிக்க வேண்டும் என்பது விதியா? பேட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு ஒரு கவுரவம் வேண்டாமா?

    சூப்பர் சிங்கர் தொல்லையை எப்படித்தான் மக்கள் பொறுக்கிறார்களோ தெரியவில்லை. சமீபத்தில் பார்த்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஆபாச வரம்புகளை அவ்வப்போது கடந்ததாகத் தோன்றியது. அடுத்து சூப்பர் சிங்கர் toddler, சூப்பர் சிங்கர் baby, சூப்பர் சிங்கர் just born, சூப்பர் சிங்கர் ..சரி.. தொடர்ந்து வரிசையாக வாராதிருக்க வேண்டும் என்று சொல்ல வந்தேன். வயலும் வாழ்வும் காலத்தில் வளர்ந்த எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய டிவியா!

    'தமிழ் வாழ்க, தமிழினம் ஓங்குக' என்று கூவத்தோன்றியது இன்னொரு நிகழ்ச்சியில். 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாடலை ஒலிக்கவிட்டு 'யார் எழுதியது?' என்ற கேள்விக்கு, 'ஜேசுதாஸ்' என்று பதிலளித்தார் ஒரு மாணவர்(?). 'மறைமலையடிகள் யார்?' என்ற கேள்விக்கு 'திருவண்ணாமலைல இருந்தார்னு தெரியும், பேரு சட்னு ஞாபகம் வரலே' என்றார் ஒருவர். 'தொல்காப்பியம்' எழுதியவர் யார் என்பதற்கு, 'இளங்கோவடிகள்' என்றார் ஒருவர். 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' பாடலை ஒலிக்க விட்டு 'யார் எழுதியது?' என்ற கேள்விக்கு, உற்சாகமாகப் பித்தானழுத்தி 'கலைஞர் கருணாநிதி' என்றார் ஒரு பெண்மணி. பாரதியாரின் இயற்பெயர் தெரியாமல் விழித்தார் ஒருவர்.

நிகழ்ச்சியை விமரிசிக்கையில் உடனிருந்த நண்பர் (பெர்சு) "சரி.. இவ்வளவு சொல்றியே, சுப்பிரமணியன் எங்கே எப்போ எப்படி பாரதி ஆனார்னு தெரியுமோ?" என்று என்னைக் கேட்டார். நான் கொஞ்சம் விழித்துப் பின் சுதாரித்து, "என்னது? எங்கிட்ட.. எங்கிட்டயே கேள்வி கேக்கறீங்களா?" என்றேன் தருமி பாணியில். விவரத்தைச் சொல்லி, இந்த நிரலியையும் எனக்குக் காண்பித்துக் கொடுத்த பெர்சின் நல்ல மனம் வாழ்க.

    கமல் ஜோக்ஸ் சொல்லி மாதக்கணக்கிலாகிறது.

சமீபத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் நூறு கமல்கள் பரவலாக அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கையில் ஒரு கமல் மட்டும் கொஞ்சம் கூட அடிபடாமல் பிழைத்த அதிசயத்தை பஜய் டிவியில் பேட்டியாக ஒளிபரப்பினர். கெக்கெக்கே என்று சிரித்தபடி நிருபர் டிங்டிங் பேட்டி கண்டார்.
டிங்டிங்: ரயில் நிலையத்தில் என்ன நடந்துச்சு கமல்?
கமல்: அதுவா? மதுரையிலிருந்து வரும் பாண்டியன் எக்ஸ்ப்ரஸ் இரண்டாம் பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறதுனு ஒலிபெருக்கில சொன்னதும் ப்ளாட்பாரத்துல நின்னுகினு இருந்த அத்தினி கமலுங்களும் சடார்னு தண்டவாளத்துல குதிச்சுட்டாங்க..
டிங்டிங்: ஆச்சரியமா இருக்கே? நீங்க எப்படி பிழைச்சீங்க?
கமல்: அதுக்கு ஏன் இப்படிக் காட்டுப் பன்னி மாதிரி சிரிக்கிறீங்க? கேட்டா சொல்லிட்டு போறேன்..
டிங்டிங்: என் சிரிப்பே அப்படித்தான்.. எப்படி பிழைச்சீங்க சொல்லுங்க கமல்.
கமல்: நான் தற்கொலை செஞ்சுக்கலாம்னு தண்டவாளத்துல இருந்தனா.. ரயிலு ப்ளாட்பாரத்துல வருதுன்னதும் சடார்னு தாவிட்டேன்..

கொசுறுக்கு ஒரு பில் கேட்ஸ் ஜோக்கு (ஷ்! யாருக்கும் தெரியாமல் படிக்கவும்):
முதலிரவில் பில் கேட்ஸின் மனைவி: உங்க கம்பேனி பேரு தான் மைக்ரோசாப்ட்னு நினைச்சேன்..

46 கருத்துகள்:

 1. நீண்டகாலத்தின் வலையில் உங்கள் பகிர்வில் அரசியல் தூக்கல் அதிகம் சார்!

  பதிலளிநீக்கு
 2. இந்திய மத்திய அமைச்சர் சொல்லியிருப்பதாக டிவி செய்திகளில் பார்த்தேன். அதிர்ந்தேன். மோடியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களுக்கு இதுவும் வேண்டும். அவர் பொறுப்பில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. அவர் அறியாது வெளிவந்த செய்தியென்றால் உடனே அப்படிப் பேசியவரை பதவியிலிருந்து நீக்கியோ பொதுவாக அறிக்கை விட்டோ மறுத்திருக்க வேண்டும். செய்தாரா தெரியவில்லை. மாறாக இதைப்பற்றி அர்னாப் கூ(ச்சல்)ஸ்வாமிகள் பொதுமக்கள் காது கிழிய கத்திக் கொண்டிருப்பதே மிச்சம்.//

  அநியாயம், அக்கிரமம், அராஜகம்! இப்படி ஒரு செய்தி எந்தத் தொலைக்காட்சியிலும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. ஏற்கெனவே ஊடகங்கள் மோதியைக் கிழிகிழியெனக் கிழிக்கையில் இப்படி ஒரு செய்தி இருந்திருந்தால் சும்மாவா விட்டிருக்கும். இப்படிப் பல வதந்திகள் மோதியின் ஆட்சியில் மட்டுமே திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. நேற்றைக்குக் கூட முல்லைப்பெரியாறுப் பகுதியில் புது அணைக்கு ஆய்வு செய்யக் கேரளாவுக்கு அனுமதி கொடுத்துவிட்டதாகக் கூவல், கத்தல், போராட்ட அறிவிப்புகள், ஆர்ப்பாட்டங்கள். கடைசியில் மத்திய அரசு ஆதாரத்தோடு மறுத்திருக்கிறது இப்படி ஒன்று நடக்கவே இல்லை என. ஒழுங்காக ஆட்சி செய்ய விடமாட்டார்கள் போல. இப்படி எல்லாம் செய்து பெயரைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள். Character Assasination என்பது மோதிக்கு நடந்தாற்போல், இப்போது நடப்பது போல் இதுவரை எந்த மோசமான பிரதமருக்கும் நடக்கவில்லை. ஹூம்! :((

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லப்படவில்லையா? நான் பார்த்தேன் என்கிறேன்?

   நீக்கு
  2. மன்னிக்கணும். ஷிவ் சேனாவின் கருத்தை பிஜேபி அமைச்சர் ஆதரித்ததாக NDTV செய்தியைப் பார்த்தேன். தவறாக எழுதியது என்னுடைய பிழை.
   அதற்கு பிறகு நிறைய ரகளை நடந்து பிஜேபி கீழ்மட்டத் தலைகள் ஷிவ்சேனா சொன்னதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பேசியது எல்லாம் நாடகமாகவே தோன்றுகிறது. இது இவ்வளவு முக்கியமென்றால் (இந்தியாவில் முஸ்லிம்கள் 10-15 சதமாவது இருக்க மாட்டார்களா?) மோடி ஏதாவது அறிக்கை விடலாமில்லையா? ராமர் கோவில் கட்டுவேன் என்று தேர்தல் அறிக்கை விட்டவரிடமிருந்து இதை எதிர்பார்க்க முடியுமா என்பது ?.

   நீக்கு
  3. ம்ம்ம்ம் அது என்னமோ உங்கள் பதிவில் பின்னூட்டம் கொடுத்தால் உடனடியாகக் காணாமல் போயிடுது! என்னவோ அமாநுஷ்யம் இருக்குனு நினைக்கிறேன். :)

   நீக்கு
  4. இப்போ விஷயத்துக்கு வரேன். என் கணவரிடம் இது குறித்துப் பேசுகையில் சிவசேனா எம்பி சொல்லி அதை பிஜேபி கண்டனம் செய்ததாகச் சொன்னார். ஆனால் இவற்றை எல்லாம் நாடகம் என்று சொல்லும் உங்களிடம் இதை எல்லாம் சொல்லிப் புரிய வைப்பது கடினம். ஏற்கெனவே ஒரு முன் முடிவுடன் இருக்கிறீர்கள் பிஜேபி என்றால் மதச் சார்புள்ளது என! மதங்களின் பெயரிலேயே இருக்கும் கட்சிகளைக் குறித்து உங்கள் கருத்து என்ன? திட்டமிட்டுக் காங்கிரஸாலும் மற்ற எதிர்க்கட்சிகளாலும் பிஜேபி என்றால் மதச் சார்புள்ளது என்னும் தோற்றம் உருவாக்கப்பட்டு அதற்கு ஊடகங்களும் ஆதரவு கொடுக்கின்றன. இவ்வளவு மோசமாகப் பொய்யை உண்மை போல் சொல்லுவது ஹிட்லரின் செயலாளர் கெப்பல்ஸ் செய்தார் என்பார்கள். இது அதை விட மோசம்! உதாரணமாக ஹிந்திக்கும், சம்ஸ்கிருதத்துக்கும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலேயே தகுந்த இடங்கள் உண்டு. ராஷ்ட்ரீய ஹிந்தி திவஸ் எனக் கொண்டாடுவார்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த சமயம்) அதன் பின்னரும் கொண்டாடிக் கொண்டு தான் இருந்தார்கள், முந்தைய காங்கிரஸ் அரசு வரை. ஆனால் அதையே பிஜேபி செய்தால் மொழி வெறி! என்னத்தைச் சொல்கிறது! :(

   நீக்கு
  5. இவ்வளவு சொல்லும் ஊடகங்கள் மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் குறித்து ஏதேனும் சொல்கிறதா? நிலக்கரி பேரம் வெளிப்படையாக நடைபெற்றதில் கிடைத்த லாபத்தைப் பாராட்டி இருக்கிறார்களா? அவர்களாக ஏதோ செய்தியை யாரோ சொன்னதை வைத்துக் கொண்டு இம்மாதிரி நடந்து விட்டது என்று சத்தியம் செய்து சொல்லி விடுகிறார்கள். பின்னர் தக்க ஆதாரங்களோடு வரும் மறுப்பைச் சரியான முறையில் வெளியிடுவது இல்லை. ராகுல் காந்தி அமேதியில் ஏற்படுத்த வில்லை என்னும் உணவுப் பூங்கா விஷயத்திலும் இது தான் நடந்தது. இந்த உணவுப் பூங்கா குறித்த ஏற்பாடுகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலேயே 2012--13 ஆம் ஆண்டில் பேசப்பட்டு அப்போதே இதற்கு அனுமதியளிக்காமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதை இப்போது எடுத்து வைத்துக் கொண்டு ராகுல் காந்தி பிஜேபி தான் பழி வாங்கி விட்டதாகச் சொல்லிக் கொண்டு பார்லிமென்டில் பெரிய அமர்க்களம். இந்தக் கூத்துக்கு ஏகத்துக்குப் பாராட்டுகள்; ராகுல் பேசி விட்டார் என்று ஆங்காங்கே போஸ்டர்கள் அடித்து ஒட்டாத குறைதான். ஆனால் உடனேயே துறை சார்ந்த மத்திய அமைச்சர் நிராகரிக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில் என்பதை ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினார். அதை யாருமே லட்சியம் செய்யவில்லை. இந்த அமர்க்களத்தில் பிரதமரின் அறிவிப்பில் இருந்த ஸ்மார்ட் சிடி அமேதியிலும் ஏற்படுத்தப் போவதை யாரும் கவனிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் நோக்கமும் அதுதான். அமேதி ஸ்மார்ட் சிடி என அறிவிப்புச் செய்திருப்பது வெளியிலே தெரிந்து விட்டால் பின்னர் ராகுல் காந்தி எப்படி அரசியல் செய்ய முடியும்? அவர்கள் நோக்கம் வெற்றி அடைந்து விட்டது.

   நீக்கு
  6. அதே போல் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தைக் கர்நாடகாவின் காங்கிரஸ் முதலமைச்சர் ஆன சித்தராமையா முழு மனதோடு ஆதரிக்கிறார். இன்னும் உத்தராஞ்சல் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியும் ஆதரிக்கிறது. இன்னும் சில காங்கிரஸ் ஆதரவுக்காரர்களும் ஆதரிக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதை எதிர்த்து மாநாடு நடத்துகிறது. உண்மையில் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு இது மிகவும் பலன் அளிக்கும் திட்டம் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அரசாங்கமும் விவசாயிகளின் வீட்டில் கட்டாயம் ஒருவருக்கு அரசு வேலை அல்லது எந்தத் தொழிலோ அந்தத் தொழில் சார்ந்த கம்பெனி வேலை உறுதி என வாக்குக் கொடுக்கிறது. இதை எல்லாம் யார் கவனிக்கிறார்கள்?

   நீக்கு
  7. மோடியைப் பத்திச் சொன்னா நீங்க காங்கிரஸ் அது இதுனு சொல்றீங்களே? மத்தவங்களைப் பத்தின விவகாரம் மத்தவங்களைப் பத்தி இருக்கட்டும். ராஜீவ் காந்தியோ ராகுல் காந்தியோ ஜவஹர்லால் நேருவோ அண்ணாதுரையோ எம்ஜிஆரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் - அவர்கள் இப்படி அதனால் மோடி இப்படி என்று சொல்வதால் ஒரு பயனும் இல்லை.

   ஒரு பிரதமருக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டிருக்கிறாரா என்பதே கேள்வி. அதை மோடியின் நடத்தையை வைத்தே கணிக்க வேண்டும் - மற்றவர் எப்படி இருந்தார் என்பதை வைத்து அல்ல.

   பிஜேபி மத சார்புள்ள கட்சி தான். தேர்தல் அறிக்கையில் கோவில் கட்டுவதாகச் சொல்லும் எந்தக் கட்சியும் மதசார்புள்ள கட்சியே. அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியது தானே? இதில் தவறு சரி என்று எதுவும் இல்லை - ஆனால் நாடகம் ஆட வேண்டிய அவசியமும் இல்லை.

   தினமும் யாராவது பிஜேபி கட்சியிலிருந்து ஏதாவது மதவாத முத்துக்களை உதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை, எல்லாம் வதந்தி விஷமம் கற்பனை என்று சொல்லலாம். அல்லது இதையெல்லாம் பார்த்து வாளாதிருக்கும் மோடியின் தலைமை ஒரு கேள்விக்குறி என்றும் சொல்லலாம் அல்லது ஆமாம் பிஜேபி மதவாதக் கட்சிதான் அதனால் என்ன என்று நேர்மையுடனும் சொல்லலாம். நான் இரண்டாவது லாமைச் சேர்ந்தவன். மூன்றாவது லாமைச் சேர்ந்தவர்களை மதிக்கிறேன். முதல் லாமைச் சேர்ந்தவர்களை எண்ணி வருந்துகிறேன்.

   நீக்கு
  8. மதங்களின் பெயரிலேயே இருக்கும் கட்சிகள் (முஸ்லீம் லீக் கட்சி இப்பொழுது இருக்கிறதோ?) எதையும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லை. பிஜேபி இந்துக்களின் கட்சி என்று வெளிப்படையாகச் சொல்வதில் தவறும் இல்லை. சொல்வார்களா? மாறாக இந்தப்பக்கம் தொட்டில் ஆட்ட வேண்டியது அந்தப்பக்கம்...

   நீக்கு
  9. action beats a thousand words என்பதை நானும் நம்புகிறேன். மதசார்பற்ற அரசியல் இந்தியாவில் சாத்தியம் என்று நிரூபிக்க மோடிக்கும் பிஜேபிக்குக் ஒரு வாய்ப்பு. இதைத் தவற விட்டால் மறுபடி காந்தி கட்சி தான். அல்லது ஆப்பு போல ஏதாவது துடைப்பக்கட்டை கட்சிகள் வரலாம்.

   நீக்கு
  10. //ஒரு பிரதமருக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டிருக்கிறாரா என்பதே கேள்வி. அதை மோடியின் நடத்தையை வைத்தே கணிக்க வேண்டும் - மற்றவர் எப்படி இருந்தார் என்பதை வைத்து அல்ல.//
   கடந்த பத்தாண்டுகளாக "பொம்மை பிரதமர்" என்றே பார்த்தவர்களுக்கு இப்போது 24 மணி நேரமும் வேலை செய்யும் பிரதமர் என்றால் புரியத்தான் புரியாது! இதை விடவும் மேலாக எப்படி நடந்து கொள்ள முடியும் ஒரு பிரதமர் என்பவர்? கொஞ்சம் "விம்" போட்டு விளக்கவும்.

   நீக்கு
  11. ஒரு 'பொம்மை'யை ஒப்பிட்டு மோடியின் சாதனைகளை எடை போட வேண்டுமானால் மூச்சு விடுவதும் சாதனை தான். அது மட்டுமே 24 மணி நேரமும் வேலை செய்து கார்பன் டையாக்ஸைடு உற்பத்தி செய்கிறது. அதை உள்வாங்கும் மரம் செடிகள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் உலக ஆக்ஸிஜன் உற்பத்திக்குக் காரணமாகி சாதனை படைக்கும் பிரதமர் என்றும் சொல்லாம். லேசுபட்ட சாதனையல்ல, சரியா?

   நீக்கு
 3. //ஒபாமாவை மோடி நிறைய காபி அடிக்கிறார் என்கிறார்கள். பாவம் பாரதம்.//

  நிச்சயமாக இல்லை. ஒபாமா என்ன செய்து விட்டார் காப்பி அடிக்கும்படி?

  பதிலளிநீக்கு
 4. //சூப்பர் சிங்கர் தொல்லையை எப்படித்தான் மக்கள் பொறுக்கிறார்களோ தெரியவில்லை. சமீபத்தில் பார்த்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஆபாச வரம்புகளை அவ்வப்போது கடந்ததாகத் தோன்றியது. அடுத்து சூப்பர் சிங்கர் toddler, சூப்பர் சிங்கர் baby, சூப்பர் சிங்கர் just born, சூப்பர் சிங்கர் ..சரி.. தொடர்ந்து வரிசையாக வாராதிருக்க வேண்டும் என்று சொல்ல வந்தேன். வயலும் வாழ்வும் காலத்தில் வளர்ந்த எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய டிவியா!//

  ஹையோ, இந்த விஷயத்தில் உங்களோடு ஒத்தே போகணும். சூப்பர் சிங்கர் எல்லாம் பார்க்கிறதில்லை. அர்னாபின் கூச்சலையும் கேட்கிறதில்லை. அர்னாபின் கூச்சலை நம்ம ரங்க்ஸ்தான் ரசிக்கிறார். :))) இந்தியத் தொலைக்காட்சியின் தரம் எப்போது கேபிள் வந்ததோ அப்போதே தரம் தாழ்ந்து விட்டது. இப்போதைக்குப் பார்க்கும்படியா இருப்பது சங்கரா தொலைக்காட்சி, பொதிகை தொலைக்காட்சி, தூர்தர்ஷனின் சானல்கள், மக்கள் தொலைக்காட்சி ஆகியவை மட்டுமே. அதிலும் பொதிகையில் சில சமயங்களில் வரும் சங்கீத நிகழ்ச்சிகளைக் கேட்டால் சூப்பர் சிங்கரின் அபத்தங்கள் மனதில் பட்டுத் தைக்கும்.

  பதிலளிநீக்கு
 5. //'தமிழ் வாழ்க, தமிழினம் ஓங்குக' என்று கூவத்தோன்றியது இன்னொரு நிகழ்ச்சியில். 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாடலை ஒலிக்கவிட்டு 'யார் எழுதியது?' என்ற கேள்விக்கு, 'ஜேசுதாஸ்' என்று பதிலளித்தார் ஒரு மாணவர்(?). 'மறைமலையடிகள் யார்?' என்ற கேள்விக்கு 'திருவண்ணாமலைல இருந்தார்னு தெரியும், பேரு சட்னு ஞாபகம் வரலே' என்றார் ஒருவர். 'தொல்காப்பியம்' எழுதியவர் யார் என்பதற்கு, 'இளங்கோவடிகள்' என்றார் ஒருவர். 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' பாடலை ஒலிக்க விட்டு
  யார் எழுதியது?' என்ற கேள்விக்கு, உற்சாகமாகப் பித்தானழுத்தி 'கலைஞர் கருணாநிதி' என்றார் ஒரு பெண்மணி. பாரதியாரின் இயற்பெயர் தெரியாமல் விழித்தார் ஒருவர். //

  ஹிஹிஹி, இந்த க்விஸ் நிகழ்ச்சி பார்க்கணும்னா பொதிகையில் ஒரு மருத்துவர் நடத்துவார் அதைப் பார்க்கணும். இல்லைனா சங்கரா தொலைக்காட்சியில் பார்க்கணும் இந்தத் தனியார் சானல்கள் எல்லாம் ஜுஜுபி, கடலை மிட்டாய், தேன் மிட்டாய், பல்லி மிட்டாய் ஆகிய மூன்றில் எது இனிப்புனு புரியாத புதிர்களை எல்லாம் கேட்பாங்க! ஹிஹிஹிஹிஹிஹி, நல்லாச் சிரிக்கலாமே!

  பதிலளிநீக்கு
 6. இப்போதைக்கு இம்புட்டுத் தான், மத்தியானமா மறுபடி வந்து படிச்சுச் சிரிச்சுக்கறேன். :))))

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. //கமல்: நான் தற்கொலை செஞ்சுக்கலாம்னு ........................... சடார்னு தாவிட்டேன்.. //

  கமலின் ஒவ்வொரு முயற்சியுமே தற்கொலை முயற்சி மாதிரி தான்.
  லேடஸ்ட் விஸ்வரூபம் உட்பட.

  என்னா !!

  தற்கொலை என்பது ஒருவன் தீர்க்கமா, ஆழ்ந்து அமர்ந்து யோசித்து எடுக்கிற முடிவு இல்லை.

  இவர் எதுக்கும் துணிஞ்சு எடுக்கிறார்.

  கதைலேந்து, பாட்டுலேந்து , எல்லாமே.

  இவரோட ரூட்டே தனி.இவரை புரிஞ்சுக்கறதும் கஷ்டம்.

  ஒன்னு ரண்டு விஷயங்களில் இவர் அப்பாதுரை சார் .

  சமீபத்திலே கூட, இவர் in an interview பேட்டிலே தான் எதிஸ்ட் அல்ல, ராஷனலிஸ்ட் என்றார்.
  That was itself a joke.
  இவரைப் பொறுத்த வரை, ராஷனளிஸ்ட் அப்படின்னா, இன்னா அருத்தம் அப்படின்னு for me புரியல்ல...

  ஒருவேளை, இவர் பிறந்த கம்யூனிடியை நக்கலா, கிண்டலடிக்கிறாரே, அதுதானோ என்னவோ ...நானறியேன்..

  இருந்தாலும், நான் ஒரு கமல் die hard fan.

  ரொம்பவே அறிவு வந்துடுச்சுன்னா, உலகத்துக்கு ஒத்துப் போறது என்பது கஷ்டம் தான்.

  அந்த அறிவுக்குப் பின் இருக்கக்கூடிய " i am ok. I am only OK" என்ற பீலிங் தான் அதுக்குக் காரணமா இருக்கணும்.

  நரசிம்மாவதாரத்திலே இரண்யகசிபு attitude.

  When u have the power to implement what u feel is right, you dont need a God to support U. That is possibly many or some at least in the category feel.

  எனக்கு நீங்க ஒத்துப்பீங்களா இல்லையா என்று தெரியவில்லை. நீங்க ஒத்துக்காட்டி கூட நான் கவலைபடல்ல .

  ஆனா, கீதா மேடம் ஒத்துக்கணுமே அப்படின்னு தான் கையைப் பிசைஞ்சுண்டு காத்துக்கினு இருக்கேன்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எனக்கு நீங்க ஒத்துப்பீங்களா இல்லையா என்று தெரியவில்லை. நீங்க ஒத்துக்காட்டி கூட நான் கவலைபடல்ல .

   ஆனா, கீதா மேடம் ஒத்துக்கணுமே அப்படின்னு தான் கையைப் பிசைஞ்சுண்டு காத்துக்கினு இருக்கேன்.//

   ஹாஹாஹா, சுப்பு சார், அப்பாதுரை தான் வம்புக்கு இழுப்பார்னா நீங்களுமா? :))) எனக்குக் கமல்னாலே அலர்ஜி! அடுத்து இந்த ஜிவாஜி, ஜெமினி, எம்ஜி ஆர் பிடிக்குமானு கேட்டீங்கன்னா ஒரு பெரிய "நோ" தான். சில குறிப்பிட்ட தமிழ் சினிமாக்கள் தான் சொல்லும்படியா இருக்கும். சமீபத்தில் "ரிதம் " பார்த்தேன்,. இரண்டு நாட்கள் முன்னால் தான்! வசந்த் இயக்கம். அர்ஜுன், மீனா, ரமேஷ் அரவிந்த். ஜோதிகா! படம் அருமை.

   நீக்கு
  2. ஆகா! இங்கேதான் கமல்ஜோதி குன்றிலிட்ட ட்யூப்லைட் சாம்பாராக படபடத்து மணந்து வழிகிறது..
   ரேஷனல் வாதங்களை கடவுள் மறுப்புக்கும் பயன்படுத்தலாம், கடவுள் ஏற்புக்கும் பயன்படுத்தலாம்.

   நீக்கு
 9. Random thoughts are interesting.முதலில் இந்த அரோரா கிராமம் உங்கள் ஊரில் என்று தெரிய சில நொடிகள் தேவைப்பட்டது. சிறுபான்மையினருக்கு எதிரான எல்லா செய்திகளின் பின் புலமே மோடி என்று பட்சி சொல்கிறது. அர்னாப் ப்லாஸ்டெர்ஸ் பற்றிய பதிவுக்கு இங்கே போய்ப்பார்க்கவும்
  http://vibhumanohar.blogspot.in/2015/05/last-week-tonight-in-news-hour.html எழுதியது என் பேரனாக்கும். With all his peculiarities I also like Kamal. மோடிக்கு வக்காலத்து வாங்கப் பலரும் இப்படி இருப்பதாலேயே அவர் கொடி கட்டிப் பறப்பது போல் ஒரு தோற்றம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மோடிக்கு வக்காலத்து வாங்கப் பலரும் இப்படி இருப்பதாலேயே அவர் கொடி கட்டிப் பறப்பது போல் ஒரு தோற்றம்.//

   உண்மையை உற்றுப் பார்த்தாலே போதும் ஐயா! யாரும் யாருக்கும் வக்காலத்து வாங்கவே தேவை இல்லை. மோதி கொடி கட்டிப் பறக்கவும் இல்லை. உண்மையில் அவரைக் கேவலப்படுத்துகிறமாதிரி இன்று வரை எந்தப் பிரதமரையும் எந்த ஊடகமும் கேவலப்படுத்தியது இல்லை! உண்மையாக வேலை செய்யும் பிரதமர் ஒருத்தர் இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லை; பொறுக்கவும் இல்லை. :(

   நீக்கு
  2. மோடியை யார் எப்படிக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள் என்பது புரியவில்லை. ஏதாவது உருப்படியாகச் செய்ய முயன்றால் தானே பாராட்டுவதோ கேவலப்படுத்துவதோ சாத்தியம்?

   ஒரு அயல்நாட்டு அதிபர் இந்தியாவுக்கு வந்து (அதுவும் இந்த நூற்றாண்டில் இத்தனை முன்னேற்றத்தின் நடுவில்) மதம் பற்றி எச்சரித்துவிட்டுப் போகும் அளவுக்கு இருக்கிறது உண்மை! உற்றுப் பார்த்தால் பயமாகவே இருக்கிறது.

   நீக்கு
  3. நேத்திக்குக் கூட அர்விந்த் கெஜ்ரிவால் மோதி டெல்லியின் நிர்வாகத்தில் தலையிட்டுப் பழிவாங்குவதாகத் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார். காங்கிரஸ்காரங்க தினம் தினம் ஒரு குறையைச் சொல்லிட்டுத் தான் இருக்காங்க. அவங்க சொல்லாதது என்னவென்றால் யாரானும் ந்யூசென்ஸ் கேஸில் அரெஸ்ட் ஆனால் கூட இதுவும் மோதி வேலைதான் சொல்லலை! அது ஒண்ணு தான் பாக்கி! தனி மனிதத் தாக்குதலை இவ்வளவு கேவலமாக ஒரு பிரதமர் மேல் எந்தக் கட்சியும் கூறியதில்லை. அவ்வளவு கேவலமாகச் சொல்கிறார்கள்.

   நீக்கு
  4. அயல்நாட்டு அதிபரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? உலகுக்கே பெரிய அண்ணன் எனவும் தாங்கள் தான் தலைமை என்பவர்களும் இப்படித் தான் பேசுவார்கள். நியூயார்க்கிலும், நியூஜெர்சியிலும் இன்னும் பல இடங்களிலும் கோயில்களைத் தாக்கியதையும் இப்படிப் பேசலாமே! அதற்கெல்லாம் என்ன சப்பைக்கட்டுக் கட்டப் போகிறீர்கள்? இந்துவாக மாறப் பணம் கொடுக்கிறார்கள் என்னும் பொய்யை விடவா மற்றவை? அப்படி எல்லாம் கொடுக்கவில்லை. மதம் மாறினவங்க திரும்பி வரதுக்கு அனுமதிக்கிறாங்க. அது தான் நடக்கிறது! இங்கே உள்ள ஒரு சர்ச்சில் பகிரங்கமாகவே மத மாற்றம் நடக்கிறது. பிரசாரங்கள் நடக்கின்றன. பணம் கொடுக்கிறார்கள் வெளிநாட்டுப் பணம் குவிகிறது மிஷினரிகளுக்கு. இது எல்லாம் பரவாயில்லை என்றால் நீ தாய் மதத்திலேயே இரு! உனக்கு வேண்டிய சௌகரியம் செய்து தரேன்னு சொல்வது தப்பே இல்லை. பணத்துக்காக மாற நினைக்கிறவங்களை அதே பணத்தைக் காட்டி தாய் மதத்திலேயே இருக்க வைப்பதில் தப்பே இல்லை.

   நீக்கு
  5. மோடி ஆட்சிக்கு வந்த நேரத்துக்கும் இப்போதைக்கும் இருக்கும் economic sentimentகளை மட்டும் வைத்துப் பார்ப்போம். மோடியின் சாதனை புரியும்.

   நீக்கு
  6. அயல்நாட்டு அதிபர் இந்தியாவில் வந்து இப்படிச் சொல்ல வைத்த காரணத்தை மட்டும் பார்ப்போமே? இதே ஒபாமா மோடியைப் பாராட்டினால் இந்த சொள்ளைகளைச் சுட்டிக் காட்டுவீர்களா?

   நீக்கு
  7. நிச்சயமா சாதனை தான் புரிந்திருக்கிறார். விரைவில் அதற்கான ஆதாரங்களைத் தேடித் தரேன். சில நாட்கள் முன்னால் கூடப் படிச்சேன். சேமிக்கலை! ஆனால் தேடினால் கிடைக்கும். ஆனால் மதச்சார்பின்மை என்பதை அவரவர் விருப்பத்துக்குத் தான் எடுத்துக்கிறாங்க! இங்கே உண்மையான மதச்சார்பின்மைனு எங்கே இருக்கு? :(

   நீக்கு
  8. நேரடியாகச் சொல்லவேண்டும் சொல்லுபவர்களும். இருவரும் நட்பாகப் பழகிவிட்டுப் பின்னர் சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் திடீரெனச் சொன்னால்? சொல்ல வைத்த காரணம் என்ன? உண்மையில் அது ஒரு காரணமே இல்லை என்பது பின்னர் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது! அங்கே நடந்தால் vandalism இங்கே நடந்தால் எதிர்ப்பா? ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு!

   நீக்கு
  9. ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு - இதுக்கென்ன பொருள்? கண்ணில் வெண்ணையை விடுவது நல்லதா என்ன?

   நீக்கு
  10. மதசார்பின்மை மதசார்பு இரண்டுமே ஒகே. இந்தப்பக்கம் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று இருந்தால் கமல் ஆகிவிடுகிறோம். (கமல் என்றால் தாமரையாமே? :-).

   ஒரு பக்கம் பெரியார் புராணம், இன்னொரு பக்கம் ராமானுஜர் வரலாறு - இலக்கியத்தில் தவறில்லை. இலக்கில் தான். எது நாடகம், எது பூடகம், எது உண்மை? இலக்கில் வெளிப்படையாக இருந்தால் இலக்கியத்தில் கலப்படம் ஏற்கப்படலாம்.

   நீக்கு
 10. //வகை: கலவை //

  இது என்ன அப்படின்னு புரியல்லே..ஒரு வேளை கலவை அப்படின்னா கலப்படம் என்ற பொருளிலா ?

  அல்லது கலவை என்று ஒரு க்ஷேத்திரத்திலே ஒரு பெரிய மகான் இருந்தாரே , அவருடைய மகாத்மீயத்தைப்[பற்றியா என்று சரியா தெரியவில்லை.

  சிலவை கலவை ஆகிவிடுகின்றன. இந்தக் காலத்துலே வாஸ்தவம் தான். ஒரு வேளை அதைத் தான் சார் மீன் பண்றாரோ ?

  அதெல்லாம் இருக்கட்டும்.
  எப்படி கேட்ஸ் வூட்டுக்குள்ளே கேட்ஸ் பயர் வால் ,ஆண்டி வைரஸ் ,எல்லாம் உடைச்சு உள்ளே போயி, அதுவும் அந்த ரூமுக்குள்ளே ஒரு ஆடியோ ரிகார்டிங் செட் அப் பண்ணினீங்க..சார் !!

  படா கில்லாடி சார்...

  சு.தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே.. கலவை மகான் மகாத்மியமே தான்!

   நீக்கு
  2. ஹிஹி.. கேட்ஸே புலம்பினதா வச்சுக்குவோம்.

   நீக்கு
  3. //கொசுறுக்கு ஒரு பில் கேட்ஸ் ஜோக்கு (ஷ்! யாருக்கும் தெரியாமல் படிக்கவும்):
   முதலிரவில் பில் கேட்ஸின் மனைவி: உங்க கம்பேனி பேரு தான் மைக்ரோசாப்ட்னு நினைச்சேன்..//

   ஹாஹாஹா, அமாநுஷ்ய வேலை மறுபடி! :))) ஹிஹிஹி, இங்கே இருக்கா அப்பாதுரை டச்? நான் சுப்புத்தாத்தா கேட்டதையும் அப்பாதுரை பதிலையும் பார்த்துக் குழம்பிப் போனேன். பதிவை மறுபடி பார்த்ததும் தான் புரிஞ்சது! :)))) நல்லா இருக்கு உங்க கற்பனை வளம்! :)))

   நீக்கு
 11. ///இங்கே இருக்கா அப்பாதுரை டச்?///


  எதைத் தான் அப்பாதுரை சார்
  டச் பண்ணுவார்
  டச்சாம விடுவார் என்று
  சொல்லவே முடியாது.

  சும்மாவா சொன்னாங்க ..

  படிக்கிற காலத்துலே சொன்னங்க. கீட்ஸ் பத்தி.
  he did not touch what he did not adore

  அப்படின்னு !!

  கீட்சுக்கு பொருத்தமோ என்னவோ
  கும்பகோணம் தீட்சதருக்கு மகா பொருத்தம்.

  பதிலளிநீக்கு
 12. ஹா... ஹா... ஹா... ஹா...

  கருத்துரைகள் யம்மாடி...!

  பதிலளிநீக்கு
 13. ஷ்! யாருக்கும் தெரியாமல் படிக்கவும்)://

  படிக்கலாம் தான் நினைச்சேன். முடியல்லையே...

  கிழவி பின் பக்கமா, வந்து , எப்பவும் போல, நான் இன்னா படிக்கிறேன் அப்படின்னு பாத்துக்கினே இருக்கா.

  என்னடி பாக்கிறே அப்படின்னு கேட்டுட்டேன்.

  பாக்கிறதுக்கு என்ன இருக்கு ? அமெரிக்காவிலேயும் அதே கேஸ் தான்.
  போல இருக்கு.....
  ங்கராள்
  ஷ்! யாருக்கும் தெரியாமல் படிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதான் அசல் ஷ்! ஜோக்... மிகவும் ரசித்தேன். சிரித்தேன்.

   நீக்கு
 14. ஷ். ,,,, எனக்கு ஜோக் புரியலை. நான் சின்னப் புள்ளையாக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை ஏன் கேக்குறீங்க.. உங்களைப் போல இன்னொரு சின்ன புள்ளைக்கு இந்த ஜோக்கை விளக்கப் போய்.. ஒருவேளை அவரு என்னை வச்சு காமெடி பண்ணிட்டாரா தெரியலே.. இப்ப இந்த ஜோக்கைப் படிச்சாலே துக்கமா இருக்குதுங்க..

   நீக்கு
 15. ஹஹஹஹஹஹ்ஹ கலக்கல் ராம்ப்ளிங்க்ஸ்!

  அதுவும் அந்த கமல் ஜோக் செம.....

  ஆனா அந்த கடைசி ஜோக்?? ம்ம்ம்ம்ம் புரியலைங்க...

  பதிலளிநீக்கு
 16. ஆல்மோஸ்ட் ஆல் டிவி ப்ரோக்ராம்ஸ் மொக்கை..தாங்கல்...அதுவும் இந்த சூப்பர் சிங்கர், க்விஸ் நம்ம பய புள்ளைங்களோட மகா அறிவை இந்த உலகம் முழுக்க வெட்ட வெளிச்சம் போட்டுக் காமிக்கறாங்க.....ம்ம்ம் மானம் ஃப்ளைட் ஏறுது...என்னத்தச் சொல்ல....

  பதிலளிநீக்கு
 17. //உங்க கம்பேனி பேரு தான் மைக்ரோசாப்ட்னு நினைச்சேன்..//

  If பில் கேட் - கேட் ஸ் திஸ் ...சோ பாவம்..யா!!

  பதிலளிநீக்கு