2014/08/23

அரைவாளி சிந்தனைகள்


    மீபத்தில் "அனியாயத்துக்கு திமிர் பிடிச்சவரு நீங்க" என்றார் என்னிடம் ஒருவர். பழக்கமானவர் என்றாலும் நெருங்கியவர் அல்ல. நான் அவரைப் பொருட்படுத்தாமல் என் வேலையில் கவனமாக இருந்தேன்.

"ஏன் அப்படி சொல்றீங்க?" என்று நான் பதிலுக்குக் கேட்காததால் அவருக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது. "பாத்தீங்களா, திமிர் பிடிச்சவன்னு சொன்னது சரியா இருக்கு. ஏன் அப்படி சொல்றேன்னு தெரிஞ்சுக்கக் கூட உங்களுக்கு இஷ்டமில்லை" என்றார் மறுபடி.

"தெரிஞ்சுகிட்டு நான் என்னங்க செய்யப் போறேன்? என்னைத் திமிர் பிடிச்சவன்னோ வேறு விதமாவோ நினைக்க உங்களுக்கு இருக்குற உரிமையை நீங்க பயன்படுத்திக்கிறீங்க அவ்வளவு தானே?" என்றேன். "என்னைப் பத்தி நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்கனு நான் தெரிஞ்சுகிட்டா பிறகு அப்படித்தான் அல்லது அப்படியில்லைனு ஒரு வாதம் செய்யணும். மறுபடி திமிர் பிடிச்சவன்னு தொடங்கிடுவீங்க. அதுக்குப் பதிலா உங்க அபிப்பிராயத்துக்கான உங்க உரிமையை நான் மதிக்கிறேன்னு வச்சுக்குங்க. உங்க மட்டுல திமிர் பிடிச்சவனாகவே இருந்துட்டுப் போறேன். அதனால தப்பில்லையே?"

"அதெப்படி? உங்க திமிர்னால எனக்கும் என் மாதிரி மத்த பேருங்களுக்கும் கஷ்டமா இருக்கே?"

"எப்படினு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?" என்று கேட்டுச் சில வாரங்களாகின்றன. "என்னமோ நீங்க தான் புத்திசாலி மாதிரியும் நாங்கள்ளாம் ஆட்டு மந்தைங்க போலவும்.." என்று ஏதோ முணுத்துவிட்டுப் போனாரே தவிர, இதுவரை அவர் விளக்கம் சொல்லவில்லை. நான் கவலைப்படவும் இல்லை. நான் கவலைப்படுவதில்லை என்பதில் அவருக்கு இன்னும் கடுப்பு. விடுங்கள்.

அறிவாளி என்ற கர்வம் எனக்குண்டு. அந்தக் கர்வம் அவசியமும் கூட என்று நினைக்கிறேன்.

அறிவாளி கர்வம் என்பது வெளிப்பார்வைக்கு ஒரு பாசாங்கான தோற்றம் தானே தவிர, இதன் உள் வீச்சையும் பயனையும் அறிவாளிகளே அறிவர். கர்வம் இல்லையெனில் என் கதி அதோகதியாகியிருக்கும். 'வாழ்க்கையில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க எது தேவை?' என்ற கேள்வி என்னிடம் (என் போல் பலரிடம்) பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. படிப்பு, பணம், நல்ல கணவன்/மனைவி, நல்ல பிள்ளைகள், குடும்பம், போதும் என்ற மனம், உழைத்துப் பிழைக்கும் பக்குவம், மனசாட்சி, நேர்மை என்று நிறைய பதில்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. என்னைக் கேட்டால் இவையெதுவும் வாழ்வில் மகிழ்ச்சியைத் தராது என்று சொல்வேன். மகிழ்ச்சியும் நிம்மதியும் உள்நோக்கியவை. உள்ளிருந்து பெறவேண்டியவற்றை வெளியில் தேடினால் பலனிலாது போகலாம்..

மகிழ்ச்சி நிம்மதி இவையில்லையென்றால் நாமும் துன்பபடுகிறோம், நம்மைச் சுற்றியிருப்பவரையும் துன்பப்படுத்துகிறோம். எத்தனை பேரை நான் துன்பப்படுத்தியிருக்கிறேன் என்பதை விட, என் செயல்களால் என்னை நான் எத்தனை துன்பங்களுக்கு ஆளாக்கியிருக்கிறேன் என்பது இன்னும் முக்கியமானதாகிறது. இதைச் சுயநலம் என்று சிலர் சொல்வார்கள். சற்று சிந்திப்போம். உங்களைத் துன்பப்படுத்தினால் நான் உடனடியாகவோ தாமதித்தோ மன்னிப்பு கேட்கலாம்; நீங்கள் என்னை மன்னிக்கலாம், மன்னிக்காது போகலாம். மண்டையில் ரெண்டு போடலாம். over. ஆனால் உங்களைத் துன்பப்படுத்திய நினைவை நான் சாகும் வரை சுமக்க வேண்டும். மன்னிப்பு கிடைத்தாலும் மண்டையில் கிடைத்தாலும் இதே கதை, இல்லையா? எத்தனை சுமக்கிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும் என்ற நிலையில் இதன் தீவிர பாதிப்பு விளக்கங்களுக்குட்பட்டதென என்னால் கருதமுடியவில்லை.

நான் மகிழ்ச்சியாக இருக்க இரண்டு நம்பிக்கைகள் அல்லது காரணங்கள் - நான் அறிவாளி என்பது முதலாவது. எதையும் நேசிப்பவன் என்பது இரண்டாவது. இரண்டையும் கலந்தால் ஒருவித சுயதர்மம் வெளிப்படும் என்பது எனக்குப் புரிந்த போது இருபத்தைந்து வயதைக் கடந்திருந்தேன்.

அறிவாளி என்று உணர்வில் உண்மையில் ஆணவம் கிடையாது என்று நம்புகிறேன். உணர்வதால் உண்டாகக் கூடிய வெளித்தீமைகளை விட, உணரத் தவறுவதால் விளையும் உட்தீமைகள் கொடூரமானவை, பயம், தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பாங்கு, எதற்கும் பணிந்து போகும் கொடூரம், பேதமை - இவை தவிர கண்மூடித்தனம், என்ன சொல்கிறோம் செய்கிறோம் என்று தெரியாமல் நடப்பது, அடுத்தவர்களின் மதிப்பை இழப்பது, தினசரி சோகம், வருத்தம், அழுத்தம், தற்கொலை மனப்பாங்கு - யாராவது என்னைத் தடுங்களேன், இல்லையெனில் இந்த வரிசை தொடரும் ஆபத்து இருக்கிறது.

நமக்கு அறிவு இருக்கிறது என்ற ஒரு சிறிய உணர்வினால் மேற்சொன்ன அத்தனை தீங்குகளும் மறையுமா? மறையும். மறையும். நிச்சயம் மறையும். அறிவுள்ளவராக நடந்து கொள்கிறோமா என்பது வேறு விஷயம். 'அறிவில்லாமல் நடந்து கொண்டதேயில்லையா?' என்று கேட்காதீர்கள். அடிக்கடி நடந்து கொள்கிறேன். இப்போதும் சில நேரம் 'நானா அப்படி செய்தேன்?' என்று என் முட்டாள்தனத்தை எண்ணி வருந்துவதுண்டு. ஆனால் ஒட்டு மொத்தப் பார்வையில் என் நேர்மைக்கும் நிம்மதிக்கும் மிக முக்கியமான காரணம் என் அறிவு என்பதை என்னால் மறுக்க முடியாது. என்னை விடச் சிறந்த அறிவாளிகள் உண்டு என்ற அங்கீகாரமும் அந்த அறிவில் அடக்கம்.

நேசிப்பதால் நாம் குறைந்து விடுவதில்லை. நமக்கு ஒரு இழப்பும் இல்லை. அன்பும் நேசமும் சுலபமாக வரக்கூடியது. 'யாரையும் எதையும் நேசிக்கப் பழகு' என்பதன் சூட்சுமம் புரிய அறிவு வேண்டும். ஹி. அதான் சிக்கல். நான் இயல்பில் நேசிப்பவன். அதற்காக எதிரிகள் இல்லையா என்று கேட்காதீர்கள். இருக்கிறார்கள். இருப்பார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே? எதிரி என்பது கூட்டுறவு என்பார் என் ஆசிரிய நண்பர். 'என்னங்க இது, கூட்டுறவுனா ஒற்றுமையில்லையா?' என்பாள் என் தோழி. இருவருமே செத்து வருடங்களாகின்றன, விடுங்கள். எனக்கே ஆணவம் என்றால் என் ஆசிரியருக்குக் கேட்க வேண்டுமா? 'கூட்டுறவுனா கூட்டுறவின் விளைவு. இது கூடத் தெரியலின்னா நீங்கள்ளாம் அறிவாளிங்கனு சொல்லிக்கிட்டு என்ன பலன்?' என்று எங்கள் காலை வாரிவிடுவார்.

எனக்கொன்றும் புரியாமல் இல்லை. எதிரி என்பது இரு தரப்பினரும் சேர்ந்து எண்ணுவதால் உருவாவது. நான் உங்கள் எதிரியல்ல என்று நான் நினைக்கலாம். ஆனால் நான் உங்கள் எதிரி என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்வது? சொல்லிப் பார்க்கலாம். சற்று புரிய வைக்க முயற்சிக்கலாம். ஆனால் உங்கள் எண்ணைத்தை என்னால் எப்படி மாற்ற முடியும்? உங்கள் பார்வையில் நான் எதிரியாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்று விடவேண்டியது தான். என் மட்டில் உங்களை நேசிப்பதோடு அல்லது நேசிப்பதை நிறுத்திக் கொள்வதோடு ஒதுங்க வேண்டியது தான். இதில் திமிர் இல்லை. உங்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டும் என்ற வட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருவதால் எனக்கும் பலனில்லை. உங்களுக்கும் பலனில்லை. வெவ்வேறு orbitகளில் பயணம் செய்யும் கோள்கள் நாம். that's it. அதை உணர்ந்து கொண்டால் உடனடித் தெளிவு.

ஆக, அறிவும் நேயமும் இருந்தால் நிம்மதியும் மகிழ்ச்சியும் உத்தரவாதம்.

எதற்கு இப்படி இழுக்கிறேன்?

போன வாரம் ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. கேட்டவள் என் மகள். கேட்ட கேள்வி: how to find happiness in life?

தோளுக்கு மேல் வளர்ந்த தோழி என்பதால் மகளுடன் நிறைய விஷயங்களைப் பேச முடிகிறது. என் பெண் சற்று intellectual type. socratesலிருந்து jason mraz ஒபாமா jimmie fallon வரை நிறைய பேசினோம். திடீரென்று மேற் சொன்ன கேள்வியைக் கேட்டாள். அவளுக்குத் தெரிய வேண்டும் என்று அறிவிக்க ஒரு பதிலைச் சொல்வதா, எனக்குத் தெரியும் என்பதை அறிவிக்க ஒரு பதிலைச் சொல்வதா? சற்றுத் தயங்கி, 'be smart. be kind. you will find out' என்றேன், பதிலுக்கு.

'what does being smart got to do with happiness? i don't get it' என்றாள்.

'you will. sooner than you think' என்றேன்.

வீடு திரும்பியதும் "எனக்கு ஒரு mac வேணும்" என்றான் மகன்.

"இப்ப வாங்கித் தர முடியாது" என்றேன்.

"அக்காவுக்கு மட்டும் ஹை ஸ்கூல் போறப்ப தனி லேப்டாப் வாங்கிக் கொடுத்தியே?"

"ஒரு தடவை செஞ்ச தப்பை இன்னொரு தடவை செய்யணுமா என்ன?"

மகன் உடனே மகளைக் கூப்பிட்டு, "dad says you are the first mistake he made!" என்றான்.

"ஹேய்.. நான் எங்கடா அப்படிச் சொன்னேன்?". ..hmm. இவன் என்னை விட அறிவாளி என்று ஒதுங்கிவிட வேண்டியது தான்.

பொழுது போகவில்லை. அறிவாளி சிந்தனைகள் போதும் சிறிது அரைவாளிக்கும் ஈயவெண்ணி எந்தப் பூனையைப் பிடிக்கலாமென்ற கேள்வியுடன் கணினி முன் அமர்ந்தேன். வெளியே இடி மின்னல் மழை. நாய் இரண்டும் இடிக்குப் பயந்து என் காலைச் சுற்றி உட்கார்ந்தன. நகரவில்லை. சரி, யுட்யூபில் வாத்யார் படம் பார்க்கலாம் என்று தட்டினேன். திறந்தது. கேளாமலே கிடைத்தது... ஆச்சரியம்.76 கருத்துகள்:

 1. அறிவாளிக்கும் அரைவாளிக்கும் உள்ள வேறுபாட்டை சிந்திக்க வைத்து விட்டீர்கள். மகனுடன் பேசியது உங்கள் வேறு ஒரு பதிவில் படித்தது போல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. அறிவாளி என்ற சொல்லும் அதற்குள்ளே அடங்குமோ என்று எனக்கு ஒரு டவுட் கீது.

  எதை ஒண்ணா புல்லா ரீச் பண்ண முடியாதோ, அத பண்ணிட்டேன், நான் அறிவாளி ஆயிட்டேன் என்று சொல்வதே

  கர்வம் என்று சொல்லவேண்டாம்,

  அறியாமையின் அடுத்த பரிணாமம் என்று

  சொல்லலாமோ ?

  இன்னொரு கோணத்திலே பார்த்தால்,

  ஒரு உரையில் இரு கத்தி இருக்க முடியுமோ ?
  அறிவும் கர்வமும் சேர்ந்து இருப்பதும் அது போலத்தானே..

  ஏக் ம்யான் மே தோ கட்க்
  தேகா சுனா ந கான்

  என்று கபீர் சொல்வார்.

  மூன்றாவது கோணம் ஒன்றும் உள்ளது.

  அறிவு தனக்கு இருக்கிறது என்பதை உணர்வதை விட,
  கர்வம் இருக்கிறது என்று உணர்வது கடினம்.

  நான் சொல்லும் குறிப்பிடும் கர்வம்
  ப்ரைட் அல்ல, அரகன்ஸ்.

  It is good to be proud .
  Not so, when one is arrogant, knowledge takes the other route.

  கர்வம் வந்து விடின் அது இருக்கும் இடத்தில் வேறு எதுவுமே
  இருக்காது. அல்லது நிலைத்து நிற்காது.


  Having said , if you felt ARIVU connotes just a sense of discrimination
  OK.

  subbu thatha.

  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுப்புத் தாத்தா உங்களை எங்கள் ப்ளாக் ஞாயிறு பதிவில் தேடிகிட்டு இருக்காங்க; இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க!

   நீக்கு
  2. நலமா சார்? நான் சொல்றதுக்கு முன்னால kgg சொல்லிட்டாரு.

   நீக்கு
  3. அறிவாளி என்பது 'ஆக முடிகிற' சமாசாரமில்லை. 'ஆகிக் கொண்டிருக்கிற' சமாசாரம். அதனால் அறிவாளி என்பது ஒரு state descriptionஆகத் தான் கொள்ள வேண்டும். எல்லாம் அறிந்தபின் அறிவாளியாக நடந்து என்ன பிரயோஜனம்?

   அறிவாளி என்ற உணர்வுக்கும் அந்த உணர்வினால் சில நேரம்/சிலரிடம் உண்டாகும் 'எல்லாமறிந்த' தான் தோன்றித்தனத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டையும் குழப்பிக் கொண்டு அறியாமையின் அடுத்த பரிணாமம் என்று கர்வத்தைச் சொல்வது அறியாமை? கர்வத்துக்கும் அகங்காரத்துக்கும் இருக்கும் வித்தியாசம் சார், சரியா? (தமிழ் எங்கே போகிறது?)

   அறிவாளி என்ற உணர்வில் எந்தக் கர்வமும் இல்லை.

   நீக்கு

 3. A few lines were omitted to be copied while cutting and pasting my draft.
  They are as below:
  \அறிவாளி என்ற கர்வம் எனக்குண்டு. //
  அறிவு என்பது என்ன
  என்பதில் தான் சூட்சுமமே இருக்கிறது.
  நிகிலிசம் என்று ஒரு ப்ரின்சிபிள் . உலகத்தே இருக்கும் எல்லா வால்யூ சிஸ்டம்ஸ் க்கும் பொருள் ஒன்றும் இல்லை. எல்லாமே பிசாத் , உடான்ஸ் அப்படின்னு சொல்வது.
  now add the previous comments.

  subbu thatha.

  பதிலளிநீக்கு
 4. உரக்க சிந்தித்திருக்கிறீர்கள். அல்லது மறைமுகமாக ஏதோ விளக்கம் சொல்ல முயன்றிருக்கிறீர்கள் என்று தோன்றியது. ஆனாலும் சில சிந்தனைகள் சிந்திக்க வைத்தன. புல்லுக்கும் பொசிந்தது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறைவில் சொன்னாலும் வெளிப்படையாகத் தான் சொல்லப் பிடிக்கும் ஸ்ரீராம். மறைமுகம் ஒவ்வாது - காதலில் தவிர.

   நீக்கு
 5. கலவையை ப(கு)டித்து குழம்பிப்போய்ட்டேன்! துரை சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்ப நான் சொன்னது சரிதான். அடுத்தவரைக் குழப்புவது அறிவாளிகளின் கடமை.

   நீக்கு
 6. கை கொடுங்க அப்பா ஸார்... நம்முடைய அறிவின் உயரத்தை நம்மால் சரியாக மதிப்பிட முடிகிறது என்றாலே மகிழ்ச்சி வெகு அருகில்தான். அத்துடன் கொஞ்சம் நேசமும்... எனக்கு முழு உடன்பாடு உங்களின் கருத்தில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாச் சொன்னீங்க. நம் அறிவை அறிந்து நடக்க அந்த மதிப்பீடு அவசியம். அறிவின் உயரம்/ஆழத்தை அறிந்த பின்னும் அறியாது நடப்பது தண்டனை தப்பியக் கொலைக்குற்றம்.

   நீக்கு
 7. மிகவும் அருமையான கருத்துப் பகிர்வு...
  நல்ல கட்டுரை அப்பாத்துரை சார்...

  பதிலளிநீக்கு
 8. அறிவாளின்னு நினைத்தால்தான் கொஞ்சமாவது முன்னேறமுடியும்:)

  பதிலளிநீக்கு
 9. அறிவு என்பது எல்லா விஷயங்களையும் அறிந்துகொள்வதா அல்லது இருக்கும் அறிவை சமயோசிதமாக பயன்படுத்தி சாமர்த்தியமாக செயல்படுவதா....?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான கேள்வி.
   அறிவு எதையும் செய்வதில்லை. வளரும் தேயும் தவிர தண்டமாக அப்படியே இருக்கும்.
   செய்வதெல்லாம் அறிவாளி.

   நீக்கு
  2. எல்லா விஷயங்களையும் Vs ஒரு விஷயத்தின் எல்லாவற்றையும்.

   இதுதான் அறிவின் கருப்பொருள்?

   நீக்கு
  3. அருமையான கேள்வி. அறிவு எதையும் செய்வதில்லை. வளரும் தேயும் தவிர தண்டமாக அப்படியே இருக்கும். செய்வதெல்லாம் அறிவாளி.

   நீக்கு
 10. எல்லா விஷயங்களையும் Vs ஒரு விஷயத்தின் எல்லாவற்றையும்.

  எல்லா விஷயங்களையும் கற்க, ஏன், புரிந்து கொள்ள ஒரு ஜன்மம் பத்தாது.

  ஒரு விஷயத்தில் எல்லாவற்றையும் ???

  அப்படியா, எங்கே !! ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு விலா வாரியா
  அதில் இது தான்யா இருக்கு, இதுக்கு மேலே ஒண்ணும் கிடையாது அப்படின்னு
  சொல்லுங்க பார்ப்போம்.


  சிம்பிளா ஒண்ணு எடுத்துக்குங்க... உங்களுக்குப் புடிச்ச,

  அர்த்த சாஸ்த்ரம் வேண்டாம். ஏகப்பட்ட டிஃபரன்ஸ் ஆஃப் ஒபினியன் உங்களுக்கே வந்துவிடும்.

  கா. ஸூ.??

  கமான்.

  சு.தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ.. பிடிச்சிட்டீங்களா..?

   'கற்க'னு இங்கே பொதுவா சொல்லியிருக்கீங்கனு வச்சுக்குவோம். இல்லின்னா 'படிக்காத மேதையில்லையா?'னு சைடுல கொடி பிடிச்சுடப் போறாங்க :-).

   எல்லா விஷயங்களையும் அறிய ஒரு ஜென்மம் பத்தாதுங்கறது ரைட்டு; ஒரு விஷயத்துல எல்லாவற்றையும் அறிய ஒரு ஜென்மம் போதுங்கறதும் ரைட்டு. ஒரு விஷயம் என்ன? நிறைய விஷயங்கள்ள எல்லாவற்றையும் அறியலாம்.

   சிம்பிளாத்தான் இருக்கணும்ன்றதில்லே. கொஞ்சம் சுவாரசியமானதா, ஓரளவுக்கு சிரமமானதாவே எடுத்துக்குவோம். உதாரணம் 'நேற்று'. நேற்று என்ற தத்துவம், நேற்று என்ற நேரம், நேற்று என்ற காலம், நேற்று என்ற நிகழ்வு, நேற்று என்ற அனுபவம் - இதுல ஒண்ணொண்ணயும் பிட்டு பிட்டு வைக்கலாம்.

   இன்னொரு சிம்பிளான உதாரணம். இதைப் பாருங்க.

   ♦--------♦
   | |
   | |
   ♦--------♦

   இதை இதுக்கு மேலே ஒண்ணும் இல்லேங்கற அளவுக்கு விளக்கலாம் (கணிதம் தெரிஞ்சவங்க கண்ணை மூடிக்கிட்டு விளக்கலாம்-அடுத்தவங்க கண்ணை மூடிக்கிட்டு).

   வாழைப்பழத்தோல் எல்லா இடத்துலயும் எல்லா பரிமாணத்துலயும் உண்டு. விளக்குவதும் விளங்குவதும் வாழைப்பழத்தோல் என்று அறிவது அறிவே :-).

   மனிதரால் விளக்க முடியாதது உண்டு. மனிதரால் விளக்கவே முடியாதது இல்லை. ஒரு சின்ன கேப்புல இருக்குது சூட்சுமம். காலம்.

   நீக்கு
  2. ஹிஹி.. அந்தப் படம் ஒரு சதுரம்.

   நீக்கு
 11. ஓகே. சரண்டர்.

  கமென்ட் போட்டதும் காணாம போகும் சமாசாரம் - விளக்கவே முடியாது. என்னால் அறியவே முடியாது. எல்லாம் அறிதலுக்குட்பட்டது என்பது எத்தனை ஆணவம். சரண்டர். சரண்டர்.

  பதிலளிநீக்கு
 12. சதுரம்.//
  சரண்டரா !!
  யாருக்கு ?
  எதுக்குங்க ?

  ஒரு பின்னூட்டத்தை பதிவு பண்ண முடியல்ல, என்ன காரணம் அப்படின்னு தெரியல்ல என்கிற பிசாத்து விசயத்துக்கு, சரண்டர் ஆகிற நீங்க தன்னை அறிவாளி அப்படின்னு எனக்கு ஒரு கர்வம் வேற இருக்குது அப்படின்னு சொல்றது எனக்கு கொஞ்சம் பாரடாக்ஸ் அப்படின்னு தோன்றது.

  ( அது ஒன்னும் இல்ல. கூகிள் ஓட இன்டர்னல் ப்ராப்ளம். இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு சரியாயிடும் )

  சரி. இப்ப இன்னொரு விஷயம். நீங்க சொல்லியிருக்கிற சிம்பிள் சதுரம் எனக்கு 1958 லே காலேஜ் லே எங்க ப்ரொபசர் பிரான்சிஸ் ராஜ் சொல்லி போட்டாரு. எதுவோ புதுசா லோகத்துக்கே தெரியாத ஒன்னு சொல்றோம் அப்படின்னு நினைப்பு இருந்துச்சுன்னா உட்டுடுங்க.

  இன்னொரு விஷயம்.
  இதே சதுரம் அப்படிங்கற சமாச்சாரத்திலே நாலு புள்ளி, ஒன்னுக்கொன்னு நேரா நயன்டி டிக்ரீஸ் லே இருக்குது. இல்ல அப்படின்னு தோன்றது.
  இரண்டு புள்ளிகளை சேர்க்கும் ஒரு நேர் கோடு ஷார்டஸ்ட் டிஸ்டன்ஸ் பெட்வீன் டூ பாய்ண்ட்ஸ் அப்படின்னு சொல்லி கொடுக்கறாக. சிக்ஸ்த் பாரம் படிக்கும் போ. இப்ப மூணாம் கிரேடு லே சொல்லி தற்றாக.

  ஆனா , ஒரு சாடிலைட் லே இரண்டு பேர் ஸ்பேசிலே ஸ்டார்ட் பண்றாக அப்படின்னு வச்சுக்கங்க. இரண்டு பெரும் ஒரு புள்ளிலேந்து கிளம்பி போய்க்கினே இருந்தா, திரும்பவும் இந்த சூர்ய மண்டலதிலோ அல்லது வேறு எந்த ஸ்டார் மண்டலதிலோ இருக்கும் வரை புறப்பட்ட இடத்துக்குத் தான் வரணும். அப்ப அவங்க வந்த பாதையை பாத்தா ஒரு சர்கிள் மாதிரி தான் .

  இப்ப, இந்த இரண்டு பெரும் கிளம்பின இடத்தை சேத்து பாருங்க. முடியற இடத்தை சேத்து பாருங்க.

  மொத்த ஷேப் என்ன வருது.? ஒரு ஸ்பியர் மாதிரி லே இருக்குது.

  அப்ப ஸ்பேஸ் லே நேர் கோடு, சதுரம் அப்படிங்கற கன்செப்ட் எல்லாமே அம்பேல் ஆகிடுது இல்லையா ?

  ஸோ , சதுரம் அப்படின்னு நீங்க நினைக்கிறது எல்லாமே ஒரு மேக்சிமம் த்ரீ டயமென்சன் . போர்த் இல்லைன்னா இன்னும் கொஞ்சம் உங்க சிந்தனை சக்தியை, அரை வாளிக்கு கொஞ்சம் அதிகமா, எடுத்து போட்டீகன்னா,

  அடடா, எல்லாமே கோளம் தானோ அப்படின்னு தோனுது.

  உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
  நிலை பெறு (ரு) த்தலும் நீட்டலும் நீட்டலா ........

  தெரியும் அப்படின்னு நினைச்சவன் தனக்கு அத்தனை தெரியாது போல இருக்குது, இன்னும் கொஞ்சம் தெரிஞ்சக்கணும் அப்படின்னு நினைக்கிறது, அறிவு.

  நினைக்காம போறதும் சகஜம் தான். அதத்தான் தலைப்பிலே சொல்லிபிட்டீகளே.

  அரை வாளியின் சிந்தனைகள் அப்படின்னு.

  நானும் அதை பார்க்காமலேயே , கிறுக்குத்தனமா, கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன்.

  ஏன் ?
  நான், நீங்க, ஈன்ஸ்டீன் உட்பட எல்லோருமே அரை வாளி தான்.
  என்ன ?
  ஈன்ஸ்டீன் ஒத்துகிட்டாரு. நமக்குத் தெரியல்ல, புரியல்ல அப்படிங்கறதாலே , இல்ல அப்படின்னு சொல்லிடாதீக அப்படின்னு சொன்னாரு.

  நம்ம ஈன்ஸ்டீன் இல்ல

  . ஒத்துக்க நம்ம மனசு அதுக்குள்ளே இருக்கிற காமம் ( செக்ஸ் இல்ல, பொருட்களுடன் அதீத ஈடுபாடு) மன்யு ( தான் , தானே தான் என்னும் ஆணவம் ) இரண்டுமே நம்ம விட்டு போகாது.

  இதெல்லாம் இருக்கட்டும்.

  அந்த வேதாளக் கதை சொல்லக்கூடாதோ ?
  ஸ்வாராஸ்யமா இருக்குமே !!

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு


 13. // அறிவாளி என்பது 'ஆக முடிகிற' சமாசாரமில்லை. 'ஆகிக் கொண்டிருக்கிற' சமாசாரம். அதனால் அறிவாளி என்பது ஒரு state descriptionஆகத் தான் கொள்ள வேண்டும்.//

  ஆகிக்கொண்டு இருக்கிற... என்பதில்

  ஆ .. ...........................................................கி..................................

  ஒரு உலையில் அரிசியைப் போட்டால், இத்தனை நேரத்தில் சாதம்,
  ஆகிவிடும். கணக்கிட இயலும். அனுபவத்தில் சாத்தியம்.

  ஆனால், எல்லா விஷயங்களுமே லோகத்துலே ஒரு விதமா சிதறிக்கிடக்கிறது. அதுலே இன்னமும் தெரியாத சமாசாரம் பலதும் அப்பப்ப தெரியவருது.

  ஒரு கோன் சி, ஓ. என். யீ. கூம்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

  அடியில் இருக்கும் வட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு புள்ளியும் மேல் நோக்கிச் செல்கிறது.

  எல்லா நேர்கோடுகளும் ஒரு இடத்தில் சங்கமம் ஆகின்றன.

  இப்ப,

  நம்ம எல்லோருமே இந்த ஆகிக்கோன்டு இருக்கிற நிலையில், அதாவது, இந்த பேஸ் புள்ளியிலிருந்து மேல் இருக்கும்
  டாப் பாயின்டை நோக்கி நகர்ந்துகொண்டு தான் இருக்கிறோம். நம்ம லைஃப் முடிஞ்சு போனாலும், நம்ம விட்ட இடத்திலேந்து இன்னொத்தன், அதை பேஸ் ( பி இஸ் ஃபார் பாம்பே) பாயின்டா வச்சுன்டு மேலே போறான்.

  இப்ப அந்த டாப் பாயின்டை கொஞ்சம் கன்செப்சுவலா திங்க் பண்ணிப் பார்த்தீக அப்படின்னா,

  இரண்டு சாத்தியக்கூறுகள் தெரிகின்றன.

  ஒன்று, என்னிக்காச்சும், யாருன்னாச்சும் அந்த பாயின்டை புடிச்சுடலாம்.
  இல்ல, எல்லாரும் , அதாவது பேஸ் லேந்து புறப்படற எல்லாரும் சேர்ந்து புடிச்சுடலாம்.

  ஆனா, நம்ம போகபோக, அந்த பாயின்ட் இன்னும் மேலே போய்க்கொண்டே இருக்கு.

  அதாவது நம்ம போயிட்டு இருக்கும் ரூட் என்ட்லெஸ் ஆக் இருக்குன்னு நமக்கே தெரியறது.

  ஊதாக் கலரு ரிப்பன், உனக்கு யாரடி அப்பன் ?

  என்று அந்த ரிப்பன் ரிப்பனின் முடிவு தெரியாத போது,
  நம்ம ஆரிஜின் நோக்கி போய்க்கினே இருக்கோம்.

  சப்போஸ் , இந்த ஆரிஜின் பாயின்டை நம்ம கனசெப்சுவலா ஒரு ச்ட்ரக்சரைஸ் பண்ண முடிஞ்சா,
  அது தான்
  ரிபாஸிடரி ஆஃப் ஆல் நாலட்ஜ்.

  அந்த நாலட்ஜ் யார்கிட்ட இருக்கும் ?

  அந்த நாலட்ஜ் நோக்கி நம்ம எல்லோரும் போயிகிட்டு இருக்கோம். நிசம் தான்.
  நம்ம ஆகிக்கொண்டு தான் இருக்கோம்.
  ஆனா ஆகிவிட முடியுமோ ?
  கன்செப்சுவலி, எகைன் , முடியும்.

  அப்ப, நம்ம கிட்டே பர்வேசிவ்னெஸ் ஆஃப் ஆல் நாலெட்ஜ் இருக்கும்.
  இருக்கலாம்.

  அந்த ஆம்னிசியன்ஸ் தான் நம்ம ஆண்டவன் , எல்லாம் அறிந்தவன்.
  என்று சொல்வாக.

  ஆண்டவன் அப்படின்னு சொல்ல நம்ம ரேஷனிலிசம் இடம் கொடுக்கல்ல, நம்ம ஈகோ தடுக்குது அப்படின்னா,
  அத ஒரு பாயின்ட் அப்படின்னு வச்சுகுங்க. ஸே எக்ஸ்.

  இப்ப அந்த எக்ஸ் இன், சிதறல் தான் இந்த பேஸ் லே இருக்கிற எல்லோருமே, நீங்க, நான், சாக்ரடீஸ், ஈன்ச்டின்,
  ஸ்ரீராம், எல்லாருமே.

  இப்ப அந்த எக்ஸை பரம்பொருள் ணு சொல்லி, கீழே இருக்கிற புள்ளியை எல்லாம்,

  ஒரு அன்டர்ஸ்டான்டிங் க்காக, ஆன்மா அப்படின்னு சொன்னா,

  எல்லா ஆன்மாவுமே ஒரு டோடல் அன்டர்ஸ்டான்டிங் தனக்கு வேணும் அப்படிங்கற ஒரு
  உந்துதல் ஏற்பட்டு, அந்த புள்ளியை, பரம்பொருளை நோக்கி விழையுது.

  இருந்தாலும், எங்கனவோ பாதிலே நின்னுகினு, நான் அடைஞ்சுட்டேன். டாப் பாயின்டை அப்படின்னு சொல்ரது.

  எல்லாரும் சூபர் ஸ்டாராக முடியுமோ ? அது போலத்தான்.

  ரஜினி ரஜினி தான்.
  ஆனா, தானும் ஒரு நாளைக்கு ரஜினி ஆவணும் அப்படின்னு நினைக்கிறாங்க இல்லயா
  கோடம்பாக்கத்துலே கால் வச்ச உடனே. ..

  அதுதான் ஜிக்ஞாசா என்று சொல்லப்படர ட்ரிக்கரிங்க் பாயின்ட்.

  இதெல்லாம் குப்பை.

  எங்கள் ப்ளாக்லே சாம்பார் , அதுவும் சரவண பவன் சாம்பார் இருக்குது.

  ஓடி வாங்க.. அத ஒரு கை புடிப்போம்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரமாதமான formல இருக்கீங்க.
   சதுரத்தை சதுரமாக பார்க்காத போனாலும் விளக்கலாம். விளக்கத்துக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை. விளக்கம் இல்லாது போனாலும்.

   நீக்கு
  2. seeing anything with a form or without it depends on only HOW WE SEE IT. maraththai maraiththathu maa madha yaanai. maraththil marainthathu MAA MADHA YAANAI.
   andha
   maa madha yaanai ethu endru purinchunda,
   geetha maami sonnathu puriyarathukku oru chance irukku.
   subbu thatha.

   நீக்கு
  3. உணர்வதில் தவறில்லை. உணர்ந்து நடக்கும் வழிகளில் தவறாமல் இருந்தால்.

   எல்லாவற்றிலும் எல்லாம் அறிவதற்கு அவசியமே இல்லாத போது அதை அளவுகோலாக வைப்பது வட்ட வாதம். .அறிவு இருப்பதாக உணர்வதில் ஆணவமே இல்லை என்கிறேன் நான். அறிவு இருப்பதே ஆணவம் என்கிறீர்கள் நீங்கள். ஒருத்தர் வடக்கு. மரத்தில் மறைந்தது மறைந்தது மாமத யானை என்பதும் உணர்தலே. மறைவதை உணர்வதும் இருப்பதை உணர்ந்தால் தான் முடியும்.   நீக்கு
  4. அறிவு இருப்பதே ஆணவம் என்கிறீர்கள் //

   I never said or even suggested like this.
   There are four categories of people.
   People
   who know that they know ( for certain)
   who know that they do not know.(again with certainty)
   thirdly,
   people who do not know they know.( an element of doubt, or know that whatever they knew is final at least from the then time frame available or knowable)
   fourth, and the last,
   people who do not know that they do not know.

   of us ( me included) are in the fourth category, unfortunately and unluckily, and in vain we tend to believe that we know everything.

   Instead, if we form an opinion, that
   we know a little of what we ought to know, but
   what we know requires a little more refinement,
   a little more clarity,
   a little more value,
   acceptable to mankind irrespective of the dimensions of time,
   it is then ridding oneself of vanity.

   Pride is just another thing.
   It is good to have pride, that
   I know the proof of locus theorem
   One can be really proud of one says,
   "I know the mind of my wife.."

   Unluckily, we do not have just that.
   Try it.

   subbu thatha

   நீக்கு
  5. என்னுடைய பிழை. அறிவு இருக்கிறது என்ற உணர்வு இருப்பதேனு நினைச்சு அறிவு இருப்பதேனு எழுதிட்டேன்.

   நீக்கு
 14. //மகிழ்ச்சியும் நிம்மதியும் உள்நோக்கியவை. உள்ளிருந்து பெறவேண்டியவற்றை வெளியில் தேடினால் பலனிலாது போகலாம்.. //

  எல்லோரும் தேடுவது இதைத் தானே! அஹம் பிரம்மாஸ்மி! :))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. super mami. super reply.
   aana aham irukkira idaththile ahankaaram irukkaame mami, athu thane prachnaiyin aarambam.
   neengalE oru nalla theerpaa sollunga.

   subbu thatha.

   நீக்கு
 15. வித்வத் கர்வம் என்று உண்டாம்.. அது என்னன்னா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. True.
   It was that, that got shattered, when Adi Shankara was accosted by a chandala, who asked him (when he was asked to stay away from his path) "do you require my body to stay away or anything else?"
   Wisdom dawned in Adi Shankara,
   that that man knew much better than what he himself knew on
   strangely, what he himself thought of preaching.

   Thanks a lot of jeevi, for the wonderful comment.

   subbu thatha.

   நீக்கு
  2. ஆதி சங்கரருக்கு அந்த இடத்துல கிடைச்ச wisdom வித்வத் கர்வம் இல்லைனு நினைக்கிறேன். lack of வித்வம்? இந்தக் குறிப்பிட்ட இடத்தில் சங்கரர் belonged to the fourth category - the puzzle. ஒரு துரித அகங்காரம்?

   நீக்கு
  3. Again, in all humility, I must say, NO .
   Sankara belonged to the category, where
   people in introspection realize,
   that
   they finally know or realie
   that they do not really know what they thought they knew when they began their quest of knowledge.

   This is the triggering point, where one starts unraveling things which must be known in greater detail and in depth.


   s.t.   நீக்கு
 16. The title of this blog superb.
  RAMBLINGS OF A HALF EMPTY BUCKET.
  ONE CAN ALSO INTERPRET AS
  WANDERINGS OF A HALF FILLED JAR.

  ALL SAID
  HAS PROVOKED OR TRIGGERED ( MUST HAVE)
  A LOT OF INTROSPECTION OR INSIGHT INTO ONE'S OWN WAYS OF THINKING ITSELF.

  IF YOU AND I DEVELOP A MINDSET THAT WHAT I SAY IS RIGHT IT RUINS EVEN WITHOUT OUR BEING AWARE OF IT.
  INSTEAD,
  IF WE DEVELOP A FEEL THAT WE ARE ENTERING A ZONE WHERE WE HAVE SOMETHING THAT WE OUGHT TO KNOW, IT IS REVEALING.
  KNOWLEDGE IS A PROCESS.
  IF YOU AND I CAN CONCEPTUALLY UNDERSTAND THE EXISTENCE OF THE SUMNUM BONUS OF ALL KNOWLEDGE
  POSSIBLY THAT IS THE END PRODUCT.
  THE REST OF IT IS JUST PROCESS.
  WHERE WE ARE IS JUST IS NOTHING BUT OUR GUESS.
  MOST TIMES VALIDATED BY OURSELVES.

  SUBBU THATHA.
  (IN ALL HUMILITY, AND WITH A CLEAR UNDERSTANDING THAT
  A.D. KNOWS MUCH MUCH MORE THAN WHAT S.T CAN KNOW IN THE REST OF HIS LIFE, WHICH IS GROWING SHORTER AND SHORTER AS TIME MOVES ON)
  '

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. THE PHRASE SHOULD READ SUMNUM BONUM
   not sumnum bonus
   s.t.

   நீக்கு
  2. அப்படியெதுவும் இல்லை சார்.
   அறிவாளி என்ற கர்வம் உண்டுனு தான் சொன்னேன்.
   நான் எல்லாம் அறிந்தவன் என்று சொல்லவில்லை.
   கருத்தழிவதும் அறிவு தான் :)

   நீக்கு
 17. இந்த அறிவாளி காலர் தூக்கலுக்கு பல மட்டங்கள் (நிலைகள்) உண்டு.

  இன்னொருத்தனுக்குத் தெரியாத ஒன்று தனக்குத் தெளிவாகத் தெரிந்து அதை அனுபவித்து உணர்கையில்,

  உள்ளத்தின் உள்ளே உறங்கும் லவலேசம் திமிர் மேலெழுந்து வருவதும்-----

  தன்னிலும் மேம்பட்ட இன்னொரு அறிவாளியின் திறன் கண்டு 'இது தனக்குத் தெரியாமல் போச்சே' என்றோ என்னே இவன் திறன்' என்று தலை கவிழ்ந்து போவதும்--

  இருக்குமானால் முதலில் சொன்ன அறிவாளித் திமிருக்கு நிச்சயம் அவன் அருகதை உடையவனாகிறான்.

  இரண்டாவது சொன்னபடி அவன் தலை கவிழவில்லை என்றால் அவனது அறிவாளித் திமிர் அல்ல; வெத்துத் திமிர்.

  மொத்தத்தில் இந்த 'அறிவாளித் திமிர்' என்பது அறிவை நேசிப்பதில் அடக்கம் கொண்டு அடங்கிவிடுவதை உன்னிப்பாகக் கவனித்தால் புரியும். முற்றிலும் அறிவை உணரும் தன்மை வயப்பட்டது. அறிவுடையார் மட்டிலே மட்டும் நிகழ்வது.

  அதுசரி, அறிவை நேசிப்பது என்றால் என்ன?.. கற்றாரைக் கற்றாரே காமுறதல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனக்குச் சொந்தமான அழகை நேசிப்பதும் அறிவை நேசிப்பதும் some parallel there?.

   நீக்கு
  2. அறிவின் உணர்வு ஒரு கிக்.

   நீக்கு
  3. அறிவழகு என்பது முற்றிலும் வேறான ஒன்று.. அறிவும் அழகும் சேர்ந்தது அல்ல அது.

   அறிவை அழகாகப் பார்ப்பது அது. அழகை எதோடு வேண்டுமானாலும் சேர்த்துப் பார்க்கலாம்.

   நீக்கு
 18. மகிழ்ச்சியும் நிம்மதியும் உள்நோக்கியவை. உள்ளிருந்து பெறவேண்டியவற்றை வெளியில் தேடினால் பலனிலாது போகலாம்.. //

  உண்மை. உண்மை.
  பேரமைதி வேண்டுபவர் அதை உள்ளத்தினுள்ளே தேடிப் பார்ப்பார்கள். என்று பெரியவர்கள்(ஞானிகள்) சொன்னதை நீங்களும் சொல்கிறீர்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 19. //தனக்குச் சொந்தமான அழகை நேசிப்பதும் அறிவை நேசிப்பதும் some parallel there?.//

  இல்லை. இரண்டும் வெவ்வேறு சமாசாரங்கள். இதுபாட்டுக்க இது, அது அப்பாட்டுக்கு அது என்று வெவ்வேறு areas.
  இரண்டுக்கும் முடிச்சு போட்டு இதற்காக அது, அதற்காக இது என்று ஒன்றுக்கு ஒன்று பலியாகக் கூடாது.

  அறிவை நேசிப்பவர்களும் அழகை நேசிப்பதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து குறுகிப்போக மாட்டார்கள்.

  அறிவுத் திமிர் இன்னொருவர் அறிவில் பொறாமை கொள்ளாது. தானும் தான் நேசிக்கும் அறிவு கொண்டோர் மாதிரி ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபடும். அப்படி விவரம் கொண்டவர்களில் தான் அறிவுத் திமிர் இருக்கும் என்பதும் வேடிக்கையான ஒன்று.

  உங்கள் அறிவுத் திறன் கண்டு நான் பொறாமைப் படுகிறேன் என்று சொல்வது ரொம்ப அசிங்கமான ஒன்று. admire தான் இங்கு நடக்குமே தவிர jealousy அல்ல.

  ஆனால் அழகு குறித்து பலரிடம் பொறாமை உண்டு. ஏனென்றால் அழகு என்பது இயற்கையிலேயே அமைவது; அறிவு அப்படியல்ல; நாம் முயற்சித்து வளர்த்துக் கொள்வது. அதனால் இயற்கையாகவே அமையும் முன்னதில் காணும் பொறாமைக்கு இதில் இடமே இல்லை.

  அறிவுத் திமிர் கொண்டோருக்கு உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கொஞ்சம் சிரமப்படுகிற காரியமாகிப் போகும். ஆனால் அப்படியான சிரமத்தை இலகுவாக்கி சாத்தியப்படுத்திக் கொள்வது தான் உண்மையான அறிவுத் திறனுமாகும்.

  அழகு சாசுவதமான ஒன்றல்ல; அதனால் அதை நேசிப்பதும் மாறுதல்களுக்கு உட்பட்டது.

  ஆனால் அறிவு அப்படிப்பட்டதல்ல; இருப்பினும் எல்லையற்ற இதில் இன்னும் இன்னும் என்று ஈடுபடுவதில் அறிவு வயப்பட்டவர்களே நாளாவட்டத்தில் சோர்ந்து சுணங்கிப் போவதும் உண்டு..

  சமுத்திரத்தில் எவ்வளவு தூரம் தான் படகோட்டி மீண்டு வெற்றிக் கொடி நாட்டுவது?.. சொல்லுங்கள்.
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிவு + அழகு பற்றிய திரு. ஜீவி ஐயா அவர்களின் இந்தக்கருத்துக்கள் + விளக்கங்கள் என்னை மிகவும் கவர்கின்றன.

   அன்புள்ள திரு. ஜீவி ஐயா அவர்களே, தங்களின் அறிவினை நான் மெச்சுகிறேன், வியந்து போகிறேன், நேசிக்கிறேன் and what not ...... எனக்குச் சொல்லத்தெரியவில்லை.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
  2. இந்த சமுத்திரம்/படகோட்டி/வெற்றிக்கொடி சமாசாரம்... மலைச்சுப் போய் நிக்கறேன்னு வச்சுக்குங்க. வார்த்தை வரவில்லை.

   சாக்ரேட்ஸ் தன்னுடைய அறிவின் ரகசியத்தை இப்படிச் சொன்னதாகச் சொல்வார்கள். அறிந்ததெல்லாம் அறியாததே.

   இதை இவருடைய 'அடக்கத்துக்கு' உதாரணமாகச் சொல்லும் கூட்டம் அவரின் இன்னொரு பிரபல வாக்கான 'அறிவற்ற வாழ்வு வாழத் தகுதியற்றது' என்பதையும் ஆராதிக்கிறது. அறிவற்ற வாழ்வு என்பதை எப்படி அறிவது? அறிந்த கணமே அறிந்தவனாகிறானே மனிதன்? அறிந்ததனால் இங்கே திமிர் உண்டாகிறது அறிந்த உணர்வு மட்டுமா? திமிர் என்பது வெளிப்பார்வை - ஒருவருக்குத் திமிர் என்று தோன்றுவது இன்னொருவருக்குத் தோன்றாமலிருக்கலாம். சாக்ரேட்ஸை ப்லேடொ ஆராதித்தார். கிரீஸ் அவரைத் திமிர் பிடித்தவன் என்று சொல்லி விஷம் கொடுத்து சாகடித்தது. இத்தனை ஆயிரம் வருடங்களுக்குப் பின் சாக்ரேட்ஸின் திமிர் யாருக்கும் தெரியவில்லை. அறிவு மட்டுமே. சாக்ரேட்ஸும் இதை அறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

   தனக்குச் சொந்தமான அறிவும் அழகும் நேசிக்கப்படுவதி ஒரு parallel இருப்பதாகச் சொன்னேன். அறிவையும் அழகையும் பொதுப்பட்டு ரசிப்பதற்கும், தனிப்பட்டு ரசிப்பதற்கும் உள்ள வேறுபாடு - தனக்கு சொந்தமான என்ற வேலி.
   தனக்குச் சொந்தமான அழகும் அறிவும் - தனக்குச் சொந்தம் என்ற அந்தஸ்தினாலேயே - ஒரு கர்வத்துக்கான காரணமாவதால் parallel என்று தோன்றியது.

   நீக்கு
  3. இதில் சாக்ரடீஸ் வந்தது எனக்குத் தெரியாதது.
   எழுதிக் கொண்டே வரும் பொழுது நல்ல உதாரணமாய் எனக்கே சிக்கியது.
   முன்னால் எங்கேயாவது படித்து, வெளியிலிருந்து உள்ளே வந்தது, பதுங்கியிருந்து வெளிப்பட்டதா? அதுவும் தெரியாது.

   நீக்கு
  4. அறிவை நேசிப்போருக்கும் அன்பை நேசிப்போருக்கும் இடையே மனப் போராட்டம் மூள்வதுண்டு.
   அப்படியான ஒரு போராட்டக் கதை தான் ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'.

   நீக்கு
  5. தனக்குச் சொந்தம்?..

   தனக்குச் சொந்தம் என்று எதையும் பாத்தி கட்டுவதே ஆக்கிரமிப்பு ஆகி விடுமோ என்கிற அச்சமாக உருவெடுக்கிறது.

   அன்பு, அறிவு எல்லாத்துக்கும் இந்த ஆக்கிரமிப்பு தன்மை உண்டு.

   நீக்கு
  6. இந்த உலகில் அடிப்படை தேவை தவிர எதுவும் சொந்தமில்லாது இருத்தல் களிப்பைக் கூட்டும்.

   சொந்தங்கள் அனைத்தும் தளைகள்; பூட்டிய சங்கிலிகள்.

   நீக்கு
  7. சந்தடி சாக்கில் வந்தவர் சாக்ரடீஸ். 

   அறிவு திமிர் - இரண்டு சொற்களையும் ஒரே வரியில் பார்த்ததும் சட்டென்று நினைவில் உண்டான சந்தடி.

   சந்தோஷம் என்பது மனிதனின் தேடலுக்கும் கட்டுக்கும் உட்பட்டது, மனிதன் யார்/எந்த சக்தியின் உதவியில்லாமல் சந்தோசத்தைத் தேடிக் கொள்ள இயலும் என்று சொன்னவர். சந்தோஷம் என்பதை அறிய, அறிந்து பெற, பெற்றதை அறிய மனிதரால் முடியும் என்ற எளிய ஆழமான கருத்தைச் சொன்ன காரணத்தால் தன் சமகாலத்து ஒரு சிலரை இவன் அறிந்தவன் என்ற திமிர் பிடித்தவன்' என்ற அறியாமையுள் மூழ்கத் தூண்டியதும், 'அவர்கள் அறியாதவர் என்ற திமிர் பிடித்தவர்கள்' என்று தன் வருங்கால கால கால கால ஆயிரக்கணக்கானோரை அறிவால் எழத் தூண்டியதும் சட்டென்று நினைவில் வந்த சந்தடி.

   முன்னால் இவர் நினைவு வராமற் போனதற்கு இவர் முழு வாளி என்பது காரணமாக இருக்கலாம். இப்போது நினைவில் வரை ஒரு முழு வாளியை இன்னொரு முழு வாளி அடையாளம் காட்டியதும் காரணமாக இருக்கலாம்.

   நீக்கு
  8. அறிவின் திமிர், அறியாமையின் திமிர் - எது ஆபத்தானது?

   நீக்கு
  9. அறிந்தவன் திமிர், அறியாதவர் திமிர் - என்ற இரண்டு எல்லைகளுக்கும் இடையே எதை அறிந்தவன் அல்லது அறியாதவர் என்ற கேள்வியும் இருக்கிறதல்லவா?

   சந்தோஷம் என்பது மனிதனின் தேடலுக்கும், கட்டுக்கும் உட்பட்டது என்கிற வரியில் கட்டுக்கும் உட்பட்டது என்பதை சாக்ரடீஸ் சொல்லியிருப்பாரா என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
   சந்தோஷம் ஓர் ஆள்விழுங்கி அசுரன் என்பதால். பசி போல தணியும்; மீண்டும் வேண்டும்.
   தணியாது இன்னும் இன்னும் அலையும். தேடும். தேடிக் கண்டு சுகிக்கும். மீண்டும் அலைந்து தேடி...

   சந்தோஷத்தை கட்டுக்கு உட்படுத்தியவன் மானுடன் என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.

   மனிதனுக்கும் மானுடனுக்கும் உள்ள பெருத்த வித்தியாசத்தை நீங்கள் அறிவீர்கள்.

   நீக்கு
 20. //பேரமைதி வேண்டுபவர் அதை உள்ளத்தினுள்ளே தேடிப் பார்ப்பார்கள். என்று பெரியவர்கள்(ஞானிகள்) சொன்னதை.. //

  உள்ளுக்குள் என்று ஸ்பெஷலாக ஒன்றும் கிடையாது. எல்லாம் வெளியிலிருந்து பெற்றவை தாம் உள்ளுக்குள் உலா வருகின்றன.. அதனால் வெளியிலிருந்து பெறப்படுவதில் utmost கவனம் வேண்டும்.

  வெளியிலிருந்து பெறுபவையும் உள்ளுக்குள் உலா வருவதும் கலந்து உறவாடும் பொழுது தான் பேரமைதி கிடைக்கும்.

  வெளியில் பெறுவது ஒன்றாகவும், உள்ளுக்குள் தேடுவது வேறொன்றாகவும் போயின் முரண்பாடு சூழ்ந்து அமைதி குலையும்.

  எதை எதைக் கொண்டு உங்கள்அறிவுப் பாண்டத்தை நிரப்புகிறீர்களோ, அதுஅதுவே உள்ளுறை பொருளாகும்.
  அறிவே மனமாகவும் மனமே அறிவாகவும் ஆவது பேரின்பம். இந்த பேரின்பம் கூடக் கூட அறிவு என்று தனியே ஒன்று இல்லாமல் அறிவே மனமாகிவிடும்.

  உள்ளுக்குள் நிரம்பி வழியும் பொழுது தேடுதலுக்கே அவசியமில்லாது போகும். வேண்டும் பொழுதெல்லாம் வேண்டியதை ஓர்ந்து உணர்ந்து களிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்தகைய உள்/வெளியற்ற உணர்வு வியாபிக்கையில் அறிவு என்பதே அவசியமில்லாமல் போகலாம் - அதைத்தான் அறிவே மனமாவதாகச் சொல்கிறீர்களோ?

   மனம் என்றைக்கும் அறிவுக்கும் ஒரு படி கீழ் தான் என்று நினைக்கிறேன் - சில விஷயங்களில்.
   அறிவு என்றைக்கும் மனதுக்குக் கீழ் தான் என்று நினைக்கிறேன் - பல விஷயங்களில்.

   எனினும், எனக்கு அறிவு போதும். மனம் வேண்டாம் :-).

   நீக்கு
 21. பல நேரங்களில் அறிவு கத்தி போன்ற கூர்மை கொண்டது. பிரயோகம் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பதம் பார்த்து விட வாய்ப்பு உண்டு.

  அறிவுக்கு மன உராசல் கிடைக்கும் பொழுது கூர் சமனமாகி மென்மை கொள்ளும்.

  மனமாளும் அறிவில் பெண்மை கலந்த நளினம் கூடுவதுண்டு.

  எது வேண்டும் சொல் மனமே என்று மனசிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டும். எல்லாம் மனசு தீர்மானிப்பது தான்.

  பதிலளிநீக்கு
 22. manasu irukke athu oru korangu jeevi saare.
  samathukkuth thakkapadi sollum.
  sila samayam self golum podum.

  subbu thatha.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனசைப் பழக்கி விட்டால், பரமாத்திகமா செயல்படும்.
   எல்லாம் பழக்கப்படுத்துவதில் இருக்கிறது.
   சொல்லப்போனால் மனசு தான் நம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக உணர்கிறேன், சூரி சார்.
   அறிவல்ல; அறிவு முரண்டு பிடித்தால் அதற்கும் புத்தி சொல்லி அதையும் கூட்டிக் கொண்டு கைகோர்த்து அதற்கும் சேர்ந்து இரண்டு ஒன்றானது போலச் செயல்படும் மனசு.
   மனசு மட்டும் கெட்டு குட்டிச் சுவரானால் அத்தனையும் கெட்டது என்று ஆட்டம் க்ளோஸ்.
   மனசை விரோத்தித்துக் கொண்டு எந்த செயல்பாடும் அர்த்தபூர்வ சாத்தியம் கொள்ளாது.
   கொஞ்சம் காதைக் கொடுங்கள்: (ரகசியமாக) பகவான் கிருஷ்ணர் பேசியது அர்ஜூனனின் மனசிடமா, அறிவிடமா?

   நீக்கு
  2. பத்தாயிரம் சர வெடியைக் கொளுத்தி போட்டு போயிருக்கார் சூரி சார்.

   குரங்குத்தனம் வெளிப்படுவதை புரிந்து கொள்ளும் ஒரு சில தருணங்கள் - அங்கே தான் அறிவு மனதை விட மேலகிறது. எல்லோரிடமும் எப்போதும் நிகழ்வதில்லை. நிகழும் தருணங்கள் வரம் போன்றவை.

   க்ருஷ்ணருடைய அறிவா மனமா எது அதிகம் நமக்குத் தெரிகிறது? ஏன்?

   இந்தக் கேள்விகள் எனக்குள் உதித்த போது, அவை போதையொழிக்கும் விசித்திரக் கேள்விக்கள் ஆனது என் அனுபவம்.

   நீக்கு
  3. சூரி சார் ஒண்ணும் இன்னும் கொளுத்திப் போடலை.
   இது ஒண்ணு இருக்கு தெரியுமான்னு எடுத்துக் காட்டியிருக்கார்.
   எல்லாருக்கும் தெரிந்த பட்டாசு தான்; நேற்று பெய்த மழையில் நமுநமுத்துப் போயிருக்குமோன்னு எனக்கு சந்தேகம்.
   அப்படி நனைந்திருந்தாலும், பிரமாதமா கொளுத்தி பழுதில்லாம வெடிக்க புதுமுறை இருக்குன்னு நான் சொல்றேன்.
   இப்போ தான் நனைந்திருக்கிறதான்னு 'செக்' பண்ணற வேலை துவங்கி இருக்கு. ஜஸ்ட் வெயிட்.

   நீக்கு
 23. //குரங்குத்தனம் வெளிப்படுவதை புரிந்து கொள்ளும் ஒரு சில தருணங்கள் - அங்கே தான் அறிவு மனதை விட மேலகிறது//

  மனுஷ்யனாகப்பட்டவன் தன அறிவைத்தான் உபயோகப்படுத்தனும் எமோஷன்ஸ் எதுவையும் ஹெட் லே போட்டு உருட்டி கொண்டு மனசு போகிற ரூட்டிலே போயி, தன பலத்தை, தனது இமேஜை இழக்க கூடாது என்று


  பொதுவாக தீர்மானமாக இருந்தாலும்


  அப்பப்ப அந்த குரங்கு மனசு


  எலே! எதுக்குடா இதெல்லாம்.

  இந்த ரூட் லே போடா. சீக்கிரம் உலகப்புகழ் கிடைக்கும்.இல்லாட்டியும் இரண்டு வாரத்துக்கு மீடியா கவரேஜ் கிடைக்கும் அப்படின்னு


  அரிச்சு எடுக்கும்போது


  பாவம் மனுஷ்யன் என்ன தான் செய்வான் சொல்லுங்க.


  அந்த மனசு சொல்ற ரூட்டிலே போகும்போ , பத்தாயிரம் வாலா வெடி வெடிக்கிறது உண்மைதான்.


  அறிவு

  ரோட் ஓரமா ஒதுங்கி நடப்பதை எல்லாம் ஒரு சாட்சி மாதிரி பாக்குது.

  இன்னாடா, இத்தனை படிச்சு படிச்சு கடைசிலே

  இப்படி சாக்கடைலே விழுந்துட்டானே அப்படின்னு

  நொந்துக்குது .


  அந்த பாழாப்போன மனசு கிட்டே சொல்லணும் இல்லையா? சொல்லாம, இது அவனவன் தலை எழுத்து நான் என்ன செய்ய?


  அப்படி அப்படியே எல்லாருமே இப்படி இதே ரூட்டிலே போயிகிட்டா ????!!!!!!!!!!!!!!

  if ultimately mankind itself is at stake, then,
  பகவான் தான் சொல்லி இருக்காரு இல்லையா...


  யதா எதா ஹி தர்மஸ்ய,க்லானிர் பவதி பாரத.


  அப்ப அவரு வந்து செஞ்சுப்பாரு அப்படின்னு


  அறிவு ஓரங்கட்டி விடுது .


  இருந்தாலும் ஆங்காங்கே ஒன்னு இரண்டு பிரண்ட்ஸ் வர்றாக.


  சொல்றாக.


  என்ன சொல்றாக ?


  நான் என்ன சொல்றது ?


  அதான்


  இந்த பதிவின் 2,3,4 5 வார்த்தையிலே இருக்குதே !!


  நகுதல் பொருட்டன்று நட்டல்,

  மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.


  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 24. பின்னூட்டத்தில் சொல்ல மறந்தே போயிட்டேன்.  அது யாரு ப்ரெண்ட் தகிரியமா நம்மகிட்டேயே வந்து

  ரொம்ப திமிருடா உனக்கு அப்படின்னு நினைச்சு பார்த்தா...ஆல்வேஸ்  .அட. அது யாருமில்ல...

  நம்ம மன சாட்சி தான்.  அதுதான் வே,

  நமக்கு நெருங்கியவர் இல்ல,ஆனா பழக்கமானவர் .  வாட் இஸ் த டிபரன்ஸ் பிட்வீன் பீயிங் ஸ்மார்ட் அண்ட் பீலிங் ஹாப்பி ?  சடார்னு ப்ளாஷ் மாதிரி ஒரு பதில் வந்தது மனசு சொல்வாரு. லே.  ஸ்மார்டா இருக்கறவன் வெளிப்புற இன்பத்திலே மனம் லயிக்க விடுறான்.  அது தான் அவனுக்கு மகிழ்ச்சி. மற்றவனை வெல்வதிலே ஒரு ப்ளசர்.  அவனுக்கு இன்வார்ட் ஹாப்பினஸ் பத்தி ஜாஸ்தி கவலை இருக்காது.  ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு,

  ஒரு கோல மயில் என் கை இருப்பு.  ஸ்மார் ட் ஆ இருக்கறவன் தன்னுடைய அதே உலகத்துலே இருப்பான். மரிப்பான்.

  வெஜிடபிள் எக்சிச்டன்ஸ்  மற்றவர் உணர்வுகளை மதிக்க மாட்டான்.  எனக்கு அப்படித்தான் தோணறது.

  இருந்தாலும் ஜீவி சார் அழகா

  சொல்வாரு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ அடுத்தவங்க உணர்வுகளை மதிக்கிறவன் ஸ்மார்ட் இல்லைனு சொல்றீங்களா என்ன?

   நீக்கு
  2. மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் இந்த சார் முடிச்சு போடச் சொல்றாரே!! சாத்தியமா என்று தான் முதல் லே நினைச்சேன்.

   மேம்போக்கா ஒண்ணும் புரியல்ல.அந்த ஆள் டூ ஸ்மார்ட் டு பி அண்டர்ஸ்டுட் . என்றால் ஸ்மார்ட் க்கு ஒரு அர்த்தம் வருது.

   ஸ்மார்ட் என்னும் சொல்லுக்கு பொருள் தேடினால் தான் அந்தச் சொல் ஒரு பிராட் ஸ்பெக்ட்ரம் எனத் தெரிய வரும்.   ஸ்மார்ட் ஆ இருக்கிறவன் தன்னோட ஸ்மார்ட் தன்மையை அறியும்போது மத்தவனை விட தான் ஒரு இஞ்ச் மேல என்கிற உனர்வோடத்தான் செயல்படுவான் அப்படின்னு நினைக்கிறேன்.

   ஆக்ஸ்போர்ட் டிக்சனரி பார்த்தா ஏகப்பட்ட இடத்துலே டிபரண்டா அர்த்தம்.

   a. Characterized by sharp quick thought; bright. See Synonyms at intelligent.
   b. Amusingly clever; witty: a smart quip; a lively, smart conversation.
   c. Impertinent; insolent: That's enough of your smart talk.
   2. Energetic or quick in movement: a smart pace.
   3. Canny and shrewd in dealings with others: a smart negotiator.
   4. Fashionable; elegant: a smart suit; a smart restaurant; the smart set. See Synonyms at fashionable.

   But this smartness is nothing but a mask.
   Albeit, the real self hidden beneath seldom gets revealed to the person who wears this mask.

   சாதாரணமா, அகடெமிக் சர்கிள் லே c சொல்றது தான் புரியப்படுது.
   ஸ்மார்டா இருக்கிறவன் இன்னொருவனை மதிக்கிரானா என்பது இருக்கட்டும்.

   அவனே, உள் இருந்து வரும் வாய்ஸை கேட்பானா அப்படின்னு கூட சந்தேகம் தான்.

   ஆனா, ச்மார்டாவே இருந்த ஒருவனுக்கு மனசுக்குள்ளேந்து இன்னொரு வாய்ஸ் வருமா அப்படின்னும் சந்தேகம் தான்.

   ஜீவி சார் !! பாரதத்திலே வர்ற சகுனி ஸ்மார்ட் ரகமோ ?
   சுப்பு தாத்தா.

   நீக்கு
 25. கிரிக்கெட் விளையாடும் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி!

  கிரிக்கெட்டிற்கும், சினிமாவிற்கும் எப்போதுமே ஒரு தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேயே நட்சத்திர கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள்...#கிரிக்கெட் #சினிமா ...

  மேலும் படிக்க : http://cinema.dinamalar.com/cinema-news/21782/special-report/Cricket-fever-in-tamil-cinema.htm

  பதிலளிநீக்கு
 26. அரைவாளி என்றாலும் ஆழிஅலைகளாய் சிந்தனைகள்.
  நீங்கள் நிறைகுடம் அப்பாஜி

  பதிலளிநீக்கு
 27. ஏன் ஒப்புதலுக்குப் பின்னர் கருத்துரை?

  பதிலளிநீக்கு
 28. ஸ்மார்ட்டுனா?.. வாணலி எண்ணைலே போட்ற கடுகோ?.. வெயிட், சார். 'அது ஒரு மாஸ்க்'ன்னு தன் மூஞ்சியை மாஸ்க் போட்டு மறைச்சுக்காம ஒரு மேதாவி சொல்லியிருக்கார், பாருங்கோ..

  அறிவு என்னலாமோ எழுதச் சொல்றது. ஆனா மனசு தான் கடிவாளம் போட்டு கட்டுக்குள் வைக்கிறது. 'சொல்ற வார்த்தைகளாவது காத்தோட போயிடும்; ஆனா எழுதினா அம்புட்டு தான்; கல்லா செதுக்கிடும். அதனாலே வேணாம்'ன்னு.

  இப்பலாம் இன்னொரு உணர்வும் கூடவே. மாஞ்சு மாஞ்சு என்னத்தை எழுதினாலும், ஒரு அரை வரிலே ஒரு கொக்கியை போட்டுட்டு போயிடப் போறாரு நம்ம அண்ணாத்தே.

  அப்புறம் அந்த அரை வரிக்கு இன்னொரு அரைப்பக்கம்.. வேணாம், சார்.

  ஆவ்!....

  பதிலளிநீக்கு
 29. சூரி சார்! பதிலளித்து விட்டேன். என்ன காரணம்ன்னு தெரிலே! பின்னூட்டம் தான் வெளியாகவில்லை! "))

  பதிலளிநீக்கு
 30. அப்பா அப்பப்பா
  கடலோரம் நின்னு கால நனைக்கக் கூட பயமா இருக்கு

  பதிலளிநீக்கு
 31. I've never understood why "garvam" is used as a negative term!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Garva is a Sanskrit word found in vedic texts also.
   Garva originally was understood to denote pride.
   Later, garva shabhda was used in the text work of Kalidasa to denote ahankara.
   For example, a person may using a language or an assembly of words which could be indicating his pride, then, a person of garva, meant a person with Ahankara.
   Still later, the word was used to denote arrogance which indeed was a negative attribute to anyone.
   All these meanings are to be traced only in the context in which they are spoken.

   When Hanuman says he was proud of being an ambassador from Rama, he talks with pride. He is justified.
   When Ravana justifies his act of kidnapping Sita in his Court it is arrogance. He too is illustrated by Valmiki as "Garvith Raja" (arrogant king)

   BTW,
   words in almost all languages evolve, as they revolve around the tongues of people through several centuries.

   Likewise, the word Naatram in Tamil originally meant smell.
   Now, it indicates bad smell.

   Thanneer originally meant cold water. than plus neer.
   now any water, including from sewage is thanneer.

   To conclude, there is nothing in the word itself.
   It lies in the context in which they are said and
   equally understood.

   subbu thatha.

   நீக்கு
  2. கர்வம் என்பது neither positive nor negative i think.. garvam gets a positive or negative connotation based on context.. சரியாச் சொன்னீங்க சார்.

   அது சரி sewage எப்போ தண்ணீராச்சு? கூவத்தை சுத்தம் பண்ணிட்டாங்களா?

   நீக்கு