2013/12/28

கோமதி என்றொரு அழகி


    சீராகச் சென்று கொண்டிருக்கையில் எதிர்பாராமல் எங்கோ இடறுகிறது. எங்கே எப்போது இடறி எல்லாம் தலைகீழாக மாறுகிறது என்பது மாறும்போது தெரிவதில்லை. மாறியது புரிந்தும் ஏதும் செய்ய முடியாத நிலையில் மனம், கதவிடுக்கில் சிக்கிய விரலாகப் பதறித் துவண்டு போகிறது. உடல், முன்னிரவு படுத்தெழுந்தப் பாயாகச் சுருண்டு போகிறது.

எல்லாம் இந்த வாழ்க்கையைப் பற்றித்தான் சொல்கிறேன்.

என் பெயர் சதாசிவம். எண்பத்து நான்கு வயதாகிறது. ரிடையர்ட் பி.எஸ்.ஹைஸ்கூல் கணக்கு வாத்தியார். சப்ஸ்டிட்யூட் இங்லிஷ் நான்டீடெயில் மற்றும் பி.டி டீச்சர். எனக்கு இரண்டு பையன், ஒரு பெண். முதல் பையன் தில்லியில் மினிஸ்டரி ஆப் கம்ப்யூனிகேஷனில் யுடிசி. இளையவன் ஐஐஎம் கொல்கத்தாவில் புரபசர். ஒரே பெண் இலைலிலி என்று ஒரு அமெரிக்க மருந்து கம்பெனியில் ஆரகிள் டிபிஏ எனும் சித்து வேலை பார்க்கிறாள். மாப்பிள்ளை சொந்தமாக சிகாகோ அருகே வின்ட்மில் கன்சல்டிங் என்று சுயமாக என்னவோ செய்கிறார். என் மனைவி பெயர் கோமதி. எழுபத்தொன்பது வயது ஆகிறது. அறுபது வருடங்களாக என்னுடன் ஒட்டிகொண்டு சரியான சள்ளை.

நை நை என்று இந்த வயதிலும் எதையாவது சொல்லிக் கழுத்தறுப்பாள். "..இதைச் சாப்பிடுங்க.. அதை விடுங்க.. ஸ்வெட்டர் போடலியா.. டிவி என்ன வேண்டிக்கிடக்கு.. சின்ன குழந்தை மாதிரி என்ன பிடிவாதம்.. சட்டுபுட்டுனு குளிச்சு வந்தா சாப்பிடலாமில்லையா.. தினம் பத்து நிமிஷம் உள்ளுக்குள்ளயே வாக்கிங் போகக் கூடாதா.. சாமி கும்பிட்டா என்ன கொறஞ்சா போயிடும்.. கணக்கு வாத்தினா கடவுள் நம்பிக்கை இல்லாம போயிடுமா.. அய்யோ போகட்டும் விடுங்க.. உங்க பசங்கனு அவங்களுக்கு எல்லாம் செஞ்சீங்க அதுக்காக இப்ப உங்களை யாரும் கவனிக்கறதில்லேனு புலம்பறது அசிங்கம்.. வயசுக்கேத்த மாதிரி நடக்க வேண்டாமா.. அப்படி என்ன மறதி.. தேவையில்லாம அவங்க விஷயத்துல ஏன் தலையிடுறீங்க.. தொண்ணூறு வயசாகப் போகுது, இன்னும் என்ன சென்டர் ஆப் அடென்ஷன் வேண்டிக்கிடக்கு... போற காலம் வந்தாச்சுனு தெரிய வேண்டாமா.. அவ சொல்றபடி தான் கேளுங்களேன்.. உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும்னு ஏன் கண்டதுல கையை வச்சு உடைக்கறீங்க.. வயசானா கணக்கு வாத்தியார் கம்ப்யூடர் மெக்கானிக்காயிட முடியுமா.. ப்ளட் ப்ரஷர் கொலஸ்டிரால்னு கெடந்து வியாதிப் பட்டணமா இருக்கீங்க.. காது வேறே மந்தமாயிட்டு வருது.. மாத்திரை மருந்து சாப்பிட்டு அடுத்தவங்களுக்குத் தொந்தரவு இல்லாம இருந்தா என்ன.." இப்படி வினாடிக்கு மூன்று முறையாவது புலம்புவாள்.

பாருங்கள்.. நேற்றிரவு இரண்டு மணிக்கு மேல் உறக்கம் வராமல் டிவியில் ஒலிகுறைத்துப் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஆசையில் கொஞ்சம் ஒலி கூட்டினேன். காது சரியாகக் கேளாது என்பதால் அதிகமாகக் கூட்டிவிட்டேன் போலிருக்கிறது. பக்கத்தில் படுத்திருந்த கோமு சட்டென்று விழித்து என்னை இடித்தாள். "என்ன இப்படி சத்தமா வச்சிருக்கீங்க? மாப்பிளை முழிச்சிக்கப் போறாரு.. காலைல அவங்க வேலைக்குப் போக வேண்டாமா? இது என்ன படம் இது.. ரெண்டு வெள்ளைக்காரன் ஆம்பளைக்கு ஆம்பளை முத்தம் கொடுத்திட்டிருக்கான்.. கண்றாவி.. இந்த வயசுல இதையா பாக்கறது?" என்று சிடுசிடுத்தாள். "பிலடெல்பியா.. நல்ல படம்டி.. உனக்கென்ன தெரியும்.. இங்லிஷ்ல அவன் சொல்றது சரியா கேட்க மாட்டேங்குது.. அதான் வால்யூம் வச்சேன்" என்றேன். "போதும் போதும்.. படுத்துத் தொலைங்க.. அமெரிக்கா வந்தா.. உடனே இங்லிஷ் படம் பீத்துணி பாட்டுனு என்ன போலித்தனம் வேண்டிக்கிடக்கு?" என்றாள். "பீத்துணி இல்லேடி.. பீதோவன்.. பட்டிக்காடு உனக்கு என்னடி தெரியும்?" என்றேன். "எனக்கொண்ணும் தெரிய வேண்டாம்.. டிவியை அணைச்சுட்டு படுங்க.. வயசு ஏறிட்டே போகுது, புத்தி இறங்கிட்டே போகுது" என்று எரிந்து விழுந்தாள். "சரிதான் போடி கிழவி" என்றேன். மனதுள். பிறகு டிவியை அணைத்துவிட்டுப் படுத்தேன். தூங்க முடியவில்லை. அரைமணியில் கோமு விதிர்த்து எழுந்தாள். என்னை உலுக்கி, "மூச்சு முட்டுது" என்றாள். என் கைகளை இறுகப் பிடித்தாள்.

    அமெரிக்காவில் ஒரு வசதி. இரவு மூன்று மணியானாலும் எமர்ஜென்சி என்றால் போன் செய்து கீழே வைக்குமுன் உடனே வந்துவிடுகிறார்கள். ஆக்சிஜன், டிபிப் என்று அத்தனை வசதியுடனும் வந்தார்கள் பேராமெடிக்ஸ் ஆசாமிகள். கிழவியை அலாக்காக வண்டியில் தூக்கிக் கிடத்தினார்கள். தேவைப்படுகிறதா இல்லையா என்று சிந்திக்காமல் ஆக்சிஜன் குழாய் பொருத்தினார்கள். ஒரு நர்ஸ் கோமதியின் நாடித்துடிப்பு, கண், மார்பு, வயிறு, கால்விரல் என்று சடுதியில் வரிசையாகச் சோதனை செய்தாள். யாருக்கோ போன் செய்தாள், என் மாப்பிள்ளையிடம் ஒரு கையெழுத்து வாங்கினாள். அவ்வளவு தான், வண்டி கிளம்பிவிட்டது. எல்லாம் இரண்டு நிமிடங்களுக்குள்ளாக.

"அம்மாவுக்கு ஹார்ட் அடேக்.. நீ இங்கயே இருப்பா.. நாங்க ஆஸ்பத்திரி போய்ட்டு வந்துடறோம்" என்றாள் மகள்.

"அவ என் வொய்ப்"

"அட.. எனக்குத் தெரியாதாப்பா? சும்மா இருப்பா.. மணி மூணாகுது.. நீ அங்கே வந்தா கஷ்டமாயிடும்.. வீட்டுல பசங்களைப் பாத்துக்கப்பா.. ஆம்புலன்ஸ் எல்லாம் பாத்து பயந்து போயிருக்காங்க.. நாய் வேறே விடாம குலைக்குது.. இவங்களைப் பாத்துக்கப்பா.. நாங்க ஆஸ்பத்திரி போய் பார்த்துட்டு உடனே வந்துடறோம்.. இந்தா இந்த செல்போனை வச்சுக்க.. கூப்பிட்டு விவரம் சொல்றேன், ஓகே?"

"நானும் வரேனேடி.."

"அடம் பிடிக்காதப்பா ப்லீஸ்.. ஆக்ட் யுர் ஏஜ். வந்து உன்னைக் கூட்டிப் போறேன்".

மாப்பிள்ளையைப் பார்த்தேன். சங்கடமாகப் புன்னகைத்தார். என் பெண்ணுடன் காரில் புறப்பட்டுப் போனார்.

விழித்துப் பயந்திருந்த என் பேரப்பிள்ளைகளைப் பார்த்தேன். "யு ஹெவ் டு லிசன் டு மாம் அன்ட் டேட்" என்றான் மூத்த பேரன். இரண்டாமவன் என்னைத் தள்ளாத குறையாகத் தள்ளினான். "ஐ வான்ட் டு கோ டு பெட் க்ராம்பா". நாய் கூட என்னை வாலாட்டாமல் முறைத்தது.

பேரப்பிள்ளைகளைப் படுக்கையில் கிடத்திப் போர்த்துகையில், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் என் மகளிடம் நான் சொன்னது தெளிவாக நினைவுக்கு வந்தது. "சும்மா அடம் பிடிக்கக் கூடாது ரம்யா. அப்பாம்மா சொல்றபடி நடந்து சமத்தா படுத்து தூங்கினா எல்லாம் சரியாயிடும். சாயந்திரம் மெக்ரெனட் கேக் வாங்கிட்டு வருவேன்".

அரை மணிக்குப் பிறகு பெண் போன் செய்தாள். "அப்பா... ஹார்ட் அடேக் கொஞ்சம் மேஸிவ். ஆஞ்சியோ பண்ணப் போறாங்க.. அப்புறம் சரியாகலேன்னா சர்ஜரி.. பசங்களைப் பாத்துக்கப்பா. ரெண்டு பேருக்கும் மால்டோவா கொடு. ஆர்கேனிக் மில்க் இருக்கு பார். உனக்கு வச்சிருக்குற சாதாரண பாலில் கலந்துடாதே. கொஞ்ச நேரம் கழிச்சு நாங்க வந்துருவோம்".

"வந்து கூட்டிப் போறியா?". போனை வைத்துவிட்டாள்.

அரை மணிக்குப் பிறகு மாப்பிள்ளை மட்டும் அவசரமாக வந்தார். உடனே குளிப்பதற்காக மாடிக்குப் போனார். உடையணிந்து திரும்பி வந்து கிச்சன் பேன்ட்ரியிலிருந்து புரோடீன் பார் ஒன்றை எடுத்துக் கடித்தபடி ஆரஞ்சு ஜூஸ் குடித்தார். "தேங்க்ஸ் பார் டேகிங் கேர் ஆப் த கிட்ஸ் அங்கிள். நான் போய் ரம்யாவை அனுப்புறேன். எனக்கு ஏழு மணிக்கு மீடிங் இருக்கு"

"கோமதிக்கு எப்படி இருக்கு?"

"ஓ.. ஐ டோனோ.. ஷிஸ் ஃபைன் ஐ கெஸ்.. டாக்டருங்க பாத்துட்டிருக்காங்க.. ரம்யாக்கு விவரம் தெரியும்.. வரட்டுமா?".

'உனக்கு என் நிலை வரக்கூடாது மாப்பிள்ளை' என்று நினைத்துக் கொண்டது எனக்கே அசிங்கமாக இருந்தது.

    மூன்று நாட்களுக்கு மேலாக இன்டென்சிவ் கேரில் கிடக்கிறாள் கோமதி. தினம் அரை மணி நேரம் பார்வைக்கு அழைத்துப் போகிறாள் மகள். கோமதி இயற்கையில் அப்படியொன்றும் அழகில்லை. வாய்க்குள் ஒரு நீலக்குழாய் பொருத்தியிருந்தார்கள். புக் புக் என்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். முகமெல்லாம் வீங்கியிருந்தது. அழுக்குச் சுருணை போல் எதையோ அவள் உடலில் போர்த்தியிருந்தார்கள். கால்களிலும் கைகளிலும் ட்யூப் செருகியிருந்தார்கள். முடியை வெட்டியிருந்தார்கள். கண்களை மூடியிருந்தாள். வாய் கோணியிருந்தது. என் கோமதி இப்போது அழகாகத் தோன்றினாள்.

ஆஞ்சியோ பலனளிக்கவில்லை. சர்ஜரி செய்தார்கள். ஸ்டன்ட் என்றார்கள், என்ன ஸ்டண்டோ! அடுத்த நாள் கிட்னி வேலை செய்யவில்லை என்றார்கள். ப்லூயிட் எல்லாம் உள்ளுக்குள்ளே தேங்கத் தொடங்கிவிட்டது என்றார்கள். அன்று சாயந்திரம் வலுவில் டயூரிஸிஸ் செய்வோம் என்றாகள். "அப்படின்னா?" என்றேன் மகளிடம். "மூத்திரம் உண்டாக்கணும்பா. நாட் எ பிக் டீல்" என்றாள்.

அன்று இரவு ஆஸ்பத்திரியிலிருந்து போன் வந்தது. அவசரமாக ஓடினார்கள் மகளும் மாப்பிள்ளையும். "அப்பா.. ப்லீஸ் வீட்டுல இருப்பா. பசங்களைப் பாத்துக்க. நீ வேறே கிடந்து டென்சன் தராதே".

ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்பினார்கள். "அப்பா.. அம்மாவுக்கு மிட்றல் வேல்வ் பழுதாயிருக்குப்பா. ஹார்டுலந்து ரத்த ஓட்டம் சரியா இல்லே. அதனால வேறே வேல்வ் பொருத்தப் போறாங்க"

"பிழைப்பாளா?" என்றேன், குரலில் நடுக்கத்தை மறைத்து.

"இதெல்லாம் சகஜம்பா. ஷி இஸ் ஃபைன்" என்றாள் மகள். "எதுக்கும் அண்ணா ரெண்டு பேத்துட்டயும் சொல்லிடுபா".

தில்லிக்கும் கொல்கத்தாவுக்கும் போன் செய்தாள். விவரம் சொன்னாள். இரண்டு மகன்களும் என்னுடன் பேசினார்கள். "நீ அமெரிக்கா போயிருக்கவே கூடாது. இந்த வயசுல உனக்கு அப்படி என்ன ஆசை? ஊர் ஒலகத்துல நான் அமெரிக்கா போய்ட்டு வந்தேன்னு பீத்திக்கணும்.. இப்ப பாரு.. யாரு அவஸ்தைப்படறது?" என்றான் மூத்தவன். அவனுக்கே அறுபது வயதாகப் போகிறது. எண்பது வயதுக்காரனை விரட்டினான். "அப்பா.. உனக்கு எதுவுமே தெரிய மாட்டேங்குது. வயசாயிடுச்சே தவிர அறிவு? இப்ப உன்னை அங்கே போகணும்னு யார் கேட்டாங்க?"

"அப்பா.. கவலைப்படாதே. அம்மாவுக்கு சரியாயிடும். அப்படியில்லேன்னா அங்கேயே எல்லாத்தையும் முடிச்சுடுபா. பாடியை இந்தியா எல்லாம் எடுத்துட்டு வர வேண்டாம். வேஸ்ட்" என்றான் இளையவன். எப்போதும் நேரடியாகப் பேசுகிறவன். "அப்பா, அம்மா.. நான் ஷிரீனைக் கல்யாணம் பண்ணிக்கபோறேன். ஜாதி லொட்டுன்னு சொல்லிட்டிருந்தா ரெண்டு பேரும் என் கல்யாணத்துக்கு வர வேண்டாம். வி டோன்ட் நீட் யூ பீபில்" என்று எங்களை ஐந்து வருடங்கள் புறக்கணித்தவன். "அப்பா.. உனக்கு எதுவுமே ஆவல பாரு.. நீ ஸ்ட்ராங்கா இருக்கே. அம்மாவுக்கு எல்லா சிக்கலும் வருது. குட். ஷி லிவ்ட் ஹர் பார்ட். ஜஸ்ட் செலப்ரேட் ஹர் லைப். பிழைச்சா சந்தோஷப்படுவோம்.. இல்லாட்டி இன்னும் சிரமப்படலியேனு நிம்மதியாயிருப்போம்".

எனக்குத் தைரியம் சொல்ல முன்வந்தார்கள் என்பது மட்டும் புரிந்தது. பள்ளி நாட்களில் இவர்களுக்கு நான் கணக்கு சொல்லிக் கொடுத்தால் அனியாயத்துக்குக் கோபப்படுகிறேன் என்று என்னைத் தடுத்து, கோமதி பாடம் சொல்லிக் கொடுப்பாள். "ஊர்ல தான் வாத்தி. வீட்டுல பசங்களுக்குச் சொல்லித் தரத் தெரியலே. என்ன பெரிய உத்தியோகம்?". அவள் தப்பாகச் சொல்லிக் கொடுத்ததை நான் திருத்துவேன். ஒரு முறை கணக்கு ஒன்றைச் சொல்லிக் கொடுத்தாள் பாருங்கள்.. தப்பாகச் சொல்லிக் கொடுப்பதிலும் உழைப்பு இருப்பதை அன்று புரிந்து கொண்டேன். விடுங்கள். எத்தனை தப்பாக இருந்தாலும் அவளைத்தான் கொண்டாடுவார்கள் பிள்ளைகள்.

அண்ணன்களுடன் நெடு நேரம் பேசிவிட்டு வந்தாள் மகள். தயங்கி, "அப்பா.. உன்னோட கேஷ் ஸிசுவேஷன் எப்படி இருக்குபா?" என்றாள். "அம்மாவோட மெடிகல் செலவு நிறைய ஆயிரும் போலிருக்குப்பா. உனக்காக வாங்கின இன்டர்நேஷனல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் செல்லாதுன்னுட்டாங்க. அண்ணா ரெண்டு பேர்கிட்டயும் அதிகம் பணம் இல்லே. பொண்ணு பிரசவத்துக்கு இப்பத்தான் செலவழிச்சேன்னு சொல்றான் பெரியண்ணா. த்ரீ லேக்ஸ் தரதா சொல்றான் சின்னண்ணா. இவருக்கும் பிசினஸ்ல கொஞ்சம் முடக்கம்பா. எங்கிட்டயும் அவ்வளவா பணமில்லே.."

விழித்தேன்.

"கவலைப்படாதப்பா.. உங்கிட்டே விஷயத்தை சொல்லணும்னு தான். பட்..எப்படியாவது பாத்துக்கலாம்.. இப்ப போய் படுத்து தூங்குப்பா" என்று அறைக்குள் ஒதுங்கினாள். நான் இரவு முழுதும் உறங்கவில்லை. "சம்பாதிச்சது எல்லாம் எதுக்குங்க. பசங்களுக்குத் தானே? பையன் டில்லிலே வீடு வாங்கறதுனா சும்மாவா? அம்பதாயிரம் உதவி பண்ணக் கூடாதா? கிறுஸ்தவளா இருந்தா என்ன? நம்ம மருமக. அவளுக்கு ஒண்ணுன்னா நம்ம பொண்ணுக்கு வந்த மாதிரி தானே? ஒரு லட்சம் தானே? வீட்டை வச்சுக் கொடுங்க.. இருந்திருந்து நம்ம பொண்ணுக்கு நல்ல வரன் வந்திருக்கு.. பத்து பவுன் இருவது பவுன்னு பாக்காதீங்க.. நம்ம பொண்ணு நல்லா இருக்கணும்.. வீடு போனா என்ன, வாடகை வீட்டுல இருந்துக்கலாம்.. பிஎப் எல்லாம் எதுக்கு வச்சிருக்கீங்க. எல்லாத்தையும் எடுத்துப் போட்டு கல்யாணத்தை முடிப்போம்".

    எட்டு நாட்களாக மாலை தவறாமல் பதினைந்து நிமிடம் என்னை அழைத்துப் போகிறாள் மகள். கோமதி கண் விழிக்கவில்லை. இன்னமும் இன்டென்சிவ் கேர். மிட்றல் வேல்வ் மாட்டினார்கள். பிறகு இன்டர்னெல் இன்பெக்சன் என்றார்கள். மூளை தசையெடுத்து சோதனை செய்தார்கள். எதற்கும் ரெஸ்பான்ஸ் இல்லை என்று டாக்டர்கள் கன்னத்தில் விரல் தட்டிப் போலியாகக் கவலைப்பட்டார்கள். கிட்னி மறுபடி வேலை செய்யவில்லை என்றார்கள். ஜூனியர் மருத்துவர்களுக்கு வகுப்பெடுத்தார்கள். கோமதியை இஷ்டத்துக்குக் கோரப்படுத்தியிருந்தார்கள். எனக்கு இப்போது தான் அழகாகத் தெரிந்தாள்.

"பிழைப்பாளானு கேளேன்?"

"என்னப்பா இது? நாகரீகமே இல்லையா உனக்கு? பொழுது போகாமலா இத்தனை நாளா இத்தனை வைத்தியம் பாக்குறாங்க?"

"இல்ல ரம்யா.. கோமதியைப் பாரு. புக்கு புக்குனு பம்புல மூச்சு விடறாளேனு பாக்காதே. மனசுக்குள்ள இன்னமும் என்னைப் பத்தி நெனச்சுப் புலம்பிட்டிருக்கா. ஷி நீட்ஸ் ஸாலஸ்".

    பத்தாம் நாள் எங்களை அனுமதிக்க மறுத்தார்கள். "உங்க மனைவிக்கு இன்பெக்சன் த்ரெட். அவங்களோட இம்யூன் சிஸ்டம் கொலேப்ஸ் ஆகியிருக்கு. அதனால இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு பார்வையாளர் அனுமதி கிடையாது".

வீடு திரும்பியதும், "ஹார்ட் அடேக்னா.. இத்தனை நேரம் விஜயா ஆஸ்பத்ரிலே எல்லாம் சரி பார்த்து வீட்டுக்கு அனுப்பியிருப்பாங்கடி" என்றேன்.

மாப்பிள்ளை கிண்டலாக, "வயித்து வலின்னு போனா கூட விஜயாஸ்பத்ரிலே ஹார்ட் அடேக்னு வைத்தியம் பாத்து அனுப்பியிருப்பாங்க மாமா" என்றார்.

"ஏம்பா.. இவ்ளோ சின்சியரா எல்லாம் பாக்கறாங்க.. உனக்கு வேலிட் இன்ஷூரன்ஸ் கூட இல்லே.. அப்படியும் தே ஆர் கிவிங் ப்ரிமியம் கேர்.. கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம பேசுறியே?" என்றாள் மகள்.

"இட் இஸ் ஓகே அங்கிள். உங்க மனநிலை புரியுது" என்றார் மா. "ரம்யா, ஹி இஸ் ஜஸ்ட் வென்டிங். லெட் ஹிம்".

சாப்பிட்டபின் வழக்கம் போல் இந்தியாவில் பிள்ளைகளுடன் பேச்சு.

    மூன்று வாரங்களாகியும் கோமதி விழிக்கவில்லை. இப்போது பல்மொனெரி ஹைபர் என்று ஏதோ சொன்னார்கள். நுரையீரலில் மறுபடி ஏதோ திரவம் சேர்வதாகச் சொன்னார்கள். "ஹார்ட் அடேக் என்றால் வேஸலின் தடவி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் எங்கள் இந்தியாவில்.. எல்லாம் சரியாயிடும்.. இத்தனை வசதி படிப்பு என்று இருந்தும் கிட்டத்தட்ட ஒரு மாசமா இப்படி வறுத்தியெடுக்கறீங்களே.." என்றேன் தமிழில்.

"வாட் டஸ் ஹி ஸே?" என்றாள் நர்ஸ் என் மகளிடம். சிரித்தவாறே என்னை முறைத்தாள் ரம்யா.

வீடு திரும்பியதும், "அப்பா.. உனக்கு ஒண்ணுமே தெரியலே. சின்ன குழந்தையாட்டம் நடந்துக்குறே. அம்மாவுக்கு இப்படி ஆச்சுன்னா டாக்டருங்க என்ன செய்வாங்க? தெ ஆர் டூயிங் தெர் பெஸ்ட்"

"தெரியும்.. என்னை மன்னிச்சுரு செல்லம்" என்றேன்.

அருகில் வந்து என் தோளை அணைத்தாள் மகள். "அப்பா.. தப்பா நெனக்காதப்பா.. வீ ஆர் ரனிங் அவுட் ஆப் மனி.."

"யெட்.. ஷி இஸ் நாட் ரனிங் அவுட் ஆப் டைம்.." என்றேன் மெதுவாக.

"டோன்ட் பி எ சைல்ட்" என்றாள். என் மகள், என்னைக் குழந்தை என்கிறாள். "அப்பா, நிதி நிலவரம் எப்படி இருக்குனு கணக்கு போடலாம்பா. கடன் வாங்கணும்னாலோ எதையாவது விக்கணும்னாலோ அண்ணாவுக்கு போன் செய்யலாம்.. உங்கிட்டே பேங்க் பேலன்ஸ் எவ்வளவு இருக்கு?"

"நான் வேணும்னா யாருக்கும் தெரியாம கோமதியோட ட்யூப் ரெண்டை நாளைக்குப் பிடுங்கி விட்டுறட்டுமா?" என்றேன் இயல்பாக.

"அப்பா.. என்ன உளறல் இது. ஆர் யூ டிமென்டெட்?

"இல்லடி.. இத்தனை செலவு பண்ணி வைத்தியம் பாத்து இவ எழுந்து வந்தா எப்படி இருப்பா? இப்பவே போன வார பஜ்ஜி மாதிரி இருக்கா. பிழைச்சு வந்தாலும் இவளோட லைப் எப்படி இருக்கும்? அதான்.. நான் வேணும்னா சட்டுனு யாருக்கும் தெரியாம ஒரு ட்யூபை இழுத்து விட்டுடறேனே..?"

"ஷடிட் டேடி. என்ன பேச்சு இது?"

"இல்லம்மா.. அவளுக்கும் நிம்மதி. காசுக்கேத்த வைத்தியம் பாத்தா போதும்"

"ஸ்டாப் இட் டேட். உனக்குத் தான் பைத்தியம் பிடிச்சிருக்கு" என்று விருட்டென்று எழுந்து போனாள் மகள். அண்ணன்களுடன் கதவடைத்து ஏதோ காரசாரமாகப் பேசுவது காதில் விழுந்தது.

    கோமதியை நினைத்துக் கொண்டேன். 'சனியன், சாக மாட்டியோ? கிடைச்ச சான்சுல போய்த் தொலையாம இழுத்துப் பிடிச்சிட்டிருக்கியே? எதுக்கு? பிழைச்சு வந்து மறுபடி புலம்பி என் உயிரை வாட்டப் போறியா? ஹ்ம்.. கவலைப்படாதே. எதையோ சொல்லி எதையோ செய்து எப்படியோ புரட்டி உன் பிள்ளைகள் உனக்கு வைத்தியம் பார்ப்பார்கள். அப்பா அம்மா என்ற கடமை அவர்களுக்கு. இன்னும் இரண்டு வாரமோ ஒரு மாதமோ அமெரிக்க டாக்டர்கள் வைத்தியம் பார்ப்பார்கள். ஒரு வேளை நீ பிழைத்து வரலாம். ஒரு வேளை நாம ரெண்டும் பேரும் இந்தியா கூடத் திரும்பலாம். அங்கே உன்னை என்னால் பார்த்துக் கொள்ள முடியாமல் போனால்? அட, அங்கே போனதும் எனக்கு ஏதாவது ஆகி.. விஜயாஸ்பத்ரி கூட போக முடியாது போனால்?'

திடீரென்று உறைத்தது. எங்கள் விருப்பம் என்று இனி எதுவும் வாழ்வில் இல்லை. என் வாழ்வில் எனக்கிருந்த பிடிப்பு, என்று எந்தக் கணத்தில் இளகி விலகியது என்று நினைத்துப் பார்க்கிறேன். சரியாகப் புரியவில்லை. மங்கலாகவே இருக்கிறது.

உறக்கம் வராமல் அன்றும் படுத்த போது, தினம் கோமதி கரைந்தது.. இல்லை, தேனொழுகப் பாடியது.. நினைவுக்கு வந்தது.
..மதி வேண்டும், நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்..

65 கருத்துகள்:

  1. அருமையான கதை...
    ரொம்ப நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  2. நம் விருப்பத்துக்கு வாழ்க்கை என்றாவது இருந்திருக்கிறதா? நம்மால் சூஸ் பண்ண முடியும் வெகு சில விஷயங்களிலும் சொதப்புவதால் கடைசியில் சாய்ஸ் எதுவும் இல்லாமல் வாழ்கிறோமோ என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. சரியாச் சொன்னீர்கள் bandhu.
    அப்படியும் ஆணவம் விட்டபாடில்லே.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் உருக்கமான கதை. படிக்கும்போதே மனதை ஏதோ சங்கடப்படுத்துகிறது. வயதாக வயதாக இதுபோல எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என்று ஓர் அச்சம் ஏற்படுகிறது. ;(

    Practical Life பற்றிய பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    VGK

    பதிலளிநீக்கு
  5. சிறு-கதையில் மனுஷா சுயசரிதையை அடக்கிட்டீங்க... முடிப்‌பில் திகில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  6. கதை முடிந்தபின் மறுபடி தொடக்கத்‌திலிருந்து படிக்கத் துவங்குகிறேன். முதல் பத்‌திக்கு மேல் கண்கள் நகர மறுக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. கதை படித்தவுடன் மனதில் இனம்புரியாத கலக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.


    பதிலளிநீக்கு
  8. //வயித்து வலின்னு போனா கூட விஜயாஸ்பத்ரிலே ஹார்ட் அடேக்னு வைத்தியம் பாத்து அனுப்பியிருப்பாங்க மாமா" என்றார்.//

    vice versa was equally true.

    இன்னொரு விஷயம் .
    எல்லாத்துக்குமே ஒரு காஸ்ட்-பெனிபிட் அனாலிசிஸ் என்று ஒண்ணு இருக்கு. In case, results are not expected to reasonably match with expenses involved, it is wise to prepare oneself for what is inevitable.

    But more are scared of their mindset,that is, they are to do everything possible, spend everything they have to save a life, as otherwise, they will have to face not only wrath of near kith and kin, but also papam for not doing one's kadamai,which they believe will continue for seven more births.
    ATROCIOUS BELIEF but nevertheless runs as an under current in anyone's mind ( not excluding me )

    ஒரு ஆஸ்பத்திரி அப்படின்னு சேர்த்துட்டா அவங்களுக்கு , குறிப்பா, அமேரிக்கா போல, இன்சூரன்சு கம்பெனிகளோட ஒரு ட்ரை பார்டி கான்ட்ராக்ட் ஆக கூட்டா செயல் படுபவர்களுக்கு ஒரு ப்ரொடொகால் ஒன்னு இருக்கு.அதன் படி அவங்க செய்யல்லேன்னா , ஏகப்பட்ட பிரச்னைகள்.

    இந்தியாவிலே ஒரு ஆப்ஷன் இருக்கு. டிஸ்சார்ஜ் எகைன்ஸ்ட் டாக்டர் அட்வைஸ் என்று கையெழுத்து போட்டு வீட்டுக்கு கொண்டு வந்து, எப்ப வேணுமானாலும் பீஷ்மன் மாதிரி உனக்கு எப்ப வேணுமோ அப்ப போயிக்கோ என்று சொல்ல லாம். இன்னமும் அப்படிதான் கிராமங்களில் நடக்குது.

    ஆன் த அதர் ஹாண்ட், நமக்கு ஒரு சுதந்திரம் வேண்டும். நமக்கு போதும்.
    அப்படின்னு தோனும் பட்சத்தில் மேற்கொண்டு ஆஸ்பத்திரி கூட்டிண்டு போய், அங்கு மூக்கு வாய் என்று நவ த்வாரத்திலும் பைப் அடிச்சு எப்படியும் கடைசிலே போகத்தான் போகணும் என்ற பட்சத்திலே thus far and no further என்று அங்கே ஒரு லக்ஷ்மன் ரேகா போடுவதற்கு ஒரு வாய்ப்பு தரனும்.

    அதே சமயம், பணம் நிறைய இருக்கிறவர்கள், வீட்டிலே மேனேஜ் பண்ண முடியாது என்பவர்கள் எதோ அங்கே இருக்கட்டும் சார் என்று சொல்லி, ஒரு நாளைக்கு என்ன செலவு அப்படின்னு பத்து நாள், பதினைஞ்சு நாளைக்கு
    அட்வான்சா பணம் கொடுத்து விடுகிறார்கள்.

    இதெல்லாம் இருக்கட்டும். அமெரிக்காவிலே ஆஸ்பத்திரிலே இறந்து போகும் பட்சத்தில், வீட்டுக்கு டெட் பாடியை கொண்டு வர முடியாதாமே.
    அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. ப்யூனரல் வரை , நன்பர்கள் உறவினர் வந்து பார்ப்பர்தற்கு என்று அந்த இடத்தில் தான் வச்சு அத காக்கணும்.

    என்ன கொடுமை டா !!

    என்ன பொறுத்த வரை, வெளி நாடுகளுக்கு போய், என்னை ஒரு லயபெலிடி பார் மை சில்ரன் ஆக மாற்றிக் கொள்வதை விரும்பவில்லை.

    ஹாவிங் செட் ஆல் திஸ்,
    இதெல்லாமே கடைசி காலத்துலே நம்ம முடிவிலே இருக்குமா என்ன ?

    யதார்த்தமான நடப்பு. ஸ்டோரி என்று சொல்ல முடியவில்லை.

    ரொம்ப பிடிச்சிருக்கு.


    சுப்பு தாத்தா.
    59.92.59.133




    பதிலளிநீக்கு
  9. யதார்த்தம். . . ஆனாலும் 'பட்பட்'டென்று மனதில் பட்டதையெல்லாம் உடனுக்குடன் சொல்வது மனதை நெருடுகிறது.

    பதிலளிநீக்கு
  10. எனக்கென்னவோ இது 'கதை' மாதிரியே தோன்றவில்லை. யதார்த்தத்தில் நடக்கிற விஷயத்தை கதை என்று சொல்லி இருக்கிறீர்கள்.Truth hurts. Bitter truth hurts bitterly. Hats off, Appadurai!

    பதிலளிநீக்கு
  11. // ரெண்டு வெள்ளைக்காரன் ஆம்பளைக்கு ஆம்பளை முத்தம் கொடுத்திட்டிருக்கான்.. கண்றாவி.. இந்த வயசுல இதையா பாக்கறது?"//

    //உடனே இங்லிஷ் படம் பீத்துணி பாட்டுனு என்ன போலித்தனம் வேண்டிக்கிடக்கு?" என்றாள். "பீத்துணி இல்லேடி.. பீதோவன்..//

    //இப்பவே போன வார பஜ்ஜி மாதிரி இருக்கா.//

    //திடீரென்று உறைத்தது. எங்கள் விருப்பம் என்று இனி எதுவும் வாழ்வில் இல்லை. என் வாழ்வு என்று எனக்கிருந்த பிடிப்பு, என்று எந்தக் கணத்தில் இளகி விலகியது என்று நினைத்துப் பார்க்கிறேன். சரியாகப் புரியவில்லை. மங்கலாகவே இருக்கிறது.//

    அப்பாதுரை....

    பதிலளிநீக்கு
  12. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    சம்மட்டியால அடிச்சிருக்கீங்க சூரி சார். நிறைய யோசிக்க வக்குது.

    அனியாயமும் அவமானமும் ஒண்ணு தான்னு நம்மில் பெரும்பான்மையோர் நினைக்கிறோம். சில அனியாயங்களை இயல்பா ஏற்கத் தெரியாமல் முடியாமல் சூழல், கடமை, வளர்ப்பு, பண்பாடு என்று வரம்பு கட்டித் திண்டாடுகிறோம். இத்திண்டாட்டங்களில் முதுமைச் சார்புகளும் அடங்குமோ?

    பதிலளிநீக்கு
  13. / thus far and no further என்று அங்கே ஒரு லக்ஷ்மன் ரேகா

    powerful and profound.

    ஏதோ ஒரு வயதின் ஏதோ ஒரு கணத்தில் இனி வாழத் தேவையில்லை வாழ்ந்தது போதும் என்று நிறைவுடன் எல்லோருமே முடிவெடுப்பதாகவே நினைக்கிறேன். நீங்கள் சொன்ன cost benefit சமாசாரம் போலவே தான்.. point of diminishing return. அந்த உணர்தலின் நியாயத்தை நடைமுறையாக்கும் சுதந்திரம் இருந்தும் உரிமையில்லாமல் அவதிப்படுவது மனித வளர்ச்சியின், நாகரீகத்தின் முரணாக தோன்றுகிறது.

    bandhu சொல்லியிருப்பது போல எத்தனை சொதப்பியிருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  14. இறந்து போனவரை வீட்டுல கொண்டு வந்து... எதுக்கு சார் தேவையில்லாத வேலை?

    அன்பையும் ஆதரவையும் உயிரோடு இருக்கும்போது காட்டினா போதுமே? செத்துப் போனதை வீட்டுக்குக் கொண்டு வந்து மறுபடி dispose செய்யறதுக்கு பதிலாக. ஒரு வசதியான option கிடைச்சா அதுல அனியாயம் அவமானம் பார்க்காமல் நடக்கலாமே? வீட்டுக்கு நினைவுகளோட வந்தா போதாதா? what really matters to us?

    having said that.. விரும்பினா சில clearanceகளோட வீட்டுக்கு சடலத்தைக் கொண்டு வரலாம்.


    பதிலளிநீக்கு
  15. //இறந்து போனவரை வீட்டுல கொண்டு வந்து... எதுக்கு சார் தேவையில்லாத வேலை? //

    what U focus is reasonable.
    Agreed w r e

    s.t.

    பதிலளிநீக்கு
  16. 'கோமதி என்றொரு அழகி' என்று தலைப்பை மாற்றிப் பாருங்கள். இப்பொழுதிருக்கிற 'கோமதி என்று ஒரு அழகி'யை விட அழகாயிருக்கும் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  17. //எங்கோ இடறுகிறது. எங்கே எப்போது இடறி எல்லாம் தலைகீழாக மாறுகிறது என்பது மாறும்போது தெரிவதில்லை.//

    இவ்வளவு உருக்கமான கதையைப் படித்தும் எங்கே இடறிற்று என்று புரிந்து கொள்ள முடியவில்லை பாருங்கள், அது வாழ்க்கையாக பெயர் பூண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. // "சரிதான் போடி கிழவி" என்றேன்.//

    பாக்கியம் ராமசாமியின் அப்புசாமியோ?.. இல்லை,இல்லை, இவர் வேறே.

    பதிலளிநீக்கு
  19. //"அம்மாவுக்கு ஹார்ட் அடேக்.. நீ இங்கயே இருப்பா.. நாங்க ஆஸ்பத்திரி போய்ட்டு வந்துடறோம்" என்றாள் மகள்.

    "அவ என் வொய்ப்"//

    -- அப்புறம் இங்கே ஆரம்பித்தது அந்த விறுவிறு.. அதுவும் என்ன நடக்கப் போகிறதோ என்பதைத் தாண்டிய யதார்த்த சூழ்நிலையின் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய விறு விறு. 'சொந்த பந்த உறவுகளின் மனநிலையை துகிலுறித்த என்று எடுத்துக் கொள்ள முடியாத யதார்த்த நிலைமையை வரிக்கு வரி படம் பிடித்தது தான் அப்பாஜியின் வெற்றி.

    //கோமதியை நினைத்துக் கொண்டேன். 'சனியன், சாக மாட்டியோ? பிழைச்சு வந்து மறுபடி புலம்பி என் உயிரை வாட்டப் போறியா? //

    அந்த விறுவிறு பொங்கி வந்த பாலின் தீயை அணைத்த கதையாய் இங்கு தான் அடங்கி நிலை கொண்டது.

    இடைப்பட்ட வாசித்த வரிகள் கதையல்ல; காவியம்.

    யாரையும் குற்றம் சொல்ல முடியாது; நிகழ்கால சமூக வார்ப்பின் சூழ்நிலை கைதியாகிப் போனதின் அவலத்தை படம் பிடித்துக் காட்டிய அற்புதம் தான்
    கதையின் ஜீவனாக எனக்குத் தெரிகிறது..

    உரையாடலில் கதையின் பெரும் பகுதியை நகர்த்திய நறுவிசும் எழுத்துக்கலையின் உன்னதம்.
    இன்னும் இன்னும் உயர உயர சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள், அப்பாஜி.

    பதிலளிநீக்கு
  20. நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்..

    இருக்கும் போது உணர முடியாதது ஆரோக்கியம் ..!

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஜீவி சார்.. உங்க டச் தேவைப்பட்டது.

    பதிலளிநீக்கு

  22. அப்பாதுரை சார், இந்தக் கதை என்னென்னவோ எண்ணங்களைக் கிளறுகிறது. அன்னியோன்யமாக அழகு வாழ்க்கை ( வாழ்க்கையே அழகுதானே) வாழ்ந்தவரில் எதிர்பாராதவிதமாக முதியவரில் யார் முதலில் என்று சொல்ல முடியாதபோது மனைவிக்கு உடல் நலம் குறையும் போது சந்திக்க நேரிடும் நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் சொல்லிச் சென்ற விதம் சிம்ப்லி சூபெர்ப்.உடல் நலம் கெடுவதை எதிர்பார்க்க முடிவதில்லை. அப்படியே உடல் நலம் குறையும் போது மருத்துவம் பார்க்க முடிந்தால் பரவாயில்லை. பணம் இல்லாமல் மருத்துவம் பார்க்க முடியாமல் போகும்போது அதனூடே ஏற்படும் குற்ற உணர்வுகளை என்ன சொல்வது, உடல் நலம் கெட்டுப்போகும் பட்சத்தில் life support மூலம் vegetable life நீடிக்கச் செய்ய வேண்டாம் என்று முன்பே எழுதிக் கொடுக்க முடியுமாமே அமெரிக்காவில்? யுதனேசியாவுக்கு முந்தைய ஸ்டெப்? பணம் இல்லாதபோதோ குறையும்போதோ ஏற்படும் மன உளைச்சல்கள் ( உடனிருப்போருக்கு)சொல்லிச் சென்றவிதம் அத்தனையும் நிதரிசனம்.IT IS OK TO DIE என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளல் அவசியம் என்று தெரிந்தாலும் மருத்துவம் பார்க்காமலேயே சாக விட யாருக்காவது மனம் வருமா.?எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் நிறைந்த வாழ்வியல்கதை அருமை. இதை என் மனைவிக்கும் காட்டினேன். அவளுக்குப் புகழ வார்த்தைகள் இல்லை என்று எழுதச் சொன்னாள், வயோதிகம் என்பது நாம் செய்யாத குற்றத்துக்கு அனுபவிக்கும் தண்டனை என்று நான் அன்று எழுதியது ஏனோ நினைவுக்கு வருகிறது. கங்கிராட்ஸ் !

    பதிலளிநீக்கு
  23. அப்பாதுரை அவர்களே! எழுபத்தியோன்பது வயதகிறது எனக்கு ! முத்து மீனாடசிக்கு ஆறு வயது கம்மி ! நானில்லை என்றால் அவளால் வாழ முடியாது என்று நினைத்து அவள் எனக்கு முந்திவிட வேண்டும் என்று விரும்புகிறேன் ! " இந்த பைத்தியம் தன்னந்தனியா பாயை சுரண்டப்படாது "நு நினச்சு நான் முந்த வேண்டும் என்று அவள் நினைக்கிறாள் ! முதியவர் படுத்தால் அந்த கிழவி என்ன செய்வாள் என்று நினைக்கும்பொது மனம் நடுங்குகிறது !
    முதுமையை அனுபவித்து வாழும் ஒரு சமுதாய அமைப்பு உருவாகவே செய்யாதா ?

    மிகவும் நேர்த்தியான படைப்பு---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  24. நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்..//

    ஐடியல் .
    ஆனா என்றைக்கோ ஒரு நாள் போகத்தான் போறோம் என்ற போது
    போகிற போது தொந்தரவு கொடுக்காத வகையிலே

    த்ரியம்பஜம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
    உருவாரகம் இவ பந்தாந்த் முக்ஷ்யோ முக்தி இவா மாம்ர்தாத்

    அப்படின்னு ம்ருத்யஞ்சய மகா மந்திரத்தை சொல்லிக்கொண்டு,
    மரணத்தை வெல்ல முடியாது, ஆயினும் மரண பயத்தினை வெல்ல முடியும் என்ற துணிவோடு,

    வெள்ளரிக்காய் பழுத்தபின் ஓட்டை விட்டு சட்டென விலகுவது போல உன் உயிரும் உடலை விட்டு அகல வேண்டும்.

    போரது உயிர் என்று மனசுக்கு தொன்றதுக்கு முன்னாடி எல்லாம் முடிஞ்சு போயிடனும்.
    அதனாலே,
    அதனாலே,


    "என்ன அதனாலே, அதனாலே அப்படின்னு அப்பைலேந்து பினத்திண்டு இருக்கேள் ?"

    ஒன்னுமில்லடி,

    அடியே, சீக்கிரம் அந்த மோர்க்குழம்பு இன்னும் ஒரு கரண்டி ஊத்து.என்ன பருப்புருண்டையே ஒன்னு கூட காணோம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  25. I should not read this post in morning hours that too on a Sunday. The entire day went off but not with usual cheers. Tried so many things to get my mind diverted from this article but still it is refusing to get erased from it. May be this is the reality not only for Gomathi and her husband but to every one else in the world.

    பதிலளிநீக்கு
  26. இந்த கமெண்டை எழுதிவிட்டு,
    அடியே, இங்கன வந்து படிச்சுபாரேன்.
    எப்படி, யதார்த்தமா நான் எழுதி இருக்கேன் என்றேன்.
    இவள் வந்தாள். படித்தாள்.

    தன முகத்தை கடு கடு என வைத்துக்கொண்டு சுட்டு எரிப்பது போல் என்னை பார்த்தபோது,

    எனக்கு கிட்டத்தட்ட அதே ஹார்ட் அட்டாக் வரா மாதிரி இருந்தது.

    என்னடி, சரியாத்தானே எழுதி இருக்கேன் என்றேன்.

    என்ன சரியா, ?

    அந்த எட்டாவது வரிலே உன் க்கு பதிலா என் போடுங்கோ.

    சரிதான். உன் மேலே எனக்கு என்ன ரைட் இருக்கு ?

    புரிஞ்சுண்டா சரிதான்.

    இந்தாங்கோ பருப்பு உருண்டை. என்றாள் என் தர்ம பத்னி.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  27. பருப்புருண்டை மகாத்மியம் நன்று சூரி சார்.

    பதிலளிநீக்கு
  28. மிகவும் நன்றி ஜிஎம்பி சார்.
    முதுமை என்பது செய்யாத குற்றத்துக்கான தண்டனை இல்லை (நானும் முன்னே சொன்னது போல :-)

    அப்படிப் பார்த்தா பிறவியே செய்யாத குற்றத்துக்கான தண்டனை தானே?

    பதிலளிநீக்கு
  29. //அப்படிப் பார்த்தா பிறவியே செய்யாத குற்றத்துக்கான தண்டனை தானே?//

    முற்பிறவி என்று ஒன்று இருந்திருந்தால் அதில் செய்த குற்றத்துக்கு இப்பிறவி என்று நினைத்து கொள்ள வேண்டியதுதான்.

    Without being judgmental, ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். காஞ்சி மஹாபெரியவரிடம் New York Timesன் நிருபர் ஒரு முறை பேட்டி எடுக்க வந்திருந்தாராம். "ஹிந்து மதத்தில் பல பிறவிகள் உள்ளன என்று கூறுகிறீர்களே, கிறித்துவ மதத்தில் அப்படி எல்லாம் நம்பிக்கை இல்லை" என்றெல்லாம் கூறினாராம். அதற்கு பெரியவர், "நீ காஞ்சீபுரத்தில் சென்ற ஒரு வாரத்தில் பிறந்த குழந்தைகளின் முழு தகவல்களையும் சேகரித்து கொண்டு என்னிடம் வா" என்று கூறினாராம். நிருபரும், அவர் சொன்னபடியே காஞ்சியில் உள்ள பிறப்பு / இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து எல்லா தகவல்களையும் சேகரித்து கொண்டு வந்தாராம்.

    அதை பார்த்த‌ பெரிய‌வ‌ர், "இந்த‌ குழ‌ந்தைக‌ளில் சில‌ குழ‌ந்தைக‌ள் ஊன‌மாக‌ உள்ள‌ன‌. சில‌ குழ‌ந்தைக‌ள் ப‌ண‌க்கார‌ வீட்டில் பிற‌ந்துள்ள‌ன‌. சில‌ ஏழைக‌ள் வீட்டில் பிற‌ந்துள்ள‌ன‌. இந்த குழந்தைகள் செய்த‌ குற்ற‌ம் தான் என்ன‌?" என்று கேட்டாராம். ஒரு நீண்ட‌ மெள‌ன‌த்துக்கு பிற‌கு அவ‌ரே ப‌திலையும் கூறினாராம் "ஹிந்து ம‌த‌த்தில் முற்பிற‌வியில் செய்த‌ பாவ‌ங்க‌ளை போக்கிக்கொள்ள‌ மீண்டும் ஒரு பிற‌வி எடுக்க‌ வேண்டும் என்ற‌ ந‌ம்பிக்கை உள்ள‌து" என்றாராம்.

    'பிற‌வாத‌ வ‌ர‌ம் வேண்டும்' என்று காரைக்கால் அம்மையாரே சிவ‌னிட‌ம் வேண்டியுள்ளார்.

    'முற்பிற‌வி என்று ஒன்று கிடையாது. சுத்த ஹம்பக். இது காவிக‌ளின் ஏமாற்று வேலை' என்று நீங்கள் வ‌ழ‌க்க‌ம் போல‌ வசைபாடலாம். எல்லாமே ஒரு நம்பிக்கை தான் அப்பாதுரை. முற்பிறவி என்று ஒன்று உள்ளதோ இல்லையோ, நம்மை மீறி நடக்கின்ற செயல்களுக்கு இந்த நம்பிக்கையில் ஒரு விளக்கம் கிடைக்கிறது என்று நினைக்கிறேன்.




    பதிலளிநீக்கு
  30. //நம்மை மீறி நடக்கின்ற செயல்களுக்கு இந்த நம்பிக்கையில் ஒரு விளக்கம் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். //

    விளக்கம் என்ற சொல்லுக்கு பதிலாக ஆறுதல் என்று நீங்கள்
    எழுதியிருந்தால் அதை அப்பாதுரை சார் ஒத்துக்கொள்வதற்கு
    ஒரு அரை பர்சென்ட் சான்ஸ் இருக்கிறது.

    பூமியிலே பிறந்தவங்களுக்கு என்ன மாதிரி எல்லாம் நம்பிக்கைகள் இருக்கிறது, அவைகளில் கடவுள் குறித்த நம்பிக்கைகள் குறித்து ஆராயும் ஒரு கலை தியாசபி

    கடவுள் அப்படின்னு ஏன் ஒருவன் நம்ம கிட்ட வந்து லோல் படறான்...பேசாம இருந்திருந்தா..

    அப்பாதுரை மாதிரி நல்லவங்க கிட்ட கூட டிஷூம் டிஷூம் வாங்கிகிட்டு இருக்க வேண்டாம் இல்லையா ?

    If there could be a "GOD" why there exist so many beliefs about Him ?

    அப்படிங்கற கேள்விக்கெல்லாம் கூட பதில் கீது.

    ஆனா, அத சொல்றதையும் ஒத்துக்கணும் அப்படின்னு யாரும் சட்டம் போட முடியாது.

    மனுஷன் ஒருவன் பூமியிலே வந்த காலத்துலேந்து இது மாதிரி தர்க்கம் இருக்கத்தான் செய்யுது.

    பார்க்கப்போனா ஒவ்வொரு மனுசனுக்குள்ளேயெ ஒரு தர்க்கம் இருக்கத்தான் செய்கிறது.

    வா இந்த பக்கம்.போ அந்த பக்கம்.

    ஒவ்வொரு மனுசனும் லாஜிக்கா முடிவு பண்றதை விட தனக்கு கம்பர்டபிள் ஆக இருக்கிற பொசிஷன் எடுத்துகிறாங்க. இது சம்வாட் இன் எவிடபில்.

    நான் படிச்சரைக்கும் பிரஹலாதன் .!! யோவ் அப்பா இரண்யா..இப்ப தான் நாரயானனே வந்துட்டார்லே !! பேசாமே ஒத்துக்கிண்டு போயிடு, இல்ல காணாம போயிடுவே, அப்படின்னு சொன்னப்பறம் கூட சைலண்ட் ஆ போவல்ல.

    For இரண்யா, ஹிஸ் ஈகோ வாஸ் மோர் பவர்புல்.

    அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

    சுகமிங்கு நிலைத்திடவே நாராயணன் நாமத்தைஅகமகிழக் கேட்டிடுவாய் மனமே!

    அதிலே என்ன சுகம் ! என்ன சுகம் !!
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    expatguru . @ madras thamizhan sir,
    Live in your Beliefs.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.menakasury.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  31. அப்பாதுரை சார், என் பின்னூட்டத்தில் கேட்டிருந்த கேள்விகளுக்கு ( நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவர் என்பதால் ) பதில் தருவீர்களென்று நினைத்தேன்.வயோதிகம் செய்யாத குற்றத்துக்கு தண்டனையா என்று எழுதி இருந்ததையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. THERE CAN BE NO MIRACLES WHICH CAN NOT BE EXPLAINED , MAY BE THEY ARE YET TO BE EXPLAINED என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது இந்த மாதிரி கேள்விகளுக்கு மனசுக்குத் திருப்தி கிடைக்கும் வகையில் பதில் கிடைக்காததால்தான் அறியாமை இருளில் மூழ்கி இருப்பதே மேல் என்று எழுதி இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  32. அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. ஹாஹா expatguru.. எங்கருந்து எங்கே தாவுறீங்க.. நீங்க சொல்ற அதே காரணங்களையே கடவுள் இல்லாமைக்கும் காவிகள் ஏமாற்றுக்கும் நான் சொல்ல வேண்டியிருக்கிறது. உண்மையும் அதுதான் என்று நான் சொன்னால் அவசரமாகிவிடும் அபாயம் இருப்பதால்... சாத்தியமும் அது தான் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    குரு சாக்ஷாத் பரப்ரம்மம் என்பது இதைத் தானோ? குருவும் டொக்கு. பரப்ரம்மமும் டொக்கு. ஒன்றும் அறியாத குழந்தைகளை பாவத்தின் சின்னமாக சித்தரித்த இந்துமத குருவைப் பற்றி nyt நிருபர் என்ன எழுதினார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. அந்த நிருபரும் கிறுஸ்தவ fundamentalistஆக இருந்தால் புனித அதிசயங்களை எண்ணி புளங்காங்கிதமடைந்திருப்பார்.

    காஞ்சிப் பெரியவர் (பழைய) அப்படி சொல்லியிருந்தால் என் மதிப்பில் கொஞ்சம் இறங்கிவிட்டார் என்பேன். புதுப் பெரியவராக இருந்தால் நிச்சயமாக சொல்லியிருப்பார் என்று நம்புவேன். regardless, பாவம் போக்க மறுபிறவி எடுப்பது என்பதன் வட்டம் கண்ணைக் கட்டும்.

    for the record, நம்மை மீறிய செயல்கள் இல்லை என்று நம்புவதை நான் ஏற்பதில்லை. நிச்சயமாக நடக்கின்றன. சிலவற்றுக்கு அறிவுக்கெட்டிய விளக்கங்கள் கிடைக்கின்றன. சிலவற்றின் விளக்கங்களை இன்னும் அறிவு எட்டவில்லை. சிலவற்றின் விளக்கங்களை இன்றைய மனிதவடிவ அறிவு எட்டாமலே போகலாம். அதற்காகக் கடவுளின் இயக்கத்தில் அவை நடைபெறுகின்றன என்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல.

    புதுவருடத்திலாவது கடவுள் நம்பிக்கைகள் குறையட்டும். காவி நம்பிக்கைகள் கரையட்டும். (ஓகே.. காவி, தாடி, அங்கி, இன்ன பிற :-)

    பதிலளிநீக்கு
  34. //THERE CAN BE NO MIRACLES WHICH CAN NOT BE EXPLAINED , MAY BE THEY ARE YET TO BE EXPLAINED

    GMB சார் சொல்லியிருப்பதைக் கவனிக்காமல் நான் ஏதோ புலம்பியிருக்கிறேனே..

    பதிலளிநீக்கு
  35. //வா இந்த பக்கம்.போ அந்த பக்கம்.

    வாழ்வின் summation சூரி சார்.

    பதிலளிநீக்கு
  36. கதை என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. யதார்த்தமான உரையாடல்கள் ரொம்பவும் யோசிக்க வைத்துவிட்டன. சூரி சாரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

    உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லத்தான் வந்தேன். ஆனால்....

    பதிலளிநீக்கு
  37. GMB sir, உங்கள் கேள்விகள் ஒரு பதிவுக்கான சமாசாரம்.

    மனிதருக்கான கருணை உயிர்பிரி அமெரிக்காவில் வர நாளாகும். ஸ்வீடன், இங்கிலாந்து போன்ற நாடுகளில்.. ஏன் இந்தியாவிலும்.. விரைவில் வருவதற்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாக நினைக்கிறேன். அமெரிக்காவின் மதத் தீவிரவாதிகளின் போலித்தனம் இங்கிருக்கும் சுதந்திரம் என்ற தீனியில் கொழுத்துக் கிடக்கிறது. இன்றைக்கு vegetative stateல் இருப்பவர்களை அந்த நிலையிலிருந்து நிரந்தரமாக விடுவிக்க நிறைய கோர்ட் உத்தரவுகள் தேவைப்படுகின்றன. நாம் எழுதிக் கொடுத்தாலும் பிற அமைப்புகளின் தலையீட்டால் அத்தனை எளிதாக நடைபெறுவதில்லை.

    இருப்பினும்.. சுயமாக உயிர் பிரிக்கும் உரிமை, அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும் காலம் தொலைவில் இல்லை. அதற்கான வரைமுறைகள் சட்டங்களாகும் காலத்துக்குக் காத்திருக்க வேண்டும். இன்றைய வளர்ச்சி வேகம் காத்திருப்பைக் குறைக்கும் என்று நம்புகிறேன். ஐம்பதோ எழுபத்தைந்தோ தொண்ணூறோ ஏதோ ஒரு வயதில் அரசாங்கப் பொது உயிர்பிரி நிலைய சொகுசுப் படுக்கையில் படுத்துறங்கி எழாதிருக்கும் உரிமை நம் சந்ததிகளுக்குக் கிடைக்கும் என்பது நிச்சயம் (என் அகங்காரத்தை மன்னிக்க வேண்டும்).

    பொதுவாக, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் பாணியில் நிற்பவர்களுக்கு மனதுக்குத் திருப்திப் படும் வகையில் விளக்கங்கள் தொடர்ந்து தேவைப்படுகின்றன. காரணம் lack of balance. நாம் எப்படி நிற்கிறோம் என்பதைப் பொருத்து நம் திருப்தியும் அமையும் என்று சொன்னால் கோபிப்பீர்களா?

    dr.kevorkian பற்றி இணையத்தில் நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள். அவரைப் பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  38. Thank U so much for sharing information regarding the life and work of Dr.Kevorkian.
    //என் அகங்காரத்தை மன்னிக்க வேண்டும்).//
    Why?
    I fail to understand why u need be apologetic.
    It is your right,as much as, one has the right as you have rightly said, for euthanasia

    Difficult to rid of both.

    Let it be.

    Happy new year.


    subbu thatha.
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  39. அப்பாதுரை சார், நான் யூதனேசியா பற்றிக் குறிப்பிடவில்லை. IT IS OK TO DIE என்னும் வலைத்தளம் Dr. Monica Williams என்பவரது. படித்தபோது அமெரிக்காவில் தனக்கு மருத்துவம் பார்க்க நேர்ந்தால் உயிரை நீட்டிக்க life support கொடுத்து நீட்டிக்க வேண்டாம் என்று முன்பே எழுதிக் கொடுத்து விட முடியும் போல் தெரிகிறது. நான் அது பற்றிக் கேட்டேன். Dr.Kevorkian பற்றிக் கொஞ்சம் படித்தேன். அவர் கருணைக் கொலை அல்லது உதவப்பட்ட தற்கொலைகளில் ஈடுபட்டிருந்தார் எனத் தெரிகிறது. நம் நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த கருணைக் கொலையோ assisted suicide -ஓ துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு அதிகம் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் நமக்கு இன்னின்ன விதத்தில் ஆயுளை நீட்டிக்க வேண்டாம் என்று முன்பே பதிவு செய்து விட்டால் அனாவசியமாக உயிரை நீட்டிக்கச் செய்யும் பணம் பறிக்கும் மருத்துவ gimmicks களை நிறுத்தலாம் என்று தோன்றுகிறது. வயதான காலத்தில் என்னென்ன எண்ணங்கள்.....!

    பதிலளிநீக்கு
  40. ஆனால் நமக்கு இன்னின்ன விதத்தில் ஆயுளை நீட்டிக்க வேண்டாம் என்று முன்பே பதிவு செய்து விட்டால் அனாவசியமாக உயிரை நீட்டிக்கச் செய்யும் பணம் பறிக்கும் மருத்துவ gimmicks களை நிறுத்தலாம் என்று தோன்றுகிறது. //

    //வயதான காலத்தில் என்னென்ன எண்ணங்கள்.....!//

    www.deathclock.com
    போய் செக் பண்ணி பார்த்தேன்.

    இன்னமும் நான் 69,787,232 வினாடிகள் இருப்பேன் என்று
    ரியல் டைமிலே காமிக்கிறது.

    அதுக்குள்ளே அந்த யக்ஞ்எந்திரர் கதை புல்லா அப்பாதுரை சார் எழுதனுமே . படிச்சு முடிக்கணும்
    இல்லை அப்படின்னா அதுக்குன்னு ஒரு ஜன்மம் எடுக்கணும்.

    எனக்கு இந்த கவலை ஒண்ணு தான் பிரசன்ட் லே இருக்கு.

    நோ. நோ.i am sorry.
    இன்னொரு கவலையும் இருக்கு.

    நிர்மலா ஆடறது டான்சா உடான்ஸா ?



    சுப்பு தாத்தா.
    thank U for your new year greetings. wish u and your family members the same.
    www.movieraghas.blogspot.com
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
  41. this is an ongoing struggle GMB sir. legal, social, political and religious stakeholders எல்லாம் சேர்ந்து சாதாரண பாமர உரிமைகளைப் பந்தாடும் ஆட்டம் - எத்தனையோ வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மானிகா விலியம்ஸ் படித்ததில்லை; தேடிப் பார்க்கிறேன்.

    அடிப்படையில் இவை கருணை உயிர்பிரியைச் சார்ந்தவையே. யூதனிஸியா என்ற பரந்த வீச்சுக்குள் அடங்கும். ஒரு குறிபிட்ட நிலைக்கு அப்பால் உயிரைக் காப்பாற்றுவதற்கான உழைப்பும் செலவும் பயனற்றுப் போவதுடன், அந்த உயிரின் அவதியைக் கூட்டிக் கொண்டே போகும் அந்தக் குறிப்பிட்ட நிலையில் உயிரைப் பிரிப்பதற்கான (நீட்டிக்க வேண்டாம் என்பது எதிர்மறை அவ்வளவு தான் - செய்தி என்னவோ சாகடிக்கலாம் என்பது தானே?) அனுமதியைத் தர/பெற முடிகிற வசதி. கெவூர்கியன் அதைத்தான் செய்து வந்தார்.

    நானறிந்தவரை 'இன்னின்ன விதத்தில் ஆயுளை நீட்டிக்கவேண்டாம்' என்று எழுதிக் கொடுத்தாலும் சட்டப்படி செல்லாது. அமல்படுத்துவதும் எளிதல்ல. இன்ஸ்யூர்ன்ஸ் கம்பெனிக்கு அப்படி எழுதிக் கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தால் வைத்தியத்துக்காகச் சல்லிக்காசு தர மாட்டார்கள். இன்சூர்ன்ஸ் கைவிரித்தால் மருத்துவம் உடனே எழுதிக் கொடுத்ததையும் சேர்த்துக்கட்டி எழுதிக்கொடுத்தவரை எட்டி உதைக்கும். எல்லாமே பணத்தின் பிடிப்பு. அதற்கு மேல் பொதுப்பார்வையில்... சட்டப்படி அது தற்கொலை எனும் குற்றத்துக்குள் அடங்கும். சமூகக் கொள்கைப் பார்வையில் அது தவறான செய்தியைப் பரப்பும் செயலாகும். அரசியல் பார்வையில் செயலின்மைக்கான அடித்தளமாகும். எல்லாவற்றுக்கும் மேல், மதப்பார்வையில் அது மிகப்பெரிய துரோகமாகிவிடுகிறது. மதவெறிச் சாத்தான்களுக்கான நிரந்தரத் தீனி.

    அதனால் 'எழுதிக் கொடுத்துவிடுவது' எல்லாம் பெரும்பாலும் தொலைநோக்குச் சிந்தனை மட்டுமே. it is not in practice anywhere in the world as a human freedom or right, as far as i know; if anything, it is allowed (not practiced) on an extremely case-by-case basis after prolonged ethical-social-legal-religious tangle. எனினும் இது என்னவோ எளிது போல் மானிகா விலியம்ஸ் குறிப்பிட்டிருந்தால் அது தவறென்றே சொல்லத் தோன்றுகிறது. படித்துப் பார்க்கிறேன் முதலில்.

    பதிலளிநீக்கு
  42. ஆனால் இவை எல்லாமே will converge. அதைத்தான் நான் என் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன்.

    இன்றைக்கு vegetative stateல் இருப்பவரின் மிக நெருங்கிய சுற்றம் இது போல் உயிரிபிரி அனுமதி (அல்லது நீட்டிக்க மறுப்பு) எழுதிக் கொடுத்து, பிற அமைப்புகளின் தலையீட்டை அனுமதித்து, பிறகு நூற்றில் ஒன்றுக்கும் குறைவாக அமல்படுத்தப் படுகிறது. நாளைக்கு இது மெள்ளப் பரவி, சமூகக் கொள்கையாக மாறும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது. குறுக்கே நிற்பது மதம், மனித மன முதிர்ச்சி, கடவுள் நம்பிக்கை - அந்த வரிசையில்.

    முதுமை, பிணி இந்த இரண்டில்.. பிணியின் அடிப்படையில் இந்த முடிவுகளை அனுமதிப்பது ஓரளவுக்கு எளிதாகலாம். முதுமையின் அடிப்படையில் இத்தகைய முடிவுகளை அனுமதிப்பதில் இருக்கும் சிக்கல் தீர நாளாகும். நிறைய அறிவுசார் முடிவுகளும் சலுகைகளும் அடங்கியிருப்பதால் நிச்சயம் இந்த நூற்றாண்டின் இறுதி வரை கூட ஆகலாம்.

    முதுமை ஒரு உலகப் பிரச்சினை. ஆனால் இப்போதைக்கு அது விளங்காது போவதில் வியப்பில்லை. (மக்கள் தொகை)பிறப்பு இன்னும் பெரிய சமூகப் பிரச்சினையாக இருக்கையில் இறப்பைப் பற்றி யாருக்கென்ன சமூக அக்கறை? அதைத் தவிர கல்வி, பசி, வேலையில்லாத் திண்டாட்டம், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், வறுமை என்று எத்தனையோ சமூகச் சிக்கல்கள் இருக்கின்றன. முதுமையைப் பற்றி யாருக்கு என்ன அக்கறை? சமூகச் சிக்கல்களை மறந்தாலும் குடிநீர், உணவு, மருத்துவ வசதிச் சிக்கல்கள். அதை விட்டால் செக்ஸ் வியாதிகள், கேன்சர், இன்ன பிற நோய்கள். அதையும் விட்டால் மது, சிகரெட், போதைப்பொருள் பயன்பாடு. அதையும் விட்டால் அணு ஆயுதம், போர். இத்தனைக்கும் நடுவில் 'வாழ்ந்தது போதும், இன்னும் உயிர் போக மறுக்கிறதே' என்று எண்பது வருட சிந்தனைகளை அசை போட்டபடி சமூகக் கடலில் தனித்தீவாகியிருக்கும் எண்பத்தைந்து வயதுக்காரரைப் பற்றி யாருக்கு என்ன கவலை? 'சனியன், தொந்தரவு செய்யாமல் போட்டதை சாப்பிட்டு படுத்துக் கிடந்தால் போதும்' என்ற அளவில் அக்கறையிருந்தால் அதுவே பெரிய சலுகை - காரணம் அது அத்தனை முதுமைக்கும் கிடைப்பதில்லை.

    முதுமையைப் பற்றி இளமை சிந்திக்க வேண்டும் என்ற முரணே, அந்தப் பிரச்சினை டைடேனிக்கை மூழ்கடித்த பனிப்பாறையாக இருக்கக் காரணம். சுமார் முப்பது வருடங்களுக்கு முன் ஹெல்பேஜ் இந்தியா நிறுவன தலைமையதிகாரி என் போன்ற freshly minted management graduatesகளை அழைத்து முதுமைப் பிரச்சினையைப் பற்றிச் சொல்கையில் நாங்கள் எல்லாம் அவ்வப்போது விலகிச் சரிந்து கொண்டிருந்த அவருடைய சேலையைக் கவனித்துக் கொண்டிருந்தோம். நிலமை இன்றைக்கும் அப்படித்தான். முதுமையைப் பற்றி முதுமை சிந்திக்க வேண்டியிருப்பதால்.. it is a non-starter என்பது என் கருத்து. இடையே இது போல் 'எழுதிக் கொடுத்துவிடலாம்' என்பவை வெறும் சிந்தனைகள் மட்டுமே. தீர்வு என்று எந்த இடத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை.

    japan ஒரு விதிவிலக்காகும் சாத்தியம் இருக்கிறது. மக்கட்தொகை பெருக்கம் மிக மிகக் குறைந்த அளவில் நடைபெறுகிறது. முதியவர்கள் இன்று பெரும்பான்மை (56%). வல்லரசாக இருக்கும் வசதி. எல்லாம் சேர்ந்து அங்கே முதுமைச் சிக்கலின் முதல் விடை உருவாகும் சாத்தியம் இருக்கிறது. சிந்திக்கிறார்கள். பார்ப்போம்.

    மறுபடியும் சிந்திக்க வைத்தீர்கள். morbid என்றாலும் சிந்தனை சிந்தனை தானே? நன்றி.

    பதிலளிநீக்கு
  43. //நிர்மலா ஆடறது டான்சா உடான்ஸா ?

    நியாயமான சந்தேகம், சூரி சார்.
    வா இந்தப் பக்கம் - வந்தேன்.

    பதிலளிநீக்கு
  44. //அனாவசியமாக உயிரை நீட்டிக்கச் செய்யும் பணம் பறிக்கும் மருத்துவ gimmicks

    sad reality. மருத்துவ கிமிக்ஸ் மட்டுமில்லை, சுற்றத்தின் அச்சமும் கூடவோ?

    இந்தக் கதையின் தொடர்ச்சியாக 'ரம்யா என்று ஒரு சிறுமி' (என்றொரு :-) எழுதியிருந்தேன். புது வருஷத்தில் ரொம்ப கனமாகிவிடும் என்று சிறுமியை நிறுத்தி வைத்திருக்கிறேன்.

    இந்தக் கதையில் பிள்ளைகள் அம்மாவின் ஆயுளை எப்படியாவது நீட்டிக்கப் பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு எல்லாம் வெறுத்து விடுகிறது, மனைவிக்குத் தான் செய்யும் மிக பெரிய துரோகம் அவள் உயிரை நீட்டிக்க அனுமதிப்பது என்று தீர்மானித்து ஒரு முடிவெடுக்கிறார்.

    இன்றைக்கு இருக்கிற மருத்துவ வசதி, தொழில் நுட்பம், இன்சூரன்ஸ் போன்ற அமைப்புகள், சமூக எதிர்பார்ப்பு எல்லாம் சேர்ந்து அப்பா அம்மாவுக்கான உடல் நோய் என்கிற இயல்பான நிகழ்வை அதன் போக்கில் விடாமல் நம்முடைய controlக்குள் கொண்டு வந்து, அவதிப்படும் முதுமையை ஒரு spectatorஆக மாற்றிவிடும் அவலம் மிகவும் கனமானது.

    பதிலளிநீக்கு
  45. //முதுமையை ஒரு spectatorஆக மாற்றிவிடும் அவலம் //அப்பாதுரை சாருக்குத் தெரியாம இருக்காது. நீங்க மாட்டுக்கு அவர்கிட்டக்க போயி எதுவும் சொல்லி வாங்கி .கட்டிக்காதீக.

    என்ற என் கிழவியின் நல் வாக்கு கேட்கிறது.

    இருந்தாலும் நீ எழுது அப்படின்னு எதோ ஒன்னு உள்ளேந்து சொல்லுது.

    ஸ்வாமி , பஜ கோவிந்தம் அப்படின்னு ஒன்னு. அதற்கு யோகா முத்ரா என்றும் பெயர் சொல்லுவாக.

    பால்யாவஸ்தே க்ரீடாசக்தாஹ்
    தருனாவச்தே தருநிசாஹ்
    விருத்தாவச்தே சிந்தாச்க்தஹா
    பரே ப்ரஹ்மணி கோஅபி ந சக்தஹ

    சின்னபுள்ளையா இருந்த போது எப்ப பார்த்தாலும் விளையாட்டு.
    விளையாட்டு ...
    வயசுக்கு வந்தாச்சு அப்படின்னா ...."அது".வே நினைப்பு.
    (அது எது அப்படின்னு கேட்கப்படாது. )
    கிழடு ஆயிடுச்சுன்ன கவலையே காலம் முழுக்க ...

    கடைசி வரி வோண்டாம். அப்பாதுரை சார் வேற ரூட்டிலே போயிடுவார்.

    நான் என்ன சொல்ல வரேன்னா...

    சீக்கிரம் சொல்லுங்க...

    முதுமைலே தான் ஒரு spectator ஆ இருக்கோமா ?

    புறந்ததுலேந்து இன்னி வரைக்கும் இந்த மனசு பின்னாடியே ஓடிக்கினு தான் இருக்கோம்.

    நம்ம எப்பவுமே ஒரு spectator தான்.

    தூரத்திலே இருந்தா, வா இந்தப் பக்கம் அப்படின்னு சொல்லுது.
    சரி, அப்படின்னு பக்கத்திலே வந்தா, போ அந்தப்பக்கம் அப்படின்னு சொல்லுது.

    அந்த சொல்லுது ன்னு ஏதோ ஒண்ணைச் சொல்றோமே அது எது ?

    அதக் கண்டுபிடிச்சாச்சு அப்படின்னா முதுமைய குறை சொல்ல வேண்டாம்.

    முதுமை லே வேற ஒண்ணும் வெட்டி முறிக்கிற வேலை இல்ல.

    (தெரியும். இல்லாட்டி, இந்த மாதிரி ராத்திரி பகல் ன்னு தெரியாம கம்புடர் கிட்டே மன்னாடிட்டு இருப்பீகளா ? )

    அதுனாலே நம்ம இந்த எண்ணங்கள் என்ற சுழலிலே சிக்கிக்கிட்டு
    கஷ்டப்படறோம் கஷ்டப்படறோம் அப்படின்னு பினாத்தரோம்.

    இந்த உயிர் எனக்கு நான் கொடுக்கல்ல.ஸோ அத திருப்பி போ என்று சொல்வதற்கும் எனக்கு உரிமை இல்ல.

    யாரு சொன்னாகளா ? ஷேக்ஸ்பியர் சொல்லி இருக்காரு.
    கிங் லியர் எனக்கு லைப் போதும் அப்படின்னு தற்கொலை பண்ணிக்க முயற்சி செய்யும் போ, அவனோட மகன் எட்கர் புத்தி சொல்றான்யா..

    இன்னொரு விஷயம் இதுலே இருக்கு. ந. வே. எழுதினவரு அந்த ஆங்கிள் லே எழுதுவார் அப்படின்னு எதிர்பார்க்கலாமா ? எனக்குத் தெரியல்ல..

    ஐயா.

    புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சில் இருந்த உயிர்க்கு ...

    அப்படின்னு யாரோ எழுதி இருக்காக.யாரு அது. ?
    கொஞ்சம் .பொறுங்க .. பரிமேலழகர் என்னோட வாத்திய கேட்டு சொல்றேன்.

    ஏதோ இடம் கிடக்க இல்லைன்னு உயிர் இந்த உடல் லே அது நல்ல இருக்கிற வரைக்கும் குடுத்தனம் இருக்குதாம். இத விட நல்ல வீடு கிடைச்சுத்துன்ன அங்க ஷிப்ட் பண்ணிக்கிட்டு போயிடும்.

    வீட்டுக்கு ரெண்ட்டுக்கு வந்தவன் வீடு நல்லா இல்லைன்னு கவலை படுவானோ. ?

    அதெல்லாம் கிடக்கட்டும். உடல், உடம்பு எல்லாமே ஒரு குப்பை.
    அது இருக்கறவரைக்கும் இருந்துட்டு போகட்டும். அப்பப்ப

    அதப்பத்தி கவலைப் படாமே இன்றைய தினத்தை, இன்றைய
    வினாடிய எப்படி, சுகமா சந்தோஷமா கழிப்போம் அப்படின்னு நினைச்சு பாருங்க..


    சர்வே ஜனாஹா சுகினோ பவந்து.
    மாம் ரக்ஷந்து.
    அப்பாதுரை சாரையும் சேர்த்து ரக்ஷந்து.


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  46. brilliant sury sir..

    பேயாள்வான் புராணத்திலும் இது தொட்ட சோதனை ஆதித்யனுக்கு வருகிறது. தீரா நோய் வசப்பட்ட இளம் பிள்ளையின் உயிரை வைத்து தீர்க்க முடிகிற பிணி வசப்பட்ட கணவனைக் காப்பாற்றும் (or vice versa) சிக்கலில் ஒரு மனைவி spectatorஆக மாறுகிறாள். கதையானாலும் அதன் கருத்தாழம் என்னை மிகவும் பாதித்தது - சொல்ல நினைத்திருக்கிறேன்.

    உலகம் ஒரு நாடக மேடை என்று நம்ம பியர் சொல்லியிருக்கிறார். அதற்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சார்வகக் கூட்டத்தினர் சொல்லியிருக்கிறார்கள். அஜாதசத்ரு இதை demonstrate செஞ்சு காட்டுகிறான் பிரகதாரண்யக உபனிஷதில். ஆக, spectatorship என்பதும் இயல்பானது தானோ?

    spectator பத்தி இன்னும் விரிவா எழுதலாம்.. போரடிச்சுடும்.. இருந்தாலும் பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  47. being a spectator - it is about the choices we make. bandhu சொன்னது போல.

    hasta la vista.

    பதிலளிநீக்கு
  48. t is about the choices we make //

    choices ?? we ??? make ??

    நீங்க சொன்னா மாதிரி விரிவா எழுதிட்டே போலாம். போர் அடிக்கும்.
    நம்ம தான் இங்கே சண்டை போட்டுண்டு, நீயா நானா பண்ணிக்கிட்டு இருக்கோம்.

    அந்த சதாசிவம், இருக்காரே , ஞாபகம் இருக்கா,
    அவரை நாம் மறந்து போயிட்டோமே.
    .

    எல்லாம் முடிஞ்சு போச்சு.

    பொண்ணோ ,
    அப்பா,
    உடனே நீ இந்தியாவுக்கு போயி, என்ன செய்யப்போறே அப்படின்னு ஒரு விசா எக்ஸ்டென்சன் வாங்கி தந்துட்டா.

    யோகறதோ வா போகரதோ வா,
    சங்க ரதோ வா சங்க விஹீனஹா
    யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
    நந்ததி நந்ததி நந்தத்யேவ.

    அப்படின்னு ஒரு ஸ்லோகத்தையும் படிச்சுட்டு,

    பொண்ணு வச்சுட்டு போன மிச்ச பிரெஞ்சு ப்ரைலேந்து
    ஒவ்வொன்னா எடுத்து சாஸ் லே தோச்சு,
    விட்டுப்போன இடத்திலேந்து அந்த
    பிலடெல்பியா படம் பாத்துண்டு இருக்கார்.
    டோன்ட் டிஸ்டர்ப் ஹிம்.

    In one way,
    it is about the choices we make
    how we make ourselves comfortable.


    சு.தா.

    பதிலளிநீக்கு
  49. //வீடு திரும்பியதும், "ஹார்ட் அடேக்னா.. இத்தனை நேரம் விஜயா ஆஸ்பத்ரிலே எல்லாம் சரி பார்த்து வீட்டுக்கு அனுப்பியிருப்பாங்கடி" என்றேன்.//

    உண்மைதான். இங்கேல்லாம் சரிபார்த்து அனுப்பி இருப்பாங்க; இல்லைனாலும் நாமளே வந்திருக்கலாம். இப்படி இழுத்து அடிக்க மாட்டாங்க தான்.

    பதிலளிநீக்கு
  50. //குரு சாக்ஷாத் பரப்ரம்மம் என்பது இதைத் தானோ? குருவும் டொக்கு. பரப்ரம்மமும் டொக்கு. ஒன்றும் அறியாத குழந்தைகளை பாவத்தின் சின்னமாக சித்தரித்த இந்துமத குருவைப் பற்றி nyt நிருபர் என்ன எழுதினார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. அந்த நிருபரும் கிறுஸ்தவ fundamentalistஆக இருந்தால் புனித அதிசயங்களை எண்ணி புளங்காங்கிதமடைந்திருப்பார். //

    குழந்தைகளைப் பாவத்தின் சின்னம்னு எல்லாம் சொல்லலை. பூர்வ ஜன்ம கர்மாவை அனுபவிச்சுத் தான் கழிக்க வேண்டும் என்பதால் இப்படிப் பிறந்திருக்கிறதாய்ச் சொல்கிறார். அவர் சொன்னது தப்புனே வைச்சுக்கலாம்.

    இப்படிக் குழந்தைகள் பிறப்பதன் காரணத்தை லாஜிகலாக நீங்கள் தான் சொல்லுங்களேன், கேட்கலாம். முற்பிறவி தான் இப்போதைய சுக, துக்கங்களுக்குக் காரணம் என்பதே அவர் பதில். பாவத்தின் சின்னம் என்றெல்லாம் சொல்லவில்லை. மறுபடி படிச்சுப்பாருங்க. அதோடு இதற்கான காரணத்தையும் சொல்லுங்க, கேட்டுக்கலாம்.:)))))

    பதிலளிநீக்கு
  51. வேடிக்கை என்னன்னா, இப்போக் கொஞ்ச நாட்களாகவே இங்கே வீட்டில் இதான் பேச்சு, விவாதம் செய்யறோம். திரு காச்யபன் அவர்கள் சொன்னாப்போல யார் முந்தினு தெரியலையே என்பது தான் எங்களோட கவலையும் கூட. இன்னிக்கும் இது குறித்துத் தான் பேசிக் கொண்டிருந்தோம். ஒருத்தர் இல்லைனா இன்னொருத்தருக்கு எவ்வளவு கஷ்டம் என்பதைக் குறித்து அலசிக் கொண்டிருந்தோம். :)))))

    பதிலளிநீக்கு
  52. முற்பிறவிப் பாவங்களின் விளைவாகப் பிறந்தவை பாவத்தின் சின்னம் தானே? பெரியவர் எப்படிச் சொன்னா என்ன? பெரியவாள் என்பதற்காக் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் - காரணம் அவர் பெரிய மத குரு இல்லையா? அவர் சொல்கிறார் என்பதற்காக நாமும் அப்படியே கேட்கலாம் - காரணம் நம்முள் அவர் மேல் இருக்கும் மதிப்பு, மரியாதை - அவற்றுக்கும் மேல் குரு ப்ரம்மா என்கிற மரபணுவில் கலந்த போதனை - இல்லையா? முற்பிறவிப் பலனாக தற்பிறவி அமைவது பெரியவர் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் புராணங்களிலும் சில உபனிஷதுகளிலும் இறையிலக்கியங்களிலும் எழுதப்பட்டவை தான். பெரியவாளுக்கும் அந்த டிஎன்ஏ உண்டு தானே? அவர் அதை நம்புவதால் சொன்னார். நிறைய பேர் அதை நம்புகிறார்கள். அதற்காக அதை நாம் நம்ப வேண்டியதில்லை என்பது என் கருத்து.

    ஒரு சிசு ஏன் அப்படிப் பிறக்கிறது என்பதற்கு லாஜிகலாக விளக்கம் இல்லை என்று ஒரு கணம், ஒரே கணம், வைத்துக் கொள்வோம். அதற்காக முற்பிறவிப் பலன் என்று சொல்வது லாஜிகலா? அதைக் கேட்க மாட்டோமே? புண்ணியம் செய்தால் பிறவி கிடையாது என்று கூட புராணம் சொல்கிறது. நாராயணா என்று ஒரு தடவை சொல்லிவிட்டால் பிறவியே கிடையாது என்றும் நம் புராணங்கள் சொல்கின்றன. அதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது நல்ல குடும்பங்களில் வசதியாக வளமாக ஆரோக்கியமாகப் பிறந்தவரெல்லாம் முற்பிறவியில் போதுமான அளவுக்குப் புண்ணியம் செய்யவில்லை என்று ஆகுமா? பிறவாமை இலக்கென்றால் புண்ணியத்துக்கு என்ன வரைமுறை? இதில் லாஜிக் இருக்கிறதா என்று நாம் பாராததற்குக் காரணம் நம்பிக்கை (குருட்டு), அதில் கிடைக்கும் ஒரு அமைதி. that is it. நம்மால் விளக்க முடியாததை, நம்மால் சிந்தித்துப் பார்த்து அறிய முடியாததை உடனே மூடி போட்டு அதிசயம் அற்புதம்னு சொல்லிடறோம். இதுக்கு நடுவுல எல்லா பாவத்துக்கும் பரிகாரம் இருக்குனு ஒரு சைட் டிரேக் வேறே. அப்ப இந்தப் பாவச்சிசுக்கள் முற்பிறவியில் பரிகாரம் தேடாமல் இருந்த பாவாத்மாக்களோ! அல்லது இப்பிறவியில் வசதியாகப் பிறந்த சிசுக்கள் எல்லாம், முற்பிறவியில் அனியாயத்துக்கு பாவம் செய்துவிட்டு கடைசியில் பரிகாரம் செயது, அல்லது செய்யாமல் 'செத்தேனே நாராயணா!' என்று நாராயணனை அழைத்ததால் பாவம் ஒழித்த புண்ணியாத்மாக்களோ!

    பேதமையன்னப் பிணியொன்றில்லை.

    சிசுக்கள் அப்படி ஊனமாகப் பிறப்பதேன். இதற்கு லாஜிகல் விளக்கம் உண்டா? நாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் விளங்கும். லாஜிகல் விளக்கம் இல்லையென்றே மறுபடி வைத்துக் கொள்வோம். அப்படிப் பிறந்த சிசுவை ஏன் மருத்துவரிடம் அழைத்துப் போகிறோம்? பாவாத்மா என்று அப்படியே விட வேண்டியது தானே? கூழுக்கும் ஆசை.

    எனக்கு சிசு ஊனம் பற்றிய லாஜிக் தெரியாது. அது முற்பிறவி பாவம் என்பதில் லாஜிக் இல்லை என்று மட்டும் உறுதியாக இருக்கிறேன். ஊனம் பற்றிச் சொல்வதானால் ஜிஎம்பி சார் சொன்னது போல் சில அதிசயங்களை (விபரீதங்களை) அறிந்து கொண்டிருக்கிறோம், சிலவற்றை அறியும் பக்குவம் இன்னும் வரவில்லை. அவ்வளவு தான். எத்தனையோ வகை deficiencyக்கள், மது போதைப்பொருள் உபயோகத்தின் தலைமுறை தப்பிய தாக்கம், ஒரே ரத்தக் கலப்பு என்று எத்தனையோ காரணங்கள் ஊனங்களுக்குத் தரப்படுகின்றன. ஆனால் இந்த அறிவு கூட ஏற்புடையதாகாமல்.. இப்படி deficiency மற்றும் corruptionடன் பிறந்ததற்குக் காரணம் முற்பிறவிப் பாவம் என்று மறுபடியும் வட்டத்துக்குள் போகலாம்.

    பேதமையன்னப் பிணியொன்றில்லை.

    பதிலளிநீக்கு
  53. //யார் முந்தினு தெரியலையே என்பது தான் எங்களோட கவலையும் கூட.

    so cute.

    still, வருத்தமாக இருக்கிறது. இந்தக் கவலையினால் பலனில்லை என்று, உங்களுக்குத் தெரிந்தது தான், நினைவூட்டலாமா?

    இணைந்து சில/பல காலம் வாழ்ந்தவர்களை விடுங்கள்.. சமீப இந்தியப் பயணத்தில் சென்னை ஏர்போர்டில் அதிகாலைப் பயணத்துக்காகக் காத்திருந்தேன். அண்மையில் இரண்டு சின்னஞ்சிறிசுகள் பேசிக் கொண்டிருந்தார்கள். முன்னிருபதுகளில் இருக்கலாம், that young. "எனக்கு முன்னால நீ போயிடு, எனக்கப்புறம் நீ போயிடு" என்ற பாணியில் அவர்களின் தொடர்ந்த கொஞ்சல் டயலாக் எனக்குக் கொஞ்சம் சிரிப்பாக இருந்தாலும்.. 'இது தான் உறவின் பிடிப்பு.. நானும் இந்த டயலாக் பேசியிருக்கிறேன், இந்த வயதிலும் பேசுகிறேன்' என்ற பொறியும் பறந்தது.

    நம் அன்புக்குரியவர் நம்மைப் பிரிந்து துயரப்படுவார் வாழ்க்கை வெறுப்பார் என்ற எண்ணம் பிணைப்பின் உச்சம் என்றாலும் அது பிரிவின் அச்சமும். நாணயத்தின் இரு பக்கங்கள். அவரால் நம்மைப் பிரிந்து இருக்க முடியாது என்பது, நம்மால் அவரைப் பிரிந்து இருக்க முடியாது என்ற அச்சத்தின் manifestation என உளவியல் சொல்கிறது.

    நேற்று நானும் இதே டாபிக்கில் தேவையில்லாமல் தலை நுழைத்து insensitive brute என்று முகத்தில் கரியைப் பூசிக் கொண்டேன். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் :-).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திடீரென்று உறைத்தது. எங்கள் விருப்பம் என்று இனி எதுவும் வாழ்வில் இல்லை. என் வாழ்வில் எனக்கிருந்த பிடிப்பு, என்று எந்தக் கணத்தில் இளகி விலகியது என்று நினைத்துப் பார்க்கிறேன். சரியாகப் புரியவில்லை. மங்கலாகவே இருக்கிறது.// இது இன்னும் எங்களுக்கு ஆரம்பிக்கலை. இன்னமும் எங்கள் வாழ்க்கை எங்கள் கைகளில் இருக்கிறது என்றாலும் கன்ட்ரோல் ஸ்விட்ச் குழந்தைகளிடம். :) இப்போதைக்கு ஓடுகிறது! எவ்வளவு நாட்கள்? தெரியலை!

      நீக்கு
    2. உங்கள் நீண்ட பதிலைப் படிச்சேன். அதாவது முற்பிறவியின் தாக்கம் இப்போதைய பிறவியிலும் வரும் என்றதற்கான பதிலை. அதுக்கு நீண்ட பதிவாகத் தான் பதில் கொடுக்க வேண்டி வரும். இப்போ நேரம் இல்லை! :) என்றாலும் குறிச்சு வைச்சுக்கறேன்.

      நீக்கு
  54. சதாசிவம் கதையை சுவாரசியமா முடிச்சுட்டீங்க சூரி சார்.. ப்ரெஞ்ச் ப்ரை?

    பதிலளிநீக்கு
  55. முதுமையை அனுபவித்து வாழும் ஒரு சமூக அமைப்பு உருவானால் அந்த insensitive brute க்கும் விடிவு பிறக்கலாம் தானே ! அப்பாதுரை அவர்களே! ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  56. Appadurai Sir, not only your post but also the comments on the same create lot of vibrations in the mind. The comments, arguments and counter arguments (though most of them are not understandable in one read)(even after reading 2-3 times I could not get the exact meaning some terminologies is a different issue) really superb. More than your post, my mind started thinking about what would be the comments of expatguru, gmb sir, Kashyapan sir, sury siva etc.

    பதிலளிநீக்கு
  57. //பேதமையன்னப் பிணியொன்றில்லை//

    அதான் எல்லாம் ஒரு நம்பிக்கை என்று சொல்லி விட்டேனே அப்பாதுரை. அதை "குருட்டு" நம்பிக்கை என்று சொல்வது கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லாமல் தப்பும் விதமாக உள்ளது.

    நீங்கள் கூறுவது போல முற்பிறவி என்பது காவிகளின் லாஜிக் இல்லாத போதனை என்றே வைத்து கொள்வோம். நான் பல முறை கூறிதை மீண்டும் சொல்வதற்கு மன்னிக்கவும். மின்சாரத்தை உபயோகித்து கணணியில் இந்த பதிவை எழுதியுள்ளீர்கள். அந்த மின்சாரத்தை யார் பார்த்திருக்கிறார்கள்? மின்சாரம் என்று ஒன்று இருக்கிறது என்று திட்டவட்டமாக எப்படி கூறுகிறீர்கள்? மின்சாரத்தினால் இயக்கப்படும் பொருட்களை தான் உங்களது 'பகுத்தறிவு' காட்ட முடியும். மின்சாரத்தை காட்ட முடியுமா? அதனால், உங்கள் லாஜிக்கின்படி மின்சாரம் என்று ஒன்றே கிடையாது. மின்சாரம் என்று ஒன்று இருப்பதை நீங்கள் நம்புகிறீர்கள். அது உங்களின் குருட்டு நம்பிக்கை, அவ்வளவு தான். By the way, science has not proven the existence of electricity, it has only proven the 'effects' of electricity with which one has to infer that there is something called electricity.

    மின்சாரம் என்று ஒன்று உண்டு என்று நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். அதே போல மறுபிறவி என்பது முற்பிறவியின் வினை பயன்களால் தான் என்பதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.

    எல்லாம் வல்ல நாராயணனின் பரிபூரண அனுக்கிரகமும் காவிகளின் ஆசியும் அப்பாதுரைக்கு 2014ல் கிடைக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  58. அண்ட சராசர ஆதிக்க அதியற்புத அமோக சக்தியை அடையாளம் காட்ட அல்ப மின்சாரத்தையா பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்? கண்ணுக்குப் புலப்படாததால் உண்மையில்லை என்ற வாதத்திலிருந்து அசல் நாத்திகம் என்றைக்கோ வெளிவந்து விட்டதே குரு.. இன்னும் ஆத்திகம் தான் மின்சாரம், காற்று என்று பிடித்துக் கொண்டிருக்கிறது. போகட்டும்.

    குருட்டு நம்பிக்கை தவறு என்று நான் சொல்லவில்லையே? சொல்லியிருந்தால் மன்னிக்கவும். எத்தனையோ குருட்டு நம்பிக்கைகள் அன்றாட வாழ்க்கையின் அவலங்களை மறக்க, அல்லது எதிர்பார்ப்புகளை கட்ட, நமக்குத் தேவையாக இருக்கிறது. குருட்டு நம்பிக்கை is what it is.. குருட்டு நம்பிக்கை.. அதைத்தான் paranthesis போட்டுச் சொல்ல வந்தேன். where we draw the line என்பதில் தான் அறிவுக்கு எரிச்சல் வருகிறது :)





    பதிலளிநீக்கு
  59. இதை எப்படிக் கதையென எடுத்துக் கொள்வது ?
    தங்களின் எந்தப் பதிவுகளைப் படித்ததும் வெகு நேரம்
    அது தொடர்பான பல நிகழ்வுகளும் உணர்வுகளும்
    ஆக்கிரமித்துக் கொள்வதால் பல சமயங்களில்
    பின்னூட்டமிட முடியாமலே போய்விடுகிறது

    சமீபத்தில் எங்களுறவினரில் இந்த வயதொத்த தம்பதியரில்
    மனைவி இறந்து போக அவரின் கணவரின்
    கடைசி நேர அவஸ்தைகளைக் கண்டு
    அதிர்ச்சி அடைந்து போனேன்.அவர் அதை
    "அது "எனக் கூட புரிந்து கொள்ளாமல்
    ஏதோ மௌன மொழியில் அவள் புரிந்து கொள்வாள்
    என்கிற பாவனையில் அடிக்கடி அருகில் குனிந்து
    எதையோ மனதிற்குள் சொல்லி
    தலையாட்டிச் சென்றதும்தூக்கிக் கொண்டு செல்லுகையில்
    ":நீ முதலில் போ நான் பின்னால் வருகிறேன்
    என்பது போல் சாதாரணமாக கையாட்டிய விதமும் ..

    தங்கள் பதிவின் நாயகரின் அவஸ்தையை
    முழுமையாக உணர முடிந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு