2013/09/21

கலவை    கூடியிருக்கும் புராண வித்தகர்களுக்கு ஒரு புதிரான புதிர்.
1. குபேரனுடைய 'அழிவில்லாத' செல்வத்தை ஒரு பகலில் அழித்தவர் யார்?
    அ)அகத்தியர் ஆ)வினாயகர் இ)பார்வதி ஈ)ராவணன்
2. 'சிரஞ்சீவி'யான அனுமானை ஒரு முறை கொன்றது யார்?
    அ)சூரியன் ஆ)இந்திரன் இ)கருடர் ஈ)கார்த்திகேயர்
3. ஒரு யானை பலம் கொண்ட பீமனுக்கு ஆயிரம் யானை பலம் கொடுத்தது யார்?
    அ)வாயு ஆ)அனுமான் இ)பரமசிவன் ஈ)நாகராணி


    மீபத்தில் ரசித்த பாடல், காட்சி. சுசீலா கொஞ்சுகிறார். சரோஜாதேவி கெஞ்சுகிறார். சிவாஜி ம்ம்.. கிறார்.


    "ஹலோ.. நல்லா இருக்கீங்களா..? நான் தான் பேசுறேன்" என்று பெயர் சொன்னதும், அரை நொடி தயங்கி முகத்தில் அடித்தாற் போல் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மனதில் சில எண்ணங்கள் தோன்றுகின்றன. ஒருவேளை லைன் கட்டாகியிருக்குமோ? ஒரு வேளை ராங்க் நம்பரோ? பிறகு சமாதானமாகி, "வேண்டுமென்றே தான் துண்டித்திருக்கிறார்கள்" என்ற உணர்வு வந்ததும் மேலும் சில எண்ணங்கள். ஏன்? 'நல்லா இருக்கீங்களா?' என்றுதானே கேட்கிறோம்? எதிரியாக இருந்தால் கூட ஒரு கண்ணியத்துக்காகவோ அல்லது கோபத்தினாலோ "பேச விருப்பமில்லை.." என்றோ, "கட்டையிலே போறவனே.. இனி போன் செய்தால் செருப்பாலடிப்பேன்" என்றோ சொல்லும் நேர்மை கூட இல்லாமல் போனதேன்? அல்லது, "ஹலோ.. ஹலோ.." என்று வேண்டுமென்றே காதில் விழாதது போல் இழுத்தடிப்பது பொறுக்காமல் நாமாகவே துண்டித்து மீண்டும் அழைக்கையில், "தற்சமயம பிஸியாக.." என்றோ "சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது" என்றோ.. செய்திக்குப் பின் தப்பிக்கும் கயமைத்தனம் கூட தோன்றாமல் போனதேன்? "நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டவரிடமா இப்படிப் பண்பில்லாமல் நடந்து கொள்வது? இன்னும் நிறைய எண்ணங்கள் தோன்றி சற்றே வதைத்து வாட்டுகின்றன.

உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?

நண்பர் அரசனுக்கு இந்த நிலை ஒரு முறை ஏற்பட்டது. என்னிடம் விவரங்களைச் சொன்னார்.

"கீழ்த்தரமானவங்க அப்படித்தான் இருப்பாங்க" என்றேன்.

"ஏன் அப்படிச் சொல்லுறே?" என்றார்.

"பின்னே என்ன சார்? ஒருத்தரை வெறுக்கிறோம்னா அதை வெளிப்படையா சொல்லலாமே? அந்த நேர்மை கூட இல்லாம... நீங்க என்ன தொந்தரவு கொடுக்கவா போன் செஞ்சீங்க? அப்படியே இருந்தாலும் நல்லா இருக்கீங்களானு கேட்ட உடனே இப்படியா நடந்துக்குவாங்க.. ப்ரூட்"

அரசன் புன்னகைத்தார். "என்னைக்கும் மனசுல பட்டதை சொல்லி இப்படியே இருடா என் ராசா" என்றார். பிறகு, "இதுல அவங்க செஞ்சது ஒண்ணும் கீழ்த்தரம் இல்லை அய்யா.. பிழை என் பேரில் தான்" என்றார்.

அரசனிடம் இந்தக் கெட்டப் பழக்கம் இருந்தது. எல்லாவற்றையும் சமன் தூக்கிப் பார்ப்பது. கேள்வியோடு பார்த்தேன்.

"இல்லய்யா.. அவங்களுக்கு நான் போன் செஞ்சது பிடிக்கலே.. பிடிக்காதவங்க போன் செஞ்சா நீ சொல்லுறாப்புல நாசமாப்போறவனேனு திட்டியோ.. இல்லே பலமா எச்சரிக்கை செஞ்சோ.. அவங்க பேசியிருக்கலாம்தான். ஆனா அப்படி எதுவும் செய்யாமே சட்டுனு போனை முகத்திலடிக்குறாப்புல வைக்குற கீழ்த்தரம் அவங்களுக்கு வந்ததுக்கு நான் தானே.. என்னுடைய குரல் தானே.. என்னுடைய பெயர் தானே காரணம்? அவங்க என்னை மறந்து இருந்த நேரத்துல என்னை நானே அவங்க நினைவுல நுழைச்சு அவங்க மனதுல வெறுப்பைத் தூவினது.. நான் தானே? அதனால அவங்க கீழ்த்தரமா நடந்துக்கிட்டாங்களேன்றதை விட, நான் அவங்களைக் கீழ்த்தரமா நடக்க வச்சுட்டனேனு எனக்கு வருத்தமா இருக்கப்பா.. அவங்களோட அன்றைய தின வாழ்க்கையிலே கீழ்த்தரமான பண்பற்ற நடத்தை வெளிப்பட நான் காரணமாயிட்டனேனு வருத்தம்"

"உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலே ஐயா" என்றேன்.

"ஒரு நாள் புரிஞ்சுக்குவே.. புரியாத போனாலும் பரவாயில்லே" என்றார்.

நண்பர் அரசனின் நினைவு நாள் அடுத்த மாதம் வருகிறது. "புரிந்து கொண்டேன் நண்பரே" என்று சொல்ல வேண்டும்.

ஒரு சிக்கலை, சிக்கலின் வேர் புரியாமல், என்னுடைய கோணத்திலேயே பார்த்து அடுத்தவர்களைப் பாதிக்குபடியான முடிவெடுக்கும் பழக்கத்திலிருந்து என்று விடுபடுவேன்?

நல்ல ஆசான்களை இழப்பது கொடுமையானது.


    'கோர்பரெட் ஸ்ட்ரேடஜி' பற்றி அவரவர் கிழிகிழி என்று கிழித்திருக்கிறார்கள். கிழிக்க எதுவும் இல்லையென்றால் கிழிந்ததை இன்னும் நையக் கிழித்திருக்கிறார்கள். என்னாலேயே நம்பமுடியவில்லை எனினும், நானும் இந்த வகையில் கொஞ்சம் கிழித்திருக்கிறேன்.

இது ரொம்ப சுளுவான விஷயம், யார் வேண்டுமானாலும் தங்கள் எண்ணங்களைச் சொல்லலாம். செயல்பாட்டில் தானே இருக்குது சூட்சுமம்? செயலில் இறங்க வேண்டியத் தேவையில்லாத வரையில், சொல் சித்தர்களுக்குக் குறைவே இல்லை. உதாரணத்துக்கு.. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போவதைத் தடுக்க எத்தனை பேர் என்னிடம் ஸ்ட்ரேடஜி சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? (ஏழாம் வாய்ப்பாட்டின் கீழ் வரிசையில் வருகிறது விடை).

எழுபதுகளில் ஜபேன், ஜெர்மனி, கேடர்பில்லர், கோமாட்சூ என்றார்கள். எண்பதுகளில் சைனா, ஆப்பில், மோடரோலா, என்றார்கள். தொண்ணூறுகளில் ஆப்பிலை வெறுத்தார்கள். நோகியா, மைக்ரோசாப்ட், இன்டெல், நெட்ஸ்கேப், அமெரிக்க ஐக்கிய சபை, கோர்பசேவ் என்றார்கள். முதல் பத்தில் டெல், மறுபடி ஆப்பில், கூகுல் என்றார்கள். பின் பத்தில் இதுவரை மீண்டும் சைனா, இஸ்ரேல், பேஸ்புக், வால்மார்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பத்தில் ஆப்பில், பேஸ்புக் எல்லாம் காணாமல் போகும்.. சைனா கூட தடுமாறலாம்.

எல்லாமே அந்தக் கணத்தின் அறிவை ஒட்டிப் பிறக்கும் சிந்தனைகள். பத்தே நிமிடங்களில் புஸ்வாணமாகும் சிந்தனைகள். அதனால் பெரும்பாலான ஸ்ட்ரேடஜி புத்தகங்களை நான் படிப்பதே இல்லை. முன்போல் ஓசியில் நிறைய புத்தகங்கள் கிடைப்பதில்லை. எப்பவாவது கிடைத்தாலும் சிரித்துக் கொண்டே அவசியம் படிப்பதாகப் பொய் சொல்லி அடுத்த வாரமே யாருக்காவது பரிசாகக் கொடுத்து விடுவேன்.

சமீபத்தில் படித்த புத்தகம் - தலைப்பு காரணமா, இல்லை இதை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய முன்பின் அறியாத பக்கத்து இருக்கையில் என்னுடன் பறந்த பயணியின் அறிவுக் களை காரணமா, தெரியவில்லை, படிக்கத் தோன்றியது, படித்தேன். அட! என் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமோ என்று எண்ண வைத்தது. கால் ஹேமரிக் மற்றும் ரிசர்ட் லூயிஸ் இணைந்து எழுதியிருக்கும் மேலாண்மைத் தந்திரம் பற்றிய புத்தகம் "Fish can't see water". இந்தப் புத்தகம் இன்னும் அமெரிக்காவிலேயே பரவலாக வெளிவரவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட போது ப.இ.பயணிக்கு மனதார நன்றி சொன்னேன்.

தானிருக்கும் நீர் நிலையைப் பற்றி அதில் நீந்தும் மீனுக்குத் தெரிய வாய்ப்பில்லை (என்று வைத்துக் கொள்வோம்). அதே போல் ஒரு வளரும்/வளர்ந்த நிறுவனத்துக்கு, அதன் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த (ஊழியர்களின்) பண்பு கலாசாரம் போன்றவற்றைப் பற்றிய பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கும் புத்தகம். ஒரு தந்திரம் பலன் தருமா தராதா என்பதைத் தீர்மானமாகச் சொல்லவே முடியாது என்ற துணிச்சலான கருத்தை உலகத்தின் பல நிறுவனங்களின் வரலாற்றை ஒட்டி எழுதியிருக்கிறார்கள். ஆசிரியரின் சொந்தக் கண்டுபிடுப்பான 'cultural dynamic model' என்னும் குழப்படிக் கருவியை வைத்து ஆறுவித கோர்பரேட் கலாசாரங்களை ஆராயும் சுவையான புத்தகம். ஒரு நிறுவனத்தின் உலகளாவிய வெற்றி தோல்விகளை அதனுள் நிரவியிருக்கும் கலாசாரக் கடலின் போக்கே தீர்மானிக்கிறது என்று நம்பும்படி சொல்லியிருக்கிறார்கள்.

எம்பிஏ படிப்பவர்களும் மேலாண்மைக் கலையில் விருப்பமுள்ளவர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக, பங்குச் சந்தையில் விளையாடுவோர், கம்பெனிகள் வாங்க விற்க என்று எல்.ஆர்.சுவாமி (இன்னும் இருக்கிறதா?) பாணியில் அலையும் இன்வெஸ்ட்மென்ட் ஆசாமிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அவர்களைத் தவிர நம்மைப் போல - சரி, உங்களைச் சேர்க்கவில்லை - என் போல, பொழுது போகாதவர்களும் படிக்க வேண்டிய பு.


    லர்சட்டைக்காக வைத்திருந்தேன். இங்கேயே வம்படித்து விடுகிறேன்.

1. ஹெர்பர்ட்-கேதரின் தம்பதியரின் முதல் குழந்தை 2009ல் இறந்தது. அதற்காகப் பெற்றோர்களுக்குத் தண்டனை கிடைத்தது. ஏன்? சளி, பசி, காய்ச்சலில் கிடந்த பிள்ளையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் கடவுளிடம், அதாவது கடவுள் அருளை நம்பி, சர்ச்சில் விட்டார்களாம். தினசரி பைபிலும் தோத்திரங்களும் படித்தார்களாம். பிள்ளை இறந்ததும் அது இறைவனின் ஆணை என்று இருந்தார்களாம். சும்மா விடுமா பிலடெல்பியா சட்டம்? பிடித்துத் தண்டித்தார்கள்.

அறிவு வந்ததோ ஆத்திகருக்கு? இல்லை. போன வருடம் இரண்டாவது குழந்தையும் இதே போல் இறந்தது.

கேட்டால் அதையே சொன்னார்கள் மறுபடி. பிணியும் மருந்தும் இறைவனின் ஆணை என்றார்கள். "பிடிச்சு உள்ளே போடுங்கடா ரெண்டு கேனக்.." என்றது பிலடெல்பியா அரசு.

"நிறுத்துங்கள் அரசே!" என்று ஒரு கொடி. 'தேரா மன்னா!' என்பவர் யாரென்று பார்த்தால்... மைத்ரி ஜெயராமன்! அட, நம்ம ஊர்க்கார லாயரு! என்ன சொல்றாரு? "ஆடாப்ஸி விவரங்கள் கிடைக்கும் வரை பெற்றோர்களை எதுவும் செய்யக்கூடாது" என்கிறார். ஓகே. பட்சவங்க இல்லியா? அப்பால தான் வளுக்குறாங்க தமிழம்மா. இன்னா சொல்றாங்க? "இந்தப் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பெரும் அன்பும் கனிவும் செலுத்தி வந்திருக்கிறார்கள்.. இவர்கள் குற்றவாளிகள் அல்ல". ம்ம்ம்.. யம்மா மைத்ரி.. காய்ச்சலான கொளந்தையை ஒரு தபா கூட டாக்டராண்ட இட்டுகினு போவலியாமே அவங்க? அதுங்களையா பெரும் அன்பும் கனிவும்னு சொல்றே? இன்னாம்மே நீ?

ஹெர்பர்ட் கேதரினுடன் மைத்ரியையும் உள்ளே தள்ள வேண்டும். முட்டாள்தனம் சட்டப்படி குற்றமாகாமல் போனதே, என்ன செய்ய?!

இவர்களின் சர்ச்சான 'first gospel church of philadelphia'வின் இணைய தளத்தில் "மருந்து மாத்திரைகளை நம்புவது பாவம்; யேசுவே குணமளிப்பவர், அவரை நம்புவது மட்டுமே உண்மையான ஆத்திகம்' என்று மே மாதம் வரை இருந்ததாம். (அடச்சே! ஒரு சான்சு போச்சே!)

என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில் இது போன்ற முட்டாள்தனங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.

2. சமீபத்தில் நடந்து முடிந்த வினாயக சதுர்த்தியின் விளைவாக நிறைய ஆத்திகர்கள் திருடர்களாக மாறியிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இன்டியாவில் வந்திருக்கும் செய்திப்படி நிறைய இடங்களில் ஆத்திகர்கள் எத்தனையோ ஆயிரம் வாட் கணக்கில் பொது மின்சாரம் திருடி வினாயகப் பெம்மானைக் கோலாகலமாக வழிபட்டிருக்கிறார்கள். திருட்டில் வினாயகருக்கும் பங்களித்திருக்கிறாகள் என்பது தெரிந்து செய்திருக்கிறார்களா? இல்லை 'வினாயகர் தானே,, நேரிலா வரப்போகிறார்?' என்ற சமாதானத்துடன் செய்தார்களா? ஆக மொத்தம் நாட்டுக்கு நஷ்டம்.

விடுங்க, அதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? அதை மோடி பாத்துக்குவாரு. இப்பத்திக்கு வினாயகரை நல்லா லைட் வச்சு கூட்டிக்கிட்டுப் போய் கடல்லே கரைச்சா போதும். என்னா சொல்றீங்க?

என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில்..
கொஞ்சம் இருங்க, யாரோ வேகமா வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றாப்ல இருக்குதே?


    மோடி என்றதும் நினைவுக்கு வந்தது. நரேந்திர மோடி நிச்சயம் வெற்றி பெறுவார் என்கிறார்கள். ந.மோடி வருவதால் இந்தியா "எங்கியோ போவப் போவுது" என்கிறார்கள். "என்ன செய்வார் மோடி?" என்று சிலரிடம் கேட்டேன். எல்லோரும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் (குஜராத்?) அப்படி இப்படி சொல்கிறார்களே தவிர, காங்கிரசை விட மோடி எந்த விதத்தில் மேலான ஆட்சியைக் கொண்டு வருவார் என்று யாராலும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஊழலை ஒழிப்பதிலிருந்து இஸ்லாமியரை விரட்டுவது வரை ஆளாளுக்குத் தோன்றியதைச் சொல்கிறார்கள்.

'இந்துக்களுக்கு நல்லது' என்ற காரணத்துக்காக மோடிக்கு ஓட்டு விழுந்தால் வெட்கக் கேடு.


    பாமா சிரியா பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை வைத்துப் பார்க்கையில் அமெரிக்காவை மட்டம் தட்டிவிட்டேனோ என்று தோன்றுகிறது. ஒபாமா உதவாக்கரை என்பதைச் சொல்ல வந்தேன்.. அவருக்கு ஓட்டுப் போட்டதை வைத்து அமெரிக்காவை எடை போடுவது சரியாகத் தோன்றவில்லை. சிரியா பிரச்சினை பற்றிய என் கருத்தை விரிவாகப் பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு சுருக்கம்: அசாத்தை ஒரு அரபு நாட்டுக்கும் பிடிக்கவில்லை. நேரடியாக எதுவும் சொல்ல/செய்ய முடியாத நிலையில், அமெரிக்காவின் பின்னால் நின்று போராடுகிறார்கள். இது தான் பிரச்சினை. இதை அமெரிக்கா எந்த அளவுக்குத் தனதாக்கிக் கொள்கிறது என்பதில் தான் சிக்கல்.

சரியான தலைமையில்லாமல் அதை அணுகுவதில் இருக்கிறது ஆபத்து.


    ஸ்திரேலியாவில் ஒரு பெண்மணி கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயித்திருக்கிறார். வேலை விஷயமாக வெளியூரில் தங்கியிருந்தாராம். படுத்துக் கொண்டிருந்த போது மேலே விளக்கு விழுந்து அடிபட்டதால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டார். வேலை நேரத்துக்கு அப்பால் விபத்து நடந்ததாகச் சொல்லி அவருடைய கம்பெனியும் இன்சூரன்சு கம்பெனியான காம்கேரும் மறுத்துவிட்டதால் வழக்கு தொடர்ந்தார். ஐந்து வருடங்கள் வழக்காடி ஜெயித்தார்.

என்ன பெரிய விசேஷம்? விளக்கு விழுந்த போது பெண்மணி படுத்துக் கொண்டிருந்தார் என்றாலும் அவர் மேல் இன்னொருவரும் படுத்துக் கொண்டிருந்தாராம். ஹிஹி.


    புதிரான புதிருக்கு விடை: ஆ, ஆ, ஈ. (சுவாரசியமான கதைகள்)

72 கருத்துகள்:

 1. //அவங்க என்னை மறந்து இருந்த நேரத்துல என்னை நானே அவங்க நினைவுல நுழைச்சு அவங்க மனதுல வெறுப்பைத் தூவினது.. நான் தானே? அதனால அவங்க கீழ்த்தரமா நடந்துக்கிட்டாங்களேன்றதை விட, நான் அவங்களைக் கீழ்த்தரமா நடக்க வச்சுட்டனேனு எனக்கு வருத்தமா இருக்கப்பா.. அவங்களோட அன்றைய தின வாழ்க்கையிலே கீழ்த்தரமான பண்பற்ற நடத்தை வெளிப்பட நான் காரணமாயிட்டனேனு வருத்தம்"//

  எவ்வளவு நல்ல மனிதர். பிறர் குற்றத்தையும் தன் குற்றமாய் பார்ப்பது எவ்வளவு உயர்ந்த குணம்.

  "//மருந்து மாத்திரைகளை நம்புவது பாவம்; யேசுவே குணமளிப்பவர்,//

  எங்களுக்கு நெருங்கிய குடும்ப நண்பராக இருந்தவருக்கு இரண்டு பெண் அவர்கள் முதலில் கத்தோலிக்க கிறித்தவர்கள், பின் பெந்தகொஸ்தேவாக ஆனார்கள். தீவிரமாக இறைவழிபாட்டில் ஈடு பட்டு இருந்தார்கள். பெரிய மகளுக்கு காய்ச்சல் வந்தது மருத்துவரிடம் போகாமல் வழிபாட்டிலே தான் சரிசெய்ய வேண்டும் என்று இருந்தார்கள்,அந்த காய்ச்சல் முடக்கு வாதாமாய் போய் இறந்து விட்டாள், அழகான பெண் அன்பான பெண் இப்போது நினைத்தாலும் அவள் நினைவுகள் வருத்தம் அளிக்கும்.

  பதிலளிநீக்கு
 2. அரசனைப் போன்ற மனிதர்களைக் காண்பது அரிது. தங்கள் நண்பரின் நினைவினைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 3. //
  "ஹலோ.. நல்லா இருக்கீங்களா..? நான் தான் பேசுறேன்" என்று பெயர் சொன்னதும், அரை நொடி தயங்கி முகத்தில் அடித்தாற் போல் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
  //
  இதே போல எனக்கும் நடந்திருக்கிறது. தொலைபேசியில் இல்லை,நேரில். தவிர்க்கிறார் என்பது கூட புரியாத அளவிற்கு மக்காய் இருந்திருக்கிறேன்.அது தான் என் வருத்தம்! அரசன் அளவிற்கு நான் பெருந்தன்மையானவள் அல்ல! அதற்கு இன்னும் கொஞ்சம் வருடங்கள் போகவேண்டும், பழயதை மறப்ப்பதற்கும், அனுபவங்களை சேகரிப்பதற்கும்.

  பதிலளிநீக்கு
 4. நல்ல ஆசான்கள் கிடைப்பதும் கடினம்...

  பதிலளிநீக்கு
 5. அவர் மேல் இன்னொருவரும் படுத்துக் கொண்டிருந்தாராம். ஹிஹி.//
  ஹூ ?
  எதுனாச்சும் சந்தர்ப்பம் பார்த்து சொல்லவேண்ண்டிய சில உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே
  நாமே சொல்லிவிடுகிறோம். ????


  "கட்டையிலே போறவனே.. இனி போன் செய்தால் செருப்பாலடிப்பேன்.

  நல்ல தூக்கத்தில் இருப்பவனை எழுப்பி, உங்களுக்கு ஒரு க்ரெடிட் கார்டு சாங்க்ஷன் ஆகியிருக்கிற து என்று சொல்பவர்களுக்கு, மார்கெடிங் காலர்களுக்கு இதை காலர் ட்யூனாக அல்லது ஆன்சரிங் மெஷினிலே ரிகார்டு பண்ணி வைத்துக்கொள்ளலாம் . நம்ம அட்ரஸ் புக் லே இல்லாதவங்க போன் செய்யும்போது மட்டும் ஒலிக்கும்படியான டிவைஸ் கிடைக்குமா ?

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 6. எல்லோரையும் போல எனக்கும் உங்கள் நண்பரின் பண்பு தவறை தனதாக நினைக்கும் விதம் பிடித்திருந்தது நல்ல மனிதர் எல்லோரும் இப்படி இருந்துவிட்டால் பிரச்சனையேயில்லை. நல்ல கலவை.

  பதிலளிநீக்கு
 7. "Fish can't see water" என்பது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கவிதையின் தீம்.

  அது யதேச்சையாய் நீங்கள் படித்த புத்தகத்தின் தலைப்பாயும் அமைந்திருப்பது சுவாரஸ்யம்.

  அப்பாதுரையின் அக்மார்க் பத்தி இது.

  பதிலளிநீக்கு
 8. சில வகை ஆத்திகர்கள் என்றில்லை; இயற்கை ஆர்வலர்கள் - அதாவது இயற்கை மருத்துவம், இயற்கை உணவு போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவர்களில் பலர், மருத்துவத்தை நம்பாமல் உடல் தானாகவே தன் குறைபாட்டைச் சரிசெய்து கொள்ளும் என்று சொல்கிறார்கள்/ செய்துகொள்கிறார்கள்.

  பணம் பிடுங்கும் (சில) மருத்துவர்களால் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் (விரும்பத்தகாத) இதுவும் ஒன்று.

  உதாரணத்திற்கு, சிறுநீர்த் தொற்று அல்லது சளியினால் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் அதற்கு மருத்துவம் தேவையில்லை; தொற்றைப் போக்குவதற்கான உடலின் எதிர்வினைதான் காய்ச்சல். ஆகவே மருந்தில்லாமல் சும்மா இருந்தாலே தானாகவே குணமாகிவிடும் என்று சொல்கீறார்கள். சிறிய அளவு தொற்று என்றால் இம்முறை சரி வரும். ஆனால், எது சிறிது பெரிது என்று பரிசோதித்தால்தானே தெரியும்.
  ________

  சென்ற திமுக ஆட்சியில் மின்சார வெட்டு நான்கு மணிநேரம் (மட்டுமே). ஆட்சி மாறினால், மின் தடை மாயமாகிவிடும் என்ற அதீத எதிர்பார்ப்பினால் கிடைத்தது 14 மணிநேர வெட்டு!!

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லாசெப்டம்பர் 22, 2013

  I cannot agree with your statement "'இந்துக்களுக்கு நல்லது' என்ற காரணத்துக்காக மோடிக்கு ஓட்டு விழுந்தால் வெட்கக் கேடு".

  Why? What is wrong with that? Every religious group has their own sponsoring governments in this world we live in. Your own America is like that? Ministers take oath on a bible, is it not? There is Israel for Jewish, Arab countries for Muslims, Europe and America for Christians, even smaller denominations like the Buddhists have sponsoring governments. Only Hindus do not have a sponsoring government. When we call our land the Hindustan, what is wrong in getting votes if it is good for Hindus? Educated people like you should not write like this. That is okay, we Hindus are most tolerant in the world. It is about time the world realizes what the power of unified Hindus can be. We need a leader who can guide us there. That is what we need. Our Dharma requires us to be tolerant and kind to everyone. Hindu is the only religious person in the world chanting happiness for everyone in our daily prayers. We need a Hindu leader, at least we need a Hindustani leader. Not some phirangi. Please know.

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா என்ற ஒரு பெயரில் ஒருவர் கருத்து தெரிவுத்துள்ளார் .

  அந்த கருத்தை பிரதிபலிக்க அவர்க்கு எல்லா சுதந்திரமும் உண்டு.
  யாரும் அவரை ஏன்யா இப்படி எழுதறே அப்படின்னு கேட்கப்போவதில்லை.

  அவர் கிட்டே ஒன்னு சொல்லணும். அப்பாதுரை சார் ஒபாமா பத்தி ஒரு வெண்பா எழுதினார். இன்னிக்கு மோடி பத்தி எழுதறார்.அது அவருடைய கருத்து சுதந்திரம். இந்த சுதந்திரம் அமெரிக்காவுலே இருக்கற அத்தனை பேருக்கும் உண்டு.

  இன் பாகட் , அப்பாதுரை சார் வலைலே அப்படி ஒரு சுதந்திரம் இல்லேன்னா, அந்த ஆஸ்த்ரேலியா சமாசாரம் வருமா ? இல்லைன்னா, என்னோட பின்னோட்டம் அதற்கு வருமா ??


  ஸோ , பெயரில்லா சாரே, உங்க பெயரை தைரியமா போடுங்க..

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 11. என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில் இது போன்ற முட்டாள்தனங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.

  ஆத்திகத்திலும் நடக்க வாய்ப்பில்லை. பரிக்ஷைக்குப் படிக்காமலேயே கடவுள் அருள் செய்வார்னு உட்கார்ந்திருக்க முடியுமா. இயன்ற அளவுக்குப் படித்துவிட்டுப் பின்னர் முதலிடத்துக்கோ, அல்லது, இன்னும் நல்ல முறையில் தேர்வு பெறவோ கடவுளிடம் விண்ணப்பிக்கலாம். அது போல் உடல் நோய்க்குத் தேவையான மருந்துகளை எடுத்துக் கொண்டு தான் கடவுளிடம் காப்பாத்துனு சொல்லணும். விரைவில் குணமாகட்டும்னு கேட்டுக்கலாம். பாதிப்புகள் இருக்கக் கூடாது; இத்தோடு போகட்டும்னு கேட்டுக்கலாம். :)))))

  //கொஞ்சம் இருங்க, யாரோ வேகமா வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றாப்ல இருக்குதே?//

  நான் இல்லை; இல்லவே இல்லை; வீட்டிலே விருந்தாளிங்க. அதனால் இணையத்துக்கே இப்போத் தான் வந்தேன். :))) நேத்தி உங்களை நினைவு கூர்ந்தோம். :)))

  பதிலளிநீக்கு
 12. மோடி பற்றிச் சொல்ல நிறைய இருக்கு. ஆனாலும் இப்போ நேரமும் இல்லை; இணையத்தில் தீவிர அரசியல் பேச வேண்டாம்னு ஒரு கொள்கை வைச்சிருக்கேன். :)))))

  பதிலளிநீக்கு
 13. எனக்கும் சில தொலைபேசி அழைப்புகள் செய்கையில் மேற்சொன்ன அனுபவங்கள் நடந்து மனம் வருந்தி இருக்கேன். :(( உங்க ஆசானைப் போன்ற உள்ளம் எனக்கும் கிடைக்கணும். :))))

  பதிலளிநீக்கு

 14. fish cant see water.

  இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் தங்களைப்பற்றி மேலும் இந்த்ப்புத்தகம் ஏன் எழுதினோம் எனச்சொல்லும் வீடியோ பார்த்தேன்.

  கார்ப்போரேட் ஸ்ட்றேடஜி பத்தி லட்சம் புத்தகங்கள் கடந்த 20 ஆண்டுகளில் வந்திருக்கின்றன. என்றால், அந்த புத்தகங்களை ஏதோ வேத வாக்காக எண்ணி செயல்படும் ஹெச். ஆர். மற்றும் நேரடி வணிக துறைகள் அந்த புத்தகங்களின் விற்பனையை பல மடங்காக அதிகரிக்கச்செய்கின்றன என்பது உண்மைதான்.

  இந்த புத்தகம் முழுமையாக இன்டர்னெட்டிலே கிடைக்கவில்லையெனினும் கொஞ்சம் கொஞ்சம் அங்கே இங்கெ
  துளவிப்பார்த்ததில் பெரிய புது சமாசாரம் ஒண்ணும் இல்லை எனத் தெரிகிறது.

  ஒரு கார்பொரேட் நிறுவனம் தனது தொழிற்சாலை நிறுவும் நேரத்திற்கு முன்பே எங்கு நிறுவுகிறோம், அங்கு இருக்கும்
  மக்களுடைய கல்சரல் பாக் க்ரௌண்டு என்ன, எந்த அளவுக்கு அந்த மா நிலத்தின் ஆட்சியாளர்கள் தமக்கு உதவியாக
  இருப்பார்கள் எனத் தெரிந்தபிறகே காலை விட வேண்டும்.

  ஆதலால் தான், பல கார்ப்பொரேட் நிறுவனங்கள் இந்தியாவிலே அந்தந்த மா நிலத்தில் முக்கியமானவர்களை சந்தித்து
  அண்ணாவின் தத்துவமான காட்ட வேண்டியதைக் காட்டி பெற வேண்டியதைப் பெறுகிறார்கள்.

  உலகத்தின் எந்த ஒரு பகுதியும் இந்த அண்ணா தத்துவத்திற்கு விதி விலக்கு அல்ல. உண்மையிலே சொல்லப்போனால், இந்த ஒபாமா கேர் கூட சரியாக இன்னமும் க்ரௌன்டு ஒர்க் செய்யவில்லை எனத் தோன்றுகிறது.

  இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

  ஃபிஷ் கான்ட் ஸீ வாடர் என்பதற்கு ஒரு எதிகல் மற்றும் பிலசாபிகல் ஆங்கிள் இருக்கிறது.

  நம்மில் யாருமே, எங்கு ஜனிக்கிறோமோ, எங்கு வளர்கிறோமோ, எங்கெல்லாம் உலவுகிறோமோ, எங்கே கடைசியிலே சங்கமமாகப்போகிறோமோ அதையெல்லாம் நாம் பார்க்கிறோமா ?
  ஒரு மண் பானையின் வெளி ப்பகுதியில் சுற்றி வரும் எறும்புக்கு எப்படி தான் அதே பானையின் விளிம்பிலோ விட்டத்திலோ சுற்றி த்தான் வருகிறோம் என்ற நினைப்பு இன்றி ஏதோ புதிய் இடத்திற்குச் செல்வது போல பயணித்துக்கொண்டே இருப்பது போல, நாமும் பிறந்து வளர்ந்து இவ்வுலகில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

  It will be so, as long as we are in our comfortable zone.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 15. /ஒரு சிக்கலை, சிக்கலின் வேர் புரியாமல், என்னுடைய கோணத்திலேயே பார்த்து அடுத்தவர்களைப் பாதிக்குபடியான முடிவெடுக்கும் பழக்கத்திலிருந்து என்று விடுபடுவேன்/ எதற்கு விடுபடவேண்டும்? ஏதோ ஒரு கண்ணோட்டத்திலிருந்து அணுகினாலேதானே சிக்கலும் வேரும்பிடிபடும்

  அண்மையில் பார்த்த கேட்ட பாடல்... உங்களுக்கு வயதாகிறது என்பதைக் காட்டுகிறது அப்பாதுரை
  . எனக்கு சில சமயங்களில் தோன்றுவது, ஒரு சிக்கல் என்று தோன்றுவ்தைக் கூறிவிட்டு ஒரு brainstorming session நடத்தலாம்.பெயரில்லாப் பேர்வழிகளும் கலந்து கொள்ளலாம் ஆனால் வெளிப்படையாகக் கருத்து கூறுபவர்களை வலையில் காண்பது அரிதாகிறது. ஒரு வேளை உங்கள் பதிவுகளில் அது நடக்கலாம்.

  பதிலளிநீக்கு
 16. ஆ,ஆ,இ புராண அறிவை அழப்படுத்தியது.
  'சிவாஜி ம்ம்...கிறார்'..அவரில் நடிப்பில், நீங்கள் எழுத்தில்.

  அவ்வப்போது அரசியல் திருவிழா/தெருவிழாக்களுக்கு கொள்ளை போகும் இந்த மின்சார திருட்டை கணக்கிட்டால், விநாயகர் கண்க்கில் அது சுண்டெலி சைஸ்தான்

  மோடி, நிச்சயம் சோனியா மாதிரி ஆட்சியை (ராபர்ட் வராத) குடும்ப லாபத்துக்காக பயன் படுத்த மாட்டார். அந்நிய கம்பனிகளுக்கு நம்ம கம்பனிகளை அடகு வைக்கமாட்டார். விவசாயம், இயற்கை சக்திகளில் கவனம் செலுத்துவார். அந்நிய கொள்கைகளின் இந்த கீழ்நிலை கொஞ்சம் உயர்த்தப்படலாம். பயங்கரவாத செயல்களுக்கு ஒரு தீர்க்கமான தீர்வு/முடிவு வரலாம். நாட்டின் வளங்களை, தனது நலத்திற்காக பயன் படுத்தி பல ஊழல்களை(எல்லா துறைகளிலும்) தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கும் இந்த சோனியா தலைமை தோற்கடிக்காவிடில், உலகின் ஏழை பணக்காரர் (எண்ணிக்கை - மதிப்பு) இடைவெளியின் உச்சமாக இதுவரை இருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் அந்த தகுதியை இந்தியாவிடம் இழக்கும் என்பது மட்டும் உறுதி. (சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் வென்றது செல்லாது என்ற வழக்கு நீதினன்றதில் இன்னும் இருக்கிறது, ஆனால் அவரோ, நாட்டின் மிகமுக்கிய துறைகளான உள்துறையையும், நிதித்துறையையும் இந்த காலகட்டத்தில் நிர்வகித்து ஆட்சியின் இறுதி கட்டம் வரை வந்துவிட்டார்!)
  "Fish can't see water" I will try that book for your reg.

  பதிலளிநீக்கு
 17. திருப்பாவையில் வரும் 'நானேதானாயிடுக' கொள்கையை ஒருவர் உண்மையில் கடைபிடிக்கிறார் என்பது வியப்பான தகவல். இராமாயண பரதனுக்குப் பிறகு அரசன் அவர்களோ?

  நீங்க அமெரிக்காவை மட்டம் தட்டவில்லை - இந்தியர்களுக்கு அட இவ்வளவுதானா அமெரிக்காவும் என்று தோன்றும்.

  மோடி வந்தால் என்ன ஆகும் தெரியாது. ஆனால் நிச்சயம் வரவேண்டும்!

  பதிலளிநீக்கு
 18. //நல்ல தூக்கத்தில் இருப்பவனை எழுப்பி...

  இந்த angle தோணவேயில்லையே..!

  அண்ணா தத்துவமா தம்பி தத்துவமா? இல்லே அம்மா தத்துவமா?

  //ஒரு மண் பானையின் வெளி ப்பகுதியில்...
  பிரமாதம் சூரி சார்.

  strategy பத்தி புதிதாகச் சொல்ல எதுவுமே இல்லை. மகாபாரதத்தில் இல்லாத strategyயே இல்லை என்பது என் கருத்து.

  இந்தப் புத்தகத்தின் கவர்ச்சியே புதிதாகச் சொல்ல எதுவும் இல்லை என்பதே. விடியோ எங்கே பிடிச்சீங்க? யுட்யூப்?
  இந்த புத்தகம் யுகேயில் கிடைக்கிறது. எனக்கென்னவோ இந்தியாவில் நிச்சயம் கிடைக்கும் என்றே தோன்றுகிறது. 2 guns படம் அமெரிகாவில் ரிலீசாகும் முன்பே சென்னையில் டிவிடியாகக் கிடைத்தது.


  பதிலளிநீக்கு
 19. சாமிக்குத் திருடினாலும் ஆசாமிக்குத் திருடினாலும் திருட்டு திருட்டு தானே வாசன்? கண்மூடித்தனம் பலவிதம் ;)

  பதிலளிநீக்கு
 20. //ஒரு brainstorming session நடத்தலாம்.
  interesting idea.

  பதிலளிநீக்கு
 21. //ஒரு மண் பானையின் வெளிப்பகுதியில்...//

  பிரமாதம் சூரி அவர்களே.

  //ஹிந்துயிசம் - தலைவர் //

  நான் இந்தியா திரும்பி வந்து இன்னும் ஒரு மாதம் ஆகவில்லை. இருந்தும் யார் வந்தாலும் நம்மை திருத்திக்கொள்ள நாமே தான் முன் வரவேண்டும். சிறு(நீர்) விஷயத்தில் கூட !!

  ஆயிரம் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் சென்னையிலும் / பெங்களுரிலும் / எங்கும் நூறு இன்ச் டிவி விற்கும் கடைகள் / ஷாப்பிங் மால் என்று கட்டும் விற்பனை தந்திரிகள் ஏன் அவர்களுக்கே கூட ஆ(மூ)த்திர அவசரத்திற்கு கழிவறை கூட கட்டிக்கொள்வதில்லை என்பது புரியாத புதிர்.

  அன்றைய காலம் மாதிரி இல்லாமல் எத்துனை எத்துனை பெண்கள் வேலைக்கு செல்கின்றார்கள்; இருக்கும் மாந்தர்களை பற்றி கூட சிந்தனை இல்லாமல் எங்கும் பேண்டை கழட்டி ஒண்ணுக்கு இருக்கும் ஆடவர்கள் போக்கு அசிங்கம். பெண்கள் மூத்திரத்தை அடக்க முடியும்போது ஆண்கள் ஏன் இப்படி.

  நாமும் யாராவது ஒருவர் நமக்கு நன்மை செய்வார் என்று நினைக்கின்றோமே தவிர நாம் நாமாக திருந்த எந்தவொரு சிந்தனையும் இல்லை.

  நான் எப்போதும் லஞ்சம் கொடுப்பதை விரும்பாதவன். இருந்தும் என்னுடைய யூ.எஸ் SSN (ஆதார் நம்பர் போல்) இந்தியா வரும்போது தொலைந்து போலீஸ் கம்ப்ளைன்ட் முதல், டிரைவிங் லைசென்ஸ் வரை மாமூல் கொடுத்தால் தான் என்று சராசரி தேவைகளுக்கே அல்லாட வேண்டி இருக்கின்றது.

  மாற்றம் தலைவர் அளவில் மட்டும் அல்ல - ஒவ்வொரு கட்டத்திலும் என்று என்னும்போது இந்தியாவை பொறுத்த வரையில் ரொம்பவே கஷ்டம் என்று தோன்றுகின்றது.

  பார்ப்போம். நம்மில் சகிப்புத்தன்மை ரொம்பவே அதிகம். என்னை பாதிக்காத வகையில் ஏதும் நடக்கட்டும் என்று வாழ்ந்து பழகிவிட்டோம்.

  பதிலளிநீக்கு
 22. அ­ர­சன் ­அ­வர்­க­ளின் ­க­ருத்­து ­­­பி­ர­மிக்­க ­வைத்­த­து. நல்­ல ­ஆ­சான்­தான் ­ஐ­யா! ­வி­நா­ய­க­ரின் ­பே­ரைச் ­சொல்லி ­மின்சா­ரம் ­மட்­டு­மா ­கொள்­ளை­யி­டப் ­ப­­டு­கி­ற­து? பி­ரம்ம்­மாண்­ட ­உ­ரு­வத்த்­தில் ­வெள்­ளி­யில் ­செய்­து, க­­ட­­லில் ­போட்டி­ருக்கி­றார்­கள். ஹும்...! ஆ­யி­ரம் ­ஏ­ழை­க­ளுக்­கு ­உ­ண­வ­ளித்தி­ருக்­க­லாம்!

  பதிலளிநீக்கு
 23. After reading this post I would like to say two things relating to this:
  One is:
  I attended my college-mate marriage in the year 1981. He is an atheist. He gave me the invitation hoping that I will not attend the marriage being from the Brahmin family. But I attended the marriage and the timing was between 9.00 a.m. to 10.00 a.m.
  which was a Raghu Kalam for theist. But he tied the nuptial knot after the Raghu Kalam was over only. When I entered the marriage hall, the first shock was Nadaswaram was played by Shaikh Chinna Moulana in the tape recorder. Above all, the reason for tying the mangalsutra given was : a VIP minister under whose guidance the marriage was to happen, got delayed in reaching the hall.
  Next : When private banks were introduced in India, I used to get lot of calls from the marketing people asking me to avail loan. I got damn annoyed one day and asked the caller whether I will get the loan termed as NON REPAYABLE LOAN
  for which she replied that she will come back to me after checking up with the concerned bank.

  பதிலளிநீக்கு
 24. I have been living in Gujarat since 1981. In those days, Garba was conducted in a very small scale and was also religiously. You can see small group of people dancing to the tune of Garba songs and the lighting was minimum. In some garbas, people used petromax lights and the photo of ambaji was kept in the middle and there was no pandal, shamiana, dais etc. In 1990s, corporate people made it a big fun fare and with pomp and they laid big dais, good lighting using halogen bulbs in large numbers etc., etc. After the 10 days functions were over, Gujarat Electricity Board which gave permission to use high voltage bulbs and tube lights, found it difficult to collect whopping sum of electricity bills. They were made to run from pillar to post to collect these dues and in some cases they were in dark whom to approach to collect the bills. This went on for some years.

  Later, GEB got woke up and when the garba organizers approached them for consumption of electricity (coincidentally Modi has become the Chief Minister for the first time) during garba, they were first asked to clear the pending bills with commercial rate of interest, then they were asked to deposit the amount that is likely to be equivalent to the consumption of electricity depending upon the usage of halogen bulbs etc. Similarly, the respective state governments may follow this procedure for Ganesh Utsav also.

  பதிலளிநீக்கு
 25. மோஹன் பரோடா கூறி இருப்பது சிரிப்பை வரவழைத்தது. நாத்திகர் ஏன் தாலி கட்டிக் கல்யாணம் பண்ணிக்கணும்? சும்மா பதிவுத் திருமணம் செய்திருக்கலாமே! அங்கேயே அவர் விழுந்துவிடுகிறாரே!:)))

  அடுத்த பின்னூட்டத்தில் மின் விநியோகம் குறித்த தகவல்களும் கர்பா குறித்த தகவல்களும் பயனுள்ளவை. இங்கே விநாயக சதுர்த்திக்கு மட்டுமின்றி அனைத்து மதங்களின் விழாக்கள், கண்காட்சிகள், கட்சிப் பொதுக் கூட்டங்கள், போன்றவற்றிலும் இப்படிக் கடைப்பிடித்தால் மின்சாரச் சிக்கனம் மட்டுமின்றி மின் வாரியம் நஷ்டத்திலும் இயங்காது.

  பதிலளிநீக்கு
 26. @மோஹன் பரோடா, குஜராத்தில் எங்கே?

  பதிலளிநீக்கு
 27. //என்னதான் சொல்லுங்கள், நாத்திகத்தில் இது போன்ற முட்டாள்தனங்கள் நடக்க வாய்ப்பே இல்லை//

  நாத்திகமே ஒரு முட்டாள்தனம். இதில் முட்டாள்தனங்களே நடக்க வாய்ப்பே இல்லையாம்!

  அப்பாதுரை, ஆத்திகத்துக்கும் அயோக்கியத்தனத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் முடிச்சு போட்டு சாமர்த்தியமாக "நாத்திகத்தில் இது போல முட்டாள்தனம் நடக்க வாய்ப்பே இல்லை" என்கிறீர்கள். வழக்கம் போல ஹிந்துக்களை பற்றி பரிகாசிக்காமல் இந்த முறை கிறித்துவர்களை தாக்கியிருக்கிறீர்கள்.

  அது இருக்கட்டும், ஏன் ஒரு முறை கூட ஜிஹாதி கும்பலை பற்றி எழுதவில்லை? பயமா? அது போல இருந்தால் தான் 'Secular' என்ற பெயர் வருமா? போகிற போக்கை பார்த்தால் நம் ஊரில் உள்ள 'பகுத்தறிவு பாசறையில்' இருந்து வந்த திராவிட குஞ்சுகளை போல நீங்களும் ஆத்திகர்களை 'அப்கான் கணவாயிலிருந்து வந்தேறிய ஆரியர்கள்' என்று கூறாத வரை ஆறுதல்.

  திருக்கடையூர் அபிராமி உங்களை காப்பாள். அவளை தாக்கி எழுதினாலும் காப்பாள். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 28. @Expatguru, பதறாதீங்க. அவர் கருத்து அவருக்கு. அதோடு இறை நம்பிக்கை என்பது மூட நம்பிக்கையாகப் போவதை நாமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதுக்கும் ஆத்திகம் அல்லது ஆன்மிகம்(?) க்கும் சம்பந்தமே இல்லை. அது வேறு, இது வேறு. உயிரோடு விளையாடும் இப்படியான மூட நம்பிக்கை கண்டிக்கத்தக்கதே.

  பதிலளிநீக்கு
 29. என்ன expatதலை இப்படி சொல்லிட்டுப் போயிட்டீங்க? ஜிகாதிங்க கிட்டே.. எனக்கு.. பயமா?

  இருக்காதா பின்னே? அரைகுறைன்னாலும் intellectங்கற பெருமையும் கர்வமும் உண்டுங்க எனக்கு - உயிர் துச்சமுன்னாலும், முட்டாள் கையில போறதை விட முரணான அவமானம் வேறே எதுவுமில்லே. முட்டாளுடன் சாவதை விட முட்டாளுடன் வாழ்வது மேல்னு சேக்குபியர் சொல்லியிருக்காரு. (நான் சொன்னதா சொன்னா யாரும் ஆஹானு சொல்ல மாட்டாங்க). இன்னிக்கே ஜிகாதி ஒருத்தர் என் கிட்டே 'அல்லா கரீம்'னு சொல்லச் சொல்லட்டுமே.. அதைச் சொல்லி, கூடவே சீறாப்புராணத்தையே தலைகீழா சொல்லுவேனில்லா?

  'நாத்திகத்தில இது போன்ற'னு தானே சொல்லியிருக்கேன்? ஆத்திக முட்டாள்தனம்/முட்டாள்தன ஆத்திகம் போலவே நாத்திகத்திலும் நிச்சயம் உண்டு. நாத்திகம் முட்டாள்தனம்னு நீங்க சொல்றது சரிதான். அஃது உள்ளங்கை நெல்லிக்கனியன்னத் தெளியற்பாலதன்றோ? கொஞ்சம் யோசிச்சீங்கன்னா நான் ஏன் அப்படிச் சொல்லுறேன்னு புரிஞ்சுடும். புரியலின்னா மருவதியா கலர்சட்டை படியுங்க!

  முட்டாள்தன நாத்திகத்துக்கு பரோடாக்காரர் உதாரணம் கொடுத்திருக்காரு. (PHONE நம்பர் கேட்டா தரக்காணோம் :-).

  என்னதான் சொல்லுங்க.. மறுபடியுமா.. கீதாம்மா என்னை விட்டுக்கொடுக்கவே மாட்டாங்க. நன்னி ஹை.

  பதிலளிநீக்கு
 30. மோகன் சார் சொல்லியிருப்பது சிந்திக்க வைக்கிறது. காலைவரை சிந்திச்சுட்டு திரும்ப வரேன்.

  பதிலளிநீக்கு
 31. //முட்டாளுடன் வாழ்வது மேல்னு சேக்குபியர் சொல்லியிருக்காரு. //

  ஒரு அறிந்தவன் இன்னொரு அறிந்தவனை அறிந்தவன் என ஒப்புக்கொள்ள மாட்டான். ஆனால், ஒரு முட்டாள் இன்னொரு முட்டாளை முட்டாள் என சொல்வதற்கு வெகு நாட்கள் ஆவ தில்லை.

  ஒன்று மட்டும் தெரிகிறது. நானும் அந்த சேஷப்பு அய்யரை படித்து இருக்கிறேன்.

  ஒரு முட்டாளுக்கு தானும் முட்டாள் எனத் தெரிந்து கொள்வது
  முட்டாள் களோடு வாழ்ந்து பார்த்தால் தான் சாத்தியம்.

  அது இருக்கட்டும். ஒருவரை முட்டாள் என சொல்வதற்கு முன்னால், முட்டாள் என்பது அல்லது முட்டாத்தனம் என்பது ஒரு awful spectrum எனப்புரிந்து அந்த ஸ்பெக்ட்ரம் லே நம்ம கூட எங்கே யோ இருக்கோம், இருக்கத்தான் செய்கிறோம் என்று புரிந்துகொள்வது ஒன்று தான் முட்டாள்தனம் இல்லை.

  belief systems வேறு foolishness வேறு.

  மேலும், ஒரு எண்ணம் , எண்ணத்தொடராக மாறி, பின் நம்பிக்கை எனும் படிக்கு வருவதற்கே அதாவது belief என்னும் stage வருவதற்கே குறிப்பிட்ட காலம் ஆகும். அதற்குப்பின் இந்த belief இன்னமும் பதப்பட்டு,பக்குவமாகி, ஒருவனுடைய புத்தியுடன் இணையும்பொழுதுதான் அது faith .

  இந்த faith என்ற நிலையில் இருந்து ஒருவன் பேசும்பொழுது ஒரு
  genuineness or honesty in what one believes to be true கேட்பவனுக்கே புரியவரும்.

  கேட்பவனுக்கு கேட்டது புரியவில்லை he lies beyond the realm of understanding என்று இருப்பின் அவனுக்கு சொல்பவன் முட்டாளாகத்தான் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  உதாரணத்துக்கு :

  1. புத்தர் . போதி மரத்துக்குக் கீழெ உட்கார்ந்திருந்தபோது ஞான வெளிச்சம் கிடைத்தது.

  2. ராமகிருஷ்ணர், நரேந்திரனிடம் நீ தூங்க துவங்கும் கணத்திலே என்ன காண்கிறாய்?

  நான் இரு புருவங்கள் இடையே ஒரு ஒளி வெள்ளம் காணுகிறேன். ..இது நரேந்திரன் சொன்னது.

  இது இரண்டுமே சுப்பு தாத்தாவுக்கும் புரியல்ல. அப்பாதுரைக்கும் புரியல்ல. சான்ஸே இல்ல அப்படின்னு சொல்ல மாட்டேன்.

  அப்ப என்ன நினைக்க வாய்ப்பு இருக்கிறது ?

  நம்ம முட்டாள் அப்படின்னு நினைப்பதற்கு சொந்த கௌரவம் இடம் கொடுக்காது. ( Fish cant understand water, u know. We never really understand the strata where we stand)
  ஸோ , அந்த இரண்டு பேரு ஒன்னு பொய் சொல்றாங்க, இல்ல அப்படின்னா முட்டாளுங்க அப்படின்னு நினைப்பதற்கும் நிறைய மெண்டல் ஸ்பேஸ் இருக்கு.

  நான் சொல்றது முட்டாத்தனமா இருக்கே அப்படின்னு நீங்க ( நீங்க அப்படிங்கறது அப்பாதுரை இல்ல )முடிவு பண்ணிட்டீக இல்லயா...

  So back to Square No.1

  சுப்பு தாத்தா.
  For a change, pl visit
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
 32. @expat guru சார்:

  சவுதியில் முஸ்லிமல்லாதவர்களை எரிக்க அனுமதி இல்லை என்பது தெரியும்; ஆனால் புதைக்க அனுமதி இல்லை என்பது புதிய தகவல். ஏனெனில், நான் கேள்விப்பட்டவரை, இறந்த முஸ்லிமல்லாதவர்களை (யாருக்கும் சொந்தமில்லாத இடத்தில்) புதைக்க அனுமதி உண்டு. அவ்வாறு புதைக்கப்பட்ட நிகழ்வுகளும் அறிவேன் - அதிலெல்லாம் இதுபோன்று எந்தப் பிரச்னைகளையும் கேள்விப்பட்டதில்லை.

  //இறந்த குழந்தையை உடனடியாக இந்தியாவுக்கு எடுத்து செல், இல்லையென்றால் உன்னை சிறையில் அடைத்து விடுவோம் என்று போலீஸார் மிரட்டினார்கள்.//

  போலீஸார் ஏன் மிரட்ட வேண்டும்? அவர், உடலை ஊருக்கு எடுத்துச் செல்ல அல்லது புதைக்க ஏற்பாடு செய்யும் வரை மார்ச்சுவரியில் உடலை வைத்திருக்க மருத்துவமனை மறுக்க முடியாதே?

  அவரால் பணம் புரட்ட முடியவில்லை; நண்பர்களுமா உதவவில்லை? சவுதியில் இருக்கும் தமிழ்ச்சங்கங்கள், இந்திய சமூக ஆர்வலர்களிடம் எடுத்துச் சென்றிருந்தால், அவர்கள் உரிய உதவி செய்திருப்பார்களே? அவர்களால் செய்யப்பட்ட நிறைய நல்ல காரியங்களைப் பத்திரிகையில் படித்திருப்பதால் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
 33. வெளிநாட்டில் புழங்கும் இந்தியச் சங்கங்கள் பெரும்பாலும் இக்கட்டான உதவிகள் என்றதும் ஒதுங்கிவிடுவதையே கவனித்திருக்கிறேன். தனிப்பட்ட மனிதர்கள் சிலர் உதவுகிறார்கள். (சங்கம் என்பது பொது அமைப்பு என்பதும் காரணமாக இருக்கலாம்). தம்மாமில் அவதிப்படும் நாதியற்ற இந்தியர்களைப் பற்றிப் படித்தும் செய்திகள் பார்த்தும் சமீபத்தில் சிலரை நேரில் பார்த்தும் நொந்தேன். எந்தச் சங்கமும் இவர்களுக்கு உதவி செய்வதாகத் தெரியவில்லை - சங்கம் தொலையட்டும், இந்திய அரசாங்கம் கூட வாளாவிருப்பது வியப்பு. தமிழக அரசு கூட எதுவும் செய்யாதிருப்பது வருத்தம்.

  'தவறு யார் மீது?' என்பது ஒருபுறம்; ஒருவர் மீது தவறு இருந்தாலும் அவரை மனிதாபிமானத்துடன் நடத்துவது இன்னொரு புறம். சவுதியில் மனிதாபிமானத்துக்குப் பஞ்சம் என்பது மிக மிக வருந்த வைத்தது. இன்னொரு மகிஆ தேசத்தில் ஒரு வாடகைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தேன். திடீரென்று டிரைவர் வண்டியை நிறுத்தினார். "சார்.. அதோ ஒரு அம்மா நிக்கிறாங்க.. அவங்களை முன் சீட்டுல ஏத்திக்கிட்டா பரவாயில்லையா?" என்றார். நான் தயங்கியதும், "அவங்களுக்கு உதவி தேவைப்படுது போல" என்றார். என் பதிலுக்குக் கூடக் காத்திராமல் நிறுத்தி ஏற்றிக் கொண்டார். அந்தப் பெண்மணி நியாயமான முறையில் இந்தியாவிலிருந்து வீட்டு வேலை செய்வதற்காக வந்தவராம் - ஆனால் வீட்டு ஆட்கள் அவரை முரட்டுத்தனமாக அடித்தும் சிகரெட்டால் தலையில் சுட்டும் துன்புறுத்தியிருக்கிறார்கள். டிரைவர் அவரை இந்திய தூதரகத்தில் இறக்கிவிட்டு யாருக்கோ தொலைபேசி வரவழைத்து ஒப்படைத்தபின் நகர்ந்தார். அந்தப் பெண்மணி எதுவுமே சொல்லவில்லை. டிரைவர் தான் பின்னர் விவரங்கள் சொன்னார்.. "சார் அந்தம்மா கையிலயும் நெத்திலயும் சுட்டிருக்குது பாத்தீங்களா சார்?" என்றார். நான் கவனிக்கவேயில்லை என்பதே உண்மை. she was distressed என்பது மட்டுமே எனக்குப் புரிந்தது. "நானும் வீட்டு டிரைவர் வேலைக்குத்தான் மாயரத்துலந்து வந்தேன் சார்.. மதம் மாற்லின்னா சவுதி வீடுங்கள்ள ரொம்ப அடிப்பாங்க சார்.. இஸ்லாத்துக்கு மதம் மாறிட்டேன்.. ஒரு infidel இஸ்லாத்துக்கு மாற வச்சா ஒரு முஸ்லிமுக்கு சொர்க்கத்துல செல்வாக்கு கிடைக்கும்" என்று என்னென்னவோ சொன்னார். கூடவே "பிழைப்புக்காகனு எடுத்துக்க வேண்டியது தான் சார்" என்றார். மதம் மாறச்சொல்லி என்னை அடிக்காமல் விட்டாமல் சரி என்ற பதைப்புடன் ஊரைப் பார்க்கக் கிளம்பினேன்.

  extremists are everywhere. but they are closer to god and religion என்பதே என் கருத்து.

  பதிலளிநீக்கு
 34. சுவாரசியமான கருத்து சூரி சார். ஒரு பதிவுக்கான கரு.

  முட்டாளுக்குத் தான் முட்டாள் என்பதும் தெரியாது; அடுத்தவன் முட்டாள் என்று வேண்டுமானால் நினைத்துக் கொள்வார். இது என் அனுபவம்.

  முட்டாள் அறிவாளி என்பவை relative states என்றாலும், என் ஆணவத்துக்குட்பட்ட பார்வையில், முட்டாளை அறிவுத்தளத்துக்குக் கொண்டுவர விடாமல் முயன்று நான் முட்டாளான அனுபவம் உண்டு.

  பதிலளிநீக்கு
 35. குஜராத்தில் சீர்மை உண்டாகக் காரணம் மோடியா இல்லை மக்களா? அத்தனை காலம் பணம் கட்டாமல் ஓபி அடித்த garba (அப்படின்னா என்ன மோகன்?) கூட்டம் திருந்துவானேன்?
  இந்திய மக்கள் அப்படி மாறுவதற்கு catalystஆக மோடி என்ன செய்ய வேண்டும்? முடியும்? சாய்ராம் கோடிட்டிருப்பதைப் போல் திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்.. என்பதில் கொஞ்சம் உண்மையிருப்பதாகத் தோன்றுகிறது.

  வாசன் கருத்து இன்னொரு பதிவுக்கான கரு. இந்தியாவின் அரசியல் மற்றும் தொழிலதிபர்களின் சரித்திரத்தைப் படித்தால் பெரும்பாலும் வெளிநாட்டு dna என்பது புரியும். ஜிடி நாயுடு போன்றவர்கள் வெளிவராமல் போனதற்கு யார் காரணம் என்று அடிக்கடி நினைத்ததுண்டு. காலம் மாறிவிட்டது - இப்போது தொழிலில் அரசியலுக்குப் பதில் அரசியல் தொழிலானது தான் மிச்சம். இந்தக் கூத்தில் சன் குழுமம் முந்தியிருப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மோடி வருவதால் இந்திய கோர்பரேட் உலகம் சற்று சரியும் என்பது என் கணிப்பு. பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 36. ஊழலை எத்தனை மோடி வந்தாலும் ஒழிக்க முடியாது என்றே நினைக்கிறேன். முழு மெஜாரிடியுடன் வந்தாலொழிய அவர் கூட்டணி எத்தனை நாள் பதவியிலிருக்கும் என்பது ?. பாதி நேரம் கூட்டணியைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்தும் இந்திய அரசியல்வாதிகளின் இடையே மோடி அப்படியொன்றும் வித்தியாசமாக நடந்து கொள்ளப் போவதில்லை.

  'எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்று சாட்டையடித்துப் பாடியவரை நம்பி பல ஓட்டளித்தவர்களில் நானும் ஒருவன். அதை விடுங்கள். எட்டு வருடங்களுக்கு முன் என் கொள்கைகளுக்குப் புறம்பான ஒரு அரசியல்வாதி அமெரிக்க அதிபராக என்னால் முடிந்த ஒரு ஓட்டு போட்டவன். ஒரு முறை ஏமாந்தால் பாவம். பலமுறை ஏமாந்தால் பாமரம். நான் பாமரன்.

  பதிலளிநீக்கு
 37. அப்பாதுரைஜி:

  சங்கங்களைவிட தனிமனிதர்களே (சமூக ஆர்வலர்கள்) அதிகம் உதவுகிறார்கள் என்பதும் உண்மையே. மேலும், ஒருவருக்குப் பிரச்னை என்று வரும்போது சட்டப்படியாக உதவ வேண்டியவர்களைவிட, ஏன் உறவுகளைவிட, நட்புகளே முன்னால் நிற்பார்கள். அதிலும் உறவுகளற்ற சூழலில் வாழும் வெளிநாட்டு வாழ்க்கையில் நண்பர்களே எல்லாம் எனலாம்!!

  (இங்கே தகவலுக்காக: ரியாத் தமிழ்ச்சங்கத்தோடு தொடர்புடைய கேவிஆர் ராஜா (http://kvraja.blogspot.ae/2009/12/blog-post_23.html) மற்றும் சபா மலர் (http://www.pettagam.blogspot.ae) ஆகியோர் பதிவர்களே)

  ஒரு உடலை அதற்கான இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்வரை மருத்துவமனையில் மட்டுமே வைகப்படவேண்டும் என்பதாலும்; ஒன்று நாட்டுக்கு அனுப்பவேண்டும் அல்லது இங்கு புதைக்கவேண்டும் என்பதே அங்குள்ள நடைமுறை விதி என்பது அறியப்பட்டதே என்பதாலும் போலீஸார் மிரட்டினார்கள் என்பது எனக்கு ஆச்சரியத் தகவல். விபத்துகளில் இறந்த எத்தனையொ உடல்கள் மார்ச்சுவரிகளில் மாதக் கணக்கில் கோரப்படாமல் இருக்கும்போது இக்குழந்தையின் உடலையா வைக்க முடியாது என்று மிரட்டுவார்கள்? தமிழகத்தைச் சேர்ந்த விபத்தில் இறந்த தொழிலாளியின் உடல் பல மாதங்களுக்குப் பின்னர் இந்தியா வந்து சேர்ந்ததாகப் பத்திரிகைகளில் வாசித்துள்ளேன்.

  //வீட்டு ஆட்கள் அவரை முரட்டுத்தனமாக அடித்தும் சிகரெட்டால் தலையில் சுட்டும் துன்புறுத்தியிருக்கிறார்கள்//

  எதற்குமே இரு பக்கங்கள் உண்டு. அரபி வீடுகளில் (மட்டுமே) சித்திரவதைக்குள்ளாவதாகச் சொல்லப்படும் பணிப்பெண்கள், தம் சக நாட்டவரின் வீடுகளில் வேலை பார்க்கும்போது மட்டும் வீட்டுக்காரர்களைச் சித்திரவதை செய்வது ஏன்? ஃப்ரீ விஸாவில் என்னிடம் வேலை செய்தவர்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர், ஒரு தமிழ்ப்பெண்ணை என் செலவில், பல தடங்கல்களுக்குப் பிறகு, விஸா எடுத்து வேலைக்கு வைத்திருந்தேன். அவள் படுத்திய பாட்டில் “ஆணியே புடுங்க வேண்டாம்” என்று மொத்தமாக எல்லாத்தையும் விட்டுட்டு வீட்டில் இருக்கிறேன் இப்போது. இது எனது கதை மட்டுமல்ல, இங்குள்ள பலப்பல இந்தியப் பெண்களின் கதை. எனது பதிவில் “கத்தாமா” என்ற தலைப்பில் எழுதியுமிருக்கிறேன்.

  மதமாற்றம் குறித்து - என்னிடம் முதன்முதலில் (ஃப்ரீ விஸாவில்) வேலை பார்த்த ஸ்டெல்லா - கிட்டத்தட்ட 30 வருடங்கள் அதே அரபியிடமே வேலை பார்த்தும் இன்னும் “ஸ்டெல்லா”வாகவே இருக்கிறார். இப்பவும் வெள்ளிக்கிழமைகளில் சர்ச்சுக்குத் தவறாமல் செல்வார். ஆனால் அவரை ஏமாற்றியதெல்லாம் அவரின் உடன்பிறப்புகளும், பெற்ற மகள்களுமே!!

  இதன்மூலம் அரபிகள் எல்லாருமே நல்லவர்கள் என்று சொல்ல வரவில்லை; எல்லாருமே கெட்டவர்களுமில்லை என்கிறேன்.

  பதிலளிநீக்கு
 38. // 'அல்லா கரீம்'னு சொல்லச் சொல்லட்டுமே.. அதைச் சொல்லி, கூடவே சீறாப்புராணத்தையே தலைகீழா சொல்லுவேனில்லா?//

  தப்பித்தவறி ஜிஹாதியிடம் சீறாப்புராணம் தெரியும்னு சொல்லிடாதீங்க. அப்புறம் வெட்டியபிறகும், ஜீப்பில் கட்டி இழுத்துச் செல்லும் ‘இஸ்பெசல்’ ட்ரீட்மெண்டும் கிடைக்கும்!! :-))) சீறாப்புராணம் இலக்கியச் சுவைக்காக கற்பனைகளால் மிகைத்து எழுதப்பட்ட ஒரு காவியமே. :-)))))

  பதிலளிநீக்கு
 39. Hats Off HussainAmma, நடுநிலை, நடுநிலை என்றால் என்னனு தெரியாத குழப்பமான சமயம் அதைத் தெளிவாக்கிய உங்களுக்கு ஒரு பெரிய "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ" போட்டுக்கறேன். :)))))

  பதிலளிநீக்கு
 40. //முட்டாளை அறிவுத்தளத்துக்குக் கொண்டுவர விடாமல் முயன்று நான் முட்டாளான அனுபவம் உண்டு.//

  எந்த முட்டாளை நீங்க அறி வு த்தளத்துக்குக் கொண்டு வர விடாது முயற்சி பண்ணி பின் நீங்களும் முட்டாளான அனுபவம் உண்டு என சொல்கிறீர்களோ ,

  அந்த நபரிடம் கேட்டால் நீங்க சொல்வதை யே தான் அவரும் சொல்வாரு.

  இது என்ன காரணம் அப்படின்னு கேட்டீங்கன்னா, நாம(me included ) நம்ம இருக்கற plane ஐ கேட்டியா பிடிச்சுகினு இருக்கோம். எங்க ஒன்னு ரண்டு செங்கல் உதிர்ந்தா கூட கட்டடம் பூரா சப் ஜாடா விழுந்துடுமோ அப்படின்னு பயம்.

  இதெல்லாம் கிடக்கட்டும். காரியத்துக்கு ஆகாத குப்பை.

  அந்த சீறாப்புராணம் என்ன ? எதப்பத்தி சொல்லுது ?

  full ஆ படிச்சிருப்பிகள்லே... ஒரு நாலு பக்கம் எழுதுங்களேன்.
  அப்பறம்
  முதல்லே பேசினதைப் பத்தி பேச ஆரம்பிக்கலாம்.

  சுப்பு தாத்தா.
  in all humility.

  பதிலளிநீக்கு
 41. வேலை செய்பவர்கள் வீட்டுக்காரர்களை சித்திரவதை செய்கிறார்களா? இதென்ன கூத்தாக இருக்குதே?

  நல்ல வேளை சொன்னீங்களே ஹூஸைனம்மா.. சீறாப்புராணம்னா என்னாங்க?

  பதிலளிநீக்கு
 42. இல்லை சூரி சார்; இந்தக் குறிப்பிட்ட முட்டாள் வேறே டைப்பு.

  பதிலளிநீக்கு
 43. எல்லா கருத்துகளையும் படித்தாச்சு.
  நல்லதொரு விவாதம்.

  எப்படியோ நல்லது நடந்தால் சரி
  cross my fingers.
  அலுத்துவிட்டது கரப்ஷன்.

  பதிலளிநீக்கு
 44. சரோஜாதேவி சிவாஜியைச் சொல்லாமல் விட்டேனே.
  எங்கள் பதின்ம வயசுப் பாட்டு இது.
  சிவாஜிம்ம்ம் ங்கறது நான் பேச நினைப்பதில். இதில் வெறும் சின்னப் புன்னகையும் தலையாட்டலும் தான். துளிக்கூட தன் ஊனமுற்ற காலை மறக்காமல் நடப்பார்.!!!!!!!

  பதிலளிநீக்கு
 45. Garba means - celebration of navrathri festival - In Tamil Nadu, they decorate the steps with dolls which is called Golu - In Mysore it is celebrated with joy and gaiety and in Calcutta Durga pooja is celebrated for ten days. Similarly, in Gujarat, Garba means group of people dancing to the tune of divine songs (mostly they are like our Amman Padalgal) and this dance starts around 9.00 P.M. and goes upto 2.00 P.M. People from all walks of like and all streets dance during this Garba. On ninth day, it is called Dandia (dandia means KOLLATTAM in tamil. You need to dance according to the tune and wordings of the garba songs. To know more about this and for a live demonstration, please come to my house, as navrathri is round the corner.

  My mobile number is 097243 39797

  பதிலளிநீக்கு
 46. Regarding Modi as a prime minister, my comment is :
  My bosses are expected to control around 100+ branches in Gujarat spread over 300 KMs. Most of them have failed and on being asked, why they have failed and how they have been given this big position, the reply was : as a Branch Manager, he has handled a big branch and made it number 1 in India. Since he was successful as a Branch Manager of a big branch, he was entrusted with such a big position.
  Same goes with Mr. Narendra Modi also.

  பதிலளிநீக்கு
 47. //"நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டவரிடமா இப்படிப் பண்பில்லாமல் நடந்து கொள்வது? இன்னும் நிறைய எண்ணங்கள் தோன்றி சற்றே வதைத்து வாட்டுகின்றன//

  அது சரி, ஆனால் நீங்கள் என்ன அவர்களுக்கு செய்தீர்கள் ? அதை சொல்லுங்கள் ?

  அதே போலே, அந்த காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் கடவுள் கதைகளை எழுதி நம்மை மாசு படித்திவிட்டார்கள் என்று தோன்றுகின்றது.

  சிவனுக்கும் / பார்வதிக்கும் - முருகன் / பிள்ளையார் ? அவர்களுக்கு பிறந்த கடவுள்கள் என்று ஏன் இல்லை ? முருகனுக்கு இரண்டு பெண்டாட்டி - ஏன் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையா ?

  ஐயா, அட்லீஸ்ட் ராமனுக்கு பிள்ளைகள் உண்டு, கிருஷ்ணனுக்கு ஏகோபித்த மனைவிகள் - ஏன் அவர் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லையா ?

  கதைகள் எழுத ஆள் இல்லை போலும் !

  என் அப்பாவும், என் தாத்தாவும் கர்ப்பத்தடை செய்யாமல் இப்போது இந்தியாவில் எங்கும் மக்கள் கூட்டம் என்று பார்க்கும்போது கடவுள்கள் கதை ஏன் அதோடு நின்றுவிட்டது ?

  நாம் குழந்தைகளாய் பகுத்தறிவுடன் கேள்வி கேட்டு இருந்தால், சப்பென்று கன்னத்தில் போட்டு இருப்பார் என் அம்மா / அம்மா !!

  பதிலளிநீக்கு
 48. //வேலை செய்பவர்கள் வீட்டுக்காரர்களை சித்திரவதை செய்கிறார்களா? இதென்ன கூத்தாக இருக்குதே?//

  @அப்பாதுரை, மத்தியக் கிழக்கு நாடுகளில் எப்படியோ தெரியாது. ஆனால் எனக்கு இந்த விஷயத்தில் ரொம்பவே அநுபவம் உண்டு. வீட்டு விஷயங்களில் எல்லாம் மூக்கை நுழைத்துக் கொண்டு, வேலைக்கும் அடிக்கடி வராமல் வாரம் நான்கு நாட்கள் லீவு போட்டுக் கொண்டு, அழ வைச்சுடுவாங்க. அவங்களை வைச்சுப் பராமரிக்கிறதோடு இல்லாமல், பாத்திரம் தேய்க்கும் விம் பார் ஒருத்திக்குப் பிடிச்சதுனு வாங்கினா, அவ சொல்லாம கொள்ளாம நின்னதும் இன்னொருத்தி வந்தா விம் லிக்விட் கேட்பா. வேறொருத்தி ஸ்க்ரப்பர் கேட்டா, அவளுக்குத் துணையா வரவ, ஸ்க்ரப்பர் எல்லாம் கையை வீணாக்கும். துணி கொடுங்கனு சொல்லுவா. போதும், போதும்னு ஆயிடும்.

  :((((

  பதிலளிநீக்கு
 49. //அதே போலே, அந்த காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் கடவுள் கதைகளை எழுதி நம்மை மாசு படித்திவிட்டார்கள் என்று தோன்றுகின்றது. //

  வேலை, வெட்டி இல்லாமல் எல்லாம் இல்லை, சாய்ராம் கோபாலன். கடவுளைப் பத்தின கதைகளாகவே படிச்சதால்/படிப்பதால் அதன் உள்ளார்ந்த பொருள் உங்களுக்குப் புரியவில்லை என்று தான் சொல்லணும். இதிலெல்லாம் மாசு என்றால் என்ன சொல்ல முடியும்? ஆனால் ஒண்ணு, சொல்றவங்க சரியாச் சொல்லணும்னும் இருக்கு. உங்களுக்கு அப்படியான மனிதர்கள் கிடைக்கலை.

  //சிவனுக்கும் / பார்வதிக்கும் - முருகன் / பிள்ளையார் ? அவர்களுக்கு பிறந்த கடவுள்கள் என்று ஏன் இல்லை ?//

  சிவனோட சக்தி தான் பார்வதி. சிவனை ஜீவன் என எடுத்துக் கொண்டால் அதன் சக்தியே உமை ஆகும். சக்தியைப் பெண்ணாக உருவகம் செய்திருக்கிறார்கள். அவ்வளவே. நீங்க நிஜம்மாவே நம்மைப் போல சிவனும், பார்வதியும் கல்யாணம் செய்து கொண்டு உடல் உறவின் மூலம் இரு பிள்ளைகளைப் பெற்றார்கள் என எண்ணினால் அதுக்குப் பேர் என்னனு சொல்றது! நிச்சயமா நீங்க பகுத்து அறியவில்லை. பகுத்து அறிதலைத் தான் ஆன்மிகம் பகுத்தறிவுனு சொல்றதே தவிர, இப்படி எல்லாம் விதண்டாவாதமாக நினைப்பதை அல்ல. உண்மையான பகுத்தறிவுக்குப் பொருளே தெரியாமல் இறை மறுப்பும், நாத்திகமும், கடவுளரைத் திட்டுவதுமே பகுத்தறிவு என்ற பொருளில் வந்துவிட்டது. காதல் சீரழிந்ததைப் போல, நாற்றம் என்ற நல்ல சொல்லின் பொருள் சீரழிந்ததைப் போல! :((( இதுக்குக் காரணம் போலி ஆன்மிகவாதிகள் தான். இல்லைனு மறுக்கலை.

  //முருகனுக்கு இரண்டு பெண்டாட்டி - ஏன் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையா ? //

  முருகனின் இரு மனைவியராகப் பாவிக்கப்படுபவர்கள் வள்ளி இச்சாசக்தி, தெய்வானை க்ரியா சக்தி, இரண்டும் சேர்ந்த ஞான சக்தியே முருகப் பெருமான். இதை யோக முறைப்படி தான் அறிய முடியும். இதுக்கு எத்தனையோ படிகள் போகணும். நாமெல்லாம் ஆரம்பிக்கவே இல்லையே! மேலே எங்கே போறது? இன்னும் சொல்லப் போனால் நம்மிடம் உள்ள மூன்று நாடிகளில் இட நாடியை இச்சாசக்தியான வள்ளியாகவும், வல நாடியை க்ரியா சக்தியான தெய்வானையாகவும், நடு நாடி அதாவது பிங்கலை நாடியை ஞானசக்தியான முருகப் பெருமானாகவும் சொல்வார்கள். பிராணன் இயங்குவது இவை மூன்றின் வழியே தான். விளக்கப் போனால் இன்னும் பெரியதாக ஆகிடும். தானாகவோ அல்லது குரு மூலமோ புரிஞ்சுக்கணும்.

  //ஐயா, அட்லீஸ்ட் ராமனுக்கு பிள்ளைகள் உண்டு, கிருஷ்ணனுக்கு ஏகோபித்த மனைவிகள் - ஏன் அவர் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லையா ?//

  ராமன், கிருஷ்ணன் இருவரும் மனிதராகப் பிறப்பெடுத்ததால் இருவருக்கும் குழந்தைகள் உண்டு. கிருஷ்ணனுக்கு அநிருத்தன் என்னும் மகன் பற்றிப் படிக்கலையா? இன்னும் உண்டு. எழுத நேரமும் இல்லை. எழுதினால் எழுதிக் கொண்டே இருக்கலாம். இங்கே வேண்டாம். :))))

  //கதைகள் எழுத ஆள் இல்லை போலும் !//

  ஏன் இல்லை?? நீங்க சரியாப் படிக்கலை! அம்புடுதேன்! :))))

  //என் அப்பாவும், என் தாத்தாவும் கர்ப்பத்தடை செய்யாமல் இப்போது இந்தியாவில் எங்கும் மக்கள் கூட்டம் என்று பார்க்கும்போது கடவுள்கள் கதை ஏன் அதோடு நின்றுவிட்டது ?//


  எது தேவையோ அதைச் சொல்வது தான் புராணம், காவியம், இதிஹாசம் ஆகியவற்றின் வேலை. கூடவோ, கூட்டியோ சொல்வது இல்லை.

  //நாம் குழந்தைகளாய் பகுத்தறிவுடன் கேள்வி கேட்டு இருந்தால், சப்பென்று கன்னத்தில் போட்டு இருப்பார் என் அம்மா / அம்மா !!//

  அம்மாவுக்குத் தெரிஞ்சிருந்தால் சொல்லி இருப்பார். அவருக்குத் தெரிந்திருக்கலை போல. எனக்கெல்லாம் அருமையான பெரியப்பா, அருமையான தாத்தாக்கள் இருந்தனர். விளக்கிச் சொன்னார்கள். நாங்களும் உங்களைப் போல் கேள்விகள் கேட்டவர்களே!

  பதிலளிநீக்கு
 50. many thanks mohan! தசரா தான் garbaவா? (phone numberக்கும் அழைப்புக்கும் நன்றி - அடுத்த garbaவில் பார்த்துடலாம்)

  குஜராத் #1 பிராஞ்சா என்ன? i would've thought maharashtra. மோடி வந்தாலும் சரிதான் வராட்டி போனாலும் ஒண்ணு தான். ஆனா அப்படி வரதா இருந்தா நம்ம எதிர்பார்ப்புகளைக் கட்டுக்குள் வச்சிருக்குறது பெடர்னு சொல்றேன். இடையில ஒருத்தர் உண்ணாவிரதம் உலகமாயம்னு தொடங்கினாரா ஹசாரேயா புசாரெயோ என்ன ஆனாரு? மக்கள் இருந்த உண்ணாவிரதமும் போட்ட கூச்சலும் தான் மிச்சம். இல்லையா?

  அந்த cynicism தான்.

  பதிலளிநீக்கு
 51. //வீட்டு விஷயங்களில் எல்லாம் மூக்கை நுழைத்துக் கொண்டு, வேலைக்கும் அடிக்கடி வராமல்..

  சிக் லீவ், வெகேஷன், பென்ஷன் எல்லாம் கேப்பாங்களா? செம காமெடியா இருக்கும் போலிருக்கே?

  பதிலளிநீக்கு
 52. //போதும், போதும்னு ஆயிடும்.

  'நூறு நாள் வேலை' மற்றும் 'இலவசங்களின்' பாதிப்பா இது?

  ஒரு காலத்தில் 'காபி' தரத்தில் மட்டும் தான் சிக்கல் இருக்கும். காலம் மாறிவிட்டது.

  பதிலளிநீக்கு
 53. //ஆனால் நீங்கள் என்ன அவர்களுக்கு செய்தீர்கள்?
  நல்ல கேள்வி சாய்ராம். நாம் என்ன செய்தோம் என்ற சிந்தனை மட்டும் இருந்தால் நமக்கேன் இப்படி ஆகிறது என்ற வருத்தமும் வராது. உண்மை தான்.

  பதிலளிநீக்கு
 54. பின்றீங்க சாய்ராம். உண்மை போல் தோன்றியதையும், கேட்பதற்கும் பார்ப்பதற்கும் உண்மை போலிருக்கிறது என்பதாலும், பிறர் சொல்வதையும் வைத்து இது தான் உண்மை, இப்படித்தான் நடந்திருக்கும் என்ற நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டதனால் தான் இன்றைக்கு நம்பிக்கைகள் பொய்ப்பதைப் பார்த்துப் பதைக்கிறோம். சிவனுடைய பிள்ளைகள் பிள்ளையார் முருகன் என்பதே கொஞ்சம் சிக்கலான "உண்மை". ஹிஹி.. ஆமா.. சபரிமலை லீவா.. இல்லே ஒரு மார்க்கமா வரீங்களா? சுவாரசியமான கேள்விகள்.

  பதிலளிநீக்கு
 55. //geethasmbsvm6 கூறியது... //

  அம்புட்டும் அற்புதம். உங்களுக்கு வந்தனம்.

  அது எல்லாம் சொன்னாங்க, ஆனா இந்த மரமண்டைக்கு தான் ஏறவில்லை.

  நமக்கும் மிறிய சக்தி உண்டு என்பதில் எனக்கும் எந்த ஐயப்பாடும் இல்லை - அதற்கு பெயர் நாம் இவ்வளவு கற்பனை கலந்து கதைகள் வைத்து இருக்கவேண்டாமே என்பது தான் என் கருத்து. அதற்கு பிறகு ஏன் எதுவும் இல்லை ?

  பதிலளிநீக்கு
 56. //எது தேவையோ அதைச் சொல்வது தான் புராணம், காவியம், இதிஹாசம் ஆகியவற்றின் வேலை. கூடவோ, கூட்டியோ சொல்வது இல்லை.

  தெரியலிங்க.. அம்பை சகோதரிகளை 'அபகரித்த' பீஷ்மன் - அதனால் ஏற்பட்ட சந்ததிப் பெருக்கம் - பிள்ளை வியாசரை அழைத்து வந்து மருமகளுக்கு ஏற்பாடு செய்யும் தாய் சத்யவதி... நம் மிகப்பெரிய புராணம் இப்படித்தான் போகிறது.. அதுவும் முதல் ஐம்பது பக்கங்களில்! அப்புறம் போகப் போக மொசைக் தரையில் எண்ணை தடவி வாழைப்ழ பேஸ்ட் ஊற்றிய வழுக்கல். கடைசியில் இனப்படுகொலையில் முடிகிறது.

  இதில் நமக்கு எது தேவை, எது கூட, எது குறைச்சல்?

  புராணம் ஒரு கதை. அவ்வளவு தான். கற்பனை வளத்தையும் கோர்வையையும் மெச்சிப் பிரமிக்க வைக்கிறார்கள் சில புராண ஆசிரியர்கள். அதற்கு மேல் புராணங்களில் எதிர்பார்ப்பு வைத்தால் இந்திய அரசியல் மாதிரி தான்.

  (கேள்விங்களைப் படிக்கும் போதே பதிலும் வந்துரும்னு நினைச்சேன்..)

  பதிலளிநீக்கு
 57. //ஹிஹி.. ஆமா.. சபரிமலை லீவா.. இல்லே ஒரு மார்க்கமா வரீங்களா? சுவாரசியமான கேள்விகள்//

  இல்லீங்க, வாழ்க்கையின் விளிம்பில் உடம்பும் மனதும் அல்லாடிக்கொண்டு இருக்கின்றது. இங்கே இந்தியாவில் ஒரு முறை சென்று பம்பா புண்ணிய தீர்த்தத்தில் நீராடு என்று சொன்னபோது அலறிக்கொண்டு ஓடியவன் நான். ஏதோ அமெரிக்காவில் தொலைபேசியில் பேசியே பாதி விற்பனை செய்ததால் 48 நாள் விரதம் கஷ்டமாக தெரியவில்லை. பனிப்பொழிவில் நடப்பேன் மலத்தின் நடுவில் நடந்து போக மனம் ஒப்பவில்லை !! இப்போது இந்திய வந்தாகிவிட்டது பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 58. // அம்பை சகோதரிகளை 'அபகரித்த' பீஷ்மன் - அதனால் ஏற்பட்ட சந்ததிப் பெருக்கம் - பிள்ளை வியாசரை அழைத்து வந்து மருமகளுக்கு ஏற்பாடு செய்யும் தாய் சத்யவதி... நம் மிகப்பெரிய புராணம் இப்படித்தான் போகிறது.. அதுவும் முதல் ஐம்பது பக்கங்களில்! அப்புறம் போகப் போக மொசைக் தரையில் எண்ணை தடவி வாழைப்ழ பேஸ்ட் ஊற்றிய வழுக்கல். கடைசியில் இனப்படுகொலையில் முடிகிறது.//

  @அப்பாதுரை, இங்கேயும் சரியான புரிதல் இல்லாமல் சொல்றீங்க! வியாசர் பண்ணினது விந்துதானம் வகையைச் சேர்ந்தது. அவர் இந்தப் பெண்ணுடன் சேரவேண்டும் என்ற குறிக்கோளில் சேரவில்லை. இங்கே உடல் ஆசை முன்னுக்கு நிற்கவில்லை. குரு வம்சத்தினரின் சந்ததி தொடரவேண்டும். அதற்கான வித்து நல்லதொரு மனிதனிடமிருந்து வரவேண்டும். சத்யவதிக்குத் தெரிந்த ஒரே நல்ல மனிதன் அவள் பிள்ளை வியாசர் மட்டுமே. இந்த உறவுக்குப் பின்னர் எங்காவது ஒரு இடத்தில் வியாசர் அந்தப் பெண்களோடு தொடர்பு கொண்டிருந்தார் என்பது குறித்துப் படிச்சிருக்கீங்களா? இதை நியோகம் என்று யோக மொழியில் கூறுவார்கள். இது வேறு. சாதாரணமான உடல் ஆசையில் ஈர்க்கப்பட்டு ஆணும், பெண்ணும் சேர்வது வேறு. சத்யவதிக்கும் இதன் தாக்கம் தெரியும். தெரிந்து தான் ஏற்பாடு பண்ணுகிறாள். நீங்க எல்லாம் தற்கால நடைமுறைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் ஏற்படும் குழப்பம் இது. இனப்படுகொலை எல்லாம் இல்லை. இரண்டு பக்கமும் ஒரே இனம் தானே? அப்புறமா எங்கே இருந்து இனப்படுகொலை வந்தது?

  //இதில் நமக்கு எது தேவை, எது கூட, எது குறைச்சல்?//

  படிக்கிறதில் மட்டுமில்லாமல், புரிதலிலும் மாற்றம் வேண்டும் அப்பாதுரை. நம்மைப் போன்ற தற்கால மனிதர்களின் நோக்கங்களைப் போல, நம் ஆசைகளைப் போல இப்போதைய நடைமுறையைப் போலப் பார்க்கக் கூடாது.

  நிச்சயமா மனிதர்களின் ஆசா,பாசங்களைச் சித்திரிக்கிறது தான். அதிலிருந்து நாம் எடுத்துக்கவேண்டியது நமக்குத் தேவையானதை மட்டுமே. சாரத்தை விட்டுச் சக்கையை மட்டும் எடுத்துக் கொண்டால் எப்படி?

  இது எழுத எழுத இன்னும் நிறையப் போகும். சாய் கோபாலனுக்குக் கூட பதில் சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனால் அவருடைய புரிதலிலேயே கோளாறு இருக்கிறது. இதற்குக் காரணம் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஆங்கிலேயரின் மனநிலையில் எழுதப்பட்டதைப் படிச்சதும் காரணமாக இருக்கலாம். ரிக் வேதத்தைக் கொலை செய்த மாதிரி இதையும் பொருட்கொலை செய்திருப்பாங்க. :((((( நம்முடைய புராண, இதிகாசங்கள் கேலிக்குரியதாக ஆனது ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னரே! :((((((

  பதிலளிநீக்கு
 59. //சிக் லீவ், வெகேஷன், பென்ஷன் எல்லாம் கேப்பாங்களா?//

  உடம்பு சரியில்லைனா நாங்களே லீவு கொடுத்து, டாக்டர் கிட்டேப் போகக் காசும் கொடுத்து அனுப்பிடுவோம்.


  //செம காமெடியா இருக்கும் போலிருக்கே?//

  நீங்க வேறே!இது காமெடியா உங்களுக்கு? :)))))

  பதிலளிநீக்கு
 60. நம்முடைய புராணம் மதம் சடங்கு என்பதற்காக எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாமா? தர்மம் என்ற பெயரில் அழிவையும் வரம் என்ற பெயரில் கற்பழிப்பையும் புராணத்தில் சித்தரித்திருக்கிறார்கள் என்பதற்காக அதை சரியென்று ஏற்க முடியவில்லை.
  எந்த மொழியில் படித்தாலும் எந்தக் கால முறையில் பார்த்தாலும் - அசிங்கம் அசிங்கம் தானே கீதாம்மா? இந்தக்கால நடைமுறையில் கற்பழிப்பும் கொலையும் சரியாகுமா என்ன?
  வடமொழியில் தான் இன்னும் விவரமாகச் சொல்லியிருக்கிறார்கள் அசிங்கத்தை.
  surrogation என்பது அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது என்ற முற்போக்கு நிறைவைச் சொன்னாலாவது பரவாயில்லை - ஒரு தர்மவானை விட்டு கர்ப்பதானம் செய்வதை யோகமுறை என்றே வைத்துக்கொள்வோம் - இங்கே அசிங்கம் எதுவென்றால் சகோதரிகளின் சம்மதம் பெறாமல் செய்திருக்கிறார்கள் என்பதே. வியாசரைப் பார்த்து பயந்து படுத்த சகோதரிகளுக்கு சாபம் தான் மிச்சம். இதை எப்படி நியாயப்படுத்துவது?

  பதிலளிநீக்கு
 61. //நம்முடைய புராணம் மதம் சடங்கு என்பதற்காக எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாமா?//

  நியாயப் படுத்தியெல்லாம் பேசலை. எல்லாப் புராணங்களிலும் அழிவும், அதற்கான காரணங்களும் சொல்லப்பட்டிருக்கும். அதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது தீமை செய்தால் அழிவு என்பதைத் தான். அதோடு மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே போட்டி, பொறாமை, ஒருவன் இன்னொருவனை அழித்தல் தொடர்ந்து நடந்து வரத் தான் செய்கிறது. எந்த மொழியானாலும், எந்த மதமானாலும், எந்த நாடானாலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்குக் கடவுள் காரணம் அல்ல. மனிதனின் தீய மனமே காரணம்.


  //தர்மம் என்ற பெயரில் அழிவையும் வரம் என்ற பெயரில் கற்பழிப்பையும் புராணத்தில் சித்தரித்திருக்கிறார்கள் என்பதற்காக அதை சரியென்று ஏற்க முடியவில்லை.//

  தர்மம் என்ற பெயரில் யார், எங்கே, எதை, அல்லது எவரை அழித்தார்கள்? வரம் என்ற பெயரில் எங்கே கற்பழிப்பு நடந்து குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருக்கின்றன? குந்தி தானாகவே தேடிக் கொண்டதே கர்ணன் பிறப்பு. அவளுடைய எதிர்காலம் குறித்து அறிந்து கொண்டே துர்வாசர் அத்தகைய வரத்தைக் கொடுத்தார்னு சொல்வாங்க. மேலும் கற்பழிப்பு என்பது பெண் விரும்பாமல் சேர்வதைத் தான் குறிக்கும். இங்கே அப்படி எதுவும் நேரவில்லை. அம்பிகை, அம்பாலிகையும் மாமியாரின் வேண்டுகோளுக்காகத் தான் வியாசருடன் சேர்கின்றனர். ஆனால் சாபம் என்ன கிடைத்தது? குழந்தைகள் அப்படிப் பிறந்தது அவர்கள் அந்த நேரம் எதை நினைக்கின்றனரோ அதைப் போல் பிறந்தன. பயத்துடன் முகம் வெளுத்து பீதியுடன் சேர்ந்தவளுக்கு வெளுத்த பாண்டுவும், கண்களை மூடிக் கொண்டவளுக்கு கண்ணில்லா திருதராஷ்டிரனும் பிறந்தனர். அதே அவர்களின் தாதியான புத்திசாலிப் பெண்மணிக்கு எல்லா அறிவும், தர்ம, சாஸ்திரங்களும் அறிந்த அனைவராலும் மதிக்கப்பட்ட விதுரர் பிறக்கவில்லையா? இது சாபம் கிடையாது. கர்ப்ப காலத்தில் என்ன நினைக்கிறோம், எதை நினைக்கிறோம், மனம் எவ்வாறு இருக்கிறது என்பதை எல்லாம் பொறுத்தே குழந்தைகளின் உடல், மனோநிலை அமையும். இது உங்கள் அறிவியல் ரீதியாகவே சொல்லப்பட்ட ஒன்று.

  பதிலளிநீக்கு
 62. //வடமொழியில் தான் இன்னும் விவரமாகச் சொல்லியிருக்கிறார்கள் அசிங்கத்தை.//

  இது அசிங்கம்னு நினைக்கிறதெல்லாம் உங்கள் கருத்து. வடமொழியில் என்ன? மற்ற மொழிகளில் சொல்லலையா?

  //surrogation என்பது அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது என்ற முற்போக்கு நிறைவைச் சொன்னாலாவது பரவாயில்லை.//

  எல்லாத்துக்குமே அறிவியல் ரீதியாக் காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் ரொம்பப் பெரிசாயிடும். இங்கே, இப்போ, வேண்டாம். நான் ஒரு சுட்டி உங்களுக்கு அனுப்பினேன். பார்த்தீங்களானு தெரியலை. அந்தப் பதிவுகள் ஆங்கிலத்திலும் கிடைக்கும். அவங்களோட மோதிப் பாருங்க. :)))) என்ன நடக்கும்னு பார்க்க ஆசையா இருக்கு! :P :P :P :P

  ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் முழி பெயர்த்த மாக்ஸ்முல்லரோட கருத்துக்களை எல்லாம் விழுந்து விழுந்து படிச்சால் இப்படித்தான் தோணும். ஆங்கிலேயரும், மேல்நாட்டவரும் சொல்ற முழிபெயர்ப்பைத் தான் நாம் ஏத்துக்கறோம், புரிஞ்சுக்கறோம். ஆனால் இங்கே உள்ள பண்டிதர்களிடம் கேட்டுப் புரிஞ்சுக்கறோமா என்றால் இல்லை! :( நம் நாட்டுப் புராண, இதிஹாசங்களைக் குறித்து நம் நாட்டுப் பண்டிதர்களைத் தான் கேட்கணும். நம் நாட்டைக் குறித்து நல்ல அபிப்பிராயங்களே இல்லாத மேல்நாட்டவரைக் கேட்டால்??? எப்பூடி?????

  பதிலளிநீக்கு
 63. Appadurai Sir,
  Regarding servant maid, I would like to share my experience with you and others. When my son was just 8 months old, I engaged an above middle aged lady (this is always safe from one point of view) to take care of him with the monthly payment of Rs.800/- with an increment of Rs.100/- per year and now she is earning Rs.3000/- sorry I am paying Rs.3000/- per month. This includes Rs.500 for rolling Gujarat Rotlies (yes rotlies not roties) and last year she demanded an increment of Rs.300/- due to high level of inflation.
  Apart from this, she has been paid flood allowance (yes, it is an allowance), when flood water entered into her house; she was paid travelling expenses when she undertook a pilgrimage; I even once paid her medical expenses. These allowances and expenses are extra charges and not to be deducted from her monthly payment.
  She is not coming on Sundays and once on the day of Pournami.
  You may ask why I am still continuing with her services and my simple answer is finding another one equal to her capacity and caliber is very difficult. In short, KNOWN DEVIL IS BETTER THAN UNKNOWN FAIRY.
  But one thing : Once she enters the houses, we can go to our respective working places keeping all the cup boards and rooms wide open. Honesty is her best policy even today.
  One more point : whether we go out of station on vacation or she goes on leave, I have not deducted even a single pie in her payment so far.

  பதிலளிநீக்கு
 64. ம்ம்ம் மோஹன் பரோடா, சொல்வது போல் நாங்களும் வேலை செய்யும் பெண் லீவு எடுத்தாலோ, நாங்க எங்கானும் போய் லீவு கொடுத்தாலோ சம்பளத்தைக் குறைத்தது இல்லை. தீபாவளி அலவன்ஸ் தனி. அதைப் பணமாகத் தான் கேட்பார்கள். அநேகமாய் ஒரு மாசச் சம்பளம் போனஸ் மாதிரி கொடுக்க வேண்டி இருக்கும். இது எழுதப்படாத சட்டம். மற்றபடி பல சமயம் பாத்திரங்கள் எல்லாம் கொடுத்தது திரும்பியே வராது. அது தனிக்கணக்குத் தான். கேட்டுக் கேட்டு அலுத்துப் போய் விட்டுடுவேன். விடுமுறை முடிந்து பள்ளி ஆரம்பிக்கும் ஜூன் மாசத்தில் படிப்புச் செலவுக்கு என ஒரு குறிப்பிட்ட தொகை கொடுப்பதும் உண்டு. பல சமயங்கள் புத்தகம், நோட்டுக்கள் வாங்கித் தரேன்னு சொன்னால் வேண்டாம்னுடுவாங்க. புத்தகங்கள் அரசுப்பள்ளி என்பதால் இலவசம். சீருடையும் சைக்கிளும் கூட இலவசம். ஆகவே பணம் தான் எதிர்பார்ப்பாங்க.

  பதிலளிநீக்கு
 65. இவ்வளவு வசதி இருந்தும் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்க வைப்பதில்லை. :( +2 படித்த பெண்ணே அதிகப் படிப்புப் படித்த பெண்ணாகக் கருதப்படுவாள். கல்யாணமும் செய்து வைச்சுடுவாங்க. அந்தப் பெண்ணும் வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிக்கும். அம்பத்தூரில் எனக்கு உதவி செய்த பெண்ணின் மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஒரு குழந்தையும் உண்டு. +2 படிச்ச பெண். அம்மாவுக்கு முடியாதப்போ எனக்கு வந்து உதவுவாள். அவள் தம்பியை இப்போ இஞ்சினியரிங் படிக்க வைக்கிறாங்க. இந்தப் பெண்ணுக்குக் கோபம். கல்யாணம் செய்து கொடுத்திருப்பதும் மேஸ்திரிக்கு! :( என்னையும் படிக்க வைக்கலையேனு அந்தப் பெண் இப்போ அம்மாவிடம் சண்டை போடுதுனு கேள்விப் பட்டேன். :))) வயசு மிஞ்சிப் போனால் 20 அல்லது 22க்குள் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 66. Geetha Madam,
  I forgot to add : We also do pay one month salary as Diwali bonus i.e. equivalent to 8.33% of government rate. Next month, I will have to pay her Rs.6000/- plus Rs.200 for her new Diwali saree.

  பதிலளிநீக்கு
 67. மோதுறதா? ஐயையோ.. அதெல்லாம் ஒத்து வராதுங்க.. (வாயோட சரி :).

  பதிலளிநீக்கு
 68. இந்த வேலைக்கார விவகாரம் - நிஜமாவே காமெடி தான்.

  பதிலளிநீக்கு
 69. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 70. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு