2012/03/15

முட்சுமை    சேன்ப்ரேன்சிஸ்கோ விமான நிலையத்தருகே பெரிய ஹோட்டலின் பதினேழாவது மாடியில், சிறப்பு விருந்தினருக்கான தனிப்பட்ட ஓய்வறையின் சொகுசு நாற்காலிகள் ஒன்றில் உட்கார்ந்திருக்கிறேன். வெளியே கண் படும் தொலைவில் கடலலைகள். முழு நிலவை விழுங்க முயல்வது போல் தாவி ஓய்ந்து போகும் அலைகளை ஒன்றிரண்டு நிமிடங்கள் கவனித்து விட்டு, நானும் அந்த அலைகளைப் போல் எதையோ எண்ணி எண்ணி அடைய முயற்சித்து ஓய்ந்து போவது போல் உணர்ந்தேன்.

அறையின் extravagant ambiance தாக்கியது. அறையில் ஐந்து பேர் கூட இல்லை. எதிரே private bar with inviting decor என்னை வா என்றது. Bar அருகே இருந்த சொகுசு சாய்வு நாற்காலியில், பெர்முடா நிஜாரும் டிசைனர் சட்டையும் அணிந்த, காலை உயர்த்தித் தொடை தெரியும்படி உட்கார்ந்திருந்தவரைத் தற்செயலாகக் கவனித்தேன். மது அருந்தியபடி என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார் என்பதையும் கவனித்து விட்டேன். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. பத்தடி தள்ளி உட்கார்ந்திருந்த இன்னொருவன் இவரைக் கண்காணித்துக் கொணிடிருந்ததையும் கவனித்தேன். Bodyguard! 'யாரிந்த socialite bitch?' என்று நினைத்தபடி bartender தோன்றும்வரை நின்றேன். சுவரில் நீல LEDயில் நேரத்தைக் கவனித்தேன். இரவு ஒரு மணியாகப் போகிறது. இவர் ஏன் இப்படித் தனியாக உட்கார்ந்திருக்கிறார்? நினைத்து முடிக்குமுன் bartender தோன்றி 'என்ன வேண்டும்?' என்றான். "லபோய்க் இருக்கிறதா?" என்று கேட்டேன்.

என்னைப் பார்த்துப் புன்னகை செய்தவரைப் பார்த்தேன். "Thanks, may I?" என்று அவர் புன்னகையில் இருந்த அழைப்பை உறுதிப்படுத்துவது போல் கேட்டேன். எதிரே உட்கார்ந்தேன். கை குலுக்கி அறிமுகம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்று தயங்கிய போது, அவர் மெல்லிய கையுறை அணிந்திருந்ததைக் கவனித்தேன். கைகுலுக்கவில்லை. என் பெயரைச் சொல்லிக் கோப்பையை உயர்த்தி, "cheers" என்றேன். "Luciana" தன் முதற்பெயரை மட்டும் சொல்லி, பதிலுக்கு "cheers" என்றார். இவரை எங்கே பார்த்திருக்கிறேன்?

"ஸ்காச் அருந்துபவரா?" என்றார்.

"ஸ்காச் விரும்புகிறவன்" என்றேன்.

சிரித்தார். "You don't like wine either?". அவர் கையில் இருந்த கோப்பையில் சிவப்பு wine.

"I love red wine. Cabernet, particularly. But the flavonoids in red wine seem to give me nasty headaches. I don't believe in drinking any kind of blanc. So i gave up wine... but a good scotch can be sublime, you know?"

என்னுடைய பதிலை ரசித்தவர் போல், "connoisseur of fine spirits" என்றார்.

"Nah, just a misfit epicurean" என்றேன்.

விஸ்கியில் கீழுதட்டையும் மேல்நாக்கையும் மட்டும் நாசூக்காக நனைத்து எடுத்து சாராயக் காட்டம் என்னுள் பரவ ஆயத்தமானேன். நீர், சோடா, பனிக்கட்டி எதுவும் கலவாத உயர்ந்த ரக விஸ்கி சாப்பிடுவது ஒரு கலை. ஒரு வாயில் விழுங்கி விடலாம். அப்படி செய்தால் விஸ்கிக்கும் அவமரியாதை, உடனிருப்பவருக்கும் அவமரியாதை. போதாததற்கு கழுத்திலிருந்து தலை வரை மின்வேகத்தில் ஏறிப் பரவும் போதையான சாராய எரிச்சலைக் கட்டுப்படுத்த வேண்டிய தொல்லை. அவசரப்பட்டு அருந்துவதால் என்ன சுகம்?

என்ன வேலையாக மேற்கே வந்திருப்பதாகக் கேட்டார். வேலை தேடி வந்திருப்பதாகச் சொன்னேன். இதற்கு முன் வேலை பார்த்த அனுபவத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கதவைத் திறந்து வந்த ஒருவர் நேராக barக்கு வந்து இரண்டு பீர் தரச்சொல்லிவிட்டு, எங்களருகே வந்து அமர்ந்தார்.

'Howdy? I'm Chuck' என்றார் எங்களைப் பார்த்து. "What do you do to be able afford that scotch, in a free beer society?" என்றார் என்னைப் பார்த்து. லூசியைப் பார்த்து, "oh, my! drinking with celebrity!" என்றார்.

celebrityயா? யாரிந்தப் பெண்மணி?

சிரித்தபடி லூசி என்னைச் சுட்டிக்காட்டி, "ஐயாவுக்கு வேலை போய்விட்டது. அதனால் தான் ஸ்காட்ச் குடிக்கிறார்" என்றார்.

"Unemployed? It's all because of the fucking liberals. People are hitting the street and the President is talking pie in the sky" என்ற சக், என்னைப் பார்த்து "You look Indian. Don't tell me your job got outsourced, eh?" என்றார்.

"What do liberals or conservatives have to do with the abyss we are in, or my job loss?" என்றேன்.

"அதுவும் சரிதான்" என்றார் லூசி. "அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிச்சேவை நிறுவனங்களுடன் நாற்பது வருடங்களுக்கு மேல் ஏற்பட்ட பழக்கம் இனி மாறப்போவதில்லை. முதலில் சைனா. பிறகு இந்தியா. அடுத்தது வேறு ஏதாவது நாடு"

"அமெரிக்கப் பணம் இந்த புறம்போக்கு நாடுகளுக்கெல்லாம் போய், நம் பிள்ளைகள் பிச்சையெடுக்கும்படி ஆகிவிட்டது. பதிலுக்கு ஏதாவது செய்கிறார்களா? பின்லாடினையும் தீவிரவாதிகளையும் வளர்த்து ஆளாக்குகிறார்கள், நன்றி கெட்ட நாடுகள்" என்றார் சக்.

"அமெரிக்கப் பணம் இந்த நாடுகளுக்குப் போனது உண்மை. அதனால் அந்த நாட்டவர்கள் சிலர் செல்வந்தர்களாகி இருக்கலாம். ஆனால் இந்த நாடுகளுக்கு தொழிலனுப்பிப் பெருமளவில் லாபம் சம்பாதித்து பிலியனேர்ஸ் ஆனவர்கள் அமெரிக்கர்கள் தானே? இன்றைக்கு அமெரிக்கப் பிள்ளைகள் பிச்சையெடுக்கும் நிலை உருவாகும் சாத்தியம் உள்ளதென்றால், அதற்குக் காரணம் அமெரிக்க சர்வாதிகாரித்தன வெளியுறவுக் கொள்கைகள் தான் என்று நினைக்கிறேன். வியட்னாம், ஆப்கேனிஸ்தான், இராக் என்று வரிசையாக தோல்வியடைந்த போர்களின் விளைவு தானே?" என்றேன்.

"தோல்வியா? அமெரிக்கர்களுக்குத் தோல்வி என்றைக்குமே கிடையாது" என்றார் சக்.

"வெற்றி என்றால் நாம் சம்பாதித்த லாபங்கள் எங்கே போனதென்று சொல்லுங்கள்?" என்று சேர்ந்துகொண்டார் லூசி.

"எல்லாம் அந்த ரிபப்லிகன் தேவடியா பசங்க செஞ்ச வேலை. பேராசைக்கு ஒரு அளவே இல்லை" என்றார் சக். அவரை வியப்புடன் பார்த்தேன். ஒபாமாவைச் சாடியவர் எதிர்கட்சியையும் திட்டுகிறாரே? இரண்டு புட்டிகள் பீர் பருகி விட்டிருந்ததில் அவரிடத்தில் ஒரு நிதானம் தென்பட்டது. என் பார்வையைப் புரிந்து கொண்டவர் போல், "why? you reckon me to be a rich conservative redneck catholic pedophile?" என்றார்.

"That's quite a coverage, who are you then, Canadian?" என்றேன். சிரித்தார்கள். "அமெரிக்காவிற்கு என்ன குறை?" என்றேன்.

"அமெரிக்காவிற்கு எதில் குறை என்று கேளுங்கள். எல்லாவற்றிலும் தான். ஒரு காலத்தில் உலகமே நம்மை வியந்து பாராட்டிக் கொண்டிருந்தது. இன்றைக்கு படிப்பிலிருந்து பணவசதி வரை எல்லோரையும் துரத்திக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தை நினைக்காமல் என்னென்னவோ செய்து விட்டோம். கார் தயாரிக்கிறேன் பேர்வழி என்று டிட்ராயட் தேவடியா பசங்க நம் நாட்டை எந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள் பாருங்கள். நீங்கள் சொன்ன வியட்னாம், ஆப்கானிஸ்தான், ஐரேக் எல்லாமே எண்ணையின் அடிப்படையில் நிகழ்ந்த போர்கள் தானே? எங்கே என் பேரக் குழந்தைகள் காலத்தில் அமெரிக்காவில் வேலை கிடைக்காமல் அவர்கள் எல்லாம் சைனா இந்தியா என்று போக வேண்டியிருக்குமோ என்று தோன்றுகிறது" என்றார் சக்.

"போனால் என்ன? வளர்ச்சியும் செல்வமும் எங்கே இருக்கிறதோ அங்கே போவதில் என்ன தவறு? நம் மூதாதையர்கள் செல்வமும் சுகமும் தேடி இங்கே ஓடி வந்தவர்கள் தானே?" என்றார் லூசி.

"எனக்கென்னவோ அமெரிக்காவின் இன்றைய சரிவு தற்காலிகமானதென்று தான் தோன்றுகிறது" என்றேன். "அமெரிக்காவை நம்பி மற்ற நாடுகள் இருப்பது உண்மையென்றால் அந்த நாடுகளில் அமெரிக்காவை விட வாழ்க்கை நிலை உயர வாய்ப்பே இல்லை. அமெரிக்கா has a first-mover spirit that is uncompromising. We have strong roots in innovation. அதனால் அமெரிக்காவின் எதிர்காலம் நன்றாகத்தான் இருக்கும். Our posterity has it safe and sound, right here in America" என்றேன்.

"I'll drink to that" என்று நான்காவது பீர் புட்டியைத் தீர்த்தார். "Excuse me" என்று எழுந்து விலகினார். லூசியைப் பார்த்தேன். "Another drink?" என்றார்.

"Sure" என்றேன்.

"Allow me" என்று நான் என்ன சொல்லியும் கேட்காமல் என் விஸ்கிக்கான கணக்கை ஏற்றுக் கொண்டார். "இன்றைக்கு என் பிறந்த நாள். I want to share a birthday drink" என்றார்.

"Happy birthday, young lady" என்ற குரலைக் கேட்டுத் திரும்பினோம். சக் பாத்ரூம் சென்று திரும்பியிருந்தார். "I'll have one on your tab as well" என்றார். இன்னொரு பீர் தரவழைத்து, "So how old is the young lady?" என்றார், தன் அனாகரீகக் கேள்வியைப் பற்றிக் கவலைப்படாமல். என் அதிர்ச்சியைப் புரிந்து கொண்டவள் போல் லூசி, "Ain't that relative?" என்றாள்.

"What is relative ?" என்றார் சக்.

"வயது தான். பத்து என்பதும் நாற்பது என்பதும் நாம் பயன்படுத்தும் அளவையும் வடித்த கணித முறைகளையும் பொறுத்தது தானே? ஆறு மாதத்துக்கு ஒரு முறை வயது கூடி முப்பது வயதுக்காரர் அறுபது வயதானால், முதுமையடைந்ததாகுமா? வருடத்துக்கு எழுனூறு நாட்கள் என்று கணக்கு வைத்து அறுபது வயதுக்காரர் முப்பது வயதானால், இளமையடைந்ததாகுமா?" என்றார்.

"Interesting theory" என்றேன்.

"அதுவும் சரிதான். என்னைக் கேட்டால், உடலுறவு கொள்ள முடியும் வரை வயதைப் பற்றிக் கவலைப்படுவதில் ஒரு பொருளும் இல்லை. இளமையாவது முதுமையாவது? Libido defines age" என்றார் சக்.

"Another perspective" என்றார் லூசி.

"Speaking of which, I never had anyone from India known to me in this kind of setting" என்றார் சக், என்னைப் பார்த்தபடி. என்னிடம் ஏதோ கேட்கப் போகிறார் என்பது புரிந்தது. "Is it true that Indian men have longer and stronger, you know, over there?" என்று என் இடுப்புக்குக் கீழே நோட்டம் விட்டார்.

"That's a myth" என்றேன்.

"Really? I have heard that Africans, Arabs and Indians have a longer and thicker endowment" என்றார் சக்.

"வெள்ளையரல்லாதவர் எவரையும் அந்த விஷயத்தில் இது போன்று சந்தேகப்படுவது பொதுவென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி அங்கே மட்டும் அளவுக்கதிகமாக இருந்தால் மனித வடிவின் geometric harmony becomes flawed. Are you familiar with the Vitruvian Man?" என்றேன்.

"Wasn't that Da Vinci?" என்றார் லூசி.

"The movie?" என்றார் சக்.

"No. Leonardo Da Vinci. He believed that the harmonious arrangement of human body could help explain the geometric harmony of our universe. மனித உடலின் எல்லா உறுப்புகளும் மனிதனின் மொத்த அளவின் ஒரு விகிதக் கணக்கில் அடங்கும். உதாரணமாக, மனிதனுடைய விரிந்த கரங்களின் வலது கை நுனியிலிருந்து இடது கை நுனிவரை அளந்தால், அது அவனுடைய உயரத்துக்குச் சமமாக இருக்கும். மனிதனுடைய காதளவு அவன் முகத்தளவில் மூன்றில் ஒரு பங்கு. மனிதனுடைய காலளவு அவனுடைய உயரத்தில் ஆறில் ஒரு பங்கு. இந்த விகிதாசாரம் வெள்ளையரானாலும் கறுப்பரானாலும் மாறுவதில்லை. உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் அளவுக்கதிகமாக வளருவதென்பதெல்லாம் நம்ப முடியாதது" என்றேன்.

"Darn" என்று சிரித்தார் லூசி. "Well, it's been a fine evening gentlemen. Goodluck with your job" என்றபடி எங்கள் பதிலுக்குக் கூடக் காத்திராமல் எழுந்து கிளம்பினார். அருகிலிருந்த bodyguard அவளைத் தொடர்ந்தான்.    மேற்கண்டது 2009ல் எழுதிய ஒரு பதிவிலிருந்து பிரித்துச் சற்றே திருத்தியது. மீள்பதிவுக்கு இரண்டு காரணங்கள். வேறு விஷயம் கிடைக்காதது முதல் காரணம். லூசியானா சமீபத்தில் இறந்து போனது இரண்டாவது காரணம்.

என்னை விட மிக உயர்ந்த வட்டங்களில் தொற்றிக் கொண்டாவது வாழ்வது என்று அடாவடிக் கூத்தடித்த நாட்களில் என்னென்னவோ செய்திருக்கிறேன், எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். அந்த வாழ்க்கை திடீரென்று சரிந்து என்னை நான் உணரத்தொடங்கிய ஆரம்ப நாட்களில் நிகழ்ந்த சம்பவம் - லூசியானாவைச் சந்தித்தது. லூசியானாவுக்கு இன்னொரு பிரபல அசல் பெயர் உண்டு.

'எங்கேயோ பார்த்திருக்கிறேனே?' என்று நான் அடையாளம் தெரியாமல் குழம்பியதற்குக் காரணங்கள் நிறைய உண்டு. என்னுடைய தனிப்பட்ட சிக்கல், அரைத்தூக்கம், அவரை மேகப் இல்லாமல் பார்த்தது இவையெல்லாம் சாதாரணக் காரணங்கள். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் ஏற்கனவே விழுந்து விட்ட நட்சத்திரம் என்பது ஒரு காரணம். அடங்கும் தணல், நட்சத்திரங்களுக்கு உகந்த அடையாளமல்ல. இன்னொரு காரணம்: அவருடைய முகம்! போதைப்பொருள் உபயோகம் அவர் முகத்தின் வயதை முப்பது வருடங்களாவது கூட்டியிருந்தது. போதைப்பொருள் தன் கொடுமையான விரலால் அவர் முகத்தில் கீறிவிட்டிருந்த கொடுமையான சித்திரம்.. காரணம். அவர் அகன்றதும் பார்டென்டர் சொல்லித்தான் அவர் யாரென்றுத் தெரிந்து கொண்டேன்.

கலைஞர்களுடன் தொழில் முறையில் பழகும் வாய்ப்பு கிடைத்த அந்த சொற்ப தினங்களில் நிறைய வளரும்/வளர்ந்த கலைஞர்கள் சர்வசாதாரணமாகக் கோகேய்ன் உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துப் பேச்சுக் கொடுத்தால், உலக நடப்புகளைப் பற்றியும் சித்தாந்தங்கள் பற்றியும் பிரமிக்க வைக்கும் intellectual ஆழத்துடன் பேசுவார்கள்.

லூசியானாவின் உரையாடலும் அப்படிச் சில பரிமாணங்களைத் தொட்டது. இவருக்கு என்ன குறை? நான் தெரிந்து கொண்ட வரையில் குறையில்லாத பிள்ளைப்பிராயம், பிரபலங்களின் உறவுமுறை, தரமான கல்வி.. எல்லாவற்றுக்கும் மேல் மேதைமை. எப்படிப்பட்டக் குரல்! ஆண் பாடகர்களுக்கு இணையாக சம்பாதித்தவர். (எல்லா இடங்களிலும் இதே கதை தான். ஒரே வேலை செய்யும் பெண்ணைவிட ஆணுக்கு சம்பளம் அதிகம்). மடானாவும் இவரும் அமெரிக்க பாப் இசைக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, எண்பதுகளில் போட்டுக் கொடுத்தப் பாதைகளில் இன்றைக்கு எத்தனை பேர் வெற்றிகரமாகப் பயணம் செய்கிறார்கள்!

நாற்பத்தெட்டு வயதில் இறந்து போயிருக்கிறார்! மிகையான போதைப்பொருள் உபயோகம். கலைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது சாதாரணம் என்றாலும், சிலர் எப்படியோ அதைக் கட்டுப்படுத்தி தங்களின் உண்மையான அடையாளம் என்னவென்று தெரிந்து கொண்டு அதைத் தேடிப் போகிறார்கள். பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி அழிந்து போகிறார்கள். உலகக் கலைத்துறையில் போதைப் பொருளின் பரவல் மிக வேதனைக்குரியது. படைப்பாற்றல் எத்தனை மகத்தானது! அதை இப்படி இழப்பது எத்தனை கொடுமை!

இவருடன் ஒரு கணம் socialize செய்தது மென்மையாக உறுத்துகிறது. பலர் பூந்தோட்டமாகப் பிறந்து வாழ்கிறார்கள். சிலர் பூக்களைத் துறந்து முள்ளை மட்டும் பிரியத்துடன் சுமக்கிறார்கள். அழிக்கப்பட்ட ஓவியத்தில் எந்தவித அழகும் இல்லை. sad.

இவருடைய போதைப் பொருள் பழக்கமும் அன்பற்றக் கணவன் மேல் பொதுவில் விவரிக்கப்பட்ட விடாப்பிடியானப் பற்றுதலும் இவர் மேலிருந்த மதிப்பை அழித்துவிட்டன என்றாலும் இவர் குரலை அவ்வப்போது விரும்பிக் கேட்பதுண்டு. இவரின் இந்தப் பாடலைக் கேட்டபடி ஒரு வருடம் மேரதான் ஓட்டத்தின் சோர்வைப் போக்கிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. பூவைத் துறந்து முள்ளை மட்டும் சுமந்தக் கொடிக்கு ஒரு சிறிய மலர்.15 கருத்துகள்:

 1. முள்ளை மட்டுமே சுமந்த கொடிக்கு ஒரு சிறிய மலர்... அழகான வார்த்தைகள். அமெரிக்க சமுதாயத்தைப் பேசிய உங்களின் சந்திப்பு அழகான கதை வடிவில் ரசிக்க வைத்தது. லூசியானாவைப் பற்றிய தங்களின் பின்னுரை சிந்திக்க வைத்தது. எல்லா மொழிக் கலைஞர்களிலும் பெரும்பாலோர் போதைக்கு பழக்கப்பட்டவர்களாக இருப்பது ஏன் என்பது மட்டும் விடைதெரியாக் கேள்வி!

  பதிலளிநீக்கு
 2. //முள்ளை மட்டும் சுமந்த கொடிக்கு ஒரு சிறிய மலர்.// மிகவும் அருமை! பதிவை படிக்க ஆரம்பித்தபோது ஏற்கெனவே படித்தது போல் இருக்கிறதே என்று நினைத்தபடியே படித்தேன். பிறகு புரிந்தது. இந்த பதிவின் மூலம்தான் இவரை தெரிந்தது. இருந்தாலும் இவர் இறப்பு வருத்தமாக இருக்கிறது.
  பாடல் புரியாவிட்டாலும் அவர் குரலை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. இருந்ததே தெரியாதலால் இறந்த பாதிப்பு எனக்குத் தெரியவில்லை. உங்கள் எழுத்துகளை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. இசையை ரசிக்க மொழி வேண்டாம் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு உதாரணம் அப்பாஜி.போதை அழிவுதான் என்றாலும் கலைஞர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கிறது !

  அருந்துவீர்களா என்றால் விரும்புகிறவன் என்பது நாசூக்கான பேச்சு !

  பதிலளிநீக்கு
 5. 'லூசியானா' என்கிற பெயரைப் பார்த்ததுமே, கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று விவரங்களைத் தேடியது உண்மை!

  பதிலளிநீக்கு
 6. டா வின்சி சொன்ன பாகங்களின் அளவை சூப்பர்ப்!

  முள் சுமந்த கொடிக்கு சிறிய மலர்! டச்சிங் சார்!

  இப்பத்தான் இவங்களை யார் என்று எனக்குத் தெரியும்.

  பதிலளிநீக்கு
 7. நீங்கள் அமெரிக்கப் பிரஜையா.? உடற்பாகங்களின் அள்வைக் குறிக்கும் “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்ற சொற்பிரயோகம் நினைவுக்கு வர வில்லையா.?முள்ளை மட்டும் சுமந்த கொடியா.?பெயரும் புகழும் பெற்றவர் என்றல்லவா எண்ணிக்கொண்டிருந்தேன்.எழுத்தும் நடையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. விட்னி யின் முதல் ஆஸ்கார் மறக்க முடியாதது.என்ன ஒரு ரீச் அவ்ரது குரலில்.
  நீங்கள் அமைத்திருந்த விதம் மிகவும் நன்றாக இருந்தது.
  இந்த இசையை இங்கே கொடுத்ததற்கும் நன்றி துரை.

  பதிலளிநீக்கு
 9. //முழு நிலவை விழுங்க முயல்வது போல் தாவி ஓய்ந்து போகும் அலைகளை ஒன்றிரண்டு நிமிடங்கள் கவனித்து விட்டு, நானும் அந்த அலைகளைப் போல் எதையோ எண்ணி எண்ணி அடைய முயற்சித்து ஓய்ந்து போவது போல் உணர்ந்தேன். //

  மிகவும் ரசித்தேன். மனதை தொட்ட வரிகள்.

  பதிலளிநீக்கு
 10. நிறைய ஆங்கிலம் கலந்தாலும் ‘எதார்த்த’ நடையில்தான் கதை சொல்லியிருக்கிறீர்கள்.
  லூசியானாவுக்காக என் மனம் ரொம்பவே இரக்கப்பட்டது.
  எனவே, இது சாதனைப் படைப்புதான்.

  பதிலளிநீக்கு
 11. அமெரிக்க அவதானிப்பு, அரசியல்வாதிகளுக்கு ஆப்பு, அப்படியே விட்னிகு ஒரு விடையளிப்புன்னு பல நிகழ்வுகளின் தொகுப்பு - அருமை.
  விட்னி-க்கு முட்சுமை அவர் பெண்ணால் என நினைக்கத் தோன்றுகிறது இப்போது. பாபி கிறிஸ்டினாவின் ஓப்ரா நேர்காணலை எங்க ஊர் டி.வி-ல போட்டு தாக்குகிறார்கள், அம்ம போயிட்டாங்க, என் கடைசி பெயரை மாற்ற போகிறேன் என்று ஆட்டம் போடுகிறது பெண்.

  பதிலளிநீக்கு
 12. மிக நன்றி கணேஷ், meenakshi (x2) ஸ்ரீராம்., ஹேமா, ஜீவி, RVS, G.M Balasubramaniam (உடல் உறுப்புகளின் அளவு விகிதாசாரம் தமிழில் வந்திருப்பது தெரியவே தெரியாது, நன்றி), வல்லிசிம்ஹன், பரமசிவம், அரசூரான்,...

  பதிலளிநீக்கு
 13. லூசியானா என்றதும் புரியவில்லை. வல்லி விட்னி என எழுதி இருப்பதைப் பார்த்ததும் ஓரளவு புரிந்து கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 14. அந்த 17ம் தளத்தில் நடந்த உரையாடல்களின் தொகுப்பு எனக்கு ஹெமிங்வேயின் ஒரு சிறுகதையை நினைவுபடுத்தியது. தலைப்பு நல்ல வெளிச்சமான ஓர் இடம் என நினைக்கிறேன்.

  ஒரே வித்யாசம் அந்தக் கதை முழுதும் வெகு சொற்பமாய் சம்பாஷணைகள் இருக்கும்.

  ஒற்றுமை இரண்டுமே படித்தபின் எனக்கு ஒரேவிதமான உணர்வைக்கொடுத்தது.

  நல்ல எழுத்து அப்பாஜி.

  பதிலளிநீக்கு
 15. மிகவும் நன்றி சுந்தர்ஜி. எனக்கு மிகவும் பிடித்த(!) பதிவுகளில் ஒன்று.

  பதிலளிநீக்கு