2011/07/14

மூன்றும் சுழி

வெத்து வேலைபட்டிலும் மெல்லிய ஜீனா


இதைப் படிப்பவர் கவனிக்க:
படித்து முடித்த மூன்று நாட்களுக்குள் பதிலெழுதி, மூன்று பேருக்கு தொடரழைப்பு அனுப்ப வேண்டும்.

மயிலாப்பூரில் ஒருவர் தொடரழைப்பு அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் அவருடைய ரகசிய ஆசை நிறைவேறியது. திருநெல்வேலியில் ஒருவர் கிண்டல் செய்துத் தொடராமல் விட்டதால், அவருடைய முக்கிய வஸ்து சரியான நேரத்தில் ஊஷென்றுக் காற்றில் கரைந்துக் காணாமல் போய்விட்டது.

எனக்கு அழைப்பு அனுப்பியவருக்கு எதிர்பாராவிதமாக ஜீனா லோலோ ப்ரிஜதாவின் பேத்திகள் துணையுடன் ஒரு மாதக் கேரளச் சுற்றுலா வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனக்கு ஏதாவது நேர்ந்தால் இன்னொரு பதிவில் எழுதுகிறேன். ஜூலை மாதம் ஓடிவிடும்.விரும்பும் மூன்று விஷயங்கள்?
க. வருடந்தோறும் பத்து நாள் வனவாசம் (அசல்)
உ. உலகாயதம் மற்றும் அரசியல் பற்றிய அரட்டை
௩. தொன்மையான சிங்கில் மால்ட் ஸ்காச்

விரும்பாத மூன்று விஷயங்கள்?
க. கண்மூடித்தனம்
உ. வரிசையில் நிற்பது
௩. உணவு விரயம்

பயப்படும் மூன்று விஷயங்கள்?
க. ஒவ்வொரு முறையும் புது நோட்டை கொடுக்கும் போது: கடைக்காரர் இது 'கள்ள நோட்டு' என்பாரோ?
உ. எண்பது மைல் வேகத்தில் வண்டி ஓட்டும் பொழுது: ட்ரேன்ஸ்மிசன் புட்டுக்குமோ?
௩. உறங்குமுன் சில இரவுகளில்: காலை விழிக்கும் போது கண் பார்வை போய்விடுமோ?

புரியாத மூன்று விஷயங்கள்?
க. பொதுமக்களின் அரசியல் விவேகம்
உ. விஜய் போன்ற சினிமா நடிகர்களின் வளர்ச்சி
௩. ஐ-போனின் வெற்றி

மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
க. வறுத்த முந்திரிப்பருப்புடன் டப்பா
உ. என் பிள்ளைகளின் புகைப்படங்கள்
௩. அவசரக் குறிப்புக்கு பேப்பர் - பென்சில்

சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் அல்லது மனிதர்கள்?
க. நாகேஷ்
உ. அப்புசாமி கதைகள்
௩. மேல்நிலைப் பள்ளி நாட்கள்

தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
க. சென்னைப் பயணத்துக்கான ஏற்பாடு
உ. வார இறுதியில் முடிக்க வேண்டிய வீட்டு வேலைப் பட்டியல் (கஷ்டம்டா சாமி)
௩. பத்து நாளாய் விட்டுப் போன இணைய உலா

வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
க. பாஸ்டன் மேரதான் ஓட வேண்டும்
உ. வருடக்கணக்கில் மனதை அரிக்கும் நான்கு கதைகளில் ஒன்றையாவது எழுதி முடித்துப் படமாக்கவேண்டும்
௩. சிறுவயது முதல் நான் செய்த தீங்குகளுக்கு அவரவரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்

உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
க. மணம் சுவையோடு கூடிய சைவ அசைவ விருந்துச் சமையல்
உ. என் பெண்ணுக்குக் கார் ஓட்டும் பயிற்சி (லேசுப்பட்ட விஷயமில்லை)
௩. தேவைப்படும் பொழுது உறக்கம் (பொறாமைப் படவைக்கும் என்னுடைய ஒரே தகுதி)

கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
க. நட்பின் மரணம்
உ. நொண்டிச் சாக்கு
௩. ஒபாமாவின் 2012 வெற்றி அறிவிப்பு

கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
க. சேக்சபோன் வாசிக்க
உ. மேன்டரின் பேச
௩. மூச்சையடக்கித் தன்னறிவு பெற (ஆ!)

பிடித்த மூன்று உணவு வகை?
க. பூண்டுக் காரக்குழம்பு (செட்டிநாடு ஸ்டைல்)
உ. வெண்பொங்கல் (மிளகு முந்திரிப்பருப்பு நெய் மணக்க தஞ்சாவூர் பிராமண ஸ்டைல்)
௩. நண்டுக்கறி (மேரிலேன்ட் சிறுநண்டு வகை, கவுண்டர் ஸ்டைல்)

அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
க. முத்துக்குளிக்க வாரீயளா?
உ. உன்னை ஒன்று கேட்பேன்
௩. பட்டிலும் மெல்லிய பெண்ணிது

பிடித்த மூன்று படங்கள்?
க. அனுபவி ராஜா அனுபவி
உ. சில நேரங்களில் சில மனிதர்கள்
௩. அன்பே வா

இது இல்லாமல் வாழ முடியாதென்று சொல்லும்படியான மூன்று விஷயங்கள்?
க. முத்தம்
உ. இசை
௩. நகைச்சுவை

வாழ்வின் லட்சியங்கள்?
க. நோயற்ற வாழ்வு
உ. என் மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு ஒரு காணிக்கை
௩. கண்மூடித்தனம் அடங்க ஒரு துவக்க அமைப்பு

இதைத் தொடர்ந்து எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
க. போகன்
உ. முரளீதரன்
௩. சென்னைப் பித்தன்

25 கருத்துகள்:

 1. உங்களை இதற்கு அழைத்தவர் யார்? அவருக்குத் தான் ஆட்டோ!

  பதிலளிநீக்கு
 2. நானெல்லாம் கூப்ட்டா நீங்க எழுதுவீங்களோன்னு பயந்து நான் கூப்பிடலை.

  நண்டுக் கறி மாதிரி நல்லா இருக்கு சார்! ;-)

  பதிலளிநீக்கு
 3. வருக kggouthaman (ஏற்கனவே ஆட்டோ அனுப்பியாச்சு அவருக்கு - ஆனா கேரளா போயிட்டாராம்), rvs (அதனால் என்னங்க? அழைப்பு அனுப்பவதோட சரி - ஏற்பது நம் கையில் இல்லையே? அதை விடுங்க. முன்னுரை பத்தின உங்க அழைப்பு படிச்சும் எழுத எனக்குத் தகுதியில்லாததால் கைவிட்டேன். முன்னுரை படிக்கும் வழக்கமே இல்லை - வித்யாவின் பதிவைப் படிக்கும் வ்ரை. இப்பத்தான் கொஞ்சம் படிக்கத் தொடங்கியிருக்கிறேன்)

  பதிலளிநீக்கு
 4. தலைப்பும் முதல் பாராவும் உங்கள் ஸ்டைல்...!

  புரியாத மூன்று விஷயங்களில் முதல் இறந்தும் சிரிப்பை வரவழைத்தது...உண்மைதான்...
  மேஜையில் முந்திரி......ஆ....கொலஸ்டரால் ...!
  மேனிலைப் பள்ளி நாட்களுக்குப் பின் சிரிக்க ஒன்றுமே இல்லையா...(புதிய விஷயங்களில்)
  வெண்பொங்கலில் நண்டுக் கறி கலந்து பூண்டுக் குழம்பு தொட்டுக் கொண்டால் எப்படி இருக்கும்?!
  முனுமுனுக்கும் மூன்றாவது பாடல் என்ன பாடல்...எனக்கு 'பூவிலும் மெல்லிய பூங்கொடி' தெரியும்...இது என்ன பாட்டு தெரியலையே...
  பிடித்த படடங்களில் வகைக்கொன்று...!
  முத்தம்லாம் அலுத்துப் போச்சுங்க...!

  பதிலளிநீக்கு
 5. வருக Srikandarajah கங்கைமகன், ஸ்ரீராம், ...

  பெறுகிறோம் அல்லது தருகிறோம்..பிறப்பிலிருந்து இறப்பு வரை முத்தம் நம் கூடவே இருக்குதே ஸ்ரீராம்? ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையிலும் முத்தம் போதாதே..? ரொம்ப சாப்பிட்டா கொழுப்பு அதிகம் ஆனா முந்திரியில் கொலஸ்டிரால் கொஞ்சம் கூடக் கிடையாதுங்களே? nature's vitamin pill ஆச்சே முந்திரிப்பருப்பு? வெண்பொங்கலோடு பூண்டுக்குழம்பு நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. உங்களுக்கென்று தோணுது பாருங்க! பட்டிலும் மெல்லிய பெண் - 'மைனே ஏக் கஸம் லீ' கேட்டிருக்கீங்களா? அதுலந்து இதுவா இதுலந்து அதுவானு தெரியாது, ஆனா பட்டு கஸமை விட பத்து படி மேலே.

  பதிலளிநீக்கு
 6. மூன்று மேட்டர் சூப்பரா இருக்குங்க

  பதிலளிநீக்கு
 7. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எனினும் இதுவரை தெரிந்திராதவர்களுக்கு http://www.appusami.com
  ----------------------
  சென்னைக்கு எப்போது?
  ----------------------
  எங்கள் இல்லத்திற்கு வந்தால் முதலிரண்டு உணவுவகை - காஞ்சிபுரம் ஸ்டைலில் :-) பரிமாறுவோம்.
  ------------

  பதிலளிநீக்கு
 8. பூண்டு போட்டு பழப்புளிவிட்ட நண்டுக்குழம்பும் புட்டும் சாப்பிட்டுப் பாருங்க அப்பாஜி.கொஞ்சம் உறைப்பு தூக்கலா இருக்கணும் !

  முத்தம்....!

  பதிலளிநீக்கு
 9. சுவாரசியமான பதிவு! தலைப்பு அசத்தல்! நூறு சதவிகிதம் அப்பாதுரை ஸ்டைல். உங்கள் வாழ்வின் இலட்சியங்கள் உயர்வானது. நிறைவேற வாழ்த்துக்கள்!

  ஸ்ரீராம், பாடலை நீங்கள் கேட்க விரும்பினால்,
  http://www.raaga.com/play/?id=204596

  பதிலளிநீக்கு
 10. //"ஸ்ரீராம், பாடலை நீங்கள் கேட்க விரும்பினால்,...."//

  அந்த லிங்க் திறக்காம சுத்திக்கினே இருக்குங்க...

  பதிலளிநீக்கு
 11. வருக Riyas, பாலராஜன்கீதா, ஹேமா, meenakshi, ஸ்ரீராம்,...

  சென்னையில் ஒரு நாள் சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது - நன்றி பாலராஜன்கீதா. காஞ்சிபுரம் ஸ்டைல் என்ன தெரியலியே (பயமா இருக்குதே?)

  ஹேமா.. நீங்க எழுதியிருக்கிற விதமே ருசியா இருக்குங்க! செய்து சாப்பிட்டுச் சொல்கிறேன்.

  ஸ்ரீராம் லிங்க தேடாதீங்க, இங்க தேடுங்க. இங்கனா இங்க இல்லிங்க அதோ அங்க, மேல..

  பதிலளிநீக்கு
 12. தேடினேன்...மேலே பார்த்தேன்...இருந்தது. கேட்டேன்.

  கேட்டபிறகு ஏற்கெனவே கேட்டிருக்கேன் என்று தெரிந்தது. நல்ல பாடல் திறமையான நகல். நீங்கள் சொல்லியிருக்கா விட்டால் இது 'ஹே மைனே கசம் லீ' பாடலின் நகல் என்று தெரிந்திருக்காது! இதே போல் சமீபத்தில் தீஸ்ரி கசம் பாடல் ஒன்றுக்கு-முஹம்மது ரஃபி தனிப் பாடல் 'ஓ ஹசீனா ஜூல்ஃபேவாலி' - மற்றும் கேரவான் பாடல் 'பியாத் தூ' பாடலுக்கும் தமிழில் நகல் இருப்பதும் சமீபத்தில்தான் தெரியும். இரண்டுமே ஜெய் சங்கர் நடித்த படங்களில் வரும் பாடல் என்பது கூடுதல் சுவாரஸ்யம். தீஸ்ரி கசம் படத்திலும் கேரவான் படத்திலும் மற்ற பாடல்கள் நகல் தமிழில் ஏற்கெனவே தெரியும். இது அதுபோல் இல்லாமல் சொன்னபிறகுதான் காபி என்று தெரிந்தது.இப்படிச் சொன்னால்தான் தெரியும் லிஸ்ட்டில் இன்னும் ஓரிரண்டு பாடல்கள் சொல்ல முடியும்...'ஓஹோஹோ...கோயா கோயா சாந்...' சாவன் கா மஹீனா..'

  பதிலளிநீக்கு
 13. சூப்பரோ..சூப்பர்...அந்த ஃபோட்டோவைப் பார்த்ததும் ஜீனாவோட பேத்தி பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாயிருக்(கா!)கு!
  கேரளா டூர் போகலை! ஆட்டோக்குத் தான் வெயிட் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கேன்!

  பதிலளிநீக்கு
 14. சூப்பர்

  - நான்வெஜ் சாப்பிடுவதில்லை. அதனால் நண்டை கேட்டவுடன் நேற்று சாப்பிட்ட வெண்பொங்கல் கூட வாந்தியாய் வந்துவிட்டது !!
  - இந்திய பயணமா ? பலே பலே. ஆகஸ்ட் கடைசி என்றால் என் தம்பி பிள்ளை உபநயனம் இருக்கு. நானும் மூன்று வாரமோ / ஒரு மாதம் செல்லவிருக்கின்றேன். வேலை போனாலும் மயிராய் போயிற்று என்று செல்ல எண்ணம். இலஞ்சி மற்றும் ஹொரநாடு போக எண்ணம்.
  - படித்த பள்ளிக்கு பணம் செலுத்தி ஆகிவிட்டது. கும்பகோணம் அருகே ஆடுதுறையில் ஒரு பள்ளிக்கு கணணிகள் / ஆண்டுதோறும் ஒரு பிள்ளையை படிக்க வைத்துக்கொண்டு இருக்கின்றேன். அங்கு சென்றும் காண ஆசை
  - படம் இரண்டு ஒக்கே. ஆனால் மூன்று படத்திலும் நாகேஷ் இருப்பதால் பிழைத்துப்போங்கள்.
  - முத்தம் - அப்படி என்றால் ?
  - சக்ஸபோன் - வாவ். நான் விடும் ஒரே காத்து சிகரெட் பிடித்து விடுவது தான் - அதனால் அடுத்ததும் முடியாது
  - நேற்று நியூயார்க் ஐவி லீக் கொலம்பியா காலேஜில் உட்கார்ந்து இருக்கும்போது என் பெரியவன் சினிமாவில் நடிக்கட்டுமா என்று கேட்டான் !! உங்கள் படத்தில் அவன் ஹீரோ ஆனால் ஹீரோயின் எனக்கு. சூப்பரா முத்தம் கொடுக்கற நடிகை - வேண்டுமென்றால் நம்ம நித்தியிடம் கேட்டான் கரீட்டா சொல்லுவாரு !)

  ஸ்ரீராம், பாட்டு துரை தான் எனக்கு அறிமுகம் படுத்தினார். நான் உங்களுக்கு அனுப்பிக்கொடுக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 15. வித்தியாசமா எதையாவது படிக்கனுமா மூன்றாம் சுழிக்கு வாங்க ..... பாதாம் அல்வா சாப்பிடறமாதிரி பதில் சொல்லிட்டிங்க ...
  நண்டும் கடல்புஷ்பம் வகையறவா... நீங்க நண்டு மட்டும் சொல்றிங்க ...பிடித்தவகையில் கமல் சிக்கனையும் சேர்த்திப்பார்...

  பதிலளிநீக்கு
 16. ஜீனா ரொம்ப இறுக்கமாம ட்ரெஸ் போட்டிருக்காலே கிட்டப் போய் பார்ப்போம்னு கிளிக்கினால் தமிழர் இலக்கியம்னு ஒரு ஆளு நெஞ்சப் பிடிச்சுட்டு நிக்கராப்ல ஒரு போட்டோ வருதே..உங்களோட பின் நவீனத்துவ உத்தியா இது?

  பதிலளிநீக்கு
 17. வருக ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, சாய், பத்மநாபன், மாலதி, bogan, ...

  பதிலளிநீக்கு
 18. ஒரு எழுத்து மாறிப்போச்சு bogan. அநியாயத்துக்கு ஆசை போய் மீசை வந்துடுச்சே? நானே பயந்துட்டேன்..

  பதிலளிநீக்கு
 19. unlike me ... மூணு-ன்னா அழகா மூணு மட்டுமே எழுதியிருக்கறது- ரொம்ப பிடிச்சது, sir ! :)
  gina lollobrigida photo connection 1st புரியல... அப்புறம் தான் அந்த பாட்டு பாத்தேன்! :) good choice !!

  பதிலளிநீக்கு
 20. வருக Matangi Mawley. பாட்டுக்கும் ஜீனாவுக்கும் connection இல்லை - 'பட்டிலும் மெல்லிய பெண்' நான் அடிக்கடி முணுக்கும் பாட்டு அவ்வளவுதான். கொஞ்சம் இருங்க. கனெக்சன் இருக்காப்ல இருக்கே? :)

  பதிலளிநீக்கு
 21. மூன்று நாட்களுக்குள்ளாகவா! பயமுறுத்துகிறீர்களே!இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்கள் சார்.யோசிக்க வேண்டாமா?

  பதிலளிநீக்கு
 22. அருமையாய் மூண்றாம் சுழியில் மூண்றுவிஷயங்கள் பகிர்ந்ததற்கு மூண்று பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 23. எதிலும் மிகத் தெளிவாக இருக்கிறீர்கள் என்பதை
  சுற்றி வளைக்காத உங்கள் பதில்கள்
  தெளிவாகச் சொல்லிப்போகின்றன
  பிடிக்காத விஷயங்கள் அண்டாது ஒதுங்கவும்
  பிடித்த விஷயங்கள் வந்து சேரவும்
  ஆசைகள் முழுமையாக நிறைவேறவும்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு