2009/05/23

ஜிபாமாவுக்கு ஜே!

போக்கற்ற சிந்தனை


'மாற்றம் வருது மாற்றம் வருது' என்று ஓயாமல் வாய்க்குசு விட்டுக் கொண்டிருக்கும் ஒபாமாவின் பேச்சுக்கும் ஜிபாமாவின் பேச்சுக்குமிடையே தென்படுவது யதேச்சையான ஒற்றுமை, யதேச்சையான ஒற்றுமையைத் தவிர வேறில்லை.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் 'alumni reunion' சாக்கில் என் பழைய நண்பர்களைச் சந்தித்து உரையாட வாஷிங்டன் டி.சி வந்திருந்தேன். வழக்கமாக நாங்கள் சந்திக்கும் Capital Grille உயர்தர மாட்டுக்கறி மற்றும சைவ உணவகத்தில் அநியாய விலை கொடுத்து உணவருந்தி அரட்டையடிக்கத் தயாராக வந்திருந்தேன். வழக்கத்தை விட இரண்டு மணி நேரம் சீக்கிரமே வந்துவிட்டதால், அங்கே இங்கே சுற்ற விரும்பாமல் நேரே 'restaurant lounge'க்குப் போய் பலான பானகம் அருந்தலாம் என்று நுழைந்தால் இடம் விசித்திரமாக இருந்தது. என்னை வரவேற்று அழைத்துச் செல்ல இருவர் வந்ததும், விசித்திரம் வியப்பாக மாறியது. என்னைத் தனியறைக்குள் அழைத்துச் சென்று அமரச் செய்ததும், வியப்பு பயமாக மாறியது. அச்சத்தை வெளிக்காட்டாமல், டிப் டாப் உடையணிந்து எனக்கு முதுகைக் காட்டியபடி நின்றிருந்த bartenderஐ அழைத்து, ஒரு சிங்கில் மால்ட் தரவழைத்தேன். Bartender திரும்பியதும் நான் அதிர்ந்து போய் எழுந்தேன். "நீங்கள்.. நீங்கள்... ஐயம் சாரி, இது என்ன இடம்..நீங்கள் இங்கே..bartender.." என்று பொருளில்லாமல் ஏதோ புலம்பத் தொடங்கினேன். Bartender என் கையைக் குலுக்கி, "நாணயமுள்ளவர்களுக்கும் நல்லவர்களுக்கும் நான் என்றைக்குமே bartender தான். Set the bar high and the feelings tender. Hope is our treasure, future is our measure, meeting you is my pleasure" என்று அடுக்கிக் கொண்டே போனார். பிறகு, ஒரே தாவலில் என் எதிரிலிருந்த நாற்காலிகளை எகிறிக் குதித்து என் அருகே வந்து உட்கார்ந்தார். அவரே தான். சந்தேகமே இல்லை.

"நீங்கள்..." என்று நான் கேட்டு முடிக்குமுன் அவரே சொன்னார். "ஆமாம், நான் ஜிபாமாவே தான். என்னைத் தெரியவில்லையா?" என்றார் மறுபேச்சு வராமல் தவித்துக் கொண்டிருந்த என்னிடம்.

"ஐயையோ, உங்களைத் தெரியாமலா? நான் ஓட்டு போட்டு... என்ன, ஜிபாமாவா? கிண்டலா? நான் இன்னும் குடிக்கத் தொடங்கவேயில்லை" என்றேன். இவர் நிச்சயம்... ஜிபாமாவா? "பேரை மாத்திக்கிட்டா அடையாளம் தெரியாதுனு நெனச்சது சரியாப் போச்சு" என்று தனக்குத் தானே அவர் சொல்லிக் கொண்டது என் காதில் விழுந்தாலும், அவரை அந்த இடத்தில் bartenderஆகச் சந்திப்பது என்பது...எனக்குக் குழப்பமாக இருந்தது. என் நிலையைப் புரிந்து கொண்டவர் போல், "உங்கள் மனதில் என்ன குழப்பம்?" என்றார்.

"இல்லை, நாட்டில் இத்தனை பிரச்னைகள் இருக்கும் போது இங்கே உட்கார்ந்து" என்று நான் முடிக்குமுன், "மாறுதல் வரும், பின் ஆறுதல் வரும். எல்லாவற்றுக்கும் திட்டம் உண்டு. ஏய்ப்பவர்களுக்கு சட்டம் உண்டு" என்றார். என் கையில் ஒரு சிறிய கிண்ணத்தைத் திணித்து சிங்கில் மால்ட் ஸ்காச் ஊற்றினார். ஒரே வாயில் குடித்தேன். அடித்தொண்டையிலிருந்து அந்தரங்கம் வரை எரிந்து ஓய்ந்ததும் அவரைப் பார்த்தேன். "சரி, மிஸ்டர் ஜிபாமா. நாட்டுத் தலைவர் என்ற முறையில் உங்களைச் சில கேள்விகள் கேட்கலாமா?" என்றேன்.

"கேளுங்கள். நான் முதலில் தொண்டன், பிறகு தான் தலைவன். I am a messenger, not a messiah" என்றார். ஸ்காச் புட்டியை அப்படியே வாயில் வைத்து ஒரு இழு இழுத்துவிட்டு என்னிடம் கொடுத்தார். "புட்டியோட அடிச்சா நல்லா இருக்கும்" என்றார்.

"மாற்றத்தை கொண்டு வருவேன்" என்று தேர்தலில் சொல்லி விட்டு, நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பழைய கதையையே புரட்டிக் கொண்டிருக்கிறீர்களே? உங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அத்தனை பேரும் பழம் பெருச்சாளிகள் தான். ஊழலை ஒழிப்பேன், அதை உடைப்பேன் இதைத் துடைப்பேன் என்று சொல்லிவிட்டு நீங்கள் என்ன செய்தீர்கள்? துணையதிபர் தேர்விலேயே நாங்கள் இதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இருந்தாலும் உங்களை நம்பி ஓட்டுப் போட்டவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?"

"மாற்றத்துக்கும் ஏமாற்றத்துக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம். ஆசைக்கும் பேராசைக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்" என்றார்.

"ரெண்டு" என்றேன். கவனிக்காமல் "மாற்றம் வரும் என்று விரும்புறது ஆசை. உடனே வரும்னு விரும்புறது பேராசை" என்றார்.

"இது ஒரு பதிலா? இதுக்குத் தான் உங்களுக்கு ஓட்டு போட்டோமா?"

"கேள்வியை வைத்துத் தான் பதிலை எடை போட வேண்டும். பதிலுக்கான கேள்வியா, கேள்விக்கான பதிலா? எழுதும் போது எண்ணம் என்கிறோம், எழுதி முடித்தால் காவியம் என்கிறோம்"

"யோவ்" என்று மனதுக்குள் பொங்கிய ஆத்திரத்தை அடக்கி, "இந்த financial crisis எப்போது விலகும்? உங்கள் திட்டம் உருப்படுமா? ஏற்கனவே கையிலிருந்த காசையெல்லாம் வீணாக்கிய வங்கிகளுக்கு இன்னும் பணம் கொடுக்கிறீர்களே? இதெல்லாம் உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? உங்கள் treasury departmentல் அமெரிக்காவின் அத்தனை வங்கிகள் விவரமும் இருக்கிறது. டாம் ஹேங்க்ஸ் ட்ரெயலர் போல 'எந்த வங்கிகள் மோசமானவை என்று எங்களுக்குத் தெரியும்' என்று உதார் விடுகிறீர்களே தவிர, அந்த வங்கிகளின் பெயரையோ விவரங்களையோ வெளியிடுகிறீர்களா? இல்லையே?"

"வெளியிட்டால் சனங்க கலங்குவாங்களே?"

"விவரம் தெரியாமல் பணம் போட்டு அது போண்டியானால் கொண்டாடுவாங்களா? சரி, பெயரைச் சொல்ல வேண்டாம். You can consolidate the under performing banks and have them managed by the larger banks to whom you are lending money. In fact, consolidating assets can also reduce some of the lending burden on your side. Asset marginalization பற்றி உங்களுக்குத் தெரியாதா? "

"இன்னொரு விஸ்கி சாப்பிடறீங்களா?" என்றார். என் கையிலிருந்த கிண்ணத்தைப் பிடுங்கி விஸ்கி ஊற்றி நிரப்பினார்.

"Mortgage crisis பத்திப் பேசுவோம். Bad loans என்று சொல்லி நீங்க என்ன செய்யறீங்க? கடன் கொடுத்த அதே வங்கிகளுக்கு நீங்களும் bad loans கொடுக்கறீங்களே? அதுக்குப் பதிலா கஷ்டப்படுற மக்களுக்கு உதவி செய்யலாமே?" என்றேன்.

"என்ன செய்யலாம் சொல்லுங்க? மக்களுக்கு உதவி செய்யத் தானே நான் அரசியலுக்கு வந்ததே? சிகாகோவுல Real Estate சட்டங்களை வளைத்து நிறைய சொத்து சேத்து மறைச்சு வச்சதெல்லாம் யாருக்காக? மக்களுக்காகத் தானே? ஆமாம், உங்களுக்கு எத்தனை மக்கள்?" என்றார்.

கோபம் வந்தது. கையிலிருந்த கிண்ணத்தைக் காலி செய்தேன். "மக்கள்னா பொதுமக்கள்யா. உனக்கு ஓட்டு போட்டவங்க". நீங்கள் நீயானது தெரியாமல் தொடர்ந்தேன். "Bad loansனே வச்சுக்குவோம். அதை வாங்க நீங்க பணம் கொடுத்தா உங்க கடனும் மோசம் போகும் தானே? அதுக்கு பதிலா, Home mortgage loan forgive பண்ணலாமே? அதிகம் வேண்டாம், வீட்டுக் கடன் அளவை வச்சு ஐம்பது சதவிகிதம் வரை கடனைத் திருப்பிதர வேண்டாம்னு சட்டம் போட்டீங்கன்னா அது உதவியா இருக்குமே? அது அதிகம்னா அரை மிலியன் என்று ஒரு உச்சவரம்புக்குள்ளே கடனை ரத்து செய்யலாமே? வீட்டுக் கடன் சுமை குறைஞ்சுதுனா மாதா மாதம் கட்ட வேண்டிய தொகையும் குறையும். வீட்டின் பேரில் இருக்கும் equityயும் உபயோகமாகும். எப்படியும் இந்த வங்கிகளுக்கு கடன் கொடுத்தீங்க, அந்த பணத்துல பாதியை உபயோகிச்சு கடன் ரத்து சட்டம் போட்டிருக்கலாமே? உண்மையான உதவியா இருந்திருக்குமே? எப்படியிருந்தாலும் அதே பணம் தான். அதே நஷ்டம் தான். இந்தக் கடன் ரத்தை சட்டபூர்வமாக்கி அடுத்த மூன்று வருடங்களுக்கு அரசாங்க அங்கீகாரம் கொடுத்து mortgage மற்றும் mortgage backed securitiesக்கான GAAP முறைகளையும் மாற்றச் சட்டம் கொண்டு வந்திருக்கலாமே? One time financial emergency act போட்டிருக்கலாமே? Instead of circulating liabilities, you could have helped to legally convert them into assets. கடன் பட்டவங்க, கடன் கொடுத்தவங்க எல்லோருக்கும் உதவியா இருந்திருக்கும். இப்ப என்ன ஆச்சு பாருங்க. நீங்க கொடுத்த கடன் பணத்தை வச்சுக்கிட்டு சிடி பேங்கும் ஏஐஜியும் ஜேபி மோர்கனும் பேங்க் ஆப் அமெரிகாவும் புது ப்ளேன், போனஸ், பார்ட்டினு கோடிக்கணக்குல ஊதாரித்தனமா செலவழிச்சாங்க. எங்களுக்கு என்ன கொடுத்தாங்க?"

"ஒண்ணும் கொடுக்கலையா? தேவடியா பசங்க. எனக்குத் தெரியாம போச்சு பாருங்க" என்றார். அருகிலிருந்த கிண்ணத்தை என்னிடம் நகர்த்தி, "இந்தாங்க முந்திரி பருப்பு, ஏதோ என்னால் ஆனது. இவ்வளவு பேசறீங்களே, என்ன வேலை பாக்கறீங்க?" என்றார்.

"வேலையில்லீங்க, போயிடுச்சு. இன்னிக்கு நாட்டுல இருக்குற 15% வேலையற்றோரில் நானும் ஒருவன்" என்றேன்.

"பதினஞ்சா? ஆறு சதவிகிதத்துக்கு மேலே போடக் கூடாதுன்னு தெளிவா சொல்லியிருந்தேனே? எங்கே அந்த பேமானி Press Secretary..." என்று சுற்றுமுற்றும் பார்த்தார்.

"அட, நீங்க வேறே! ப்ரெஸ் செக்ரடரி சொன்னா ஆச்சா? உங்களுக்கு ஓட்டு போட்டோம்னதுக்காக எங்களையெல்லாம் என்ன அடிமுட்டாள்னு நெனச்சுட்டீங்களா? வேலையற்றோர் எண்ணிக்கையை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்துல கணிக்கிறாங்கன்னு தெரியாதா? டிபார்ட்மென்ட் ஆப் லேபர் வெப் சைட்டிலே உக்காந்து பொறுமையா கணிச்சிங்கன்னா நான் சொல்ற கணக்கு உங்களுக்குப் புரியும். வேணாம், உங்களுக்குப் புரியாது. உங்க மீடியாக்காரங்களே 9% சொல்றாங்க, எங்கிருந்து ஆறு சதவிகிதம்னு சொல்றீங்க?" என்றேன்.

"என்பிசி ஏபிசில எல்லாம் சொல்லலை? நீங்க டிவி பாக்குறதில்லையா?" என்றார்.

குழறினேன். "Media? You mean consortium of liberal fucking degenerates? எல்லாம் உங்க ஆளுங்க" என்று கோபத்தில் எழுந்த போது தடுமாறினேன். "ஏன்யா யோவ்! உன்னை என்னவோ ஏசு மாதிரி இல்லே நடத்துறாங்க டிவிக்காரங்க? நீ குசு விட்டா கூட மணக்குதுன்றாங்கய்யா பத்திரிகை டிவிக்காரங்க. நீ இன்னி வரைக்கும் வந்து செஞ்ச பித்தலாட்டங்களையெல்லாம் என்னவோ புதுக் கண்டுபிடிப்பு போல கொண்டாடுறாங்க. ஏன்யா, நாட்டுல இத்தனை பிரச்னை இருக்குது. தினம் ஆப்கனிஸ்தேன்ல மோசமாகிக் கிட்டே வருது. நீ அதைக் கவனிக்காம என்னவோ க்யூபா, கிட்மோனு பெனாத்திக்கிட்டிருக்கிந்தா எப்படி?" என்றேன். என்னைப் பிடித்து உட்கார வைத்தார். "மன்ழிறுச்சுடுக, கொழ்சம் மப்பு ஏறி மரியாதை குறைஞ்சிடுச்சு" என்றேன்.

"பரவாயில்லை பிரதர். தேர்தல் போது என்ன சொன்னாங்க? எனக்கு வெளியுறவு அனுபவம் இல்லைனு சொன்னாங்களல்ல? அதுக்காகத் தான் இப்ப எல்லாமே Foreign policy. அதுவும் இல்லாம அந்தம்மாவை வேறே SOSஆ போட்டுட்டனா, ரொம்ப தொந்தரவா போச்சு. வேற எதனா பேசுவோம்" என்றார்.

"சரி, இப்ப ஆட்டோ தொடர்பான புது வரம்புங்கள வெளியிட்டிருக்கீங்களே, அதைப் பத்திப் பேசுவமா?" என்றேன். "ஒரு கேலனுக்கு முப்பத்தஞ்சு மைல் கிடைக்கும்படி கார் தயாரிக்கணும்னு அமெரிக்க கார் கம்பெனிங்களுக்கு சொல்லியிருக்கீங்க"

"எப்படி, நம்ம திட்டம்? இந்த மாதிரி ஒரு குறிக்கோள் இருந்தா தான் செயலும் வரும்" என்றார்.

"ஆனா, இப்பவே கேலனுக்கு ஐம்பது மைல் கிடைக்குற மாதிரி ஜப்பான் காரங்க அத்தனை பேரும் கார் வித்துக்கிட்டிருக்காங்க. முப்பத்தஞ்சு மைல் தான் குறிக்கோள்னா அமெரிக்க கார் தொழிற்சாலைங்க எப்படி உருப்படும் சொல்லுங்க? குறிக்கோள்னா அது பெருமைப்படுற மாதிரி உயர்ந்ததா இருக்க வேண்டாமா? ரசியா காரங்க ஸ்பட்னிக் விட்டப்போ கெனடி என்ன குறிக்கோள் கொடுத்தாரு? பூமியை விட்டு மேலே போய் ரெண்டு சுத்து சுத்திட்டு வரணும்னா அமெரிக்க விஞ்ஞானிகள் கிட்டே சொன்னாரு? பத்து வருசத்துக்குள்ள சந்திரன்ல ஆளை இறக்கிக் காட்டுவோம்னு குறிக்கோள் எடுன்னாரு. அது குறிக்கோள்யா"

"கெனடியா சொன்னாரு? நான் ஒருத்தன் இங்கே இருக்கேன்.."

"இது வேறே கெனடிங்க... நீங்க வேறே?! உங்க பேச்சையெல்லாம் கேக்குறப்ப எனக்கு இன்னொருத்தர் சொன்னதும் ஞாபகத்துக்கு வருது"

"என்னங்க அது, சீக்கிரம் சொல்லுங்க."

"அதுக்குள்ளே அவசரமா? இன்னும் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு இதுல எல்லாம் நீங்க அடிக்கிற கூத்தைப் பத்திப் பேச வேணாமா?"

"ஆட்சிக்கு வந்து நூறாவது நாள் கொண்டாடுறோம் இல்ல, இன்னிக்குத் தான் கடைசி விழா. போகணும்" என்றார்.

"நான் சந்திரனைச் சுட்டிக் காட்டினால் நீ ஏன் என் விரலைப் பார்க்கிறாய்?" என்றேன்.

"நான் உங்க விரலைப் பாத்தனா, என்ன சொல்றீங்க?"

"போங்க, போங்க. உங்களுக்கு இதெல்லாம் புரியாது. ஆட்சிக்கு வந்துட்டீங்கல்ல? இனி இதெல்லாம் தேவையில்லை. எங்க பொருளாதார நெருக்கடி, வீட்டு வசதி, கல்வி, உடல்நலம் பிரச்னைகள் எல்லாம் என்னைக்கும் மாறப் போறதில்லை. உங்களை மாதிரி வெத்து வேட்டு அரசியல்வாதிங்க ஆட்சிக்கு வந்து சும்மா வார்த்தைல வானவில் கட்டி எங்க கண்ணையும் மனசையும் மூடிடுவீங்க"

"அட, நல்லா இருக்குங்க. அதை இன்னிக்கு என் பேச்சுல சொல்லிடவா?" என்றபடி நகர்ந்தார்.

நண்பர்கள் இன்னும் வரவில்லையே என்று சுற்றிப் பார்த்தால் இன்னொருவர் உள்ளே வந்தார். பார்த்தால்... பார்த்தால்... பார்த்தால்..."நான் ஏமாறமாட்டேன். கேட்டா நான் பாபி இல்லை, கூபி்னு எதுனா சொல்வீங்க" என்றேன்.

"இல்லை, நான் பாபி ஜிந்தால் தான்" என்றார். போதை என்றும் பார்க்காமல் பிடித்தேன் ஓட்டம்.

1 கருத்து:

  1. P.Suguna, sp84@rocketmail.comமே 24, 2009

    உங்க திட்டத்தை விவரமா எழுதி ஒபாமாவுக்கு அனுப்ப வேண்டியது தானே?

    பதிலளிநீக்கு