2015/02/22

காதலன்பா



காதலன் உந்தன் கவித்தேன் கவனித்தேன்
போதாதுன் பாத்தேன் பருகினேன் - காதல்
மயக்கத்தில் ஊறுந்தேன் உன்னிடம் தந்தேன்
தயங்காமல் வந்தருந் தேன்.

காதலுக்குக் கண்ணில்லை கண்ணா எனதழகை
ஆதலால் உன்கைவிரல் பட்டறிவாய் - காதலில்நீ
தொட்டதை நானறியத் தோதாக விட்டுப்போ
பட்டுதடு பட்டத் தடம்.

நித்தமும் பேசுவோம் சத்தமாய்க் கூடுவோம்
பித்தராய்க் காணுவோம் பேரின்பம் - முத்தமிட்டு
பேசும் மொழிகளின் ஓசையை மிஞ்சுமே
வீசிய கூடலின் மூச்சு.

ன்னுடலும் உன்னுடலும் ஒட்டும் உறவிலே
இன்ப வெளிகள் தினந்திறக்கும் - என்றாலும்
என்னுயிரில் உன்னுயிர் சேரும் உறவில்தான்
உன்மத்த ஆழம் பிறக்கும்.

னிவாய் நிதமும் நெருங்கிப் பதிப்பாய்
கனிவாய் உதட்டிலே முத்தம் - பனியாய்
விலகும் தனிமை நரகம் இனிமை
உலகம் நமதே இனி.

பொன்னோ புதுப்புடவைப் பூவோ தரவேண்டாம்
அன்பை அளித்துத் தினங்கொஞ்சு - என்னை
மதித்து மனமொன்றி நீவாழ்ந்தால் உன்னைத்
துதிக்கும் தமிழாலென் நெஞ்சு.

7 கருத்துகள்:

  1. என்ன ஆயிற்று உங்களுக்கு , திடீரென்று காதல் வெண்பாக்கள். உண்மைக்காதலை தொட்டுத்தான் அறியவேண்டுமா. அப்படியே தொட்டாலும் தோதாக அதை அறிய பட்டுதடம் பட்ட தடம் விட்டுப்போக வேண்டுமா.?இருந்தாலும் ரசிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. "காதலுக்கு கண்ணில்லை கண்ணா எனதழகை
    ஆதலால் உன்கைவிரல் பட்டறிவாய்"

    காதலுக்கு கண்ணில்லை என்பதற்கு இப்படி ஒரு புது விளக்கமா...? இது அருமையான புதுமை. மொத்தத்தில் "காதலிப்பா"வுக்கு இணையான காதலன்பா...!!!

    பதிலளிநீக்கு
  3. நாலாம் கவிதையும், ஆறாம் கவிதையும் ஆண்டாளை நினைவூட்டின. அதே சமயம் இது வெறும் மானுடக் காதல் அல்ல என்பதையும் சுட்டுகிறதோ? இரண்டிலும் உள்ளார்ந்த ஆன்மிகத் தேடல் தெரிகிறது. :))

    பதிலளிநீக்கு