2015/02/14

காதலிப்பா






ட்டிக் கரும்பே கனியினிமைக் காதலியே
ஒட்டிக் களிக்கலாம் வாகண்ணே - இட்டு
எழுதலாம் முத்தக் கவிதை தடைகள்
முழுதும் துறந்து விடு.

னியோர் விதிசெய்வோம் இன்பமாய் வாழ்வோம்
நனிவகையில் கூடிக் களிப்போம் - தனிமையில்
யாரும் அறியாமல் ஒன்றுபட்ட நம்முறவை
ஊரும் அறியுமே இன்று.

முனிவோரும் பெறா ரகசிய முக்தி
இனியோர் கணமும் பெறலாம் - கனிவாகத்
தொட்டால் மலரும் மதுமொட்டில் என்னதரம்
பட்டால் தெறிக்குமே தேன்.

முத்த மையினால் காதல் மடலொன்று
பித்தனென் மார்பில் எழுதிவிடு - நித்தம்
புதுக்காதல் செய்திதரும் உன்னுடலை நானும்
மெதுவாய்ப் படிக்க விடு.

னிப்பாலில் தேன்கலந்தக் கன்னலின் சாறுன்
இனிப்பான முத்தமிதைச் சொல்லும் - கனிபிழிந்தப்
பாலில் கலக்கும் கரும்புத்தேன் போலநாம்
மேலும் ஒன்றாவோம் என்று.

ன்றாகும் வேகமெலாம் நின்றாலும் என்கண்ணே
நன்றாகும் நாளெல்லாம் மோகமது - என்றமிழ்
யாப்பினும் மேலாய்ச் சுரந்திடும் நம்காதல்
தோப்பினில் மோக மது.


15 கருத்துகள்:

  1. மதுகாட்டா போதை மலரென்று வெண்பா
    அதுகாட்டி நிற்க அருந்தி - புதிதாக
    உங்கள் வலைப்பூவில் ஊன்றி வெளிப்போகா
    தங்கும் இருவண்டு 'கள்'.

    தங்கள் தளத்திற்கு முதலில் வருகிறேன் . தங்களைத் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. பா படித்து இன்புற்றேன்.

    பதிலளிநீக்கு
  3. காதலி என்றால் அவள் விசேஷமானவள்.

    இரண்டாவது வரியிலேயே 'ஒட்டிக் களிக்கலாம் வாகண்ணே' என்று அழைத்தால் 'என்னாச்சு?' என்று விநோதமாகப் பார்ப்பாள். நோக்கம் தெரிந்து "அதற்கு வேறே ஆளைப் பாருங்கள்" என்று முகஞ்சுளித்து நடையைக் கட்டுவாள்.

    உடலொட்டலுக்குத் தடா போட்டால் தான் பொறுப்பான கல்யாணத்தில் முடியும் உண்மையான காதல்!

    பதிலளிநீக்கு
  4. எழுதுவதற்கு நேரம் கிடைக்காவிட்டாலும் அனுபவித்ததை அனுபவித்து எழுத முடியும் உங்களைப் பார்த்தால் பொறாமை( அப்படிச் சொல்லக் கூடாது என்று ஒரு நண்பர் கூறியது நினைவுக்கு வந்தாலும் ) யாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. இப்படி அழகான வெண்பாக்களைப் படிச்சால் நீங்க தலைப்புல காதலிப்பா அப்படின்னு ரெகமண்ட் பண்ணிருக்கற மாதிரி காதலிக்கற ஐடியா வந்துருது அப்பா ஸார். அசத்திட்டேள்...

    பதிலளிநீக்கு
  6. இந்தக் கவிதைகளைப் படித்தால் அவ நிச்சயம் 'காதலிப்பா'!

    பதிலளிநீக்கு
  7. நசிகேத வெண்பா போல மற்றுமொரு அமர காவியத்தை எப்போது கொடுப்பீர்கள் அப்பாதுரை? (கருட புராண வெண்பா?)

    பதிலளிநீக்கு
  8. கவிதையிலும் கலக்கல்! நல்லா இருக்கு கவிதையும் அதைத் தொடர்ந்த மிரட்டலும்! :))))

    பதிலளிநீக்கு
  9. இந்த கவிதையை படிச்சிட்டு காதல் உணர்வு எழாமல் இருந்தால் தான் ஆச்சர்யம் !! :-)

    ம்... எனக்குஇனி கவிதை எழுதுற ஆசையே வராது போல (பின்ன அதெல்லாம் ஒரு தமிழா ?!) :

    அழகு தமிழ் !! வாழ்த்துகள் நண்பா !!

    பதிலளிநீக்கு