2014/10/31
இன்று போல் என்றும்
    நீண்ட நாட்களாகவே இதை எழுதியாக வேண்டும் என்ற வேகம் இருந்து வந்தது. நானறிந்த பெரும்பாலோர் எழுதிவிட்டார்கள். great mind கீதா சாம்பசிவம் அவர்களும் எழுதிவிட்டார்கள் என்றதும் 'அடடா, நம்மை முந்திக்கொண்டார்களே! உடனே எழுத வேண்டும்' என்று எண்ணினேன். கீதா அவர்கள் எழுதி சில மாதங்களாகிவிட்டன.
மேற்கண்ட வரிகளை எழுதி ஒரு மாதமாவது இருக்கும் :-).
எழுத வேண்டியக் கட்டாயம் எதுவுமில்லை. அவசியம் சிறிது உண்டு. தேவை மிக உண்டு. கட்டாயம் அவசியம் தேவைக்குமான வேறுபாடுகளை ஒட்டி வம்படிக்க ஜீவி அவர்களின் பூவனத்துக்குப் பின்னூட்டமிட வாருங்கள். சொல் விளையாடலாம்.
அப்படி எதைப் பற்றி யாரைப் பற்றி எழுத வேண்டிய தேவை? என்ன அவசியம்?
வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றித்தான். தேவைக்குப் பிறகு வருகிறேன். முதலில் அவசியம்.
ஒரு வருடம் போல் சிறுகதை விமரிசனப் போட்டி நடத்தி வருகிறார் கோபாலகிருஷ்ணர். விமரிசனப் போட்டி என்று எண்ணினால்... எங்கள் பிளாக் தவளைக்கதைப் போட்டி விதிகள் போல... இடையிடையே அடிக்கடி நினைத்த மாத்திரத்தில் உபரி போட்டிகள் விதிகள் பரிசுகள் என்று அமர்க்களப்படுத்தி விட்டார். பரிசுகளிலும் ஒரு இனியக் குழப்படி. ஒரு அளவைக்கு ஒரு பரிசு என்று இல்லை - மூன்று இடங்களுக்கு எட்டு பரிசுகள் தருவார் சில நேரம். [லாட்டரிச்சீட்டுக் காரர்கள் இவரிடம் கொஞ்சம் கற்றால் எனக்கும் ஏதாவது பரிசு கிடைக்கலாம்]. முத்தான பரிசு, இனிப்பான பரிசு என்று அடைமொழியோடு வழங்குவது போதாமல் ஹேட் ட்ரிக், டபுல் ஹேட் ட்ரிக், ட்ரிபில் ஹேட் ட்ரிக் என்று ட்ரிக் மேல் ட்ரிக் செய்து பரிசு வழங்கி வருகிறார்.
போட்டி, பரிசு என்று அமர்க்களப்படுத்தியது ஒரு புறம் இருக்கட்டும். இதன் பின்னே புலப்படாது புலப்படும் ஒழுங்கும் சீரும் கவனிக்கப்பட வேண்டியவை. பாராட்டுக்குரியவை.
நடுவர் போல் ஓரிருவர் பின்னணியில் இருந்தும், இது தனி மனித உழைப்பு, சாதனையென்றே கொள்கிறேன். தனி மனிதராக வை.கோவின் உழைப்பு மலைக்க வைத்தது. வைக்கிறது. விமரிசனப் போட்டிக்கான அறிவிப்பு, உறுத்தாத தொடர் நினைவூட்டல், விமரிசனம் வரப் பெற்றதற்கான உடனடி அஞ்சல், பரிசு கிடைப்பதாக இருந்தால் மர்மமான முன்னறிவிப்பு, பரிசு விமரிசனங்களை ஒவ்வொன்றாகப் பிரம்மாண்டமான முறையில் பதிவிடல் (இராஜராஜேஸ்வரி அவர்கள் மட்டுமே படம் அனிமேஷன் என்றுத் தேடித்தேடிச் சரமாகத் தொகுத்துக் கொண்டிருந்தார் - அதற்கே அவருக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கிறது என்று நினைத்ததுண்டு. கோபாலகிருஷ்ணர் நாலு படி மேலே போய்விட்டார்), பதிவுகளைத் தொடர்ந்து 'காணத் தவறாதீர்' அறிவிப்புகள், பரிசுக்கணக்கு விவரங்கள்... இவை எல்லாம் பிறழாதிருக்க ஒரு நாளைக்கு பத்து மணி நேரமாவது உழைக்க வேண்டியிருக்கும்.. இவற்றுக்கும் மேலாக பரிசுகளைக் கிரமமாக வழங்குவதற்கான விதிகள், ஒழுங்குகள் பற்றிய விடாத் தொடர்பு...
முடிந்ததா என்று பார்த்தால் விமரிசனப் போட்டி நிறைவு விழா என்று வரிசையாக அறிவிப்புகள்.
எங்கிருந்து வருகிறது இவருக்கு இத்தனை உற்சாகம்? அவர் வீட்டு ஜன்னல் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன் - அதற்கு இத்தனை சக்தி கிடையாது என்று எனக்குத் தெரியும். இத்தனை உழைப்புக்கும் முனைப்புக்கும் இவருக்கு எங்கிருந்து நேரமும் தெம்பும் கிடைக்கிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த போட்டியினால் இவர் உழைப்புக்கும் முனைப்புக்கும் மீறிய மிக மிகுந்த மாபெரும் நிறைவு, கோபாலகிருஷ்ணருக்குக் கிடைக்கட்டும்.
தேவைக்கு வருகிறேன்.
விமரிசனப் போட்டி பற்றிப் படித்ததும், 'இது என்ன இவருடைய கதையைப் படிக்க வைக்க இப்படி ஒரு தந்திரமா?' என்று தான் நினைத்தேன். முதல் சில கதைகளின் விமரிசனங்களைப் படித்ததும் அவை கதையைப் படிக்கத் தூண்டியதும் நிஜம். கதை தக்கூண்டு என்றால் விமரிசனங்கள் எல்லாம் பி.எச்டி பட்டத்துக்கான தீஸிஸ் போல எழுதப்படுவதைப் பார்த்து நடுங்கிப் போனேன். இந்த விமரிசனங்களினால் வை.கோவுக்கு என்ன பலன்? இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்? இது போன்ற கேள்விகள் தோன்ற, அவரையே கேட்டும் விட்டேன். அவர் சொன்ன சுவாரசியமான பதிலை அவர் பதிவிலேயே படியுங்களேன்?
சில கதைகளுக்கான விமரிசனங்களை எழுதத் தொடங்கி, பாதியிலேயே நிறுத்தியிருக்கிறேன். எழுதிய சிலவற்றை கெடுவுக்குள் அனுப்ப மறந்திருக்க்கிறேன். சமீப விமரிசனம் ஒன்றை பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் பரீட்சை போல அவசர அவசரமாக எழுதி பிழை திருதத்மால் அவருக்கு அனுப்பி வைத்தால், கெடுவுக்கு ஒரு நாள் முன்பே அனுப்பி வைத்ததாகச் சிரித்தார் கோபாலகிருஷ்ணர். அப்படி என்னை மாற்றிய போட்டி என்பேன்.
வை.கோவுக்கு என்ன பலன் கிடைத்தது என்ற கேள்வி இருக்கட்டும். நான் என்ன கற்றேன்?
  1. கதை எழுத ஆழமான கருவோ திருப்பங்களோ தேவையில்லை.
  2. அரை வரி கருவை வைத்துக்கொண்டு எளிமையாகவும் சுவாரசியமாகவும் கதை எழுத முடியும்.
  3. கதை எழுதுவதை விட விமரிசனம் எழுதுவது கடினம்.
இந்த அனுபவத்துக்கு வித்திட்ட வித்தகர் கோபாலகிருஷ்ணருக்கு நன்றி.
இடையில் வந்த நடுவர் யாரென்ற போட்டி சுவை கூட்டியது. க்ரேட் மைன்ட் கீதா அவர்கள் சட்டென்று கண்டுபிடித்து விட்டார். எனக்கு ஒரு சொல் தேவைப்பட்டது - உறுதிப் படுத்திக் கொள்ள. ஜீவி அவர்களால் அந்தச் சொல்லைப் பயன் படுத்தாமல் இருக்க முடியாது என்ற கணிப்புக்கு வந்திருக்கிறேன். ஒரு வருடமாக இந்தப் போட்டிக்கு நடுவராக, அத்தனை விமரிசனங்களையும் படித்து அவ்வப்போது பின்னூட்டங்களும் எழுதி வந்தமைக்கு அவருக்கும் ஒரு சிறிய நன்றி.
விமரிசனம் எழுதியும் பின்னூட்டங்கள் எழுதியும் பங்கு பெற்ற அத்தனை பேருக்கும் நன்றி. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அடுத்து வை.கோ அவர்கள் நடத்தப் போகும் போட்டி என்னவாக இருக்கும்?
முதலில் அவர் விமரிசனம் எழுதிவிடுவார். அவர் எழுதிய விமரிசனத்துக்கேற்ப பிறர் சிறுகதை எழுத வேண்டும். இதுவே போட்டி.
சொல்ல முடியாது, செய்தாலும் செய்வார் கோபாலகிருஷ்ணர். நடுவர் பாவம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
//நடுவர் பாவம்.//
பதிலளிநீக்குநடுவரும் பாவம்.நடுவரும் பாவம்.
இதுவரை நடுவராக இருந்தவர்களுள் யார் நடுவாண்மை சிறந்தது என்று ஒரு போட்டி வைக்க வில்லையே என்று ஒரு ஆதங்கம் உங்களிடம் இருப்பதை நான் காணவில்லை என்று சொன்னால் நீங்கள் என்ன யாருமே என் கட்சியில் இருக்கமாட்டார்கள் என்று நான் சொல்லித்தான் நீங்களோ மற்ற வாசகர்களோ புரிந்துகொள்வார்கள் என்று நான் என்றுமே நினைத்ததில்லை என்று உறுதியாகவும் அறுதியாகவும் சொல்லிக்கொள்ள ஏதும் தயக்கமில்லை.
சுப்பு தாத்தா.
சுத்த்த்தமா..... புரியுது சார்.
நீக்குகதை எழுதுவதை விட விமரிசனம் எழுதுவது கடினம்.
பதிலளிநீக்குஇந்த வித்வத்தை கற்றுக்கொடுக்கும் களமாக விமர்சனப்போட்டி அமைந்த
விதத்தையும் ,நடுவரின் சிறப்பான பங்களிப்பையும் ஆர்வத்துடன் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.!
//முதலில் அவர் விமரிசனம் எழுதிவிடுவார். அவர் எழுதிய விமரிசனத்துக்கேற்ப பிறர் சிறுகதை எழுத வேண்டும். இதுவே போட்டி.//
பதிலளிநீக்குஐடியா வந்தாச்சில்ல! ஆக்ஷன் தொடரும்!
பிரமிக்க வைக்கும் உழைப்புதான். எங்கள் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குஆமாம், கீதா மேடம் எங்கே ஆளையே காணோம்? ஒரு கலகலப்பே இல்லையே பதிவுலகில்? வீடு மாறி இன்னும் நெட் கனெக்ஷன் வரலை போல!
வீடு மாறிட்டாரா? அதான் அவர் வீட்டுக்குப் போன போது பார்க்க முடியலியா? (தப்ப்பிச்சேன்).
நீக்கு//தப்ப்பிச்சேன்).//
நீக்குஅதானே .பார்த்தேன்.
அஸ்வத்தாமன் கிட்டே எப்படி
மாட்டிண்டேள் . வேறே யாரும்
கிடைக்கிலையா அப்படின்னு
நினைச்சேன்.
நானும் இருக்கேன்.
சுப்பு தாத்தா.
திரு.கோபால கிருஷ்ணனிடம் இந்த மாதிரிப் போட்டியால் என்ன பெறுகிறீர்கள் என்ற உங்கள் கேள்விக்கு அவர் எழுதி இருந்த பதில்கள் மீண்டும் பாருங்கள். நினைத்ததைச் செய்யும் அசகாய சூரர் அவர்.மார்கெடிங் டெக்னிக் தெரிந்தவர்( மோடி இவரிடம் கற்க நிறைய இருக்கிறது). உழைப்புக்கு பஞ்சமே இருக்காது. நடுவர் பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.நான் ஒரு சிறுகதைக்குக் கூட விமரிசனம் முயற்சிக்கவில்லை.
பதிலளிநீக்கு//ஆமாம், கீதா மேடம் எங்கே ஆளையே காணோம்? ஒரு கலகலப்பே இல்லையே பதிவுலகில்? வீடு மாறி இன்னும் நெட் கனெக்ஷன் வரலை போல!//
பதிலளிநீக்குஇன்னும் வீடெல்லாம் மாறலை. கொஞ்சம் வேலை அதிகம். அதனால் இணையத்துக்கு வர முடியலை. வீடு மாற நவம்பர் கடைசி ஆகும் போலிருக்கு! :( நேத்துத் தான் வந்திருந்த உறவினர் எல்லாம் ஊருக்குப் போனாங்க. அதுக்கப்புறமா அங்கேயும் இங்கேயுமா சாமான்களோட ஷட்டில்! :) இன்னிக்குத் தான் கொஞ்சம் உட்கார முடிந்தது. நாளைக்கும் முடியும்னு எண்ணுகிறேன். திங்கட் கிழமையிலிருந்து சந்தேகம்!
//வீடு மாறிட்டாரா? அதான் அவர் வீட்டுக்குப் போன போது பார்க்க முடியலியா? (தப்ப்பிச்சேன்).//
பதிலளிநீக்குவீடு மாறுவதெல்லாம் இதே வளாகத்துக்குள்ளேயே! அதனால் நீங்க இங்கே வரலைனு என்னாலே நிச்சயமாச் சொல்ல முடியும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்தியா வந்ததையே ரகசியமா வைச்சுட்டு இருந்துட்டு, வந்தேன்னு கதையா விடறீங்க?? :(
வைகோ அவர்களைக் குறித்த அருமையான விமரிசனக் கட்டுரைக்கு வாழ்த்துகள். நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க! :)
பதிலளிநீக்குபுகழ்வது போல் பழிப்பதும் பழிப்பது போல் புகழ்வதும் உங்களுக்கு கைவந்த கலை ஜி!
பதிலளிநீக்குஅவரது அபார உழைப்புக்கு தலை வணங்குவோம்!!
அப்பாதுரை காரு! வை.கோ அவர்களைப் பற்றிய உங்கள் பதிவு அருமையானது. பதிவர்களை அவர் ஊக்குவிக்கும் விதமே அலாதி. அவர் அடுத்த போட்டிக்கான அறிவிப்புக்கு காத்திருக்கிறேன். உங்கள் பதிவைப் பார்த்த பிறகு,ஒரு ஆறுதல் பரிசாவது வாங்கிவிட கங்கணம் கட்டிக்கொண்டேன். அப்பாஜி ! என்னுடன் அந்த போட்டியில் கலந்துகொள்ள நீங்க தயாரா? (கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம். அது பொறாமையாக மாறிடக்கூடாது ஷண்முக சுந்தரம்!)
பதிலளிநீக்குஅவரது அசாத்தியமான உழைப்பு கண்டு எப்போதுமே எனக்கும் கொஞ்சம் பொறாமை உண்டு!
பதிலளிநீக்குஎத்தனை பதிவுகளைப் படித்து கருத்துச் சொல்கிறார் - கடந்த ஒரு வருடமாக இது குறைந்ததற்கு காரணம் - அவர் நடத்திய போட்டிகளில் பிசியாகிவிட்டது தான். ஒரு சில பதிவுகளில் பத்துப் பதினைந்து கருத்துகரைகள் - அதுவும் நீண்ட கருத்துரைகள் கண்டு மலைத்ததுண்டு......
அடுத்த போட்டிக்கு ஐடியா கொடுத்தாச்சு.... அதுவும் வித்தியாசமான ஐடியா
எல்லாம் ரெடியா?
அவரது அபாரமான உழைப்பைக் கண்டு வியந்திருக்கிறேன்..
பதிலளிநீக்கு//பரிசுகளிலும் ஒரு இனியக் குழப்படி. ஒரு அளவைக்கு ஒரு பரிசு என்று இல்லை - மூன்று இடங்களுக்கு எட்டு பரிசுகள் தருவார் சில நேரம். //
பதிலளிநீக்குகுழப்படியே ஏதும் இல்லையே. ஒவ்வொரு விமர்சனப்போட்டிக்கும் முதல் / இரண்டாம் / மூன்றாம் என மூன்றே மூன்று வகையான பரிசுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. VGK-16 தவிர அனைத்து 39 கதைகளுக்கும் அவ்வாறு மட்டுமே வகைப்படுத்தித் தரப்பட்டும் வந்துள்ளன. மொத்தம் வெளியிட்ட 40 கதைகளுக்கான விமர்சனங்களுக்கு மட்டும் 198 பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றிய சுவையான Break-up தகவல்கள் இதோ இந்தப்பதிவினில் புட்டுப்புட்டுக் கொடுத்துள்ளேன் ... அனைவரும் பாருங்கோ. http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html அவை அனைத்தும் SELF EXPLANATORY யாக அல்வா போல கொடுக்கப்பட்டுள்ளன. அதில் யாருக்கும் எந்த சந்தேகமுமே வரக்கூடாதே !
>>>>>
//முத்தான பரிசு, இனிப்பான பரிசு என்று அடைமொழியோடு வழங்குவது போதாமல் ஹேட் ட்ரிக், டபுல் ஹேட் ட்ரிக், ட்ரிபில் ஹேட் ட்ரிக் என்று ட்ரிக் மேல் ட்ரிக் செய்து பரிசு வழங்கி வருகிறார்.//
பதிலளிநீக்குஇது மட்டும், வெற்றிபெற்ற விமர்சனதாரர்கள் நடுவே களைத்துப்போகாமல், சோர்வு அடையாமல் தொடர்ந்து துடிப்புடன் கலந்துகொண்டு தொடர்ந்து வெற்றிபெற தூண்டுதல் ஏற்படுவதற்காக என்னால் மிகவும் யோசித்துக் கொண்டுவரப்பட்டதாகும்.
இந்தப்போட்டியின் மாபெரும் வெற்றிக்கு இதுவே ஓர் தூண்டுதலாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
தொடர்ச்சியாக மூன்றுமுறை ஏதோவொரு பரிசுக்குத்தேர்வானால் அவருக்கு ஓர் ஹாட்-ட்ரிக் பரிசு. அவரே நாலாம் முறை வெற்றிபெற்றால் டபுள் ஹாட்-ட்ரிக் தொகை, ஐந்தாம் முறை அவரே வெற்றிபெற்றல் ட்ரிபில் மடங்கு தொகை. ஆறாம் முறையும் வெற்றிபெற்றால் நான்கு மடங்கு தொகை என ஒவ்வொரு கூடுதல் வெற்றிக்கும் அவர்கள் பெறும் தொகையில் ஓர் உபரித்தொகை என்பதை பலரும் நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள்.
ஒட்டுமொத்த ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் 12 பேர்கள் பற்றிய சிறப்புப்பதிவு இதோ:
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html
>>>>>
//விமரிசனம் வரப் பெற்றதற்கான உடனடி அஞ்சல்//
பதிலளிநீக்குACKNOWLEDGEMENT மிகவும் அவசியம் அல்லவா !
//பரிசு கிடைப்பதாக இருந்தால் மர்மமான முன்னறிவிப்பு,//
இந்த மர்மமான என் முன்னறிவிப்பு, அடுத்த கதைக்கான விமர்சனத்தை மேலும் பொறுப்பாக சிரத்தையாக எழுதி அனுப்பி, அதிலும் வெற்றிபெற்று ஹாட்-ட்ரிக் அடிக்க வேண்டும் என்ற ஓர் உந்துதலை வெற்றியாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடும் அல்லவா! அதனால் இதுவும் மிகவும் அவசியமாக என்னால் மர்மமான முறையில் பின்பற்றப்பட்டு வந்தது. அது நான் எதிர்பர்த்த நல்ல பலன்களையும் கொடுத்தது.
// பரிசு விமரிசனங்களை ஒவ்வொன்றாகப் பிரம்மாண்டமான முறையில் பதிவிடல்//
பரிசுத்தொகையினைவிட இந்த அலம்பலான கைத்தட்டல் மற்றும் வித்யாசமான பாராட்டு வாசகங்கள் போன்றவற்றையே மிகப்பெரிய அங்கீகாரமாக நினைத்து பலரும் ஆவலுடன் விரும்பினார்கள் / வரவேற்றார்கள்.
ஒரு மிகப்பெரிய விழா மேடையில் ஏறி பலரின் பிரும்மாண்டமான கரவொலியுடன் பரிசு பெற்றதாகவே கற்பனை செய்துகொண்டு மகிழ்ந்தார்கள்.
வெற்றியாளர்கள் இவ்வாறு மட்டும்தான் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும் என்பதே எனது கொள்கை.
THE WAY OF MY PRESENTATION மிக மிக சூப்பராக இருக்க வேண்டும் என்பதே என் ஆசையும் கூட.
இல்லாவிட்டால் பரிசு அறிவிப்பு என்பது உப்புச்சப்பு இல்லாமல் சுத்த வழுவட்டையாகப் போயிருக்கும். இந்த அளவுக்கு அதில் ஓர் பேரெழுச்சி இருந்திருக்காது.
[எழுச்சி x வழுவட்டை விளக்கங்களுக்கு இதோ இந்த நகைச்சுவைக்கதையை VGK-13 அவசியம் படிக்கவும். http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html
>>>>>
//இராஜராஜேஸ்வரி அவர்கள் மட்டுமே படம் அனிமேஷன் என்றுத் தேடித்தேடிச் சரமாகத் தொகுத்துக் கொண்டிருந்தார் - அதற்கே அவருக்கு எங்கிருந்து நேரம் கிடைக்கிறது என்று நினைத்ததுண்டு. கோபாலகிருஷ்ணர் நாலு படி மேலே போய்விட்டார்)//
பதிலளிநீக்குஅடடா, சும்மா இல்லாமல், அய்யம்பேட்டை வேலையை ஆரம்பித்து விட்டீர்களே ! :)
அவருடன் என்னால் போட்டிபோட முடியுமா என்ன?
இதற்கெல்லாம் அவரே எனக்கு முன்னோடி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அவர்களுக்கு நாலு படி கீழேயே நான் எப்போதும் இருக்க விரும்புகிறேனே .... ப்ளீஸ்.
நான் இன்றும் மிகச்சாதாரணமானவன் தான். என்னை விட்டுடுங்கோ ! :) யாருடனும் என்னைக் COMPARE பண்ணாதீங்கோ :)
ஏற்கனவே எனக்குப் போதாதகாலமாக உள்ளது. :)
>>>>>
அய்யம்பேட்டை வேலை என்றால் என்ன? என்பதுபற்றி என் விரிவான விளக்கம் இதோ இந்த என் பதிவின் பின்னூட்டப்பெட்டியில் தங்களுக்குக் கொடுத்துள்ள பதிலில் உள்ளது. இதுவும் மற்றவர்களுக்கான தகவல்களுக்காக மட்டுமே.
பதிலளிநீக்குhttp://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html
>>>>>
//இந்த விமரிசனங்களினால் வை.கோவுக்கு என்ன பலன்? இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்? இது போன்ற கேள்விகள் தோன்ற, அவரையே கேட்டும் விட்டேன். அவர் சொன்ன சுவாரசியமான பதிலை அவர் பதிவிலேயே படியுங்களேன்?//
பதிலளிநீக்குதங்களின் இந்தக்கேள்வியும், அதற்கான என் விரிவான பதில்களும் இதோ இந்தப்பதிவின் பின்னூட்டப்பெட்டியில் வரிசையாக உள்ளன. இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html
மொத்தம் அதில் 162 பின்னூட்டங்கள் உள்ளன. அதில் தங்களின் கேள்விகள் பல உள்ளன.
அவற்றில் குறிப்பிட்ட இந்தத்தங்களின் கேள்விக்கு மட்டும் நான் 12 பதில்கள் வரிசையாகக் கொடுத்துள்ளேன்.
கவட்டை போல அவற்றைத்தேடி படிப்பவர்களே மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
>>>>>
இங்கு என்னையும், என் வெற்றிகரமான போட்டிகளையும் நன்கு உணர்ந்து கருத்தளித்துள்ள ஸ்ரீராம், திரு. GMB Sir அவர்கள், திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள், திருமதி நிலாமகள் அவர்கள் மற்றும் வெங்கட்ஜி ஆகியோருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
பதிலளிநீக்கு>>>>>
VGK-30 மேல் VGK-40 வரை மட்டுமே போட்டிகளில் அவ்வப்போது கலந்துகொண்டு சிறப்பித்திருந்தீர்கள்.
பதிலளிநீக்குஅதுவும் தாங்கள் கலந்துகொண்ட ஆறே ஆறு போட்டிகளிலும், ஒவ்வொன்றிலும் தங்களுக்கு ஏதோ ஒரு பரிசு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்பதிவுக்கு பின்னூட்டங்கள் இட இன்றுதான் எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.
அதனால் மிகவும் தாமதமாகிவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம். இன்று விட்டால் இனி நேரமே கிடைக்காது என்பதால் இன்றே எழுதி முடித்துவிட்டேன்.
என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]
நான் நடத்திய இந்தப்போட்டியை உன்னிப்பாக கவனித்து வந்தவர்களில் சிலர், அவர்களாகவே மனம் திறந்து பேசி எழுதியனுப்பியுள்ள கீழ்க்கண்ட 11 நேயர் கடிதங்களும்
பதிலளிநீக்கு[1] பெரியவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா
அவர்கள்
http://gopu1949.blogspot.in/2014/10/blog-post_2.html
[2] திருமதி. ஞா. கலையரசி அவர்கள்
http://gopu1949.blogspot.in/2014/10/3.html
[3] திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
http://gopu1949.blogspot.in/2014/10/4.html
[4] விமர்சன வித்தகி திருமதி கீதா மதிவாணன்
அவர்கள்
http://gopu1949.blogspot.in/2014/10/5.html
[5] அருமை நண்பர் மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
திரு. ரவிஜி அவர்கள்
http://gopu1949.blogspot.in/2014/10/6-mgr.html
[6] பேரன்பிற்குரிய ராதாபாலு அவர்கள்
http://gopu1949.blogspot.in/2014/10/7.html
[7] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்
http://gopu1949.blogspot.in/2014/10/8.html
[8] பேரன்புக்குரிய ஜெயந்தி அவர்கள்
http://gopu1949.blogspot.in/2014/10/9.html
[9] திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்
http://gopu1949.blogspot.in/2014/10/10.html
[10] அருமை நண்பர் திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன்
அவர்கள்
http://gopu1949.blogspot.in/2014/10/11.html
[11] திரு. E S சேஷாத்ரி அவர்கள்
http://gopu1949.blogspot.in/2014/10/12-es-seshadri.html
>>>>>
என் போட்டிகளைப்பற்றி எனக்காகச் சிறப்புப்பேட்டி அளித்துள்ள ஒருவரின் பேட்டியும்
http://gopu1949.blogspot.in/2014/10/blog-post.html
>>>>>
இறுதியாகவும் உறுதியாகவும் நான் கொடுத்துள்ள எனது நன்றி அறிவிப்பு பதிவுமே
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html
>>>>>
பதிவுலக வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்ற இந்த என் போட்டிகளைப்பற்றி காலமெல்லாம் அனைவருமே நினைத்துப்பார்க்க உதவக்கூடிய வரலாற்றுப் பொக்கிஷங்களாகும் என்பதை அனைவரின் அன்பான கவனத்திற்கும் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த என் போட்டியின் அடிப்படை நோக்கமே, ஒருவரின் பதிவினை ஊன்றிப்படிக்காமல், மேம்போக்காக நுனிப்புல் மேய்ந்துவிட்டு, ’வாய் புளிச்சுதா .... மாங்கா புளிச்சுதா’ என டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் கொடுக்கும் ஆசாமிகளின் வருகையைக் குறைக்க வேண்டியது அல்லது அடியோடு நிறுத்த வேண்டியது என்பது மட்டுமே.
அது ஓரளவுக்காவது நிறைவேறியுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.
அன்புடன் கோபு
பரிசு மழை ஓயுமுன் பின்னூட்ட மழை.
நீக்குநன்றி சார்.
this is no rain.
பதிலளிநீக்குThis is real tsunami.
subbu thatha.
சுவாரஸ்ய பகிர்வு அப்பாதுரை...
பதிலளிநீக்குதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..
இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.html
வை. கோபாலகிருஷ்ணன் சார் அவர்களை பற்றி அருமையாக சொன்னீர்கள்.
பதிலளிநீக்குஎனதருமை 'வாத்தியார்' வைகோ அவர்களின் விமர்சனப்போட்டியே என்னை வெளியில் தெரியச் செய்தது! அவரது வலைப்பூ ஒர் 'குயில்கள் பாடும் க(வ)லைக்கூடம்' அவரது அந்த அரசாங்கத்தில் இந்த காகமும் இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது நான் செய்த பாக்கியமே! அன்புடன் எம்ஜிஆர்
பதிலளிநீக்கு