2014/07/26

ஆயிரம் தடவை சொன்ன மாதிரி


    ந்தப் படங்கள் கார்னெகி மெலன்/பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகச் சுற்றுப்புறக் காட்சிகள். (சில படங்களை ஜூலை PITக்காக எடுத்தேன். அனுப்ப வேண்டிய தேதி மறந்து போயி. வயக்கம் போல).

வலது முனை நகல். எதிரேயிருந்த கட்டிடக் கண்ணாடி ஜன்னலில் தெரிந்த பிம்பம்.

தெருவுக்கொரு தீயணைப்புக் குழாய். தலைக்கொரு வண்ணத் தொப்பி.

பெயரறியாப் பூக்கள். (ஸ்ரீராம் கமென்டியதும் ராமலக்ஷ்மி அருளுவார் :-)

வரிப்பூ. இல்லை, வண்ணத்துப்பூச்சி.

அம்மம்அ உணவகம்.

இரவும் பகலும் - நெருங்கினாய் விலகினாய் நெருங்கினாய் விலகினாய். நினைவுகளின் சல்லடை.

இரவும் பகலும் - தொங்கும் தீ.

இரவும் பகலும் - திண்டுக்கல் வேலி.

ஏன் கண்ணை மூடினீர் அம்மா?

நல்ல வேளை சொன்னார்கள். u talk flang bro?

எழுத்தறிவிப்பது டைனொசராகும்.

பல்மேன் பேட்மேன்.

மஞ்சள் வண்டி. மாமியார் வீடு.

முன்னேற்றத்துக்கு வருந்துகிறோம்.
கமல் கேள்வி:
எலக்ட்ரிக் காரை
தண்ணில ஓட்னா
ஷாக் அடிக்குமா?

வானமும் பூமியும்.

காணக் கண் ஒரு கோடி வேண்டும். எது மெய்? ஜன்னலா சுவரா?

இரு கோடி வேண்டும். உடனே தொலைந்து போக வரம் கொடு தாயே.

பல கோடி வேண்டும். என்றும் தொலையாதிருக்க வரம் கொடு தாயே.

21 கருத்துகள்:

  1. பெயரறியாப் பூக்களில் முதலாவது எல்லோருக்கும் தெரிந்ததே. Orchid.

    இரண்டாவதின் மென் மஞ்சள் ஷேட் மிக அழகு. mellow yellow or golden glow வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை.

    மூன்றாவது Golden Shrimp Plant. லாலிபாப் என்ற பெயரும் உண்டு. தாவரவியல் பெயர்: Pachystachys lutea

    மிளகாய்ப் பூவும் தொங்கும் தீயும் முதன் முறையாகப் பார்க்கிறேன். நன்றி:).

    நல்ல படங்கள். ஒவ்வொரு மாதமும் PiT போட்டிக்கு படம் அனுப்புவதற்கான இறுதித் தேதி 20. ஒரு தகவலாக:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. களஞ்சியம்னா நீங்க தான். நன்றி.

      நீக்கு
    2. நம் எல்லோருக்கும் களஞ்சியம் கூகுள்தான்!

      திண்டுக்கல் வேலி என்றதும் அதிர்ந்து விட்டார் தனபாலன்:). சீனு சொல்லியிருப்பது சரியே. வேலியில் பூட்டுகள் படம் ஒன்று முன்னர் அதீதம் ஃபோட்டோ கார்னரில் வெளியிடப்பட்டது.

      நீக்கு
    3. மிளகாய்ப் பூ? வலது முனைப் படத்தைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
      catstail என்கிறார்கள். நிச்சயம் தாவரவியலில் பூனைவாலுக்கும் பூவுக்கும் சம்பந்தம் இருக்காது.

      நீக்கு
    4. ஆம். மிளகாய்ப்பழம் போல் இருந்ததால் அப்படிக் குறிப்பிட்டேன்:). துளசி மேடம் சரியாகச் சொல்லக் கூடும். தொங்கும் தீ குறித்தும்:)!

      நீக்கு
  2. அனைத்து கருத்துக்களும் அருமை...

    என்னது திண்டுக்கல் வேலியா....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தனபாலன். வேலியில் நூத்துக்கணக்குல பூட்டை மாட்டியிருக்காங்க. என்ன சடங்கோ தெரியலே.

      நீக்கு
    2. லவ் சக்சஸ் ஆகும்னு கேள்வி ஞானம் :-)

      நீக்கு
  3. வேலியில் பூட்டை மாட்டி மனைவியின் வாய்ப்பூட்டுக்கு வேண்டிக்கொள்வார்களோ..

    பிரான்சில் திருமண வேண்டுதலுக்காக பூட்டு காணிக்கை உண்டு..!

    பதிலளிநீக்கு
  4. அதிகம் பேசும் மனைவியின் வாயிற்கு ஒரு பூட்டு போட்டால் தேவலை என நினைக்கும் தமிழக ஆண்கள் சேலத்தில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று பூட்டு போட்டு பிரார்த்தனை செய்வர்...
    பிரான்ஸ் நாட்டிலும், இதே பூட்டு தான் பிரார்த்தனை பொருளாக இருக்கிறதுசீயன் நதியின் இடையில் அமைந்துள்ள பாலத்தின் தடுப்பு கம்பி வலைதான் பிரார்த்தனை கூடமாக அமைந்துள்ளது. தம்பதியாக இருந்தாலும் சரி, காதலர்களாக இருந்தாலும் சரி, பெயரை மட்டும் ஒரு பூட்டில் எழுதி இந்த பாலத்தில் பூட்டிவிட்டால், அவர்கள் பிரியமாட்டார்கள் என்பது பிரான்ஸ் மக்களின் நம்பிக்கை..

    மூடநம்பிக்கையாக இருந்தாலும் இப்படி பூட்டு போடுவது அன்பை அதிகரிக்கச் செய்யும் என்று சுற்றுலா பயணிகளும் பூட்டு போடுகின்றனர்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய் பூட்டு பிரார்த்தனை கேள்விப்பட்டதில்லை. கடவுளிடம் முறையிடும் அளவுக்கு நொந்து போவது... தமாஷ்.

      உலகமெங்கும் ஒரே மொழி என்பது சரியே.

      தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்கள் எல்லாம் அழகு.
    வண்ணத்து பூச்சி அழகு.
    தொங்கும் தீ கண்ணாடியில் செய்யப்பட்ட விளக்கு தானே?
    மதுரை கோவிலில் சட்டைநாதர் சுவாமி இருக்கும் கதவில் இப்படி பூட்டுகளை பூட்டி வைத்து இருந்தார்கள், கோவில் நிர்வாகம் இப்படி பூட்டை தொங்கவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும் கேட்க வில்லை மக்கள், அதனால் அவர்கள் அந்த கதவை கழற்றி எறிந்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதவையே கழட்டினாலும் விடாம காத்துல பூட்டைத் தொங்கவிடுவாங்களே மக்கள்?

      'தயவுசெய்து விளக்குகள் வைத்துவிட்டு எண்ணையைச் சுவற்றில் துடைக்க வேண்டாம். சுவற்றைப் பராமரிக்க இத்தனை காசு ஆகிறது' என்று சுவாவிமலையிலோ திருநாகேசுவரத்திலோ கோவிலில் அங்கங்கே எழுதி வைத்திருந்தார்கள். எழுத்திலயே எண்ணைக் கையைத் துடைச்சிருந்தாங்க மக்கள். அப்படியாவது அதே இடத்தில் விளக்கு வைக்கும் வைராக்கியம். போகட்டும். எண்ணையை புடவையிலோ சட்டையிலோ துடைத்துக் கொள்ளக்கூடாதோ? அல்லது ஒரு துண்டு? விளக்கு வைக்கும் இடத்தில் அத்தனை பிசுக்கு!

      நீக்கு
    2. தொங்கும் தீ கண்ணாடிச் சரம். சரியே.

      நீக்கு
  6. எல்லாப் படங்களும் அருமை. பூட்டு குறித்த தகவல் சுவாரசியம். இங்கே ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் ரங்க விலாச மண்டபத்தில் பூட்டுத் தொங்க விட்டிருக்கிறார்கள். எதுக்குனு விசாரிக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாப் போச்சு!

      பூட்டுத் தயாரிக்கிறவங்க எதுனா கிளப்பி விட்டிருப்பாங்களோ?

      நீக்கு
  7. திருவரங்கத்திலும் பூட்டு உண்டு.... இது சமீப கால வழக்கம்.... முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்னர் இவ்வழக்கம் இருந்ததில்லை என சொன்னார்கள்.

    இதற்கும் ஏதாவது கதை இருக்கக் கூடும்! பேய் பூதங்களை பூட்டி வைப்பதற்காக என்று கோவிலில் பூட்டு போட்டுக் கொண்டிருந்த ஒருவர் சொல்லியது கேட்டதுண்டு! :) பேய் என்று யாரைச் சொன்னார் என்பது அவருக்கே வெளிச்சம்! :))))

    பதிலளிநீக்கு
  8. பார்த்துப் பார்த்துப் படம் எடுத்திருக்கிறீர்கள் துரை. அதற்கான காப்ஷனும் நன்றாக இருக்கிறது. ராமலக்ஷ்மி சொல்வது போல இத்தனை அழகு படங்களை 20 தேதிக்குள் அனுப்புங்கள். அந்தத் தொங்கும் தீ அழகு. அதீதமான கற்பனை.

    பதிலளிநீக்கு
  9. 1991ம் ஆண்டு என் மகள் திருமணமானவுடன் கணவரொடு பிட்ஸ் பர்க் தான் சென்றாள் ! அப்போது மாப்பிள்ளை கார்னகி மெலன் பல்கலையில் முனவர் பட்டத்திகாக ஆராய்சியில் ஈடுபட்டிருந்தார் ! மூன்று ஆண்டுகள் அங்கு இருந்து முனைவர் பாட்டம் பெற்றார்! வசதி இல்லததால் நான் செல்லமுடியவில்லை ! புகைப்படம் மூலம் பர்க்கமுடிந்தமைக்கு அப்பாதுரை அவர்களுக்கு நன்றி ! ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  10. படங்களெல்லாமே அருமை. பப்படம் அல்ல....!(மூட) நம்பிக்கைகளுக்கு எல்லா இடங்களிலும் மக்கள் இருக்கிறார்கள். பின்னூட்டங்களில் இருந்து பலதும் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு