2014/01/09

உறைவிடம்


    "இருவது வருஷத்துல நான் இப்படி எதையுமே பார்த்ததில்லை"

"அட நான் நாப்பது வருஷமா சிசரோவுல இருக்கேன்.. நானே பார்த்ததில்லை.."

"அட.. நான் பொறந்து வளந்தது டேரியன்ல.. என் ஆயுசுல நான் கண்டதில்லை"

இப்படி ஆளுக்கு ஆள் கடவுளைப் பற்றிக் கணக்கு சொல்வதாக ஒரு கணம் தோன்றலாம், தப்பில்லை. ப்லாக் அப்படி. ஆனால் அவர்கள் சொல்லும் கணக்கு சிகாகோவைப் பிடித்துலுக்கிய பனி மற்றும் குளிரைப் பற்றியது என்ற உண்மையைச் சொல்லிவிடுகிறேன்.

பனி, குளிர், கடுங்குளிர் காற்று - இவை சிகாகோவுக்குப் புதிதல்ல என்றாலும் இந்தப் பனிக்காலம் தொடக்கத்திலேயே களை கட்டி விட்டது. நானறிந்த வரையில் இப்படி ஒரு குளிரை தொடர்ந்து ஒரு சில நாட்களுக்கு மேல் அனுபவித்ததில்லை. 31 டிசம்பர் 1999ல் சிகாகோ ஓட்டல் மிலெனியம் விழாவில் ஒரே ஒரு குழுமக் கஞ்சா இழுப்புக்காக வெளியே வந்தபோது டெம்பரேசர் -52°F (-46°C). மறக்கவில்லை. அப்படி ஒன்றிரண்டு நாட்களில் ஒரு சில மணி நேரங்கள் மைனஸ் ஐம்பதுக்கும் கீழே போகும், மற்றபடி குளிர் விறைப்பு எல்லாம் எப்படியோ சமாளித்துவிடலாம். ஆனால் தொடர்ந்து இரண்டு வாரமாக மைனஸ் இருபது இருபத்தைந்து பேரந்ஹைட் தட்பத்துடன் கடுமையான காற்றும் சேர்ந்து நான் இதுவரை கண்டதில்லை. குறிப்பாக இந்த வாரம் ஜனவரி 4-7 தேதிகளின் குளிர்! நரகம் அய்யா நரகம்.. நரகம் அம்மா நரகம்.. நரகம் பிள்ளாய் நரகம். 6ம் தேதி இரவில் சில நிமிடங்களுக்கு -69°F (-56°C) தொட்டது. circumcise செய்து கொள்ளாத ஆடவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட கடுமையாகச் சிரமப்பட்ட அந்த நான்கு நாட்கள்! பிள்ளாய், சற்றுமுன் படித்த வரியை மறந்துவிடு. சரியான துணையுடன் இந்த நரகத்தை சொர்க்கமாக்கியவர்கள் இருப்பார்கள்.. இருக்கிறார்கள். அவர்கள் பேச்சு டூ.

மார்ச் 5-6 தேதிகளில் chicago chiberia ஆனதன் அடையாளமாகச் சில படங்கள்.


சிகாகோ என்றில்லை, வடகிழக்கு அமெரிக்கா முழுதுமே பனியில் சிக்கித் தவித்தது. திருமதி பக்கங்கள் பதிவில் பனீஸ்வரர் இறங்கி வந்திருப்பதைப் பார்த்திருக்கலாம்.

பனிக்கட்டி நயாகராவைப் பார்த்திருக்கிறீர்களா?


இது நயாகரா நீர்வீழ்ச்சியை ஒட்டியப் பூங்கா.


இது பால்டிமோர் தெருவில் ஒரு வண்டி.


இது ந்யூயோர்கின் ஹட்சன் நதி.


இது நெப்ராஸ்கா சிற்றூர் ஒன்றின் கடைவீதி. முதல் நாளிரவு தீப்பிடித்த கடையும் தீயணைப்பு வண்டியும்.


குளிர் தாங்கலியேனு ப்லோரிடா போனா.. இப்படியா? ஆரஞ்சு சாகுபடி இந்த வருஷம் அம்போ.


நானறிந்த சிகாகோ வாசிகள் எல்லோரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கையில், இந்தக் கடும் பனிக்குளிரில் நானும் என் குடும்பமும் இடைவிடாமல் வெளியே சுற்ற நேரிட்டது எங்கள் முன்வினைப் பயனாக இருக்கலாம்.

செய்தியாளர்:
நாடு தழுவிய கடும் பனி குளிருக்கு global warming காரணம் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.
கமல்:
விஞ்ஞானிங்களா? முட்டாப்பயலுங்க. கடும் பனி குளிருக்கு global cooling தானே காரணமாவும்?


படங்கள்: இணையம்.

48 கருத்துகள்:

 1. யம்மாடி...! படங்கள் மூலம் நிலைமை அறிய முடிகிறது... அதான் கமல்... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 2. படங்களும், செய்தியும் வயத்தைக் கலக்கின. உங்க கால் இப்போச் சரியாயிடுச்சா? மின்சாரம் இருக்கா? தண்ணீர் குழாயில் உறையாமல் இருக்கா? சாப்பாட்டுக்கு என்ன செய்யறீங்க? எல்லாம் நினைச்சாலே மனம் வேதனைப் படுகிறது. சீக்கிரம் நிலைமை சீரடையப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 3. ஹிஹிஹி, இங்கேயும் குளிர்காத்து! :))))) ஜோக்கெல்லாம் இல்லை, எப்போவும் இல்லாத மாதிரியில் இந்த வருஷம் அதிகமான குளிர்காற்று. :)

  பதிலளிநீக்கு

 4. எனக்கும் கீதாம்மாவின் சந்தேகம். நீர் உறைந்தால் குழாயில் வரமுடியுமா. ? மின் வெட்டுக்கள் இல்லைதானே. இப்பொது தாக்கம் குறைந்திருப்பதாகச் செய்தி. சரியா.?

  பதிலளிநீக்கு
 5. படங்கள் என் கண்களுக்கும் நல்ல குளிர்ச்சியாக உள்ளன.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 6. என் ஓர் கண்ணில் சமீப காலமாக ஒரு சிறு பிரச்சனை.

  அதனால் அவ்வாறு மேலே எழுதியுள்ளேன்.

  விரைவில் அங்கு சகஜ நிலை திரும்பட்டும்.

  பதிலளிநீக்கு
 7. // நரகம் அய்யா நரகம்.. நரகம் அம்மா நரகம்.. நரகம் பிள்ளாய் நரகம்..//

  அது என்ன பிள்ளைக்கு மட்டும் 'ஆய்' விகுதி?

  துணைகளால் சொர்க்கம் நரகமாவதும் உண்டு. தெரிந்து தான் அந்த 'சரியான' போலிருக்கு.

  //இந்தக் கடும் பனிக்குளிரில் இடைவிடாமல் வெளியே சுற்ற நேரிட்டது எங்கள் முன்வினைப் பயனாக இருக்கலாம்.//

  இப்போதைய பலன் இந்தப் புகைப்படங்கள். பகிர்தலுக்கு நன்றி சொல்வது பின்வினைப் பலன்.

  பதிலளிநீக்கு
 8. நிலமை கட்டுக்குள் தான் இருந்தது - நான் வசிக்கும் பகுதிகளில். பாதிக்கப்பட்ட பகுதிகளும் நேற்றிலிருந்து சகஜ நிலைக்கு வந்துவிட்டதாகப் படிக்கிறேன்.

  unincorporated பகுதிகளில் வசித்தால் தண்ணீர் பிரச்சினை வரும். incorporated பகுதியில் வசித்தால் தண்ணீர், மின்சாரம் பிரச்சினைகள் அவ்வளவாக இருக்காது. வரி கட்டுறமே? இருந்தாலும் 4-8 தேதிகளில் city water works காரர்கள் கண்காணிப்புடன் நிறைய உழைத்திருக்க வேண்டும். அதை நினைவுபடுத்தினீர்கள், நன்றி கீதா சாம்பசிவம். திங்கட்கிழமை cityhallல் water works காரங்களுக்கு சின்ன கேக் வாங்கிக் கொடுத்துட்டு வரணும். பத்து நிமிஷம் மின்சாரம் தண்ணி பிரச்சினைனா அவங்களை உலுக்கி எடுத்துடுவோம், பிரச்சினையே இல்லாம இருந்தா அவங்க நினைப்பே வரதில்லை.

  பொதுவா city water works பைப்புகள் பாதுகாப்பானவை. தண்ணீர் உறையாமல் இருக்க நிறைய காரணங்கள். முதலாவது ரொம்ப சிம்பில். ஓடுகிற நீர் உறைவதில்லை. அதனால வீட்டுக்குள்ள குழாய்களை நிறுத்தி மூடினாலும் நீரோட்டம் இருந்துகிட்டே இருக்குறாப்புல வசதியிருக்கு. ரொம்ப குளிரான நாட்கள்ல ஒரே ஒரு குழாயை லேசா சொட்டுறாப்புல திறந்து வைக்கச் சொல்வாங்க. பொதுமக்கள் அனேகம் பேர் செய்வாங்க. இரண்டாவது water pressure. வீட்டுக்குள்ள இருக்குற வாடர் டேங்குகள் உட்பட. அப்புறம் water tower அண்மை, insulated pipes என்று நிறைய காரணங்கள். பூமிக்கு அடியிலே கொஞ்சம் ஆழமா city pipes இருக்குறது மெயின் காரணம், ஏன்னா அந்த ஆழத்துல earth does not freezeனு படிச்சவங்க சொல்றாங்க (ஹிஹி.. எம்பொண்ணு தான் இதெல்லாம் சொன்னா.. இத்தனை நாளா இதைத் தெரிஞ்சுக்கத் தோணவேயில்லையே!).

  க்லீவ்லென்ட், மில்வாகி மாதிரி சில இடங்கள்ள தண்ணி எடுக்குற இடமே உறைஞ்சு போய் ரொம்ப பிரச்சினையாயிடுச்சாம். இங்கேயே கூட தண்ணியைக் காய்ச்சிக் குடிக்கச் சொல்லி ரெண்டு நிமிசத்துக்கொருக்கா டிவி பேனர் செய்தி போயிட்டே இருந்துச்சு.

  பதிலளிநீக்கு
 9. heating பிரச்சினையினால ஸ்கூல் காலேஜ் எல்லாம் நாலு நாள் மூடிட்டாங்க நிறைய இடத்துல. ரோட்டுல அடிவைக்க முடியாம போனது தான் பெரிய சிக்கல் இந்த தடவை. பனியை சுத்தம் செஞ்சாலும் ஐஸ்தரை வழவழனு கார் டயர்கள் கூட நிக்க முடியாம அப்படி உறைஞ்சு போனது ரொம்ப அபாயமா போச்சு ரெண்டு நாளைக்கு.

  என் கால் புண் உடனே சரியாகிவிட்டது. விசாரிச்சதுக்கு ரொம்ப நன்றி. actually, என் பையன் தினம் ஸ்கூல் பஸ் ஸ்டாப்லந்து வீடு வரதுக்குள்ள காதெல்லாம் புண்ணாயிடும். இது தினம் நடக்கிற கதை. வேஸலின் தடவு, காதை மூடிக்கோனு என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க. காலேஜ் படிக்குறப்ப என் முகமெல்லாம் புள்ளி புள்ளீயா சிவப்பா புண்ணாயிருக்கும். பாதுகாப்பு க்ரீம் தடவ சோம்பல். இப்பவும் பனி ஒதுக்கி சுத்தம் செய்யுறப்ப காது மூக்கெல்லாம், சில சமயம் வேசலின் or moisturizer தடவி வெளியே இறங்கினாலும், severe frostbiteல எல்லாம் புண்ணாயிடும். பசங்க கிட்டே தினம் சொல்றேன்.. அவங்களும் தலையை ஆட்டிட்டு உதட்டை சுழிச்சுட்டுப் போயிடுறாங்க. பழகிப் போச்சு. வயசாக ஆக குளிர் பிரதேசம் வேண்டாம்னு ஒதுங்கத் தோணுது :)

  பதிலளிநீக்கு
 10. பதிவு எழுதுறதுக்கு கொஞ்ச நேரம் முன்னால ஷைலஜா அவங்களோட திருப்பாவை பதிவுகளை மேஞ்சிட்டிருந்தேன். 'எழுந்திரும் பிள்ளாய்' மனசுல பதிஞ்சது ஒரு காரணமாயிருக்கலாம்.. ஈதென்ன பேருரக்கம் எம்எல்வி குரலை மனம் அசை போட்டுட்டே இருந்தது நேத்து முழுக்க. அதன் பாதிப்பா இருக்கலாம். 'பிள்ளாய்' பிழையா ஜீவி சார்? அய்யா அம்மாவுக்கு விகுதி இருக்கா? என் தமிழ் கொஞ்சம் கோளாறு தான் :). பின்வினைப் பயன் ஹாஹாஹிஹி.

  பதிலளிநீக்கு
 11. அதனாலென்ன வைகோ சார்.. எனக்கு வேறே விதமா எடுக்கத் தோணவேயில்லே.

  பதிலளிநீக்கு
 12. 'பிள்ளாய்' அழகான அழைப்பன்றோ?
  உங்களுக்கு திருப்பாவை என்றால், உங்கள் வரிகளைப் படித்ததும் சட்டென்று என் நினைவுக்கு வந்தது,
  திருநாளைப்போவார் சரித 'சற்றே விலகியிரும் பிள்ளாய்' தான்.

  தந்தையும், தாயும் 'ஆர்' விகுதியைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.:)

  பதிலளிநீக்கு
 13. திருநாளைப்போவார்.. ஒரு சுவாரசியமான பதிவுக்கான நினைவு நரம்பை மீட்டிவிட்டீர்கள் ஜீவி!

  'ஆர்' விகுதி.. நன்றி சார்.

  //துணைகளால் சொர்க்கம் நரகமாவதும் உண்டு.

  முதலில் படித்ததிலிருந்தே இதற்கு ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.. துளைத்தெடுக்கும் நாலு வார்த்தைகள். அசாதாரணமாகச் சொல்லிப் போனீர்களே! நம் சொர்க்கங்களுக்கும் நரகங்களுக்கும் காரணங்களையும் பழிகளையும் நாலாபக்கமும் தேடியே பழகிவிட்டோம்.

  பதிலளிநீக்கு
 14. // நம் சொர்க்கங்களுக்கும் நரகங்களுக்கும் காரணங்களையும் பழிகளையும் நாலாபக்கமும் தேடியே பழகிவிட்டோம்.//

  சரியாகச் சொன்னீர்கள். பழக்க தோஷம்.

  தேடுகிற அந்த லிஸ்டில் முதலில் முந்தி நிற்பது, முன்வினைப் பயன். முன்வினைப் பயன் என்று ஒன்றிருந்தால் பின்வினைப் பயன் என்ற ஒன்றும் இருக்கும் தானே? என்னைக் கேட்டால், பின்வினைப் பயனுக்கு முக்கியத்துவம் தரத்தான் முன்வினைப்பயன் என்ற ஒன்றைச் சொன்னார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அது என்னவோ தெரியவில்லை, இந்தப் பின்வினைப் பயனை யாருமே சீந்துவதில்லை. சீந்தினால், நிகழ் வாழ்க்கையிலேயே பிறவிப் பெரும் பயன் காணலாமோ?..

  பதிலளிநீக்கு
 15. படங்களில் பார்க்கும் போதே உறைய வைக்கிறது பனி. சரியான தலைப்பு. சீக்கிரம் நிலைமை சீராகட்டும். பிரச்சனையைத் தாண்டி, அந்தக் கடைசிப் படம் ரொம்ப அருமை என்பதை சொல்லாமலிருக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 16. குளிரின் தாக்கம் புரிகிறது. கீதா மேடம் சொன்னது போல சென்னையிலும் கூட 'இந்த வருடம் அதிகக் குளிர்' வசனம் கேட்கிறது. 'எல்லா வருடமும் சொல்லும் வசனம் இது' என்றேன். பின்னூட்டங்கள் இன்னும் தகவல்களைத் தந்தன. ஜீவி ஸார் குளிரை அதிகப்படுத்தியுள்ளார். ராமலக்ஷ்மி இங்கும் புகைப்படத்தை ரசித்திருப்பது சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 17. மாம்பலம், தி.நகர்க்காரங்க எல்லாம் குளிர் இல்லைனு சொல்றாங்க. ஆனால் அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர்க்காரங்க குளிர் ஜாஸ்திங்கறாங்க. :)))) சென்னை குறித்து சரியாத் தெரியாட்டியும், இங்கே ஶ்ரீரங்கத்தில் போன வருஷம் பால்கனி கதவைத் திறந்து வைச்சிருந்தோம். இந்த வருஷம் பகலிலேயே திறக்க முடியலை. :)))) குளிர்காத்து சுழற்றிச் சுழற்றி அடிக்குது. :)))) காவிரியிலே தண்ணீர் வேறே நாலு நாளைக்கு முன்னாடி விட்டிருக்காங்க. அது வேறே!

  பதிலளிநீக்கு
 18. ஶ்ரீராம் குறிப்பிட்டதும் தான் ஜீவி சாரின் பின்னூட்டத்தை மறுபடியும் படித்தேன்.

  @ஜீவி சார், பின்வினைப்பயன் வேணாம்னு தானே இந்தப் பிறவியிலே பாடுபட்டுட்டு இருக்கோம்??? இதை யாருமே சீந்தலைனு சொல்ல முடியாது. நம்பறவங்க இனியாவது வினைப்பயன் வேண்டாம்னு தானே நினைச்சுப்பாங்க. :))))))

  பதிலளிநீக்கு
 19. அருமையான பகிர்வு...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. //நாடு தழுவிய கடும் பனி குளிருக்கு global warming காரணம் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.
  கமல்:
  விஞ்ஞானிங்களா? முட்டாப்பயலுங்க. கடும் பனி குளிருக்கு global cooling தானே காரணமாவும்?//

  நேத்திக்கு நைட் எங்க காலனி கிழங்கள் கிட்டே உங்க பதிவை படிச்சு காமிச்சேன். படா வரவேற்பு.
  next half an hour discussion was too hot and interesting.
  கார சாரமான விவாதத்தில் நான் கேட்ட வற்றில் சில :பதில்கள்.
  ****************************************
  . polar vertex தான் காரணம் அப்படின்னு சொல்றாக. நீங்க க்ளோபல் வார்மிங் அப்படின்னு சொல்றீக. ...( ஒரு ஐ.ஐ.டி ஈடைர்டு )
  ***********************************
  விஞ்ஞானிகளை முட்டாப்பயலுக அப்படின்னு கமலு சொன்னாரா ?
  சொன்னாரு அப்படின்னா அது கரெக்டா தான் இருக்கணும்.
  *********************************
  இந்த கொபர்காடே விஷயத்துலே நம்ம கவர்ன்மெண்ட் எடுத்த ச்டான்ட்லே அமெரிக்கவே நடுங்குது அதுதான்.

  . **************************
  ரஜினி ரசிகன்: இன்னாயா உன்னோட தலைவர் பேரு அடிபடுது ?
  கமல் ரசிகன். : -கமல் க்குத் தெரியாத விஷயம் எதுவுமே கிடையாது . அவரு ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா அப்படின்னு சொல்றாக.
  இவங்க பாட்டுக்கு இப்படி ....கீசுபுடுவேன்.

  ரஜினி ரசிகர்: ,முதல் லே அவர் கிட்டே போயி, அவர் விஸ்வரூபம் கதை என்ன அப்படின்னு ஒரு இரண்டு நிமிஷத்துலே சொல்லுங்க அப்படின்னு கேட்டுட்டு வா .

  யோவ். உனக்கு வோணாம். நீ ரஜினி ரசிகன். நான் கமலு ரசிகன். கமலும் ரஜினியும் பிரண்டு. புரிஞ்சுகினியா ?
  *********************************

  இதெல்லாம் என்னையா பிசாத்து ? அதை கண்டு பிடிக்கிறதுக்கு பதிலா இந்த தேவானை விஷயத்துலே கடைசியா பரீத் புராரே ஏன் இப்படி சொதப்பிட்டாக.. அத நீ கண்டுபிடிச்சு சொல்லு

  **********************************************************
  சமீபத்துலே நாலு கிரகம், பூமிக்கு ஒரே நேர் கோட்டிலே வந்தது இல்லையா . அதுதான்.
  ***************************************************************************
  யோவ் ! இன்னாயா சொதப்புற ?
  கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுய்யா?
  இம்புட்டு குளிரு எங்கிருந்து அய்யா வருது ?

  எனக்குத் தெரியும்.
  உனக்குத் தெரியாது.
  எனக்குத் தெரியும்.
  என்ன தெரியும் ?
  சொர்கத்திலே பிரிட்ஜை மூடாம வச்சுட்டாக.
  அப்ப எல்லாத்துக்கும் தானே வரணும். ஏன் அமெரிக்காவுக்கு மட்டும் வருது?

  கொஞ்சம் வைட் பண்ணு. சொர்க்க வாசல் தொரந்துடுச்சு. கேட்டு சொல்றேன்.

  ******************************************************************************
  .
  'Tis better to remain silent and be thought a fool, than open one's mouth and remove all doubt.
  Johnson, Dr Samuel


  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 21. விமானத்தின் சத்தத்தையும் மீறி இடைவிடாது ஆர்ப்பரிக்கும் நயாகரா
  அமைதியில் உறைந்திருப்பது
  அதிசயம் ..!

  பதிலளிநீக்கு
 22. @ கீதா சாம்பசிவம்

  //பின்வினைப்பயன் வேணாம்ம்னு தானே..... நினைச்சுப்பாங்க.//

  நேற்று வாங்கிய கடன் முன்வினை; அதை இன்று அடைப்பது வினைக்கான செயல்பாடு. இன்றும் கடன் வாங்குவது இன்றைய வினை; அதை நாளை அடைப்பது நாளைய செயல்பாடு -- இப்படிப் பாருங்கள்.

  இன்றும் கடன் வாங்காதிருந்தால். அதே தினப்படி வழக்கமாகப் போகாமலிருந்தால் நாளைக்கு அதை அடைக்க வேண்டிய கடப்பாடு இன்றி என்றும் கடன் இன்றிப் போகும்.

  நேரிடையாக கடன் என்பதற்கு 'செய்கின்ற தீவினை' என்று அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு எளிய உதாரணத்திற்காக எடுத்தாளப்பட்டிருக்கிறது.

  கடன் என்பதே மனசுக்கு தெரிவதால் அதை அடைத்தல் என்னும் காரியத்தை செய்து நெஞ்சுக்கு ஒரு நீதி காண முடிகிறது. செஞ்ச பாவம் என்னவென்றே தெரியாத திக்கு முக்காடல் பல கேஸ்களில். இதை எப்படித் தீர்ப்பது என்பதே விடை தெரியாத வினா.

  ஆக என்றைக்கும் மனசறிந்து பிறருக்கு தீவினை செய்யாதிருத்தல்
  சந்தோஷமான பின்வினைப்பயனை நிம்மதியாக அனுபவித்தல்.

  ஒரு தீவினைக்கேற்பவான பரிகாரம் இல்லை, நல்வினை. என்றைக்குமான நல்வினையே நல்லதொரு பின்வினையை நாளும் நிச்சயப்படுத்தும்.

  எல்லாமே ஒரு 'Moral'-காகத் தான் என்பது வேறு விஷயம்! :))

  பதிலளிநீக்கு
 23. ஆக என்றைக்கும் மனசறிந்து பிறருக்கு தீவினை செய்யாதிருத்தல்
  சந்தோஷமான பின்வினைப்பயனை நிம்மதியாக அனுபவித்தல்.

  ஒரு தீவினைக்கேற்பவான பரிகாரம் இல்லை, நல்வினை. என்றைக்குமான நல்வினையே நல்லதொரு பின்வினையை நாளும் நிச்சயப்படுத்தும்.

  எல்லாமே ஒரு 'Moral'-காகத் தான் என்பது வேறு விஷயம்! :)//

  super

  subbu thatha

  பதிலளிநீக்கு
 24. கொ விவகாரத்துல உலகமே நடுங்குது சூரி சார். இனிமே பூந்தமல்லிக்குக் கூட அவருக்கு விசா கிடைக்குறது கஷ்டம்னு தோணுது. வல்லவருக்கு வல்லவர் வையகத்தில் உண்டு.

  பதிலளிநீக்கு
 25. பின்வினை catch22 சமாசாரமாவாம பாத்துக்கணும்னு அழகான வார்த்தைகளில் சொல்லியிருக்காரு ஜீவி!

  பதிலளிநீக்கு
 26. கடமையைச் செய் பலனை எதிர்பாராதேனும் ரொம்பப் பெரிய சங்கு சக்கரக்காரர் சொன்னதா சொல்லியிருக்காங்க. கடமையைச் செய்யுறப்ப வினை நினைனு சொல்லாமப் போயிட்டாங்க. வச்சாங்க traப்பு. எல்லாருமே ருஷ்யச்ருங்கரா இருக்க முடியுமா? வினையும் நிர்மலா டான்சும்.

   

  பதிலளிநீக்கு
 27. பிறந்ததிலிருந்து சென்னைவாசியான எனக்கு உங்கள் ஊர் உறைபனி பனி ஆச்சர்யமூட்டுகிறது.பெங்களூரு வந்துதான் அதுவும் இந்த வருடம் குளிர் தெரிந்தது. நமக்கு வயதானதும் காரணமாக இருக்கலாம்.

  பனிமூடிய ஆரஞ்சு பார்க்கையில் பதறிவிட்டேன். இப்படிக்கூட உண்டா?

  பதிலளிநீக்கு
 28. Here in Baroda we are unable to bear the winter at +11; but I do not know how you are all coping up with this kind of atmosphere.
  Pictures are very nice.

  பதிலளிநீக்கு
 29. என் மகள் டெல்லி குளிர் இந்த முறை அதிகம் என்று சொன்னாள்.
  குழந்தைகள் எல்லாம் குளிர் என்று சொல்லும் போது எப்படி கஷ்டப்படுகிறார்களே என்று புலம்புகிறது மனம்.
  வீடு இல்லாமல் கஷ்டப்படுவோர் நிலை நினைத்தால் மிகவும் சோகம். வசதி உள்ளவர்கள் ஹீட்டர் உபயோகித்துக் கொள்கிறார்கள் மற்றவர்கள் நிலை.


  குளிரில் கவிதை எழுதி இருக்கிறாள்.


  மகள் கவிதை.

  ஓளிர்

  //பனியின் கரங்கள்
  மிடாஸின் துயரம் போல
  உயிர்களை
  சிலைகளாக்கி செல்கிறது
  உறைந்தும் உயிர்த்திருக்கும் மனம்
  தன்னையே
  உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது

  வெம்மைசூழ் நாட்களுக்குள்
  தன்னையறிந்துகொண்டால்
  விரிந்துகொண்டிருக்கும்
  இடைவெளிகளை நிரப்ப
  விலைமதிப்பற்றவைகளை
  சேகரிக்கத் தொடங்கலாம்//

  குளிரை நினைத்தாலே கஷ்டமாய் இருக்கிறது.

  என் பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி.
  நீங்கள் குளிரில் கஷ்டப்பட்டாலும் அருமையான பட பகிர்வு.

  படங்கள் எல்லாம் குளிரின் தாக்கத்தை சொல்கிறது.

  பதிலளிநீக்கு
 30. //உறைந்தும் உயிர்த்திருக்கும் மனம்
  நயமான வரி கோமதி அரசு. பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க.
  என்னைக் கேட்டா கடுங்குளிரைக் காட்டிலும் கடுங்கோடை சமாளிக்கறது கஷ்டம்.

  பதிலளிநீக்கு
 31. உறைந்து கிடக்கும் பனி....... படங்கள் பார்க்கும்போது அழகாக இருந்தாலும் அனுபவிக்கும்போது கஷ்டம் தான்.

  சமீபத்திய பயணம் ஒன்றில் சுமாரான பனிப் பொழிவிலேயே குளிர் அதிகம் உணர முடிந்தது! இப்படியென்றால் :(

  பதிலளிநீக்கு
 32. அப்பாதுரை சார், நீங்க சிகாகோவா.. நான் பிறந்த கோவையை விட ஒரு படி எனக்கு அதிகம் பிடித்த ஊர்.. நான்கு வருடங்கள் அங்கே வில்லாபார்க்கில் இருந்தேன்.. நீங்க எங்க இருக்கீங்க..

  நான் இருந்தப்போ ஒரு முறை கடும் பனிப்பொழிவு இருந்தது.. -45 வரை போனது... இது இன்னும் ஜாஸ்தி.. ஐ மிஸ் சிகாகோ அண்ட் ஸ்னோ ஸ்டார்ம்ஸ்..:)

  பதிலளிநீக்கு
 33. சிகாகோ. நான் அங்க வரும்போது பனி இளகி இருக்குமா. இந்த ஊர்க் குளிரே தாங்க முடியவில்லை.பெண் வீட்டிலும் குழாயைத் திறந்துவிடுவதைச் சொன்னாள். இந்த ஊரைவிட்டு எங்கயாவது போய்விடவேணும்னு வருத்தப் பட்டாள். இரண்டு மணி நேரம் மின்சாரம் கூட நின்றுவிட்டதாகவும்.அடுத்த டிஸ்ட்ரிக்டில் தோழி வீட்டுக்குப் போக திட்டம் போட்ட போது மின்சாரம் திரும்பியதாகவும் சொன்னாள். ப்ராஸ்ட் பைட் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நீங்கள் அலைய வேண்டி வந்தது ஒரு சோகம்.குழந்தைகளைக் கட்டுப் படுத்துவதும் புத்திமதி சொல்வதும் எடுபடாத நாஅட்கள் இப்போது. காலம் சீக்கிரம் சீரடையட்டும்.

  பதிலளிநீக்கு
 34. //சிகாகோ. நான் அங்க வரும்போது பனி இளகி இருக்குமா

  கவலைப்படாதீங்க.. தைரியமா வாங்க சொல்றேன். உங்களுக்காக ஸ்பெஷல் weather சொல்லிவச்சிருக்கேன்.. இன்னும் நூறே நாள்ல வந்துரும்.:)

  பதிலளிநீக்கு
 35. அளவுக்கு மிஞ்சினால்...

  படங்களின் அழகு வியக்க வைத்தாலும் அனுபவிப்‌பவர்களின் துன்பம் எண்ணத் தக்கதே.

  'என்னை அதிகமும் நினைப்பவன் எனது எதிரியே' என்றாராம் சிசுபாலனிடம் கண்ணன்.

  பதிலளிநீக்கு
 36. என்னை அதிகமும் நினைப்பவன் எனது எதிரியே' என்றாராம் சிசுபாலனிடம் கண்ணன்.//

  ok. but who is sisupalan ?
  who is kannan ?

  subbu thatha.

  பதிலளிநீக்கு
 37. நான் தான் கண்ணன்னு சொன்னா உதைக்க வருவாங்களா?

  அதை விடுங்க.. படிப்புல நாட்டமிருக்குறவங்க பரீட்சையைப் பத்தி நினைக்கறதுக்கும் படிப்புல நாட்டமில்லாதவங்க பரீட்சையைப் பத்தி நினைக்கறதுக்கும் என்ன வித்தியாசம்?

  நிலாமகளா சும்மாவா?

  பதிலளிநீக்கு
 38. //'என்னை அதிகமும் நினைப்பவன் எனது எதிரியே' என்றாராம் சிசுபாலனிடம் கண்ணன்.//

  கண்ணன் உண்மையிலேயே இப்படி சொன்னானா இல்லை நம்மூரில் 'அப்துல் கலாம் அதை சொன்னார், இதை சொன்னார்' என்று கண், மூக்கு, காது வைத்து கதை விடுவார்களே, அப்படியா?
  எனக்கென்னவோ அப்பாதுரை தான் இப்படி சொல்லி இருப்பாரோ என்று தோன்றுகிறது :)))

  எனது சிற்றறிவுக்கு தெரிந்த வரை கண்ணன் அப்படி எங்கும் கூறியதாக தெரியவில்லை. கண்ணன் தன்னை சரணாகதி அடைவதையே பிரதான கருத்தாக கீதையில் கூறியுள்ளான். சிசுபாலனின் தாய் கண்ணனிடம் வரம் வேண்டிய போது, அவன் செய்யும் 100 பிழைகள் வரை பொறுத்து கொள்வேன். அதற்கு மேல் ஒரு பிழை செய்தாலும் அவனை கொன்று விடுவேன் என்று கூறியதாகவும், அதே போல, 101-வது பிழை செய்ததும் அவனது தலையை கொய்ததாக மஹாபாரதம் கூறுகிறது.

  பதிலளிநீக்கு
 39. கண்ணன் சொன்னதாக எங்கும் கிடையாது. நம்ம என்.டி.ஆர். தான் ஏதோ ஒரு சினிமாவில் சொன்னதாக நினைப்பு! :))))))

  பதிலளிநீக்கு
 40. நீங்க எந்த கண்ணனை சொல்றீங்க? வ.கண்ணனா, உ.கண்ணனா?

  ஒருவேளை ராமன் சொன்னதோ?

  பதிலளிநீக்கு
 41. பெயரில்லாபிப்ரவரி 05, 2014

  Hurrah! Finally I got a webpage from where I can genuinely take valuable information regarding my study and knowledge.


  My web page - more information

  பதிலளிநீக்கு
 42. யோவ் கிருஷ்ணா வா ? கண்ணா வா ?

  அடுத்த அவதாரம் எடுய்யா...

  போர் அடிக்குது.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 43. //யோவ் கிருஷ்ணா வா ? கண்ணா வா ?

  அடுத்த அவதாரம் எடுய்யா...//

  நான் ஆல்ரெடி எடுத்தாச்சே.

  என்னவா ?

  துஷ்ட நிக்ரஹ
  சிஷ்ட பரிபாலனா....

  புரியல்ல.
  அரவிந்த் கேஜ்ரிவால்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 44. படங்கள் பார்த்தபோது நீங்கள் சொன்னதின் பயங்கரம் தெரிந்ததுப்பா அப்பாதுரை.. சௌக்கியமாக வீட்டுக்கு சென்று சேர்ந்தது நலம்பா..

  இத்தனை குளிரில் எல்லோரும் வீட்டில் முடங்கிக்கிடக்க நீங்க மட்டும் வெளியே குடும்பத்தோடு சுத்தலன்னா இப்படி படங்கள் எல்லாம் எங்களுக்கு காண கிடைச்சிருக்குமா சொல்லுங்க.

  இங்க இருக்குற குளிர் தாங்கமுடியாம சோகமா இருந்த நானு உங்க வரிகளை படிச்சதும் அடப்போ நம்ம குளிர் எல்லாம் ஒரு குளிரான்னு யோசிக்க வெச்சிருச்சு...

  படங்கள் எல்லாம் தத்ரூபம்பா...

  பதிலளிநீக்கு
 45. "பிள்ளாய், சற்றுமுன் படித்த வரியை மறந்துவிடு" enra வரியை மறக்கமுடியவில்லையே!

  பதிலளிநீக்கு
 46. அப்பாதுரை சார் நலமாக உள்ளீர்களா? நீண்ட நாட்களாக வலைப் பக்கம்
  வரமுடியாத சூழ்நிலை ஆகிவிட்டது. இனி நிதானமாகத் தொடரலாம்
  என்றிருக்கிறேன். பல மாதங்கள் கழித்து உங்களது பதிவுகளைப்
  படித்தேன். வழக்கம் போல் களை கட்டுகிறது. வாழ்த்துக்கள் அப்பாதுரை சார். நமது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊத்துக்காடு கிருஷ்ணர்
  திருக்கோயிலை பகிர்ந்துள்ளேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 47. வாங்க புவனேஸ்வரி ராமநாதன்.. நலமா? ஆளையே காணோமேனு பார்த்தேன்.

  பதிலளிநீக்கு