2014/01/06

அதிசயம் இலவசம்


    ன் குளிர் என் குளிரல்ல, இது உய்வாரிலாதொழிக்கும் குளிர். இருபது வருடங்களில் இது போல் குளிர் கண்டதில்லை என்கிறார்கள். குளிர் விட்டுப் போச்சு என்று இனி எவரும் சொல்ல வருடக்கணக்கில் ஆகும்.

பனியும் குளிரும் சிகாகோவை இரண்டு வாரங்களாகப் பிய்த்தெடுக்கிறது. சனிக்கிழமையின் பனிப்புயலில் நிறைய சோகங்கள்.

நேற்று மாலை பனியை அள்ளி ஒதுக்க ஆள் வருவான் ஆள் வருவான் என்று காத்திருந்து கடைசியில் கடவுளும் இந்த ஆளும் ஒன்று எனத் தீர்மானித்து, வீட்டைச் சுற்றிய நடைபாதையில் பனி அத்தனையும் நானே அள்ளியொதுக்கி அப்போது தான் உள்ளே வந்திருந்தேன். "இந்தாப்பா ஹாட் சாக்லேட்" என்றாள் மகள். நன்றி சொல்லியபடி அருந்திக் கொண்டிருந்த போது, வெளியே போயிருந்த எங்கள் நாய் ஸ்டெல்லா பனியில் கால் விறைத்து அப்படியே சுருண்டு விழுந்ததைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கேமெரா இருந்தும் படமெடுக்க மனமில்லாமல், ஹாட் சாக்லெட்டை அப்படியே வைத்து.. நாயை அள்ளி வர ஓடினேன். பனியில் கால் வைத்ததும் தான் எனக்கு உறைத்தது.

வெறுங்கால். அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!

என்ன செய்ய.. இறங்கியாகிவிட்டது, நாயை அள்ளிக்கொண்டு அலறியபடி உள்ளே ஓடி வந்தேன். இடது கால் பாதம் புண்ணாகிவிட்டது.

அக்காலை நொண்டியபடி இக்காலை வெளியே பார்த்த போது தென்பட்ட அதிசயம் ஆனால் உண்மை. ஒரு சூரியன் பார்த்தால் இன்னொரு சூரியன் இலவசம். கண்ணைக் கூசும் என்பதற்கான பொருளே இன்றைக்குத் தான் விளங்கியது. அரை மணி நேரத்துக்கு மேலானது கண்பார்வை இயல்புக்கு வர. (at your own risk போட்டோவைப் பாருங்கள்).

எது அசல், எது நகல்? எதனால் நகல், சொல்லுங்கள் பார்ப்போம். விடை கடையில்.


விடை: என்னைக் கேட்டால்?

26 கருத்துகள்:

 1. இரு சூரியன் ?கண்ணால் காண்பதும் பொய் என்பது இதுதானோ ?

  பதிலளிநீக்கு
 2. faceing pic left side நிஜ சூரியன் ரைட் சைடு வீட்டில் உள்ள லைட்டின் ரிபெலக்ஷனாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. அடாத பனி(ணி)யிலும் விடாத பதிவு. இரண்டு சூரியன்களைக் கண்ட பிறகாவது பனி விலகியதா?.....

  பதிலளிநீக்கு
 4. உண்மையில் யூகிக்க முடியவில்லை
  அதிசயத்தை அந்த அவதியிலும் எங்களுடன்
  பகிர்ந்து கொள்ள நினைத்தது ஆச்சரியம்

  பதிலளிநீக்கு
 5. நல்ல புகைப்படம்....

  ரிஃப்லெக்‌ஷன்?

  பதிலளிநீக்கு
 6. அதிகமான பனி பட்டாலும் பாதம் புண்ணாகிவிடுமா சார்

  நேற்று எங்களுடைய மீட்டிங்கில் டெக்சாசிலும் கடுமையான குளிர் என்றார்கள்..

  ஸ்டெல்லாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
 7. There are two suns in the same picture and it is not possible to know the real one from this photograph. But it is a beautiful photograph.

  பதிலளிநீக்கு

 8. அசல் எது நகல் எது தெரியவில்லை.போகட்டும். சந்திரிகையின் கதை தலை காட்டி மறைந்ததின் மர்மமென்னா.?

  பதிலளிநீக்கு
 9. அண்ட சராசர ஆதிக்க அதியற்புத அமோக சக்தியை அடையாளம் காட்ட

  எது அசல், எது நகல்? எதனால் நகல், சொல்லுங்கள் பார்ப்போம்.

  என்னைக் கேட்டால்?

  அறிவுக்கு எரிச்சல் வருகிறது :)  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 10. விண்டர் சீசன் லே இரண்டு சன் சூரியன் உதிக்கும் நேரத்தில் பார்க்க இயலும். இதை ஒரு ஆப்டிகல் இலுசன் என்றும் சொல்லலாம். இதன் பெயர் phantom sun.

  இருப்பினும் போன வருடம் வானத்திலே மூன்று சூரியனை பார்த்திருக்கிறார்கள்.

  இதைப் பற்றிய ஸ்பேஸ் துறை செய்தி இங்கே.

  such a phenomenon is called “phantom sun”,which is an optical refraction in the atmosphere. In winter, the clouds are formed by ice crystals and they are relatively higher in the sky than in summer. When they happen to form a particular shape, they can reflect the sunshine in such a way that produces the astronomical phenomenon of “triple suns”.~Space Zone

  கானொளி இங்கே.

  https://www.youtube.com/watch?v=L4q2vDA5ZZk
  https://www.youtube.com/watch?v=L4q2vDA5ZZk

  இதெல்லாம் அந்த சூரியன் பண்ற , இல்ல, இல்ல,
  இந்த பனித்துளி, பனித்துளி வானத்துலே சங்கமம் ஆகும்போது , உடான்சு.

  அறிவுக்கு அப்பாற்பட்ட சமாசாரம் இல்ல.

  ஐ மீன்

  அறிவு என்று எதை நினைக்கிறோமோ
  அதற்கு அப்பாற்பட்ட சமாசாரம் நோ.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 11. https://www.youtube.com/watch?v=nAC6p114aBo

  please see a fantastic show.

  s.t.

  பதிலளிநீக்கு
 12. what you have shown is the
  last frame in the video i have shown above.

  subbu thatha.

  பதிலளிநீக்கு
 13. எங்கள் ப்ளாக் சைட் பாரில் தலைப்பு 'சந்திரிகையின் கதை' என்கிறது! இங்கு வந்து பார்த்தால் வேறு ஒரு தலைப்பு! இரண்டு சூரியன் இருக்கட்டும், இரண்டு தலைப்பு எப்படி? எது அசல்? அதைச் சொல்லுங்கள்!

  //வருந்துகிறோம், இந்த வலைப்பதிவில் நீங்கள் தேடும் பக்கம் இல்லை.//

  பதிலளிநீக்கு
 14. கீழே நோக்கி கதிரொளி பாயும் இடப்பக்க சூரியனே அசல் எனத் தோன்றுகிறது. நடுவே இருக்கும் மேகங்களைத் தாண்டி வெளிவருகிறதோ வலப்பக்கமாக சூரிய வெளிச்சம்? ஊகம்தான்:)!

  பதிலளிநீக்கு
 15. அது என்னமோ தெரியலை, ஶ்ரீராமுக்கு வந்தாப்போல் தான் எனக்கும் வருது. அப்புறமா ஒரு வழியாத் தேடிக் கண்டுபிடிச்சு வந்தால் இரண்டு சூரியர்கள். ஏதோ ஒண்ணு அசலாக இருக்கட்டும் போங்க! :)

  பதிலளிநீக்கு
 16. திடீர்னு கரன்ட் அவுட், அப்புறமா வரேன்.

  பதிலளிநீக்கு
 17. வருந்துகிறோம், இந்த வலைப்பதிவில் நீங்கள் தேடும் பக்கம் இல்லை.

  பதிலளிநீக்கு
 18. ’சந்திரிகையின் கதை’ படிக்கலாம் என்று பார்த்தால் இப்படி வருகிறதே!

  வருந்துகிறோம், இந்த வலைப்பதிவில் நீங்கள் தேடும் பக்கம் இல்லை.

  முதலில் உள்ளது அசல் சூரியன்.

  //வெறுங்கால். அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! //
  அய்யோ! கால் புண்சரியாகி விட்டதா?
  குளிரில் கவனமாய் இருக்க வேண்டும். இந்த முறை குளிர் அதிகமாய் இருப்பதால்.

  பதிலளிநீக்கு
 19. அப்பாதுரை சார்,

  நீங்க அயல்நாட்டில இருப்பவரா ,நசிகேத வெண்பாலாம் எழுதவும் ,ஏதோ "பக்திமான்" இலக்கிய தாகத்தில் இருக்கீங்கனு நினைச்சுக்கிட்டேன் அவ்வ்!

  # ரெண்டு சூரியனுக்கு ரெப்ராக்‌ஷன் தான் காரணம்னு சொல்லி இருக்காங்க,ஆனால் அதுக்கு குறிப்பா பேரு இருக்கு , வழக்கமா கேள்விப்படும் "மிராஜ்"- கானல் நீர் தான் ,ஆனால் குளிர் பிரதேசத்தில் ஏற்படுவதை சூப்பீரியர் மிராஜ் என்கிறார்கள்.

  கீழ்வானத்துக்கு கீழ போயிட்ட சூரியனின் கதிர்கள் எங்கேலாம் , குளிர்ச்சியான பகுதிக்கு மேல சூடான காற்று இருக்கோ அங்கே மட்டும் இப்படி ஒரு "ஒளித்தோற்றம் காட்டும், ரெண்டுமே "இமேஜ்" தான் எதுவுமே ஒரிஜினல் இல்லை.

  தள்ளி தள்ளி ரெண்டு மூனு இடத்தில காற்றில் வெப்ப வேறுபாடு இருந்தால் ரெண்டு மூனு சுப்பீரியர் மிராஜ் இமேஜ் கூட தெரியும். ஒரே சீராக லேயராக வெப்ப வேறுபாட்டில் காற்று அடிவானத்தில் இருந்தால் "சூரிய ஒளி அரைவட்ட டிஸ்க்கா" அடிவானத்தில் தெரியும்.

  கீழ்வானத்தில் இருக்கும் சூரியனின் ஒளிக்கற்றையை இப்படி இப்படி ரெண்டு இமேஜ் ஆக side by side காட்ட , வளிமண்டலத்தில் செங்குத்தாக ஒரே சீரான வெப்பக்காற்று ரெண்டுக்கும் நடுவே இருக்கணும் (vertically separated by air with uniform temperature )அவ்ளோ தான்.

  இது போன்ற குளிர் பிரதேசத்து மிராஜை "ஐஸ் மிராஜ் அல்லது Fata Morgana மிராஜ் என்கிறார்கள்.

  எல்லாத்துக்கும் முன்னாடியே பேரு வச்சிட்டாங்க,நாம தான் தெரிஞ்சிக்காம இருக்கோம் :-))..

  கோல்ட் பர்ன் என்பதை கேள்விப்பட்டிருக்கேன் ,அனுபவிச்சவங்க அனுபவத்தை இப்போ கேட்டாச்சு!

  பதிலளிநீக்கு
 20. அப்பாதுரை, உங்களோட புதிய பதிவில் பின்னூட்டம் இடமுடியலை. பெத்தாபுரம் பதிவின் பின்னூட்டங்களை நீங்கள் நிறுத்தி இருப்பதாகச் செய்தி வருகிறது. இன்னொரு சுட்டியின் மூலம் அந்தப் பதிவே இல்லைனும் வருது! :((((
  கொஞ்ச நாட்களா உங்க பதிவுகள் இப்படி ஆகிவிடுகின்றன என்பது வருத்தமா இருக்கு. நேரம் கிடைக்கையில் சரி பண்ணுங்க அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 21. கண் பிடுங்கி நீலன் வேறே பாதியிலே நிக்கிறானே! :(

  பதிலளிநீக்கு
 22. @சாய்ராம் கோபாலன்,

  அதெல்லாம் இல்லை. அவரோட வலைப்பக்கத்திலே ஏதோ பிரச்னை. அதை சரி பண்ணிட்டு இருப்பார்னு நினைக்கிறேன். பழைய பதிவுகளை எல்லாம் மீட்டு எடுக்கிறேன்னு ஒரு முறை சொன்னார். இப்போ என்னமோ கொஞ்ச நாட்களா ஆளையே காணோம்! :(

  பதிலளிநீக்கு
 23. வருக வவ்வால்..
  உடல் அயல்நாட்டில், உள்ளம் தமிழ்நாட்டில். என்று பொய் சொல்லத் தோன்றுகிறது. அயல்நாடு போதும் சார் :)

  பதிலளிநீக்கு
 24. இரட்டைச் சூரியனுக்கான வவ்வால் கருத்தும் உடன்பாடே. இதைப் பற்றி எழுதுவதாகச் சொல்லிவிட்டு மறந்தே போனது.

  பதிலளிநீக்கு