2012/02/08

நானும் கடவுளும்




1            2



    சாந்தினிக்கு நன்றி.
**

    சென்ற டிசம்பர் மாத இறுதியில் பழைய நண்பர்கள் இருவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் முதலாமவருக்குத் திடீரென்று வேலை போய்விட்டது. எழுபதுகளில் அமெரிகா வந்து பெரிய படிப்பு படித்து, இந்வெஸ்ட்மெந்ட் பேங்கராக முப்பது வருசங்களுக்கு மேல் குப்பை கொட்டுவதால் நிறைய சேர்த்து வைத்திருக்கிறார். பணம் ஒரு பிரச்சினையில்லை. இருந்தாலும், 'type A' காரர்களின் paranoia அவரையும் பிடித்துக் கொண்டது. ஓய்வு பெற சில வருடங்களே இருக்கும் பொழுது, கிடைத்தவரைக்கும் போதும் என்று அடங்க வேண்டாமோ? தன்னை வேலையிலிருந்து நீக்கியது சரியில்லை என்று வழக்கு போட்டார். ஆயிரக்கணக்கில் செலவு செய்தார். இரண்டு வருடங்களாக வழக்கு நடந்து கொண்டிருந்தது. இடையில் மோசமான திருப்பம். பங்கு ஊழலில் கைதாகிச் சிறையிலிருக்கும் ராஜரத்தினத்தோடு கூட்டு சேர்ந்தார் என்ற திடீர் FBI குற்றச்சாட்டின் பெயரில் இவர் மேல் இன்னொரு வழக்கு. நிலை மிக மோசமாகி நாட்டை விட்டே சொல்லாமல் கொள்ளாமல் ஓடவேண்டியிருக்குமோ என்று ரகசியமாகத் திட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தார்.

மற்றவருக்கு டிசம்பரில் வேலை போனது. இவர் சமீபத்தில் அமெரிகா வந்தவர். மனைவி, இரண்டு பிள்ளைகள் என்று சிறு குடும்பம். தன்னம்பிக்கை என்றால் என்னவென்று இவருக்கு யாரும் சொல்லித் தராததால், மிகவும் நொந்து போய் விரக்தியில் ஊரைப் பார்க்கத் திட்டம் போட்டிருந்தார். முதலாமவர் மற்றவருக்கு நிறைய அட்வைஸ் கொடுத்தார். நானும் கேட்டுக் கொண்டிருந்தேன் :) என்னுடைய முறை வந்ததும் என் துன்பங்களைச் சொல்லித் திரும்பினேன். சொல்ல மறந்து போனது, இருவரும் தீவிர தெய்வபக்தர்கள்.

ஜனவரியில் முதலாமவர் என்னுடன் தொலைபேசினார். வீட்டுக்கு அழைத்தார். தன்னுடைய சிக்கல்கள் தீர, வீட்டில் ஒரு வாரத்துக்கு தினமும் ஹோமங்கள் செய்யப் போவதாகவும், தனக்குக் கிடைத்தது போக மிச்சம் ஏதாவது பலனிருந்தால் எனக்கும் கிடைக்கலாம் என்பது போலவும், சொல்லி என்னை அவசியம் வருமாறும் வந்து இறையருளைப் பெறுமாறும் வற்புறுத்தினார். அவர் மனைவி என்ன சொல்கிறோம் கேட்கிறோம் என்று தெரியாதது போல ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் பேசுவார். எனக்குப் பரிதாபமாக இருக்கும். எனக்கு இவரின் பேச்சும் செயலும் அதிர்ச்சியாக இருக்கும். சில நேரம் பயமாக இருக்கும். அவர் அதைப்பற்றி என்றைக்குமே கவலைப்பட்டதில்லை. சொல்வதையோ செய்வதையோ தனக்குத் தோன்றியவண்ணம் தொடர்வார். அவரும் பலவித தெய்வங்கள் ஹோமங்களின் பெயரைச் சொல்லி, அத்தனை அருளும் மூட்டையாக வீட்டில் சேர்வது போலப் பேசினார். அமெரிகாவில் பசுதானம் செய்வதாகச் சொல்லி உண்மையிலேயே புல்லரித்துப் போனார்.

என் நம்பிக்கைகள் பற்றி இவர்களுக்குத் தெரியும் என்றாலும், விடாமல் வற்புறுத்தினார்கள். எரிச்சலை அடக்கிக் கொண்டு, 'அவசியம் வருகிறேன்' என்றேன்.

சென்ற ஞாயிறன்று முதலாமவர் என்னுடன் மீண்டும் தொலைபேசினார். ஹோமவிழாவுக்கு ஏன் வரவில்லை என்று கேட்டார். இவருடன் பேசுவதில் ஒரு வசதி. அடுத்தவரைப் பேச விடாமல் தானே பேசிக் கொண்டிருப்பார். அவருடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று என்னை யோசிக்கவிடாமல் தொடர்ந்தார். "வந்திருந்தா உனக்கும் புண்ணியம் கிடைச்சிருக்குமே?" என்றார். அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசிக்கையில் அவரே தொடர்ந்தார். "துரை.. பாரு.. ஹோமம் செஞ்சு ரெண்டே வாரம். என்னோட பழைய கம்பெனியோட செடில்மெந்ட் ஆயிடுச்சு. மூணு லட்சம் டாலர் துரை.. i am so happy! FBI கேசும் ஆதாரமில்லைனு கலைச்சுட்டாங்க.." என்றார்.

"வாழ்த்துக்கள்" என்றேன். அவர் விடாமல், "இதுக்குத்தான் தெய்வ நம்பிக்கை வேணுங்கறது துரை.. பஞ்சாப் போயிடுச்சு பாரு.. கடவுள் இல்லை குரு இல்லைனு நீயும் சொல்லிட்டிருக்கே.. பத்து வருசமா கிடந்து அல்லாடுறே.." என்று என்னைப் பற்றிப் பேசினார். பத்து நிமிடம் போல் என் இன்னல்களை இளக்காரம் செய்தார். பிறகு மற்ற நண்பரைப் பற்றிப் பேசினார். நண்பர், தன் மனைவி குழந்தைகளை இந்தியா அனுப்பிவிட்டாராம். இங்கே ஒரு அப்டாமெட்ரிஸ்டிடம் மணிக்கூலிக்கு வேலைக்குச் சேர்ந்திருக்கிறாராம். கடையிலேயே பின்னறை ஒன்றில் தங்க அனுமதி கொடுத்திருக்கிறார்களாம்.

மற்ற நண்பரை அழைத்துப் பேசினேன். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று தேவைப்படாத அறிவுரை வழங்கினேன். முதலாமவரைப் பற்றிப் பேச்சு திரும்பியது. "நீயும் எதுனா ஹோமம் செஞ்சிருக்கலாமே?" என்றேன். என்னைப் புரியாதது போல், "அவசியம் செய்யறேன் துரை. ஊர்ல என் பெண்டாட்டி அடுத்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ரெண்டு நாளும் கூழ் காச்சி ஊத்தப் போறா.. இனி அம்மன் கண் தெறக்கணும்" என்றார்.
**

    றத்தாழ மூவாயிரம் வருட வளர்ச்சிக்குப் பின்னும், அன்றைக்குப் போல் உலக மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அடிப்படை வேற்றுமை. அதற்குப் பிறகு மதம், இனம், குலம், பணம், படிப்பு என்று அடையாள அடிப்படையில் பல பிரிவினைகள். வேர் என்னவோ கடவுள் நம்பிக்கைதான் என்று தோன்றுகிறது.
**

    ன் பிள்ளைகள் கடவுள் பற்றிக் கேட்ட போது எனக்கு உண்மையென்று பட்டதைச் சொல்லிவிட்டேன். என் பிள்ளைகள் துருவித் துருவிக் கேட்பவர்கள். பிஞ்சுமனப் பிள்ளைகளுக்கான குணச்சித்திரம். அவர்களின் ஐந்து-ஏழு வயதில் என்னுடன் நடைபெற்ற வழக்கமான உரையாடல்:
"is there a god?"
"i don't know"
"do you believe there is a god?"
"no"
"does mom believe in god?"
"you should ask her"
"mom says there is no god and if there is a god, people won't be cruel to animals"
"okay.."
"should i believe in god?"
"that is up to you"
"is there a reason i should believe in god?"
"no"
"will god punish me if i don't believe in him?"
"i don't believe so"
"is god a woman?"
"i don't know"
"grandma says jesus is the only god. jesus was a man, right?"
"right"
"i think that is unfair. i mean.. why should god be a man?"
"i don't know"
"is god an animal?"
"i don't know"
"must be. look at the god pictures india grandma gave you.. are indian gods animals?"
"i don't know"
"you don't seem to know anything dad"
"sorry dear"
"then how do you know god won't punish me?"

ம்ம்ம்.

கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ மனிதர்கள் தண்டிப்பார்கள் என்ற கவலை எனக்கு உண்டு. இத்தனை வளர்ச்சிக்குப் பின்பும் கடவுள்-மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அமெரிக்கச் சமூகம் என்றில்லை, உலகச் சமூகத்திலும் இதே கதை. கடவுள் நம்பிக்கை இல்லாதவரை விசித்திரமாகப் பார்க்கும் பார்வை. எண்ணம். செயல்.

சில வருடங்கள் பொறுத்து, இந்த உரையாடல்:
"dad.. i told my teacher that i don't believe in god.. she got mad at me.. you need to now come and talk to my teacher and principal"

பள்ளிக்குச் சென்று, பிள்ளைகளின் ஆசிரியருடன் பேச்சு வார்த்தை. போராட்டம்.
"your child is challenging our allegiance.. the foundation of this country.. our constitution.."
"which is.."
"you know.. in god we trust"
"i think america was founded on 'life, liberty and pursuit of happiness'.. that is the allegiance.. liberty and justice.. you should check it out"
"yeah.. but we are one nation under god.. let's not forget it"
"okay"
"do you believe in indian god then?"
"didn't know god had a nationality or operated within borders.. but, no, we don't believe in any god"
"unwarranted sarcasm.. but seriously, there is no pursuit of happiness without god"

இவருடன் பேசி என்ன பயன் என்று தோன்றியது. ஏதோ சமாதானம் சொல்லி வெளியே வந்தேன். மாலை வீடு வந்ததும் பிள்ளைகளிடம் இனிமேல் இது போல் பள்ளியில் பிரச்சினை கிளப்ப வேண்டாம் என்றேன்.
"why?"
"because your teachers don't like your stand"
"so.. should i say i believe in god now?"
"not really.. but you don't have to say that you don't believe in god"
"isn't that the same thing?"
"no. i am not asking you to say that you don't believe in god; i am asking you not to say that you do not believe in god. they mean the same, but are different"
"whatever.."
"listen.. don't make it an issue.. your job is to be a good student and get good grades"
"so you want me to lie.."
"no"
"whatever.."
அத்துடன் அன்றைய மாலையின் நிம்மதி தொலைந்தது.
**

கடவுள் தேவையில்லை என்ற தீர்மானத்துக்கு வந்தபோது எனக்கு முப்பது வயதுக்கு மேலாகிவிட்டது. அந்த வயதில் எனக்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கில் அடையாளங்கள் இருந்ததால் நாத்திகம் என்னைப் பாதிக்கவில்லை. மாறாக, என் நாத்திக அடையாளம் ஒரு status symbol போல், fashionable stance போல் ஆனது, நான் சற்றும் எதிர்பாராத பலன். கடவுள் நம்பிக்கை இல்லாததால் என்னை அறிவாளி என்று ஒரு சிறுகூட்டம் நம்பத் தொடங்கியது. கடவுள் நம்பிக்கைக்கும் அல்லது நம்பிக்கையின்மைக்கும், அறிவுக்கும் தொடர்பே இல்லை. பகுத்தறிவு என்பதன் பொருள் கடவுள் மறுப்பல்ல என்று உறுதியாக நம்புகிறேன். அதைப் பற்றிய என் கருத்தை பின்னால் எழுதுகிறேன்.

எனக்கு வேறு அடையாளங்கள் இருந்ததால் நாத்திக அடையாளம் பாதிக்கவில்லை என்றேன். ஆனால் என் பிள்ளைகளைப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. 'oh.. that agnostic family.." என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பள்ளியில் பிள்ளைகளைக் கிண்டல் செய்கிறார்கள். "you know why your parents don't believe? because their gods are fantasy creatures. four hands.. six faces.. and a thousand avatars. our god has one face and he looks like you and me" என்ற subliminal பிரசாரம் வேறே.

என் பிள்ளைகள் குழம்பத் தொடங்கியிருக்கிறார்கள். 'கடவுள் உண்டா?' என்று என்னிடம் கேட்ட போது, என் அம்மாவைப் போல் நானும் என் பிள்ளைகளிடம் பொய் சொல்லியிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. 'சாமி கண்ணைக் குத்திடுவார்' என்று கொஞ்சம் கூட இங்கிதமோ அறிவோ இல்லாமல் பொய் சொல்லியிருக்கலாமென்று தோன்றுகிறது. சமூகம் இனி என் பிள்ளைகளை atheist என்ற லென்சுடனே பார்க்கும் என்ற எண்ணம் ஏனோ திடீரென்று அச்சமூட்டுகிறது.

இந்தக் கடலில் நான் தனித் தீவல்ல என்றும் அறிவேன். என்னைப் போல் நிறைய குடும்பங்கள் நிலைமையை உணரத் தொடங்கியுள்ளன.
**

    ருங்காலத்தில் ஒரு பெரிய போராட்டம் நடக்கப் போகிறது என்று நினைக்கிறேன். பசி, பணம், இனம், குலம், மொழி, கலாசாரம் எனும் இந்த அடையாளங்களை மீறிய ஒரு தீவிரப் போராட்டம் காத்திருக்கிறது.
**

bruce hornsbyயின் 'preacher in the ring' பாடலிலிருந்து:



➤➤ 2

57 கருத்துகள்:

  1. பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய நல்ல பதிவு;-)

    திமிர்/முட்டாள் பேரு அப்படிவச்சிருக்க வேணாம்னு தோணுது. நீங்க மரியாதையாகப் பேசுபவர் என்ற என் முன்முடிவும் காரணமாயிருக்கலாம்.

    தமிழ்ப்பற்றைத்தாண்டிய தீர்மானத்தோடு, குழந்தைகளிடம் அவர்களின் 8வயதுவரை ஆங்கிலத்தில் (அமெரிக்காவுக்குத் தேவையான அடிப்படை இலக்கணம், தன்னம்பிக்கை வளர) பேசினோம். நேர்மாறாக, அவர்களின் 10வயது வரை இந்து தெய்வங்களைப் பற்றி மட்டுமே சொல்லிக் கொடுக்கிறேன். 10வயதுவரை "இந்துவுக்கு ராமர் போல கிறிஸ்தவருக்கு ஏசு" என்று சொல்கிறேன். என் கடவுள் நம்பிக்கை அத்வைதத்தில் தொடங்கி அதிலேயே முடிகிறது (அறிவுசார் and/or அன்புசார் வாழ்க்கை தான் கடவுள்னு நம்பறேன்). தெய்வங்களில் நம்பிக்கை இருந்தால் தான், குழந்தைகள் வளர்ந்தபின் மரியாதையோடேயே கடவுள்தேர்வைச் செய்து கொள்ளமுடியும் என்று நம்புகிறேன். எனவே ஏசுவை மண்ணில் நடந்த மாமனிதன் என்றே சொல்கிறேன். மற்ற மதங்களை வெறுப்பவர்களை "யோசிக்காமல் புறந்தள்ளு" என்றும் சொல்லிக் கொடுக்கிறேன்.

    எதற்கு இத்தனை விளக்கம் என்றால், இந்தியாவில் இந்துவாய் வளர்ந்து, அடையாளம் தேவைப்பட்டு, இங்கே மதம்மாறிய பலரைச் சந்திக்கிறேன். அத்தோடு, நீங்க சொன்ன "மிஸ்டர்.திமிர்" போல என் குழந்தைகள் வளரக் கூடாது என்றும் ஒரு உள்ளுணர்வு இருக்கத்தான் செய்கிறது.

    Signed: Essentially Complicated:-)

    பதிலளிநீக்கு
  2. அப்பாதுரை அவர்களே! மிக நல்ல பதிவு. தத்துவம்,வாழ்க்கை,நடைமுறை, எதிர்காலம் அத்துணையையும் பார்த்து நாமும் நமது அன்புக்குறியவர்களும் வாழ வேண்டியதுள்ளது. நீங்கள் அனுமதித்தால் மறுபதிவு (என் இடுகையில்) செய்யலாம். உத்திரவுக்காக காத்திருக்கிறென்.---காஸ்யபன் .

    பதிலளிநீக்கு
  3. அப்பாதுரை அவர்களே! மிக நல்ல பதிவு. தத்துவம்,வாழ்க்கை,நடைமுறை, எதிர்காலம் அத்துணையையும் பார்த்து நாமும் நமது அன்புக்குறியவர்களும் வாழ வேண்டியதுள்ளது. நீங்கள் அனுமதித்தால் மறுபதிவு (என் இடுகையில்) செய்யலாம். உத்திரவுக்காக காத்திருக்கிறென்.---காஸ்யபன் .

    பதிலளிநீக்கு
  4. உங்கள் குழந்தைகளுடன் நடந்த உரையாடல் மிக சுவாரஸ்யம்.

    நண்பர்களை "திமிர்" என்றும் " "முட்டாள்" என்றும் விளித்தது உறுத்துகிறது. பொது வெளியில் நண்பர்களை அவமானபடுத்த வேண்டாமே? நீங்கள் இதை பொதுவில் எழுதுவீர்கள் என அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள் - எனவே உங்களை நம்பி சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்தததை பொது வெளியில் அவர்களை அசிங்கபடுத்த எழுதுவது எனக்கு உறுத்தலாக படுகிறது நான் சொல்வதை தவறாக எண்ண வேண்டாம் !

    பதிலளிநீக்கு
  5. எனக்குள்ளும் கடவுள் பற்றிய நிறையக் கேள்விகளுண்டு. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்த விதம் பிரமிப்பைத் தந்தது. கடவுள் உண்டா என்ற சந்தேகத்தை எழுப்ப முயன்ற போதெல்லாம் பிறரால் பேசவே விடாமல் அடக்கப்பட்டேன். உங்கள் பிள்ளைகளுக்கு கருத்து சுதந்திரம் கொடுத்திருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி ஸார். இன்று கவிதை போல் ஒன்று எழுத முயன்றேன். அதில் கடவுள் உண்டு. அதைப் படித்தால் என்ன சொல்வீர்களோ... பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. மனிதத்தின் அத்தனை நிறங்களும் உலகுக்குத் தேவை என்றே நம்புகிறேன்.

    தன்னம்பிக்கையோடு சற்று நமக்கு மேலே ஒரு சக்தி உண்டு என்று பிள்ளைகளுக்கு உணரவைத்திருக்கலாம்..

    தனிப்பட்ட தீவாய் வளர்வது உகந்ததல்ல..

    ரோமில் இருக்கும் போது ரோமனாய் நடந்துகொள்ள பயிற்சி அளிப்பது பெற்றோர் கடமை...

    பதிலளிநீக்கு
  7. is there a god?
    i dont know.
    do you believe there is a god?
    no.
    சற்று முன்னுக்குப் பின் முரணாகத் தெரிய வில்லையா அப்பாதுரை.? தெரியாத ஒன்றை இல்லை என்று எப்படி கூறமுடியும். நம் பதில்கள் அவர்கள் சுயமாக சிந்திக்க உதவ வேண்டும். கேள்வி கேட்கும் குழந்தைகள் பதிலையும் புரிந்து கொள்வார்கள். ஆனால் அதற்கு பெரியவர்கள் vague ஆக பதில் சொல்லிக் குழப்பக் கூடாது. கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்று தெளிவாக்கலாம். இல்லையென்ற்றால் நாம் ஏன் கடவுள் இல்லையென்று நினைக்கிறோம் என்றாவது சொல்ல வேண்டும். உங்களைப் போலவே உங்கள் குழந்தைகளும் இருக்க வேண்டும் என்ற ஆழ்மனது எண்ணமே அவர்களை குழப்ப வைக்கிறது. கடவுள் எனப்படுவது பரிசு அல்லது தண்டனை தர என்பதற்கும் மேலான விஷயம் என்றாவது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வேறு, கடவுள் தேவையா இல்லையா என்படு வேறு.பகுத்தறிவு நாத்திகம்
    சம்பந்தப் பட்டது என்பதில் எனக்கும் உடன்பாடில்லை.பசி,பணம் குலம்,மொழி ,கலாச்சாரம் எனும் அடையாளங்களின் வேர்க் காரணமே ஒருவர் மேல் மற்றவர் காட்டும் ஆதிக்க மனப் பான்மையே. இதை இந்த ஆதிக்க மனப் பான்மையிலிருந்து வேறுபடுத்தப் பட்ட கல்வியே உதவும் என்பதே என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  8. கடவுள் தண்டிப்பதில்லை; பயமுறுத்தமாட்டார் என்பதெல்லாம் சரியே. ஆனால் நம்மையும் மீறிய ஒரு சக்தி தான் கடவுள் என்பதை உங்கள் பிள்ளைகள் தாங்களாகவே புரிந்து கொள்வார்கள்.

    மற்றபடி உங்கள் குழ்ந்தைகளுடன் ஆன உங்கள் உரையாடலில் நீங்கள் குழம்பிப் போயிருப்பது தெரிகிறது.

    உங்கள் நண்பர்கள் செய்தது, செய்வது, செய்யப் போவது எல்லாமும் நம்பிக்கை சார்ந்தவையே.

    பொதுவாகவே இனிமையான நல்ல சொற்களைப் பேசினாலே நல்லது நடக்கும் என்ற எண்ணம் அனைவருக்குமே உண்டு. இதை ஏன் ஹோமம் செய்யும்போது சொல்லப்படும் மந்திரங்கள் செய்யக் கூடாது? மந்திரங்களுக்கும் சக்தி உண்டு என்பதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.

    உங்கள் நண்பர் தவறு செய்துவிட்டுப் பின்னர் பரிகாரம்போல் ஹோமம் செய்தது வேண்டுமானால் சரியாய் இல்லை. ஆனால் அதற்காக ஹோமமே செய்வது தவறு எனக் கூற முடியாது. பல உதாரணங்கள் இருக்கு.

    பதிலளிநீக்கு
  9. போபால் வாயுக் கசிவின் போது அக்னிஹோத்ரம் செய்த வீட்டில் உள்ளவர்கள் மட்டும் தப்பிப் பிழைத்த கதையை மறந்திருக்க முடியாது. மழைக்காக ஹோமம் செய்தால் மழை பெய்வதையும் பார்க்கிறோம். இப்படிச் சொல்ல நிறைய இருக்கு

    பதிலளிநீக்கு
  10. பகுத்தறிவு பற்றிய உங்கள் கருத்தை நானும் ஒப்புக்கொள்கிறேன். அப்படிப் பகுத்தறிந்து பார்த்தாலே நம்மை மீறிய ஒன்று இருப்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்களே? உங்கள் குழப்பம் கடவுள் இருக்கிறாரா என்பதை விட இந்துக் கடவுளா ஜீசஸா என்பதில் இருக்குமோ? அப்படி எனில் அவரும் கடவுளே. பெயர் தான் மாற்றம். கிருஷ்ணன் என நாம் அழைத்தால் கிரைஸ்ட் என அவர்கள் சொல்கிறார்கள். அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  11. மற்றபடி நான் சொல்ல நினைத்தவற்றில் பலவற்றை கெக்கேபிக்குணியும், ஜி.எம்.பி அவர்களும் சொல்லிவிட்டார்கள். அவர்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. Well said, Mr. Mohan Kumar. அப்பாதுரை அவர்களின் திமிரும் முட்டாள்தனமும் ரொம்ப பேருக்கு ரொம்ப நாளா தெரியும். வேதா சொன்னாங்களேனு அவசரமா வந்து படிச்சேன் அப்பாதுரை. Shocking!

    //கடவுள் தேவையில்லை என்ற தீர்மானத்துக்கு வந்தபோது எனக்கு முப்பது வயதுக்கு மேலாகிவிட்டது.
    Hello? மிச்ச முப்பது வருஷம் என்னாச்சு? இப்படி அனியாயமா ஸ்லேட்டு அழிக்கிற மாதிரி அழிச்சு போடறீங்களே? முப்பது வயசுல you were not even married நண்பரே.. வேண்டாம், அப்புறம் ஏதாவது சொல்லிடப் போறேன்.

    பதிலளிநீக்கு
  13. திமிர் முட்டாள் என்பதை நண்பர்களாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு உருவகமாக எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. நிஜத்தில் நண்பர்களை அப்பாதுரை அபபடி விளிக்க மாட்டார் என்று நம்புகிறேன். குழந்தைகளுக்கு நம்மூரில் ஒரு குறிப்பிட்ட வயது வரை 'உம்மாச்சி கண்ணைக் குத்தும்' லாஜிக் தேவையே என்று நினைக்கிறேன். சில அடிப்படை ஒழுங்கு முறைகள் இளமையில் படிய இந்த பயங்கள் தேவை என்றும் தோன்றுகிறது. சிந்திக்கும் வயது வந்த பின் குழந்தைகள் தன் பாதையைத் தீர்மானிப்பார்கள். கெக்கேபிக்குணி, ஜி எம் பி சார் சொல்லியிருப்பதை என் மனதும் ஆமாம் போடுகிறது. கீதா மேடம் சொல்லியிருப்பது போல கிருஷ்ணன் என்ன, கிறிஸ்து என்ன....மந்திரங்களின் சப்த ஒலியில் அதிர்வுகள் ஏற்படும் என்று படித்திருக்கிறேன். அக்னிஹோத்ரம் பற்றி கீதா மேடம் சொல்லியிருப்பதும் சரிதானே...

    பதிலளிநீக்கு
  14. ராமசுப்ரமணியன்: அப்பா துரை என் நண்பர். நீங்கள் சொன்ன மாதிரி அவரை பற்றி நான் இது வரை உணர்ந்ததில்லை.

    ஸ்ரீராம். அப்படி விளித்ததை கூட விடுங்கள். எனது பின்னூட்டத்தில் சொன்ன ஒரு வரியை மீண்டும் நினைவு கூர்கிறேன் :

    உங்களை நம்பி சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்தததை பொது வெளியில் அவர்களை அசிங்கபடுத்த எழுதுவது எனக்கு உறுத்தலாக படுகிறது

    இது தான் நான் சொல்ல வந்த விஷயம் !

    என் அலுவலகத்திலும், என் நண்பர்களிடமும் எவ்வளவோ அந்தரங்கங்கள் உண்டு. அவற்றில் பல அவர்கள் என்னிடம் பகிர்வதும் உண்டு, அதை நான் வெளியில் சொல்வதே தவறு. அதை பதிவாக போட்டு எழுதினால் எவ்வளவு பெரிய தவறு !

    இது தான் வலிக்கிறது.

    அப்பா துரையை என்றேனும் ஒரு நாள் நான் சந்தித்தால் ஜாக்கிரதையாக பேச வேண்டும்; நான் பேசுவதை பதிவாக என்னை தாக்கியே எழுதி விடுவார் என எனக்குள் லேசாக ஒரு பயத்தை இந்த பதிவு தருகிறது !

    பதிலளிநீக்கு
  15. நான் ஒன்றும் சொல்வதாக இல்லை!

    பதிலளிநீக்கு
  16. நாந்தான்நிஜக்கடவுள்பிப்ரவரி 09, 2012

    பத்த வச்சிட்டியே பரட்டை.

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லாபிப்ரவரி 09, 2012

    @G.M..BALASUBRAMANIAM

    பாலா,
    அப்பாதுரை எங்கே கடவுள் இல்லை என்கிறார்? அதில் தெரியவில்லை என்று தானே பொருள் கொள்ள முடிகிறது?

    @அப்பாதுரை
    //"you don't seem to know anything dad"
    "sorry dear"
    "then how do you know god won't punish me?"
    //
    Same Blood.. :)
    குழந்தைகளுக்கு கடவுள உண்டு என சொல்லி கொ(கெ)டுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

    பதிலளிநீக்கு
  18. உங்களுக்கு நன்றாகவே தெரியும் இக்கட்டுரை நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்று ...அதே சமயத்தில் அதை திடமாகவே சமாளிப்பிர்கள் என்பது எங்களுக்கும் நன்றாகவே தெரியும் ....

    அவசர பெயர்கள் விமர்சனத்துக்கு காரணம் ...அந்த பெயர்கள் படிப்போட்டத்தை தடுக்கிறது ..நான் அனுபவித்தேன் ...பின்னர் குழந்தைகளுக்கு வந்தபின் ஓட்டம் சரியாகிவிட்டது ....

    சின்னவயிசில நிறைய பேர் உங்க கண்ண குத்த முயற்சி செய்திருக்காங்க போல அதனால உங்க கடவுளை ( கடவுள் இல்லாமையை ) கண்மூடிகளை சுத்தியே வச்சிரிக்கிங்க ....

    கடவுள் ரொம்ப சிம்பிள் .... அது ஓரு வாழ்க்கை முறை ... பாரதி காணாதா ஞானமா ? அவன் ஏன் சக்தியையும் பக்தியையும் முன் வைத்தான் ....

    // வருங்காலத்தில் ஒரு பெரிய போராட்டம் நடக்கப் போகிறது என்று நினைக்கிறேன். பசி, பணம், இனம், குலம், மொழி, கலாசாரம் எனும் இந்த அடையாளங்களை மீறிய ஒரு தீவிரப் போராட்டம் காத்திருக்கிறது./// இது தேவையில்லாத எதிர்பார்ப்பு

    கொடுக்க வேண்டிய வயதில் அன்போடு பக்தியையும் அதன் பின் அறிவோடு ஞானத்தையும் கொடுத்தால் எதுக்குங்க போராட்டம் .... அதுக்கு கடவுள் பெரும்பாலோர்க்கு தேவைப் படுகிறது.. கூட சேர்ந்து கும்பிட்டிப்போம் .......

    பதிலளிநீக்கு
  19. ஒரு ஐந்து வயதுச் சிறுவன் தன் தந்தையைப் பார்த்து அப்பா நீ எப்பொழுது சாவாய்? என்றுகேட்டால் தந்தை சிரித்துக் கொண்டே பதில் கூறலாம். இதே கேள்வியை பருவம் மாறிகேட்டால் விபரீதமாய் போய்விடும்.

    இருபத்திஐந்து வயதில் ஒருவன் தன் தந்தையைப் பார்த்து இக்கேள்வியை கேட்டால் தந்தை சிரித்துக் கொண்டே பதில் கூறமுடியாது, சிந்தித்துத் தான் பதில் சோல்லவேண்டும்.
    இந்த வயதில் இரண்டு விதமான பேர்தான் இக்கேள்வியைக் கேட்கமுடியும்.

    1)மூளை வளர்ச்சியற்ற உடம்பால் வளர்ந்த இருபத்திஐந்து வயது இளைஞன் கேட்கலாம். தந்தை விதியை நொந்துகொண்டு சிரித்துக் கொள்ளலாம் அல்லது அழுது கொள்ளலாம்.

    2)தந்தையின் உடமைகளையும் சொத்துக்களையும் முழுவதுமாக தானே அனுபவிக்க துடிக்கும் கொடூர எண்ணம் கொண்ட மகன் கேட்கலாம். இப்பொழுது தந்தை தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்று உயிரை விடவேண்டும் அல்லது சொத்துக்களையும் உடமைகளையும் துறக்க வேண்டும்.

    கேள்வி ஒன்றுதான். ஆனால் கேட்கப்படும் பருவம் மாறும் போது அர்த்தம் மாறி விபரீதமாகி விடுகிறது.
    see more
    http://chandroosblog.blogspot.in/2010/06/vs.html

    பதிலளிநீக்கு
  20. பின்னூட்டங்களுக்கு நன்றி. சிலவற்றுக்கான என் பதிலை பதிவிலேயே எழுதுகிறேன்.

    'திமிர்' 'முட்டாள்' இவை effectக்காக எழுதியது. இடறியிருந்தால் என் தவறு. அடுத்தவர்களுடனான interactionஐப் பொதுவில் வைக்கும் பொழுது அனுமதியின்றி எதையும் செய்வதில்லை. என் அம்மாவைத் தவிர வேறு யாரிடமும் இந்த 'take for granted' உரிமை எனக்கு இல்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன். எனினும், பின்னூட்டங்களின் கரிசனமும் காழ்ப்பும் புரிகிறது. கவனமாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. எனக்கு ஆங்கிலமும் தகராறு, தமிழும் தகராறு ஜிஎம்பி சார். இன்னொரு முறை படித்துப் பாருங்களேன்?
    -கடவுள் உண்டா?
    -தெரியாது.
    -கடவுள் உண்டு என்று நீ நம்புகிறாயா?
    -இல்லை.

    பதிலளிநீக்கு
  22. கலக்கல், ரொம்பவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள், கடவுள் வியாபாரிகளால் கற்பழிக்கப்படுகிறது மனித சமூகம், அம்மணத்துடன் ஓடுகிறது கடவுள்

    பதிலளிநீக்கு
  23. // முதிர்ந்த வாசகருக்கான கருத்தும் நடையும் ஆங்காங்கே காணலாம் //

    ஆங்காங்கே என்ற வார்த்தையை என்னைக்கோ தூக்கியிருக்க வேண்டியது சார்? :))

    உங்கள் பிள்ளைகளுடான உரையாடல்களில் வெளிப்படும் நேர்மை..குழந்தைகளின் ஆசிரியர்களுடனான உரையாடலின் தொடர்ச்சியில் வெளிப்படும் கவலை.. அருமையாக பகிரப்பட்டுள்ளது..

    இனிய வாசிப்பனுபவம்!சிந்தனைக்கும் கேள்விகள் பற்பல..

    பதிலளிநீக்கு
  24. தெரியாத ஒன்றை இல்லை என்பது நம்புவது குழப்பமாக இல்லையா அப்பாதுரை அவர்களே. என்ன இருந்தால் என்ன இன்னுமொரு பதிவுக்கு விதை கிடைத்து விட்டது. சில மனிதர்களின் குணங்களை நானும் “இப்படியும் சில மனிதர்கள்: என்று எழுதி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. கொஞ்சம் முதிர்ச்சியோடும், மரியாதையோடும் நாத்திகம் பேசும் கட்டுரைகளுக்கு எங்கிருந்துதான் இந்த நடுநிலைவாதிகள் வந்து சேர்கிறார்களோ தெரியவில்லை, சொம்புகளைத் தூக்கிக்கொண்டு.

    ’நீங்கள் சொன்ன விஷயத்தில் ஆனையும், பூனையும் மட்டும் சரிதான், ஆனால் தெரியாத பானையை எப்படி இல்லை என்று நீங்கள் சொல்லலாம்?’ என்று ஒருவர்.

    ‘கடவுள் நேரில் வரமாட்டார் என்று உங்களைப்போலவே எங்களுக்கும் தெரியும்.. (அதாவது நாங்களும் சிந்திக்கிறோமாம்) என்ன சொன்னாலும் நமக்கு மேலே ஒரு சக்தி இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் (ஏன் மேலேதான் இருக்க வேண்டுமா? அடியில், சைடுவாக்கில் எல்லாம் இருக்கக்கூடாதா?)’ என்று இன்னொருவர்.

    ‘அன்புதான் முக்கியம் என்று பிள்ளைகளை வளர்க்கவேண்டும். இப்போ புரிகிறதா.. அன்புதான் கடவுள். (அன்புன்னா அன்புதான்யா.. அதென்ன எக்ஸ்ட்ரா பிட்டு?)’ என்று மற்றொருவர்.

    ‘உங்களுக்கும் எனக்கும் சரி. நாம் சிந்திக்கிறோம். ஆனா பாவம் அடுத்தவர்கள் நம்பிக்கையை ஏன் கேள்விக்குள்ளாகணும் (அதாவது அவன் எப்படிப் போனா நமக்கென்னவாம்)’ இப்படி ஒருவர்.

    ’என்னதான் சொல்லுங்கள், கரண்டைக் கண்ணால் பார்க்கமுடியுமா? பூமி உருண்டை தெரியுமா? யுனிவெர்ஸ் எத்தா பெரிசு தெரியுமா? இதெல்லாம் யாரு உண்டாக்குனா? (கடவுள் என்ன சட்டிபானை செய்வதில் எக்ஸ்பர்ட்டா?)’ அடுத்த ஒருவர்.

    ‘என்னப்பா நீங்க? அப்படியாக்குள்ள சயிண்டிஸ்டுகளே சாமி கும்புடுறாங்க? உங்களுக்கென்னா? (அறிவுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம். தைரியமில்லாதவன் அறிவாளியாக இருக்ககூடாதா என்ன?)’ அடுத்தும் ஒருவர்.

    முடியல..

    வாழ்க்கையை சுயமரியாதையோடும், துணிவோடும் எதிர்கொள்ள திராணியில்லாதவர்களுக்குதான் கடவுள் என்ற கற்பனை ஊன்றுகோல் எல்லா வயதிலும் தேவைப்படுகிறது. கட்டுரையாளர் தேர்ந்த நாத்திகவாதி. ஆனால் பிள்ளைகளுக்கு அந்த தைரியத்தை எப்படிக் கற்பிப்பது என்பதில்தான் குழப்பம் இருக்கிறது. அவரே அதற்கான வழிமுறைகளையும் கண்டறிவார் என நம்பலாம். நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. ஸலாம் சகோ.அப்பாதுரை,

    கடவுளை நம்பவேண்டிய முறைப்படி நம்பவேண்டும்..!
    கடவுளை எந்த முறையில் நம்பவேண்டும் என்று கூட நிறைய பேருக்கு இங்கே தெரியைல்லை..!
    இவர்களை பார்த்து இவர்களின் நம்பிக்கையை குறை சொல்வதை விட்டுவிட்டு, 'கடவுளே இல்லை' என்ற முடிவுக்கு வருவது கொடும் வேதனை. மட்டுமல்ல அறிவீனம்.

    சரியான பிரபல உதாரணம் ஈ.வெ.ரா.பெரியார்.

    சகோ.அப்பாதுரை,

    உங்கள் குழந்தைகளின் இயற்கையான பகுத்தறிவு சிந்தனைகள் மிகவும் அருமை. ஆனால் பாவம், சரியான தெளிவான வழிகாட்டுதல் இன்றி உடனே அவை, வீட்டிலேயே சிந்தனை குறைப்பாடினால் சிதைக்கப்பட்டதுதான் வேதனை..!

    "Energy can neither be created nor be destroyed" என்றவுடன்,
    'how came the first energy?' என்ற கேள்வி வர வேண்டும். வந்தால் அது பகுத்தறிவு. இதற்கு,'first energy was created by God' என்போருக்கு அறிவியல் பூர்வபோவமாக மறுக்க தெரிந்திருக்க வேண்டும். இதற்கு அறிவியலில் பதில் இல்லை என்றால், கடவுள் இருப்பை ஒப்புக்கொள்ள வேண்டி வரும்.

    'யாரும் படைக்காமல் ஏதும் உருவாவதில்லை' என்பதால் கடவுள் இருந்தாக வேண்டும்.

    அந்த கடவுளை,
    கடவுள் என்றால்...
    'எப்படி இருக்க வேண்டும்'
    என்று மனிதன் முதலில் சிந்திக்க வேண்டும்.
    பின்னர், தான் சிந்தித்த விதத்தில் கூறும் மதம் எது என்று ஆராயார வேண்டும்.
    பின்னர், தமக்கு பதில் கிடைக்காத கேள்விகளுக்கு அங்கே பதில் உள்ளதா என்று தேட வேண்டும்..!
    'பதில் இல்லை' என்றால், 'கடவுள் இல்லை' என்று சொல்லாமல், 'அந்த மதக்கோட்பாடு பொய்' என்று அடுத்ததை நோக்கி ஆராய சென்றுவிட வேண்டும்..!

    பதிலளிநீக்கு
  27. வாழ்க்கையை சுயமரியாதையோடும், துணிவோடும் எதிர்கொள்ள திராணியில்லாதவர்களுக்குதான் கடவுள் என்ற கற்பனை ஊன்றுகோல் எல்லா வயதிலும் தேவைப்படுகிறது//

    :))))))))))) அது ஏன் நாத்திகம் பேசுபவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை சுயமரியாதை, துணிவு இல்லாதவர்கள்னு சொல்றாங்கனு புரியறதில்லை. அதோட ஒட்டுமொத்தமாய் மூடநம்பிக்கைனும் சொல்லிடறாங்க. நாத்திகம் பேசினால் தான் அறிவு ஜீவியா????? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!

    பதிலளிநீக்கு
  28. கட்டுரை கருத்துக்கள் சுவாரஸ்யம். பத்மநாபன் மற்றும் கீதா சாம்பசிவம் கருத்துக்கள் என்னைக் கவந்தன. கடவுள் எல்லை என்ற கருத்துக்கு அமெரிக்காவில் அதுவும் ஒரு பள்ளி ஆசிரியரிடமிருந்து ஒரு கடுமையான எதிர்ப்பு ஆக்சரியமாக இருக்கிறது. கருத்துச் சுதந்திரத்துக்கு அங்கு அதிக வாய்ப்பு உண்டு என்று நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  29. @கீதா சந்தானம்,

    கருத்துச் சுதந்திரம் உண்டு தான். ஆனால் பள்ளியில் கடவுளை மறுக்க இயலாது. டே கேர் எனப்படும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கான பள்ளிகள் முக்கால்வாசி இங்குள்ள சர்ச்களின் கட்டுப்பாட்டில் இயங்குவன. இதில் ஆசிரியப் பணி மேற்கொள்ளுபவர்கள் எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் அவர்கள் கட்டாயமாய்க் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டி பைபிளைப் படித்தாக வேண்டும்.

    குழந்தைகளுக்குத் தினமும் பைபிளில் இருந்து அவர்களுக்குப் புரியும் வகையிலான சிறு கதைகள் மூலம் ஏசு அறிமுகப்படுத்தப் படுகிறார்.

    ஆனால் குழந்தைக்கு ஆசிரியரைப் பிடிக்கவில்லை என்றால் அதை அவர் கிட்டேயே சொல்லலாம். ஆசிரியர் மாறினால் சில குழந்தைகள் அழுவதுண்டு. அப்போது அந்தக் குழந்தையிடமே கேட்டு குழந்தைக்குப் பிடித்த ஆசிரியர் இருக்கும் வகுப்பில் குழந்தையை விடுவதுண்டு. பள்ளிக்குச் செல்கையில் எட்டு வயது அல்லது பத்துவயது வரையிலும் டெடி போன்ற விளையாட்டுப் பொம்மைகள, கம்பளி, தலையணை போன்றவற்றை எடுத்துச் செல்லலாம். வாயில் விரல் போட்டுக்கொள்ளலாம். பத்து வயது வரைக்கும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

    அதன் பின்னரும் மருத்துவரைக் கலந்தாலோசித்துக் குழந்தையை விரல் போட்டுக்கொள்ளும் பழக்கத்தை நிறுத்துமாறு பெற்றோர் அறிவுறுத்தப்படுவார்கள். ஊசி போட்டுக்கொள்ளப் பயப்படும் குழந்தைக்கு ஊசி கிடையாது. மாத்திரை முழுங்கப் பயப்பட்டால் சிரப். ஆனால் அடிப்படை கடவுள். அரசு இயங்குவதே கடவுள் நம்பிக்கையில் தான். கடவுளின் பெயராலேயே யு.எஸ். அதிபர் பதவி ஏற்கிறார்.

    பதிலளிநீக்கு
  30. இப்போதைக்கு இம்புடுதான். ஏற்கெனவே ஒவ்வொரு பின்னூட்டமும் பதிவா இருக்குனு கம்ப்ளையின்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு. :)))))

    பதிலளிநீக்கு
  31. எனக்கு ஆங்கிலமும் தகராறு, தமிழும் தகராறு ஜிஎம்பி சார். //

    தகராறா இருக்கையிலேயே கலக்கினால்!! நாங்கல்லாம் என்ன சொல்றது! :)))))))

    பதிலளிநீக்கு
  32. ஆத்திகத்தைப் புரிந்து கொள்ள முடியாது; நாத்திகத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆத்திகத்தில் கிடைக்காத நிம்மதியும் விடுதலையும் நாத்திகத்தில் கிடைக்கிறது. இது என் கருத்து, அனுபவம். இதையொட்டிய என் எண்ணங்களைப் பகிரவே இந்தப் பதிவுத் தொடர். மற்றபடி, நம்பிக்கைகளும் மனிதமும் கல்லும் தேரையும் போல. சுவாரசியமான, சிரிக்க வைத்த பின்னூட்டங்களுக்கு நன்றி. பின்னூட்டக் கருத்துக்கள் சிலவற்றை பதிவிலேயே எழுத நினைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. ஆத்திகம் என்பதை விட மூட பக்தி எனச் சொல்லி இருக்கலாமோ? பக்தி வேறு ஆத்திகம் வேறு. இரண்டையும் ஒண்ணாக்கிக்காதீங்க. உங்களுக்கு இந்த வேறுபாடு கட்டாயம் தெரியும். :)))))))

    பதிலளிநீக்கு
  34. geetha santhanam - கருத்துச் சுதந்திரம் வேறே, மதச் சுதந்திரம் வேறே. so called "நாகரீக" உலகிலே நாத்திகத்தை வெறுத்து ஏளனம் செய்யும் நாடுகளில் #1 அமெரிகா தான். இங்கே நடப்பது ஆத்திகர்கள் ராஜ்ஜியம். மதவெறியர்கள் ராஜ்ஜியம். இந்து மதக் கோவில் கும்பாபிஷேகம் விரதம் சடங்கு எல்லாம்.. இங்கே நடக்கும் மதக்கூத்துக்கு முன்னால் மிகச் சாதாரணம் என்று நினைக்கிறேன். நான் எழுதியிருக்கும் இந்தக் கருத்து எத்தனை 'உளவாளி'களால் படிக்கப்பட்டு பின்னாள் உபயோகத்துக்காகச் சேமிக்கப்படுகிறது என்று சொன்னால் திடுக்கிட்டுப் போவீர்கள். தனிமனித சுதந்திரம் இருப்பது போல் தோன்றினாலும் தனிமனித வாழ்வில் அரசு ஊடுறுவல் இங்கே தான் அதிகம். ஊடுறுவல் தெரியாமல் பார்த்துக் கொள்(ல்)வதில் தான் அமெரிக்கச் சமூக/அரசாங்க/மதகுல சாமர்த்தியம் தனிப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  35. மூடபக்தியின் வேர் ஆத்திகம் என்று நினைக்கிறேன். நாத்திகத்திலும் "மூடபக்தி" உண்டு ஆனால் ஆத்திகம் வளர்க்கும் மூடபக்தி மனிதர்களை என்னென்னவோ செய்ய வைக்கிறது. effectஐ வைத்துத் தான் causeஐ விமரிசிக்க வேண்டியிருக்கிறது. effect எதுவும் இல்லையென்றால் ஆத்திகம் நாத்திகம் இரண்டுமே ஒன்று தான் இல்லையா?

    பதிலளிநீக்கு
  36. எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  37. எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  38. கண்ணதாசனை படிக்காதவங்க இருக்க மாட்டாங்க.அவர் தனது ஒரு கவிதையில் குறிப்பிட்டிருப்பார்:

    அனுபவித்துதான் அறிவது வாழ்க்கை என்றால் ஆண்டவனே நீ ஏன் என கேட்டேன்
    ஆண்டவன் சற்றே அருகில் வந்து அந்த அனுபவமே நான்தான் என்றான்.

    ஆழ்வார் தனது பாசுரத்தில்:

    உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்கிறார்.

    நம்மைச் சுற்றி இருக்கும் அதிர்வுகள்,நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு இவை எவற்றையுமே நம்மால் பல சந்தர்ப்பங்களில் நம் கட்டுக்குள் கொண்டு வர இயலாத்.பூகம்பம் சுனாமி வரும் என்றால் நம்மால் தடுக்க இயலாது,நம்மைத்தான் பாதுக்கக்க முயற்சிக்கலாமே தவிர அவற்றைக் கட்டுப் படுத்த இயலாது.நம்மிடம் இல்லாத சக்தி ஒன்று நம்மை நடத்துகிறது என்பது உண்மையே.அதற்கு கடவுள் என்று பெயரிட்டாலும் சரி வேறு என்ன பெயர் என்றாலும் சரி

    பதிலளிநீக்கு
  39. உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்றும் வைத்தியராய், பசிக்கு சோறிடும் கைகளாய் மனதிற்கு மருந்திடும் மற்றதொரு மனமாய் கடவுள் தெரிவான்(ள்) (அல்லது நபும்சகம் என்றும் கொள்ளலாம்)
    பால் என்பதெல்லாம் உடலுக்குதான்.ஆன்மாவிற்கு அல்ல.

    ஆன்மா அறியும் சக்தியே இறை ரூபம்.கடவுள் வழிபாடும் உருவங்களும் மனித வாழ்க்கையை நல் வழி நடத்தவே தவிர மூட நம்பிக்கைக்காக அல்ல.

    பதிலளிநீக்கு
  40. \\நானும் *என்* கடவுளும்\\

    அப்படி வாங்க வழிக்கு:-))

    எனக்குச் சொல்ல நிறைய இருக்கின்றன. கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. வரும் நாள்களில் (முடிந்தால்) ஒரு பதிவாக எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  41. ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்கு வந்தேன்.நல்ல கட்டுரை.கடவுள் இருக்கிறாரா இல்லையா அவர் எந்த மதத்தில் எந்த மதப் படி எந்த உருவத்தில் இருக்கிறார் என்பது வேறு விஷயம்.எனக்கு கடவுள் இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.
    ஆனால் ஒருவருக்கு ஒரு நம்பிக்கையை வைத்துக் கொள்ளும் உரிமையைப் போலவே அதை புறம் தள்ளவும் வைத்துக் கொள்ளாதிருக்கவும் உரிமை உண்டு.அவ்வாறிருப்பவர்களை நெருக்கடி செய்வதும் கேலி செய்வதும் மதத்தையும் தேசியத்தையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்வதும் இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைத்தால் டாகின்ச்களின் நாட்டிலும் இப்படித்தான் நடக்கிறது என அறிய அதிர்ச்சியாக இருந்தது.உண்மையில் இங்கு இந்தியாவே பரவாய் இல்லை.இங்கு நாத்திகத்தையே கொள்கையாகக் கொண்ட கட்சிகள் தேர்தலில் ஜெயித்து வர முடிகிறது.ஹிந்துக்கள் பெரும்பான்மையான நாட்டில் இங்குதான் அதைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள்.

    அமெரிக்கா ஓரு கிறித்துவ மதவாத நாடு என்ற குற்றச்சாட்டு அடிக்கடி முன்வைக்கப் பட்டிருக்கிறது.தேர்தல் வெற்றிகளை எவ்விதம் கிறித்துவ பெல்ட் மாகாணங்கள் நிர்ணயிக்கின்றன என்பதையும் படித்திருக்கிறேன்.நீங்கள் இருக்குமிடம் அந்த வளையத்தில் உள்ளதா எனத் தெரியவில்லை.போர் வரும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.உண்மையில் ஆழத்தில் ஓரு போர் நடந்து கொண்டுதானிருக்கிறது.உலகின் சக்தி மூலங்களைக் கைப்பற்ற கிறித்துவமும் இஸ்லாமும் ஹிந்துத்துவமும் பௌத்தமும் போர்களை நிகழ்த்தியவன்னமே உள்ளன.சில போர்கள் கத்தியால் நிகழ்த்தப் படுகின்றன.பல போர்கள் கருத்தால் நிகழ்த்தப் படுகின்றன.உண்மையில் இந்தப் போரே அபாயகரமானது

    பதிலளிநீக்கு
  42. "Whatever" என்பதுதான் நிதர்சனம். அந்த நிதர்சன உண்மை, நீங்கள் எதுவும் சொல்லாமலேயே உங்கள் குழந்தைகளை இந்த சமூகத்தில் நிம்மதியாய் வாழவைத்துவிடும். "Whatever" என்பது இப்போது டீன் ஏஜ் குழந்தைகளின் அலட்சிய பாஷையாய் தோன்றலாம். ஆனால் இறுதியில் பல்வேறு கருது கோள்களிலும் சிக்கிக்கொண்டு விடாத துடுப்பை அதுதான் கொடுக்கும். அவர்கள் "whatever" சொல்லும்போது நிம்மதியாய் இருக்கவும் பழகிக் கொள்ளலாம்.
    --

    பதிலளிநீக்கு
  43. ஆத்திகம் நாத்திகம் பற்றி நிறையவே கருத்துகள் வெளியாகி விட்டன, வெளியாகின்றன. எனக்கு அந்த சந்தேகம் தோன்றி முன்பே ஒரு பதிவு எழுதி இருந்தேன். ஆனால் வலைஉலகில் நான் சிறிதும் அறியப் படாத காலத்தில் எழுதியது. ( இப்போது மட்டும் என்ன வாழ்ந்ததாம்.?). இருந்தாலும் அதையே மறு பதிவாக இடுகிறேன்.இதில் கருத்து தெரிவித்தவர்களாவது படிக்கலாமே.

    பதிலளிநீக்கு
  44. அப்பாஜி...இந்தப் பதிவை இத்தனை நாள் படிக்கத் தவறியிருக்கிறேன்.ஆனாலும் நல்லதுதான்.உங்கள் பதிவும் பின்னூட்டங்களையும் சேர்த்துப் படித்தேன்.ஒன்றும் சொல்வதற்கில்லை.கடவுள் என்னும் சொல் ஒரு நல்வழிக்கான ஒரு கடவுச்சொல் அவ்வளவுதான் !

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் அப்பாதுரை, நான் உங்கள் பதிவுகளை படித்து உங்களை புரிந்து கொண்டது - ஒரு சிரிய பொறியிலிருந்து பெரிய நெருப்பை உண்டாக்குவது - இந்த பதிவிலும் அதைதான் காண்கிறேன்.
    பதிவை ஒட்டியும் வெட்டியும் வாதத்திற்க்கும் விவாதத்திற்க்கும் நிறைய பேசலாம். ஆத்திகமும் நாத்திகமும் அவரவருக்காண சுகானுபவம்.
    தொடர்கிறேன் - இன்னும் தெளிய.

    பதிலளிநீக்கு
  46. கடவுளை நம்புபவனை விட நம்பாதவனும்
    நம்பாதவனை விட இதை ஒரு விஷயமாகக் கொள்ளாதவனே
    நிம்மதியாக வாழ்கிறான் என்பது என் எண்ணம்
    தேங்காய் உடைத்தால் நனமை செய்யவும்
    செருப்பு கொண்டு அடித்தால் பலி வாங்கவும் கூடிய
    அற்ப ஜந்து இல்லை அது

    பதிலளிநீக்கு
  47. //கடவுளை நம்புபவனை விட நம்பாதவனும்
    நம்பாதவனை விட இதை ஒரு விஷயமாகக் கொள்ளாதவனே
    நிம்மதியாக வாழ்கிறான் என்பது என் எண்ணம்
    தேங்காய் உடைத்தால் நனமை செய்யவும்
    செருப்பு கொண்டு அடித்தால் பலி வாங்கவும் கூடிய
    அற்ப ஜந்து இல்லை அது //
    super.. very good saying

    பதிலளிநீக்கு
  48. ராஜி அவர்களே! க்ஷெத்ரஞ யோகத்தில் பகவத் கீதையில் வருகிறது.இனிப்பு என்பது ஒரு சுவை.அந்த சுவையை அனுபவமாகப் பெற அனுபவிக்கப்படும் கரும்பு வேண்டும்.அனுபவிக்க நீயோ நானோ வேண்டும். அப்பொது தான் இனிப்பை அனுபவிக்கமுடியும். Expaerince,experinced, experiencer ஆகிய மூன்றுமே நானாகிவிட்டால் என்கிறது கீதை.கண்ணதாசன் அதனைத்தான் சொல்கிறார். ஆழமாகப் படிக்க படிக்க இவை எல்லாம் எந்த மதத்தையும் சார்ந்ததல்ல.என்பது புரியும்.கீதையும் உபநிஷத்துகளும் இந்திய தத்துவ விசாரணையின் அங்கம். அறிவிற்காக அறிவு பூர்வமாக தேடும்முயற்சி."உண்டெண்ரால் அது உண்டு! இல்லையென்றால் அது இல்லை !"என்றான் கண்ணதாசன்.இங்கே இப்போது நீறுத்திக் கொள்கிறேன். ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  49. பெயரில்லாபிப்ரவரி 17, 2012

    சுட்டல்தான் நெருப்பு எது என்று புரியுமோ?

    பதிலளிநீக்கு
  50. கடவுள் என்பது ஒரு ஃபீலிங்! பசித்தவனுக்கு அப்பம் கடவுள்! அதுவே புசித்தவனுக்கு அது அப்பம்! அவ்வளவு தான்!முப்பது வயதில் கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்தவர் எழுபதில், சாய்பாபா பக்தரானார்..இது ஒரு செளகர்யம்..மேலும், குழந்தைகள் மீது நம் விருப்பத்தை திணிக்கலாகாது!
    போகப் போக அவர்களுக்கே கடவுள்னா என்னவென்று புரியும்!
    என்னைப் பொறுத்தவரை, தேவைகள் பூர்த்தி செய்யும் கர்த்தாவை கடவுள் என்கிறோம்..

    பதிலளிநீக்கு
  51. முப்பது வயதில் கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்தவர் எழுபதில், சாய்பாபா பக்தரானார்//

    இது எங்க வீட்டிலேயே நடந்திருக்கு. தீவிரக் கம்யூனிஸ்டான என் அக்கா கணவர்(பெரியப்பா மாப்பிள்ளை) தீக்கதிர் பத்திரிகையில் வேலை செய்தவர், அதற்காக மத்திய அரசு வேலையைத் துறந்தவர், இப்போது திருமியச்சூர் லலிதாம்பிகையின் பக்தர்.

    குமுதம் "பக்தி" யில் மயன் என்ற பெயரில் தொடர்ந்து எழுதி வருகிறார். யு.எஸ்ஸில் இந்தப் புத்தகம் கிடைக்கிறதா? யாரேனும் வரவழைக்கின்றனரா தெரியவில்லை. இந்தியாவில் படிக்க முடியும். இவர் ஒரு வாழும் உதாரணம்.

    பதிலளிநீக்கு
  52. கட்டுரையின் மையம் பிள்ளையின் உரையாடலில் உள்ளது.

    நமது பிள்ளைகளின் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிப்பதுதானே நேர்மையானது. பிள்ளையின் கேள்விகளுக்கு பதில் தெரியாததால் பெரும்பாலும் தவறான விடையைத்தான் (அறியாமையினாலேயோ அல்லது தன்னலம் கருதியோ) பலரும் தருகிறார்கள். இதனால்தான் பிள்ளைகள் தங்களது சுயசிந்தனையை இழக்கிறார்கள்.

    பிள்ளைகளின் கேள்விகளுக்கு எந்த பதிலையும் கொடுக்காமல் இருந்தாலே போதும். அனுபவ ரீதியாவே கடவுள் இல்லை என்கிற முடிவுக்கு அவர்களே வருவார்கள்.

    தனிமங்களின் குணங்கள் மூலக்கூறுகளின் வேதிவினைகள் மற்றும் இயற்பியல் விதிகளை ஒருவன் புரிந்து படித்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்வான்.இதைப்புரிந்து கொண்டவனுக்கு ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது என்கிற கேள்வியே எழாது.

    கடவுள் உண்டா இல்லையா என்று அறிய முயலுவதும் பகுத்தறிவின் ஒரு அம்சமே.

    பகுத்தறிவு குறித்த நல்லதொரு விவாதத்துக்கு இந்தக் கட்டுரை வழி வகுத்திருக்கிறது. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  53. இறைவன் பற்றிய கலந்துரையாடலும், தனிப்பட்ட அனுபவங்களும் மிக மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  54. ஊருக்கு வரும் போது அவசியம் திருப்பூருக்கு வாங்க. உங்க முகம் பார்க்க ஆசை.

    பதிலளிநீக்கு